களபூமி கலையகத்தில் பரத நாட்டிய வகுப்பு ஆரம்பம்

04-04-2014 அன்று மேற்படி கலையகத்தில் பரத நாட்டிய வகுப்பு ஆரம்பமாகியது. காரைநகர்,  இடைப்பிட்டியைச் சேர்ந்த செல்வி சிவதர்ஷினி பாலப்பிரமணியம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு சைவ முறைப்படி இவ்வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆறு பிள்ளைகள் தற்போழுது சேர்ந்துள்ளார்கள. மேலும் பிள்ளைகள் சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


அதே வேளையில் இவ்வருடம் கல்விப் பொது தராதர (சாதாரண) பரீட்சையில் அதிசித்தியடைந்த களபூமி மாணவிகளான செல்வி வினோஜா நித்தியானந்தம், செல்வி தீபிகா நவரத்தினம் ஆகிய இருவரும் பாராட்டப்பட்டு அவர்களுக்குப் பரிசில்களும் வழங்கப்பட்டன.


மேலும் களபூமியில் திக்கரை திருச்செந்தூரான் முன்பள்ளியும் (14 மழலைகள்) விளானை முன்பள்ளியும் (6 மழலைகள்) என இரு முன்பள்ளிகள் தனித்தனியாக இயங்கிவந்தன. இவ்வருடம் இம்முன்பள்ளிகளில் முறையே 14 பிள்ளைகளும் 6 பிள்ளைகளும் கற்று வருகின்றார்கள். பிள்ளைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதனால் விளானை முன்பள்ளியினை மூடுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. என்ற முடிவினை முன்பள்ளிப் இணைப்பாளர் செல்வி புஸ்பராணி தெரிவித்திருந்தார் இதனையடுத்து இரு முன்பள்ளி ஆசிரியர்களும் பிள்ளைகளின் பெற்றோரும் சேர்ந்து அம்முன்பள்ளிகள் இரண்டையும் ஒரு இடத்தில் நடத்துவதாக முடிவெடுத்தனர். ஒரு தகுந்த கட்டிடம் இல்லாத காரணத்தினால் களபூமி கலையகத்திலே அவற்றினை ஒன்றாக நடத்துவதென்று தீர்மானி;க்கப் பட்டது. இதனை முன்னிட்டு இரு முன்பள்ளிகளும் களபூமி கலையகத்தில் இயங்கவுள்ளன. களபூமி கலையகம் அக்கிராமத்துப் பெருமகனார் சட்டத்தரணி (அமரர்) குலசிங்கம் அவர்களின் இல்லத்தில் அமைந்துள்ளது என்பது அறிந்த விடயம். இருந்தும் இக்கட்டிடம் மிகவும் பாழடைந்த நிலையிலுள்ளது. இதனால் முன்பள்ளிகளை நெடுங்கால நேக்குடன் இங்கு நடத்துவதென்பது சாத்தியமாகத் தெரியவில்லை. ஆகவே கட்டிடத்தினைத் திருத்துவதற்கு நிதி தேவைப்படுகின்றது. களபூமியினைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் நிதியுதவி செய்ய முன்வந்தால் களபூமி கலையகத்தினதும் மழலைகளின் எதிர்காலமும் சுபீட்சமாக இருக்கும்.
இவ்விரு முன்பள்ளிகளின் மாணவர்களுக்கு ஓர் அன்பரின் அன்பளிப்பாக ரூபா 20,000 பெறுமதியான பாண்ட் வாத்திய இசைக்கருவிகளும் விளையாட்டுப் பொருட்களும் பரத நாட்டிய வகுப்பு தொடங்கியதன் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்டன.

தகவல்
மதிவாசி