கனடா-காரை கலாசார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளும் சனிக்கிழமை வெகுசிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கனடா-காரை கலாசார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளும் சனிக்கிழமை வெகுசிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கனடா-காரை கலாசார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் எதிர்வரும் சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் Morningside பூங்காவில் (Area 3 and Area 4) வெகு சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காரை.மண்ணின் உணர்வோடு ஒன்றுகூடி மண்ணின் நினைவுகளை மீட்டிப்பார்த்து உண்டு உரையாடி விளையாடி மகிழ்கின்ற நிகழ்வாக அமைக்கப்பட்டுள்ள இந்நிகழ்வில் கலந்துகொள்ள வருமாறு கனடா வாழ் காரைநகர் மக்களை அன்போடும் உரிமையோடும் கனடா-காரை கலாசார மன்றம் அழைக்கின்றது. அன்றைய தினம் மழையோ அதிக வெப்பமோ இன்றி சௌகரியமான சிறந்த காலநிலை நிலவுகின்றமை அவைருக்கும் மகிழச்சியளிப்பதாகும்.

எம்மண்ணின் பாரம்பரிய உணவுவகைகளுடன் கனேடிய உணவுகளும் பரிமாறப்படவுள்ளதுடன் சிறுவர்கள் இளையோர் முதியோர் ஆகியோருக்கான விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் குழுநிலைப் போட்டிகளான தாம்பிழுவைப்போர் தாய்ச்சி என்பவற்றுடன் அனைவரையும் கவர்ந்து ஈர்க்கும் வகையிலான சிறியோர் வளர்ந்தோர் பங்கேற்கும் விநோதஉடைப் போட்டியும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

போட்டிகளில் வெற்றிபெறும் முதல் மூன்று வெற்றியாளர்களிற்கும் பரிசில்கள் வழங்கப்படும் அதேவேளையில் போட்டிகளில் பங்குபற்றிய அனைத்துப் பிள்ளைகளுக்கும் Tim Hortons Gift Card வழங்கப்படவுள்ளது.

பூங்காவில் அனுமதிக்கப்பட்ட வாகனத் தரிப்பிடங்கள் நிரம்பப்பெற்றிருந்தால் பூங்காவிற்கு வெளியே அயலிலுள்ள பாடசாலையின் வாகனத் தரிப்பிடத்தில் வாகனங்களை தரித்து விட்டு நடந்துவந்து நிகழ்விடத்தை அடையலாம் என்பதை கவனத்திற் கொள்ளுமாறு வேண்டுவதுடன் பூங்காவின் அனுமதிக்கப்படாத இடங்களில் உங்கள் வாகனங்களை தரிப்பதன் மூலம் காவல்துறையினதும் நகரசபை அலுவலர்களதும் தண்டப்பணத்திற்கான சிட்டையினை பெற்றுக்கொள்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் வேண்டுகின்றோம்.

கனடா-காரை கலாசார மன்றம்.