காரைநகர் பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகரின் ஏற்பாட்டில் புகைத்தலுக்கெதிரான விழிப்புணர்வு பேரணி காரைநகரில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி முன்றலில் ஆரம்பமான இந்தப் பேரணி காரைநகர் வலந்தலைச் சந்தியில் நிறைவு பெற்றது.பேரணியில் இந்துக்கல்லூரி,யாழ்ற்ரன் கல்லூரி ஆகிய இரு பாடசாலைகளின் மாணவர்கள் பிரதேச செயலகம்,பிரதேச சபை ஆகியவற்றின் ஊழியர்கள் சுகாதாரத் தொண்டர்கள்,மருத்துவமாதுக்கள்,பிரதேச சபை உறுப்பினர்கள் கோட்டக்கல்விஅதிகாரி,பாடசாலைகளின் அதிபர்கள்,ஆசிரியர்கள்,பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

புகை மரணக்குகை என்ற தொணிப்பொருளிலான விழிப்புணர்வு தொடரணிக்கு காரைநகர் அபிவிருத்திச் சபை,பாடசாலைகள் பிரதேச செயலகம்,பிரதேச சபை,சுகாதாரப் பகுதியினர் எனப் பலரும் ஆதரவு வழங்கினர்.காரைநகர் அபிவிருத்திச் சபையினரால் பேரணியில் கலந்துகொண்ட ஜந்நூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு நூலக முன்றலில் வைத்து குளிர்பானம் வழங்கப்பட்டது.

பேரணியில் கலந்துகொண்டவர்கள் புகைத்தலுக்கெதிராக பல்வேறு கோசங்களை எழுப்பியதுடன் புகைத்தலால் வரும் தீமைகள் தொடர்பாக சுட்டிக்காட்டி மக்களை புகைத்தலில் இருந்து விடுபடுமாறு கோரினர்.