Tag: காரைச் செய்திகள்

காரைநகர் இந்துக் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்ற வெற்றியாளர்கள் தின விழா(Winners Day)

காரைநகர் இந்துக் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்ற வெற்றியாளர்கள் தின விழா(Winners Day) 

காரைநகர் இந்துக் கல்லூரியில் தேசிய மட்டத்தில் சாதனைப் பதிவுகளை ஏற்படுத்திய வெற்றியாளர்களைப் பாராட்டி மதிப்பளிக்கும் வகையில் நடைபெற்ற வெற்றியாளர் தினம் நேற்று புதன்கிழமை (23.03.2016) அன்று யாழ் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாரும் பழைய மாணவியுமாகிய திருமதி.வீரமங்கை யோகரத்தினம் அவர்களின் தலைமையில் கல்லூரியின் நடராசா ஞாபாகார்த்த மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. 

 

1 2 3 4 5 6 7 8 9 10

காரை இந்துக் கல்லூரி க.பொ.த (சா-த) பரீட்சையில் முதன்மைப் பெறுபேறு 7 A 1 B 1C !

காரை இந்துக் கல்லூரி க.பொ.த (சா-த) பரீட்சையில் முதன்மைப் பெறுபேறு 7 A 1 B 1C !


கடந்த டிசம்பர் மாதம் 2015 இல் நடைபெற்ற க.பொ.த.(சாதாரணம்)பரீட்சைப் பெறுபேறுகள் அண்மையில் வெளிவந்துள்ளன.


மேற்படி பரீட்சைப் பெறுபேறுகளில் காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து தோற்றி மிகச் சிறந்த  7 A, 1 B, 1C என்ற பெறுபேற்றினை பெற்ற மாணவி செல்வி குலமதி பாலேந்திரா காரைநகர் கோட்டத்தில் முதல்நிலை மாணவி என்ற பெருமை கொண்டு விளங்குகிறார்.

இந்துக் கல்லூரியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சித்தியெய்திய முதல் ஆறு மாணவர்களின் பெயர் விபரமும் அவர்கள் பெற்றுக்கொண்ட தர விபரமும் கீழே தரப்பட்டுள்ளன.

மாணவர் பெயர்                   பெறுபேறு

1.    குலமதி பாலேந்திரா      7 A, 1 B, 1C

2.    எஸ்.கிருஷ்ணா                3 A 4B  1 S

3.    எஸ்.கஜந்தன்                    3A, 3B 2 C 1 S

4.    கே.பிரியா                         3A 3B 2C 1 S

5.    கே.சிவதர்சன்                  3 A 2B 3 C 1S

6.    கே.சுகந்தினி                    3 A 3 C 2S


பரீட்சைக்குத் தோற்றிய 65 மாணவர்களில் 41 மாணவர்கள் சித்தியெய்தி (63.1%) க.பொ.த உயர்தர வகுப்பில் கற்பதற்கு தகமை அடைந்துள்ளனர்.

சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்த மாணவச் செல்வங்களையும் அவர்களைக் கற்பித்த ஆசிரியமணிகளையும் ஆதாராமாக இருந்து வழிநடத்திவரும் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன், பதில்-அதிபர் திருமதி.கலாநிதி சிவநேசன் ஆகியோரையும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகின்றது.

தீவகக் கல்வி வலயத்தில் 2015 ஆம் ஆண்டிற்கான க.பொ.த (சாதாரண தரம்) பரீட்சையில் யாழ்ற்ரன் கல்லூரி சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளது

தீவகக் கல்வி வலயத்தில் 2015 ஆம் ஆண்டிற்கான க.பொ.த (சாதாரண தரம்) பரீட்சையில் யாழ்ற்ரன் கல்லூரி சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளது

 

    5A உம், அதற்குக் கூடிய A சித்திகளைப் பெற்ற மாணவர்கள்


1.    சுரேஸ்குமார் கஜந்தன்               7A   2C

2.    ரொபின்சியா தேவலிங்கம்       6A   2B   1C

3.    இரட்ணராசா பத்மலோஜன்      5A   3B   1C

4.    பிரதீபா சத்தியமூர்த்தி                5A   2B   2C

YARLTON

 

 

 

 

 

 

 

 

 

 

ஏனைய சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள்


1.    ரோகினி சண்முகரட்ணம்            4A   4B   1S

2.    கிர்சிகா மோகநாதன்                     3A   3B   1C   1S   1W

3.    சிவகுமார் செந்தூரன்                     3A   2B   3C   1W

4.    சிற்சபேசன் சுகந்தன்                      3A   1B   4C   1W

5.    கேதீஸ்வரன் டிசாந்தன்                   3A   1B   2C   2S   1W

6.    சிவகுமார் நவநீதன்                          2A   3B   3C   1S

7.    ஸ்ரீஸ்குமார் சிவரஞ்சன்                    2A   2B   1C   3S   1W

8.    நிரோஜினி சோதிலிங்கம்               2A   2B   1C   3S   1W

9.    துவாரகா பரமேஸ்வரன்                  2A   1B   3C   2S   1W

YARLTON

மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் 6ம் திருவிழா அறிவித்தல்

மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் 6ம் திருவிழா நேரடி ஒளிபரப்பு 29-03-2016 செவ்வாய்க்கிழமை www.karainagar.com இல் எடுத்துவரப்படும்

Notic 2 (1)

தேசிய உற்பத்தித் திறன் போட்டியில் சிறப்புத் தகமைச் சான்றிதழ் பெற்று காரைநகர் இந்துக் கல்லூரி சாதனை

தேசிய உற்பத்தித் திறன் போட்டியில் சிறப்புத் தகமைச் சான்றிதழ் பெற்று காரைநகர் இந்துக் கல்லூரி சாதனை

அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் நடத்தப்பட்ட தேசிய உற்பத்தித் திறன் –2014 ஆண்டுக்கான தேசிய ரீதியிலான போட்டியில் பங்குபற்றி சிறப்புத் தகமை விருதினை பெற்ற வடமாகாணத்தின் ஒரே ஒரு பாடசாலையாக காரை இந்துக் கல்லூரி விளங்குகின்றது.

இச்சான்றிதழைப் பெற்றதன் மூலம் வடமாகாணத்தில் வெற்றிபெற்ற ஒரே பாடசாலை என்ற பெருமையைப் பெற்று விளங்குவதுடன் பல நகர்ப்புறப் பாடசாலைகளையும் பின்தள்ளி இவ்வெற்றியைப் பெற்றமை குறித்து கல்லூரி அதிபர் தமது மகிழ்ச்சியினை தெரிவித்தார். 

கல்விச் செயற்பாடுகள், இணைப்பாடவிதானச் செயற்பாடுகள், கற்றலை மேற்கொள்வதற்கான சூழல், பாதுகாப்பான சூழல், சமூகத்திற்கும் பாடசாலைக்குமிடையேயான உறவு,பாடசாலைச் சுவர்களில் அறிவு சார்ந்த வாக்கியங்கள் எழுதப்பட்டிருந்தமை, பாடசாலைத் தோட்டம் உள்ளிட்ட பசுமைப் புரட்சி, சிற்றுண்டிச்சாலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களிற்கும் புள்ளிகள் வழங்கப்பட்டு வெற்றிபெற்ற பாடசாலைகள் தீர்மானிக்கப்பட்டிருந்தன.  

இவ்வெற்றியைப் பெறுவதற்கு மூலகாரணமாக விளங்கி சிறப்பான முறையில் பாடசாலையை நிர்வகித்து வருகின்ற அதிபர் திருமதி வாசுகி தவபாலன் அவர்களையும் அவருடன் இணைந்து பணியாற்றுகின்ற ஆசிரியர்களையும் பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை பாராட்டி வாழ்த்துகின்றது.  

அண்மையில் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் அதிபருடன் இணைந்து ஆசிரியை திருமதி தயாளினி ஜெயகுமார் அவர்களும் சிறப்புத் தகமைச் சான்றிதழை பெற்றக்கொண்டார். 

நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம். 

20160218_093905 photo 20160218_112236 20160218_111858 20160218_111745 20160218_111716 20160218_102024 20160218_102004

திக்கரை திருச்செந்தூரன் முன்பள்ளி விளையாட்டு விழா இன்று 22.03.2016 நடைபெற்றது.

காரைநகர் ஈழத்துச்சிதம்பரத்தில் இன்று 22.03.2016 இடம்பெற்ற தேர்த்திருவிழா காட்சிகள் (புதிது )

காரைநகர் ஈழத்துச்சிதம்பரத்தில் இன்று 22.03.2016 இடம்பெற்ற தேர்த்திருவிழா காணொளி

காரைநகர் ஈழத்துச்சிதம்பரத்தில் இன்று 22.03.2016 இடம்பெற்ற தேர்த்திருவிழா காட்சிகள்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12

காரைநகர் இந்துக் கல்லூரி வெற்றியாளர்கள் தின விழாவிற்கு(Winners Day) பழைய மாணவர் சங்க கனடா கிளை வாழ்த்து

காரைநகர் இந்துக் கல்லூரி வெற்றியாளர்கள் தின விழாவிற்கு(Winners Day) பழைய மாணவர் சங்க கனடா கிளை வாழ்த்து

கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள்,மற்றும் பாடசாலைச் சமூகம் என்பன தனித்தும் ஒருங்கிணைந்தும் முன்னெடுத்து வருகின்ற பல செயற்பாடுகள் பல்வேறு சாதனைப் பதிவுகளை  நிலைநாட்டி வருவதன் ஊடாக பாடசாலையின் புகழை மேலோங்க வைத்து வருவது பேருவகைகொள்ளவைக்கின்றது. 

அண்மைக் காலத்தில் பாடசாலையினால் ஏற்படுத்தப்பட்ட சாதனைகளில் நாடளாவிய ரீதியில் நடாத்தபட்டிருந்த தேசிய உற்பத்தித் திறன் போட்டியில் சிறப்புத் தகமை விருதினைப் பெற்றுக் கொண்ட வடமாகாணத்தின் ஒரே பாடசாலை என்ற பெருமையை எமது பாடசாலை பெற்றுக்கொண்டமை வரலாற்றுப் பதிவானதாகும். 

இச்சாதனையை மையப்படுத்தியும் தேசிய தரவலயப் போட்டியில் வெற்றி பெற்றமை, பல்வேறு போட்டிகளிலும் மாகாண மட்டத்தில் வெற்றிபெற்று தேசிய மட்டத்தில் பங்குகொண்டதுடன் கிராமிய நடனத்தில் மூன்றாம் இடத்தினை பெற்றுக்கொண்டமை, பல மாணவர்கள் க.பொ.த(உயர்தரம்) பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக்கழகம் செல்லும் தகமையினைப் பெற்றமை ஆகிய சாதனைப் பதிவுகளை ஏற்படுத்திய சாதனையாளர்களையும் பாடசாலையையும் பாராட்டி மதிப்பளிக்கும் வகையிலும் மேலும் பல சாதனைப் பதிவுகளை ஏற்படுத்த ஊக்கிவிக்கும் வகையிலும் பாடசாலைச் சமூகத்தினால் எதிர்வரும் 23ஆம் திகதி புதன்கிழமை நடைபெற ஒழுங்கமைக்கப்பட்டுள்ள வெற்றியாளர்கள் தின விழா அனைத்துவகையிலும் நிறைவுபெற்று விளங்க பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை வாழ்த்துவதுடன் இதனை ஒழுங்கமைத்த பாடசாலைச் சமூகத்தை பாராட்டி நன்றி கூறுகின்றது.

 

யா/சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் வாழ்த்துச்செய்தி

SMN OSA Internet Message

யா/சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலய க.பொ.த.(சாதாரணம்) – 2015 பரீட்சைப் பெறுபேறுகள்

SM.VID_

காரைநகர் கோட்டமட்ட செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு இன்று 21.03.2016 நடைபெற்றது

 காரைநகர் கோட்டமட்ட செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு இன்று 21.03.2016  நடைபெற்றது.

இந்நிகழ்வு காரைநகர் கோட்டக்கல்விப்பணிப்பாளர் திரு.ஆ.குமரேசமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வலய கல்வி அபிவிருத்தி பிரதிக்கல்விப்பணிப்பாளர், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வின் காரைநகர் கோட்ட மட்ட முடிவுகள்
தரம் 3.
1 ம் இடம் யாழ்ற்ரன் கல்லூரி
2ம் இடம் ஆயிலி சிவனோதயா
3 ம் இடம் காரை ஊரி அமிதக பாடசாலை
தரம் 4
1ம் இடம் காரை ஊரி அமிதக வித்தி
2ம் இடம் வலந்தலை வடக்கு
3ம் இடம் காரை மெய்கண்டான்
தரம் 5
1ம் இடம் காரைஊரி அமிதக வித்தி
2ம் இடம் காரை மெய்கண்டான்
3ம் இடம் வலந்தலை வடக்கு

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26

 

காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் பங்குனி மாத மகோற்சவ 7ம் நாள் வேட்டைத்திருவிழா 20-03-2016 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காட்சிகள்

1 2 3 4 5 6 7 8 9 10 11

J/Karainagar Hindu College Winners’ Day – 2016 Invitation

20160313_13045320160313_130515

காரைநகர் கோட்டத்தில் காரைநகர் இந்துக் கல்லூரி மாணவி முதன்மைச் சித்தி பெற்று சாதனை

காரைநகர் கோட்டத்தில் காரைநகர் இந்துக் கல்லூரி மாணவி முதன்மைச் சித்தி பெற்று சாதனை

kulamathi
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த.(சாதாரணம்) – 2015 பரீட்சைப் பெறுபேறுகள் அலுவலகப்பற்றற்ற முறையில் தற்போது வெளிவந்து கொண்டுள்ள நிலையில் காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து இப்பரீட்சைக்கு தோற்றிய செல்வி குலமதி பாலேந்திரா 7A B C என்ற பெறுபேற்றினைப் பெற்று காரைநகர் கல்விக் கோட்டத்தில் முதன்மை மாணவி என்ற பெருமையைப் பெற்றுக் கொண்டுள்ளார்.


செல்வி குலமதி பாலேந்திரா சென்ற ஆண்டு நடைபெற்ற பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் பொதுத் தகமைத் தேர்ச்சிக்கான விருதினைப் பெற்றுக் கொண்டவர் என்பதுடன் இவ்விருதினை இவருக்கு வழங்குவதற்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளை நிதி அநுசரணை வழங்கியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 


காரைநகர் கோட்டத்தில் முதன்மைப் பெறுபேறு பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்த மாணவி செல்வி. குலமதி பாலேந்திரா அவர்களையும் பாடசாலை அதிபர், ஆசிரியர்களையும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளை பராட்டி வாழ்த்துகின்றது.

 

காரை அபிவிருத்தி சபையினரால் மாணவர் நூலகத்தில் இன்று 20.03.2016 சிறுவர்களுக்கான கணனிப்பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

IMG_5402

காரை அபிவிருத்தி சபையினரால் மாணவர் நூலகத்தில் இன்று 20.03.2016 சிறுவர்களுக்கான கணனிப்பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கான கணனிகளை லண்டன் காரை நலன்புரிச்சங்க முன்னாள் செயலாளர் திரு.சிவபாதசுந்தரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG_5395 IMG_5396 IMG_5397 IMG_5400 IMG_5402 IMG_5404 IMG_5406 IMG_5408 IMG_5416 IMG_5418 IMG_5437 IMG_5443

 

திக்கரை திருச்செந்தூரன் முன்பள்ளி விளையாட்டு விழா 2016

karanagar(1)karanagar 2karanagar 3

காரை அபிவிருத்திச்சபையினரால் வறிய மக்களுக்கான கண் அறுவைசிகிச்சைக்காக தெரிவு செய்யப்பட்ட 40 பயனாளர்களுக்கு உதவும் பொருட்டு 18.03.2016 காரை அபிவிருத்திச்சபையினரால் பயனாளிகளுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது.

காரை அபிவிருத்திச்சபையினரால் வறிய மக்களுக்கான கண் அறுவைசிகிச்சைக்காக தெரிவு செய்யப்பட்ட 40 பயனாளர்களுக்கு உதவும் பொருட்டு  18.03.2016 காரை அபிவிருத்திசபையினரால் பயனாளிகளுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது. இவர்களுக்கான உதவியை  சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையினர்  அனுசரணை வழங்க முன் வந்திருப்பதை காரை வாழ் மக்கள் பெரிதும் பாராட்டியுள்ளனர்

1 2 3 4 5

அவுஸ்ரேலியா காரை கலாசார மன்றம் காரைநகரில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள நூலகங்களுக்கான புத்தகங்களைக் கொள்வனவு செய்வதற்கான நிதியினைக் காரைநகர் அபிவிருத்திச் சபையின் ஊடாக வழங்கி உள்ளது.

அவுஸ்ரேலியா காரை கலாசார மன்றம் காரைநகரில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள நூலகங்களுக்கான புத்தகங்களைக் கொள்வனவு செய்வதற்கான நிதியினைக் காரைநகர் அபிவிருத்திச் சபையின் ஊடாக வழங்கி உள்ளது.


இந்த நிதி கையளிக்கும் நிகழ்வு 18.03.2016 மாலை 2.30 மணியளவில் காரைநகர் அபிவிருத்திச் சபை நூலகத்தில் காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவர் ப. விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் காரைநகர் பாடசாலை அதிபர்கள்,காரைநகர் அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள்,காரைநகர் பிரதேச சபைச் செயலாளர் பகீரதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


யாழ்ரன் கல்லூரி,இந்துக் கல்லூரி ஆகியவற்றிற்கு தலா முப்பத்தையாயிரம் ரூபா வீதமும்,சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலை,வியாவில் சைவ வித்தியாலயம் என்பவற்றிற்கு தலா இருபதாயிரம் ரூபா வீதமும் ஏனைய ஆரம்பப் பாடசாலைகளுக்குத் தலா பத்தாயிரம் ரூபா வீதமும் பாடசாலை அதிபர்களிடம் காசோலை  கையளிக்கப்பட்டது.


மாணவர்களின் மேலதிக கற்றல் செயற்பாட்டிற்கான நூல்கள் பாடசாலை அதிபர்களினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்காக புத்தக நிறுவனங்களுக்கு இந்தக் காசோலைகள் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.


காலத்தின் தேவையறிந்து பாடசாலைகளின் நூலகங்களுக்கு நூல்கள் கொள்வனவிற்கு உதவிய அவுஸ்ரேலியக் காரை கலாசார மன்றத்திற்கு காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவர் ப.விக்னேஸ்வரனும் பாடசாலை அதிபர்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.

IMG_5288IMG_5289 IMG_5290 IMG_5293 IMG_5304 IMG_5308 IMG_5314 IMG_5316 IMG_5317 IMG_5319 IMG_5325 IMG_5327 IMG_5346 IMG_5352 IMG_5357 IMG_5359

விஞ்ஞான ஆய்வு கூடப் போட்டியில் யாழ்ற்ரன் கல்லூரி இரண்டாம் இடம்

விஞ்ஞான ஆய்வு கூடப் போட்டியில் யாழ்ற்ரன் கல்லூரி இரண்டாம் இடம்


தீவக கல்வி வலயத்தினரால் நடத்தப்பட்ட(2015ஆம் ஆண்டிற்கான) "சிறந்த முறையில் விஞ்ஞான ஆய்வு கூடங்களைப் பேணுதலும் மாணவர்கள் அதனை உச்சநிலையில் பயன்படுத்தலும்" என்ற போட்டியில் யாழ்ற்ரன் கல்லூரி இரண்டாம் இடத்தினை பெற்றுக் கொண்டுள்ளது. இதற்கான விருதினை 12.03.2016 இல் நடைபெற்ற தீவக வலய விஞ்ஞான தினத்தில் கல்லூரி அதிபரிடம் வழங்கப்பட்டது.

DSC_8039 DSC_8040 DSC_8044 DSC_8045 DSC_8050 DSC_8054 DSC01603

 

காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் பங்குனி மாத மகோற்சவ 4ம் நாள் கைலாசவாகன திருவிழா காட்சிகள்

காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் பங்குனி மாத மகோற்சவ 4ம் திருவிழா காட்சிகள்

காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் பங்குனி மாத மகோற்சவ 3ம் நாள் இரவு திருவிழா காட்சிகள்

காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் பங்குனி மாத மகோற்சவ 3ம் திருவிழா 16.03.2016 நடைபெற்ற காட்சிகள்

காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் பங்குனி மாத மகோற்சவ கொடியேற்றத் திருவிழா 14.03.2016 திங்கட்கிழமை நடைபெற்ற காட்சிகள்

காரைநகா் மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் மங்கலமிகு மன்மதவருட பிரம்மோற்சவ விஞ்ஞாபனம்-2016

FullSizeRender (1)

ஊரி அ.மி.த.க வித்தியாலய செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு 11.03.2016 நடைபெற்றது

FullSizeRender FullSizeRender_1 FullSizeRender_2 FullSizeRender_3 FullSizeRender_4 IMG_5154 IMG_5157 IMG_5170 IMG_5173 IMG_5180 IMG_5202 IMG_5206 IMG_5211

இன்று சிவராத்திரி நிகழ்வுகள் பயிரிக்கூடல் முருகன் கோவிலில் நடைபெற்றது

1இன்று சிவராத்திரி நிகழ்வுகள் பயிரிக்கூடல் முருகன் கோவிலில் நடைபெற்றது. 

இந்துமா மன்றத்தினரின் 64ஆம் ஆண்டின் நிறைவின் நிகழ்வுகளும்,

இசை நிகழ்சிகளும் நடைபெற்றன.  அத்துடன். 5ம் தரம் புலமைப்பரீட்சையில்  சித்தியடைந்த  3 மாணவர்களுக்கு தலா  5000.00ருபா காசோலைகளும் வழங்கப்பட்டன.

ஈழத்துச் சிதம்பரத்தில் மகா சிவராத்திரி வழிபாடு 07.03.2016 திங்கட்கிழமை

SIVAN KOVIL