Muthu Ponnampalam

Author's posts

அமரர் குலசேகரம்பிள்ளை சிவபாதசுந்தரம் (ராஜகுலம் டிரேடர்ஸ்-வவுனியா) அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி!

காரைநகரைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குலசேகரம்பிள்ளை சிவபாதசுந்தரம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

குடும்பத்தின் குல விளக்கே
ஆண்டு ஐந்து போனாலும்
உங்கள் நினைவுகள் எம்மை
விட்டு அகலவில்லை ஐயா!

வீசும் காற்றினிலும்
நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உங்கள்
நினைவால் வாடுகின்றோம் ஐயா!

உங்கள் இழப்பை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்
மீண்டும் பிறந்து வருவீரா
எம் அன்பு ஐயாவே!

உங்கள் இழப்பால் எம் விழியோரம்
கசியும் கண்ணீர் துளிகளை
உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கின்றோம்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்…

தகவல்: தாய், சகோதரங்கள்

மரண அறிவித்தல், திரு.சுப்பிரமணியம் அருணாசலம் (பொன்னாவளை,களபூமி,காரைநகர்) (கரவெட்டி-நெல்லியடி) (உடையார்கட்டு) (ஸ்காபுரோ,கனடா)

Thiru_Subramaniam_Memo-03A

 

 

Thiru_Subramaniam_Notice-05E

கனடா – காரை கலாச்சார மன்றம் நடாத்தும் தமிழ் மொழித் திறன், பண்ணிசைப் போட்டிகள்- 2023

கனடா – காரை கலாச்சார மன்றம்

நடாத்தும் தமிழ் மொழித் திறன்,பண்ணிசைப் போட்டிகள்- 2023

கனடா – காரை கலாச்சார மன்றம் வருடாந்தம் நடாத்தும் தமிழ் மொழித் திறன், பண்ணிசைப் போட்டிகள்  September 17, 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று நடாத்தப்படவுள்ளன.

இடம்: Scarborough Civic Centre

காலம்: September 17, 2023 ஞாயிற்றுக்கிழமை

நேரம்: காலை 9.30மணி

போட்டிகள் பின்வரும் ஆறு பிரிவுகளாக நடாத்தப்படும்.

1.பாலர் பிரிவு (பாலர் கீழ்ப் பிரிவு, பாலர் மேற் பிரிவு)
2.கீழ்ப் பிரிவு (தரம் 1, தரம் 2)
3.மத்திய பிரிவு (தரம் 3, தரம் 4)
4.மேற் பிரிவு (தரம் 5, தரம் 6)
5.அதிமேற் பிரிவு (தரம் 7, தரம் 8)
6.உயர் பிரிவு (தரம் 9, தரம் 10)

ஜூன் மாதம் கனடிய பாடசாலை ஒன்றில் எந்த வகுப்பில் கல்வி கற்றார்களோ அந்த வகுப்பு பிரிவில் பிள்ளைகள் பங்குபற்றவேண்டும்.

நடைபெறும் போட்டிகள்:
பண்ணிசை, பேச்சு, வாசிப்பு, எழுத்து(சொல்வதெழுதுதல்)

பண்ணிசை:
பாலர் பிரிவு – ஏதாவது ஒரு தேவாரம்
கீழ்ப் பிரிவு – ஏதாவது ஒரு தேவாரம்
மத்திய பிரிவு – ஏதாவது ஒரு தேவாரத்துடன் ஏதாவது ஒரு புராணம் அல்லது திருப்புகழ்
மேற் பிரிவு – ஏதாவது ஒரு தேவாரத்துடன் ஏதாவது ஒரு புராணம் அல்லது திருப்புகழ்
அதிமேற் பிரிவு – ஏதாவது ஒரு தேவாரத்துடன் ஏதாவது ஒரு புராணம் அல்லது ஏதாவது ஒரு திருவாசகம்
உயர் பிரிவு – ஏதாவது ஒரு தேவாரத்துடன் ஏதாவது ஒரு புராணம் அல்லது ஏதாவது ஒரு திருவாசகம்

பேச்சு:
வயது எல்லைக்கு உட்பட்டளவில் ஆறு பிரிவுகளிற்கும் தரப்பட்டுள்ள பேச்சுக்குரிய விடயங்களை மனப்பாடம் செய்து பேசுதல் வேண்டும்.

வாசிப்பு:
வயது எல்லைக்கு உட்பட்டளவில் ஆறு பிரிவுகளுக்கும் தரப்பட்டுள்ள வாசிப்புக்கு தரப்பட்டுள்ள விடயங்களை பார்த்து வாசித்தல் வேண்டும்.

எழுத்து (சொல்வதெழுதுதல்):
வயது எல்லைக்கு உட்பட்டளவில் ஆறு பிரிவுகளிற்கும் தரப்பட்டுள்ள எழுத்துக்குரிய விடயங்களை தயார் படுத்திக் கொண்டு வருதல் வேண்டும். போட்டியின் போது சொல்வதெழுதுதல் போன்று கேட்டு மட்டும் எழுதுதல் வேண்டும்.

காரைநகருடன் தொடர்புடைய பெற்றோர்களின் பிள்ளைகள் இப்போட்டிகளில் பங்குபற்றமுடியும்.

பங்குபற்ற விரும்பும் பிள்ளைகள் சரியாக காலை 9.30 மணிக்கு தவறாது பிரசன்னமாயிருத்தல் வேண்டும்.

இப் போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் பிள்ளைகள் தங்கள் விபரங்களை பதிந்து சகல போட்டிகளிலும் பங்குபற்றலாம்.

போட்டிகளில் பங்கு பற்ற விரும்புவோர் பின்வரும் விபரங்களை பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம். பெயர்களை மட்டும் ஆங்கிலத்திலும் தமிழிலும் பதிவுசெய்வது விரும்பத்தக்கது.

கனடா – காரை கலாச்சார மன்றம் நடாத்தும் தமிழ் மொழித் திறன், பண்ணிசைப் போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்ப படிவம்.

 

Verification

போட்டி முடிவுகள் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

பேச்சு போட்டியில் முதலாவது இடத்தை பெற்றுக்கொள்ளும் பிள்ளைகள் “காரை வசந்தம் – 2023” இல் அரங்கத்தில் பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்.

போட்டிகளில் பங்குபற்றும் பிள்ளைகள் மேலதிக விபரங்களுக்கு karainagar@gmail.com என்ற இமெயில் ஊடாக தொடர்பு கொள்ளலாம்.

நன்றி

                நிர்வாகசபை
கனடா காரை கலாச்சார மன்றம்

 

உங்கள் போட்டிக்கான பிரதிகளைப் பெறுவதற்கு தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.                                         

 

                                                              பிரிவுகள்

 

பாலர் பிரிவு: Junior/Senior Kindergarden students

பேச்சு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2023/08/Speech-2023-JK-SK.pdf

 

வாசிப்பு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2023/08/Reading-2023-JK-SK.pdf

 

எழுத்து(சொல்வதெழுதுதல்) :

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2023/08/Spelling-2023-JK-SK.pdf

 

கீழ்ப் பிரிவு: Gr 1 / Gr 2 students

பேச்சு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2023/08/Speech-2023-1-2.pdf

 

வாசிப்பு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2023/08/Reading-2023-1-2.pdf

 

எழுத்து(சொல்வதெழுதுதல்) :

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2023/08/Spelling-2023-1-2.pdf

 

மத்திய பிரிவு: Gr 3 / Gr 4 students

பேச்சு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2023/08/Speech-2023-3-4.pdf

 

வாசிப்பு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2023/08/Reading-2023-3-4.pdf

 

எழுத்து(சொல்வதெழுதுதல்) :

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2023/08/Spelling-2023-3-4.pdf

 

மேற் பிரிவு: Gr 5 / Gr 6 students

பேச்சு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2023/08/Speech-2023-5-6.pdf

 

வாசிப்பு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2023/08/Reading-2023-5-6.pdf

 

எழுத்து(சொல்வதெழுதுதல்) :

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2023/08/Spelling-2023-5-6.pdf

 

அதிமேற் பிரிவு: Gr 7 / Gr 8  students

பேச்சு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2023/08/Speech-2023-7-8.pdf

 

வாசிப்பு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2023/08/Reading-2023-7-8.pdf

 

எழுத்து(சொல்வதெழுதுதல்) :

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2023/08/Spelling-2023-7-8.pdf

 

உயர் பிரிவு: Gr 9 / Gr 10  students

பேச்சு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2023/08/Speech-2023-9-10.pdf

 

வாசிப்பு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2023/08/Reading-2023-9-10.pdf

 

எழுத்து(சொல்வதெழுதுதல்) :

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2023/08/Spelling-2023-9-10.pdf

 

 

கனடா – காரை கலாச்சார மன்றம் நடாத்தும் தமிழ் மொழித் திறன், பண்ணிசைப் போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்ப படிவம்.

கனடா – காரை கலாச்சார மன்றம் நடாத்தும் தமிழ் மொழித் திறன், பண்ணிசைப் போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்ப படிவம்.

 

Verification

மரண அறிவித்தல், திருமதி.விஜயதேவி சுந்தரராஜன் (மலேசியா) ( துணைவி,வட்டுக்கோட்டை) (சம்பந்தர்கண்டி,காரைநகர்) (கொழும்பு)

திரு.மயில்வாகனம் ஆனந்தரெட்ணசாமி அவர்களின் மறைவு குறித்து சிந்துஜா போட்டொ அன் வீடியோ நிறுவனத்தினர் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி!

மரண அறிவித்தல், திரு.மயில்வாகனம் ஆனந்தரெட்ணசாமி (மட்டக்களப்பு – யாழ்ப்பாணம் – எவகிறீன் அச்சக உரிமையாளர்) (பண்டித்தாழ்வு,காரைநகர்) (கல்லடி,மட்டக்களப்பு)

கனடா காரை கலாச்சார மன்றம் 24.09.2022 தொடக்கம் 04.08.2023 வரை காரைநகரில் மேற்கொள்ளப்பட்ட உதவிகள்!

கனடா காரை கலாச்சார மன்றம்

24.09.2022 தொடக்கம் 04.08.2023 வரை

காரைநகரில் மேற்கொள்ளப்பட்ட உதவிகள்!

  1. யுத்தத்தின் போது தாய் தந்தையை இழந்த சிறுவன் நக்கீரனுக்கு கனடாவில் வதியும் காரைநகரைச் சேர்ந்த ஓர் அன்பரின் உதவியுடன் மே/2010 தொடக்கம் கனடா காரை கலாச்சார மன்றத்தால் வழங்கப்பட்டு வருகின்றது. மாதாந்த உதவிப்பணம் ரூபா 5,000 இருந்து ஜுலை மாதம் /2023 தொடக்கம் ரூபா 7,000 கனடா காரை கலாச்சார மன்றத்தால் வழங்கப்பட்டு வருகின்றது.
  2. கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து அறிக்கைகள் மன்றத்திற்கு கிடைக்கப்பெற்று வருகின்றது.
  3. காரைநகர் அபிவிருத்திச் சபை நூலக உதவியாளர்களிற்கான மாதாந்த ஒருபகுதி கொடுப்பனவாக ரூபா 10,000 கனடா காரை கலாச்சார மன்றத்தால் வழங்கப்பட்டு வருகின்றது.
  4. காரைநகர் மாணவர்களினால் பயன்படுத்தப்பட்டு வருகின்ற அபிவிருத்திச் சபை நூலகத்திலுள்ள இரண்டு போட்டோப் பிரதி இயந்திரத்திற்கு தேவைப்பட்ட ரோனர் அக்டோபர், நவம்பர் (2022) மாதங்களில் வாங்கி உதவப்பட்டது.
  5. கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் காரைநகர் கோட்டப் பாடசாலைகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான 1ம் கட்ட வழிகாட்டல் செயலமர்வு 20.11.2022 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
  6. கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் காரைநகர் கோட்டப் பாடசாலைகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான 2ம் கட்ட வழிகாட்டல் செயலமர்வு 26.11.2022 சனிக்கிழமை இடம்பெற்றது.
  7. ஆயிலி சிவஞானோதயா வித்தியாசாலைக்கு அத்தியாவசிய நீர் பாவனைக்காக மோட்டார் மற்றும் மோட்டர் அறை என்பன (மார்ச் /2023) கனடா காரை கலாச்சார மன்றத்தால் கட்டிக்கொடுக்கப்பட்டது.
  8. கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையில் க.பொ.த. பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிற்கு கணித பாடத்திலான முன்னோடிப் பரீட்சை பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 16.04.2023 அன்று இந்துக் கல்லூரி, யாழ்ற்ரன் கல்லூரி ஆகியனவற்றில் நடாத்தப்பட்டுள்ளது.
  9. க.பொ.த.சாதாரண பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களிற்கு பிரபல்யம் மிக்க வளவாளர்கள் பங்குகொண்ட கல்விக் கருத்தரங்கு கனடா காரை கலாச்சார மன்றத்தின் பூரணமான அனுசரணையில் காரைநகர் இந்துக் கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் வெள்ளி சனி ஞாயிறு (05.05.2023, 06.05.2023, 07.05.2023) ஆகிய தினங்களிலும் வெகு சிறப்பாக நடைபெற்றிருந்தது.
  10. ஒருத்தி படம் திரையிடப்பட்டதன் ஊடாக திரட்டப்பட்ட நிதியின் மூலம் காரைநகர் வைத்தியசாலைக்கு முதலாம் கட்டமாக ஒரு தொகுதி அவசிய மருந்துப் பொருட்களை கனடா காரை கலாச்சார மன்றம் 13.06.2023 செவ்வாய்க்கிழமை அன்று பிரதேச வைத்தியசாலைக்குப் பொறுப்பான வைத்திய அதிகாரி Dr.செந்தூரன் அவர்களிடம் வைத்தியசாலையில் வைத்து கையளிக்கப்பட் டன.
  11. கனடா காரை கலாச்சார மன்றத்தினால் காரைநகரைச் சேர்ந்த எட்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது. 5 மாணவர்களுக்கான மாதாந்தம் ரூபா 10,000 வீதமும் மூன்று மாணவர்களுக்கான மாதாந்தம் ரூபா 7,500 வீதமும் மாதாந்த கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது. இதில் ஒரு மாணவர் பல்கலைக்கழகத்தில் படிப்பு முடியும் வரை வேலை கிடைத்தபடியால் நிதி தேவையில்லை என மன்றத்திற்கு அறியத்தந்துள்ளார். இரண்டு மாணவர்களிற்கு கனடாவில் வதியும் காரைநகரைச் சேர்ந்த ஓர் அன்பரின் நிதி உதவியுடன் வழங்கப்பட்டு வருகின்றது.
  12. வறிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவியின் கல்விக்கான உதவியாக ரூபா 5,000 ஜுலை மாதம் /2023 தொடக்கம் காரை கலாச்சார மன்றத்தால் வழங்கப்பட்டு வருகின்றது.

கனடா காரை கலாச்சார மன்றம்

                    05.08.2023

 

05.08.2023 சனிக்கிழமை அன்று நடைபெற்ற கனடா காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடலில் விநியோகிக்கப்பட்ட அறிக்கை.

கனடா காரை கலாச்சார மன்றம் நடாத்தும் தமிழ் மொழித்திறன் மற்றும் பண்ணிசை போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் பிள்ளைகளிற்கான அறிவித்தல்.

 

கனடா காரை கலாச்சார மன்றம் நடாத்தும் தமிழ் மொழித்திறன் மற்றும் பண்ணிசை போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் பிள்ளைகளிற்கான அறிவித்தல்.

கனடா காரை கலாச்சார மன்றம் நடாத்தும் தமிழ் மொழித்திறன் மற்றும் பண்ணிசை போட்டிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 17ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (17.09.2023) ஸ்காபுரோ சிவிக் சென்டர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

போட்டிகள் 9.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறும்.

ஜூன் மாதம் கனடிய பாடசாலை ஒன்றில் எந்த வகுப்பில் கல்வி கற்றார்களோ அந்த வகுப்பு பிரிவில் பிள்ளைகள் பங்குபற்றவேண்டும். பேச்சு, வாசிப்பு, எழுத்து(சொல்வதெழுதுதல்), பண்ணிசை ஆகிய போட்டிகளில் தனித்தோ அல்லது நான்கு போட்டிகளிலும் பங்குபற்றலாம்.

போட்டிகள் பின்வரும் ஆறு பிரிவுகளாக நடாத்தப்படும்
1.பாலர் பிரிவு (பாலர் கீழ்ப் பிரிவு, பாலர் மேற் பிரிவு)
2.கீழ்ப் பிரிவு (தரம் 1, தரம் 2)
3.மத்திய பிரிவு (தரம் 3, தரம் 4)
4.மேற் பிரிவு (தரம் 5, தரம் 6)
5.அதிமேற் பிரிவு (தரம் 7, தரம் 8)
6.உயர் பிரிவு (தரம் 9, தரம் 10)

காரைநகருடன் தொடர்புடைய பெற்றோர்களின் பிள்ளைகள் இப்போட்டிகளில் பங்குபற்றமுடியும்.

இப் போட்டிகளில் பங்குபற்றும் பிள்ளைகள் தங்கள் விபரங்களை பதிந்து சகல போட்டிகளிலும் பங்குபற்றலாம்.

போட்டிகளில் பங்கு பற்ற விரும்புவோர் karainagar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாக பின்வரும் விபரங்களைபதிவுசெய்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம். பெயர்களை மட்டும் ஆங்கிலத்திலும் தமிழிலும் பதிவுசெய்வது விரும்பத்தக்கது.

First Name (முதல் பெயர்):
Last Name (கடைசி பெயர்):
தொலைபேசி இலக்கம்:
சென்ற யூன் மாதம் கற்ற வகுப்பு:
பங்குபற்றும் பிரிவு:
பங்குபற்ற விரும்பும் போட்டி:

மேற்படி போட்டிகளிற்கான ஆக்கம் கூடிய விரைவில் இவ்விணையத்தளத்தில் எடுத்து வரப்படும் . கனடா காரை கலாச்சார மன்றத்தினரால் வெளியிடப்பட்ட ஆக்கங்களே போட்டிகளிற்காக தயார் செய்யப்பட்டு ஆயத்தமாக பிள்ளைகள் வரவேண்டும். வெளியிடப்படவுள்ள ஆக்கங்களை இவ்விணையத்தளத்தில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

போட்டிகளில் பங்குபற்றும் பிள்ளைகள் மேலதிக விபரங்களுக்கு karainagar@gmail.com என்ற இமெயில் ஊடாக தொடர்பு கொள்ளலாம்.

போட்டி முடிவுகள் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

பேச்சு போட்டியில் முதலாவது இடத்தை பெற்றுக்கொள்ளும் பிள்ளைகள் “காரை வசந்தம் – 2023” இல் அரங்கத்தில் பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்.

நன்றி

                    நிர்வாகசபை
கனடா காரை கலாச்சார மன்றம்.

காரைநகர் வலந்தலை இளையோர் அமைப்பினரால் ஆரம்பிக்கப்பட்ட இலவசக் கல்வி விரிவு மையம் திறப்பு விழா நிகழ்வு! (13.08.2023)

05.08.2023 சனிக்கிழமை அன்று நடைபெற்ற கனடா காரை கலாச்சார மன்றத்தின் கோடைகால ஒன்றுகூடல் காணொளி!

காரை.உறவுகள் சங்கமித்து மகிழ்ந்த கனடா-காரை கலாசார மன்றத்தின் கோடை கால ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும்.

 

காரை.உறவுகள் சங்கமித்து மகிழ்ந்த கனடா-காரை கலாசார மன்றத்தின் கோடை கால ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும்.

கனடா-காரை கலாசார மன்றத்தின் நேர்த்தியான ஒழுங்கமைப்பில் வருடாந்த ஒன்றுகூடலும் விளையாட்டுப்போட்டியும் பெருந்திரளான காரை உறவுகளின் பங்குபற்றுதலுடன் சென்ற 5ஆம் திகதி Morningside பூங்காவில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 7.00 மணி வரை நடைபெற்ற இவ் ஒன்றுகூடல் நிகழ்வில் 500க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்தனர். சென்ற ஆண்டுகளைக் காட்டிலும் அதிகமான இளையோரின் ஈடுபாடு இம்முறை இருந்ததை அவதானிக்கமுடிந்தது. இது பாராட்டக்கூடிய மகிழச்சியான மாற்றமாகும். சுவிற்சலாந்து, லண்டன், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்தும் தாயகத்திலிருந்தும் வருகை தந்தவர்கள் இந்நிகழ்வில் காரை. மண்ணின் உணர்வோடும் ஆர்வத்தோடும் கலந்துகொண்டு ஊரின் நினைவுகளை மீட்டி மகிழ்ந்தனர்.

காலையிலிருந்து மாலை வரை பலதரப்பட்ட உணவு வகைகளும் தொண்டர்களினால் சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டு தொண்டர்களினால் பரிமாறப்பட்டுக்கொண்டிருந்தன.சிறப்பாக மச்ச கூழ், மரக்கறி கூழ், கொத்து றொட்டி ஆகியவற்றுடன் கனேடிய உணவு வகைகள தாராளமாகப் பரிமாறப்பட்டிருந்தன.

சிறுவர்களிற்கான விளையாட்டுக்களும் முதியோருக்கான மெதுநடைப் போட்டியும் இடம்பெற்றிருந்ததுடன் குழுநிலைப் போட்டிகளாக ஆண் பெண் அணிகளுக்கிடையேயான தாய்ச்சிப் போட்டியும் தாம்பிழுவைப் பொரும் பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்திருந்தன. 18 வயதிற்கு மேற்பட்ட 18 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் அணிக்கு எதிராக பெண்கள் அணிகள் தாம்பிழுவைப் போரில் பங்குகொண்டிருந்தன. இரு பிரிவுகளிலும் பெண்கள் அணி ஆண்கள் அணியை வெற்றி கொண்டு சாதனை படைத்திருந்தன. இவ்வணிகளுக்கு முறையே வாரிவளவு நல்லியக்கச் சபையின் முன்னாள் செயலாளர் அமரர் பத்மநாதன் (பட்டு மாமா) ஞாபகார்த்த வெற்றிக் கேடயமும் காரை விளையாட்டுக்கழகத்தின் முன்னாள் வீரர் அமரர் குலேந்திரன் ஞாபகார்த்த வெற்றிக் கேடயமும் வழங்கப்பட்டன.

கனடா-காரை கலாசார மன்றத்தின் தலைவர் திரு.சிவசம்பு சிவநாதன் அவர்களின் தலைமையில் வெற்றிபெற்றவர்களிற்கான பரிசில்கள் வழங்க்ப்பட்டது. போட்டிகளில் பங்குபற்றிய அனைத்துச் சிறார்களிற்கும் Tim Hortons Gift Card வழங்கப்பட்டு ஊக்குவிக்கிப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். திரு.சிவநாதன் ஒன்றுகூடல் நிகழ்வு சிறப்பாக அமைவதற்கு ஆதரவளித்து ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் அனுசரணை வழங்கி உதவியோருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

 

படங்களை பார்வையிட கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

 

https://photos.app.goo.gl/Mp7HhL4jWmEEJJoPA

 

செல்வி அமிர்தா, செல்வி ஆர்த்தி அவர்களின் கர்நாடக சங்கீத வாய்ப்பாட்டு அரங்கேற்ற அழைப்பிதழ்! (09.09.2023 சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு)

 

காரைநகர் களபூமியை சேர்ந்த காலம்சென்ற சின்னத்தம்பி நவரட்ணம் , உமாதேவி தம்பதி, காரைநகர் நடுத்தெருவை சேர்ந்த காலம்சென்ற கனகசபை கருணாகரன்(மாஸ்ரர்) அகிலாம்பிகை தம்பதிகளின் பேத்திகளும், முரளி மாலினி தம்பதிகளின் மகள்களுமான செல்வி அமிர்தா, செல்வி ஆர்த்தி அவர்களின் கர்நாடக சங்கீத வாய்ப்பாட்டு அரங்கேற்றம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 09 ம் திகதி, பிற்பகல் 4 மணிக்கு கனடா றிச்மன்ட் ஹில் இல் அமைந்துள்ள Richmond Hill Centre for the Performing Arts கலையரங்கில் நடைபெறவுள்ளது. அனைத்து கலா ரசிகர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.

மரண அறிவித்தல், திரு.ஆறுமுகம் கனகசுந்தரம் (பாலாவோடை,காரைநகர்) (ரொரன்டோ,கனடா)

 

மரண அறிவித்தல்

திரு.ஆறுமுகம் கனகசுந்தரம்

தோற்றம் : 16-02-1967                                                                            மறைவு : 06-08-2023

காரைநகர் பாலாவோடையை பிறப்பிடமாகவும் கனடா ரொரன்டோவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் கனகசுந்தரம் அவர்கள் 06-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை ஆறுமுகம்,சுந்தரம்மா தம்பதிகளின் இளைய புதல்வரும்,

சந்திரமலர்,சத்தியபாமா,ரஞ்சிணிதேவி மற்றும் காலஞ்சென்ற சிவஞானசுந்தரம் ஆகியோரின் அன்புத் தம்பியும்,

சூரியமூர்த்தி,தனபாலசிங்கம் மற்றும் காலஞ்சென்ற அமிர்தலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் சப்பல் ரிட்ச் (Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham) மண்டபத்தில் 10-08-2023 வியாழக்கிழமை அன்று மதியம் 1.30 மணி தொடக்கம் பார்வைக்கு வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின்னர் மாலை 5.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
சத்தியபாமா :-  416 746 0950 (சகோதரி)
சோமசுந்தரம் கணேசபிள்ளை:-  416 918 9868 (ஒன்று விட்ட சகோதரன்)
சந்திரமலர்:-  076 134 2714 (சகோதரி)
இரஞ்சினிதேவி:-  077 665 4418 (சகோதரி)

மரண அறிவித்தல், திரு.தம்பிஐயா சக்திவேல் (ஓய்வுநிலை முகாமையாளர் Hatton National bank) (சயம்பு வீதி, காரைநகர்) ( நீர்கொழும்பு )

 

மரண அறிவித்தல்

திரு.தம்பிஐயா சக்திவேல்

(ஓய்வுநிலை முகாமையாளர் Hatton National bank)

சயம்பு வீதி காரைநகரை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்து நீர்கொழும்பில் வசித்து வந்தவரான ஓய்வுநிலை Hatton National bank முகாமையாளர் தம்பிஐயா சக்திவேல் அவர்கள் 02-08-2023 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிஐயா ராசலோகினி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான அருளானந்தம் பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

மஞ்சுளாவின் அன்புக் கணவரும்,

வேந்தனின் (UK) அன்புத் தந்தையும்,

சத்தியபாமா (கனடா), ஞானமலர், ஞானவேல் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் நேற்றைய தினம் 6-08-2023 ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்பு மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அவைரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
மஞ்சுளா (மனைவி): 94773601745
சத்தியபாமா: 001(647)201-8278
ஞானவேல்: 94773652648
ஞானமலர்: 94714428679

 

மரண அறிவித்தல், திருமதி புவனேஸ்வரி அருளையா (நாவலர் வீதி,யாழ்ப்பாணம்) (வெள்ளவத்தை,கொழும்பு)

கனடா-காரை கலாசார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளும் சனிக்கிழமை வெகுசிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கனடா-காரை கலாசார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளும் சனிக்கிழமை வெகுசிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கனடா-காரை கலாசார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் எதிர்வரும் சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் Morningside பூங்காவில் (Area 3 and Area 4) வெகு சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காரை.மண்ணின் உணர்வோடு ஒன்றுகூடி மண்ணின் நினைவுகளை மீட்டிப்பார்த்து உண்டு உரையாடி விளையாடி மகிழ்கின்ற நிகழ்வாக அமைக்கப்பட்டுள்ள இந்நிகழ்வில் கலந்துகொள்ள வருமாறு கனடா வாழ் காரைநகர் மக்களை அன்போடும் உரிமையோடும் கனடா-காரை கலாசார மன்றம் அழைக்கின்றது. அன்றைய தினம் மழையோ அதிக வெப்பமோ இன்றி சௌகரியமான சிறந்த காலநிலை நிலவுகின்றமை அவைருக்கும் மகிழச்சியளிப்பதாகும்.

எம்மண்ணின் பாரம்பரிய உணவுவகைகளுடன் கனேடிய உணவுகளும் பரிமாறப்படவுள்ளதுடன் சிறுவர்கள் இளையோர் முதியோர் ஆகியோருக்கான விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் குழுநிலைப் போட்டிகளான தாம்பிழுவைப்போர் தாய்ச்சி என்பவற்றுடன் அனைவரையும் கவர்ந்து ஈர்க்கும் வகையிலான சிறியோர் வளர்ந்தோர் பங்கேற்கும் விநோதஉடைப் போட்டியும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

போட்டிகளில் வெற்றிபெறும் முதல் மூன்று வெற்றியாளர்களிற்கும் பரிசில்கள் வழங்கப்படும் அதேவேளையில் போட்டிகளில் பங்குபற்றிய அனைத்துப் பிள்ளைகளுக்கும் Tim Hortons Gift Card வழங்கப்படவுள்ளது.

பூங்காவில் அனுமதிக்கப்பட்ட வாகனத் தரிப்பிடங்கள் நிரம்பப்பெற்றிருந்தால் பூங்காவிற்கு வெளியே அயலிலுள்ள பாடசாலையின் வாகனத் தரிப்பிடத்தில் வாகனங்களை தரித்து விட்டு நடந்துவந்து நிகழ்விடத்தை அடையலாம் என்பதை கவனத்திற் கொள்ளுமாறு வேண்டுவதுடன் பூங்காவின் அனுமதிக்கப்படாத இடங்களில் உங்கள் வாகனங்களை தரிப்பதன் மூலம் காவல்துறையினதும் நகரசபை அலுவலர்களதும் தண்டப்பணத்திற்கான சிட்டையினை பெற்றுக்கொள்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் வேண்டுகின்றோம்.

கனடா-காரை கலாசார மன்றம்.

 

 

செல்வி தியானா தர்மலிங்கம் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்ற அழைப்பிதழ்! (05.08.2023 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு)

திரு.இராமலிங்கம் மனோகரன் அவர்களின் மறைவு குறித்து கனடா காரை கலாசார மன்றம் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி!

மரண அறிவித்தல், திருமதி.காராளசிங்கம் கமலாதேவி (முன்னாள் அதிபர், யா / சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம் ) (கோவளம்,காரைநகர்) (களபூமி,காரைநகர்) (அராலி தெற்கு)

 

மரண அறிவித்தல்

திருமதி.காராளசிங்கம் கமலாதேவி

(முன்னாள் அதிபர், யா / சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம் )

காரைநகர் கோவளத்தை பிறப்பிடமாகவும் களபூமி மற்றும் அராலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.காராளசிங்கம் கமலாதேவி (முன்னாள் அதிபர், யா / சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம் ) அவர்கள் 03.08.2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற கந்தசாமி விசாலாட்சி தம்பதிகளின் அன்பு புதல்வியும்,

காலஞ்சென்ற கனகசபை சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கனகசபை காராளசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும் ,

காண்டீபன் (kandi travels)அவர்களின் அன்புத் தாயாரும்,

சூரியமூர்த்தி, ஈஸ்வரி மற்றும் காலஞ்சென்றவர்களான சந்திரமூர்த்தி, தியாகராஜா மற்றும் விஜலட்சுமி, மஹேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெகதீஸ்வரன், மகேஸ்வரன், சிவனேஸ்வரன்(லண்டன்) மற்றும் காலஞ்சென்ற திருஞானம், உலகேஸ்வரன், யோகேஸ்வரன் மோகனேஸ்வரன், பரமேஸ்வரன் ஆகியோரின் மைத்துனியும்,

கனகலிங்கம், சந்திரமலர் மற்றும் காலஞ்சென்றவர்களான சிவதாசன் மற்றும் ஆறுமுகம், சாந்தகுமாரி ஆகியோரின் மச்சாளுமாவர்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04. 08.2023 வெள்ளிக்கிழமை அன்று நண்பகல் அராலியில்( அராலி தெற்கு கரப்பிட்டி பிள்ளையார் கோவிலடி)உள்ள இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக அராலி, பூநாவோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:
காண்டீபன் (மகன்)
+94771428700

மரண அறிவித்தல், திரு.இராமலிங்கம் மனோகரன் (முன்னாள் முகாமையாளர் R.V.G Ltd – கொழும்பு) (மூக்கம்பிட்டி,கோவளம்,காரைநகர்) ( இலந்தைச்சாலை,காரைநகர்) (ஆட்டுபட்டி தெரு, கொழும்பு) (கனடா) (சம்பந்தர் கண்டி,காரைநகர்)

 

மரண அறிவித்தல்

திரு.இராமலிங்கம் மனோகரன்

(முன்னாள் முகாமையாளர் R.V.G Ltd – கொழும்பு)

தோற்றம் : 23.08.1941                                                                         மறைவு : 01.08.2023

காரைநகர் கோவளம் மூக்கம்பிட்டியைப் பிறப்பிடமாகவும் இலந்தைச்சாலை – காரைநகர், ஆட்டுபட்டி தெரு – கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்டிருந்து சம்பந்தர் கண்டி,காரைநகரில் வசித்து வந்தவரான இராமலிங்கம் மனோகரன் அவர்கள் 01.08.2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் நயினலட்சுமி தம்பதியரின் மூத்த புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை (ஐயம்பிள்ளை மாஸ்ரர்) இராசம்மா தம்பதியரின் பாசமிகு மருமகனும்,

அன்னலட்சுமியின் பாசமிகு கணவரும்,

அரியரத்தினம் (கனடா), ஜெயரத்தினம் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நளினியின் அன்பு மாமனாரும்,

அர்சிகாவின் அன்புப் பேரனும்,

பரமேஸ்வரி, காலஞ்சென்ற விமலச்சந்திரன் மற்றும் சரஸ்வதி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், பார்வதி, சொக்கலிங்கம், சிவபாக்கியம், அமிர்தலிங்கம், தேவமங்கை, கருணலிங்கம், திலகவதி மற்றும் சிவமணி, சபாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04.08.2023 வெள்ளிக்கிழமை காலை 7.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனக்கிரியைக்காக சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
மனைவி,பிள்ளைகள்,
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
அரியரத்தினம் (அரி) (கனடா) + 1 647 272 3964

காரை ஒன்றுகூடல் – 2023, அனைவரும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கின்றது கனடா காரை கலாச்சார மன்றம்!

[su_audio url=”http://www.karainagar.com/pages/wp-content/uploads/2023/08/AUDIO-2023-08-01-22-47-59.mp3″ autoplay=”no”]

மரண அறிவித்தல், திருமதி சுரேசன் டாக்டர் சாந்தி (நாவலப்பிட்டி) (வாரிவளவு,காரைநகர்) (அவுஸ்திரேலியா)

மரண அறிவித்தல்

திருமதி சுரேசன் டாக்டர் சாந்தி

நாவலப்பிட்டியை பிறப்பிடமாகவும் காரைநகர் வாரிவளவுவை வதிவிடமாகவும் தற்போது அவுஸ்திரேலியாவில் வாழ்ந்த திருமதி சுரேசன் டாக்டர் சாந்தி அவர்கள் 2/8/2023 இன்று அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் வாரிவளவுவை சேர்ந்த காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இராமகிருஷ்ணன் பரமேஸ்வரியின் அன்புமகளும்,

காலஞ்சென்றவர்களான k k சுப்பிரமணியம் சரஸ்வதியின் பாசமிகு மருமகளும்,

சுரேசன் k k சுப்பிரமணியத்தின் முத்த புதல்வனின் அன்பு பாரியாரும்,

திருஅமரன், பரந்தாமன், ஜெயந்திராதாசன் ஆகியோரின் பாசமுள்ள சகோதரியும் ஆவார்.

அன்னாரின்ஈமக்கிரியைகள் நாளை (03./08/2023)வியாழக்கிழமை அவுஸ்திரேலியாவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: கணவர் சுரேசன்
0061448477500

Shanthi Suresan (nee Ramakrishnan) passed away today (2 August, 2023) in Sydney.

The funeral services will be held tomorrow (3 August 2023) from 10:30-12:15 am at the following address:

CAMELLIA CHAPEL

Macquarie Park Cemetery and Crematorium

Cnr Delhi and Plassey Roads North Ryde NSW 2113

மரண அறிவித்தல், திருமதி.தேவகுமாரி யோகேஸ்வரன் (தெஹிவளை,கொழும்பு) (Pickering,கனடா)

மரண அறிவித்தல், திரு.வைத்திலிங்கம் சிவயோகன் (ஆலடி,காரைநகர்) (கம்பளை)

கனடா காரை கலாச்சார மன்றம் விளையாட்டு போட்டியில் இடம்பெறவுள்ள விளையாட்டுக்கள் பற்றிய விபரம்.

 கனடா காரை கலாச்சார மன்றம்

விளையாட்டு போட்டியில் இடம்பெறவுள்ள விளையாட்டுக்கள் பற்றிய விபரம்

கனடா காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த ஒன்றுகூடல் 05.08.2023 சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் Morningside Park, Area 3,4 இல் நடைபெறவுள்ளது. இவ் ஒன்றுகூடல் நிகழ்வின் போது நடைபெறவுள்ள சிறுவர் மற்றும் முதியோர்களிற்கான விளையாட்டு நிகழ்வுகள் வருமாறு:

Under 5 – 2018ம் ஆண்டு மற்றும் அதற்கு பின்னர் பிறந்தவர்களிற்கான விளையாட்டுக்கள்:
1. 50M – ஆண்கள்
2. 50M – பெண்கள்

Under 7 – 2016, 2017ம் ஆண்டுகளில் மட்டும் பிறந்தவர்கள்
3. 100M – ஆண்கள்
4. 100M – பெண்கள்

Under 9 – 2014, 2015ம் ஆண்டுகளில் மட்டும் பிறந்தவர்கள்
5. 100M – ஆண்கள்
6. 100M – பெண்கள்

Under 11 – 2012, 2013ம் ஆண்டுகளில் மட்டும் பிறந்தவர்கள்
7. 100M – ஆண்கள்
8. 100M – பெண்கள்

Under 13 – 2010, 2011ம் ஆண்டுகளில் மட்டும் பிறந்தவர்கள்
 9. 200M – ஆண்கள்

10. 200M – பெண்கள்
11. தேசிக்காய் ஓட்டம் – பெண்கள்

18 & Under – 2005 முதல் 2009ம் ஆண்டு வரை பிறந்தவர்கள் மட்டும்

  1. 200M – ஆண்கள்
  2. 200M – பெண்கள்
  3. தேசிக்காய் ஓட்டம் – பெண்கள்

Over 19  – 2004 மற்றும் அதற்கு முன்னர் பிறந்தவர்கள் மட்டும்

  1. 200M – ஆண்கள்
  2. 200M – பெண்கள்
  3. சாக்கு ஓட்டம் – ஆண்கள்
  4. சாக்கு ஓட்டம் – பெண்கள்

Over 60
19. முதியோர் மெதுநடை – ஆண்கள்
20. முதியோர் மெதுநடை – பெண்கள்

வினோத உடை போட்டி

  1. சிறுவர் (Under 18)
  2. பெரியோர் (Over 18)

 

குறிப்பு:

வினோத உடைப்  போட்டியில்  சிறுவர் முதல் பெரியோர் வரை இருபாலாரும் கலந்து கொள்ளும் வகையில் இரண்டு பிரிவுகளாக  இடம்பெறவுள்ளதுபோட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து  சிறுவர்களும் , பெரியோர்களும் போட்டிக்கு தேவையான ஆடைஅணிகலன்களை தயார் செய்து கொண்டு வருமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

 குழு விளையாட்டுக்களான தாம்பிழுவைப் போர்தாய்ச்சி  போட்டிகளும் இல்லங்களுக்கிடையே நடைபெறும்.

 தாய்ச்சி போட்டியில் வெற்றி பெறும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு அமரர் சரவணமுத்து பத்மநாதன் ( பட்டு மாமா ) (முன்னைநாள்  செயலாளர் வாரிவளவு நல்லியக்கச் சபை) அவர்களின் ஞாபகார்த்தமாக  கேடயம் வழங்கப்படும்.

 இல்லங்களுக்கிடையேயான போட்டியில்  வெற்றி பெற்ற  இல்லத்திற்கு அமரர் நடராசா குலேந்திரன் (காரை விளையாட்டுக்கழக உதைபந்தாட்ட வீரர்) அவர்களின் ஞாபகார்த்தமாக  கேடயம் வழங்கப்படும்.

 மேற்படி விளையாட்டு போட்டிகளில் பங்கு பற்றும் சிறார்கள் மற்றும் இளையோர் காலை 9 மணிக்கு தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அத்துடன் மூன்று இல்லங்களாக கலந்து கொள்பவர்கள் பதியப்பட்டு இல்லங்களுக்கிடையேயான போட்டியாக நடைபெறும். மூன்று இல்லங்களும் அவற்றை பதிவு செய்யும் முறையும் வருமாறு:

 

RED – Mississauga, Brampton, Cambridge  – WEST  
                                

BLUE- Scarborough,  Etobicoke  – SOUTH

YELLOW– Markham, Ajax, Ottawa, Richmond Hill – NORTH 

போட்டிகள் அனைத்திலும் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

 

 

கனடா காரை கலாச்சார மன்றம் ஒன்றுகூடலில் பங்குபற்றும் சிரமதான தொண்டர்களிற்கான அறிவித்தல்!

 

கனடா காரை கலாச்சார மன்றம்

ஒன்றுகூடலில் பங்குபற்றும் சிரமதான தொண்டர்களிற்கான அறிவித்தல்

கனடா காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் 05.08.2023 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. இவ் ஒன்றுகூடலில் பணியாற்ற விரும்பும் தொண்டர்கள் தங்கள் பெயர்களை 03.08.2023 வியாழக்கிழமைக்கு  முன்னர் பதிவு செய்து கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

03.08.2023 க்கு முன்னர் பதிவு செய்யும் தொண்டர்களிற்கு மட்டுமே தொண்டர் பணிக்குரிய சான்றிதழ் வழங்கப்படும்.

இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு karainagar@gmail.com தொடர்பு கொள்ளவும்.

நன்றி

                     நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

“WORKING TOGETHER IS SUCCESS”

 

CKCA GET TOGETHER 2023 VOLUNTEER REGISTRATION

 

Verification

செல்வி வாசகி மகேசன் அவர்களின் வயலின் அரங்கேற்ற அழைப்பிதழ்! (22.07.2023 சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு)

Violin Arangetram Page 1 Violin Arangetram Page 2 Violin Arangetram Page 3 Violin Arangetram Page 4

காரை ஒன்றுகூடல் – 2023, அனைவரும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கின்றது கனடா காரை கலாச்சார மன்றம்!

 

காரை ஒன்றுகூடல் – 2023

அனைவரும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கின்றது

கனடா காரை கலாச்சார மன்றம்.

கனடா வாழ் காரை மக்களின் வருடாந்த கோடை கால ஒன்றுகூடல் ஆவணி (Aug) மாதம் 05, 2023 சனிக்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் Morningside Park, Area 3,4 இல் வெகுசிறப்பாக நடைபெறவுள்ளது.

கனடா வாழ் காரைநகர் மக்கள் மற்றும் மன்றத்தின் அனுசரணையாளர்கள் அனைவரையும் கலந்து கொள்ள அழைக்கின்றோம்.

வருடாவருடம் காரை உறவுகள் அனைவரும் கலந்து சிறப்பித்து, ஊர் நினைவுகளை கொண்டாடி மகிழ்கின்ற விழாவாக ஒன்றுகூடல் அமைந்து வருகின்றது. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் கலந்து இன்புற்று காரை மண்ணின் பெருமை பேசி, உறவுகளோடு கொண்டாடி, சேர்ந்து மகிழ்ந்து, பகிர்ந்து வாழ்வோம் வாருங்கள்.

நன்றி

தொடர்புகளுக்கு: மின்னஞ்சல்: karainagar@gmail.com

                 நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

மரண அறிவித்தல், திரு ஆறுமுகம் பத்மநாதன் (பாலாவோடை,களபூமி,காரைநகர்) (கொழும்பு)

 

மரண அறிவித்தல்

திரு ஆறுமுகம் பத்மநாதன்

தோற்றம் : 23 DEC 1942                                                                      மறைவு : 14 JUL 2023

யாழ். காரைநகர் களபூமி பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பத்மநாதன் அவர்கள் 14-07-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி ஆறுமுகம்(பாலாவோடை தமிழ் கலவன் பாடசாலை முன்னாள் அதிபர்) தம்பதிகளின் மூத்த மகனும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

பத்ரிநாதன்(கண்ணன் – கனடா), கேதாரநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சபாநாதன்(City trade cooperation- வவுனியா), புவனேஸ்வரி(காரைநகர்), ஜெகநாதன்(ஒய்வுநிலை ஆசிரியர்), காலஞ்சென்ற செந்தில்நாதன்(City Agency- வவுனியா), சிறீரங்கநாதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மோகனாம்பிகை, சீவரத்தினம், செல்வரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சர்மிளா அவர்களின் அன்பு மாமனாரும்,

வினிஷா, ஷாரதி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 16-07-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை ஜெயரட்ண மலர்ச்சாலையில் (Elvitigala Mawatha, Colombo8) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
பத்ரிநாதன்(கண்ணன்) – மகன் Mobile : +14164369542
சர்மிளா – மருமகள் Mobile : +14167541809
சிறீரங்கநாதன் – சகோதரன் Mobile : +14164754528