Category: அரங்கேற்றம்

செல்வி அமிர்தா, செல்வி ஆர்த்தி அவர்களின் கர்நாடக சங்கீத வாய்ப்பாட்டு அரங்கேற்ற அழைப்பிதழ்! (09.09.2023 சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு)

 

காரைநகர் களபூமியை சேர்ந்த காலம்சென்ற சின்னத்தம்பி நவரட்ணம் , உமாதேவி தம்பதி, காரைநகர் நடுத்தெருவை சேர்ந்த காலம்சென்ற கனகசபை கருணாகரன்(மாஸ்ரர்) அகிலாம்பிகை தம்பதிகளின் பேத்திகளும், முரளி மாலினி தம்பதிகளின் மகள்களுமான செல்வி அமிர்தா, செல்வி ஆர்த்தி அவர்களின் கர்நாடக சங்கீத வாய்ப்பாட்டு அரங்கேற்றம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 09 ம் திகதி, பிற்பகல் 4 மணிக்கு கனடா றிச்மன்ட் ஹில் இல் அமைந்துள்ள Richmond Hill Centre for the Performing Arts கலையரங்கில் நடைபெறவுள்ளது. அனைத்து கலா ரசிகர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.

செல்வி தியானா தர்மலிங்கம் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்ற அழைப்பிதழ்! (05.08.2023 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு)

செல்வி வாசகி மகேசன் அவர்களின் வயலின் அரங்கேற்ற அழைப்பிதழ்! (22.07.2023 சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு)

Violin Arangetram Page 1 Violin Arangetram Page 2 Violin Arangetram Page 3 Violin Arangetram Page 4

வெகு சிறப்பாக நடைபெற்ற செல்வி டக்ஷனா ஞானகாந்தன் செல்வி கோசலா ஞானகாந்தன் சகோதரிகளின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம்

வெகு சிறப்பாக நடைபெற்ற செல்வி டக்ஷனா ஞானகாந்தன் செல்வி கோசலா ஞானகாந்தன் சகோதரிகளின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம் 

திரு.திருமதி ஞானகாந்தன் அனுசூயா தம்பதிகளின் புதல்விகளும் "இன்னிசை வேந்தர்" சங்கீதபூசணம் பொன். சுந்தரலிங்கத்தின் மாணவிகளுமாகிய செல்வி டக்ஷனா, செல்வி கோசலா சகோதரிகளின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம் சென்ற 21-08-2016 ஞாயிற்றுக்கிழமை மாலை தமிழ் இசைக் கலா மன்றத்தினால் 1120,Tapscott Roadஇல் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அழகிய தமிழ் கலை அரங்கத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

தமிழ் இசைக் கலா மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி தம்பையா ஸ்ரீபதி பிரதம விருந்தினராகவும் பிரபல குழந்தை மருத்துவநிபுணர் மருத்துவகலாநிதி வி.விஜயரத்தினம் சிறப்பு விருந்தினராகவும் கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் திரு.லோகேந்திரலிங்கம் மற்றும் பிரபல வீடு விற்பனை முகவரும் எழுத்தாளருமான திரு.சாம் சிவதாசன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்துகொண்டு அரங்கேற்ற நிகழ்வை சிறப்பித்தனர்.

அரங்கேற்ற சகோதரிகள் கடினமான உருப்படிகளைத் தெரிவுசெய்து சுருதியைப் பேணி தாளம் தப்பாது அவற்றினை பாடியதுடன் எவ்வித சோர்வுமின்றி தொடர்ச்சியாக மூன்று மணி நேரமாகப் பாடி சபையோரை அசத்தியிருந்தனர். ஒவ்வொரு உருப்படியும் பாடி முடிந்ததும் மண்டபத்தில் எதிரொலித்த பலத்த கரகோசம் இசைச் சகோதரிகள் தமது ஆற்றல் மிக்க இனிமையான இசையால் சபையோரை வசப்படுத்தியிருந்தமையை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது. கனடாவிலுள்ள பிரபலம் மிக்க இசை நடனக் கலைஞர்கள், இசை ஆசிரியர்கள், இசை மாணவர்கள், இசை ரசிகர்கள் என பலதரப்பட்ட மக்களால் அரங்கேற்ற மண்டபம் நிரம்பியிருந்தது. சங்கீத வித்துவான் தனதேவி மித்திரதேவா வயலினும் "சங்கீத கலாவித்தகர்" ரதிரூபன் பரஞ்சோதி மிருதங்கமும் "மிருதங்க ஜோதி" ரமணன் இந்திரகுமார் கடமும் திரு.சேயோன் அரியரட்ணம் மோர்சிங்கும் அரங்கேற்ற நங்கைகளின் சகோதரி நர்மிதா ஞானகாந்தன் தம்புராவும் இசைத்து அவர்களின் இனிமையான இசைக்கு உன்னதம் சேர்த்திருந்தனர். சபையில் உரையாற்றிய விருந்தினர்கள் இசைச் சகோதரிகளின் இசை ஆற்றலையும் அவர்களை சிறப்பாக தயார்படுத்திவிட்டிருந்த அவர்களின் குருவான தமிழ் இசை உலகின் புகழ்பூத்த மூத்த முன்னணிக் கலைஞரான சங்கீதபூசணம் பொன்.சுந்தரலிங்கம் அவர்களையும் அவரது துணைவியார் திருமதி ரஞ்சனா மற்றும் புதல்வி திருமதி கானப்பிரியா மயூரன் ஆகியோரையும் வெகுவாகப் பாராட்டியிருந்தனர். 

தமிழ் இசைக் கலா மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் சட்டத்தரணி தம்பையா ஸ்ரீபதி அவர்களும் கனடா-காரை கலாசார மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் திரு.தம்பிஐயா பரமானந்தராசா அவர்களும் செல்வவிநாயகர் ஆலய நிர்வாகத்தின் சார்பில் ஆலயத்தின் பிரமத குருவும் செல்விகளுக்கு பாரட்டு விருது வழங்கி மதிப்பளித்தனர். அரங்கேற்ற நிகழ்வுகளை பிரபல வானொலி மற்றும் அரங்க அறிவிப்பாளர் திரு.பா.ஞானபண்டிதன அழகு தமிழில் சிறப்பாக தொகுத்து வழங்கியதுடன் ஆங்கிலத்திலான அறிவிப்புக்களை செல்வி. றேனிசாகி கமலநாதன் செய்திருந்தார்.

Arangetram 1 Arangetram 4 Arangetram 7 Arangetram 8 Arangetram 9 Arangetram 10 Arangetram 11 Arangetram2 Arangetram3 Arangetram5 Arangetram6 Arangetram12 Arangetram13 Arangetram14 Arangetram15 Arangetram16 vvijayaratnam

 

சங்கீதபூஷணம் பொன் சுந்தரலிங்கத்தின் மாணவிகளான டக்ஷனா ஞானகாந்தன், கோசலா ஞானகாந்தன் சகோதரிகளின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம்

சங்கீதபூஷணம் பொன் சுந்தரலிங்கத்தின் மாணவிகளான டக்ஷனா ஞானகாந்தன், கோசலா ஞானகாந்தன் சகோதரிகளின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம்

கர்நாடக இசை உலகின் புகழ்பூத்த முன்னணி இசைக் கலைஞர் 'இன்னிசைவேந்தர்' சங்கீதபூஷணம் பொன்.சுந்தரலிங்கம் அவர்களின் மாணவிகளும் திரு.திருமதி ஞானகாந்தன் அனுசூயா தம்பதிகளின் புதல்விகளுமாகிய டக்ஷனா, கோசலா சகோதரிகளின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம் எதிர்வரும் ஆகஸ்டு 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30மணிக்கு 1120,Tapscott Road, Unit 3    என்ற முகவரியில் அமைந்துள்ள தமிழ் இசைக் கலா மன்றத்தின் தமிழ்க் கலை அரங்கத்தில் சிறப்புற நடைபெறவுள்ளது.

இசைச் சகோதரிகளின் தந்தையாரான திரு.ஞானகாந்தன் புங்குடுதீவைச் சேர்ந்த பிரபல ஆசிரியரும் அதிபருமாகிய அமரர் சுப்பிரமணியம் கந்தையா தம்பதிகளின் புதல்வராவார் என்பதுடன் தாயாரான அனுசூயா காரைநகர் நீலிப்பந்தனையைச் சேர்ந்த அமரர் ஆறுமுகம் கணபதிப்பிள்ளை தம்பதிகளின் புதல்வியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. காரைநகரில் ஆசிரியராகவும் அதிபராகவும் நீண்டகாலம் பணியாற்றி காரைநகர் மக்களால் நன்கறியப்பட்டவரும் மாப்பாணவூரியைச் சேர்ந்தவருமான அமரர் ஆ.ஆறுமுகம்( ஆறுமுக வாத்தியார்) அவர்களின் பூட்டிகளே அரங்கேற்றம் காணும் சகோதரிகள் என்பதுவும் மேலும் குறிப்பிடத்தக்கதாகும்.

அரங்கேற்ற அழைப்பினை கீழே பார்க்கமுடியும்

vaippaddu arankettam