கனடா காரை கலாச்சார மன்றம் நடாத்தும் தமிழ் மொழித்திறன் மற்றும் பண்ணிசை போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் பிள்ளைகளிற்கான அறிவித்தல்.

 

கனடா காரை கலாச்சார மன்றம் நடாத்தும் தமிழ் மொழித்திறன் மற்றும் பண்ணிசை போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் பிள்ளைகளிற்கான அறிவித்தல்.

கனடா காரை கலாச்சார மன்றம் நடாத்தும் தமிழ் மொழித்திறன் மற்றும் பண்ணிசை போட்டிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 17ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (17.09.2023) ஸ்காபுரோ சிவிக் சென்டர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

போட்டிகள் 9.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறும்.

ஜூன் மாதம் கனடிய பாடசாலை ஒன்றில் எந்த வகுப்பில் கல்வி கற்றார்களோ அந்த வகுப்பு பிரிவில் பிள்ளைகள் பங்குபற்றவேண்டும். பேச்சு, வாசிப்பு, எழுத்து(சொல்வதெழுதுதல்), பண்ணிசை ஆகிய போட்டிகளில் தனித்தோ அல்லது நான்கு போட்டிகளிலும் பங்குபற்றலாம்.

போட்டிகள் பின்வரும் ஆறு பிரிவுகளாக நடாத்தப்படும்
1.பாலர் பிரிவு (பாலர் கீழ்ப் பிரிவு, பாலர் மேற் பிரிவு)
2.கீழ்ப் பிரிவு (தரம் 1, தரம் 2)
3.மத்திய பிரிவு (தரம் 3, தரம் 4)
4.மேற் பிரிவு (தரம் 5, தரம் 6)
5.அதிமேற் பிரிவு (தரம் 7, தரம் 8)
6.உயர் பிரிவு (தரம் 9, தரம் 10)

காரைநகருடன் தொடர்புடைய பெற்றோர்களின் பிள்ளைகள் இப்போட்டிகளில் பங்குபற்றமுடியும்.

இப் போட்டிகளில் பங்குபற்றும் பிள்ளைகள் தங்கள் விபரங்களை பதிந்து சகல போட்டிகளிலும் பங்குபற்றலாம்.

போட்டிகளில் பங்கு பற்ற விரும்புவோர் karainagar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாக பின்வரும் விபரங்களைபதிவுசெய்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம். பெயர்களை மட்டும் ஆங்கிலத்திலும் தமிழிலும் பதிவுசெய்வது விரும்பத்தக்கது.

First Name (முதல் பெயர்):
Last Name (கடைசி பெயர்):
தொலைபேசி இலக்கம்:
சென்ற யூன் மாதம் கற்ற வகுப்பு:
பங்குபற்றும் பிரிவு:
பங்குபற்ற விரும்பும் போட்டி:

மேற்படி போட்டிகளிற்கான ஆக்கம் கூடிய விரைவில் இவ்விணையத்தளத்தில் எடுத்து வரப்படும் . கனடா காரை கலாச்சார மன்றத்தினரால் வெளியிடப்பட்ட ஆக்கங்களே போட்டிகளிற்காக தயார் செய்யப்பட்டு ஆயத்தமாக பிள்ளைகள் வரவேண்டும். வெளியிடப்படவுள்ள ஆக்கங்களை இவ்விணையத்தளத்தில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

போட்டிகளில் பங்குபற்றும் பிள்ளைகள் மேலதிக விபரங்களுக்கு karainagar@gmail.com என்ற இமெயில் ஊடாக தொடர்பு கொள்ளலாம்.

போட்டி முடிவுகள் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

பேச்சு போட்டியில் முதலாவது இடத்தை பெற்றுக்கொள்ளும் பிள்ளைகள் “காரை வசந்தம் – 2023” இல் அரங்கத்தில் பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்.

நன்றி

                    நிர்வாகசபை
கனடா காரை கலாச்சார மன்றம்.