Category: கண்ணீர் அஞ்சலி

திரு.ஆறுமுகம் தில்லைநாதன் அவர்களின் மறைவு குறித்து காரைநகர் இந்துக் கல்லூரிபழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் கண்ணீர் வணக்கம்

Tribute to Mr.Thillainatahan

பரமு கிருபாலரட்ணம் அவர்களின் மறைவு குறித்து பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் கண்ணீர் அஞ்சலி

1 2 3 4

விளானை, களபூமி, காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட அமரர் பரமு கிருபாலரத்தினம் ஞாபகார்த்த உரை 19 – 02 – 2017

            Kirupa

    விளானை, களபூமி, காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட

   அமரர் பரமு கிருபாலரத்தினம் ஞாபகார்த்த உரை 19 – 02 – 2017


இன்று அமரர் பரமு கிருபாலரத்தினத்தின் மரணக் கிரியை இங்கிலாந்தில் நடைபெற்ற பொழுது விளானை சனசமூகநிலைய/கிராம அபிவிருத்திச்சங்க மண்டபத்தில் விளானை. களபூமி மக்கள் கூடி அஞ்சலி செலுத்தினர். அக்கூட்டத்தில் சிவஸ்ரீ சண்முகராஜக் குருக்கள், திரு கதிரவேலு தில்லையம்பலம், திரு வேலுப்பிள்ளை நடராசா, காரைநகர் தென்கிழக்கு கமக்குழுவின் தலைவர் திரு பொன்னம்பலம் ஆகியோர் உரையாற்றினர். இறுதியில் கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவர் சிவா தி மகேசன் ஞாபகார்த்த உரையினைச் சபையின் முன் வாசித்து வழங்கினார். அவ்வுரையின் சுருக்கம் பின் வருமாறு:  

பரமு கிருபாலரத்தினம் எனும் பெயரினைத் தாங்கி இவ்வுலகில் உலாவிப் பிரிந்து சென்ற ஆன்மாவிற்கு  இந்நிகழ்ச்சி  கண்ணீர் அஞ்சலி  என்ற தலைப்பில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தாலும் இதனை ஒரு ஞாபகார்த்த நிகழ்வு  எனக்குறிப்பிட்டு ஞாபகார்த்த உரை என்ற தலைப்புடன் இவ்வுரை வழங்கப்படுகின்றது.

எவ்வாறரயினும் விளானை, களபூமி மக்களாகிய நாங்கள் எமது அன்பையும் மதிப்பையும் பெற்ற தம்பி கிருபாவின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் அதேவேளையில் அவர் செய்த நற்காரியங்களை நினைவுகூர்ந்து அவற்றினைப் பாராட்டும் முகமாகவும் இன்று கூடியுள்ளோம். ஒரு மனிதன் பிறந்தால் இறப்பது நிச்சயம். இந்நிகழ்வுகளைப் பிறப்பு, இறப்பு என்ற இரு சொற்களால்  வர்ணிக்கின்றோம். எமது பிறப்பு பெற்றோரினால் நிச்சயக்கப்படுகின்றது. பிறந்த அன்றே இறப்பும் இறைவனால் கணிக்கப்படுகின்றது. இவை இரண்டுக்கும் இடையே சிறப்பு என்ற  ஒன்றும் உள்ளது. அதனை  நாம் சிறுபராயம் முடிந்து பின்பு வாலிபத்தினைக் கடக்கும் பொழுது நம் வாழக்கை எப்படி அமைய வேண்டும் என்று சிந்திக்கும்  நிலையிலுள்ளோம். இச்சமயத்தில் புத்தரின் போதனைகளில் ஒன்று ஞாபகம் வருகின்றது. நாம் எப்படி  வாழ்க்கை அமைய வேண்டுமென்று நினைக்கின்றோமோ அப்படியே நம் வாழ்க்கை அமையும் (What we think, we become) என்பது புத்தர் பெருமானின் போதனையாகும். அதாவது நல்லதையே நாம் நினைத்தால்  நல்லவர்களாகவே மாறுவோம் என்பது அதன் தத்துவமாகும். இத்தத்துவம் அமரர் பரமு கிருபாலரத்தினம் வாழ்ந்த வாழ்க்கைக்குப் பொருத்தமாகும். மனிதனாகப் பிறந்தவன் இறைவனில் நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். அதேவேளையில் மக்கள் சேவை மகேசன் சேவை என்ற வாக்கியத்திற்கிணங்க நம் சகமனிதர்களுக்குச் சேவை செய்து எல்லோரும் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்'; என்று செயற்படுவோமேயானால் நாமும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ  வைக்கலாம். இதனைச் சங்க இலக்கியத்தில் பூங்கண்ணனார்  'யாதும் ஊரே யாவரும் கேளிர்;' என்று கூறியுள்ளார். இதற்கமைய அமரர் பரமு கிருபாலரத்தினம் தனது வாழ்க்கையினை நடாத்திச் சென்றார் என்று அவருடன் பழகியவர்கள் அறிவார்கள்.. 

கல்வி என்றால் படித்துப் பட்டம் பெறுகின்றோமோ இல்லையோ அதனை ஒரு  தொழில் பார்ப்பதற்கு வழிகாட்டும்  கருவியாகக் கருதுகின்றோம்.  ஆனால்; மனிதனை மனிதனாக வாழ வைப்பது தெய்வ நம்பிக்கை. அத்துடன்  அவனை ஒரு  பொறுப்புள்ள  மனிதனாக, சமூக சீலனாக நிலை நாட்டுவது கல்வியுடன் சேர்ந்த  கலை, விளையாட்டு போன்ற துறைகளாகும். கலை மனிதனை முழு மனிதனாக்குகின்றது.  ஆகவே நாம் நம் சிறார்களை  இத்துறைகளில் ஊக்குவிக்க வேண்டும். கல்விக்கும்  விளையாட்டிற்கும் அரசாங்கம் மட்டுமன்றி தனி நபர்களும் தேவையான உதவிகளைப் புரிந்து வருகின்றனர். ஆனால் கலையினைப் பொறுத்த வரையில் ஒரு சில பெற்றோர்களைத் தவிர பொது மக்களோ அல்லது பொறுப்பிலுள்ளவர்களோ அவ்வளவு அக்கறை செலுத்துவதில்லை. இவற்றினைக் கருத்தில் கொண்டு களபூமி கலையகம் உருவாகி ஓரளவு செயற்பட்டு வருகின்றது. இக்கலையகம் மேலும் வளரந்து ஒரு கலைக் கோயிலாக அமையவேண்டும் என்பது அதில் ஈடுபட்டுள்ளவர்களின் நோக்கமாகும். அதற்கிணங்க காணி நிலம் பெற்று முறைப்படி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இப்பணியில் அமரர் பரமு கிருபாலரத்தினம் தன்னால் இயன்ற உதவிகள் செய்தது மாத்திரமில்லாமல் பொருளுதவியும் வழங்குவதற்காக முன் வந்திருந்தார். ஆனால் காலன் முந்திவிட்டான்.

எமது  கண்ணீர் அஞ்சலியில் 'நாம் இவ்வுலகிற்கு வந்தது ஒரு யாத்திரை என்றும் அந்த யாத்திரை முடிவதில்லை. அது ஒரு தொடராகும்' என்பதனைச் சுட்டிக் காட்டியுள்ளோம். பரமு கிருபாலரத்தினம் என்ற பெயரினைக் கொண்டு இவ்வுலகில் உலாவிய ஆன்மாவனாவது தனது அடுத்த யாத்திரையினைத் தொடரவுள்ளது. தம்பி கிருபாலரத்தினத்தின் வாழ்க்கையில் தொடர்பு  கொண்ட உறவுகளும் உற்றாரும் பனித்த கண்களுடன் அமரத்துவம் அடைந்த அவ்வான்மாவின் அடுத்த பயணத்திற்கு வழியனுப்பும்  நாள் இதுவாகும். அவ்வான்மாவானது சாந்தியடைந்து  அடுத்த பயணத்தினைத் தொடர்வதற்கு இங்கு கூடியுள்ள நாம் அனைவரும் இறைவனைப் பிரார்த்திப்போமாக.


                                      ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!


                                                                              விளானை கிராம அபிவிருத்திச் சங்கம்

                                                                                       விளானை சனசமூக நிலையம்

                                                                                                 களபூமி கலையகம்

 

கண்ணீர் அஞ்சலி, உள்ளத்தால் உயர்ந்த உத்தமன் – கிருபா

Kirupa

திரு.குமாரசாமி விசாகன் அவர்களின் மறைவு குறித்து கனடா-காரை கலாச்சார மன்றத்தின் கண்ணீர் வணக்கம்

visakan

அமரர் திரு.குமாரசாமி விசாகன் அவர்களின் மறைவு குறித்து சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் இதய அஞ்சலி

villisai 07.02.2017Villisai

கண்ணீர் அஞ்சலி, அமரர் பேரம்பலம் கணேசலிங்கம்

கண்ணீர் அஞ்சலி, அமரர் பேரம்பலம் கணேசலிங்கம்

கண்ணீர் அஞ்சலி, அமரர் சண்முகம் சிவபாலன் (புதுறோட், காரைநகர்) (மோதரை, கொழும்பு)

img-20160910-wa0011

காரைநகர் இந்துக் கல்லூரி உப-அதிபர் திரு.சி.பொன்னம்பலம் அவர்களின் மறைவு குறித்து பாடசாலை சமூகம் விடுத்துள்ள கண்ணீர்அஞ்சலி

PONNAMPALAM MASTER (1)

காரைநகர் இந்துக் கல்லூரி உப-அதிபர் திரு.சி.பொன்னம்பலம் அவர்களின் மறைவு குறித்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளை விடுத்துள்ள கண்ணீர்அஞ்சலி

ponnampalam-2 copy

கண்ணீர் அஞ்சலி அமரர் சிதம்பரப்பிள்ளை பொன்னம்பலம் (முன்னாள் காரைநகர் இந்துக் கல்லூரி உப அதிபர்)

PONNAMPALAM MASTER

கண்ணீர் அஞ்சலி அமரர் ஆறுமுகம் சிற்றம்பலம்

2

கண்ணீர் அஞ்சலி ( திரு.சங்கரப்பிள்ளை சோமசேகரம்பிள்ளை )

கண்ணீர் அஞ்சலி
( திரு.சங்கரப்பிள்ளை சோமசேகரம்பிள்ளை )

soma TRIBUTE

 

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/02/SOMA.pdf

 

கண்ணீர் வணக்கம் ( சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை )

கண் திறப்பாயோ முதலியாரே !!!

TP

பிறப்பு: 29.09.1945                    இறப்பு: 28.01.2016

 

பனி படரும்  மலைகளின் ஊடே

கனி காய்க்கும் மரங்களின் கீழே

இனி எங்கு காண்போம் எம்மதிப்பு

தனிப்புலி சிங்கத்தாரே முதலியாரே

நல்லதோ கெட்டதோ அற்றதோ உள்ளதோ

வல்லதோ ஓடிந்ததோ சொல்லதோ சொல்லாததோ

மெல்லதோ விரைவதோ கூறுவதோ கூறாததோ

கல்லதோ கல்லாததோ கூறினாய் கேட்டோம்

கேட்டோம் செய்தி உற்றோம் துயர்

மாட்டோம் நேரில்வர வரம்

கேட்டோம் தில்லைச்சிவனிடம் வர

மாட்டோம் உன்னிடம் நாம்

மீசைக்கார ஜயா நின்

ஒசையை எங்கு கேட்போம்

பாசமுடன் குடும்பத்துயர் கேட்டோம்

நேசமுடன் பிராத்திக்கின்றோம்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும், உறவினர்கள், 

நண்பர்கள் அனைவருக்கும் தில்லைக்கூத்தனின் திருப்பாதம் பணிந்து எமது ஆழந்த துயர் 

செய்தியை பகிர்ந்து கொள்கின்றோம்.

இங்ஙனம்.

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை

                     செயற்குழு உறுப்பினர்கள்

                              சுவிஸ் வாழ் காரை மக்கள்.

31.01.2016

இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபர் அமரர்.S.பத்மநாதன் அவர்களின் மறைவு குறித்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் கண்ணீர் வணக்கம்

இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபர் அமரர்.S.பத்மநாதன் அவர்களின் மறைவு குறித்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் கண்ணீர் வணக்கம்


              அமரர் செல்லத்துரை பத்மநாதன் B.Sc. Dip.In.Ed.


காரைநகர் இந்துக் கல்லூரியில் மாணவர்களின் மனம் கவர்ந்த சிறந்த உயிரியல் ஆசிரியராகப் பணியாற்றியதுடன் நிர்வாகத்திறன் மிக்க அதிபராகவும் ஆறு ஆண்டுகள் பதவி வகித்து கல்லூரியின் கல்வித்தர மேம்பாட்டிற்கும் பௌதிக வள மேம்பாட்டிற்கும் அர்ப்பணிப்புடன் உழைத்த திரு.செல்லத்துரை பத்மநாதன் தமது 84வது வயதில் இறைபதம் அடைந்துவிட்டார் என்ற செய்தி அறிந்து பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை ஆழ்ந்த துயரடைந்துள்ளது. 


அமரர் பத்மநாதனின் முயற்சியினால் பாரதி நூற்றாண்டு விழா கல்லூரியில் வெகு சிறப்பாக மூன்று நாட்கள் கொண்டாடப்பட்டதுடன் இவ்விழாவிற்கு தமிழக அறிஞர்களும் வரவழைக்கப்பட்டிருந்தனர். இவரது காலத்திலேயே முறைசாராப் பிரிவின் கீழ் தையலஇ; கைப்பணி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் அமைந்துள்ள சரஸ்வதி ஆலயத்தின் தூபி முகப்பு நிர்மாணிக்கப்பட்டமை அமரர் பத்மநாதன் அவர்களின் முயற்சியின் விளைவே என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


அன்னாரின் பிரிவால் ஆறாத் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபத்தினையும் ஆறுதலையும் தெரிவித்து அன்னாரது ஆத்மா சாந்தியடைய பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை இறைவனைப் பிரார்த்திக்கின்றது.


                                                                            பழைய மாணவர் சங்கம் – கனடா


பழைய மாணவர் சங்க கனடாக் கிளை வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலியைக் கீழே காணலாம். 

PATMANATHAN TRIBUTE -5 copy

 

கண்ணீர் அஞ்சலி

Pat

 

அமரர். செல்லத்துரை பத்மநாதன்
(முன்னாள் யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் காரைநகர்)

யாழ்ற்ரன் கல்லூரியில் 09.10.1987 முதல் 15.8.1989 வரை அதிபராக கடமையாற்றிய திரு.செல்லத்துரை பத்மநாதன் அவர்கள் 24.01.2016 சிவபதம் அடைந்துள்ளார். அமரர் பத்மநாதன் அவர்கள் அதிபராக எமது கல்லூரியில் சேவையாற்றும் போது மாணவர் கல்வியில் கூடியளவு அக்கறை செலுத்தி மாணவர்கட்கு கட்டுப்பாட்டு ஒழுக்கத்துடனான கல்வியே அவசியம் என்பதை எடுத்துக் காட்யவர். வாய்மையும்இ நேர்மையும் மிக்க ஒரு பெருந்தகை.
அவரின் மறைவுக்காக எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, அவரின் ஆத்மா சாந்தியடைய சிவகாமி அம்பாள் சமேத ஈழத்துச் சிதம்பர கூத்தப்பிரானைப் பிரார்த்திப்போமாக.

யாழ்ற்ரன் கல்லூரிச் சமூகம்
யாழ்ற்ரன் கல்லூரி
காரைநகர்.

முன்னாள் அதிபர் அமரர் எஸ். பத்மநாதனின் மறைவிற்கு இந்துக் கல்லூரி சமூகம் அனுதாபம்

patmanathan

 

காரைநகர் இந்துக் கல்லூரியின் நல் ஆசிரியர்கள் வரிசையில் மட்டுமன்றி கல்லூரியை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் சென்ற அதிபர்கள் வரிசையிலும் இடம்பெற்று விளங்கும் திரு. செல்லத்துரை பத்மநாதன் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து பாடசாலைச் சமூகம் அதிர்ச்சியும் ஆழ்ந்த துயரமும் அடைந்துள்ளதாக கல்லூரியின் அதிபர் திருமதி வாசுகி தவபாலன் அவர்கள் வழங்கிய அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 
உயிரியல் பாடத்தைக் கற்பித்து பல மாணவர்கள் மனதிலும் இடம்பெற்றுள்ள இவர் ஆறு ஆண்டுகள் அதிபராகப் பணியாற்றிய காலத்தில் பாடசாலையின் வளர்ச்சியை திட்டமிட்டு முன்னேற்றிய வகையில் செயற் திறனும் ஆளுமையும் மிக்க  அதிபர் என்ற பெயரைப் பெற்றவர். கல்வித் தரத்தையும் பௌதிக வளங்களையும் உயர்த்த உழைத்ததுடன் மாணவர்கள் மத்தியில் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் பின்பற்றவும் கல்லூரியின் பாரம்பரியத்தைப் பேணவும் அக்கறையுடன் செயலாற்றியவர். பாடசாலையில் உள்ள கலைமகள் கோயிலில் அழகிய வடிவில் அமைந்துள்ள தூபி முகப்பு இவரது காலப் பகுதியிலேயே நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்பது நினைவு கூரத்தக்கதாகும்.  
அன்னாரது இழப்பினால் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் பாடசாலைச் சமூகத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை இறைஞ்சுவதாக திருமதி வாசுகி தவபாலனின் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டள்ளது.

 

கண்ணீர் அஞ்சலி

                                      கண்ணீர் அஞ்சலி

IMG_0013

 

S.V.M (Pvt) Ltd  கொழும்பு நிறுவனத்தில் காசாளராகப் பணிபுரியும் பத்மநாதன் தயானந்தன் (சிவா) அவர்களின் அன்புத்தந்தை காசிப்பிள்ளை பத்மநாதன் 25.11.2015 புதன்கிழமை காலமானார். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

                                                                                               உரிமையாளரும் ஊழியர்களும்

S.V.முருகேசு                                                                                               S.V.M (Pvt) Ltd
154, ஆஸ்பத்திரி வீதி,                                                                              122, டாம் வீதி,
யாழ்ப்பாணம்.                                                                                         கொழும்பு – 12.

மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி

மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி

3A

அமரர். கந்தையா சுந்தரராஜன் அவர்களின் மறைவு குறித்து கனடா காரை கலாச்சார மன்றத்தின் கண்ணீர் அஞ்சலி

IMG_0547

சிவஸ்ரீ பொன்னுத்துரை ஐயர் சுப்பிரமணியக் குருக்கள் அவர்களின் மறைவு குறித்து கனடா-இந்து குருமார் ஒன்றியம் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

Tribute Pon Subraman from Canada Priest Association

அமரர். மார்க்கண்டு பாலசிங்கம் அவர்களின் மறைவு குறித்து கல்லூரி சமூகத்தின் கண்ணீர் அஞ்சலி

எமது கல்லூரியில் 20 வருடங்களிற்கு மேலாக நல்லாசிரியையாக, செயற்றிறன்மிக்க நல்லதிபராக கடமையாற்றிய திருமதி தேவநாயகி பாலசிங்கம் அவர்களின் பாசமிகு கணவர் திரு மார்க்கண்டு பாலசிங்கம் அவர்கள் இறைபதம் அடைந்த செய்தி கேட்டு எம்கல்லூரிச் சமூகம் அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.

அமரர் மார்க்கண்டு பாலசிங்கம் அவர்கள் மக்கள் வங்கியின் உதவி முகாமையாளராக கடமையாற்றிய காலத்தில் தனது வேலைப் பழுவின் மத்தியிலும் திருமதி தேவநாயகி பாலசிங்கம் அவர்கள் எமது கல்லூரியை திறம்பட நிர்வகிப்பதில் உறுதுணை புரிந்தவர். திருமதி பாலசிங்கம் அவர்கள் எமது கல்லூரியின் முதலாவது பெண் அதிபர் மாத்திரமன்றி, செயற்றிறன்மிக்க துணிச்சலான அதிபர் என்றே கூறலாம். அனைவருடனும் அன்பாகவும், பண்பாகவும், சரளமாகவும் பேசும் பண்புமிக்கவர். அர்ப்பணிப்புமிக்க சேவையாளர். எமது கல்லூரி இடம்பெயர்ந்திருந்த மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் கல்லூரியை மீளவும் சொந்த இடத்திற்குக் கொண்டுவந்து செயற்படுத்துவதில் அயராது உழைத்து வெற்றி கண்டவர். அவ்வகையில் அவருடைய சேவையை கல்லூரிச் சமூகத்தால் என்றென்றும் மறக்க முடியாது. பிற்காலத்தில் அவரது செயற்றிறமையால் பதவி உயர்வு பெற்று உதவிக் கல்விப் பணிப்பாளராக பரீட்சைத் திணைக்களத்தில் கடமையாற்றினார். ஓய்வின் பின்னரும் இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் கல்வியியற் துறையில் நிபுணத்துவ ஆலோசகராக பணியாற்றுவது எமது கல்லூரிக்கு பெருமை சேர்க்கின்றது. இத்தகைய பெருமைமிகு எமது கல்லூரியின் முன்னாள் அதிபர் தனது அன்புக் கணவரை இழந்து துன்புற்றிருப்பது கண்டு நாமும் துயரடைகின்றோம்.

அமரர் மார்க்கண்டு பாலசிங்கம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு கல்லூரி சமூகம் சார்பாக கண்ணீர்ப் பூக்களைக் காணிக்கையாக்குவதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

திருமதி வாசுகி தவபாலன்
அதிபர் 
(கல்லூரிச் சமூகம் சார்பாக)

முழுமையான கண்ணீர் அஞ்சலியைக் கீழே காணலாம்.

Tribute from School Mr.Balasingam-page-001

 

அமரர். மார்கண்டு பாலசிங்கம் அவர்களின் மறைவு குறித்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் கண்ணீர் அஞ்சலி

எமது கல்லூரியின் முன்னாள் அதிபர் திருமதி.தேவநாயகி பாலசிங்கம் அவர்களின் அன்புக் கணவரும் எமது கல்லூரியின் பழைய மாணவருமான திரு.மார்க்கண்டு பாலசிங்கம் (முன்னாள் உதவி முகாமையாளர், மக்கள் வங்கி) அவர்கள் செவ்வாய்கிழமை (18.08.2015) அன்று கொழும்பில் சிவபதம் அடைந்தார் என்ற செய்தி அறிந்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளை ஆழ்ந்த துயரம் அடைந்துள்ளது.

எமது கல்லூரியின் பழைய மாணவியும், விஞ்ஞான பட்டதாரியுமான திருமதி. தேவநாயகி பாலசிங்கம் அவர்கள் எமது கல்லூரியில் 23 ஆண்டு காலமாக உயிரியல் விஞ்ஞான ஆசிரியராகவும், பிரதி அதிபராகவும், அதிபராகவும் சேவையாற்றியவர் ஆவார். கல்லூரியின் முதலாவது பெண் அதிபர் என்ற பெருமையைப் பெறுவதுடன்1991 இடப்பெயர்வு காலத்தில் கல்லூரியின் தனித்துவத்தைப் பேணி வளர்ப்பதில் அரும்பாடுபட்டார். காரைநகரில் மீளக் குடியேறியபோது கல்லூரியை துணிவுடன் சொந்த இடத்தில் இயங்க வைத்து மீளக்கட்டியெழுப்புவதற்கு ஆரம்ப கர்த்தாவாக இருந்து ஏனைய பாடசாலைகளுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்த அதிபர் திருமதி.தே.பாலசிங்கம் அவர்கள் ஆவார்.

இத்தகைய அர்ப்பணிப்பும் துணிவும் ஆளுமையும்மிக்க அதிபர் திருமதி.தேவநாயகி பாலசிங்கம் அவர்கள் எமது கல்லூரியின் வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகளுக்கு அவருக்குப் பின்னால் உறுதுiணையாகவிருந்து உற்சாகமளித்தவர் அவரின் அன்பிற்குரிய வாழ்க்கைத் துணைவர் திரு.மார்க்கண்டு பாலசிங்கம் அவர்கள் என்றால் அது மிகையாகாது.

அத்தகைய அன்புக் கணவரை இழந்து தவிக்கும் எமது கல்லூரியின் முன்னாள் அதிபர் திருமதி.தேவநாயகி பாலசிங்கம் அவர்களுக்கும் அவரது புதல்வர் மற்றும் குடும்பத்தினருக்கும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளை அநுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய ஈழத்துச் சிதம்பரத்தில் உறையும் சிவகாமி சமேத நடராசப் பெருமானை இறைஞ்சுகின்றது.

கலாநிதி..தியாகரசா ..வித்தியாலய(காரைநகர் இந்துக் கல்லூரி) பழைய மாணவர் சங்கம்கனடா

முழுமையான கண்ணீர் அஞ்சலியைக் கீழே காணலாம்.

Tribute Balasingam OSA

 

திருமதி ஞானேஸ்வரி பொன்னம்பலம்(செல்லம்மா) அவர்களின் மறைவு குறித்து கனடா-காரை கலாச்சார மன்றத்தின் கண்ணீர் அஞ்சலி

sellama copy

திரு.குமாரரெட்ணம் பாலசுந்தரம் அவர்களின் மறைவு குறித்து கனடா-காரை கலாச்சார மன்றத்தின் கண்ணீர் அஞ்சலி

Kumareshan copy

சிதம்பரத்தின் சிகரம் சாய்ந்தது. காரை மண்ணின் வசிட்ட மாமுனி சிவபதம்.

Vythees4

சிவத்தமிழ் வித்தகர், பண்டிதமணி, கலாநிதி சிவஷிறி கணபதீஸ்வரர் வைத்தீஸ்வரர் அவர்களின் சொரூபசமாதி அடைந்த செய்தி உலகம் வாழ் அனைத்துசைவ  தமிழ் நல்உள்ளங்களை ஒரு கணம் தவிக்க விட்டுள்ளது. சனி அதிகாலை ஐயாஅவர்களின் சமாதி அடைந்த செய்தி கேட்டதும் பிருத்தானியா வாழ் காரை மக்கள் அனைவரின் ஆழ்மனம்  ஒரு கணம் ஈழத்து சிதம்பரத்தை வலமிட்டது.

               15ம்  நூற்றாண்டின் குளக்கோட்டு மன்னன் ஆட்சிக் காலப்பகுதியில் உத்தரகோசமங்கையில் இருந்து திண்ணைபுரத்தான் திருப்பாதம் வந்தவர்கள்தான் மேதகு ஐயா அவர்களின் முதற்பரம்பரையினர். இவரது தந்தையார் கணபதீஸ்வரகுருக்கள் 24வது பரம்பரை. 18ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும். 19ம் நூற்றாண்டின் முற்காலப் பகுதியில் வாழ்ந்தவர் தான் இவரது தந்தையார். ஆண்டி கேணி ஐயனார்
 எவ்வாறு அமர்ந்திருக்கின்ராரோ  அதேபோல் தான் இவரது தந்தையாரும் குந்தி இருப்பார், இவரது காலபகுதியில் எம் மண்ணில் வாழ்ந்த பெரியவர்களுக்கு ஞாபகம் இருக்கும்.

                             உத்தரகோசமங்கையில் இருந்து வந்த இவர்கள் வழித்தோன்றலின் 25வதும் இறுதியானதுமான பரம்பரைதான்(ஈழத்து சிவனுக்கான சிவத்தொண்டு ) கலாநிதி சிவஷிறி க.வைத்தீஸ்வரர் குருக்கள். இவருக்கு தியாகராஜா, இரட்ணசபாபதி எனும் இரு சகோதரர்கள், நீலாம்பாள்(ஈஸ்வர குருக்கள் அவர்களின் தாயார் -தற்போதைய பிரதம குரு, ஈழத்து சிதம்பரம்), சௌந்தராம்பாள் எனும் இரு சகோதரிகள்.
                                                      திண்ணைபுரத்தான் தினசரி திருத்தொண்டை இவரது தமையனார் தியாகராஜா குருக்கள் அவர்கள் கவனிதுக்கொண்டபோதும் அவருக்கு சிவத்தொண்டில் உறுதுணை நிற்பார். இது தவிந்த நேரங்களில் சைவத்தை எப்படி பேணலாம், தமிழை எப்படி வளர்க்கலாம் என்ற முற்போக்கு சிந்தனை கொண்டவர்.இறுதி முச்சு வரையும் என் கடன் பணிசெய்து கிடப்பதே என்ற சிந்தனை கொண்டவர். எமது
 திண்ணைபுரத்தானுக்கு ''ஈழத்து சிதம்பரம்'' எனும் பெயர் பெற்றுத் தந்தவர், மணிவாசகர் சபை ஆரம்ப காரணகர்த்தா, சைவமகா சபையின் பொன்விழாமலர் நூலாசிரியர் , FXC நடராஜாஅவர்களின் காரை மான்மியம் வெளிவர காரணமாய் இருந்தவர் இப்படி பல நூல்கள் தோன்ற காரண கர்த்தாவாக இருந்தவர்.  இன்றுவரை (2015) எமது மண்ணில் வெளிவந்த அதிகூடிய நூல்களில் இவரது எழுத்து வன்மை மிளிர்கின்றது.

                                    தியாகராஜா குருக்கள் என்றால் ஒற்றைதிருக்கல் கூடார மாட்டு வண்டில் கண்முன் நிற்கின்றது. வைத்தீஸ்வர குருக்கள் என்றால் கரியர் பூட்டிய Raleigh சைக்கிளிலில் தோளில்உள்ள சால்வைத் துண்டும் பூனூலும் பறக்க , அவரும் ஊசிபோல் ஊடுருவிச் செல்வது எம்  கண்திரையில் விம்பமாகிவிட்டது.

                                                             இறைவன் படைப்பில் எல்லா ஆத்மாக்களும் அதனதன் கறும வினைகளுக்கேற்ப பூலோக வாழ்வினை தொடங்குகின்றன, ஒருசில புண்ணிய ஆத்மாக்களை மட்டுமே இறைவன் தன்னுடனேயே வைத்திருக்கின்றான். மாணிக்கவாசகர் கூறியதுபோல் ''சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன்தாழ் வணங்கி '' என்ற சிவபுராணத்திற்கு இணங்க , சிவன் அருள் எங்கள் சிவஷிறி வைத்தீஸ்வர
 குருக்கள் அவர்களுக்கு பூரணமாக இருந்தபடியால் ஐயா அவர்கள் வயதில் மட்டுமல்ல, தன்    வாழ்க்கையிலும் 100 இக்கு 100 பெற்று சிவனிடம் சொரூபமாகிவிட்டார்.

                         யாழ் வலம்புரி பத்திரிகையில் ஆசிரியர் தலையங்க பகுதியில் (கடந்த ஞாயிற்றுக்கிழமை- 26/04/2015) ஐயா அவர்களின் மறைவையொட்டி எழுதப்பட்டுள்ள கட்டுரையில் '' காரைநகரின் வசிட்ட மாமுனிவர்'' என்று வருணித்திருக்கின்றார்கள்.

           எங்கள் மண்ணின் வைத்தீஸ்வரர் எனும் வசிட்டரின் மறைவு எமக்கு மட்டுமல்ல சைவத்துக்கும் எமது மொழி தமிழுக்கும் ஈடுபெறா இழப்பாகும். இருந்தும் நல்ல ஆத்மாக்கள் என்றென்றும் எங்களை வழிநடத்தும்.

           அன்னாரது ஆத்மா சாந்தியடைய, பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கம் ''ஆத்மா சாந்தி பிரார்த்தனை கூட்டம்'' ஒன்றை வருகின்ற ஞாயிற்றுக்கிழமை(03/05/2015) அன்று பிற்பகல் 05:00 மணியளவில் Hanuman Community Center , Marsh Drive , West Hendon , NW9 7QE , எனும் மண்டபத்தில் ஒழுங்கமைப்பு செய்துள்ளது. பிருத்தானியா வாழ் காரை மக்கள் அனைவைரையும் கலந்து கொண்டு , எமது வசிட்ட மாமுனியின் நல்லாத்மா சிவனடி சேர
 பிரார்த்திக்குமாறு வேண்டுகின்றோம்.

மேலதிக தொடர்புகளுக்கு:-

நாதன்- 07944 232014

குமார்:- 07951 950843

நன்றி
 வணக்கம்.

நிர்வாகம்,
பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கம் .

மூதறிஞர் க.வைத்தீஸ்வரக் குருக்கள் அவர்களின் மறைவு குறித்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் கண்ணீர் வணக்கம்

VaitheesOSA CaST   

 ஆன்மீகப் புரட்சியினை ஏற்படுத்திய ஒப்பற்ற சாதனையாளர்  

                மூதறிஞர் தத்துவ கலாநிதி பண்டிதர் க.வைத்தீஸ்வரக் குருக்கள்

அளப்பரிய ஆன்மிகப் பணியும் தமிழ்ப் பணியும் ஆற்றியதன் மூலம் தாம் பிறந்த காரை மண்ணிற்கு மட்டுமல்லாது தமது வளமான வாழ்விற்கு வழி காட்டிய கற்ற பாடசாலையான கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்திற்கும் பெரும் புகழ் சேர்த்த ஒப்பற்ற சேவையாளர் சிவஸ்ரீ க.வைத்திஸ்வரக் குருக்கள் அவர்கள் 100வது அகவையினை எட்டி வெகு விரைவில் நூற்றாண்டு விழாவினை காணவிருந்த வேளையில் சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தி அறிந்து பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை அதிர்ச்சியும் ஆழ்ந்த துயரமும் அடைந்துள்ளது. அன்னார் காரை மண்ணிற்கு பத்தி என்கின்ற விதையினை விதைத்து உரமூட்டி வளர்த்ததுடன்; பவள விழா கண்ட மணிவாசகர் சபையினை நிறுவி அதன் வளாச்சியில் இறுதி மூச்சுவரை ஈடுபட்டு ஆன்மிகப் புரட்சியினை ஏற்படுத்திய ஆளுமையும் பேரறிவும் மிக்க பெரும் சாதனையாளர். நாட்டின் உயர் கல்வி பீடமர்க கருதப்படும் யாழ் பல்கலைக் கழகம் தத்துவகலாநிதி என்கின்ற பட்டத்தினை வழங்கியிருப்பதும்; அகில இலங்கை கம்பன் கழகம் மூதறிஞர் என்கின்ற கௌரவ பட்டத்தினை வழங்கியிருப்பதும் அன்னாரது தமிழறிவின் ஆழத்தினையும் சைவத் தமிழ்ப் பணியின் மகத்துவத்தினையும் உணர்த்துவதாக உள்ளன. அன்னாரது இழப்பானது காரை மண்ணிற்கு மட்டுமல்லாது சைவத் தமிழுலகிற்கே பேரிழப்பாகும். என்றும் சிவ சிந்தனையுடன் வாழ்ந்து சிவனுடைய திருவடிகளை அடைந்து விட்ட அன்னாரது ஆத்மா சாந்தியடைய சௌந்தராம்பிகை சமேத சந்தரேசப் பெருமானை இறைஞ்சுவதுடன் ஆறொணாத் துயருற்றிருக்கும் அன்னாரது பிள்ளைகள் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஆறுதலையும் அனுதாபத்தினையும் பழைய மாணவர் சங்கத்தின கனடா கிளை தெரிவித்துக்கொள்கின்றது.

இவ்வாறு கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வி (காரை இந்து) பழைய மாணவர் சங்க கனடாக் கிளை நிர்வாகத்தினால் வெளியிடப்பட்ட இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

முழுமையான கண்ணீர் வணக்கப் பிரசுரத்தைக் கீழே காணலாம்.

VaitheesOSA Ca

 

மூதறிஞர் சிவத்திரு.க.வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் மறைவு குறித்து கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வி(காரை இந்து) சமூகத்தின் கண்ணீர் அஞ்சலி!

Vythees manivasga

ஆயிரம் பிறைகண்ட பேரறிஞர், தத்துவ கலாநிதி சிவஸ்ரீ க. வைத்தீஸ்வரக்குருக்கள் அவர்கள்
எமது கல்லூரியின் பழைய மாணவர்களில் முதுஅறிஞராகவும், மூத்த மாணவனாகவும் விளங்கிய குருக்கள் ஐயா அவர்கள் இறையடி சேர்ந்த செய்தி கேட்டு எமது கல்லூரிச் சமூகம் கலங்கி நிற்கின்றது.

அண்மையில் பவளவிழா மலர் வெளியீட்டில் தள்ளாத வயதிலும் எமது கல்லூரிக்குத் தரிசனம் தந்து மக்களுக்கு ஆசி வழங்கிய பெருமகனாவார். குருக்கள் ஐயா அவர்கள் கற்றறிந்த பேராளன். ஆசாரம், ஒழுக்கம், பேச்சுத்திறன், எடுத்த காரியத்தை திறமையாக முடிக்கும் திறன், விடா முயற்சி, எளிமையான தோற்றம், இனிமையாக வழங்கும் அறிவுரை என்பன ஒருங்கே அமையப்பெற்ற பெருமகனார். அன்னாரின் பிரிவு எமது கல்லூரிச் சமூகத்திற்கும், காரை வாழ் மக்களுக்கும் சைவத்தமிழ் உலகிற்கும் பேரிழப்பாகும். 

அன்னாரின் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு அவரின் ஆன்மா சாந்தியடய ஈழத்துக் கூத்தனை இறைஞ்சுகின்றோம்.

இவ்வாறு கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய அதிபர். திருமதி.வாசுகி தவபாலன் அவர்கள் பாடசாலை சமூகத்தின் சார்பில் வெளியிட்ட கண்ணீர் அஞ்சலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

முழுமையான கண்ணீர் அஞ்சலிப்பிரசுரத்தைக் கீழே தருகின்றோம். 

vaithees from School

    

ஓரு நூற்றாண்டின் அறிவியல் இயக்கம் நின்றது. சிவத்தமிழ் வித்தகர் மூதறிஞர் பண்டிதமணி கலாநிதி சிவஸ்ரீ க.வைத்தீஸ்வரக்குருக்கள்

   ஓரு நூற்றாண்டின் அறிவியல் இயக்கம் நின்றது.


                                  சிவத்தமிழ் வித்தகர் மூதறிஞர் பண்டிதமணி 
                                   கலாநிதி  சிவஸ்ரீ க.வைத்தீஸ்வரக்குருக்கள்
                                   

PHOTO       தோற்றம்                                                                                                            மறைவு
       22.09.1916                                                                                                            25.04.2015

      
   ஈழமணித்திருநாட்டின் சிவபூமி எனப்போற்றப்படும் காரைநகர் மண்பெற்ற பெரும் படைப்பாளரின் மறைவு காரைமண்ணுக்கும், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும், அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பாகும்.

 அன்னார் வைசவத்திற்கும், மாணவரின் கல்வி வளர்ச்சிக்கும் தன்னையே முழுமையாக அர்பணித்து பல சேவைகள் செய்த மாமனிதர். காரைநகர் மணிவாசகர் சபையின் தோற்றத்திற்கும், ஈழத்து சிதம்பர புராணம், ஜயனார்புராணம் ஆகிய தலபுராணங்களின் பதிப்பிற்கும் அயராது உழைத்தவர்.மாணவர்களின் பரீட்சைக்கு தேவையான கேள்வி வினா,விடை தொகுப்பாளர், இன்னும் பல அற்புதமான நூல்களின் படைப்பாளர். இவரின் படைப்புக்களும், சேவைகளும் காலத்தால் அழியாதவை. அன்னாரின் இழப்பை ஈடுசெய்ய தழிழ்கூறும் நல்லுலகம் செயலாற்ற வேண்டும்.

 அன்னாரின் பிரிவுச்செய்தி கேட்டு சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையும், சுவிஸ் வாழ் காரை மக்களும் ஆழ்ந்த துயர் பகிர்கின்றோம். 

அன்னாரின் பிரிவால் துயருற்று இருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரது இழப்பு எமது மண்ணுக்கும், தமிழ் போற்றும்  சைவ சமயத்தவருக்கும் பெரும் இழப்பாகும். அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஈழத்து சிதம்பர சௌந்திராம்பிகை சமேத சுந்தரேஸ்வரப் பெருமானை வேண்டி நிற்கின்றோம்.

அன்னாரின் சொல்லில் இருந்து "ஆண்டவன் ஆட்ட நாங்கள் ஆடிக்கொண்டு இருக்கின்றோம்"


                      ஓம்சாந்தி!      ஓம்சாந்தி!!       ஓம்சாந்தி!!!

 

                                                                                                              இங்ஙனம்
                                                                                    சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                                                              செயற்குழு உறுப்பினர்கள்
                                                                                         சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                                                              சித்திரை2015
          

 

  

 

மடாலய வளர்ச்சிக்கு மனமார உழைத்த மகான் சிவத்தமிழ் வித்தகர் மூதறிஞர் பண்டிதமனி கலாநிதி சிவஸ்ரீ க.வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் மறைவு குறித்த கண்ணீர் அஞ்சலி

Vythees4

தோற்றம்                                                                             மறைவு
22.09.1916                                                                             25.04.2015

 
காரைநகர் மாணிக்கவாசகர் மடாலய அன்னதான சபை கடந்த 85 ஆண்டுகளுக்கு மேலாக ஆற்றிவரும் அறப்பணிகள் யாவரும் அறிந்ததே.இவ் மடாலயம் பெரும் அறப்பணிகளை ஆற்றுவதற்கு மூல காரணராயும் எண்ணற்ற ஆலோசனைகளை வழங்கும் அந்தனப்பெருமகனாகவும் ஆசிரியராகவும் விளங்கிய அறவோனாகிய மூதறிஞர் க.வைத்தீசுவரக்குருக்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு சைவ உலகம் தன்னிலையிழந்து வருகின்றது.

திருமுறைமேலும் திருவாசகத்தின்மேலும் திகட்டாத காதலுடையவர் அதன் வளர்ச்சிக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர் எண்ணற்ற நூல்களின் ஆசிரியராகவும் பதிப்பாசிரியராகவும் விளங்கி சைவ உலகு பெருமைப்படும்படியாக பல சைவ உண்மைகளை வெளிக்கொணர்ந்தவர்.

மடம் தனது பணிகளை எந்தவிதமாக மேற்கொள்ளவேண்டும் என்று காட்டும் திசைகாட்டியாக விளங்கியவர்.இறுதிநேரத்திலும் திருவாசகம் கேட்டபடியே இறைவன் திருவடியில் கலந்திருக்கிறார்.என்று அறிந்தபோது அவர் பால் ஆண்டவன் கொண்ட கருணையை எண்ணி வியக்கின்றோம்.

வெகு விரைவில் நூற்றாண்டு காணவிருந்த பெருந்தகை. ஈழத்துச்சிதம்பர புராணத்தில் இவரது தந்தையார் கணபதீஸ்வரக்குருக்கள் பூசை,அபிஷேகம் செய்யும் அழகை வர்ணித்து எழுதியுள்ளதை வாசித்தவர்களுக்கு இவர் பிறந்த குடும்பத்தின் பெருமை துள்ளியமாக விளங்கும்.

காரைநகர் தமிழ் வளர்ச்சிக்கழகம் ஊடாக எண்ணற்ற நூல் தந்த கன்னியவான்.இப்பெருமகான் தனது 99 வது வயதில் தில்லைக்கூத்தனின் திருவடிகளில் எல்லையற்ற சாந்தியில் நீந்திக்களிக்கப் பிரார்த்திக்கின்றோம்.
 
மாணிக்கவாசகர் மடாலய அன்னதான சபை,
ஈழத்துச்சிதம்பரம்,
காரைநகர்.