கனடா-காரை கலாச்சார மன்றத்தின் பொதுக் கூட்டம் நேற்று (பெப்.2.2014) அன்று நடைபெற்றது.

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் ஆண்டுப்  பொதுக் கூட்டம் நேற்று(பெப்.2.2014) அன்று காரை 10:30 மணிக்கு North York Civic Centre  இல் நடைபெற்றது. காலநிலை, மண்டபம் அமைந்துள்ள இடம் காரணமாக எதிர்பார்க்கப்பட்ட அளவில் மன்ற உறுப்பினர்கள் சமூகமளித்திருக்கவில்லை.


தலைவர் திரு.தம்பிஐயா பரமானந்தராஜா தனது உரையில் குறுகிய கால தமது நிர்வாக சபைச் செயற்பாடுகளுக்கு உதவிய வணிகப் பெருமக்களுக்கும் மற்றும் உறுப்பினர்கள், நலன்விரும்பிகளுக்கும் நன்றி தெரிவித்தார். மன்றத்தின் நிகழ்வுகள், செயற்பாடுகளில் அனைவரும் பங்குபற்றி ஆதரவளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.


செயலாளர் திரு.மார்க்கண்டு செந்தில்நாதன், பொருளாளர் திரு.திருநாவுக்கரசு பேரின்பராஜா ஆகியோர் முறையே 2013 ஆம் ஆண்டிற்கான தமது செயற்பாட்டு அறிக்கை, வரவு செலவு அறிககை என்பவற்றைச் சமர்ப்பித்த அவை ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. 


கனடா-காரை கலாச்சார மன்றம் காரைநகரில் கல்வி வளர்ச்சிக்கு உதவி வருகின்ற அடிப்படையில் இவ்வாண்டு காரைநகரில் உள்ள பாடசாலைகளின் தேவையை அறிய முற்பட்டபோது, காரைநகரில் உள்ள ஆறு பாடசாலைகளின் கோரிக்கைகள் எமக்குக் கிடைக்கப்பெற்றிருந்ததாகவும் அவற்றை கடந்த நிர்வாக சபையில்  ஆராய்ந்து அத்திட்டங்களுக்கு உதவுவது என்று தீர்மானித்ததாகவும் தெரிவித்தார்.


அதன் பின்னர், தாம் காரை அபிவிருத்தி சபையுடன் தொடர்பு கொண்ட போது அத்திட்டங்கள் மேலும் பரீசிலனை செய்யப்பட வேண்டும் எனவும் அதற்காக ஒரு குழுவை நியமித்து அக்குழுவின் சிபார்சின் அடிப்படையில் இத்திட்டங்களை நிறைவேற்றலாம் என்றும் சபையில் தெரிவித்தார். 


மன்றத்தில் உறுப்பினாரக விரும்பும் 18 வயதிற்கு மேற்பட்ட ஒருவருக்கு உறுப்பினர் ஆண்டு சந்தாப்பணம் இருபது டொலர்களாக ($20.00) இருக்கும். உறுப்பினர் பதிவுத்திருமணம் செய்திருப்பின் அவர் மன்ற உறுப்பினராக இருக்கின்ற வரைக்கும் அவருடைய வாழக்கைத் துணையும் எவ்வித கட்டணமுமின்றி எல்லாவித உரிமைகளுடனும் உறுப்பினாராக இருப்பார் எனவும் தீர்மானிக்கப்பட்டது.


மன்றத்தின் ஆயட்கால சந்தாப்பணம், யாப்புத்திருத்தப் பிரேரணைகள் விவாதிக்கபட்டன எனினும் முடிவு எதுவும் எடுக்கப்படாமல் இன்னொரு பொதுக் கூட்டத்தில் தீர்மானிக்கலாம் என்று தலைவரினால் தெரிவிக்கப்பட்டது.


நிர்வாகசபை, போசகர் சபை என்பவற்றில் உள்ள வெற்றிடங்களுக்கான தெரிவும் இடம்பெற்றது. நிர்வாக சபை உறுப்பினராக திரு.பிரமேந்திரதீசன் திரவியநாதனும், போசகர் சபை உறுப்பினரர்களாக திரு.ஆறுமுகம் கோடீஸ்வரன், திரு.இராசதுரை இரவீந்திரன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.


இத்துடன் இப்பொதுக் கூட்டம் நிறைவு பெற்றது.