Category: Google Photos

காரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலகம் நடாத்தும் சர்வதேச நூலக தின விழா – 2014

Library Day Notice

காரைநகர் அபிவிருத்தி சபை விடுக்கும் அறிவித்தல்

Raffle_Postponement_-_Announcement

சிதம்பராமூர்த்தி கேணியடியில் பால்முட்டி தயிர்முட்டி அடிக்கும் நிகழ்வு சித்திரைப்புத்தாண்டிற்கு மறுநாள் நடைபெற்றது.

காரைநகர் வாரிவளவு கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா சித்திரைப்புத்தாண்டு தினமான இன்று திங்கட்கிழமை மதியம் நடைபெற்றது.

விநாயகப்பெருமான் தேருக்கு எழுந்தருளுவதனையும் தேரில் ஆரோகணித்து பத்தர்களுக்கு அருட்காட்சி கொடுப்பதனையும் படங்களில் காணலாம்.
 

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள் -2014

Chithrai Puthaandu Vaazhthukal2

காரைநகர் பிரதேச செயலர் பிரிவின் வாழ்வின் எழுச்சிப் புத்தாண்டுச் சந்தை 09/04/2014 புதன்கிழமை காலை சுப்பிரமணிய வித்தியாசாலையில் ஆரம்பமானது.

காரைநகர் பிரதேச செயலர் திருமதி தே.பாபு தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் ஈழத்துச் சிதம்பர பிரதம சிவாச்சாரியார் சிவசிறி வீ.ஈஸ்வரக்குருக்கள் நாடாவெட்டி சந்தையை ஆரம்பித்து வைத்தார்.பெருமளவு மக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
 

தீவக வலயத்தில் தமிழ்த் தினப்போட்டிக்கான எழுத்தாக்கப்போட்டியில் யாழ்ற்ரன் கல்லூரி முதலிடம்

தமிழ்த் தினப்போட்டிக்கான எழுத்தாக்கப் போட்டியில் யாழ்ற்ரன் கல்லூரியின் பின்வரும் மாணவர்கள் தீவக வலய மட்டத்தில் முதலாம் இடத்தைப்பெற்றுக்கொண்டனர்.


செல்வி. அ. சசிகலா – கவிதை ஆக்கம்

செல்வி. க. ராகினி – குறுநாடக ஆக்கம்


மேற்படி மாணவர்கள் மாகாண மட்டப் போட்டிகளிற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


Mr. V. Murugamoorthy
Principal

Yarlton College

Karainagar

 

களபூமி கலையகத்தில் பரத நாட்டிய வகுப்பு ஆரம்பம்

04-04-2014 அன்று மேற்படி கலையகத்தில் பரத நாட்டிய வகுப்பு ஆரம்பமாகியது. காரைநகர்,  இடைப்பிட்டியைச் சேர்ந்த செல்வி சிவதர்ஷினி பாலப்பிரமணியம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு சைவ முறைப்படி இவ்வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆறு பிள்ளைகள் தற்போழுது சேர்ந்துள்ளார்கள. மேலும் பிள்ளைகள் சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


அதே வேளையில் இவ்வருடம் கல்விப் பொது தராதர (சாதாரண) பரீட்சையில் அதிசித்தியடைந்த களபூமி மாணவிகளான செல்வி வினோஜா நித்தியானந்தம், செல்வி தீபிகா நவரத்தினம் ஆகிய இருவரும் பாராட்டப்பட்டு அவர்களுக்குப் பரிசில்களும் வழங்கப்பட்டன.


மேலும் களபூமியில் திக்கரை திருச்செந்தூரான் முன்பள்ளியும் (14 மழலைகள்) விளானை முன்பள்ளியும் (6 மழலைகள்) என இரு முன்பள்ளிகள் தனித்தனியாக இயங்கிவந்தன. இவ்வருடம் இம்முன்பள்ளிகளில் முறையே 14 பிள்ளைகளும் 6 பிள்ளைகளும் கற்று வருகின்றார்கள். பிள்ளைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதனால் விளானை முன்பள்ளியினை மூடுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. என்ற முடிவினை முன்பள்ளிப் இணைப்பாளர் செல்வி புஸ்பராணி தெரிவித்திருந்தார் இதனையடுத்து இரு முன்பள்ளி ஆசிரியர்களும் பிள்ளைகளின் பெற்றோரும் சேர்ந்து அம்முன்பள்ளிகள் இரண்டையும் ஒரு இடத்தில் நடத்துவதாக முடிவெடுத்தனர். ஒரு தகுந்த கட்டிடம் இல்லாத காரணத்தினால் களபூமி கலையகத்திலே அவற்றினை ஒன்றாக நடத்துவதென்று தீர்மானி;க்கப் பட்டது. இதனை முன்னிட்டு இரு முன்பள்ளிகளும் களபூமி கலையகத்தில் இயங்கவுள்ளன. களபூமி கலையகம் அக்கிராமத்துப் பெருமகனார் சட்டத்தரணி (அமரர்) குலசிங்கம் அவர்களின் இல்லத்தில் அமைந்துள்ளது என்பது அறிந்த விடயம். இருந்தும் இக்கட்டிடம் மிகவும் பாழடைந்த நிலையிலுள்ளது. இதனால் முன்பள்ளிகளை நெடுங்கால நேக்குடன் இங்கு நடத்துவதென்பது சாத்தியமாகத் தெரியவில்லை. ஆகவே கட்டிடத்தினைத் திருத்துவதற்கு நிதி தேவைப்படுகின்றது. களபூமியினைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் நிதியுதவி செய்ய முன்வந்தால் களபூமி கலையகத்தினதும் மழலைகளின் எதிர்காலமும் சுபீட்சமாக இருக்கும்.
இவ்விரு முன்பள்ளிகளின் மாணவர்களுக்கு ஓர் அன்பரின் அன்பளிப்பாக ரூபா 20,000 பெறுமதியான பாண்ட் வாத்திய இசைக்கருவிகளும் விளையாட்டுப் பொருட்களும் பரத நாட்டிய வகுப்பு தொடங்கியதன் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்டன.

தகவல்
மதிவாசி

 

காரைநகர் வாரிவளவு கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. மகோற்சவத்தின் தேர்த்திருவிழா சித்திரைப்புத்தாண்டு தினமான எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெற உள்ளது.

மரண அறிவித்தல்,திருமதி மனோன்மணி கனகசபை (வாரிவளவு,காரைநகர்.)

1

திருமதி மனோன்மணி கனகசபை (வாரிவளவு,காரைநகர்.) மலேசியாவைப் பிறப்பிடமாகவும், வாரிவளவை வசிப்பிடமாகவும் தற்போது பொன்னம்பலம் வீதி, ஆலடி, காரைநகரை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை மனோன்மணி 03.04.2014 அன்று காலமானார்.

 அன்னார் காலஞ்சென்ற கந்தையா கனகசபை (P.H.I)யின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற முத்தையா இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் செல்வகுமார் (Marine Eng.,U.S.A), கனகமணி, சாரதாமணி (M.A, RDHS office, Vavuniya), சிவகுமார் (Electronical Eng, U.S.A), கலாமணி ஆகியோரின் அன்புத் தாயாரும், நந்தினி (U.S.A), காலஞ்சென்ற இராசரத்தினம், தியாகலிங்கம் (P.H.I, U.C, Vavuniya), பவானி (U.S.A), தியாகலிங்கம் (Statistician, Kachcheri, Vavuniya) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று இறுதிக் கிரியைகளுக்காக சாம்பலோடை இந்து மயானத்தில் நடைபெற்றது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

 

                                                                                                                                                                 தகவல்

                                                                                                                                                                 மக்கள்,

                                                                                                                                                              மருமக்கள்,

                                                                                                                                                             பேரப்பிள்ளைகள்

 

 பொன்னம்பலம் வீதி, ஆலடி, காரைநகர்.

தொ.பே.இல :- 0094 21 221 1785

                             0094 77 6097399

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்

01. யா/ சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம்

01 கனகசுந்தரம் லோகேஸ்வரி – A,B,3C,2S.

02 இராசலிங்கம் சுஜீவன் –A,B,2C,3S

 


02.யா/வியாவில் சைவ வித்தியாலயம்.

01 கோ.நிரோஜி – 3A,3C,3S

02 ந.லக்சிகா – 2A,B,C,4S

 

03.கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம்

நவரத்தினம் தீபிகா – 6A,B,C,S

(ஏனைய மாணவர்களின் விபரம் தொடர்ந்து எடுத்துவரப்படும்)

 

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியின் க.பொ.த சா.த பரீட்சையில் அதிகூடிய பெறுபேறுகளைப்பெற்ற மாணவர்களையும் அவர்களைக் கற்பித்த ஆசிரியர்களையும் கல்லூரி அதிபரையும் படத்தில் காண்கின்றீர்கள்.

OLYMPUS DIGITAL CAMERA

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் பத்தாவது ஆண்டு சிறப்புமலருக்கான ஆக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

swiss

சேவைநலன் பாராட்டும் மணிவிழாவும், திரு சுப்பிரமணியம் கணேசமூர்த்தி (வித்தியாலய அதிபர் யா/சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம் களபூமி,காரைநகர்)

யாழ்ற்ரன் கல்லூரியில் St. John’s Ambulance மாணவர் அணி ஆரம்பம்

கடந்த 23/03/2014 ஞாயிற்றுக்கிழமை மு.ப 9 மணியளவில் கல்லூரி அதிபர் திரு.வே. முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் கல்லூரியின் St. John's Ambulance அணி ஆரம்பித்து வைக்கப்பட்டது. 70 மாணவர்கள் கொண்ட இவ்வணிக்கு St. John's Ambulance யாழ் மாவட்ட உதவி ஆணையாளர் திரு. ஈழநேசன் அவர்களால் பயிற்சிகள் வழங்கப்பட்டன. மாணவர்கள் உற்சாகத்துடன் பயிற்சிகளில் ஈடுபட்டனர். St. John's Ambulance  அணியினை எமது கல்லூரியில் ஆரம்பித்து வைப்பதற்கு செயற்பட்ட ஆசிரியர் திரு. வே. சிவநேசன் அவர்களுக்கு அதிபர் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கிறார்.

 


வே. முருகமூர்த்தி

அதிபர்

யாழ்ற்ரன் கல்லூரி

காரைநகர்

 

 

சேவைநலன் பாராட்டும் மணிவிழாவும்

1 2

காரைநகர் மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவ தோ்த்திருவிழா தினமான இன்று (29.03.2014) அம்பாளுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகளும் பூஜை வழிபாடுகளும் நடைபெற்றது

காரைநகர் மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவ தோ்த்திருவிழா தினமான இன்று (29.03.2014) அம்பாளுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகளும் பூஜை வழிபாடுகளும் நடைபெற்றது. இதன்போது பக்தர்கள் திரளாக வருகை தந்து அம்பாளை தாரிசித்தனர். மகேஸ்வரன் தர்மசுரபி மண்டபத்தில் அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. இதேவேளை அம்பாளின் திருப்பணி வேலைகள் மிகவேகமாக நடைபெறுவதையும் திருப்பணியின் தற்போதைய முன்னேற்றத்தையும் படங்களில் காணலாம். அம்பாள் பாலஸ்தாபனம் நிகழ்த்தப்பட்டு பாலாலயத்தில் வீற்றிருப்பதால் வழமைபோல இம்முறை மகோற்சவம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் கும்பாபிஷேகத்தை நிகழ்த்துவதற்கும் திருப்பணி வேலைகள் நிறைவுபெறவும் அம்பிகையின் அடியவர்கள் வாரிவழங்குமாறு கேட்டுக்கொள்கின்றனா் திருப்பணிச்சபையினர்.
 

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் (காரைநகர் இந்துக் கல்லூரி) பழைய மாணவர் சங்கம் – கனடா ஆண்டுப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும்

meetin_-_2014_copy

மரண அறிவித்தல்,திரு தம்பிப்பிள்ளை முருகேசு

3

                                                                          திரு தம்பிப்பிள்ளை முருகேசு
பிறப்பு : 20 சனவரி 1929                                                                                                           இறப்பு : 24 மார்ச் 2014


   யாழ். காரைநகர் ஆயிலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை முருகேசு அவர்கள் 24-03-2014 திங்கட்கிழமை அன்று இலங்கையில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி தம்பிப்பிள்ளை(V.T.A பசறை அருணாசலம் & Co உரிமையாளர்கள்) தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற திரு.திருமதி அருணாசலம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அன்னம் அவர்களின் அன்புக் கணவரும்,

கலாவதி(இலங்கை), தனபாலன்(பிரித்தானியா), ரகுபாலன்(சுவிஸ்), வசந்தி(பிரித்தானியா), காலஞ்சென்ற பானுமதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம்(V.T.A), காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(கனடா), பாலாமணி(கனடா), பாக்கியம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

திருச்செல்வம், சாந்தினி, ராதா, தனபாலாசிங்கம், துரைரட்ணராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திருக்குமார், சிவம், காந்தன், வாசுகி, ஆரணி, யாதவன், சந்தியா, சுகந்தினி, காலஞ்சென்ற துளசினி, வியாசர் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் தகனக்கிரியை 27-03-2014 வியாழக்கிழமை அன்று இலங்கையில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்
தணபாலன்(மகன்- பிரித்தானியா)
தொடர்புகளுக்கு
தனபாலன் — பிரித்தானியா
தொலைபேசி: +441494721825
வசந்தி — பிரித்தானியா
தொலைபேசி: +442084081454
ரகு — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41764591979
கலா — இலங்கை
செல்லிடப்பேசி: +94774569312
 
 
 

 

 

காரைநகர் அரசினர் வைத்தியசாலைக்கான அபிவிருத்திச் சங்கம் ( 23.03.2014)நேற்று ஞாயிற்றுக்கிழமை அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது.

காரைநகர் அரசினர் வைத்தியசாலை வைத்திய அதிகாரி கே.இந்திரமோகன் தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் வைத்தியசாலையின் அபிவிருத்திக்கான சங்கம் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.சங்கத்தின் தலைவராக வைத்தியசாலை வைத்திய அதிகாரி கெ.இந்திரமோகன் அவர்களும் உப தலைவராக மருத்துவர் எஸ்.சுவாமிநாதன் அவர்களும் செயலாளராக  ந.பாலகிருஸ்ணன் அவர்களும் பொருளாளராக  சுந்தரலிங்கம் அகிலன் அவர்களும் உப செயலாளராக  க.பிரதீபனும் தெரிவு செய்யப்பட்டதுடன் 10 நிர்வாக உறுப்பினர்களும் தெரிவாகினர்.

 

ஈழத்துச் சிதம்பர ஜயனார் பொங்கல் உற்சவக் காட்சிகள் 22.03.2014

காரைக் கொண்டாட்டம்- 2014

Summer_Get_Together1

மரண அறிவித்தல்,திருமதி சொக்கலிங்கம் சிவாம்பிகை( தங்கோடை, காரைநகர்)

FRAME_-_2zxDk-AGqX_-_normal

                                                      திருமதி சொக்கலிங்கம் சிவாம்பிகை
                                                                       தங்கோடை, காரைநகர்


தோற்றம்: 27.03.1945                                                                                                            மறைவு: 18.03.2014
 
காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சொக்கலிங்கம் சிவாம்பிகை
அவர்கள் 18.03.2014 செவ்வாய்கிழமை அன்று காரைநகரில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற கந்தையா(C.T.O) இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற
கார்த்திகேசு தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சொக்கலிங்கம்
அவர்களின் அன்பு மனைவியும், சுதாகரன்(இலங்கை), தனஞ்செயன்(இலங்கை),
சிற்சபேசன்(இலண்டன்), சிவேந்திரன்(இலங்கை), ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்;சென்ற வாமதேவன், காலஞ்சென்ற சிவதாசன் மற்றும் சிவபாலன், சிவநேசன் ஆகியோரின்
அன்புச் சகோதரியும், சிவதர்சினி(இலங்கை), யாழ்மொழி(இலங்கை), தர்சிகா(இலண்டன்),
யசோ(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் காரைநகரில் 20.03.2014 வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு
நடைபெற்று சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்
.


இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
வேண்டுகின்றோம்.

தகவல்: சிற்சபேசன்(மகன்)

தொடர்புகளுக்கு: சிற்சபேசன் – 00 44 74 058 06736(இலண்டன்)
            சிவேந்திரன் – 00 94 77 411 7025(இலங்கை)
 

 

 

 

ஈழத்துச் சிதம்பரம் எனப் போற்றப்படும் காரைநகர் சிவன்கோவில் வருடாந்த பெருந்திருவிழாவின் தேர்த்திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை (16.03.2014) ஆயிரக்கணக்கான அடியவர்களின் அரோகரா கோசத்தடன் பத்திபூர்வமாக இடம்பெற்றது.

காரைநகர் பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகரின் ஏற்பாட்டில் புகைத்தலுக்கெதிரான விழிப்புணர்வு பேரணி காரைநகரில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி முன்றலில் ஆரம்பமான இந்தப் பேரணி காரைநகர் வலந்தலைச் சந்தியில் நிறைவு பெற்றது.பேரணியில் இந்துக்கல்லூரி,யாழ்ற்ரன் கல்லூரி ஆகிய இரு பாடசாலைகளின் மாணவர்கள் பிரதேச செயலகம்,பிரதேச சபை ஆகியவற்றின் ஊழியர்கள் சுகாதாரத் தொண்டர்கள்,மருத்துவமாதுக்கள்,பிரதேச சபை உறுப்பினர்கள் கோட்டக்கல்விஅதிகாரி,பாடசாலைகளின் அதிபர்கள்,ஆசிரியர்கள்,பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

புகை மரணக்குகை என்ற தொணிப்பொருளிலான விழிப்புணர்வு தொடரணிக்கு காரைநகர் அபிவிருத்திச் சபை,பாடசாலைகள் பிரதேச செயலகம்,பிரதேச சபை,சுகாதாரப் பகுதியினர் எனப் பலரும் ஆதரவு வழங்கினர்.காரைநகர் அபிவிருத்திச் சபையினரால் பேரணியில் கலந்துகொண்ட ஜந்நூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு நூலக முன்றலில் வைத்து குளிர்பானம் வழங்கப்பட்டது.

பேரணியில் கலந்துகொண்டவர்கள் புகைத்தலுக்கெதிராக பல்வேறு கோசங்களை எழுப்பியதுடன் புகைத்தலால் வரும் தீமைகள் தொடர்பாக சுட்டிக்காட்டி மக்களை புகைத்தலில் இருந்து விடுபடுமாறு கோரினர்.

 

 

 

 

 

ஈழத்துச் சிதம்பர எட்டாம் நாள் இரவு உற்சவக் காட்சிகள் 15.03.2014(சப்பரத் திருவிழா)

ஈழத்துச் சிதம்பர ஏழாம் நாள் இரவு உற்சவக் காட்சிகள் 14.03.2014(வேட்டைத் திருவிழா)

ஈழத்துச் சிதம்பர ஆறாம் நாள் இரவு உற்சவக் காட்சிகள் 13.03.2014

ஈழத்துச் சிதம்பர ஜந்தாம் நாள் இரவு உற்சவக் காட்சிகள் 12.03.2014

காரைநகா் மணற்காடு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய மூலஸ்தான பண்டிகையின் பிரமேந்திர வெளி மூடும் வைபவம் பக்திபூா்வமாக 12.03.2014 இன்று புதன்கிழமை காலை 6.00 மணி தொடக்கம் 7.30 மணி வரையுள்ள சுபவேளையில் பக்தா்கள் புடைசூழ பக்திபூா்வமாக நடைபெற்ற அதேவேளை அம்பிகையின் கிழக்குப்பக்க உட்பிரகாரக் கொட்டகைக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. அந்நிகழ்வுகளை படங்களில் காணலாம்.