Tag: அமரர்.கலாநிதி ஆ.தியாகராசா

தன்னலமற்ற சேவையாளர் கலாநிதி ஆ. தியாகராசா அவர்கள் அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின் 17.07.2016இல் வெளியிட்ட நூற்றாண்டையொட்டிய “தியாகச் சுடர்” நினைவுத் தொகுப்புக் கட்டுரை

தன்னலமற்ற சேவையாளர் கலாநிதி ஆ. தியாகராசா அவர்கள்
அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின்    17.07.2016இல் வெளியிட்ட  நூற்றாண்டையொட்டிய 
"தியாகச் சுடர்" நினைவுத் தொகுப்புக் கட்டுரை

DSC_4869-Copy-Copy
 
 

 

கலாநிதி (திருமதி) வீரமங்கை ஸ்ராலினா யோகரத்தினம்
சிரேஷட விரிவுரையாளர்
மொழியியல் ஆங்கிலத்துறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

 

                    "தோன்றிற்  புகழொடு தோன்றுக அஃதிலார்
                             தோன்றலிற் தோன்றாமை நன்று"

    புகழ்பூத்த கல்விமான்களும், பணபலம் படைத்த வணிகப் பெருமக்களும் நிறைந்து வாழும் காரைநகர் என்ற அழகிய கிராமத்தை, நேசித்து, காதலித்து வாழ்ந்த பெருந்தகைகளுள் அமரர் கலாநிதி ஆ. தியாகராசா அவர்கள் முதலிடம் பெறுகின்றார். அவருடைய பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதொன்றாகும். அமரர் அவர்கள் காரைநகர் மண்ணுக்காக, மக்களுக்காக, காரைநகர் இந்துக் கல்லூரிக்காகத் தன்னையே அர்ப்பணித்து வாழ்ந்த ஒரு மகான். நிறைந்த கல்வி அறிவும், சிறந்த ஆளுமைப் பண்புகளும்,  சேவை மனப்பாங்கும், தியாக உணர்வும் கொண்ட அதிபர் தியாகராசா அவர்கள் தனது மண்ணுக்கும், மக்களுக்கும், காரைநகர் இந்துக்கல்லூரிக்கும் சேவை செய்வதற்காகவே தனது வாழ்நாளில் பெரும் பகுதியை  செலவழித்தவர் என்றால் அது மிகையாகாது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக காரைநகர் இந்துக் கல்லூரியின் வளர்ச்சிக்காகவும், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் தன்னால் இயன்றவரை மிகவும் கடுமையாக உழைத்தவர் என்பதை காரைவாழ் மக்கள் என்றும் மறந்துவிட முடியாது. இந்தச் சேவை மனப்பாங்கு, அவரை அரசியலில் ஈடுபடுவதற்கு மேன்மேலும் உத்வேகத்தை வழங்கியது. ஒரு தாய் தனது குழந்தைகளுக்காக, அவர்களின் வளர்ச்சிக்காக பல இன்னல்களை எதிர் கொள்வது போல அதிபர் தியாகராசாவும் காரை வாழ் மக்களுக்காக பல இன்னல்களையும், சவால்களையும், பிரச்சினைகளையும் எதிர்கொண்டவர். இந்த மனநிலையே அவரது மரணத்தையும் நிச்சயித்தது என்பதை இங்கே ஆணித்தரமாக கூறிவிடமுடியும். 

ஆசிரியராக, அதிபராக, காரைநகர் இந்துக்கல்லூரியில் சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்கியவர். அவரிடம் படித்த மாணவர்கள் பலர் இன்றும் உயர் பதவிகளில் இருக்கிறார்கள். இந்துக்கல்லூரியில் பௌதீக வளங்களையும், ஆசிரிய வளங்களையும் பெற்றுக் கொடுத்து ஒரு சிறந்த மாணவ பரம்பரையை உருவாக்கிய பெருமை அவருக்கு உண்டு. 


இவர் அதிபராகப் பொறுப்பேற்ற வேளையில் பல பிரச்சினைகளை எதிர்கொண்டாலும், யாவற்றையும் சமாளித்து, எதிர்நீச்சல் போட்டு வெற்றியும் கண்டார். காரைநகர் இந்துக்கல்லூரியில் அதிபராக இருந்த காலத்தில் பாடசாலையின் வளர்ச்சிக்காக அல்லும்பகலும் பாடுபட்டு, பாடசாலையை ஒரு சிறந்த 1AB தரப் பாடசாலையாக தரம் உயர்த்திய பெருமை அன்னாருக்கு உண்டு. பாடசாலையில் பல புதிய வகுப்பறைகள், ஆய்வுகூடங்கள், நூல்நிலையம், புவியியல் அறை போன்றவற்றைப் புதிதாகக் கட்டுவித்து, மாணவர்களின் கல்விக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்தார். பல இன்னல்களுக்கு மத்தியிலும் மலேசியா சென்று பாடசாலைக் கட்டிடங்களுக்காக நிதி சேகரித்தமை இங்கே குறிப்பிடத்தக்கது. திரு. தியாகராசா அவர்களின் சேவைக்காலத்தில் உயர்தர வகுப்புக்கள்   ஆரம்பிக்கப்பட்டு பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் பலர் தெரிவு செய்யப்பட்டனர். 

கல்வியில் எவ்வளவு திறமையாகத் திகழ்ந்தாரோ அதேமாதிரி விளையாட்டுத்துறை, கலை, இலக்கியத்துறையிலும் ஆர்வம் காட்டினார் உதைபந்தாட்டத்திலும் சங்கீதக்கலையிலும் மிகவும் ஈடுபாடுடையவர். 

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக தன்னலமற்ற சேவை செய்த அதிபர் அவர்கள் தனது படிப்பிலும் மிகுந்த அக்கறையும் ஆர்வமும் கொண்டவர். M.A, M.Lit பட்டத்தை முடித்த அவர் இந்தியப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப்பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.

தன்னலமற்ற சேவையாளராகவும், மன உறுதி கொண்டவராகவும் விளங்கிய தியாகராசா அவர்கள் காரைநகர் இந்துக்கல்லூரியின் வளர்ச்சிக்காக மாத்திரமல்ல, அரசியலில் ஈடுபட்டு காரைநகர் மண்ணுக்கும் மக்களுக்கும் அளப்பரிய சேவைகள் செய்தவர்.அதிபர் பதவியில் இருந்து பதவிக்காலம் முடிவடையும் முன்னரே ஓய்வு பெற்றுக் கொண்ட அதிபர் அவர்கள் வட்டுக்கோட்டை பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ்கட்சியில் சேர்ந்து, தளபதி அமிர்தலிங்கத்துடன் போட்டியிட்டு வெற்றிவாகையும் சூடிக்கொண்டவர்.

கலாநிதி தியாகராசா  அவர்கள் பரந்த சிந்தனையாளர் மாத்திரமன்றி சிறந்த சமூகசேவையாளருமாவார். ஊருக்கும், நாட்டுக்கும் உதவ வேண்டும் என்ற பேராசையில் அரசியல்வாதியாக மாறினார். அவரது கொள்கை சோசலிசக் கொள்கையாகும். தமது தொகுதியையும், நாட்டையும் முன்னேற்ற வேண்டும் என்பதே அவரின் இலட்சியமாகும்.
 
    பாராளுமன்றத்தில் பதவி வகித்த காலத்தில் காரைநகர் மக்களுக்கு மின்சார வசதி, குடிநீர், குழாய்நீர் விநியோகம் ஆகியவற்றை பெற்றுக் கொடுத்தார். காரைநகர் சிவன்கோவில் வீதி (புதுறோட்), கோவளம் வெளிச்சவீடு வீதி, ஆகிய இரண்டையும்  கிராமசபை நிருவாகத்தில் இருந்து பிரித்து நெடுஞ்சாலை இலாகாவுக்கு மாற்றம் செய்தார். கோவளம் வெளிச்சவீடு வீதி அகலமாக்கப்பட்டது. இதனால் மக்கள் பெரிதும் பயன் அடைந்தார்கள். சிவன்கோவில் வீதி, கோவளம் வீதி ஆகிய இரண்டிற்கும் பேரூந்து சேவையை ஏற்படுத்திக் கொடுத்தார்.

அவருடைய காலத்தில் காரைநகர் தபாற்கந்தோருக்கு புதிய கட்டிடம் ஒன்றும் அமைக்கப்பட்டது. வியாவிலில் ஓர் உபதபால் நிலையம் திறக்கப்பட்டது. காரைநகரில் ஓர் கிராமிய வங்கி திறக்கப்பட்டது மாத்திமல்ல கட்டிடம் நிருமாணிக்க உத்தேசிக்கப்பட்டது. 

அவர் தனது பாராளுமன்றப் பதவிக் காலத்தில் குடும்ப முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டதில்லை என்பது யாவரும் தெரிந்த உண்மையாகும். சுயநலம் பாராது பொதுநல எண்ணத்துடன் செயற்பட்ட அமரர் அவர்கள் தனது அறுபத்தைந்தாவது அகவையில் அகாலமரணத்தைத் தழுவிக் கொண்டது. யாராலும் ஜீரணிக்க முடியாத மாபெரும் துயரச் சம்பவமாகும்.

நல்லவர்களை இறைவன் சீக்கிரம் தன்னுடன் அழைத்துக் கொள்வான் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள். அது போலவே அமரர் தியராகராசாவையும் இறைவன் தன்னுடன் அழைத்துவிட்டான் போலும். அவர் அகாலமரணத்தைத் தழுவாது இருந்திருந்தால் எமது மக்களுக்கு இன்னும் பல சேவைகளைத் தொடர்ந்தும் செய்திருப்பார். அவருடைய இழப்பு காரைநகர் மக்களுக்கு மாத்திரமல்ல தமிழ் மக்களுக்கும் ஓர் பாரிய இழப்பாகும். 

அவருடைய நல்ல எண்ணங்களும், உயர்ந்த சிந்தனைகளும் இப்பிரபஞ்சத்தில் நிலைத்து, நிறைந்து நின்று சிறந்த சேவையாளர்களையும், கல்விமான்களையும், நாட்டுப்பற்றாளர்களையும், தியாகிகளையும் உருவாக்கும் என்பதே உண்மையாகும்.

                                                  "ஆளுயர்வே ஊருயர்வு"
                       "நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்"

 

                                                                                                         இங்ஙனம்
                                                                                சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                                                     செயற்குழு உறுப்பினர்கள்
                                                                                      சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                         மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
                                                                                                    13 – 03 – 2017

 

 

 

 

அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின் நூற்றாண்டையொட்டிய “தியாகச் சுடர்” நினைவுத் தொகுப்புக் கட்டுரை

அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின் நூற்றாண்டையொட்டிய  "தியாகச் சுடர்" நினைவுத் தொகுப்புக் கட்டுரை

 

PATKUNARAJAH

 

 

 

ஆக்கம் திரு. ச. பற்குணராஜா
உலக சைவ பேரவைத் தலைவர் (பிரான்ஸ்)


 

மலரும் நினைவுகள்…

 

பதவியை நீ தேடிப்போனால் பதவிக்குப்பெருமை, 
பதவி உன்னைத் தேடிவந்தால் உனக்குப்பெருமை.

பலர் பதவிகளைப் பயன்படுத்தி தங்களை வளப்படுத்திக் கொள்வார்கள். ஆனால் வெகு சிலரோ பதவிகளைப் பயன் படுத்திச்  சமூகத்தை வளப்படுத்துவார்கள். அமரர்  கலாநிதி ஆ.தியாகராசா அவர்கள் சமூகத்திற்கான சேவையில் தன்னை முழுவதுமாக இழந்தார்.

ஐம்பதுக்கு ஐம்பது எனக் கேட்டு இலங்கை அரசியலில் தனியிடம் பெற்ற அரசியல் தலைவராக விளங்கிய  திரு ஜி .ஜி  பொன்னம்பலம் அவர்கள் 1970ல் நடைபெறவிருந்த தேர்தலில் வட்டுக்கோட்டைத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்துவதற்கு தகுதியும் பலமும் கொண்ட ஒருவரின் தேவை இருந்தது. காரணம் அந்தத்தொகுதியின் தளபதியாக விளங்கியவர் தமிழரசுக் கட்சியின் தலைவராக விளங்கிய தளபதி திரு அ. அமிர்தலிங்கம் அவர்கள். அந்தக் கோட்டையைத தகர்த்து எறிந்தவர் அமரர் கலாநிதி ஆ. தியாகராசா அவர்கள்.

ஆதிபராக இருந்தவர் ஓய்வு பெற்று தமிழ்க்காங்கிரசின் அபேட்சகராக களமிறக்கப்பட்டார். முதல் ஊர்வலமும் கூட்டமும் காரைநகர் சைவ மகாசபையிலிந்து தொடங்கி வாரிவளவு பிள்ளையார் கோவில் வரை சென்று வீதியில் அமைந்திருந்த மேடையில் கூட்டம் நடைபெற்றது. தலைவர் ஜி .ஜி பொன்னம்பலமும் தியாகராசாவும் மற்றைய ஆதரவாளர்களுடன் ஆரவாரங்கள், வானவேடிக்கைகள், பூரண கும்பங்கள் நிறைந்த வீதிவழியே வந்துகொண்டிருந்தார்கள். நான் அப்போது வாக்களிக்கும் வயதை எட்டாத பள்ளிமாணவன். இதுவே எனது முதல் தரிசனமாக இருந்தது. தேர்தலில் 551 வாக்குகளால் வெற்றியீட்னார் என்ற செய்தி அதிகாலையில் தான் தெரிவிக்கப்பட்டது. இருந்த போதிலும் அந்த வெற்றி எதிர் வேட்பாளரால் மறுக்கப்பட்டு மீண்டும் வெற்றி என்பது உறுதிப்படுத்படுவதற்கு சிலகால இடைவெளிகள் தேவையாயிற்று.

காந்தியச் சிந்தனைகளில் மட்டுமன்றி, பொதுவுடைமைச் சிந்தனைகளாலும் தோய்ந்திருந்தவர்கள் எங்கள் ஊரில் இருந்தார்கள். அவ்வகையில்  ஆசிரியர் பானுதேவன், திரு நடராஜா, ஆசிரியர்  சுந்தரசிவம் (இவர் வட்டுக்கோட்டைத் தொகுதியில் லங்கா சம சமாஐக்கட்சியின் சார்பில் போட்டியிட்டவர்) மறைந்த பேராசிரியர  கலாநிதி இராமகிருட்ணன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். 

கலாநிதி. தியாகராஜா பொதுவுடைமைச் சிந்தனையாளர். ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் கடமையாற்றியவர். அவர் மறைந்த பின்னர் அவருக்கான ஒரு நினைவு அஞ்சலிக் கூட்டத்தை திரு சுந்தரமூர்த்தி (தனிச்சிங்கள மசோதா கொண்டுவந்த போது அரசாங்க சேவையிலிருந்து விலகி தனிமனிதனாக  இருந்து காந்தீய வழியில் வாழ்ந்தவர்) அவர்களுடன் இணைந்து சைவமகாசபையில் ஏற்பாடு செய்திருந்தோம். அதில் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

இலங்கைப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலாராக விளங்கிய டாக்டர் எசு. ஏ. விக்கரமசிங்கா அவர்களின் 75வது பிறந்தநாள் விழாவை 1975 களில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் கொண்டாடிய போது அதில் பங்கு பற்றி அரசியலுக்கு அப்பால் தனது மனித நேயத்தையும் சோசலிச தத்துவத்தின் பக்கமே தனது சிந்தனைகள் உள்ளது என்பதை நிலை நிறுத்தினார்கள்.

வடக்கா, தெற்கா என்று ஊர் கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்ததைக் காரணம் காட்டி நமது ஊருக்கு மின்சார வசதி கிடைக்காது மின் கம்பங்கள் வயலிற்கூடாகச் சென்று கடற்படைக்கு மின்சாரம் கிடைக்கப்பெற்றது. குடிநீர் என்பது காலங்காலமாக பிரச்சனையாக இருந்து வந்துள்ளது. மருத்துவ வசதிகள் குறைந்த நிலை. வுசதி உள்ளவர்கள் மூளாய் மருத்துவ விடுதியில் பயன் பெறுவார்கள். இந்த நிலையைப் போக்குவதற்கு  ஒருவர் எமது கிராமத்திற்கு காலத்தின் கட்டாயத்தால் தேவையாகவிருந்தது. அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அவர்பட்ட துன்பங்கள் சிறிதல்ல.

இவ்விடத்தில் ஒன்றைச் சுட்டிக்காட்ட விழைகிறேன். யான் யாழ்மத்திய கல்லூரியில் பயின்று கொண்டிருந்த காலத்தில் காரைநகர் இந்துக்கல்லூரியில் 1974 களில் ஒரு சில மாணவர்களுடன் தான் உயர்தர வகுப்புகள் நடைபெற்று வந்தன. ஒரு தரவு அறிக்கையை சில நண்பர்களுடன் இணைந்து தயாரித்ததில் சுமார் 80 மாணவர்கள் வெளியிடங்களில் உள்ள பாடசாலைகளில் கல்வி பயின்று வந்தது தெரியலாயிற்று.. அந்தக் காலத்தில் காரைநகர் இந்துக் கல்லூரியின் பதிலதிபராக திருவாளர்  சுப்பிரமணியம் ஆசிரியர் கடமையாற்றிவந்தார்கள். (அக்காலத்தில்  தரப்படுத்தல் என்னும் நடைமுறையால் யாழ்ப்பாணத்தில் கல்வி பயின்ற பலர் உயர்தர பரீட்சையை கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா என்ற பின்தங்கிய பகுதிகளில் எழுதி பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பைப் பயன்படுத்தி வந்ததும் உண்டு.)

நீண்ட கலந்துரையாடல்களின் ஊடாக யாம் வாரிவளவு நல்லியக்கச்சபையில் உயர் கல்வியும் இந்துக் கல்லூரியும் என்ற கருப்பொருளில் ஓரு ஆலோசனைக்கூட்டம் ஏற்பாடு செய்து காரைநகர் இந்துக்கல்லுரியில் உயர்தர வகுப்பிற்கு பாடம் நடத்தும் ஆசிரியர் ஒருவரை அழைத்திருந்தோம். நாம் எதிர்பார்த்தது கல்லூரியின் வளர்ச்சிக்கு ஏதும் ஆலோசனை கூறுவார் என்பதே. ஆனால் விளைவு எதிர்மாறாக அமைந்தது. அவர் கூறியது இது தான்; நீங்கள் சிறு பிள்ளைகள், உங்களுக்கு அனுபவம் காணாது. இது என்ன சப்பறமா? (சப்பறம் – இது கோவிலில் விசேட திருவிழா நாட்களில் சுவாமியை வைத்து இழுத்து வருவது. பகுதி பகுதியாக இருப்பதை இணைத்து உருவாக்குவது.) பொருத்துவதற்கு?. நாங்கள் எவ்வளவோ காலம் பல முயற்சிகள் செய்தோம். முடியவில்லை என்று முடித்தார்.

இதனால் நாம் தளர்ந்து போகவில்லை. புதிலாக தொடர்முயற்சிகளில் ஈடுபட்டோம். முதல் முயற்சியானது அந்தக்காலத்தில் ஈசன் ஆசிரியர் உயர்தர மாணவர்களுக்காண Double maths கற்பித்தலில் யாழ்ப்பாணத்தில் புகழ் பெற்று விளங்கினார். அவர் வெலிங்டன் தியேட்டரின்( இப்போது அது இல்லை) பின்புறம் அமைந்திருந்த மேல் மாடியில் வகுப்புக்கள் எடுத்து வந்தார். அவரிடம் நண்பர் க. சிவபாதம் அவர்கள் மூலமாக அனுகினோம். அதற்காக பாடசாலை முடிந்ததும் ஆசிரியர் சுப்பிரமணியமும், நண்பர் சிவபாதமும் யாழ்ப்பாணம் வருவார்கள். யானும் பாடசாலை முடிந்ததும் அவர்களுடன் இனைந்து பல தடவை சந்தித்து உரையாடி ஈசன் ஆசிரியர் அவர்களின் அனுமதியைப் பெற்றோம் (பாராளுமன்ற உறுப்பினரான தியாகராஜா அவர்கள் வட்டுக்கோட்டைத் தொகுதியின் உறுப்பினர். காரைநகர் என்பது அதன் ஒரு பகுதி. அவர் ஊரை மட்டும் உயர்த்த முடியாது. மற்றைய கிராமங்களுக்கும் சேவை செய்யவேண்டிய தேவை உண்டு.) 

ஈசன் ஆசிரியர் அயற்கிராமமான வேலனையில் வசித்து வந்தார்கள். அவர் இந்துக்கல்லூரிக்கு வருகை தந்தார். பாராளுமன்ற உறுப்பினர் தனது  மகள் புனிதவதியையும் ஊரிற்கு அழைத்து கல்லூரியில் இணைத்தார் அவர்களுடன் விலங்கியல் கற்பித்தலில் சிவபாலராஜா சிறப்புற்று விளங்கினார். திரு ம.ம. நடராஜா அதிபராகப் பொறுப்பேற்றார்கள். யானும்  யாழ் மத்திய கல்லூரியை விடுத்து காரைநகர் இந்துக் கல்லூரியில் இணைந்து கொண்டேன். யாழ்ப்பாணம் ஈழநாடு பத்திரிகையில் விளம்பரம் வெளியாகியது. அயற் கிராமங்களான பொன்னாலை, வட்டுக்கோட்டை, சுழிபுரம், மூளாய், வேலனை ஆகிய பகுதிகளிலிருந்து மாணவர் வந்து கல்வி கற்கத் தொடங்கினார்கள்.  அந்த ஆண்டில் தோன்றிய உயர்தரப் பரீட்சையில் பங்கு பற்றிய பலர் பல்கலைக் கழகத்திற்கு தெரிவுசெய்யப் பட்டார்கள் என்பதே நற்செய்தியாகும்.

ஈசன் ஆசிரின் நியமனம் 3 மாதகாலத்திற்குள் கிடைக்காவிட்டால் அவர் விலகிச் சென்று விடுவார் என்ற உடன்பாட்டில் தான் ஒப்புக்கொண்டார். நியமனம் கிடைப்பது என்பது இலகுவானதாக இருக்கவில்லை (அப்போதைய கல்வி அமைச்சர் பதியூதீன் முகமது அவர்களது அன்றைய தரப்படுத்தல் திட்டமானது பாரியளவில் விவாதத்திற்குரியதாக இருந்தது.) ஈசன் ஆசிரியரது நியமன விடயமாக தொல்புரத்தில் அமைந்த கமநல ஆராய்ச்சி நிலையத்தை திறந்து வைப்பதற்கு வருகை தந்த விவசாய அமைச்சர் கொப்பேகடுவ, தபால் தந்தி அமைச்சர் திரு குமராசூரியர் ஆகியவர்களிடம் ஒரு மகஐரை கையளிப்பதற்காக தம்முடன் என்னையும், நண்பர் சிவபாதம் அவர்களையும் தம்முடன்  அழைத்துச் சென்றார்கள்;. மகஐரை கையளித்து கூட்டம் முடிந்த நிலையில் திரும்பி வருவதற்கான சூழ்நிலை தாறுமாறாக அமைந்து விட்டது. காரணம் பாராளுமன்ற உறுப்பினரது வாகனத்தில் பாது காப்பு கருதி இரண்டு பொலிசார் அவருடன் சென்று விட்டனர். கடைசியில் சங்கானைப் பலநோக்கு கூட்டுறவுச் சங்க லொறியில் எங்களைப் பொன்னாலைப் பாலத்தில் கொண்டு வந்து விட்டார்கள். அங்கிருந்து நடைப் பயணத்தில் வீடு வந்து சேர நள்ளிரவாயிற்று.

இவ்வாறான பல அயராத முயற்சியின் விழைவாக ஈசன் ஆசிரியர் அவர்களது  நியமனம் கிடைக்கப்பெற்றது.  அவரது ஏழாண்டு அரசியல் வாழ்வில் வட்டுக்கோட்டைத் தொகுதியின் மக்களுக்கு தன்னாலியன்ற சேவையை செய்தார்.

எமது ஊரைப் பொறுத்த வரையில் இருண்டிருந்த ஊரிற்கு மின்னொளி கொடுத்தார். குடிநீர் விநியோகிக்கும் திட்டத்தை அமுல் படுத்தினார். சாதாரண மக்களிற்கான வைத்தியசாலையை ஏற்படுத்தினார். கல்வியின் பயன் கருதி பாடசாலைகளின் தரத்தை உயரச்செய்தார்; இவ்வாறு குறுகிய காலத்தில் நிறைந்த சேவை செய்து நன்றியுள்ளவர்களின் நெஞ்சத்தில் நிலைத்து நிற்கின்றார்கள்.

மரங்கள் மனிதர்களைப் பார்த்துக் கேட்டதாம் நாங்கள் எங்களிலிருந்து ஒரு சிலுவையை உருவாக்கினோம். நீங்கள் உங்களால் ஒரு யேசுவை உருவாக்க முடிந்ததா? என்று அது போல் எங்களால் ஒரு தியாகராஜாவை உருவாக்க முடியுமா?

                                                          "ஆளுயர்வே ஊருயர்வு"
                              "நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்"


                                                                                                             இங்ஙனம்
                                                                                      சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                                                            செயற்குழு உறுப்பினர்கள்
                                                                                              சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                                 மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
                                                                                                          12 – 02 – 2017

 

கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவிற்கு ஒய்வுநிலை அதிபர் திருமதி.தவநாயகி பாலசிங்கம் அவர்களின் வாழ்த்துச் செய்தி

கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவிற்கு ஒய்வுநிலை அதிபர் திருமதி.தவநாயகி பாலசிங்கம் அவர்களின் வாழ்த்துச் செய்தி

காரை மடந்தை செய்த நற்றவத்தின் பயனாக காரைநகரின் உதய சூரியனாக உதித்து நான்கு தசாப்த காலமாக காரை மண்ணை பூமிப்பந்தில் ஒளிரும் மாணிக்கமாகத் துலங்க வைத்த, எவரும் வஞ்சனை செய்து மறைக்கவோ மறக்கவோ முடியாத மனிதருள் மாமனிதர் அமரர் கலாநிதி.ஆ.தியாகராசா என்றால் மிகையாகாது.   

அத்தகைய சிறப்பு வாய்ந்த காலம் தந்த கதிரவனான கலாநிதி ஆ.தியாகரசா அவர்களுக்கு எழில்மிகு சுவிற்ஸ்லாந்து நாட்டில் வாழும் எம் காரை மைந்தர்கள் உண்மை அன்புடனும் நன்றி விசுவாசத்துடனும் 17.07.2016 அன்று நூற்றாண்டு விழா எடுத்தனர். இவ்விழாவில் 'தியாகச் சுடர்' என்னும் மலரும் வெளியிடப்பட்டது. 

அவர்களின் நூற்றாண்டு விழா மலருக்கு அமரர்.கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் நன்மதிப்பைப் பெற்ற பழைய மாணவியும் யாழ் பல்கலைகழக உயிரியில் விஞ்ஞான சிறப்புப் பட்டதாரியும் காரைநகர் இந்துக் கல்லூரியின் ஒய்வுநிலை அதிபரும் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் ஒய்வுநிலை உதவி ஆணையாளருமாகிய திருமதி.தவநாயகி பாலசிங்கம் அவர்கள் வாழ்த்துச் செய்தி வழங்கியுள்ளார். 

அமரர்.கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களும் 1974-1978 காலப்பகுதியில் அதிபராகவிருந்த திரு.கே.கே.நடராசா அவர்களும்; திருமதி.தவநாயகி அவர்களை அவர்களின் இல்லம் சென்று அழைத்து வந்து காரைநகர் இந்துக் கல்லூரியில் 1976 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உயர்தர வகுப்பினருக்கு உயிரியல் பாட ஆசிரியராக நியமித்திருந்தமை இங்கு நினைவுகூரத்தக்கது. அன்றிலிருந்து 22 ஆண்டு காலமாக பல மருத்துவத்துறை, உயிரியல் விஞ்ஞானத்துறை மாணவர்களை உருவாக்கியதுடன் முதலாவது பெண் அதிபராகவும் இருந்து இக்கட்டான இடப்பெயர்வு காலத்தில் பாடசாலையை சிதைந்து போகாமல் கட்டிக் காத்து மீளவும் துணிச்சலுடன் காரைநகரில் ஆரம்பித்து சிறப்புடன் வழிநடத்திய பெருமைக்குரிய அதிபர் திருமதி.தவநாயகி பாலசிங்கம் அவாகள் ஆவார்.
 
அத்தகைய சிறப்பு வாய்ந்த ஒய்வுநிலை அதிபர் திருமதி.தவநாயகி பாலசிங்கம் அவர்கள் தம் ஆசான் அமரர் கலாநிதி.ஆ.தியாகராசா அவர்கள் மீது சுவரில் வரைந்த சித்திரம் போல அன்றும் இன்றும் என்றும் மாறாத மதிப்புடன் வழங்கிய வாழ்த்துச் செய்தியைக் கீழே காணலாம். 


 

வாழ்த்துச் செய்தி

T.B PHOTO


"பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானில் நனி சிறந்ததுவே" என்ற தெய்வப் புலவரின் கூற்றுக்கமைய வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வமாக இன்றும் நினைவு கூரப்படும் எம் அதிபர் அமரர் கலாநிதி. ஆ. தியாகராஜா அவர்களின் நூற்றாண்டு அகவை தினத்தை முன்னிட்டு சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் வெளியிடும்; மலரிற்கு வாழ்த்துச் செய்தி வழங்குவதில் பேருவகை அடைகின்றேன்.

அமரர் கலாநிதி. ஆ. தியாகராஜா அவர்கள் எமது ஊரைப் பொறுத்தவரை ஆசிரியர், அதிபர், அரசியல்வாதி என்ற பல் ஆளுமை கொண்ட செயல் வீரனாகச் செயற்பட்டு சேவையாற்றியமை என்றென்றும் நன்றிப் பெருக்குடன் நினைவுகூரப்பட வேண்டியதாகும்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற முன்னோரின் வாக்குக்கு அமைய நல்ல தாய், தந்தை குருவை பெற்றவர்கள் மிகுந்த பாக்கியசாலிகளாவர். அந்த வகையில் எமது காரை மாணவ சமூகத்தின் எழுச்சிக்கு நிமிர்ந்த நடை, நேர் கொண்ட பார்வை, மொழிப் புலமை, சீரிய தூரநோக்கு சிந்தனை, தன்னலமற்ற சேவை கொண்ட அதிபரின் வழி நடத்தல் அமைந்தமை எம் ஊரின் பொற்காலமே ஆகும். அவரிடம் கல்வி பயின்ற எமது ஊர் மாணவர்கள் இன்று பல்வேறு தகமை கொண்ட செயல் வீரர்களாக உலகம் முழுவதும் பரந்திருக்கின்றார்கள் என்பது யாரும் மறுக்க முடியாது.

இத்தகைய மாமனிதருக்கு இந்நூலை நன்றிக் காணிக்கையாக்குதல் சாலப் பொருத்தமானதே. "எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே'"என்ற பாரதியின் பாடல் வரிக்கேற்ப புலம்பெயர்ந்த நிலையிலும் தம் ஊரையும் ஊர் வாழ்ந்த நன் மகானின் பெருமையை மறவாது கௌரவிக்கும் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை உறுப்பினர்களின் அயராத முயற்சியைப் பாராட்டி வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். 

                                                          திருமதி. தவநாயகி பாலசிங்கம்
                                        B.Sc (Special), PGDE, PGDEM, MA in Teacher Education
                                                                    முன்னாள் அதிபர்
                                           ஓய்வுபெற்ற உதவிப் பரீட்சை ஆணையாளர்
                                                           பரீட்சைத் திணைக்களம்.

                                                              ***

காரைநகரின் கல்விப் புரட்சியின் தந்தை கலாநிதி ஆ. தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவும் “தியாச் சுடர்” நினைவுத் தொகுப்பு வெளியீடும் சிறப்புற வாழ்த்துக்கள்

                            காரைநகரின் கல்விப் புரட்சியின் தந்தை 
 
                          கலாநிதி ஆ. தியாகராசா அவர்களின் 
 
                                        நூற்றாண்டு விழாவும் 
 
               "தியாச் சுடர்" நினைவுத் தொகுப்பு வெளியீடும் 
 
                                     சிறப்புற வாழ்த்துக்கள்.
 
பெரியோர்களின் நினைவேந்தல் என்பது வெறும் சடங்கல்ல. அது கடந்த காலத்தின் சுவடுளைப் பதிவிலிடுவது. அதன் படிப்பினைகளின் வழி இளையோரை வழிநடாத்துவதற்கு ஒரு சமூகத்தின் அறிவார்ந்த செயற்பாட்டாளர்களின் முயற்சியாகும். நமது தமிழ் மரபில் பல்லாயிரம் வருடங்களாக இருந்த வழிபாட்டு மரபு மாண்டுபட்ட போர் வீரர்கள் சேவையாளர்களின் நடுகல் வழிபாடே. 
 
இன்றும் இறந்து போன தாய் தந்தையை நாம் வழிபடுகிறோம். முன்னுதாரணங்களைப் போற்றுதல் இளையோருக்கு வழிகாட்டுதலாகும். அமரர் கலாநிதி. ஆ. தியாகராசா அவர்கள் நமது ஊரின் கல்வி வளர்ச்சியல் பாரிய பங்காற்றியவர்.  
 
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மாங்குடிக் கிழார் என்னும் புலவர் எழுதிய புறநாநூற்றுப் பாடல் இங்கு கவனிக்கத் தக்கது. நாட்டிற்காகத் தியாகம் செய்த பெரியோரே, வீரர்களே நம் கடவுளர் அது தவிர நாம் பரவும் வேறோர் கடவுள் இல்லை என்கிறார் அவர். அமரரின் அரசியல் நிலைப்பாடு பற்றிய கருத்து வேறுபாடுகள் இருப்பினும் அவர் ஊருக்கு ஆற்றிய கல்வி மற்றும் அபிவிருத்திச் சேவைகளைப் பொருத்தவரை அவர் உண்மையிலேயே தியாகிதான் என்பதில் ஐயமில்லை. அவரை மனங்கொள்ளும் இடத்துப் பின்வரும் பாடல் அவருக்கும் பொருந்தும். அவரும் ஊர்ச் சேவைக்கான பாதையிலேயே உயிர்துறந்தார்.
 
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
 
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்
 
கல்லே பரவின் அல்லது
 
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே! (புறநானூறு, பாடல் 335)
 
இது தேசத்தின் சேவையாளர்களுக்குத் தமிழ் மரபில் அளிக்கப்படும் மகோன்னதமான இறைநிலை மரியாதைக்குச் சான்று.   
 
அன்னாரது நினைவு போற்றும் இந்நிகழ்வில் எமது சுவிஸ் காரை குடும்பத்தினர் அனைவரும் திரளாகக் கலந்து சிறப்பிக்க வேண்டுகிறோம். இது அவர்களின் நன்றிக்கடன். செய் நன்றி போற்றுவது தமிழர் பண்பாடு. ஐக்கிய இராச்சியம், ஜெர்மன், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தரும் பிரமுகர்களுக்கு எமது நன்றிகள். 
 
இத்துடன் அன்னாருக்கான 'சேவை அஞ்சலியாக' சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரின் அனுமதியுடன் அச்சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவினரின் சார்பில் பின்வரும் நிகழ்ச்சித் திட்டம் பற்றி அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். 
 
                                       "தியாகத் திறன் வேள்வி 2016"
 
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் அதன் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவினரின் பங்களிப்புடன் நடாத்தப்பட்டு வருகிற கட்டுரைப் போட்டி விரிவாக்கம் செய்யப்படவுள்ளது என்பதை மிகுந்த மகிழ்வுடன் அறியத்தருகிறோம்.
 
17- 07- 2016 இல் மேற்படி சபையின் ஏற்பாட்டில் நடைபெறும் அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும் "தியாகச் சுடர்" நினைவுத் தொகுப்பு வெளியீட்டு வைபவம் ஆகியன இடம் பெறும் இத் தருணத்தில் இந்த உவப்பான செய்தியை மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவின் சார்பாகத் தெரிவிப்பதில் மகிழ்ச்சிடைகிறேன்.
 
இந்த ஆண்டிலிருந்து மாணவர் திறன் வளர்க்கும் போட்டிகளை விரிவாக்கம் செய்யவுள்ளோம். காரைநகரின் கல்விப் புரட்;சியின் தந்தை கலாநிதி. ஆ. தியாகராசா அவர்களின் நினைவாக வருடந்தோறும் "தியாகத் திறன் வேள்வி" என்ற நிகழ்வாக "ஆளுயுர்வே ஊருயர்வு" என்ற மகுட வாசகத்துடன் இடம்பெறும். 
 
இவ்வருடத்தில் இருந்து கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, கர்நாடக சங்கீதப் போட்டி, பொது அறிவு வினாடி வினாப் போட்டி, திருக்குறள் மனனப் போட்டி என ஐந்து வகையான போட்டிகள் மூன்று பிரிவுகளில் இடம் பெறும். இவை அனைத்தும் அடுத்த மாதத்தில் ஆரம்பித்து எதிர்வரும் மார்கழி மாதம் ஆதிரை நாளுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பதாக நறைவுபெறும். 
 
இந்தப் போட்டிகளைக் காரைநகரிலும் முடிந்தவரை உலகெங்கிலும் காரைநகர் மாணவர்கள் செறிந்து வாழும் முக்கிய நகரங்களிலும் ஏற்பாடு செய்ய உள்ளோம். இப்பணியை வெற்றிகரமாக நிறைவேற்ற எமது சகோர புலம்பெயர் சங்கங்களின் உதவியை நாடி நிற்கிறோம். அதே போல் காரைநகரின் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் ஆகியோரது ஈடுபாடும் முயற்சியும் அவசியமானவை. கடந்த இரண்டாண்டுகளில் நீங்கள் காட்டிய ஊக்கமே எம்மை உற்சாகப்படுத்தியிருக்கிறது. தொடர்ந்தும் உங்கள் பலமான ஆதரவை எதிர்பார்க்கிறோம். 
 
விதிமுறைகள், திகதி, போட்டி இடங்கள் ஆகியன குறித்த அறிக்கை விரைவில் வெளிவரும். இது ஊர் மக்கள் அனைவருக்குமான பொதுத்தொண்டு. சிரமம் பாராது மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் மேற்கூறிய திட்டம் பற்றிய தமது ஆலோசனைகளைப் பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி உதவுமாறு வேண்டுகிறோம்: swisskarai2004@gmail.com 
 
"நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்". "ஆளுயர்வே ஊருயர்வு".
 
                                                                            சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் 
                                                              மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு சார்பாக
                                                                                         இணைப்பாளர்
                                                                       கலாநிதி. கென்னடி விஜயரத்தினம்
     

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவினை சிறப்பாக நடாத்த காரைநகர் அபிவிருத்திச்சபையின் வாழ்த்துச் செய்தி!

p.vikneswaran

 

தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/07/p.vikneswaran.pdf

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/07/Doc1.pdf

 

 

Doc1-1

அமரர் தியாகராசா அவர்களின் நூறாவது பிறந்ததின விழா சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையின் ஏற்பாட்டில் கொண்டாடுவதையிட்டு யாழ்ற்ரன் கல்லூரியின் வாழ்த்துச்செய்தி!

letter-head1

 

தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/07/letter-head1.pdf

அமரர் கலாநிதி. ஆ. தியாகராஜா அவர்களின் நூற்றாண்டு அகவை தினத்தை முன்னிட்டு சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் வெளியிடும் மலரிற்கு திருமதி. தவநாயகி பாலசிங்கம் (முன்னாள் அதிபர்,காரைநகர் இந்துக் கல்லூரி) அவர்களின் வாழ்த்துச் செய்தி!

Thavanayaki-corrected-word-1

 

தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/07/Thavanayaki-corrected-word-1.pdf

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை நடாத்தும் கலாநிதி ஆ. தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவும் தியாகச்சுடர் நினைவுத் தொகுப்பு வெளியீடும் எதிர்வரும் 17.07.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணியளவில் நடைபெறவுள்ளது!

banner 8x4

Flyer 2016-1 (1)

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரின் ஏற்பாட்டில் கலாநிதி ஆ. தியாகராசா அவர்களின் நூற்றாண்டு நிறைவை ஒட்டிய நூற்றாண்டு விழாவும் தியாகச்சுடர் நினைவுத் தொகுப்பு வெளியீடும்.

                             சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரின் ஏற்பாட்டில் 

                      கலாநிதி ஆ. தியாகராசா அவர்களின் நூற்றாண்டு நிறைவை 

                                               ஒட்டிய நூற்றாண்டு விழாவும் 

                                                                தியாகச்சுடர் 

                                              நினைவுத் தொகுப்பு வெளியீடும். 

                       தியாகச்சுடர் நினைவுத் தொகுப்புக்கான ஆக்கங்கள்

                              ஆர்வலர்களிடமிருந்து கோரப்படுகின்றன.


 பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது –      அதிகாரம் செய்ந்நன்றி அறிதல்: 103

காரைமாதாவின் மடிபூத்த காரை வாழ் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் அறிஞர்களே! பொதுச் சேவையாளர்களே! எழுத்தாளர்களே! நம் மண்ணின் பெருமைக்கு வித்திட்ட ஆன்மீகவாதிகள், விஞ்ஞானிகள், கல்விமான்கள், அரசியலாளர்கள், வள்ளல்கள் ஆகியோரில் ஒருவரும் பல்லாயிரம் மாணாக்கரின் வாழ்வில் ஒளியேற்றியவருமான கலாநிதி. ஆ. தியாகராசா அவர்களது பன்முக ஆளுமையை நம் சந்ததியினரின் அறிதலுக்காகப் பதிவு செய்யவேண்டிய கடப்பாடு எமக்கு உண்டு.

இதன் ஒரு அங்கமாக அன்னாரின் நூற்றாண்டு விழாவை எதிர்வரும் ஆங்கில ஆடி மாதம் 17ம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 16.00 மணிக்கு சுவிஸ் மண்ணில் St.Josef Pfarramt Röntgenstrasse 80, 8005 Zürich மண்டபத்தில் நாடாத்த தீரமானித்துள்ளோம். அவ்விழாவின் போது அவரது வரலாறு, சேவைகள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளும் கவிதைகளும் நினைவுக் குறிப்புகளும் அடங்கிய தியாகச்சுடர் என்ற நினைவுத் தொகுப்பு நூலை வெளியிடவும் எமது சபை தீர்மானித்துள்ளது. சுவிஸ்-காரை அபிவிருத்திச் சபையினரின் மொழி, கல்வி மற்றும் கலை மேம்பாட்டுக் குழுவினரால் தொகுக்கப்படவுள்ள இந்நூலை கனதியான வரலாற்று ஆவணமாக மலரச் செய்வதில் தங்களது பங்களிப்பையும் நாடிநிற்கிறோம்.

அன்னாரின் வாழ்க்கை வரலாறு, ஆசிரியப் பணி, அதிபர் சேவை, அரசியற் பணி, பொருளாதார அபிவிருத்தி, மற்றும் அவரது அரசியல், கல்வி மற்றும் பொருளாதாரச் சிந்தனைகள் எனப் பல கோணங்களிலும் கட்டுரைகள் அமையலாம். அன்னாருடன் நோரில் பழகியவர்கள், அவரிடம் படித்தவர்கள் நினைவுக் குறிப்புகளையும் வழங்கலாம். அன்னாரின் பணிகளை அவரது சமகால யாதார்த்தங்களுடன் ஒப்ப நோக்கிய ஆய்வுகளும் கவிதைகளும் வரவேற்கப்படுகின்றன.

தவிர்க்க முடியாத காரணங்களால் மிகக்குறுகிய கால இடைவெளியில் இவ்விழாவும் தியாகச்சுடர் நினைவுத் தொகுப்பு வெளியீடும் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது. எனவே தயை கூர்ந்து சிரமம் பாராமல் எதிர் வரும் 7ம் திகதிக்கு முன்பதாக தங்களது ஆக்கங்களை அனுப்பி  நமதூரின் புனிதமான பணிகளிலொன்றான வரலாற்று ஆவணப் படுத்தலில் பங்காளர்களாகுமாறு ஊரவர்கள் என்ற உறவின் பாற்பட்ட அன்புடன் வேண்டிக்கொள்கிறோம். 

இவ்வறிவித்தலை தனிப்பட்ட அழைப்பாக, வேண்டுகோளாகக் கருதி வினையாற்றுமாறு எமது ஊர் அறிஞர்கள், சமூக சேவையாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரை வேண்டிக்கொள்கிறோம். பிறவூரைச் சார்ந்தோருடைய ஆக்கங்களும் வரவேற்படுகின்றன. ஆக்கங்களை அனுப்பவும், மேலதிக விபரங்களை அறியவும் பின்வரும் மின்னஞ்சல் முகவரிகளுக்குத் தொடர்பு கொள்ளுங்கள். swisskarai2004@gmail.comமற்றும் eeveraa2000@gmail.com நன்றி. 

                                 நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்.

                  "இன்று நாம் செய்யும் நற்கருமங்களே நாட்டின் நாளைய வரலாறு"

 

                                                                                                                இங்ஙனம்.
                                                                                    சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையின்
                                                                            மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு
                                                                                                   செயற்குழு உறுப்பினர்கள்
                                                                                                   சுவிஸ் வாழ் காரை மக்கள்.
                                                                                                              29 ஆனி 2016
                
                 

   


  

அமரர் கலாநிதி ஆ.தியாகராசாவின் அளப்பரிய பணிகள் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டு சிறப்புற்று விளங்கிய நூற்றாண்டு விழா

IMG_0174

அமரர் கலாநிதி ஆ.தியாகராசாவின் அளப்பரிய பணிகள் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டு சிறப்புற்று விளங்கிய நூற்றாண்டு விழா

காரைநகர் இந்துக் கல்லூரியின் வெள்ளி விழா அதிபரும் மக்கள் நலன்பேண அர்ப்பணிப்போடு அல்லும் பகலும் ஓயாது செலாற்றிய காரை மண்ணின் ஒப்பற்ற சேவையாளருமாகிய அமரர் கலாநிதி ஆ.தியாகராசாவின் நூற்றாண்டு விழா சனிக்கிழமை(11.06.2016) மாலை செல்வச் சந்நிதி முருகன் கோவில் திருமண மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றிருந்தது. 

பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளையினால் மிகவும் நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்டு நடத்தப்பட்டிருந்த இவ்விழாவில் அமரர் தியாகராசா அவர்களின் நிர்வாகத்திறமையும் அர்ப்பணிப்பும்மிக்க சேவையினால் உன்னதமான நிலையைப் பெற்று விளங்கிய கல்லூரியினால் உருவாக்கப்பட்டிருந்த கல்வியாளர்களஇ; பல்துறை சார்ந்த அறிஞர்களஇ; சாதனையாளர்கள்இ காரை மண்ணின் அபிமானிகள் எனக் குறிப்பிடத்தக்க அளவிலான மக்கள் கலந்து கொண்டு காரை மண்ணிற்கு ஒளியேற்றியதுடன் நாட்டு மக்களுக்காகவும் உழைத்த ஈடு இணையற்ற சேவையாளரை நினைவு கூர்ந்து மதிப்பளித்தனர்.

பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் தலைவரும் ஓய்வு நிலை ஆசிரியருமாகிய திரு.தம்பையா அம்பிகைபாகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவினை கல்லூரி உதை பந்தாட்ட அணியின் முன்னாள் வீரரும் நில அளவைத் திணைக்கள ஓய்வு நிலை அலுவலருமாகிய திரு.பொன்னையா தியாகராசாவும் பாரியாரும்  S.P.S. நினைவு உதவித் திட்டத்தின் அனுசரணையாளர் திரு.சுப்பிரமணியம் அரிகரனும் பாரியாரும் மங்கள விளக்கேற்றி வைத்ததைத் தொடர்ந்து பிற்பகல்3.00 மணிக்கு விழா ஆரம்பமாகியது. 

சிவநெறிச்செல்வர் தி.விசுவலிங்கம் திருமுறை ஓதி கடவுள் வணக்கம் செய்யப்பட்டதுடன் அக வணக்கமும் இடம்பெற்றது. தொடர்ந்து  கல்லூரியின் இசை ஆசிரியைகளான திருமதி கலாசக்தி றொபேசன் திருமதி பங்கையற்செல்வி முகுந்தன் ஆகியோர் இணைந்து பாடி பதிவுசெய்யப்பட்டிருந்த 'தாய் மலரடி பணிவோம்'; என ஆரம்பிக்கும் கல்லூரிப் பண் ஒலி பரப்பப்பட்டபோது சபையினர் எழுந்து நின்று தாம் கற்று வளம்பெற்ற கல்லூரிக்கு மதிப்பளித்தனர்.

அமரரின் திருவுருவப் படத்திற்கு பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் கணக்காய்வாளரும் துறைமுக அதிகார சபையின் ஓய்வுநிலை அதிகாரியுமாகிய திரு.கந்தப்பு அம்பலவாணர் மலர் மாலை அணிவித்தார்.  

பழைய மாணவர் சங்கத்தின் உப-தலைவர் திரு.நாகலிங்கம் குஞ்சிதபாதம் விருந்தினர்களையும் சபையோரையும் வரவேற்று உரையாற்றியதை அடுத்து தலைவரது உரை இடம்பெற்றது. 

இதனையடுத்து அமரரின் வாழ்க்கை வரலாறுஇ கல்லூரியின் அதிபராக 25ஆண்டுகள் ஆற்றிய பணிகள்இ பொதுப்பணிஇ ஊருக்கான பணி என்பனவற்றை உள்ளடக்கி அவ்வப்போது வெளிவந்திருந்த ஆக்கங்களைத் தாங்கிய ஆவணப்படுத்தும் வகையிலான விழா மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. இம்மலரின் வெளியீட்டுரையினை பழைய மாணவர் சங்கத்தின் செயலாளரும் மலரின் தொகுப்பாளருள் ஒருவருமாகிய திரு.கனக சிவகுமாரன் நிகழ்த்தியதைத் தொடர்ந்து சங்கத்தின் பொருளாளரும் மலரின் மற்றைய தொகுப்பாளருமாகிய திரு.மாணிக்கம் கனகசபாபதி முதற் பிரதியை  Double Seal Insulating அதிபரும் பழைய மாணவர் சங்கத்துடன் இணைந்து பாடசாலை வளர்ச்சிக்கு உதவி வருபவருமாகிய தொழிலதிபர் திரு.மகாதேவன் பாலசுப்பிரமணியம் அவர்களுக்கும் கௌரவ பிரதியை அமரரின் உறவினரும் பழைய மாணவருமாகிய திரு.கந்தசாமி தேவகுமார் அவர்களுக்கும் வழங்கி வெளியிட்டுவைக்கப்பட்டது.. அமரர் பல துறை சார்ந்து பரந்து பட்ட சேவையினை சமூகத்திற்காக வழங்கியிருந்தார் எனவும் இவை குறித்து தனித்தனியாக ஆராயப்பட்டு ஆவணப்படுத்தும்வகையிலான ஓரு முழுமையான நூல் எதிர்காலத்தில் வெளிவருவதற்கான முதற்படியாக இம்மலரின் வெளியீடு; அமையும் என்ற நம்பிக்கையை திரு கனக சிவகுமாரன் தனது வெளியீட்டுரையின்போது வெளிப்படுத்தியிருந்தார்.

தமது மருத்துவ சேவையினாலும் சமூக உணர்வினாலும் காரைநகர் மக்கள் மத்தியில் மட்டுமல்லாது கனடா வாழ் தமிழ் சமூகத்தின் நன்மதிப்பையும் பெற்று கல்லூரியின் புகழை நிலைநாட்டி வருகின்ற கனடாவின் பிரபல குழந்தைகள் மருத்துவ நிபுணர் மருத்துவகலாநிதி விசுவலிங்கம் விஜயரத்தினம் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார். அதே போன்று கல்லூரியின் மற்றுமொரு மகிமை மிக்க பழைய  மாணவரும் சிறந்த கல்வியாளருமாகிய பேராசிரியர் கலாநிதி தில்லைநாதன் சிவகுமாரன் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு விழாவிற்கு பெருமை சேர்த்தார். கல்லூரியின் புகழை நிலைநாட்டி வருகின்ற பழைய மாணவரும் கனடாவின் பிரபல பல் மருத்துவ நிபணரும் சமய உணர்வாளருமாகிய பல்மருத்துவகலாநிதி ஆதிகணபதி சோமசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழாவினை மேலும் மேன்மையுறச் செய்தார்.

பிரதம விருந்தினர் மருத்துவகலாநிதி விஜயரத்தினம் உரையாற்றுகையில் அமரர் தியாகராசா உயர்ந்த கல்வித் தகைமைகளைக் கொண்டு சிறந்த கல்வியாளராக விளங்கி காரைநகருக்கு பெருமை சேர்த்தவர் என்பதுடன் காரைநகர் இந்துக் கல்லூரியில் 25ஆண்டுகள் அதிபராக பதவி வகித்தும் பின்னர் பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதியாக பதவி வகித்தும் ஆற்றிய அளப்பரிய பணிகள் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பெற்று விளங்குகின்றார் எனக் குறிப்பிட்டார.; அதிபராக இருந்த காலத்தில் கல்வித்தர விருத்தியில் எவ்வளவு கவனம் செலுத்திச் செயற்பட்டாரோ அதேயளவு கவனத்தினை மாணவர்களின் ஒழுக்கத்திற்கும் வழங்கி செயலாற்றியிருந்ததுடன் இதனை ஊக்குவிக்கும் வகையில் ஒழுக்கத்தில் சிறந்த மாணவர்களை தெரிவு செய்து பரிசில்கள் வழங்கி வந்துள்ளார். கர்நாடக சங்கீதத்தை முறையாகப் பயின்ற இவர் ;தாம் ;கல்வி பயின்ற காலத்தில் பாடசாலையில்  கச்சேரி செய்து மற்றையவர்களை மகிழ்வித்தவர் எனவும் மருத்துவகலாநிதி விஜயரத்தினம் தமது உரையில் மேலும் குறிப்பிட்டார்.

விழா சிறப்புற பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கம் அனுப்பி வைத்த வாழ்த்துச் செய்தியை பழைய மாணவர் சங்க நிர்வாக உறுப்பினர் திருமதி.கருணாவதி சுரேந்திரகுமார் விழா அரங்கில் வாசித்தார்.

கௌரவ விருந்தினர் பேராசிரியர் கலாநிதி தில்லைநாதன் சிவகுமாரன் உரையாற்றுகையில் அமரர் தியாகராசா அதிபராக சேவையாற்றிய காலத்தில் பாடசாலையின் உயர்வுக்காக இவர் ஆற்றிய சாதனைப் பணிகள் இவரது சேவைக் காலத்தை பொற்காலமாக அடையாளப்படுத்துவதாக உள்ளது எனக் குறிப்பிட்டதுடன் தமது வாழ்நாளின் பிற்பகுதியில் கல்வியைத் தொடர்ந்து கற்று பொருளாதாரத் துறையில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றதன் மூலம் கல்வியானது ஒருவரது வாழ்நாள் முழுவதற்குமானது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் என்பதுடன் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதம் பாராது அனைவரையும் சமமாக மதித்து செயலாற்றியவர் எனவும் குறிப்பிட்ட சிவகுமாரன,; தமது உரையின் இறுதியில் அமரரின் பெருமைகளை கவிதை வடிவில் சபையில் சமர்ப்பித்தமை உணர்வுபூர்வமாக அமைந்திருந்தது.

காரை அபிவிருத்தி சபை வழங்கிய வாழ்த்துச் செய்தியை பழைய மாணவர் சங்க நிர்வாக  உறுப்பினர் திருமதி.பிரபா ரவிச்சந்திரன் விழா மேடையில் வாசித்தார். 

சிறப்பு விருந்தினர் பல்மருத்துவகலாநிதி ஆதிகணபதி சோமசுந்தரம் தமது உரையில் அமரர் தியாகராசா காரை மண்ணுக்கு ஒளியேற்றி வைத்து தீர்க்கதரிசனத்துடன் செயலாற்றிய கர்மவீரர் என்பதுடன் காரை மண்ணில் தோன்றிய சேவையாளர்களுள் முதன்மையானவராக விளங்கி வரலாற்றில் இடம்பெற்றுள்ளார் எனக் குறிப்பிட்டதுடன்  அமரரால் தரமான கல்வியை வழங்கும் பாடசாலையாக மாற்றியமைக்கப்பட்ட இந்துக் கல்லூரியிலிருந்து தாம் பல்மருத்துவத் துறைக்கு தெரிவு செய்யப்பட்டதை பெருமையுடன் குறிப்பிட்டதுடன் அக்காலகட்டத்தில் அதிக அளவு மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டதையும் நினைவு கூர்ந்திருந்தார். அமரர் தியாகராசா பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் காரைநகர் மக்களுக்கு ஆற்றிய அளப்பரிய சேவைகளை அட்டவணைப்படுத்தி உணர்வுபூர்வமாக ஆற்றிய மருத்துவகலாநிதி ஆதிகணபதியின் விரிவான உரையானது தாம் நேசித்த மக்களுக்காக இத்துணைப் பணிகளை வெற்றிகரமாக சாதித்தாரே என சபையோரை ஒரு கணம் வியக்கவைத்து சிந்திக்கவும் வைத்தது எனலாம்.

பழைய மாணவர் சங்கத்தின் போசகரும் கனடா சைவ சித்தாந்த மன்றத்தின் தலைவரும் ஓய்வுநிலை பிரபல ஆசிரியருமாகிய சிவநெறிச்செல்வர் தில்லையம்பலம் விசுவலிங்கம், கனடா-காரை கலாச்சார மன்றத்தின் தலைவரும் கணக்காளரும் கல்லூரியின் பழைய மாணவருமாகிய திரு.தம்பிஐயா பரமானந்தராசாஇ  பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஓய்வுநிலை உதவி நிலஅளவையாளர் நாயகமுமான திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளைஇ கல்லூரியின் மூத்த பழைய மாணவரும் துறைமுக அதிகார சபையின் பிரதம காசாளருமாகிய திரு.முருகேசு சின்னத்துரைஇ வாட்டலூ பல்கலைக்கழக இணைப்பேராசிரியரும் சமூக ஆர்வலருமாகிய கலாநிதி தம்பிராசா ரவிச்சந்திரன் ஆகியோர் அமரர் கலாநிதி ஆ.தியாகராசா மக்களுக்காக விட்டுச்சென்ற வரலாற்றுப் பணிகளை பல்வேறு கோணங்களிலிருந்தும் நோக்கி உரையாற்றியிருந்தனர்.

இங்கு உரையாற்றிய பலரும் அமரர் தியாகராசாவின் நூற்றாண்டு விழாவினை ஏற்பாடு செய்தமைக்காக பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளையினைப் பாராட்டி நன்றி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வுரைகளின் இடையே கல்லூரியில் நடைபெற்ற அமரரின் நூற்றாண்டு விழாவின்போது கல்லூரியின் முதுநிலை மாணவ முதல்வரும் அறிவிப்பாளருக்கான தேசிய நிலை போட்டியாளருமாகிய செல்வன் விநோதன் கனகலிங்கம் ஆற்றிய உரையின் காணொளி ஒளிபரப்பப்பட்டிருந்தது.

சிறந்த பேச்சாளராக மிளிர்ந்து வருகின்ற செல்வன் விநோதன் அமரரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அன்னாரது வரலாற்றுப் பணிகளை தனது பேச்சாற்றல் ஊடாக வெளிப்படுத்தியிருந்த பாணி சபையோரை வெகுவாக கவர்ந்திருந்தது. 


பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினரும் முன்னாள் இலங்கை வங்கி அதிகாரியுமான திரு.கனகரத்தினம் சிவபாதசுந்தரம் அவர்களின் நன்றியுரையைத் தொடர்ந்து சிவநெறிச்செல்வர் தி.விசுவலிங்கம் அவர்களின் திருமுறை ஓதலுடன் சிறப்புற்று விளங்கிய அமரர் கலாநிதி தியாகராசாவின் நூற்றாண்டு விழா நிறைவுற்றது.

படங்கள்: திரு.திருவேங்கடம் சந்திரசோதி

செய்தி பிரதியாக்கம்: திரு.கனக.சிவகுமாரன்

விழாவில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம். 

கனடாவில் நடைபெற்ற கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா

' †

‘ †

கனடாவில் நடைபெற்ற கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா

காரைநகர் இந்துக் கல்லூரியின் வரலாற்று அதிபர்,வெள்ளி விழா அதிபர் அமரர்.கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை(11.05.2016) அன்று கனடா செல்வச் சந்நிதி கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு.த.அம்பிகைபாகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக பிரபல குழந்தைகள் மருத்துவ நிபுணர் மருத்துவ கலாநிதி.வி.விஜயரத்தினம் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார். 

கல்வியாளர்களும் காரைநகர் மக்களும் கலந்து கொண்ட இவ்விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

விழா பற்றிய முழுமையான விபரம் பின்னர் எடுத்து வரப்படும். 

நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களின் தொகுப்பைக் கீழே காணலாம். 

அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவுவிற்கு காரைநகர் அபிவிருத்திச் சபை விடுத்துள்ள வாழ்த்துச்செய்தி

KWS Logo

அமரர் கலாநிதி ஆ தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் கனடா அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவினை பல்துறை அறிஞர்களின் பங்களிப்புடன் கனடாவில் கொண்டாடுவதையிட்டு காரைநகர் அபிவிருத்திச் சங்கம் மகிழ்வடைகின்றது.

அமரர் அவர்களின் 100வது விழா அவர் 25ஆண்டுகள் அதிபராக பணியாற்றிய காரைநகர் இந்துக் கல்லூரியில் 17-04-2016 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.  அந்த நிகழ்வில் பல கோணங்களில் அவரது பணிகள் பலராலும் நினைவுகூரப்பட்டது. காரைநகரின் அடையாளத்தை பலதுறையில் ஐந்து தசாப்த காலம் நிலைநிறுத்தியவர் அமரர் தியாகராசா அவர்கள்.

காரைநகர் அபிவிருத்தியின் முன்னோடியாகத் திகழ்ந்து அவரின் சிந்தனையின் அடிப்படையில் எமது ஊரை வளப்படுத்துவதே நாம் அவருக்கு செய்யும் கைமாறு ஆகும். மனிதருள் மாணிக்கமாக திகழ்ந்த அமரர் தியாகராசா அவர்கள் எப்பொழுதும் எம்மக்களின் நினைவில் போற்றி வணங்கக்கூடியவர் என்றால் மிகைஒன்றும் 'இல்லை.

அவரைச் சிறப்பித்து விழா எடுக்கும் கனடா காரை இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்திற்கு எமது உளம் கனிந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.


ப.விக்கினேஸ்வரன்              இ.திருப்புகழூர்சிங்கம்                  க.பாலச்சந்திரன்
தலைவர்                                         செயலாளர்                                   பொருளாளர

 

தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/06/Doc1-scan.pdf

 

அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவிற்கு பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கத்தின் வாழ்த்துச் செய்தி

UK LOGO
அன்பார்ந்த காரை.இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்-கனடா தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாக உறுப்பினர்களிற்கு,
 
 அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா
 
 காரைநகர் இந்துக் கல்லூரியின் செழிப்பு, காரை மக்களின் நலன் ஆகியவற்றை தமது பிரதான இலட்சியங்களாகக் கொண்டு அவற்றினை மேம்படுத்த ஓயாது உழைத்தவரும்,  காரை மண்ணின் ஒப்பற்ற சேவையாளருமான அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவினை காரை.இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்-கனடா நடாத்துவதையிட்டு நாம் எல்லோரும் பெருமிதம் அடைகிறோம்.
 
 அன்னாரின் பணியினை அனைத்து காரை மக்களும் தொடர்ந்து பேணுவார்கள் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் இவரின் பணிகள் காரைநகரை எல்லோரும் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு கொண்டு சென்றதென்றால் அது மிகையாகாது. அன்னாரின் அளப்பெரிய பணிகளை இந்த நூற்றாண்டு விழா மூலம் மீண்டும் மீட்டிப் பார்ப்பதற்கு வழிசமைத்த காரை.இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்-கனடா நிர்வாகத்தினரின் இந்த முயற்சி எல்லோராலும் பாராட்டப்பட வேண்டியதே!
 
 இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணத்தில் பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம் தனது வாழ்த்துச் செய்தியினை பகிர்ந்து கொண்டு இந்த விழா சிறப்புற அமைய பிரித்தானிய வாழ் காரை மக்கள் மற்றும் காரை.இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் சார்பில் மனதார வாழ்த்துகிறோம்.
 
 நன்றி.
நிர்வாகம்
பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம்  

KWSUK-KaraiHinduCollege-OSA-Canada-100thAnniversary-of-Dr-Thijagaraja-07062016

 

அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா, எதிர்வரும் 11ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2.30மணிக்கு Brimley&Ellesmere சந்திப்பில் அமைந்துள்ள கனடா செல்வச் சந்நதி ஆலய திருமண மண்டபத்தில் நடைபெறும்.

              அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா

காநைகர் இந்துக் கல்லூரியின் செழிப்பு, காரை மக்களின் நலன் ஆகியவற்றை தமது பிரதான இலட்சியங்களாகக் கொண்டு அவற்றினை மேம்படுத்த இறுதி மூச்சு வரை ஓயாது உழைத்த வெள்ளி விழா அதிபர், காரை மண்ணின் ஒப்பற்ற சேவையாளர் அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவில் தாங்கள் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்பாக வேண்டிக்கொள்கின்றோம்.

இவ்விழா எதிர்வரும் 11ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2.30மணிக்கு Brimley&Ellesmere  சந்திப்பில் அமைந்துள்ள கனடா செல்வச் சந்நதி ஆலய திருமண மண்டபத்தில் நடைபெறும்.

விழாவின் நிகழ்ச்சி நிரல் இத்துடன் இணைப்பாக அனுப்பிவைக்கப்படுகின்றது.

                     நன்றி.
காரை.இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்-கனடா

Anniversary Agenda of Late Dr.A.Thiyagarajah (1)

அமரர்.கலாநிதி.ஆ.தியாகராசா நூற்றாண்டு விழா

Dr.A.Thiagarajah-flyer

இந்துக் கல்லூரியில் நடைபெற்ற கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா

இந்துக் கல்லூரியில் நடைபெற்ற கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா

காரைநகர் இந்துக் கல்லூரியில் வெள்ளி விழா அதிபராகச் சேவையாற்றி பாடசாலையை உயர்நிலைக்கு உயர்த்திய சிற்பியாகிய அமரர்.கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் 100 ஆவது பிறந்த நாள் கடந்த 17.04.2016 ஆகும்.  

பாடசாலையின் வரலாற்றில், கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் காலமே 'பொற்காலம்' என்று அறிஞர்களினால்  போற்றப்படுகின்றது. 

அந்தவகையில், பாடசாலை சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அன்னாரின் நூற்றாண்டு விழா 17.04.2016 அன்று நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் பதில் அதிபர் திருமதி.கலாநிதி சிவநேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

நிகழ்வில் நினைவுப்பேருரை, சிறப்புரைகள், சிந்தனை அரங்கம், இசை நிகழ்ச்சி, மாணவர் நிகழ்ச்சி என்பன இடம்பெற்றன. 

நிகழ்வில் எடுக்கப்பட்ட சில படங்களைக் கீழே காணலாம்.

IMG_0213 IMG_0214 IMG_0215 IMG_0216 IMG_0217 IMG_0218 IMG_0219 IMG_0220 IMG_0222 (1) IMG_0229 IMG_0232 IMG_0234 IMG_0236 IMG_0237 IMG_0243 IMG_0245 IMG_0246 IMG_0253 IMG_0257 IMG_0262 IMG_0263 IMG_0268 IMG_0269 IMG_0272 IMG_0277 IMG_0279 IMG_0280 IMG_0282 IMG_0284 IMG_0289 IMG_0293 IMG_0294

அமரர்.கலாநிதி.ஆ.தியாகராசா நூற்றாண்டு விழா இன்று 17.04.2016 நடைபெற்றது

அமரர்.கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் 100 வது பிறந்த நாள் (17.04.2016) சிறப்புக் கட்டுரை–2

Dr_A_Thiyagarajah-287x397         

அமரர்.கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் 100 வது பிறந்த நாள் (17.04.2016) சிறப்புக் கட்டுரை–2

காரை மாதாவின் மைந்தர்களில் மாணிக்கமாகத் திகழ்பவரும், புகழ் பெற்ற நல்லாசிரியரும், வெள்ளி விழா அதிபராகத் தான் சேவையாற்றிய பாடசாலையாகிய காரைநகர் இந்துக் கல்லூரியை உயர்நிலைக்கு உயர்த்திய சிற்பியும் தணியாத ஊர்ப்பற்றுடன் தீர்க்க தரிசனச் சிந்தனையுடன் அரசியல் என்னும் ஆயுதம் கொண்டு தன் உடல், பொருள், ஆவி அத்தனையையும் தியாகம் செய்து காரை மண்ணில் அளப்பரிய அபிவிருத்தி செய்தவருமாகிய அமரர்.கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் 100 ஆவது பிறந்த நாள் இன்று 17.04.2016 ஆகும்.
 
தான் சேவை செய்த கல்லூரியின் காலத்தை மட்டுமல்ல தன் ஊரின் காலத்தையும் பொற்காலமாக்கிய காலத்தால் அழிக்கப்பட முடியாத தியாகச் செம்மல் அமரர்.கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்து வாழ்த்தி வணங்க வேண்டியது காரைநகர் மக்களின் கடமையாகும்.  

அந்தவகையில், இந்நாளையொட்டி "நானறிந்த காரைநகர்ப் பெரியார் கலாநிதி.ஆ.தியாகராசா ஆவார்" என்ற கட்டுரை இங்கே எடுத்துவரப்படுகின்றது.  

செல்வி.டிலானி கார்த்திகேசு எழுதிய இக்கட்டுரை 2014ம் ஆண்டில் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையால் காரைச் சிறார்களிடையே நடத்தப்பட்ட அனைத்துலகக் கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

 

   

                   “நானறிந்த காரைநகர் பெரியோர்

                 கலாநிதி ஆ.தியாகராசா”ஆக்கம் 02 

 

இலங்கை திரு நாட்டிலே வட மாகாணத்திலே யாழ்ப்பாணத்திலே எண்திசை புகழும் அருளின் நிறைந்த காரைநகரிலே வலந்தலை சுட்டில் அறிவுக் கண்ணை திறக்கும் அறிவுக் கூடமாக யா/கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் உள்ளது. இன்று அப் பாடசாலையானது தனது காரைநகர் இந்துக்கல்லூரி என்னும் பெயரை யா/கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் என மாற்றியமைக்கு காரணம் திரு.ஆ.தியாகராசா அவர்களினால் ஆற்றப்பட்ட தன்னலம் அற்ற சேவையே ஆகும். தற்போதும் இவரது மகள் திருஆ..தியாகராசா அவர்களின் நினைவாக காரைநகரில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு உதவி பணம் வழங்குவது குறிப்பிடத்தக்க விடையமாகும். இவ்வாறான புகழும் பெருமையும் கொண்ட திருஆ..தியாகராசா அவர்கள் மலேசியாவில் புகையிரத இலாகாவில் கடமை ஆற்றிய திரு.ச.ஆறுமுகம் அமிர்தவல்லி தம்பதியாரின் செல்வப்புத்திரனாக 1916ஆம் ஆண்டு சித்திரை மாதம் 17ஆந் திகதி மலேசியாவில் பிறந்தார். "இளமையில் கல்வி சிலையில் எழுத்து" என்பதற்கினங்க ஆரம்பக் கல்வியை மலேசியாவில் ஆரம்பித்து எட'டு வயது வரை மலேசியாவிலேயே கற்றார். பின்னர் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது பேரன் பேத்தியுடன் இருந்து இரண்டு ஆண்டுகள் கல்வி கற்றார்.

தியாகராசா பத்து வயது சிறுவனாக இருக்கும் போதே இந்தியாவில் உள்ள கவியரசர் ரவீந்திரநாத் தாகூர் சாந்திநிகேதனில் நிறுவிய விஸ்பாரதி பல்கலைகழகத்தில் கல்வி கற்பதற்கு வயது குறைவாக காணப்பட்டமையால் சென்னை அடையாறு கலாசேத்திரத்தில் சேர்க்கப்பட்டு கல்வி கற்றார். தனது பதினாறாவது  வயதில் அதாவது 1932இல் சீனியர் பரீட்சையிலும் பதினெட்டாவது  வயதில் அதாவது 1934இல் இன்ரர்சயன்ஸ் பரீட்சையிலும் இருபதாவது  வயதில் அதாவது 1936 இல் பீ.எ பரீட்சையிலும் 22ஆவது வயதில் அதாவது 1938இல் எம்.ஏ பட்டமும் பெற்றதன் பின்னர் 1940வரை சிங்கப்புர் மருத்துவக்கல்லூரியில் கல்வி பயின்றார் 1941இல் அதாவது 25ஆவது வயதில் எம்.லிற் பட்டத்தை பெற்றார். பின்னர் இலங்கை திரும்பிய தியாகராசா அவர்கள் காரைநகரில் உள்ள இந்துக்கல்லூரி அதாவது தற்போது கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் என அழைக்கப்படும் பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றினார். இவர் இக் கல்லூரி கடமையாற்றிய காலம் "பொற்காலம்" என அழைக்கப்படுகின்றது. இவர் கல்வி பயிலும் காலத்தில் ஹாக்கி அணிவீரர் மற்றும் சங்கீதக் கலையிலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.

தியாகராசா அவர்கள் இந்தியாவில் கல்வி கற்ற காலத்தில் இந்திய தேசத்திற்கான விடுதலைக்கான அண்ணல் காந்திஜி தலைமையில் அணிவகுத்து போராடியவர். இவர் இந்தியாவில் வாழ்ந்த காலத்தில் தன்னலம் துறந்து புசல்களை விடுத்து மக்களும் தேசபக்தர்களும் தேசவிடுதலைக்காக போராடி பெற்ற அனுபவங்களைக் கொண்டு தன் கிராமத்து மக்களைத் தரிசித்தார்.

1942ம் ஆண்டு தனது 26ஆவது வயதில் ஆடம்பரமும் நவநாகரீகமும் துளியும் கிடையாத திரு.சிவகுநாதன் அவர்களின் மகள் மகேஸ்வரியை வாழ்க்கை துணையாக கொண்டவர். தியாகராசா அவர்களின் வெற்றிக்கு மிக பக்கபலமாக காணப்பட்டதுடன் தியாகராசா அவர்களின் கருத்தறிந்து நடந்து கொண்டார்.

காரைநகர் இந்துக்கல்லூரியில் அதிபராக இருந்த திரு.கனகசபை அவர்கள் 1945இல் ஓய்வு பெற திருஆ.தியாகராசா அவர்கள் 16.04.1946 இல் அதிபராக கடமையேற்ற காலத்தில் பாலர் கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. காரைநகரில் சிரேஷட பாடசாலையாக காரைநகர் இந்துக் கல்லூரி மட்டுமே திகழ்ந்தது. இதனால் ஏனைய பாடசாலையில் தரம் 5ம் வகுப்புடன் இடைநிறுத்திய மாணவர்கள் அனைவரும் காரைநகர் இந்துகல்லூரியில் அனுமதி கோரினர். 1915இல் ஆரம்பிக்கப்பட்ட அமெரிக்கன்மிஷன் ஆங்கிலப்பாடசாலையில் மாணவர்தொகை வெகுவாகக் குறைவடைந்தமையால் 1945இல் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது. மற்றும் காரைநகரில் உள்ள மேற்கு பிரதேச மாணவர்களும் இந்துக்கல்லூரிக்கு அனுமதிகோரி வந்திருந்தனர். இக் காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையான மாணவர்கள் அணுமதி கோரியமை பெரும் சவாலாக காணப்பட்டது. மாணவர்களுக்கு கல்வி கற்பிற்பதற்கு ஆசிரியர்களோ வாங்கு மேசைகளோ இடவசதியோ இல்லை இதனால் உடனடியாக ஆறு அறைகளைக் கொண்ட கட்டடத்தைக் கட்டினார். மாணவர்களுக்கு தேவையான வாங்குமேசைகளை பெற்றோர்களிடமும் அர்பணிப்பு மிக்க ஆசிரியர்களை இந்துக்கல்லூரி சபையின் அனுசரனையுடன் பெற்று மாணவர்களுக்கு கல்வியை வழங்கினார்.

அமெரிக்கன் மிஷன் பாடசாலை மூடப்பட்டதன் காரணமாக காரைநகரில் மேற்குபகுதியில் உள்ள மாணவர்கள் அணைவரும் இந்துக் கல்லூரிக்கு வந்து கல்வி கற்பதனால் ஏற்படும் துன்பங்களுக்கு தீர்வு காணும் பொருட்டு சைவ ஆங்கிலப் பாடசாலை ஒன்றை நிறுவவேண்டும் என காரைநகர் மேற்கைசேர்ந்த பெற்றோர்களும் கல்விமான்களும் தீர்மானித்தனர். இப் பாடசாலையை ஆரம்பிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் திரு.தியாகராசாவின் வீட்டிலே நடைபெற்றது குறிப்பிடதக்கது. இப் பாடசாலைக்கு அதிபராக கடைமையாற்றுவதற்கு திரு க.கனகசபை அவர்களும் ஆசிரியர்களாக கடைமையாற்ற திருவாளர் கு.பொன்னம்பலம்  மு.சீவரத்தினம் ஆகிய மூவரையும் காரைநகர் இந்துக் கல்லூரியில் இருந்து புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைக்கு கடைமையாற்ற விடுவிக்கப்பட்டார். திரு தியாகராசா அவர்களை யாழ்ற்ரன் கல்லூரிக்கு அதிபராக கடைமை ஏற்குமாறு காரைநகர் மேற்கை சேர்ந்த பல வற்புறுத்தியும் தான் பொறுப்பேற்ற காரைநகர் இந்துக் கல்லூரி முன்நிலை எய்ய வேண்டும் என்பதற்காக அக் கோரிக்கையை நிராகரித்தார்.

உயர்நீதிமன்ற நீதிபதி உயர்திரு ந.நடராஜா K.C அவர்களின் திடிர் மரணத்தின் பின்னர் அவரின் பாரியார் திருமதி தங்கம்மா நடராஜா அவர்களால் அறுபத்தையாயிரம் செலவில் நடராசா ஞாபகார்த்த மண்டபம் அமைத்தார். இம் மண்டபம் அமைக்கும் பணியில் தீவிரமாக செயற்பட்டார்.  "கோபுரம் இல்லாத கோயில் தான் பாடசாலை" அதற்கினங்க மண்டபத்திற்கு தேவையான ஓடுகள் இல்லாதவிடத்து "தனது வீட்டு ஓட்டினை எடுத்துவந்து கட்டினார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்க விடையமாகும்." இம் மண்டபத்தை கட்டுவிக்க திரு.ஆதியாகராசா அவர்களுடன் இனைந்து மிகவும் உழைத்த ஒருவர்தான் திரு.வீ.தம்பிப்பிள்ளை ஆவார். இவர்களால் கட்டப்பட்ட நடராஜா ஞாபகார்த்த மண்டபமானது யாழ்ப்பாணத்திலேயே மிகவும் பெரிய அகலமான மண்டபம் என கூறுகின்றனர். 19.08.1950இல் கௌரவ நீதிஅமைச்சர் DR.L.A.ராஜபக்ஸ அவர்களால் நடராஜா ஞாபகார்த்த மண்டபம் திறந்துவைக்கப்பட்டது. மண்டபத்திற்கு பின்புறமாக உள்ள காணியை தர்மஆதாரமாக பெற்று பாடசாலைக்கு மைதானம் அமைத்தார்.

உயர்தரத்தில் பேணப்பட்டு செயற்படும் ஆய்வுகூடங்களாக இரசாயனம் பௌதீகம் விலங்கியல் உயிரியல் மற்றும் மனையியல் ஆகிய பாடங்களுக்கான தனித்தனி ஆய்வுகூடங்களை அமைத்ததோடு புவியியல் நூலகம் என்பவற்றுக்கு அறைகளைக்கட்டுவித்தார்.

பாடசாலை வரலாற்றுச்சான்றாக அமையும் காரைநகர் இந்துக்கல்லூரி எனும் சஞ்சிகை 1948இல் வெளியிடப்பட்டது. மற்றும் 1953, 1957, 1959ம் ஆண்டுகளில் "சயம்பு" எனும் கல்லூரி சஞ்சிகை வெளியிடப்பட்டது. எமது பாடசாலையின் வரலாற்றுச்சுவடுகளாக இச் சஞ்சிகை காணப்படுகின்றன. மற்றும் வைரவிழா பவளவிழா முத்துவிழா என விழாக்களும் இவரது காலங்களில் கொண்டாடப்பட்டவையாகும்.

திரு.தியாகராசா அவர்கள் மலேசியா சென்று பழையமாணவர்களிடம் நிதி சேர்த்து "சயம்பு ஞாபகார்த்த" கட்டடத்தை அமைத்து கீழ்மாடியில் வகுப்பறையையும் மேல்மாடியில் நூலகத்தையும் அமைத்தார். இம்மண்டப அமைப்பு பணியில் ஆ.தியாகராசாவுடன் திரு.த.அருளையா அவர்களும் ஈடுபட்டார்.

திரு.தியாகராசாவின் சேவைக்காலத்தில் உயர்தர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு பல்கலைக்கழகத்துக்கு மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். அக்காலகட்டத்தில் சிறப்புத்தர அதிபர்கள் உள்ள பாடசாலைகளில் இந்துக் கல்லூரியும் ஒன்றாகும். கல்விதிணைக்களத்தால் உயர்பதவி வழங்கப்பட்ட போதிலும் தான் வளர்த்த நேசித்த பாடசாலையை சிறப்புத்தரத்திற்கு(1AB) உயத்தினார். யாழ் மாவட்டத்திற்கு புகழ் சேர்த்த பாடசாலைகள் வரிசையில் இந்துக்கல்லூரியை உயர்த்திய பெருமைக்குரியவர்.

திரு.தியாகராசா அர்பணிப்பு மிக்க ஆசிரியர்களை அரவணைத்து சென்றமை கல்லூரியின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்தது. கல்வி போதனையிலும் பண்புடனும் பணிவுடனும் செயற்பட ஒழுக்கம்மிக்க மாணவர்களை உருவாக்குவதிலும் அல்லும்பகலும் அமரர் தியாகராசாவின் உள்ளம் ஈடுபட்டிருந்தது. கல்வி திணைக்களகத்தில் காத்திரமான பணிகளைப்பெறுவதற்கு அதற்கு பொருத்தமான பெற்றோர்களை அனுப்பி கருமம் ஆற்றினார். கல்லூரி உள்ளக நிர்வாகத்தில் கல்வித்திணைக்கள அதிகாரிகள் தலையிட எத்தனித்த சமயத்தில் தன்னை பணியிலிருந்து விடுவிக்குமாறு வேண்டிநின்றார்.

சமூகம் எதிர்பார்த்த கல்வியை வழங்கியமையால் நகர்புற பாடசாலையை நோக்கி மாணவர்கள் செல்வது அரிதாக காணப்பட்டது. கற்றல் கற்பித்தல் சுமுகமாக காணப்பட்டமையால் பிரத்தியோக வகுப்புக்கள் செல்லவேண்டிய தேவையிருக்கவில்லை. திரு.தியாகராசா அவர்கள் சிறப்புதர பதவியில் உயர்நிலை சம்பளம் ஓய்வூதியம் என்பவற்றுக்கு காத்திராது 02.04.1970இல் மாணாக்கர்களின் பணியை நிறைவேற்றி மக்கள் பணி ஆற்ற ஆரம்பித்தார்.

25ஆண்டுகள் அதிபராக கடைமையாற்றி பெற்ற அனுபவங்களைக் கொண்டு வட்டுகோட்டைதொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக கடைமையாற்றிய காலத்தில் வட்டுகோட்டைதொகுதியின் பாடசாலை அதிபர்களுடன் பகிர்ந்து தரமான கல்வி அபிவிருத்தியில் அக்கறை செலுத்தினார். அனைத்து நியமனங்களின் போதும் கிடைக்கவேண்டிய சலுகைகள் தவறாது கிடைக்க இடைவிடாது முயன்று பொருத்தமானவர்கள் நியமனம் பெற ஆவனம் செய்தார்.

காரைநகர் இந்துக் கல்லூரியில் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தில் செலவழிக்காத வருடத்தின் இறுதி மாத ஆரம்பத்தில் பெற்று வருடம் முடிவடைவதற்கு முன்னர் பல நிர்மாணிப்பு பணிகளை மேற்கொண்டார் என்பது குறிப்பிடதக்க விடையமாகும். இவற்றை உரிய காலங்களில் நிறைவேற்றியமையால் அதிபர் திரு.K.K.நடராஜா யாழ்மாவட்ட 1AB பாடசாலை அதிபர்கள் சந்திப்பில் யாழ் மாவட்ட கல்விப் பணிப்பாளர் திரு.W.D.C.மகதந்தில்ல அவர்களால் பாரட்டப்பட்டார். இதுவே இவர் இந்துக் கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்றாலும் தனது பணியை தொடர்ந்து செய்தார் என்பதற்கு சான்றாக அமைகிறது. க.பொ.த(உ.த) வகுப்புக்களில் 150இற்கு மேற்ப்பட்ட மாணவர்கள் கல்வி கற்றனர். வட்டுகோட்டை மூளாய் சுழிபுரம் மாவடி ஊர்காவற்றுறை போன்ற அயற்கிராம மாணவர்கள் பெரும் எண்ணிக்கையில் சேர்ந்து கல்வி கற்றமை என்பது சிறப்பான விடையமாகும். அமரர் திரு.தியாகராசா அவர்கள் கல்வி மேல் கொண்ட பற்று உறுதிக்கு அதிபர் திரு. K.K.நடராஜா செயல் வடிவம் கொடுத்தார்.

பாராளுமன்றத்தில் கல்வி தொடர்பான விவாதங்களின் போது ஆக்கéர்வமான கருத்துக்களை முன்வைத்தார். கல்வி அமைச்சுடன் தொடர்பினை ஏற்படுத்தி கல்வியாளர் என்ற தகமையில் சிறப்புடன் பேணிவந்தார். இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகத்தை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக திகழ்ந்தவர்.

1979ம் ஆண்டு இந்தியா சென்று கலாநிதி பட்டத்திற்கான ஆய்வினை மேற்கொண்டு "இலங்கையும் தென் ஆசியாவின் பொருளாhதார ஒத்துழைப்பு" என்ற நூலை எழுதினார். பொருளாதார ஒத்துழைப்பிற்கான தென்ஆசியா சம்மேளனம் உதயமாவதந்கு முன் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நூலின் கருத்திற் கொள்ளப்பட்ட வைசார்க் அமைப்பு இலக்குகளாக இருப்பதனால் இந்நூல் சரியான திசையில் எடுக்கப்பட்ட முதல்படி எனக் குறிப்பிடலாம். இந்தப் பின்னணியில் கலாநிதிஆ.தியாகராசாவின் ஆய்வு இருப்பதால் முக்கியத்துவம் பெருகின்றது. திருஆ..தியாகராசா அவர்கள் மிக்க கவனத்தையும் ஆக்க பூர்வமான பரிசீலனைகளையும் விடயங்களின் எல்லா அம்சங்களிலும் செலுத்தினார். கலாநிதிஆ.தியாகராசாவின் புலமைமிக்க அனுகுமுறையும்  அரசியல் அனுபவங்களுடன் இணைந்த செயற்பாடுமிக்க இந்நூல் "பொருளாதார வல்லுனர்களுக்கும் அரசியல் விஞ்ஞானிகளுக்கும் ஆர்வம் ஊட்டுவதாக அமையும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஆடம்பரமற்ற தோற்றமும் கம்பீரமான நடையும் தூய்மையான நெஞ்சும் துணிவுகொண்ட எண்ணம் எடுத்ததை முடிக்கும்ஆற்றல் என்பவற்றை அணிகலனாக் கொண்டு "மக்கள் சேவையே மகேசன் சேவை" என பணியாற்றிய  திரு.தியாகராசா அவர்கள் 1981ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமை வேட்பாளராக யாழ்.மாவட்ட சபை தேர்லில் போட்டியிட்டதால் அவரது உயிர் பறிக்கப்பட்டது. அன்னாரின் பூதவுடல் வலந்தலைச்சந்திக்கு கிழக்கே அன்னாரின் சிந்தனையில் உருவான வேணன் அணைக்கட்டுக்கு மேற்கே மழைநீர் ஏந்தி தேக்கும் பகுதியில் சிதை முடப்பட்டு அக்கினியுடன் சங்கமமானார். அப் பகுதியில் எந்தவோர் இடத்திலும் குறிப்பிடதக்க அளவிற்கு புற்கள் முளைத்திருக்கவில்லை ஆனால் அவர் தகனம் செய்யப்பட்ட இடத்தில் புற்கள் முளைத்திருக்கின்றமையை காரைநகர் பொன்னாலை தாம்போதிய வழியேசெல்லும் மக்கள் பார்க்கக்கூடியதாக உள்ளது. இது பூமாதேவி தன் உத்தம புத்திரனை நினைவில் வைத்திருக்கினறமைக்கு சான்றாகும்.

                               "சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் 
                                       சொல்லியவண்ணம் செயல்"

என்ற வள்ளுவரின் வாக்கிற்கு சவால் விடுத்து சொல்லவல்லவனும் சொன்னதைச் செய்பவனும் யான் என்பதை பறைசாத்தியவர் ஆவார். அமரர் தியாகராசா அவர்களை "வரலாற்று அதிபர்" எனவும் அழைக்கப்பட்டார். இன்றும் அவரது சேவையை நினைவுகூறும் முகமாகவும் பாராட்டும் முகமாகவும் நன்றிகூறும் முகமாகவும் அவரது கல்லூரிக்கு அவரது பெயரை அழைக்கின்றனர். அமரர் திரு.தியாகராசா அவர்கள் இறையடி சேர்ந்தாலும் அவர் எமது ஊருக்காக ஆற்றிய சேவை மறக்கமுடியாதவொன்றாகும்.

 

 

 

                                                                       

 

 

அமரர்.கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் 100 வது பிறந்த நாள் (17.04.2016) சிறப்புக் கட்டுரை–1

   Dr.A.Thiagarajah3

அமரர்.கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் 100 வது பிறந்த நாள் (17.04.2016) சிறப்புக் கட்டுரை–1

காரை மாதாவின் மைந்தர்களில் மாணிக்கமாகத் திகழ்பவரும், புகழ் பெற்ற நல்லாசிரியரும், வெள்ளி விழா அதிபராகத் தான் சேவையாற்றிய பாடசாலையாகிய காரைநகர் இந்துக் கல்லூரியை உயர்நிலைக்கு உயர்த்திய சிற்பியும் தணியாத ஊர்ப்பற்றுடன் தீர்க்க தரிசனச் சிந்தனையுடன் அரசியல் என்னும் ஆயுதம் கொண்டு தன் உடல், பொருள், ஆவி அத்தனையையும் தியாகம் செய்து காரை மண்ணில் அளப்பரிய அபிவிருத்தி செய்தவருமாகிய அமரர்.கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் 100 ஆவது பிறந்த நாள் இன்று 17.04.2016 ஆகும். 

தான் சேவை செய்த கல்லூரியின் காலத்தை மட்டுமல்ல தன் ஊரின் காலத்தையும் பொற்காலமாக்கிய காலத்தால் அழிக்கப்பட முடியாத தியாகச் செம்மல் அமரர்.கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்து வாழ்த்தி வணங்க வேண்டியது காரைநகர் மக்களின் கடமையாகும்.  

அந்தவகையில், இந்நாளையொட்டி " நானறிந்த காரைநகர்ப் பெரியார் கலாநிதி.ஆ.தியாகராசா ஆவார் " என்ற கட்டுரை இங்கே எடுத்துவரப்படுகின்றது.  

செல்வன் விநோதன் கனகலிங்கம் எழுதிய இக்கட்டுரை 2014ம் ஆண்டில்  சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையால்  காரைச் சிறார்களிடையே நடத்தப்பட்ட அனைத்துலகக் கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

 

 

                             நானறிந்த காரைநகர்ப் பெரியார் 

                     கலாநிதி ஆ.தியாகராசா ஆவார்.

 

"இந்து சமுத்திரத்தின் முத்து" எனவும்,"தெட்சணகைலாயம்" எனவும், திருமந்திரத்தை அருளிய திருமூலரால் "சிவபூமி" எனவும் போற்றப்படுகின்ற இலங்கை திருநாட்டின் வடமாகாணத்தின் சிகரமாய் செந்தமிழ் பேணி சிவநெறி காக்கும் பண்பாட்டின் உறைவிடமாய் அமையப்பெற்ற குடாநாடே யாழ்ப்பாணம். அதன் வடமேற்குத் திசையிலே பதின்நான்கு மைல் தொலைவில் எண்திசை புகழும் அருளும் நிறைந்த சௌந்தலாம்பிகை சமேத சுந்தரேஸ்வரப்பெருமான் குடிகொண்ட ஈழத்துச்சிதம்பரம் என்னும் திவ்வியசேத்திரம் இனிதே அமைந்து சுந்தர ஈசனின் திருவருட்கடாட்சம் இனிதே பொழிய நல்லருள் அதனால் நலம் பல பெற்று வளம் பல கொழிக்கும் திருநிறை கொண்ட கவின் பெறும் ஊர் காரைநகர் ஆகும். இத்தகைய சிறப்பு மிக்க ஊரிலே நானறிந்தபெரியார்களுள் ஒருவர் கலாநிதி .ஆ.தியாகராசா ஆவார்.

இவர் பிரிட்டிஷ் மலாயாவில் புகையிரதப்பாதை இடப்பட்ட பொழுது அதன் சமிக்ஞைப் பொறியமைப்பை நிர்மாணித்த திரு. ஆறுமுகம் என்பவருக்கும் அமிர்தவல்லிக்கும் கனிஷ்ட புத்திரனாக 1916 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 17 ஆந் திகதி முக்காலமும் நன்கு உணர்ந்த ஞானியான திருவள்ளுவரின்

                     "தோன்றில் புகழோடு தோன்றுக அஃ(து) இலார்
                              தோன்றலின் தோன்றாமை நன்று."   

என்ற ஈரடி வாக்குக்கு இணங்க புகழோடு மலேசியாவில் பிறந்தவரே பெரியார் கலாநிதி ஆ. தியாகராசா ஆவார். 

இப் பெரியார் கம்பீரமான ஆடம்பரமற்ற தோற்றத்தையும் கம்பீரமான நடையையும் துணிவு கொண்ட எண்ணத்தையும் தூய்மையான நெஞ்சத்தையும் எடுத்ததை முடிக்கும் ஆற்றலையும் எளிமையான வாழ்வையும் தனது அணிகலன்களாகக் கொண்டிருந்தார். இவர்,

                                "ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
                                       உயிரினும் ஓம்பப்படும்."

என்ற வள்ளுவனின் வாக்குக்கிணங்க ஒழுக்கத்தை தனது உயிரினும் மேலாக நேசித்தார். அத்தோடு "மக்கள் சேவையே மகேசன் சேவை" என்ற அதி உன்னத சிந்தனையுடன் மக்களுக்குப் பணியாற்றிய பெருந்தகை ஆவார்.

    இவர் தனது ஆரம்பக்கல்வியை மலேசியாவிலே ஆரம்பித்து தனது எட்டு வயதிலே இலங்கை வந்து இரண்டு ஆண்டுகள் தனது பேரன் பேர்த்தியுடன் இருந்து யாழ்ப்பாணத்திலே கல்வி கற்றார். இவர் பத்து வயதுச் சிறுவனாக இருக்கும் போது இவரது தந்தையார் இந்தியாவிலுள்ள விஷ்பாரதி பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்வதற்கு அனுப்பிய போது இவருக்கு வயதுக் குறைவு காரணமாக இவர் சென்னை அடையாறு கலாஷேத்திரத்தில் சேர்க்கப்பட்டு கல்வியை பயின்றார்.

    இவர் "தமிழ்ப்பாட்டி" என்று அழைக்கப்படுகின்ற ஒளவைப்பிராட்டியாரால் அருளப்பட்ட கொன்றைவேந்தனில் குறிப்பிடப்பட்டுள்ள "கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி" அதாவது அழிவில்லாத நிலையான பொருள் கல்வி என்பதனை நன்கு உணர்ந்து 1932 இல் சீனியர் பரீட்சையிலும், 1934 இல் இன்ரர்சயன்ஸ் பரீட்சையிலும், 1936 இல் பீ.ஏ பரீட்சையிலும், 1938 இல் எம். ஏ. பரீட்சையிலும் சித்தி பெற்றார். இவர் 1938 இல் எம்.ஏ பட்டம் பெற்ற பின் 1940 ஆம் ஆண்டு வரை சிங்கப்பூர் மருத்துவக் கல்லூரியிலும் கல்வி கற்றார். 1941 இல் எம். லிற் பட்டத்தைப் பெற்று மீண்டும் இலங்கை திரும்பிய இவர் காரை வாழ் மாணவர்களின் கல்விப்புலத்தைமேம்படுத்தும் நோக்கோடு பெரியார் சயம்புவால் 1888 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட காரைநகரின் கலங்கரை விளக்காய் விளங்கும் காரைநகர் இந்துக்கல்லூரியில் ஆசிரியராகக் கடமையேற்றார்.

    இப்பெரியார் 1942 இல் "மனைத்தக்க மாண்புடையாள்" அதாவது மனையறத்திற்கு தகுந்த நற்குண நற்செயல்களை உடையவளான திரு. சிவகுருநாதன் அவர்களின் மகள் மகேஸ்வரியை வாழ்க்கைத் துணைவியாக கொண்டார். இப் பெரியாரின் வெற்றிக்கு பக்கபலமாக இவரது துணைவியார் இருந்தார்.

    பின் 1946 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 16 ஆம் திகதி முத்து சயம்பு,ஈ.கே.சிவசுப்பிரமணியஐயர், சிவத்திரு எஸ். இராமகிருஷ்ணஐயர், திரு பொ.வேலுப்பிள்ளை, திரு ந. கந்தையா, சிவத்திரு அ.சீதாராமஐயர், திரு அ.சரவணமுத்து, சிவத்திரு அ.சீதாராமஐயர், திரு ஏ.கனகசபை ஆகிய இந்துக்கல்லூரியின் அதிபர்களின் வரிசையிலே திரு ஏ.கனகசபை ஓய்வுபெற 11 வது அதிபராக பெரியார் ஆ.தியாகராசா அவர்கள் பொறுப்பேற்றார்.

    இக்காலத்தில் இலவசக்கல்வியின் தந்தையான சீ. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா என்பவரால் பாலர் கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை இலவசக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. காரைநகர் இந்துக்கல்லூரியில் சிரேஷ்ட பாடசாலை சான்றிதழ் வகுப்புக்கள் வரை இருந்தமையினால் ஏனைய பாடசாலைகளில் 5 ஆம் வகுப்புடன் கல்வியை இடைநிறுத்திய மாணவர்கள்; அனைவரும் காரை இந்துக்கல்லூரியில் அனுமதி கோரினார். மாணவர்கள் அனைவரும் நன்கு கற்க வேண்டும் என்ற அவாவுடன் அனைத்து மாணவர்களுக்கும் அனுமதி வழங்கினார். 1915 இல் சாமி பள்ளிக்கூடம் உருவாக்கப்பட்டு 7 ஆம் ஆண்டு வரை ஆங்கில மொழி மூலம் கல்வி வழங்கப்பட்டது. பின்னர் மாணவர் எண்ணிக்கை நன்கு குறைய 1945 இல் இப் பள்ளிக்கூடம் மூடப்பட்டது இதனால் காரைநகர் மேற்குப் பகுதியில் வசித்த மாணவர்களும் இக் கல்லூரிக்கு வருகை தந்தனர். இவ்வாறு வருகை தரும் மாணவர் எண்ணிக்கை அதிகரித்தமை பெரும் சவாலாக இருந்தது. ஏனெனில் மாணவர்களுக்கு அமர்வதற்கு வாங்கோ, மேசையோ, இடவசதியோ இருக்கவில்லை. அத்தோடு கற்பிப்பதற்கும் ஆசிரியர் இருக்கவில்லை. மாணவர்களது கல்வி பாதிக்கப்படக்கூடாது என்ற உயர்ந்த நோக்கோடு ஆறு அறைகளைக் கொண்ட கட்டடத்தைக் கட்டுவித்தார். பெற்றோரின் உதவியுடன் வாங்குமேசைகளையும் இந்துக்கல்லூரி சபையின் அனுசரணையுடனும் கடமை உணர்வு நிறைந்த ஆசிரியர்களையும் பெற்று மாணவர்களின் கல்விக்கு ஆதரவு வழங்கினார்.

    கோபுரம் இல்லாத கோயிலாக பல வித்தைகளைக் கற்பிக்கின்ற பூணூல் அணியாத பல பூசகர்கள் அதி உன்னத அபிஷேக ஆராதனையை அன்றும் இன்றும் நடாத்திக் கொண்டிருக்கின்ற இந்த காரைநகர் இந்துக் கல்லூரிக்கு "திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்" என்ற சிறப்பிற்குரிய திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் அருளிய மாணிக்கவாசகர் மன்னன் குதிரை வாங்கக் கொடுத்த பணத்தை சிவத்தொண்டிற்காக செலவளித்தார். ஆனால் எங்கள் பெரியார் தியாகராசா அவர்கள் தனது வீட்டிலே வேயப்பட்டிருந்த ஓட்டைக் கழற்றி வந்து இந்தக் கோபுரம் இல்லாத கோவிலின் ஓட்டைகளை எல்லாம் வேய்ந்தார்.

    சாமி பள்ளிக்கூடம் (அமெரிக்கன் மிஷன் பாடசாலை) மூடப்பட்டதன் காரணமாக காரைநகர் மேற்குப்பகுதி மாணவர்களின் நலன் கருதி சைவ பாடசாலையை நிறுவவேண்டும் என காரைநகர் மேற்கைச் சேர்ந்த பெற்றோர்கள், கல்வியாளர்கள், வர்த்தகப் பிரமுகர்கள் ஆகியோர் தீர்மானித்தனர். இப் பாடசாலையை ஆரம்பிப்பதற்கான ஓர் ஆலோசனைக் கூட்டம் திரு தியாகராசாவின் தலைமையில் அவர் இல்லத்தில் நடைபெற்றது என்றால் மிகையாகாது. பாடசாலையைத் தாமதமின்றி ஆரம்பிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. அதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன.

    பின்னர் பெரியார் ஆ.தியாகராசா அவர்களை யாழ்ற்றன் கல்லூரி அதிபராக பதவி ஏற்குமாறு பலர் வற்புறுத்தியும் 

                              "எண்ணிய எண்ணியாங்(கு) எய்துப எண்ணியார்
                                    திண்ணியர் ஆகப் பெறின்"

என்ற வள்ளுவரின் வாக்குக்கு இணங்க தான் பொறுப்பேற்ற காரைநகர் இந்துக்கல்லூரியை உயர்த்த வேண்டும் என்ற அதி உன்னத நோக்கோடு அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்தார். இவரது காலத்திலே உயர்நீதிமன்ற நீதிபதி உயர்திரு ந.நடராஜா அவர்களின் ஞாபகார்த்தமாக அவரது துணைவியார் தங்கம்மா நடராஜா அவர்களால் அறுபதினாயிரம் ரூபாய் செலவில் நடராஜா ஞாபகார்த்த மண்டபம் அமைக்கப்பட்டு 19ஆம் திகதி ஆவணி மாதம் 1950 ஆண்டில் கௌரவ நீதி அமைச்சர் கலாநிதி ராஜபக்ஸ அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

அடுத்து இப் பெரியார் திருமதி தங்கம்மா நடராஜா என்பவரிடமிருந்து பாடசாலைக்கு பின்புறம் இருந்த காணியை தர்ம ஆதீனமாகப் பெற்று விளையாட்டு மைதானத்தை அமைத்தார். இரசாயனம், பௌதீகம், விலங்கியல், உயிரியல் ஆகிய பாடங்களுக்கான தனித்தனி ஆய்வுகூடங்கள் அமைத்தார் மற்றும் இவரது காலத்தில் மனையியல் ஆய்வுகூடம், புதிய நூலகம், புவியியல் அறை என்பன உருவாக்கப்பட்டன. பின்னர் 1942 இல் "காரைநகர் இந்துக் கல்லூரி"என்ற பெயரிலே சஞ்சிகை வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1953, 1956, 1959 ம்ஆண்டுகளில் "சயம்பு" என்ற கல்லூரி சஞ்சிகை வெளியிடப்பட்டது மற்றும் கல்லூரியின் வைரவிழா, பவளவிழா, முத்துவிழா என்பன இவரது காலத்திலே கொண்டாடப்பட்டன. இப் பெரியார் மலேசியா சென்று பழைய மாணவர்களிடம் நிதி சேகரித்து "சயம்பு ஞாபகார்த்த" கட்டடத்தை அமைத்தார். பின் இதன் மேற்குப்புறத்தில் "சியவச" நூல் நிலையத்தை அமைக்க அரசினால் வழங்கிய நிதியை விட மேலதிக நிதி தேவைப்பட்ட பொழுது நன்கொடையாளரிடம் பெற்று நூல்நிலையத்தையும் அதனோடு சேர்ந்த வகுப்பறைத் தொகுதியையும் அமைத்தார். இவர் உயர்தர வகுப்புக்களை ஆரம்பித்து கல்லூரியின் தரத்தை சிறப்புத் தரத்துக்கு (1AB) உயர்த்தினார்.

    இவர் கல்விப் போதனையில் பண்புடனும் பணிவுடனும் செயற்பட்டு தன் உயிரை விட மேலாக ஒழுக்கத்தை மதித்து ஒழுக்கம் மிக்க மாணவரை உருவாக்குவதில் அல்லும் பகலும் உழைத்தார். இவர் இருபத்தைந்து ஆண்டுகள் காரை இந்துவின் வெள்ளி விழா கண்ட அதிபராக இருந்து திறமை மிக்க உதாரண புருஷராக நிருவாகத்தை நடாத்தி மாணவர் சமுதாயம் சீரிய எதிர்காலத்தை எதிர்கொள்ள கலங்கரை விளக்கானார். இவர் சிறப்புத்தர பதவியில் உயர்நிலை சம்பளம், ஓய்வூதியம் என்பவற்றுக்கு காத்திராது 02.04.1970 இல் ஓய்வு பெற்று மக்கள் பணி ஆற்ற ஆரம்பித்தார். 

இவர் வட்டுக்கோட்டைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார். இவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் காரை மண் புதுப் பொலிவு பெற்று விளங்கியது எனலாம். மின்சாரம், குழாய்நீர்த்திட்டம், நன்னீர்மயமாக்கல், வேணன் அணைக்கட்டு போன்ற பல திட்டங்களை நிறைவேற்றினார். வட்டுக்கோட்டைத் தொகுதியின் பாடசாலை அதிபர்களுடன் பகிர்ந்து தரமான கல்வி அபிவிருத்தியில் அக்கறை செலுத்தினார். அனைத்து நியமனங்களின் போதும் விசேடமாக கல்வி ஆளணி நியமனங்களின் போது கிடைக்க வேண்டிய இடங்களை தவறாது கிடைக்க இடைவிடாது முயன்று பொருத்தமானவர்கள் நியமனம் பெற ஆவன செய்தார். பாராளுமன்றத்தில் கல்வி தொடர்பான விவாதங்களின் போது ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்தார். இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகத்தை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக இருந்தார். இப் பல்கலைக்கழகம் 1974 இல் பரமேஸ்வராக் கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டது. இவரின் வேண்டுகோளுக்கு இணங்க யாழ்ப்பாணகல்லூரியில் விஞ்ஞான பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கு யாழ்ப்பாண வளாகத்தின் இன்னொரு பிரிவை ஆரம்பித்தது.

    இப்பெரியார் 1979 ஆம் ஆண்டு இந்தியா சென்று கலாநிதி பட்டத்திற்கான ஆய்வினை மேற்கொண்டு "இலங்கையும் தென் ஆசியாவின் பொருளாதார ஒத்துழைப்பு" என்ற நூலை எழுதினார். இந்நூலுக்கு முகவுரை எழுதிய யாழ்ப்பாண பல்கலைக்கழக பொருளியல் துறை தலைவர் "கலாநிதி தியாகராசாஇந்த நூலில் இலங்கையின் பொருளாதார பிரச்சனைகளை பிராந்திய ரீதியான பார்வையில் பகுப்பாய்வு செய்துள்ளார். பொருளாதார ஒத்துழைப்பிற்கான தென் ஆசியா சம்மேளனம் (SAARC)உதயமாவதற்கு முன் இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந் நூலில் கருத்திற் கொள்ளப்பட்டவை சார்க் அமைப்பு இலக்குகளாக இருப்பதனால் இந்நூல் சரியான திசையில் எடுக்கப்பட்ட முதல்படி எனக் குறிப்பிடலாம். இந்தப் பின்னணியில் கலாநிதி தியாகராசாவின் ஆய்வு இருப்பதால் முக்கியத்துவம் பெறுகின்றது. அவர் மிகக் கவனத்தையும் ஆக்கபூர்வமான பரிசீலனைகளையும் விடயத்தின் எல்லா அம்சங்களிலும் செலுத்தியுள்ளார். கலாநிதி தியாகராசாவின் புலமை மிக்க அணுகுமுறையும், அரசியல் அனுபவங்களுடன் இணைந்த செயற்பாடு மிக்க இந்நூல் பொருளாதார வல்லுனர்களுக்கும் அரசியல் விஞ்ஞானிகளுக்கும் ஆர்வம் ஊட்டுவதாக அமையும்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து இவரது திறமை வெளிப்படுகிறது.

    இவ்வுலகமானது நேற்று உண்டு, உடுத்தி, களித்து, மகிழ்ந்து வாழ்ந்தவர் இன்றில்லை என்னும் பெருமையுடையது. இவ்வுலக வாழ்க்கை நீர்க்குமிழி போன்று நிலையற்றது. இதனை,

                       "நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும்
                                  பெருமையுடைத்து இவ்வுலகு"

என்று பொய்யாமொழிப் புலவர் வாக்கு கூறுகிறது. விதியை யார் தான் வெல்ல முடியும். பிறப்பு உண்டேல் இறப்பு நிச்சயம் என்பது உலக நியதியாகும். "எல்லாம் எப்பவோ முடிந்த காரியம்" என்று ஈழத்துச் சித்தரில் ஒருவரான யோகர் சுவாமிகள் கூறுகின்றார். இவ்வாறான உலக வாழ்க்கையிலே காரை மண்ணிற்கு சேவை ஆற்றிக் கொண்டிருந்த போது 1981 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை வேட்பாளராக யாழ் மாவட்ட சபைத் தேர்தலில் போட்டியிட்ட போது எம் பெரியார் கலாநிதி ஆ.தியாகராசாவின் உயிர் பறிக்கப்பட்டது. இவர் ஆற்றிய சேவையால்,

                       "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
                           தெய்வத்துள் வைக்கப்படும்"

என்ற வள்ளுவனின் வாக்குக்கு இணங்க மறைந்தும் காரை வாழ் மக்களின் மனங்களிலே மறையாமல் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்.