Tag: காரைச் செய்திகள்

சிவகுமார் ஞாபகார்த்த இலந்தலைச்சாலை சனசமூக நிலையத்தின் புதிய கட்டிட திறப்பு விழா 07.04.2019 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காரைநகர் திக்கரை திருச்செந்தூரன் மற்றும் விளானை ஞானவைரவர் முன்பள்ளிகளின் வருடாந்த மழலைகள் விளையாட்டு விழா 06/04/2019 சனிக்கிழமை அன்று யாழ்/சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

காரைநகர் களபூமி கரப்பிட்டியந்தனை அருள்மிகு ஸ்ரீ கற்பக விக்கினேஸ்வரசுவாமி கோவில் (கிழக்குறோட் தெருவடிப் பிள்ளையார்) பாலஸ்தான திருப்பணி வேண்டுகோள்

 

காரைநகர் களபூமி கரப்பிட்டியந்தனை அருள்மிகு ஸ்ரீ கற்பக விக்கினேஸ்வரசுவாமி கோவில் (கிழக்குறோட் தெருவடிப் பிள்ளையார்) பாலஸ்தான திருப்பணி வேண்டுகோள்

விநாயகப்பெருமான் அடியவர்களே!

பழமையும் புதுமையும் பல அற்புதங்களும் நிறைந்த ஆலயங்களைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் காரைநகர் என்னும் புண்ணிய பூமியில் எம்பெருமானின் ஆலயம் கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்கு பின்னர் இன்று வரை மீள நிகளாது உள்ளது.(16 வருடங்களாக)எனவே இவ் வருடம் 10/04/2019 புதன்கிழமை அன்று பாலஸ்தானம் செய்து விக்கினேஸ்வரப்பெருமான் ஆலயத்தை அருளொளியுடன் புதுப்பொலிவு பெற ச்செய்ய இறைவன் சித்தம் கைகூடியுள்ளது.

 

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 04.04.2019 வியாழக்கிழமை நடைபெற்ற தேர்த் திருவிழா காணொளி!

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இன்று 04.04.2019 வியாழக்கிழமை நடைபெற்ற தேர்த் திருவிழா காட்சிகள்!

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 29.03.2019 வெள்ளிக்கிழமை நடைபெற்ற 8ம் நாள் திருவிழா காணொளி!

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 25.03.2019 திங்கள்கிழமை நடைபெற்ற 4ம் நாள் இரவு திருவிழா காணொளி!

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 29.03.2019 வெள்ளிக்கிழமை நடைபெற்ற 8ம் நாள் திருவிழா காட்சிகள்!

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 25.03.2019 திங்கள்கிழமை நடைபெற்ற 4ம் திருவிழா காணொளி!

காரைநகர் பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான விளையாட்டு விழா 25.03.2019 திங்கட்கிழமை காரைநகர் இந்துக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 25.03.2019 திங்கள்கிழமை நடைபெற்ற 4ம் நாள் இரவு திருவிழா காட்சிகள்!

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இன்று 25.03.2019 திங்கள்கிழமை நடைபெற்ற 4ம் திருவிழா காட்சிகள்!

கனடா காரை கலாசார மன்றத்தின் ஏற்பாட்டில் நூலக நிறுவனப் பிரதிநிதியுடனான கலந்துரையாடல் 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை காரைநகர் அபிவிருத்திச் சபை மாணவர் நூலகத்தில் இடம்பெற்றது.

கனடா காரை கலாசார மன்றத்தின் ஏற்பாட்டில் நூலக நிறுவனப் பிரதிநிதியுடனான கலந்துரையாடல் 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை காரைநகர் அபிவிருத்திச் சபை மாணவர் நூலகத்தில் இடம்பெற்றது.

வரலாறுகளை ஆவணப்படுத்தும் முயற்சியில் காரைநகர் அபிவிருத்திச் சபை

கனடா காரை கலாசார மன்றத்தின் ஏற்பாட்டில் ஈழத்துத் தமிழ் பேசும் எழுத்தாளர்களின் ஆக்கங்கள், புலம்பெயர் நடுகளில் எம்மவர்களால் வெளியிடப்படும் ஆக்கங்கள், மற்றும் இலங்கை தொடர்பான நூல்கள் என்பவற்றை ஆவணப்படுத்தும் நூலக நிறுவனப் பிரதிநிதியுடனான கலந்துரையாடல் ஒன்று 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை காரைநகர் அபிவிருத்திச் சபை மாணவர் நூலகத்தில் இடம்பெற்றது.

காரைநகர் அபிவிருத்திச் சபையின் தலைவர் நா.பாலகிருஸ்ணன் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் கனடா காரை கலாசார மன்றத்தின் தலைவர் பாலச்சந்திரன் சபாரத்தினம், மன்ற முன்னாள் செயலாளரும் உறுப்பினருமான ஜெயச்சந்திரன் தம்பிராசா மற்றும் காரைநகர் அபிவிருத்திச் சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

நூலக நிறுவனத்தின் பிரதிநிதி கு.சோமராஜ் இதில் கலந்து கொண்டு நூலக நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளித்தார்.

இதில் அவர் தெரிவித்ததாவது ஈழத்துத் தமிழ் பேசும் எழுத்தாளர்களின் ஆக்கங்கள், புலம்பெயர் நடுகளில் எம்மவர்களால் வெளியிடப்படும் ஆக்கங்கள், மற்றும் இலங்கை தொடர்பான நூல்கள் என்பவற்றை ஆவணப்படுத்தும் முயற்சியில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் இதுவரை அறுபதாயித்திற்கம் மேற்பட்ட இவ்வாறான நூல்களைத் தாம் ஆவணப்படுத்தி உள்ளதாகவும் அவை அனைத்தும் நூலக இணையத்தளத்தில் பார்வையிட முடியும் எனவும்

நூலகங்களுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தே இந்தச் சேவையப் பெறுவதுடன் உலகின் எப்பாகத்தில் இருந்தும் இந்ந நூலகத்தில் உள்ள புத்தகங்களைப் பார்வையிட முடியும்.

கடந்த 2005ம் ஆண்டு தொண்டு அடிப்படையில் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டது இன்று 15 ஆண்டுகளைக் கடந்தும் எமது சேவை சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. நூல்கள் காலத்தால் அழியாதவாறு மூன்று முறைகளில் ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றது. அத்துடன் வாய்மொழி மூல வரலாறுகளையும் ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம்.

80 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்கள். அறிஞர்கள் ஆகியோரின் வரலாறுகள் அதன் ஊடாக மொழி, கலை, கலாசாரம், பண்பாடு, பழமை என்பன ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றது.

அது மட்டுமன்றி நீத்தார் நினைவாக வெளியிடப்படும் கல்வெட்டுக்களும் அவற்றுள் காணப்படும் அரிய கட்டுரைகள், விடயங்கள் என்பன மற்றும் ஒவ்வொருவருடைய பரம்பரை என்பவற்றையும் அனைவரும் அறிந்துகொள்ள கூடியவாறு அவையும் ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன.

காரைநகரிலும் பல்வேறு இடங்களில் உள்ள மிகப் பழைய ஓலைச் சுவடிகள், வரலாற்று நூல்கள், மிகப் பழைய நூல்கள் என்பன வற்றையும் வாய்மொழி மூல வரலாறுகளையும் ஆவணப்படுத்தி உள்ளோம். தொடர்ந்தும் இம்முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம் இதற்கு காரைநகர் மக்களின் ஆதரவும் தேவை அதன் ஊடாக காரைநகர் மக்களின் வாழ்வும் வரலாறும் ஆவணப்படுத்தப்பட்டு அடுத்த சந்ததிக்கு வழங்க முடியும் என்றார்.

நூல்கள், வாய்மொழி வரலாறுகளை ஆவணப்படுத்த விரும்புவோர் கொக்குவில் ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள நூலக நிறுவனத் தலைமைக் காரியாலயத்துடன் தொடர்ப கொள்ள முடியும் அல்லது நூலக நிறவனப் பிரதிநிதி கு.சோமராஜ் அவர்களுடன் அவரது தொலைபேசி இலக்கம் 0773747828 இற்குத் தொடர்பு கொள்ள முடியும்.

இந்த முயற்சிக்கு கனடா காரை கலாசார மன்றமும் தனது ஆதரவை வழங்கி வருவதுடன் ஒரு தொகைப் பணத்தினையும் நூலக நிறுவனத்திற்கு வழங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் காரைநகரில் பழமை வாய்ந்த நூல்கள், கல்வெட்டுக்கள், ஓலைச்சுவடிகள், மற்றும் வாய்மொழி வரலாறுகளை ஆவணப்படுத்தி அடுத்த தலைமுறைக்கு வழங்க விரும்புபவர்கள் ஓய்வுநிலை அதிபர் கலாபூசணம் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் மேற்கொள்ள முடியும்.என அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகர் பிரதேச சமுர்த்தி சங்க ஏற்பாட்டில் மகளிர் தினத்தை முன்னிட்டு உள்ளூர் உற்பத்தியாளர்களின் சந்தைப்படுத்தல் நிகழ்வு 14.03.2019 வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 

காரைநகர் பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான விளையாட்டு விழா நாளை 25.03.2019 திங்கட்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு காரைநகர் இந்துக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற உள்ளது.

 

காரைநகர் பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான விளையாட்டு விழா நாளை 25.03.2019 திங்கட்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு காரைநகர் இந்துக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற உள்ளது.

காரைநகர் பிரதேச செயலர் திருமதி உஷா சுபலிங்கம் தலைமையில் இடம்பெறும் இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கரவெட்டிப் பிரதேச செயலர் ஈ.தயாரூபன் கலந்துகொள்ள உள்ளார்.

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 22.03.2019 வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடியேற்றத் திருவிழா காணொளி!

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இன்று 22.03.2019 வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடியேற்றத் திருவிழா காட்சிகள்!

காரைநகர் திண்ணபுரம் சிவன் ஆலயத்தில் இன்று 20.03.2019 புதன்கிழமை நடைபெற்ற பங்குனி மகோற்சவ தேர்த் திருவிழா காட்சிகள்!

காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் எதிர்வரும் 23/03/2019 சனிக்கிழமை காலை 9:00 மணிக்கு ஈழத்து சைவத்தமிழ் இலக்கியப் பாரம்பரியத்திற்குப் பெரும்புகழ் சேர்த்த காரைநகர் பிரம்மஸ்ரீ கார்த்திகேயப் புலவர் அவர்களின் 200 வது பிறந்த தின நிகழ்வு!

காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் எதிர்வரும் 23/03/2019 சனிக்கிழமை காலை 9:00 மணிக்கு அபிஷேக தீபாராதனையை தொடர்ந்து ஈழத்து சைவத்தமிழ் இலக்கியப் பாரம்பரியத்திற்குப் பெரும்புகழ் சேர்த்த காரைநகர் பிரம்மஸ்ரீ கார்த்திகேயப் புலவர் அவர்களின் 200 வது பிறந்த தின நிகழ்வும். விசேட சொற்பொழிவும் இடம்பெற இருப்பதால் அடியவர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

குறிப்பு :-அன்றைய தினம் அன்னதான நிகழ்வும் இடம்பெறும்.

காரைநகர் திண்ணபுரம் சிவன் ஆலயத்தில் 12.03.2019 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பங்குனி மகோற்சவ கொடியேற்றத் திருவிழா காணொளி!

காரைநகர் திண்ணபுரம் சிவன் ஆலயத்தில் 12.03.2019 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பங்குனி மகோற்சவ கொடியேற்றத் திருவிழா காட்சிகள்!

காரைநகர் அரசினர் வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்பட்ட பேருந்து தரிப்பு நிலையத் திறப்பு விழா காணொளி! (10.03.2019)

காரைநகர் கிழவன்காடு கலாமன்றம் நடத்திய ஸ்தாபகதின நிகழ்வு 01.03.2019 வெள்ளிக்கிழமை நடைபெற்றது!

காரைநகர் மேற்குப் பிரதான வீதியில் அரசினர் வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்பட்ட பேருந்து தரிப்பு நிலையத் திறப்பு விழா 10.03.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது.

காரைநகர் மேற்குப் பிரதான வீதியில் அரசினர் வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்பட்ட பேருந்து தரிப்பு நிலையத் திறப்பு விழா 10.03.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது.

மாவட்ட வைத்திய அதிகாரி வைத்தியக் கலாநிதி க.இரத்தினசிங்கம் அவர்களினால் வைபவ ரீதியாக இந்த பேருந்து தரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது. காரைநகர் அபிவிருத்திச் சபை, மற்றும் காரைநகர் வைத்திய சாலை அபிவிருத்திச் சபை ஆகியவற்றின் தலைவர் நா.பாலகிருஸ்ணன் தலைமையில் இவ் விழா சிறப்பாக இடம்பெற்றது.

அமரத்துவமடைந்த வித்துவான் மு.சபாரத்தினம் அவர்களின் நினைவாக அவரது பிள்ளைகள் காரைநகர் அபிவிருத்திச் சபை ஊடாக காரைநகர் வைத்திய சாலை வளாகத்தில் பல இலட்சம் ரூபா செலவில் இந்த பஸ்தரிப்பு நிலையம் அமைத்திருந்தனர்.

அவரது பிள்ளைகள், உறவினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டதுடன் காரைநகர் கம்பன் கழக அமைப்பாளர் தமிழருவி த.சிவகுமாரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியமை குறிப்பிடத்தக்கது.

 

 

ஈழத்துச் சிதம்பரம் காரைநகர் திண்ணபுரம் சிவன் கோவில் பங்குனி மகோற்சவம் கொடியேற்றத் திருவிழா!

அமரர் வித்துவான் சைவமணி மு.சபாரத்தினம் அவர்களின் நினைவாக பேருந்து தரிப்பு நிலையம் திறப்புவிழா அழைப்பிதழ்

காரைநகா் மணற்காடு ஸ்ரீ முத்துமாாி அம்மன் ஆலய பிரம்மோற்சவ விஞ்ஞாபனம் 2019

திரு பரமானந்தசிவம் கலைக்குமரன் சமுர்த்தி உத்தியோகத்தர் J/42 சேவைநலன் பாராட்டு விழாவும், திருமதி சோமசுந்தரம் அருளாம்பிகை சமுர்த்தி உத்தியோகத்தர் வரவேற்பு நிகழ்வும் 26.02.2019 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது.

காரைநகர் கிழவன்காடு கலாமன்றம் நடத்தும் ஸ்தாபகதின நிகழ்வு 01.03.2019 வெள்ளிக்கிழமை பிற்பகல் 5.00 மணிக்கு நடைபெறவுள்ளது!

ஈழத்துச் சிதம்பரம் காரைநகர் திண்ணபுரம் சிவன் கோவில் விளம்பி வருஷம் 2019ஆம் ஆண்டு பங்குனி மகோற்சவ விஞ்ஞாபனம்!