Category: காரை வசந்தம்

கனடா காரை கலாச்சார மன்றத்தின் 2020ஆம் ஆண்டுக்குரிய நிகழ்வுகள்

கனடா காரை கலாச்சார மன்றத்தின்

2020ஆம் ஆண்டுக்குரிய

நிகழ்வுகள்

 

1. தமிழ்மொழித் திறன்,பண்ணிசைப் போட்டிகள்

    இடம்: Scarborough Civic Centre

    காலம்: June 20, 2020 சனிக்கிழமை

    நேரம்: காலை 8.00 மணிக்கு

 

2. கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டிகளும்

     இடம்: Morningside Park, Area 3,4

     காலம்: July 18, 2020 சனிக்கிழமை

     நேரம்: காலை 8.00 மணிக்கு

 

3. காரை வசந்தம்

    இடம்: தமிழ் இசை கலாமன்ற அரங்கம் (Unit 3- 1120 Tapscott Road,Scarborough)

    காலம்: October 11, 2020 ஞாயிற்றுக்கிழமை

    நேரம்: மாலை 5.00 மணிக்கு

 

4. ஆருத்திரா தரிசனம்

     இடம்: கனடா றிச்மன்ட் பிள்ளையார் ஆலயம் (Richmond Hill Hindu Temple)

     காலம்: December 30, 2020 புதன்கிழமை

     நேரம்: அதிகாலை 4:30 மணிக்கு

 

 

கனடா காரை கலாசார மன்றம் “காரை வசந்தம் 2019”

கனடா காரை கலாசார மன்றம் “காரை வசந்தம் 2019”

கனடா காரை கலாசார மன்றத்தின் காரை வசந்தம் நிகழ்வானது 13.10.2019 அன்று ஸ்காபுரோவில் அமைந்துள்ள தமிழ் இசை கலாமன்ற அரங்கத்தில் நடைபெற்றது. கனடா காரை கலாசார மன்றத்தின் கனடா வாழ் காரைநகர் மக்களின் கலாசார பின்னணிகளை கருத்தில் கொண்டு நடாத்தப்படும் இக்கலை விழாவானது வருடந்தோறும் இலையுதிர் காலத்தில் கனடா வாழ் காரை சிறார்களின் கலைப்படைப்புக்களோடு மேடையேற்றப்படும் விழாவாகும்.

இவ்வருடம் திரு.சிவசுப்பிரமணியம் சிவராமலிங்கம் தலைமையிலான நிர்வாக சபையினரால் இவ்விழாவிற்கான திட்டமிடலின் போது இந்நிகழ்வு மூலம் பெறப்படும் நிதியானது காரைநகரில் கல்வி பயிலும் மாணவர்களது கற்றல் கற்பித்தலை தேவைகளை உடனடியாக நிவர்த்தி செய்யும் பொருட்டு நடாத்துவது என தீர்மானிக்கப்பட்டது. அதன் பிரகாரம் கற்றல் கற்பித்தலுடன் தொடர்புடைய 5 திட்டங்கள் முன்வைக்கப்பட்டு கனடா வாழ் காரை கலாசார மன்றத்தின் அங்கத்தவர்கள், அனுசரணையாளர்கள், நலன்விரும்பிகளிற்கு மன்றத்தின் இணையத்தளம் மூலம் அறிவிக்கப்பட்டது.

இலையுதிர் காலத்தின் இளவேனிலாக 13.10.2019 அன்று கனடா ஸ்காபுரோவில் காரை வசந்தம் வீசியது. மண்டபம் நிறைந்த மக்கள் கலந்து கொள்ள அனுசரணையாளர்கள், அங்கத்தவர்களது ஏகோபித்த வரவேற்புடன் நடைபெற்ற “காரை வசந்தம் 2019” நிகழ்விற்கு தாயகத்திலிருந்து காரைநகர் அபிவிருத்தி சபை தலைவர் திரு.இராமநாதன் சிவசுப்பிரமணியம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் சிறப்பு விருந்தினர்களாக காரைநகர் பிரதேச சபை உபதவிசாளரும் முன்னாள் காரைநகர் அபிவிருத்தி சபை பொருளாளருமான திரு.கணேசபிள்ளை பாலச்சந்திரன் மற்றும் கண் வைத்திய நிபுணர் திரு.கணேசன் சாயுட்சியதேவன் அவர்களும் கலந்து கொண்டனர்.

மாலை 5.30 மணியளவில் பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் ஆதரவாளர்களது மங்கள விளக்கேற்றல் நிகழ்வுடன் செல்விகள் ஆரணி சந்திரேஸ்வரன்,ஜனனி ராஜகோபாலன் மற்றும் கோகுலன் திருஞானசம்பந்தர் ஆகியோரது நிகழ்ச்சி தொகுப்புடன் விழா இனிதே ஆரம்பமானது.

கனடிய தேசிய கீதம் தமிழ் தாய் வாழ்த்து என்பன அபிஷன் நந்தகுமார்,அனக்ஷன் நந்தகுமார்,அஞ்சனன் சிவகுமார்,அர்வின் சிவகுமார்,ஆருஷன் சுதாகரன்,ஆரணி விஸ்வநாதன்,தீபிகா பிரமேந்திரதீசன்,கிருஜானி நடனசபேசன்,ஜதுக்சியா விமலரூபன்,ருக்சியா விமலரூபன்,துர்க்கா சிவகுமார்,பிரணவன் கீதபாஸ்கரன்

ஆகிய கனடா வாழ் காரை சிறார்கள் இசைத்தனர். அதனைத் தொடர்ந்து கனடா காரை கலாசார மன்றத்தின் கீதத்தினை திருமதி ரஞ்சினி சுந்தராஜன் மாணவிகளான செல்விகள் மாதுரி மனோகாந்தன், மாதவி மனோகாந்தன் ஆகியோர் இசைத்தனர்.

தொடர்ந்து கனடாவிற்கு அண்மையில் வந்திருக்கும் காரையம்பதி புகழ் என்.கே.கணேசன் அவர்களின் புத்திரன் திரு.கணேசன் பவப்பிரியன் அவர்களது குழுவினர் வழங்கிய நாதஸ்வர தவில் மங்கள இசைக்கச்சேரி நடைபெற்றது. விழாவிற்கு வந்த பார்வையாளர்கள் விருந்தினர்களை உற்சாகமாக்கிய மங்கள இசையை வழங்கிய குழுவினருக்கு கௌரவம் வழங்கப்பட்டதோடு திரு.பவப்பிரியன் அவர்களிற்கு கனடா வாழ் காரை மக்கள் சார்பாக அமரர் சிவகுரு கந்தையா(மதவாச்சி) குடும்பத்தினர் விசேட கௌரவமும் பாராட்டும் வழங்கி கௌரவித்தனர்.

அடுத்து மன்றத்தின் உபதலைவர் திரு.சபாரத்தினம் பாலச்சந்திரன் அவர்கள் வரவேற்பு உரையினை நிகழ்த்தினார். தொடர்ந்து திருமதி சியாமா தயாளன் அவர்களது மாணவி துர்க்கா சிவகுமார் அவர்களின் வரவேற்பு நடனம் நடைபெற்றது.

வரவேற்பு நடனத்தை தொடர்ந்து கனடா காரை கலாசார மன்றத்தின் தமிழ் திறன் போட்டிகளில் பங்கேற்றி பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற சிறார்களின் மழலை பேச்சுக்கள் அரங்கத்தினை அழகாக்கியது.

தொடர்ந்து நாத சங்கமம் இசைக் கச்சேரி நடைபெற்றது. செல்விகள் கவிதா சிவநாதன், காவேரி சிவநாதன் ஆகியோரது வாய்ப்பாட்டு இன்னிசை நாத சங்கமத்திற்கு மிருதங்க ஞானவாருதி திரு.வாசுதேவன் ராஜலிங்கம் அவர்களது மாணவர்கள் சேயோன் ஜெயகுமார், மலரோன் ஜெயகுமார், சாகித்தியன் ஜெயகுமார், வின்ஸ் ரவீந்திரன், திவியன் உதயகுமார், கவின் உதயகுமார், மிதுரன் மனோகரன், பிருந்தா ஜெயானந்தன் ஆகியோர் பக்க வாத்திய கலைஞர்களாக அணி சேர்த்தனர். நாத சங்கமம் அனைத்து பார்வையாளர்களையும் கட்டிப்போட்ட சிறந்த வரவேற்பு பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்றாக அமைந்து கொண்டதையும் அனைவராலும் பராட்டப்பட்டதையும் கவனிக்கத்தக்கதாக இருந்தது.

கனடா காரை கலாசார மன்றத்தின் கலை நிகழ்வுகளிற்கு மத்தியில் மன்றத்தின் நிகழ்ச்சிகளிற்கு அனுசரணை வழங்கி சிறப்பித்த விளம்பரதாரர்கள், அனுசரணையாளர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றிருந்தன.

தொடர்ந்து Folk Dance நிகழ்வு நடைபெற்றது. திருமதி ரேணுகா விக்கினேஸ்வரன் அவர்களது மாணவி செல்வி மீரா செந்தில்நாதன் அவர்களினால் தமிழர் தம் கலைகளான கரகாட்டம், குச்சுப்புடி, மயிலாட்டம், ஒயிலாட்டம் மற்றும் பரதநாட்டியம் கலந்த ஒரு சிறந்த படைப்பாக வழங்கப்பட்ட தனிநடனம் சிறந்த பாடல்கள் தெரிவு செய்யப்பட்டு அபினயங்களோடு அரங்கத்தை அசத்தியிருந்தது.

அடுத்து திருமதி சிறிமதி கீதா ராஜ்குமார் அவர்களின் மாணவிகளும் அண்மையில் கர்நாடக வாய்ப்பாட்டில் அரங்கேற்றம் கண்ட செல்விகள் பிரம்மி சிவராஜன், சுருதி சிவராஜன் ஆகியோரது கர்நாடக இசை காற்றினில் தவழ்ந்தது. இவர்களிற்கு அணி சேர்த்த கலைஞர்களாக மிதுரன் மனோகரன் மற்றும் சிறிசயன் சந்திரகுமார் ஆகியோர் விளங்கினர்.

அடுத்து பாலவிமலா நர்த்தனாலயா அதிபர் திருமதி சித்ரா தர்மலிங்கம் அவர்களது மாணவிகள் வழங்கிய Fusion நடனம் பல மாணவிகள் கலந்து சிறப்பித்த அழகிய நடன கோர்வையாக விளங்கியது. பல மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்த சிறந்த நடன நிகழ்வாக விளங்கியது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து சிறப்பு விருந்தினர் டாக்டர் கணேசன் சாயுச்சியதேவன் அவர்களின் உரையும் மற்றும் காரைநகர் பிரதேச சபை உப தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரன் அவர்களின் உரையும் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து Keyboard மூலமாக இளம் சிறுவர் கலைஞர்களின் மெல்லிசை கச்சேரியும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மலரவன் விஜயகுமார், திவ்யா ஜெயபாலன், ஜனகன் செந்தூரன், ஆனந் சற்குணராசா, சுருதி பிரசன்னா, பிரணவன் கீதாபாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறுவர்கள் தமது கைவண்ணத்தினை கீபோர்ட் ஊடாக காண்பித்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டனர்.

அடுத்து கனடாவில் ஊடக துறையில் 20 ஆண்டுகளை கடந்து பயனித்துக்கொண்டிருப்பவரும் அண்மையில் ‘ஒருத்தி’ திரைப்படத்தின் மூலம் பெரும் வரவேற்பை பெற்று காரை மண்ணிற்கு பெருமை சேர்த்தவரான திரு.சுதாகர் அவர்கள் கௌரவிக்கப்பட்டு விருது வழங்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து திருமதி திலகா சின்னப்பு அவர்களின் நெறியாள்கையில் காரை இளம் கலைஞர்கள் பங்குபற்றிய நாடகம் “நீர்க்கோலங்கள்” நடைபெற்றது. பங்குபற்றிய மாணவர்களின் பொருத்தமான ஆடை அலங்காரங்கள், வசனநடை, கதை, மற்றும் மேடையேற்றிய முறை என்பன பலரையும் கவர்ந்ததுடன் பங்குபற்றிய சிறுவர்களின் உள்ளார்ந்த பங்களிப்பானது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது, அது மட்டுமன்றி அனைத்து பார்வையாளர்களும் ஆர்வத்துடன் நாடகத்தினை செவிமடுத்ததும் அதற்கான பாராட்டுக்களை வழங்கியதும் கவனிக்கத்தக்கதாக இருந்தது. இதில் பங்குபற்றிய மாணவர்கள் அஸ்வினி சண்முகரத்தினம், பிரியங்கா கேதீஸ்வரன், அஜந்தன் கேதீஸ்வரன், ஜெயந்தன் கேதீஸ்வரன், ஜெரூசன் யோகேஸ்வரன், துளசி யோகேஸ்வரன், சயந்தன் கணேசலிங்கம், சங்கர் ஜெயச்சந்திரன், கார்த்திக் சிவகுமார், துர்க்கா சிவகுமார் ஆகியோராவர்.

தொடர்ந்து கனடா காரை கலாசார மன்றத்தின் தலைவர் சிவசுப்பிரமணியம் சிவராமலிங்கம் அவர்களின் மன்றத்தின் செயற்பாடுகள் பற்றிய சிறப்பு உரை இடம்பெற்றது.

அடுத்து கரியோக்கி முறையிலான திரையிசைப்பாடல்கள் காரை இளம் சிறார்களினால் பாடப்பட்டன. எல்லோராலும் நன்கு அறியப்பட்ட கரியோக்கி முறையிலான திரையிசைப்பாடல்களை கனடாவில் பிறந்த காரை இளம் சிறார் கலைஞர்கள் தங்கள் குரலில் திறம்பட இசைத்தமையானது அவர்களது உச்சரிப்பு மற்றும் பாடல் தெரிவு என்பன அனைவரையும் பிரமிக்க வைத்ததுடன் பலத்த வரவேற்பினை பெற்ற ஒரு நிகழ்வாகவும் அமைந்தது என்பதில் சந்தேகம் இல்லை.

தொடர்ந்து கனடா காரை கலாசார மன்றத்தின் வேண்டுகோளை ஏற்று பிரதம விருந்தினராக கலந்து கொண்ட காரைநகர் அபிவிருத்தி சபை தலைவர் திரு.இராமநாதன் சிவசுப்பிரமணியம் அவர்களிற்கான கௌரவமும் அதனை தொடர்ந்து பிரதம விருந்தினர் உரையும் இடம்பெற்றது. பிரதம விருந்தினர் உரையின் போது கனடா காரை கலாசாரமன்றத்தினாரால் 2015ம் ஆண்டு வழங்கப்பட்ட அனைத்து ஆரம்ப பாடசாலைகளிற்கான ஒரு கோடி இருபது இலட்சம் ரூபாய்கள் சிறந்த முறையில் செயற்பட்டு வருவதாகவும் மிகமிக பத்திரமாக காரைநகர் அபிவிருத்தி சபையின் பாதுகாப்பில் பாடசாலைகளின் பெயரில் இருப்பதாகவும் அதனைப்பற்றி எவ்வித பயமோ அன்றி கவலையோ கொள்ள தேவையில்லையெனவும் தெரிவித்ததுடன் காரைநகர் அபிவிருத்தி சபைக்கு இதுவரை சொந்தமாக அலுவலகம் இல்லாத குறையினை போக்கிக் கொள்ள நிரந்தர கட்டிடம் ஒன்று அமைக்கும் பணிக்காக கனடா வாழ் காரைநகர் மக்களை கனடா காரை கலாசார மன்றத்தின் ஊடாக உதவ முன்வருமாறும், காரைநகர் அபிவிருத்தி சபையினரின் நீர் வளங்கலுக்காக பாவனையில் உள்ள பழைய பௌசர்களிற்கு பதிலாக மேலும் இரண்டு புதிய பௌசர்களை பெற்றுக்கொள்ள காரைநகர் அபிவிருத்தி சபையினரிடம் நீர் வழங்கல் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டு நிரந்தர வைப்பில் இருந்த 58 இலட்சம் ரூபாய்கள் மூலம் முற்பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அதற்குரிய நிதி தேவைப்படுவதாகவும் பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கம் மூலம் பெறுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் ஆனாலும் கனடா காரை கலாசார மன்றமும் அது தொடர்பாக ஆலோசிக்க வேண்டும் எனவும் மேலும்கேட்டுக்கொண்டார்.

அடுத்து கனடா காரை கலாசார மன்றம் நடாத்திய தமிழ் திறன், இன்னிசை போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களிற்கான பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றது. இறுதியாக கனடா காரை கலாசார மன்றத்தின் செயலாளர் ஆறுமுகம் சின்னத்தம்பி அவர்களின் நன்றி உரையுடன் இனிதே நிறைவு பெற்றது “காரை வசந்தம் 2019”.

கனடா காரை கலாசார மன்றம் நடாத்திய காரை வசந்தம் நிகழ்வுகளின் போது சிற்றுண்டி மற்றும் இரவு உணவு என்பனவும் இலவசமாக வழங்கப்பட்டதும், நிகழ்ச்சிகள் தரமானதாக பார்வையாளர்களை வெளியில் எழுந்து சென்றுவிடாத வண்ணம் கட்டிப்போட்டிருந்ததும், நிகழ்ச்சி வடிவமைப்பு ஒருங்கமைப்பு என்பன எவ்வித பிசகுகளும் இன்றி தொடர்ச்சியாக நடைபெறும் வகையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க தமது முழுமையான ஒத்துழைப்பினை வழங்கிய கனடா காரை கலாசார மன்றத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் இந்நிகழ்விற்கு ஆதரவாக விளம்பர அனுசரணைகளை பெற்றுக்கொள்ளவும், ரிக்கெட் விற்பனை மூலமும், மற்றும் அனைத்து வழிகளிலும் உதவியாக செயற்பட்ட கனடா காரை கலாசார மன்றத்தின் அங்கத்தவர்கள் நலன்விரும்பிகள், ஆதரவாளர்கள் அனைவருக்கும்; இச்சந்தர்ப்பத்தில் நன்றியினைக் கூற கடமைப்பட்டுள்ளோம்.

கனடா காரை கலாசார மன்றத்தின் ‘காரை வசந்தம் 2019’ மூலம் பெறப்பட்ட நிதி உதவிகள் மூலம் காரைநகர் மண்ணில் செயற்படுத்த திட்டமிடப்பட்ட கற்றல் கற்பித்தலுக்கான 5 செயற்திட்டங்களும் கூடிய விரைவில் செயற்படுத்தப்படும் என்பதனையும் மேலும் கனடா காரை கலாசார மன்றத்தின் ஊடாக இணைந்து கொள்வதன் மூலம் எம்மன்றத்திற்கும் எம்மண்ணிற்கும் பெருமை சேர்ப்போமாக.

நன்றி!

கனடா காரை கலாசார மன்றம்

 

 

 

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் 20 வது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட காரை வசந்தம் மலரில் வெளியான கட்டுரை- மறைந்து போன துறைமுகப் பண்பாடு- காரைநகர் துறைமுகத்தினை அடிப்படையாகக் கொண்ட ஒரு விளக்கம் – எஸ்.கே. சதாசிவம்

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் 20 வது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட காரை வசந்தம் மலரில் வெளியான கட்டுரை 

மறைந்து போன துறைமுகப் பண்பாடு 

காரைநகர் துறைமுகத்தினை அடிப்படையாகக் கொண்ட ஒரு விளக்கம்

எஸ்.கே. சதாசிவம்

                கிறிஸ்த்துவுக்கு முற்பட்ட காலம், இலங்கையை ஆட்சி செய்த மன்னர்களின் காலம் வட இலங்கையை ஆட்சி செய்த மன்னர்களின் காலம், ஜரோப்பிய அரசுகளின் காலம், பிரித்தானிய அரசுக் காலம் என அனைத்து ஆட்சியாளர்களின் காலப் பகுதிகளிலும் ஊர்காவற்றுறை, காரைநகர் துறைமுகங்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தன. வாணிப நடவடிக்கைகளிலும், போரியல் வரலாற்றிலும் காரைநகர் ஊர்காவற்றுறை துறைமுகங்களின் அமைவிடமே அவை முக்கியத்துவம் பெறக் காரணமாயிற்று. வரலாற்று ரீதியாக காரைநகர் ஊர்காவற்றுறை துறைமுகங்கள் பெற்றிருந்த சிறப்பினை வரலாற்று ஆசிரியர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் தத்தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் காரைநகர் துறைமுகத்திலும் அதன் சுற்றாடலிலும் இடம் பெற்ற செயற்பாடுகளினால் காரைநகர் துறைமுகப்பகுதி உயிரோட்டமாக இருந்து காரைநகரின் பெருமைக்கு வலுச்சேர்த்தமையை மீட்டுப் பார்த்தலே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

நாட்டில் ஏற்பட்ட அமைதி இன்மை காரணமாக பொருளாதார வலுவை இழந்து, மக்களின் இருப்பை இழந்து, பொலிவிழந்து நிற்கும் துறைமுகமே காரைநகர் துறைமுகப் பகுதி.

வாணிப நடவடிக்கைகள்

இலங்கையும் இந்தியாவும் குடியேற்ற நாடுகளாக இருந்த காலத்தில் இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக ரீதியான செயற்பாடுகளுக்கு தடை ஏதும் இருக்கவில்லை. காரைநகர் துறைமுகத்திற்கும் தமிழகம், தென்கிழக்காசியா (மலேசியா, யாவா) அரேபிய தேசங்கள், கொழும்பு, குயராத் ஆகிய இடங்களுக்கிடையில் வாணிப நடவடிக்கைகள் இடம்பெற்றன. ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் அதிகளவான சரக்குக் கப்பல்கள் காரைநகர் ஊர்காவற்துறை துறைமுகங்களுக்கு வருகை தந்தன. இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முற்பட்ட காலப்பகுதியில் வாணிப நடவடிக்கைகளில் ஊர்காவற்துறை துறைமுகம் இலங்கையில் வருமான அடிப்படையில் இரண்டாவது வருமானம் மிக்க துறைமுகமாக திகழ்ந்துள்ளது.

நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் எனும் ஏற்பாட்டில் கொழும்புத் துறைமுகம் முதன்மைப்படுத்தப்பட்டது. இதனால் காரைநகர், ஊர்காவற்றுறை போன்ற துறைமுகங்கள் இதுவரை காலமும் பெற்றிருந்த முதன்மை நிலையை இழந்தன.

காரைநகர் துறைமுகத்துக்கு அண்மிய பகுதியில் சுங்கத்திணைக்களம், சுங்கத்திணைக்கள காவலர்      அலுவலகம், பண்டகசாலை என்பன அமைந்திருந்தன. தென்இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உப-உணவுப் பொருட்கள், ஓடுகள், மட்பாண்டங்கள் என்பன காரைநகர் துறைமுகப் பகுதியில் அமைந்திருந்த பண்டகசாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டது.

காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடைப்பட்ட ஒடுங்கிய பகுதியில் அலுப்பாந்தி துறைமுகப்பகுதிவரை வள்ளங்கள் செல்லக்கூடிய கப்பற்பாதை அமைந்திருந்தமையும் குடாநாட்டிற்கான கடற்வழிப் போக்குவரத்தில் காரைநகர் ஊர்காவற்றுறை துறைமுகங்கள் முக்கியத்துவம் பெறக்காரணம்

ஆயிற்று. காரைநகர் ஊர்காவற்துறை துறைமுகங்களில் இறக்கப்பட்ட பொருட்கள் கடல் வழியாக யாழ்ப்பாண அலுப்பாந்தி துறைமுகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு புகையிரதம் மூலம் தென்னிலங்கைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

தமிழர் பிரதேசங்களில் இருந்து பனை சார்ந்த உற்பத்தி பொருட்களான பனந்தும்பு, பனங்கட்டி என்பனவும் பனை மரங்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன. காரைநகரின் வடபால் அமைந்திருந்த துறைமுகத்திலிருந்து இந்தியாவின் கோடிக்கரைக்கு பனை மரங்கள் ஏற்றிச் செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து  நெல் அரிசிப் பண்டங்களுடன் மீளும் பண்டமாற்று வியாபாரம் நடைபெற்றது. இந்தியாவில் யாழ்ப்பாண சுருட்டுக்கு மதிப்பு இருந்தமையால் சுருட்டும் ஏற்றுமதி செய்யப்பட்டது.

1879ம் ஆண்டு காரைநகருக்கும் பொன்னாலைக்கும் இடைப்பட்ட தரைவழிப் பாதை திறந்து வைக்கப்பட்டமையானது காரைநகர் துறைமுகத்தின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு சாதகமாக அமைந்தது. காரைநகர் துறைமுகத்தில்  இறக்கப்பட்ட பொருட்களை முள்ளியவளை, நெடுங்கேணி, கண்டி, அநுராதபுரம் போன்ற இடங்களுக்கு காரைநகர் வர்த்தகர்கள் கூடார வண்டில் தொடர் அணிகளில் ஏற்றிச் சென்று வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.

காரைநகர் துறைமுகப்பகுதியில் நடைபெற்ற வர்த்தக நடவடிக்கைகள் துறைமுகத்தை அண்மிய பகுதிகளில் வாழ்ந்த மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தி இருக்கலாம். இதனால் பலுகாடு, கருங்காலி, தங்கோடை, கோவளம் ஆகிய குறிச்சிகளில் வாழ்ந்த பலர் வர்த்தகத்தில் ஈடுபட்டனர். அத்துடன் வண்டி தொடர் அணிவர்த்தகமும் அக்காலத்தில் இம்மக்கள்  வர்த்தக துறையில் ஈடுபட ஊக்குவிப்பாக அமைந்திருக்கும்.

தங்கோடை, கோவளம் ஆகிய குறிச்சிகளில் வாழ்ந்த பெரும்பாலானோர் குறிப்பாக மலையகத்திலும் ஏனைய குறிச்சிகளில் வாழ்ந்தோர் நாட்டின் பல பாகங்களிலும் வர்த்தகம் செய்யலாயினர். தமது தந்தையரின் பெயரை முதற்பெயராக கொண்டு வர்த்தகம் செய்ய புறப்பட்ட பலர் கிராமத்திற்கு திரும்பி வருகின்ற போது தாங்கள் வர்த்தகம் செய்த ஊர்களின் பெயர்களை தங்கள் முதற்பெயராக கொண்டு ஊர் திரும்பினர். தாம் வர்த்தகம் செய்த ஊர்களில் வர்;த்தகத்தில் முதன்மை நிலை பெற்றிருந்தது மட்டுமல்லாது காலப்போக்கில் அவ் ஊர்களின் உள்ளுர் ஆட்சி மன்றங்களிலும் பதவி வகித்தனர்.

1780 ல் காரைக்காலில் இருந்து வந்த கனகசபைபிள்ளை காரைநகர் துறைமுகத்திற்கு அண்மிய பகுதியில் வர்;த்தகர்கள், யாத்திரிகள், தங்கி போக்குவரத்து செய்வதற்கு வசதியாகமடம் ஒன்றை அமைத்தார். கப்பல்களில் சரக்கு ஏற்றி வர்த்தகம் செய்து வந்தமையால் பெருஞ்செல்வந்தராய் இருந்தார். வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் இப் பகுதியில் குடியேறி வாழ்ந்தார்கள். பிள்ளைமடம்  அன்றைய நாளில் வர்த்தகத்தின் சிறப்பின் அடையாளமாக அமைந்திருந்தது.

செல்வந்தர்கள் பல கப்பல்களை வர்த்தக சேவையில் ஈடுபடுத்தி  பெருஞ் செல்வந்தர்கள் ஆனார்கள். காரைநகர் துறைமுகப்பகுதியை மையப்படுத்தி வர்த்தக நடவடிக்கைகளில் பலர் ஈடுபட்டனர். சி.க.ஆறுமுகம் வெள்ளையர் ஆறுமுகம் என்று மக்களால் அழைக்கப்படுபவர் இந்தியாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்து துறைமுகத்தடியில் பிரபல்யமான வர்த்தக ஸ்தாபனத்தை நடாத்தி துறைமுகப்பகுதி வர்த்தகத்தில் தனக்கென ஒரு ஸ்தானத்தை வகித்த பெரும் செல்வந்தர் ஆவார். வைரமுத்து சபாபதிப்பிள்ளை, வைரமுத்து ஆறுமுகம் சைவாசாரப் பரம்பரையில் பிறந்த சகோதரர்கள் கப்பல்களை வைத்து ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் செய்தவர்கள். துறைமுகப்பகுதியில் வர்த்தக ஸ்தாபனத்தை நடாத்தி வந்தனர். யாழ்ப்பாண நகரிலும் முன்னணி வர்த்தக ஸ்தாபனத்தின் உரிமையாளர்களாக இருந்தனர்.யாழ்ப்பாண ஜக்கிய பண்டகசாலையை ஆரம்பித்த முக்கியஸ்தர்களில் இவர்களும் அடங்குவர். எஸ்.வி.பொன்னம்பலம் காரைநகர் துறைமுகம் ஊடாக பீடியை இறக்குமதி செய்து வி;ற்பனை செய்யும் வர்த்தகத்தில் பிரபலம் பெற்றிருந்தார்.

 

இந்தியாவில் இருந்து காளை மாடுகள் இறக்குமதி செய்தல்

தமிழரின் பொருளாதார வளத்தில் விவசாயம் முக்கிய பங்கினை பெற்றிருந்தது. விவசாயத்தை வாழ்வாதாரமாக கருதி வாழ்ந்தவர்கள் தென் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நல்லின காளை மாடுகளை தங்கள் வேளாண்மை செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதன் மூலம் உச்சப்பயனைப் பெறலாம் என கருதினர்.

அன்றைய கால கட்டத்தில் சாதாரண மக்கள் மாட்டு வண்டில்களிலும் வசதி மிக்கவர்கள் குதிரை வண்டில்களிலும் தங்கள் பயணங்களை மேற்கொண்டனர். நல்லின காளை மாடுகளை தங்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தும் வண்டில்களில் பூட்டி பயணம் செய்வதால் தங்கள் பயணங்ளை விரைவாக மேற்கொண்டனர். மேலும் நல்லின காளைகளை  பயன்படுத்துவது அன்றைய கால கட்டத்தில் மேலான சமூக அந்தஸ்தாக கருதப்பட்டது.

நல்லின காளை மாடுகளை வளர்ப்பதில் நாட்டம் கொண்ட பலர் காரைநகரில் வாழ்ந்தனர். இந்தியாவில் இருந்து காளை மாடுகளை கொண்டு வருவதில் புதுறோட்டு, இடைப்பிட்டி குறிச்சிகளை சேர்ந்த மினாயர் தில்லைச்சி (தில்லையம்பலம்) தில்லையம்பலம் கந்தையா, தில்லையம்பலம் பொன்னம்பலம் ஆகியோரும் களபூமியில் வாழ்ந்த காசிநாதர் சிதம்பரப்பிள்ளை, சிதம்பரப்பிள்ளை கனகசபை ஆகியோரும் ஈடுபட்டனர்.

காரைநகரில் இருந்து திருவண்ணாமலைக்கு கார்த்திகை விளக்கீட்டினைப் பார்ப்பதற்கு செல்வார்கள். கார்த்திகை தீப திருவிழா காலத்தில் மாடுகள் ஏலத்தில் விற்பதற்காக திருவண்ணாமலை மாட்டுச் சந்தைக்கு கொண்டு வரப்படும். விரும்பிய மாடுகளை கொள்வனவு செய்வார்கள். இந்தியாவில் கொள்ளிடம் ஆற்றங்கரையிலிருந்து மாடுகள் ஏற்றப்படும். தை மாதத்தில் ஊர்காவற்றுறையில் மாடுகள் இறக்கப்படும். பருத்தி அடைப்பில் மாடுகள் பேணகத்தில் இரண்டு வாரங்களிற்கு மாடுகள் பராமரிக்கப்படும். இரண்டு வாரங்களிற்கு பின்னர் மாடுகள் காரைநகர் துறைமுகத்திற்கு கொண்டுவரப்படும். மாடுகளை கொள்வனவு செய்வதற்காக வெளியூர் மக்களும் கூடுவர். சிலர் தங்களிடம் இருக்கும் உள்ளுர் மாடுகளை கொடுத்து நல்லின காளைகளை எடுத்துச் செல்வர். திருநெல்வேலி மாவட்டம் காங்கேயன் மாட்டுச் சந்தையில் கொள்வனவு செய்யப்படும் மாடுகளும் காரைநகர் வழியாக யாழ்ப்பணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

காரைநகர் துறைமுகத்தில் இருந்து மாடுகளை நடத்திச் செல்வர். மாடுகளை நடத்திச் செல்பவர் கம்பீரமானவராக இருப்பார். வெள்ளை வேட்டி கட்டி தலைப்பாகை அணிவார். மாடுகளுக்கு கெச்சை, வெண்டயம், கொம்புக்குழாய், வெள்ளிச்சங்கிலி என்பவற்றுடன் நெத்திப்பவளம் கட்டப்படும். சிவப்பு பச்சை மணிகள் மணிமணியாக கோர்க்கப்பட்டு நடுவில் சங்கு வைத்து நெற்றியில் கட்டப்படும். காரைநகர் துறைமுகப்பகுதியில் இருந்து மாடுகள் வரிசையாக நடத்திச் செல்வது விழா போன்று அமையும்.

போக்குவரத்திற்கான பாதை

1869ம் ஆண்டு வடமாகாண அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டு கால் நூற்றாண்டு காலம் பணியாற்றிய W.C துவைனம் (William Crofton Twynam) பின்னாளில் அவரின் சேவையின் மேன்மை கருதி ‘Sir’ பட்டம் வழங்கப்பட்டது காரைநகர் ஊர்காவற்றுறை துறைமுகங்களின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தினார். காரைநகர் தொப்பிக்கட்டுக்கும் பொன்னாலைப் பகுதிக்கும் இடையே ஒன்பது பாலங்களை உள்ளடக்கிய கற்தெரு 1879ம் ஆண்டு W.C துவைனம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதனால் காரைநகர் யாழ்ப்பாணக் குடா நிலத்துடன் ஒன்பது பாலங்களைக் கொண்ட வீதி நிலங்களால் இணைக்கப்பட்டது. தாம்போதி கட்டுமானம் தொடர்பாக W.C துவைனம் வருகை தந்தமையை குறிக்கும் நினைவுக்கல் காரைநகர் இந்துக்கல்லூரியின் வடக்கு புறத்தில் அமைந்திருந்த சயம்பு மண்டபத்தில் பதிக்கப்பட்டு இருந்தது. தாம்போதி அமைக்கப்பட்டதன் பயனாக யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு தரைவழியாக பயணம் செய்யும் வாய்புக்கிட்டியது. தாம்போதி அமைக்கப்பட்டதன் மூலம் காரைநகர் ஏனைய தீவுகளுடன் ஒப்பிடும் போது சிறப்பு நிலை பெற்றது.

யாழ் குடாநாட்டிற்கு பொன்னாலை தாம்போதி ஊடாக பயணம் செய்யக்கூடிய(கரம்பன், ஊர்காவற்றுறை போன்று) வாய்ப்பான நிலையில் இருந்த ஏனைய தீவக மக்களும் காரைநகர் துறைமுகம் ஊடாக பயணங்களை மேற்கொண்டனர். காரைநகர் மக்கள் தமது பொருளாதார வளத்தை மேம்படுத்த, கல்வி வாய்ப்புக்களை அதிகரித்துக் கொள்ள தாம்போதி அமைத்தமையின் மூலம் சந்தர்ப்பம் கிட்டியது.

எழுவைதீவு, அனலைதீவு, நயினாதீவு, நெடுந்தீவு ஆகிய தீவுகளுக்கான படகுச் சேவை ஊர்காவற்றுறை துறைமுகத்தில் காலையில் ஆரம்பமாகும். யாழ் குடாநாட்டுப் பயணிகள் காரைநகர் துறைமுகத்துக்கு ஊடாக ஊர்காவற்றுறை துறைமுகத்திற்கு சென்று படகுகளில் தம் பயணங்களை தொடர்ந்தனர். மாலையில் மேற்படி தீவுகளில் இருந்து படகுகள் ஊர்காவற்றுறை துறைமுகத்துக்கு திரும்பும்.

நயினாதீவு உற்சவ காலத்தில் பெருமளவிலான பக்தர்கள் வருகை தருவார்கள்.காரைநகர் துறைமுகத்தில் இருந்து மோட்டார் படகுகளிலும்,மோட்டார்வள்ளங்களிலும் ஏறிக் கொள்வதற்காக ஒழுங்கு வரிசையாக அமைக்கப்பட்டவரிசைகளில் மக்கள் காத்திருப்பர். திரு. வீரப்பர் வேலுப்பிள்ளை சண்முகம்

(V.V.Shanmugam)  யாத்திரிகர்களுக்கான தாகசாந்தி ஏற்பாடுகளை செய்வதில்

முதன்மையானவர்.பக்தர்களின் போக்குவரத்துக்கு வசதியாக திருகோணமலை – மூதூருக்கு இடையிலான படகு சேவையை நடாத்திய திரு கே.கே. விசுவலிங்கம் அவர்களின் மோட்டார் படகுகள் சேவையில் ஈடுபடும்.

பௌத்த யாத்திரிகர்களின் புனித பூமியாக கருதும் நயினாதீவில் அமைந்துள்ள விகாரையை தரிசிப்பதற்கு பௌத்தர்கள் முன்னுரிமை வழங்குகின்றனர். கௌதமபுத்தர் நயினாதீவில் காலடி வைத்தமையால் நயினாதீவிற்கு யாத்திரை செய்வது தங்களின் வாழ்நாள் கடமைகளில் ஒன்று எனக் கருதுகின்றனர்.நயினாதீவிற்குசெல்லும் பௌத்த யாத்திரிகள் தரித்து செல்வதற்கான யாத்திரிகர் மடம் (பன்சல) காரைநகர் துறைமுகம் பகுதியில் அமைந்திருந்தது. அழிவடையாமல் சேதமடைந்த நிலையில உள்ள இம்மடம் பின்நாளில்சீநோர்அபிவிருத்தித் திட்டத்தின்  உடமையாக்கப்பட்டது.

காரைநகர் ஊர்காவற்றுறை துறைமுகங்களுக்கிடையே பத்து பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய வள்ளங்கள் (மச்சுவாய்) சேவையில் ஈடுபட்டன. காற்றின் விசைக்கும், திசைக்கும் அமைவாக ஒருவர் அல்லது இருவர் வள்ளத்தினை வலித்து (ஓட்டி) செல்வர் வள்ளம் சரியான திசையில் செல்வதை திசைப்படுத்தும் கருவியை (சுக்கான்) அனுபவம் மிக்க பயணி கையாள்வார். இரு துறைமுகங்களின் கரைகளிலும் வள்ளங்கள் தமது பயண நேரம் வரும் வரை தரித்திருக்கும்.

காரைநகர் ஊர்காவற்றுறை துறைமுகங்களின் இருகரைகளிலும் படகுகள், வள்ளங்கள் அணைப்பதற்கு (கரை சேர்ப்பதற்கு)பாதுகாப்பான வௌ;வேறு இறங்கு துறைகள் அமைக்கப்பட்டு இருந்தது.

காரைநகர் ஊர்காவற்றுறை துறைமுகங்களுக்கு அண்மிய பகுதியில் பயணிகள் தங்குவதற்கான இறங்குதுறை பயணிகள் தங்குமடம் அமைக்கப்பட்டு இருந்தது. காரைநகர் துறைமுகப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இறங்குதுறை பயணிகள் மடம் அழிந்து விட்டது. ஊர்காவற்றுறை பகுதியில் இறங்குதுறை பயணிகள் மடம் சேதம் அடைந்த நிலையில் காணப்படுகிறது. மழை வெய்யில் காலநிலைகளில் பாதுகாப்பாக இருந்து தங்கள் பயணங்கள் ஆரம்பிக்கும் வரை இயற்கையின் எழிலை இரசிப்பதற்கு இறங்கு துறை பயணிகள் மடங்கள்  வாய்ப்பாக அமைந்தது.

ஊர்காவற்துறையில் அழிந்த நிலையில் உள்ள இறங்கு துறை பயணிகள் மண்டபம்

ஆரம்ப காலத்தில் மனிதர்களால் உழக்கிச் செல்லும் பாதை காரைநகர் ஊர்காவற்றுறை துறைமுகங்களுக்கு இடையில் சேவையில் ஈடுபட்டது. பின்னாளில் இயந்திர பாதை சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. ‘மாருதப்புரவி’ எனும் வசதி மிக்க பெரிய இயந்திர பாதை சேவையில் ஈடுபட்டது. மக்கள் பாதுகாப்பாக பயணம் செய்யவும், துவிச்சக்கர வண்டிகள், மோட்டார் வண்டிகள், மாட்டு வண்டிகள் என்பனவற்றை ஏற்றிச் செல்லவும் பாதையின் சேவை வழி செய்தது.

15th Januaray 1908 – The Karaitivu Ferry opened for traffic and the horse boat commenced to ply ( Notes on Jaffna John.H.Martyn)

காரைநகர் ஊர்காவற்துறை துறைமுகங்களுக்கிடையிலாக சேவையில் ஈடுபடும் பாதை, மச்சுவாய்களும் காணப்படுகின்றன

காரைநகர் விவசாயிகள் தீவுப்பகுதியில் மாட்டெரு கொள்வனவு செய்து மாட்டுவண்டில்களில் ஏற்றி பாதையில் காரைநகருக்கு கொண்டு வருவர். காரைநகரில் பயிரிடப்படும் கத்தரிக்காய், அரிசி என்பன் திருக்கல் வண்டில்களில் ஊர்காவற்றுறை சந்தைக்கு எடுத்துச் செல்லப்படும். தீவகப்பகுதிகளில் வெட்டப்படும் பூவரசு  மர இலைகளை கட்டுக்கட்டாக்கி வண்டில்களில் ஏற்றி பாதை ஊடாக மருதனார்மடம் பகுதி தோட்டங்களின் பசளைத் தேவைக்காக எடுத்துச் செல்லப்படும்.

காரைநகர் துறைமுகம் ஊடாக பயணிக்கும் பயணிகள்  மாட்டு வண்டி தொடர் அணிகள் இளைப்பாறிச் செல்வதற்கான வசதியை காரைநகர் கிழக்கு வீதியில் விளானைப்பகுதியில் வாழ்ந்த திரு அம்பலவாணர் இராசரத்தினம் ஏற்பாடு செய்திருந்தார். இராசரத்தினம் அவர்களின் வீட்டிற்கு செல்லும் வாயிற் கதவுகள் கூரை இடப்பட்டு ஓலையினால் வேயப்பட்டு இருந்தது. வீதிப்பக்கமாக கதவுகளின் இரு பக்கமும் படுத்து உறங்கக்கூடிய,ஆறி அமர்ந்து இருக்கக்கூடிய சீமெந்திலான படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தது.

திரு அ. இராசரத்தினம் அவர்களின் வீட்டின் படலையும் ஓய்வெடுப்பதற்கான படிக்கட்டுக்களும்

வீட்டு வளாகத்தில் நன்னீர் கிணறு அமைந்திருந்தது. தண்ணீர் அள்ளிக் கொள்வதற்காக துலாவும் மாட்டுத்தொட்டிகளுக்கு தண்ணீர் இறைப்பதற்கான கட்டுமானங்களும் அமைக்கப்பட்டிருந்தது மாடுகள் நீர் குடிப்பதற்கான நீர் தொட்டி ஆவுரோஞ்சி, சுமை தாங்கி என்பன இவ் இடத்தில் அமைக்கப்பட்டிருந்தது.

 

மாடுகள் நீர் குடிப்பதற்கான தண்ணீர்த்தொட்டி

1950களின் பிற்பகுதி வரை தீவகத்தின் போக்குவரத்தின் மையப்புள்ளிகளாக ஊர்காவற்றுறை காரைநகர் துறைமுகங்கள் திகழ்ந்தன. தீவுக்கு உள்ளும்,தீவுப்பகுதிகளுக்கும் குடாநாட்டிற்கும் இடையிலான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த தீவுப்பகுதி மக்கள் மேற்கொண்ட வினைத்திறன் மிக்க முயற்சிகளால்தங்கள் போக்குவரத்து வசதிகளை அபிவிருத்தி செய்தனர்.

புங்குடுதீவைச் சேர்ந்த ஒன்ற விட்ட சகோதரர்களான சண்முகம் அம்பலவாணரினதும், கந்தப்பு      அம்பலவாணரினதும் இடைவிடாத முயற்சியினால் 1954இல் புங்குடுதீவுக்கும் வேலணைத்தீவுக்கும் இடையிலான தாம்போதி பாவனைக்கு வந்தது. இவர்களின் நினைவாக இன்று வரை வாணர் தாம்போதி என்று இப்பாலம் அழைக்கப்பட்டு வருகின்றது. தீவுப்பகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு அல்பிரட் தம்பிஐயா மூலம்  அரசின் ஆதரவைப் பெற்றனர்.

1950களில் மாருதப்புரவீகவல்லி எனும் இயந்திர பாதை பண்ணைக்கும் வேலணைத்தீவுக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டது. 1961 ஆம் ஆண்டு பண்ணைப்பாலம் மக்கள் பாவணைக்கு திறந்து விடப்பட்டது.

1958 ம்ஆண்டு புங்குடுதீவு குறிகாட்டுவான் இறங்குதுறை சேவைக்கு வந்தது. நெடுந்தீவு, நயினாதீவு மக்கள் தங்கள் பயணங்களை குறிகாட்டுவான் இறங்குதுறையில் இருந்து ஆரம்பித்தனர். நயினாதீவு நாகபூஷனி அம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களும், யாத்திரிகர்களும் தங்கள் பயணங்களை குறிகாட்டுவான் துறையில் இருந்து ஆரம்பித்தனர்.ஊர்காவற்றுறை  துறைமுகத்தில்  இருந்து நயினாதீவிற்கான கடல்ப்பயணம்  75மூ  ஆகவும் நெடுந்தீவிற்கான பயணம் 50மூ ஆகவும்; குறைந்தது.

1972ம் ஆண்டு தீவகம் தீவுப்பகுதி வடக்கு, தீவுப்பகுதி தெற்கு என இரண்டு

காரியாதிகாரிகள் பிரிவாக (D.R.O.Office) பிரிக்கப்பட்டன. தீவுப்பகுதி தெற்கு    காரியாதிகாரி அலுவலகம் வேலணை வங்களாவடிச்சந்தியில் இயங்க ஆரம்பித்தது போக்குவரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்  காரணமாக தீவகமக்கள்இலகுவில் பயணம் செய்யக்கூடிய வேலணை வங்களாவடி சந்தியில் ஏனைய அரச காரியாலயங்களும் நிறுவப்பட்டன. எனினும் நீதிமன்றம் காவல்துறை பணிமனை ஊர்காவற்றுறையில் இயங்கின. தீவகப்பகுதிவடக்குபிரதேச செயலகம் வங்கிகள் ஏனைய அரச காரியாலயங்கள் ஊர்காவற் துறையில்

இயங்கின. மேற்சொல்லப்பட்ட மாற்றங்களினால் ஊர்காவற்றுறை வரலாற்று காலங்களில் துறைமுக நகரம், தீவகத்தின் தலைமையகம் என பெற்றிருந்த  சிறப்பு அந்தஸ்தை இழந்தது.

சீநோர் அபிவிருத்தித் திட்டம் – Cey- Nor Development Project

வர்த்தக செயற்பாடுகளினால் துறைமுக பட்டினம் ஒன்றினை காரைநகர் தன்னகத்தே வைத்திருந்து பெற்றிருந்த சிறப்பு நிலை மெதுவாக மறைந்து செல்ல சீநோர் அபிவிருத்தித் திட்டத்தின் வருகையினால் மீண்டும் காரைநகர் பொருளாதார வலுவுள்ள முயற்சியாண்மை மிக்க துறைமுக பட்டினம் ஒன்றினை தன்னகத்தே வைத்துள்ளது எனும் அந்தஸ்து பேணப்பட்டது.

உணவுத் திணைக்களத்தின் உணவுக்களஞ்சியங்கள், சுங்க திணைக்கள அலுவலகங்கள், பௌத்த யாத்திரிகள் தங்கும் விடுதி ஆகிய இடங்கள் சீநோர் அபிவிருத்தித் திட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

1967 ம் ஆண்டின் ஆரம்பத்தில் சீநோர் மாலுமீன் நிறுவனம்; (MALLU MEEN ENTERPRISES) எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டு; இயங்கியது.1970ம் ஆண்;டு நோர்வே நல்லொழுக்க இளைஞர் இயக்க (NORWAY GOOD TEMPLER ORGANISATION) தலைவரின் வருகையின் பின்னர் சீநோர் அபிவிருத்தி திட்டம்  (CEY NOR DEVELOPMENT PROJECT) எனும் பெயர் மாற்றம் பெற்றது.

மதுஒழிப்பு, சகோதரத்துவம், கிராமங்கள் அபிவிருத்தி, கல்வி அபிவிருத்தி என்பனவற்றை அடைவதற்கான இலக்குகளுடன் நல்லொழுக்க இளைஞர் இயக்கம்  (GOOD TEMPLER ORGANISATION) பணி ஆற்றியது. காரைநகரின் அயல் ஊர்களில் அமைந்திருந்த சிறிய பின் தங்கிய கிராமங்களும் மேற்சொல்லப்பட்ட இலக்குகளை எய்துவதற்கான பணிப்பிரதேசமாக உள்வாங்கப்பட்டது.

1968ம் ஆண்டு கப்பல் கட்டும் தளம் (BOAT YARD) அமைக்கப்பட்டது. கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்படும் இழை நாரிலான படகுகள் (FIBRE GLASS BOAT) மயிலிட்டி, வல்வெட்டித்துறை சிலாபம், நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களில் இருந்து படகுகளை கொள்வனவு செய்ய வருபவர்களுக்கு ஜயாயிரம் ரூபா பெறுமதியான படகுகள் மூவாயிரம் ரூபாவிற்கு மானிய விலையில் விற்கப்பட்டது.

1975ம் ஆண்டளவில் கடல் உணவு பதனிடல் (நண்டு,இறால்) பகுதி ஆரம்பிக்கப்பட்டது. காரைநகரிலும் அயல் ஊர்களிலும் இருந்து வருகை தரும் பெண்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இங்கு பதனிடப்பட்ட நண்டுகள் பொதி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஏற்றுமதி செய்யப்பட்டது. சீநோரின் தேவைக்காக ஜஸ் உற்பத்தி (ICE PLANT) ஆரம்பிக்கப்பட்டது. தனியாருக்கும் ஜஸ் விற்கப்பட்டது. இக்கால கட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட (Paro Cement) படகு கட்டும் திட்டம் வெற்றி அளிக்கவில்லை. இரண்டு முதல் ஜந்து தினங்கள் கடலில் தரித்து நின்று மீன் பிடிக்கும் இழுவைப் படகுகள் (Trawler) ஆழ்கடல் மீன் பிடியில் ஈடுபடுத்தப்பட்டன. இழுவைப்  படகுகளை கரை சேர்ப்பதற்கான இறங்கு துறை காரைநகர் துறைமுகப் பகுதியில் அமைக்கப்பட்டது. ஆழ் கடலில் பிடிக்கப்படும் மீன்கள் கொழும்பிற்கு பார ஊர்திகளில் அனுப்பி வைக்கப்பட்டது. உள்ளுர் நுகர்வோருக்கான மீன் விற்பனை நிலையம் சீநோர் வளாகத்தில் செயற்பட்டது. தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களின்; குடும்பத்தின் நாளாந்த தேவைகளுக்கான மீன் பொதி இடப்பட்டு பணி முடிந்து வீடு செல்லும் போது எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக காவலர் அறையில் (guard room) வைக்கப்படும்.

சிறுவர் பாதுகாப்பு நிதியம் நோர்வே, சுவீடன் (Save the children, Norway,Sweden) ஆகியன இணைந்து RED BANA 1975ல் சுகாதார நிலையம் (Health Centre) ஆரம்பிக்கப்பட்டது. கிரமமாக clinic நடாத்தி கர்ப்பிணி பெண்களை பரிசோதித்து ஊட்டச்சத்து வழங்கப்பட்டது. இரண்டு நோயாளர் காவு

வண்டி (Ambulance) வழங்கப்பட்டது. நல்லொழுக்க இளைஞர் இயக்க (Good Templer Organisation) குளோப் நூலகம் சீநோர் தொழிற்சாலைக்கு அண்மிய பகுதியில் இயங்கியது.

தோப்புக்காடு, ஊரி,காரைநகரின் ஏனைய பகுதி மக்கள்,ஊர்காவற்றுறை,குடா நாட்டின் ஏனைய பிரதேசங்களிலிருந்தும் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பணியாற்றினார். 6.00-2.00,2.00-6.00,6.00-10.00 என்கின்ற மூன்று சுற்றில் தொழிற்சாலை இயங்கியது.

1981 ல் சீநோர் மீன் பிடி கூட்டுத்தாபனத்துடன்  (Fisherien Co-operation) இணைக்கப்பட்டது. கடல் உணவு(நண்டு,இறால்)பதனிடும் பகுதி தனியாருக்கு வழங்கப்பட்டது. வென்னப்புவையிலும்,மாத்தறை பொல்காகமுல்லை எனும் இடங்களிலும் வலைகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டது.கொழும்பு முகத்துவாரப்பகுதிக்கு கப்பல் கட்டும் தளம் மாற்றப்பட்டது.மேற்சொல்லப்பட்ட செயற்பாடுகள் காரணமாக சீநோர் ஸ்தாபனத்திற்கு இறங்கு நிலை ஏற்பட்டது.

சமூக சேவை பகுதியும் ஏனைய செயற்பாடுகளும் தொடர்;ந்து இயங்கியது.1981ல் ஊழியர்களுக்கு கட்டாய வேலை நீக்க உத்தரவு வழங்கப்பட்டது. 600 பேர் சுயமாக வேலையை விட்டு விலகிச் சென்றனர்.

1985ம் ஆண்டு காலப்பகுதியில் கடற்படை முகாம் மீது தாக்குதலை தொடர்ந்து தோப்புக்காடு கிராம மக்கள் இடம்பெயர ஆரம்பித்தனர். துறைமுகப்பகுதியில் மக்கள் நடமாட்டம் குறையத் தொடங்கியது. தொடர்ந்து வந்த சீரற்ற நிலைமைகளால் சீநோர் அபிவிருத்தித் திட்டம் கைவிடப்பட்டது.

தற்போது கட்டப்பட்டு வரும் சினோ கப்பல் கட்டும் தளம்

 

காரைநகர் துறைமுகப் பகுதியில் இயங்கிய நிறுவனங்கள்

  1. 1780ம் ஆண்டு கட்டப்பட்ட கனகசபைபிள்ளை மடத்தில் 1928 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காரைநகரின் முதலாவது கிராம சபை இயங்கியது.சிறிது காலம் செல்ல கிராம சபை மடத்து வளத்தில் தனது சொந்த கட்டிடத்தில் இயங்க ஆரம்பித்தது.
  2. துறைமுகம் உப தபாற் கந்தோர் கனகசபைப்பிள்ளை மடத்தில் இயங்கியது.
  3. காரைநகருக்கும் ஏனைய தீவுகளுக்கும் பங்கீட்டு அடிப்படையில் பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக விநியோகிக்கும் அரிசி மூட்டைகள் சேமித்து வைக்கப்படும் அரசாங்க உணவுத்திணைக்கள பண்டகசாலை இயங்கியது.
  4. காரைநகர் மக்களுக்கு பதினாறு கிளைகளுடன் இலாபத்துடன் இயங்கி சிறந்த பணியாற்றிய காரைநகர் பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைமைப் பணிமனையும் பண்டகசாலையும் இயங்கியது.
  5. சுங்கத்திணைக்கள பண்டகசாலை
  6. சீநோர் அபிவிருத்தித் திட்டம்
  7. பௌத்த யாத்திரிகள் தங்கும் இடம்.
  8. குளோப் நூலகம் (Good Templer Organisation)

9.1966 ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை போக்குவரத்து சபை சாலை

10.இலங்கை போக்குவரத்து சபை, தனியார் போக்குவரத்து பேருந்துகளின் சேவைகள் ஆரம்பிக்கும் நிறைவு செய்யும் இடம் (Bus Terminal)

 

காரைநகர் துறைமுகத்தில் இயங்கிய கடைத்தொகுதிகள்

சுறு சுறுப்பாக இயங்கிய காரைநகர் துறைமுகம், சீநோர் அபிவிருத்தித் திட்டத்தின்; வருகையினால் அதிகரித்த தொழிலாளர்களின் பிரசன்னம், போக்குவரத்து பகுதியாக இருந்தமையால் பயணிகளின் வருகை, நயினாதீவு திருவிழா காலங்களில் பக்தர்களின் வருகை, தென் இலங்கை பௌத்த யாத்திரிகளின் வருகை எனப் பல வித செயற்பாடுகளின் நிமித்தம்  வருகை தரும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய கடைத்தொகுதிகள் காரைநகர் துறைமுகப் பகுதியில் அமைந்திருந்தன.

உணவகங்களும் தேநீர் சாலைகளும்

1.அப்பாத்துரை சைவக் கடை

2.சிறி தேவி கபே

3.மல்லிகா கபே

4.முருகன் கபே

5.உதய கிரி கபே

6.இராமையா தேநீர் சாலை

7.செல்லம்மா கந்தையா உணவகம்

8.பண்டா பேக்கரி

காரைநகர் துறைமுகத்தில் அமைந்திருந்த உணவகங்கள் தரம் வாய்ந்தவையாக இருந்தமையால் இவ் உணவகங்களிற்கு காரைநகரின் ஏனைய பகுதி மக்களும் உணவு பண்டங்களை கொள்வனவு செய்ய வருகை தருவார்கள்.

உணவுப் பொருட்கள் விற்பனை நிலையங்கள்

  1. திரு. வெள்ளையர் ஆறுமுகம் கதிரவேலு
  2. திரு.வீ.வே.சண்முகம்
  3. திரு.தி. சிவலிங்கம்
  4. திரு..சு. இராசலிங்கம் உத்தரவு பெற்ற வியாபாரி
  5. ஊறைச்சார் ஆறுமுகம்
  6. புட்டுக்கட்டி கடை

 

 

1972ம் ஆண்டு மதிப்பீட்டிற்காக தயாரிக்கப்பட்ட நில அளவைத் திணைக்களத்தின் வரைபடத்தின் படி துறைமுக பகுதி கடைத்தொகுதிகள்

 

வாரிவளவு நல்லியக்கச்சபை நீச்சல்போட்டிகள்

25 ஆண்டுகாலம் புதுவருட தினத்தை முன்னிட்டு வாரிவளவு நல்லியக்க சபையினரால் நடாத்தப்படும் போட்டிகளில் ஒன்றான நீச்சல் போட்டி நிகழ்ச்சியில் ஆண்களுக்கான போட்டிகள் காரைநகர் துறைமுகத்திலிருந்து ஊர்காவற்துறை துறைமுகம் வரையும் பெண்களுக்காக போட்டிகள் காரைநகர் துறைமுகத்திலிருந்து 100M வரையும் நடைபெறும் இப்போட்டிகளுக்கான பாதுகாப்பினை காரைநகர் கடற்படையினர் வழங்குவர்.

கடற்படை தளபதி நீச்சற்போட்டையை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகின்றார்

 

ஹமன் ஹீல் கோட்டை

காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையே காணப்படுகின்ற நீரேரிப்பகுதி பாக்குநீரிணையோடு சந்திக்கும் மேற்குப் புற மேட்டு நிலத்தில் ஹமன் ஹீல் கோட்டை அமைந்துள்ளது. பெருங்கடலுக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான  கடல்வழி போக்குவரத்திற்கான இணைப்புப் பகுதியாக இருப்பதால் இப்பகுதி முக்கியத்துவம் பெறுகின்றது. போர்த்துக்கேயர் இப்பகுதியின் முக்கியத்துவத்தை உணர்ந்து இந்த மணற்திட்டில் கோட்டை ஒன்றை கட்டினர்.

போர்த்துக்கேயர்ரும் ஒல்லாந்தரும் தமது மொழிப் பெயர்களை தாம் ஆட்சி செய்த பிரதேசங்களில் அமைந்துள்ள இடங்களுக்கு சூட்டினார். ஊர்காவற்துறையை ‘காயஸ்’ (Cays)  என்று அழைத்தனர். போர்த்துக்கேயர் இக்கோட்டையை ‘காயஸ்’  (Cays) என்றும் அரச கோட்டை (Fortaleza Real)என்றும் Fortalez do Rio  ஆற்றின் கோட்டை என்றும் அழைத்தனர்.

1658இல் டச்சுகாரர் யாழ்ப்பாண கோட்டையை கைப்பற்ற முன்னர் காரைநகர் கோட்டையை கைப்பற்றினர். ஒல்லாந்து போர்வீரர் காரை தீவுக்கரையில் இருந்து குண்டுகளை வீசியமையால் கோட்டைக்குள் இருந்த மரத்திலான தண்ணீர் தாங்கி உடைந்தமையால் ஏற்பட்ட நீர்ப் பற்றாக்குறை காரணமாக இருவார கால முற்றுகையின் பின்னர் போர்த்துக்கேயர் சரணடைந்தனர்.

ஒல்லாந்தர் இலங்கையை பன்றியின் (Ham) வடிவில் இருப்பதாக கருதினார்கள் Ham இன் குதிக்கால் (காற்குழம்பு) பகுதியில் கடற்கோட்டை அமைந்திருப்பதாக எண்ணி Hammenhiel (Heel of the Ham) என அழைத்தனர்.

1795 ல் இக் கோட்டை எதிரி எதிர்ப்பு எதுவுமின்றி பிரித்தானியரின் வசமானது.

இக்கோட்டையை பூதத் தம்பி கட்டிய கோட்டை என்றும் கதையுண்டு

1930 களில் பொதுச்சுகாதாரம் கருதி தொழு நோயாளர்களை தனிமைப்படுத்தி வைத்திருக்கும் நிலையமாக இக்கோட்டை பயன்படுத்தப் பட்டது.1971 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக புரட்சி செய்த ஜே.வி.பி இன் முக்கிய தலைவர்கள் இக்கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர்.தற்போது இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள இக் கோட்டையை பொது மக்கள் கடற்படையின் ஏற்பாட்டில் பார்வையிடுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

1672 இல் பிலிப்ஸ் பால் டேய்ஸ் (Philip Baldaeus) என்பவரால் வரையப்பட்ட

காரைநகர் கடற்கோட்டையின் (Fort Hammenhiel) பறவைப்பார்வையில் வலது புறம் இருக்கும் காரைநகர் துறைமுகத்தில் பெரிய கப்பல் நிற்பதைக்காணலாம்.

 

ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாணத்துக்குள் நீர் ஏரி ஊடாக வரும் கப்பல்கள் கடற்கோட்டையில் (Hammenhiel) முன் அனுமதி (பாஸ்) பெறல் வேண்டும் Jacob அவர்கள் தமது கப்பல் மதியம் இரண்டு மணிக்கு காரைதீவு வந்ததாகவும் அங்கிருந்து பாஸ் பெறுவதற்கு கடற்கோட்டையை மாலை 4 மணிக்கு அடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் Jacob Haafner இன் நூலான Reize te voet door het eiland Ceilon எனும் நூலின் முதற்பக்கத்தில் உள்ள Hammenhiel கோட்டையின் படம்.

 

காரைநகர் துறைமுகமும் தோப்புக்காடு மக்களும்

காரைநகர் துறைமுகத்தின் வர்த்தக நடைவடிக்கைகளில்  தோப்புக்காட்டில் வாழ்ந்த மக்கள் பெரும் பங்கு வகித்தனர். தோணிகளில் ஆழ்கடல் தோறும் பல்வாணிபம் செய்யும் கடலோடிகளான தோப்புக்காட்டு மக்களின் வாழ்வாதாரம் கடலோடு சம்பந்தப்பட்டது. பல வகையான பொருட்களை ஏற்றிச் சென்று விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பெரும் வர்த்தகர்களால் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்ட டிங்கி அல்லது சலங்கை (600 – 1000 தொன் சரக்கினை ஏற்றக்கூடியவை) எனும் கடற்கலங்கள் கடற்கோட்டைக்கு அண்மிய ஆழ்கடல் பகுதியில் நங்கூரமிட்டு தரித்து நிற்கும். டிங்கிகளில் எடுத்துவரப்பட்ட சரக்குகளை இறக்கி வத்தைகளில் ஏற்றி காரைநகர் ஊர்காவற்றுறை துறைமுகப்பகுதியில் அமைந்திருந்த சுங்க திணைக்கள அலுவலங்களுக்கு எடுத்துச் சென்று பி;ன்னர் பண்டகசாலையில் ஒப்படைப்பர். சில சந்தர்ப்பங்களில் டிங்கிகளில் இருந்து

இறக்கப்படும் பொருட்களை யாழ்ப்பாண அலுப்பாந்தி துறைமுகத்திற்கும் ஏனைய தீவுகளுக்கும் எடுத்துச் செல்வர். தோப்புக்காட்டு மக்கள்  40 வத்தைகளை(20-40 தொன் ஏற்றக்கூடியது)சேவையில் ஈடுபடுத்தினர். தோப்புக்காடு வத்தை உரிமையாளர்கள் யாழ்ப்பாண பண்டக சாலையில் தீவகப் பல நோக்கு கூட்டுறவு சங்கங்கள் ஊடாக  மக்களுக்கு பங்கீட்டு அடிப்படையில் வழங்கப்படும் பங்கீட்டு அரிசி மூட்டைகளை தமது வத்தைகளில் ஏற்றி அனைத்து தீவுகளுக்கும் விநியோகிப்பர். காங்கேசன்;துறை துறைமுகத்தில் பொருட்களை இறக்கும் பணிகளுக்கு வத்தைகள் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் காங்கேசன்துறைக்கும் தோப்புக்காடு முருகன் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினர் தமது  வத்தைகளை எடுத்துச் செல்வர்.

யாழ்ப்பாணத்திற்கு வெளியிலும் வத்தைகளின் தேவைகள் இருக்கும் சந்தர்ப்பங்களில் தமது வத்தைகளை எடுத்துச் செல்வர். நீர்கொழும்பு சிலாபம் ஆகிய இடங்களுக்கு சென்று தேங்காய் ஏற்றி வருவார்கள். காரைநகர் துறைமுகத்திற்கும் தோப்புக்காட்டுமுனைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் 40 வத்தைகளும் நங்கூரமிடப்படும். தோப்புக்காடு பிரதேசத்தில் நாற்பது வத்தைகளும் சேவையில் ஈடுபடும் போது பணியாற்றக்கூடிய வலுவுள்ள ஆளணியினர் தோப்புக் காட்டில் வாழ்ந்தனர்.

‘ஏண் உற வாழ்பதி ஏற்றத் தோப்பகம்’ பெருமை பொருந்திய புகழ்மிக்க மக்கள் தோப்புக்காட்டின் கரையோரமாக வாழும் நெய்தல் நில மக்கள் என தோப்புகாட்டு மக்களின் சிறப்பினை ஈழத்துச்சிதம்பர புராணம் கூறுகிறது.

 

துறைமுகப்பகுதியும் வீட்டுத்திட்டங்களும்

மடத்துவளவு  வீட்டுத்திட்டம் :- 1982ம் ஆண்டு தேசிய வீடமைப்பு அதிகார சபையால் 40 வீடுகள் கட்டப்பட்டு மடத்துவளவில் வாழ்ந்ந மக்களுக்கு கையளிக்கப்பட்டது 1985ம் ஆண்டு துறைமுகப்பகுதியின் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக இவ் வீடுகளில் வாழ்ந்ந மக்கள் வெளியேறினர்.

தோப்புக்காடு வீட்டுத்திட்டம் :- சீநோர் அபிவிருத்தித் திட்டத்தினால் 110 பரப்ப காணி கொள்வனவு செய்யப்பட்டு காணி வீடு இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டது சுய உதவி வீட்டுத்திட்ட அடிப்படையில் கட்டிடப் பொருட்களை வீடமைப்பு அதிகார சபை வழங்க பயனாளிகள் வீடுகளைக் கட்டினர் 1978ம் ஆண்டு ஜீலை மாதம் சீநோர் அபிவிருத்தித் திட்ட நிதிக்குழு தலைவரால் வீடுகளுக்கான அத்திவாரம் இடப்பட்டது 1981ம் ஆண்டு பெப்ரவரி மாதம் பிரதம மந்திரியும் வீடமைப்பு அமைச்சருமான கௌரவ ஆர். பிரேமதாசா அவர்களினால் பயனாளிகளுக்குக் வீடுகள் கையளிக்கப்பட்டது.

 

 

தோப்புக்காட்டு பகுதி மக்களுக்கு இந்திய அரசின் வீட்டுத்திட்டத்தின் கீழ் 2012 இல் 22 வீடுகளும், 2014 இல் 36 வீடுகளும் வழங்கப்பட்டது. நெய்தல் கிராம மக்களுக்கு அவுஸ்ரேலிய செஞ்சிலுவை சங்க நிதி உதவியுடன் 38 வீடுகள் வழங்கப்பட்டது

சாந்திபுர வீட்டுத்திட்டம் :- மடத்துவளவில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்காக சாந்தி புரத்தில் போரூட் நிறுவன உதவியுடன் 30 வீடுகள் அமைக்கப்பட்டு வழங்கப்பட்டது இவ்வீடுகள் யாவும் தற்போது அழிவடைந்த நிலையில் உள்ளது. இங்கு வாழ்ந்த மக்கள் தற்போது சயம்பு வீதியில் அமைந்துள்ள சேயோன் குடியிருப்பில் அவுஸ்ரேலிய செஞ்சிலுவைச்சங்க நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட 32 வீடுகளில் வசிக்கின்றனர்.

 

 

தந்திமால்

தோப்புக்காட்டு கிழக்கு முனையில் இக்கட்டிடம் அமைந்துள்ளது இப்பகுதி ஆழங்குறைந்த ஒடுங்கிய பகுதியாக இருப்பதால் தொலைத்தொடர்பு சேவைக்கான Cable கடலூடாக இப்பகுதிக்கு நேராக உள்ள ஊர்காவற்துறை பிரதேசத்திற்கு எடுத்துச் செல்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது

தற்போது நடைமுறையில் உள்ள தொலைத்தொடர்பு சேவைகள் அறிமுகப்படுத்த முற்ப்பட்ட காலத்தில் தொலைத்தொடர்பு அலுவலர்கள் இங்கு பணியாற்றினார்.

 

 

 

 

 

1972ம்ஆண்டு மதிப்பீட்டிற்காக தயாரிக்கப்பட்ட நில அளவைத்திணைக்களத்தின் வரைபடத்தின் படி தோப்பு காட்டுப் பகுதி

 

 

கடற்படைமுகாம்மீதான தாக்குதலும்கடற்படைமுகாம்விஸ்தரிப்பும்

பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் காரைநகரில் கடற்படைத்தளம் காரைநகர் துறைமுகத்தை அண்டிய நீலன்காட்டுப்பகுதியில் அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் சிறிய இடத்தில் அமைந்திருந்த கடற்படை முகாம் கடற்படை முகாம் மீதான தாக்குதலை அடுத்து விஸ்தரிக்கப்பட்டது.ஆரம்ப காலத்தில் இருந்து கடற்படை முகாம் மீதான தாக்குதல் வரை மக்களின் இருப்பிடங்கள் கடற்படை முகாமின் அண்மிய பகுதிவரை இருந்தது.

1985 ஆம் ஆண்டு மாசி, வைகாசி மாதங்களில் இலங்கைத் தீவில் தமிழர்

தாயகம் ஒன்றினை அமைப்பதற்காக போராடிய போராளிக்குழுக்கள் கடற்படை

முகாம் மீது தாக்குதலை மேற்கொண்டனர். முதலாவது தாக்குதலுக்குப் பின்னர் கடற்படை முகாமுக்கு அண்மிய பகுதியில் வாழ்ந்த எட்டுக் குடும்பங்களையும், இரண்டாவது தாக்குதலுக்குப் பின்னர் நீலன் காட்டு வீதியின் கடற்கரையில் இருந்து தெற்குபுறமாகவும் மேற்கு வீதியின் தெற்குபுறமாகவும்  கிழுவனை வாய்க்காலிலிருந்து வரும் மழை நீர் கடலுக்கு செல்லும் வாய்க்காலின் மேற்குப்புறமாக (இராசாவின் தோட்டம் , நீலன்காடு, பலகாட்டின் ஒருபகுதி) வாழ்ந்த 125 குடும்பங்களையும் கடற்படையினர் கடற்படை முகாம் பாதுகாப்புக்கருதி வெளியேறுமாறு கேட்டுக் கொண்டதற்கமைவாக மக்கள் வெளியேறினர்.

கடற்படை முகாமுக்கு வடக்கே மேற்கு பிரதான வீதியின் வடக்குப்பக்கமாகவும்

நீலன்காட்டு வீதியின் வடக்குப்பக்கமாகவும், சிறிய தூரம் வரை வசித்த மக்கள்

மடத்துவளவு 40 வீட்டுத்திட்ட வீடுகளில் வசித்த மக்கள், தோப்புக்காடு பகுதியில் வாழ்ந்த மக்களும் பாதுகாப்பக் கருதி  சுயமாக வெளியேறினர். மடத்துவளவில் இயங்கிய காரைநகர் தெற்கு கிராம சபை,தபாற்கந்தோர்,ஆகியன விளானையில் செயற்பட ஆரம்பித்தன.இலங்கை போக்குவரத்துச் சபை தனியார் பேரூந்துகளின் துறைமுகம் வரையிலான பேரூந்துக்களின் சேவை நின்று போயின நலிவடைந்த நிலையில் இருந்த சிநோர்  அபிவிருத்தித்திட்டம் துறைமுகப் பகுதியில் இயங்கிய வர்த்தக ஸ்தாபனங்கள் உட்பட அனைத்தும் செயல் இழந்தன. 1991ம் ஆண்டு ஏப்பிரல் மாத தாக்குதலின் பின் காரைநகர் துறைமுகப்பகுதி முற்று முழுதாக கைவிடப்பட்ட நிலைக்கு உள்ளானது.

 

 

1972ம் ஆண்டு மதிப்பீட்டிற்காக தயாரிக்கப்பட்ட நில அளவைத்திணைக்களத்தின் வரைபடத்தின்படி பாதுகாப்பு காரணங்களுக்காக தற்போது கடற்படை  பகுதி

 

 

கடற்படை முகாம் விஸ்தரிப்பினால் நின்று போன செயற்பாடுகள்

  1. விஸ்தரிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்ந்த மக்கள் தங்கள் வாழ்விடங்களை மாற்றிக் கொண்டனர்.
  2. அரசர்கள் வாழ்ந்த தொல்லியல் பெறுமானம் மிக்க இராசவின் தோட்டம கடற்படையின் கட்டுப்பாட்டின்      கீழ் வந்தது
  3. தங்கோடை, கருங்காலி பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கு அனலைதீவு,எழுவைதீவு ஆகிய தீவுகளில் பனம் தோட்டங்கள் இருந்தன. அங்கிருந்த பனை ஓலைகள் கட்டுக்கட்டாக ஏற்றி வரப்பட்டு இராசாவின் தோட்டத்திற்கு பின்புறமாக உள்ள கடற்கரை பகுதியில் ஏலத்தில் விற்கப்படும் இவ் ஓலைகளை வீடு வேய்வதற்காகவும், வயல்களில் பசளையாகவும் பயன்படுத்தினார்கள்.
  4. நீலன் காட்டின் மேற்கு கரையோரத்தில் மீன்வாடிகள் அமைந்திருந்தன. இப்பகுதியில் மீன்பிடிப்பதற்கு சாதகமான காலநிலை உள்ள காலத்தில் ஐம்பது வரையிலான மீன் வாடிகள் இருந்தன. ஏனைய காலங்களில் பத்து வரையிலான மீன் வாடிகள் இருந்தன காரைநகரைச் சேர்ந்த திரு.ஆ.மகாலிங்கம் மயிலீட்டியைச் சேர்ந்த திரு.கேவி துரைசாமி ஆகியோர் கடற்தொழிலில் பல படகுகளை ஈடுபடுத்தி பிரபல மீன் வியாபாரிகளாகவும், செல்வந்தர்களாகவும் இருந்தனர். மீன் பிடிக்க சாதகமான காலநிலை உள்ள காலங்களில் இரண்டு பாரவூர்தி மீன்கள் நீலன் காட்டில் இருந்து தினமும் கொழும்புக்கு எடுத்துச் செல்லப்படும். மீனவர்கள் தங்கள் உணவுத் தேவையை தாமாகவே நிறைவு செய்தாலும் இவர்களுக்கு

தேவைப்படும் மேலதிக உணவு, நீர் என்பனவற்றை வழங்குவதில் ஈடுபட்ட மக்களுக்கு நாளாந்த வருமானம் கிடைக்கப்பெற்றது.

  1. நீலன் காட்டின் தென்மேற்கு பகுதியில் கடலுக்குள் கப்பல்கள் திருத்தும் இடம் (Dock Yard) இருந்தது இவ் வேலைத்தளம் பொது வேலைத்தள திணைக்களத்தால் (Public Works Department) பராமரிக்கப்பட்டது.
  2. மயிலிட்டி, வல்வெட்டி ஆகிய இடங்களில் இருந்து வருகைதரும் கடற்தொழிலாளர்களின் வழிபாட்டிற்காக கிறிஸ்தவ தேவாலயம் இருந்தது. இத் தேவாலயத்தில் கிறிஸ்தவ மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தமையால் ஊர்காவற்றுறை, பருத்தி அடைப்பு ஆகிய இடங்களில் இருந்தும் மக்கள் வழிபாடு செய்வதற்கு வருகை தருவார்கள்.
  3. பலுகாடு, கருங்காலி, துறைமுகம் தோப்புக்காடு பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கான மயானம் நீலன் காட்டுக் கடற்கரைக்கு அருகே அமைந்திருந்தது

 

காரைநகர் துறைமுகப்பகுதி அபிவிருத்திக்கான முன்மொழிவுகள்

2009ம் ஆண்டு மே 19ம் திகதி போர்முடிவுக்கு வந்தபின் சுமுகமான நிலை தோன்றியுள்ளது. தற்போது காரைநகர் துறைமுகப் பகுதி மீண்டும் துளிர் விட ஆரம்பித்துள்ளது. தோப்புக்காடு மக்களில் ஒரு பகுதியினர் மீ;ளகுடியேறியுள்ளனர் துறைமுகத்திலிருந்து ஆரம்பிக்கும் வீதிக்கு கிழக்குப்புறமாக உள்ள கடைத் தொகுதிகள் திறக்கப்பட்டுள்ளன. கடலில் தரித்து நின்று மீன்பிடிக்கக் கூடிய கப்பல்களை கட்டும் தளத்திற்கான (Boat Yard)  தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பேரூந்துகள் துறைமுகம் வரையிலான சேவையில்  ஈடுபடுகின்றன. தோப்புகாட்டுப் பகுதியில் அமைந்துள்ள தேசிய வீடமைப்பு வீட்டுத்திட்ட வீடுகளை புனரமைப்பதற்கான நிதி நன்கொடையாக வழங்கப்பட வேண்டும். நெய்தல்,தோப்புக்காடு, சாந்திபுரம், வீட்டுத்திட்ட மக்கள் மீள்குடியேற்றத்திற்கு அரச நிதி ஒதுக்கப்படல் வேண்டும். கடலோடிகளாக வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரத்திற்கான புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்த பட வேண்டும்.

காரைநகர் ஊர்காவற்றுறை துறைமுகங்களுக்கு இடையிலான போக்குவரத்து வசதிகள் அதிகரிக்கப்படல் வேண்டும். காரைநகர் ஊர்காவற்றுறை துறைமுகங்களுக்கு இடையிலான தாம்போதி அமைக்கப்படல் வேண்டும். திட்ட வரைபுகள் தயாரிக்கப்பட்டு உள்ள போதிலும் தேவையான நிதி ஒதுககுவதில் காலதாமதம் இடம் பெறுகின்றது.

தாம்போதி அமைக்கப்படுவதன் மூலம் மக்களின் குறிப்பாக அரச பணியாளர்களின் போக்குவரவு இலகு படுத்தப்படும். அரச பணியாளர்கள் விருப்புடன் தீவுப்பகுதிக்கு பணிக்கு செல்வர். நயினாதீவிற்கு செல்லும் யாத்திரிகர்களும் ஏனைய சுற்றுலாப்பயணிகளும் ஒரே தினத்தில் காரைநகர் கசூரினா கடற்கரைக்கும் வருகை தரலாம். காரைநகர் ஊர்காற்றுறை பகுதி மீண்டும் மக்கள் பாவனைக்கு உள்ளாகும்.

கடற்படையின் பாதுகாப்புக் கருதி சுவீரிக்கப்பட்ட மடத்து வளவுப் பகுதியில்

பிரதான வீதியின் மேற்குப் புறமாக குறிப்பிட்ட தூரத்திற்கு பாதுகாப்பு வேலிகளை

பின்னகர்த்துவதன் மூலம் கடந்த காலத்தைப் போன்று இரு பக்கமும்

கடைத்தொகுதிகள் அமைந்து எடுப்பான தோற்றத்தை துறைமுகப்பகுதிக்கு வழங்கும்

கடந்த காலங்களில் வரலாற்று பெருமைக்குரிய இடங்களின் பெறுமானங்களை உணர்ந்து அபிவிருத்தி     செய்தல் அவசியம்.

தமிழினத்தின் வாழ்வியலை, நம் முன்னோரின் வாழ்வியல் சிறப்பினை நமது எதிர்கால சந்ததியின் அறிதலுக்கு அல்லது ஆவணப்படுத்தலுடன் நின்று விடாது அந்த யுகத்தை மீளுருவாக்கம் செய்வது இன்றைய வளர்ந்த தலைமுறையின் பணியாகும்.

பொருளாதாரத்தை வழங்க வல்ல கடல் வளம் நம் கைகளை நழுவிச் செல்கிறது. மரபு வழி கடற் தொழிலை நம்பி வாழ்பவருக்கு அறிவியல் பெற்றுஎடுத்த வாய்ப்புக்களை வழங்கி அவர் தம் வாழ்வை மேம்படுத்தவேண்டும்

ஒரு தலைமுறையின் காட்சியாக இருந்தவை இன்று கனவாகி கடந்து கானல் நீர் ஆக முன்னர் விரைந்து செயற்படல் காலத்தின் கட்டாயம்.

 

காரை வசந்தம் – 2019 (காணொளி)

காரை வசந்தம் – 2019

 

 

காரை வசந்தம் – 2019 வெகு சிறப்பாக தமிழ் இசைக்கலாமன்ற மண்டபத்தில் 13.10.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அரங்கம் நிறைந்த ரசிகர்களுடன் அனைவரதும் பாராட்டினைப் பெற்ற கலைகளின் சங்கமமாக அமைந்து விளங்கியது.

 

 

நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்வையிட

தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

 

https://photos.app.goo.gl/VJo4NF9aDYhjPf778

ரொரன்ரோ விமானநிலையம் வந்தடைந்த “காரை வசந்தம்-2019” இன் பிரதம விருந்தினர் காரைநகர் அபிவிருத்திச் சபை தலைவர் திரு.இராமநாதன் சிவசுப்பிரமணியம் அவர்களை கனடா-காரை கலாச்சார மன்ற தலைவர்,செயலாளர் மற்றும் மன்ற தொண்டர்களும் வரவேற்றனர்.

 

ரொரன்ரோ விமானநிலையம் வந்தடைந்த “காரை வசந்தம்-2019” இன் பிரதம விருந்தினர் காரைநகர் அபிவிருத்திச் சபை தலைவர் திரு.இராமநாதன் சிவசுப்பிரமணியம் அவர்களை கனடா-காரை கலாச்சார மன்ற  தலைவர்,செயலாளர் மற்றும் மன்ற தொண்டர்களும் வரவேற்றனர்.

காரைநகர் மக்கள் ஒன்றிணைந்து எடுக்கும் வரலாற்று சிறப்புமிக்க விழாவாக 19 வது காரை வசந்தம் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு (OCT 13, 2019) ரொரன்ரோ தமிழ் இசைக் கலா மன்ற மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இளையவர் முதல் பெரியோர் வரை கலந்து ஊர் நினைவுகளை மீட்டு, உறவு கொண்டாடி மகிழும் இனிமையானதொரு வசந்தமாக அன்றைய தினம் அமையவுள்ளது.

இந்நாளில் எம் காரை மண்ணின் நினைவாக கலந்து சிறப்பிக்குமாறு அனைத்து கனடா காரை நல்லுள்ளங்களையும் கேட்டுக் கொள்கின்றேம்.

 

19வது ஆண்டாக வீசவுள்ள காரைவசந்தம் OCT 13, 2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு தமிழிசைக் கலா மன்ற மண்டபத்தில் (1120,Tapscott Road, Unit 3)

19வது ஆண்டாக வீசவுள்ள காரைவசந்தம்

OCT 13, 2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு

தமிழிசைக் கலா மன்ற மண்டபத்தில் (1120,Tapscott Road, Unit 3)

கனேடிய பல்கலாச்சார மண்ணில் காரை மாதாவை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் காரைநகர் மக்கள் ஒன்றிணைந்து எடுக்கும் வரலாற்று சிறப்புமிக்க விழாவாக 19 வது காரை வசந்தம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு (OCT 13, 2019) மலரவுள்ளது. இளையவர் முதல் பெரியோர் வரை கலந்து ஊர் நினைவுகளை மீட்டு, உறவு கொண்டாடி மகிழும் இனிமையானதொரு வசந்தமாக அன்றைய தினம் அமையவுள்ளது.

இயல் , இசை, நாடகம் என்கின்ற முத்தமிழ் விழாவாக சிறுவர்களின் மேடைப்பேச்சாற்றல்கள், சிறப்பு நடன நிகழ்வுகள் என்ற பல்வேறு நிகழ்வுகளுடன் வீசப்போகின்றது காரை வசந்தம் 2019.

விழாவில் கலந்துகொள்வோரின் நலன்கருதி சிற்றுண்டி வகைகளும், தேநீரும் பரிமாறப்படவுள்ளதோடு , விழா நிகழ்ச்சிகளின் இறுதியில் இரவு உணவும் வழங்கப்படும்.

இந்நிகழ்வு சிறப்படையவும், காரை மக்களின் பெருமையை கனேடிய பல்கலாச்சார மண்ணில் எடுத்தியம்பவும், கனடா வாழ் காரை மக்களுடன் பூமிப்பந்தில் பரந்து வாழும் காரை நல்லுள்ளங்களிற்கு அழைப்பு விடுக்கின்றோம். அனைவரும் வருக. காரை மண்ணின் புகழ் பரவச் செய்வோம்.

நிகழ்வுகள் சரியாக மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகும் என்பதை அறியத்தருகின்றோம்.

நன்றி!

              நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

காரை மண்ணின் கல்வித் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு “காரை வசந்தம் 2019”

 

காரை மண்ணின் கல்வித் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு

“காரை வசந்தம் 2019”

கனடா காரை கலாச்சார மன்றத்தின் கலை கலாச்சார நிகழ்வாக கனடாவில் இலையுதிர் காலத்தில் நடைபெறும் “காரை வசந்தம்” நிகழ்வு 13.10.2019 ஞாயிற்றுக்கிழமை நீண்ட வார விடுமுறைக்காலத்தில் நடைபெறவுள்ளது.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் தலைவர் திரு.சிவசுப்பிரமணியம் சிவராமலிங்கம் அவர்களின் அண்மைய காரைநகர் விஜயத்தின் போது காரைநகர் பாடசாலைகள், பொது அமைப்புக்கள், சேவையாளர்கள் மற்றும் பயனாளிகளை சந்தித்து தேவைகளை அறிந்து கொண்டதுடன் மேற்கொண்டு கனடா காரை கலாசார மன்றத்தினூடாக நடைமுறைப்படுத்தப்படவேண்டிய செயற்பாடுகளிற்கான வேண்டுகோள்களினையும் பெற்றுக்கொண்டார்.

அதனடிப்படையில் 22.09.2019 அன்று நடைபெற்ற நிர்வாக சபை கூட்டத்தின் போது தலைவர் அவர்களினால் பார்த்தும் கேட்டும் அறிந்து கொள்ளப்பட்ட விடயங்கள் நிர்வாக உறுப்பினர்களிடையே பகிர்ந்து கொள்ளப்பட்டதுடன் கனடா காரை கலாச்சார மன்றம் தொடர்ந்து செயற்படுத்தவுள்ள திட்டங்கள் தொடர்பாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

13.10.2019 அன்று நடைபெறவுள்ள “காரை வசந்தம் 2019” நிகழ்வின் மூலம் மேற்படி கேட்டும் பார்த்தும் அறிந்து கொள்ளப்பட்ட காரை மாணவர்களின் கல்விக்கான திட்டங்களிற்கான உதவிகள் நிறைவேற்றப்படவுள்ளன.

திட்டம் 1.
காரைநகர் பாடசாலைகளில் கல்வி கற்கும் தரம் 10 மாணவர்கள் சாதாரண தர பொதுப்பரீட்சைக்கு தயாராகும் வகையில் கல்விக்கருத்தரங்கு நடாத்துவதற்கு பாடசாலை அதிபர் ஆசிரியர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை ஏற்று அதனை இவ்வருடம் முதல் ஆரம்பித்து வைப்பது என நிர்வாக சபையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காரை இந்துக் கல்லூரி, யாழ்ற்ரன் கல்லூரி, வியாவில் சைவ வித்தியாலயம், சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் தரம் 10இல் கல்வி கற்கும் 100க்கு மேற்பட்ட மாணவர்கள் பயனடைவார்கள்.

திட்டம் 2.
யாழ்ற்ரன் கல்லூரியில் விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரின் திடீர் இடமாற்றத்தை தொடர்ந்து யாழ்ற்ரன் கல்லூரியில் ஏற்பட்டுள்ள விஞ்ஞான ஆசிரியர் பற்றாக்குறையினை நீக்க தற்காலிகமாக அடுத்து வரும் 6 மாதங்களிற்கு தகுதியான ஆசிரியர் ஒருவரை நியமிக்க அதற்கு தேவையான வேதனத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திட்டம் 3.
களபூமி சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலை அதிபரின் வேண்டுகோளிற்கு இணங்க மற்றைய பாடசாலைகளில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ‘smart class room’ திட்டத்தினை அமுல்படுத்த கோரப்பட்ட 3 இலட்சம் ரூபாய்களை வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திட்டம் 4.
காரைநகர் பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள நிழல் பிரதிகள் (photo copy) எடுப்பதற்கான தேவைகள் அதிகரித்துள்ள காரணத்தினாலும் ஒரு சில பாடசாலைகளில் உள்ள இயந்திரங்கள் கூடிய விரைவில் பழுதடைவதாலும் அனைத்து பாடசாலைகளின் ஆசிரியர்களும் தமது கற்கை தேவைகளிற்காக பயன்படுத்தும் நோக்கில் நீண்டகால பாவனைக்குட்பட்ட நிழல் பிரதி இயந்திரத்தை பெற்று காரைநகர் அபிவிருத்தி சபை காரியாலயத்தில் வைப்பதன் மூலம் அனைத்து பாடசாலை ஆசிரியர்களும் பயனடைவார்கள் என்னும் நோக்கில் 3 இலட்சம் ரூபாய்கள் வரையான நிதி ஒதுக்கப்பட்டும் அதற்குரிய காகிதாதிகளை கிரமமாக காரைநகர் அபிவிருத்தி சபை வழங்க மேலும் வருடம் ஒன்றிற்கு ஒரு இலட்சம் ரூபாய்கள் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திட்டம் 5.
காரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலகத்திற்கு பாடசாலை மாணவர்களிற்கு தேவையான பயிற்சி புத்தகங்களை பெற்றுக்கொள்ள அடுத்த வருட ஆரம்பத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள கல்வி திட்டத்தின் பிரகாரம் விற்பனைக்கு வரவுள்ள பயிற்சி புத்தகங்களை பெற்றுக்கொள்ள ஒரு இலட்சம் ரூபாய்கள் வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

“காரை வசந்தம் 2019” நிகழ்வுகளிற்கு அனுசரணை வழங்கி கனடா வாழ் காரை சிறார்களின் கலை வளர்ச்சிக்கு ஊக்குவிப்பு வழங்குவதுடன் கனடா வாழ் காரை மக்களின் நல்லெண்ணம் ஒற்றுமையினை மேம்படுத்தி நடைபெறவுள்ள காரை வசந்தம் நிகழ்வுகளில் கலந்து கொள்வதன் மூலம் மேற்படி திட்டங்கள் நிறைவேறவும் கனடா காரை கலாச்சார மன்றத்தின் வளர்ச்சியில் பங்கெடுத்து கொள்ளவும் அனைத்து கனடா வாழ் காரை மக்களை வருக வருகவென காரை வசந்தம் நிகழ்வுகளிற்கு வரவேற்கின்றது கனடா காரை கலாச்சார மன்றம்.

நிர்வாகம்
கனடா-காரை கலாச்சார மன்றம்

கனடா-காரை கலாச்சார மன்றம் பெருமையுடன் வழங்கும் “காரை வசந்தம் 2019”

கனடா-காரை கலாச்சார மன்றம் பெருமையுடன் வழங்கும்

“காரை வசந்தம் 2019”

கனடா காரை கலாச்சார மன்றத்தின் “காரை வசந்தம் 2019” எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30மணிக்கு 1120,Tapscott Road, Unit 3 என்ற முகவரியில் அமைந்துள்ள தமிழ் இசைக் கலா மன்றத்தின் தமிழ்க் கலை அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

 

நிர்வாகம்
கனடா-காரை கலாச்சார மன்றம்

காரை வசந்தம் 2019 மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு சிறுவர்கள் மற்றும் பெரியோர்களின் நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றன!

 

காரை வசந்தம் 2019 மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு சிறுவர்கள் மற்றும் பெரியோர்களின் நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

பரதநாட்டியம், சங்கீதம், நாடகம் உட்பட அனைத்து வகையான முத்தமிழ் நிகழ்வுகளுடன் சுவாரசீகமான நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

கலை நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சிகளை வழங்கும் சிறுவர்கள், ஆசிரியர்கள், பெரியோர்கள் September 10, 2019ற்கு முன்னர் மன்றத்தின் மின்னஞ்சல்:karainagar@gmail.com மற்றும் indujey61@gmail.com ஊடாகவோ அன்றி 647 339 5481 என்ற தொலைபேசி ஊடாகவோ தொடர்பு கொண்டு பதிந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

அத்துடன் காரை வசந்தம் விழா நிகழ்வின் போது தமிழ் தாய் வாழ்த்து, கனடிய தேசிய கீதம், மன்ற கீதம் என்பவற்றினை இசைப்பதற்கு ஆர்வமுள்ள சிறுவர், சிறுமியர் September 10, 2019ற்கு முன்னர் மன்றத்தின் மின்னஞ்சல்:karainagar@gmail.com மற்றும் indujey61@gmail.com ஊடாகவோ அன்றி 647 339 5481 என்ற தொலைபேசி ஊடாகவோ தொடர்பு கொண்டு பதிந்து கொள்ளுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி

நிர்வாகம்
கனடா-காரை கலாச்சார மன்றம்

“WORKING TOGETHER IS SUCCESS”

கனடா – காரை கலாச்சார மன்றம் பெருமையுடன் வழங்கும் காரை வசந்தம் 2019

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் காரை வசந்தம் 2018 கலை விழா மலர்

KARAI VASANTHAM 2018 BOOK

நெஞ்சம் நிறைந்த நன்றிகள்

நெஞ்சம் நிறைந்த நன்றிகள்

கனடா காரை கலாச்சார மன்றம் நடாத்திய காரை வசந்தம் 18வது கலை விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த பெரியோர்கள் முதல் குழந்தைகள் வரை அத்தனை பெருமக்களுக்கும் ,

மங்கள விளக்கேற்றி விழாவை மங்களகரமாக ஆரம்பித்து வைத்த பெரியோர்கள், தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து , கனேடிய தேசிய கீதம் , காரை மன்ற கீதம் இசைத்த மாணவிகள், கணேஷ துதி என்ற நாட்டிய சமர்ப்பணம், “சங்கத் தமிழ்” என்ற வரவேற்பு நடனம் மற்றும் “முருகன் கூத்துவம்” என்ற நடன நிகழ்வுகளை தந்தருளிய மாணவிகளையும் அதனை நெறிப்படுத்திய சாயி சகானா நாட்டிய பள்ளி, சிவசக்தி நடன பள்ளி மற்றும் பால விமல நர்த்தனாலய நடன பள்ளி அதிபர்களையும், கர்நாடக இசைப்பாடல்களை வழங்கிய மாணவர்களையும் அதனை நெறியாள்கை செய்த ஸ்ருதிக்கா கலைக்கூட அதிபரையும்,

“தமிழர் வாழ்வெல்லாம் இசையே” என்கின்ற நாடகத்தை மேடையேற்றிய மாணவ, மாணவிகளையும் அதனை நெறிப்படுத்திய ஆசிரியையும் இன்னிசை விருந்தளித்த ” நட்சத்திரா இசைக்குழுவின்” அத்தனை வாத்தியக் கலைஞர்களையும் மற்றும் பாடகர்களையும், பதிவு பகுதியை பொறுப்புணர்வோடு கையாண்ட தொண்டர்கள் காரைவசந்தம் 2018 பிரதம விருந்தினராக கலந்து கொண்ட பாராளமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி அவர்களையும், காரைநகரில் இருந்து வருகை தந்து சிறப்பித்த கொடை வள்ளலும் , சமூக சேவையாளருமான திரு. சண்முகம் சிவஞானம் தம்பதிகளுக்கும்,

மன்றத்தால் நடாத்தப்பட்ட மொழித்திறன் மற்றும் பண்ணிசைப் போட்டிகளில் பங்குபற்றிய மாணவ, மாணவியருக்கும், அப்போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவ, மாணவியருக்கும் குறிப்பாக பேச்சுப் போட்டிகளில் பங்குபற்றி முதலிடம் பெற்று தங்கள் ஆளுமையான பேச்சாற்றலை வெளிக்காட்டிய மாணவ செல்வங்களுக்கும்,

இவ்விழாவிற்கு பிரதான அனுசரணை வழங்கிய குழந்தை மருத்துவ நிபுணர் , Olymbic Wood Inc நிறுவன அதிபர் , Double Seal Insulation Inc. அதிபர் , Home Life வீடு விற்பனை முகவர் ஆகியோருக்கும்,
காரைவசந்தம் மலருக்கான விளம்பரங்களை தந்துதவிய அனைத்து வர்த்தகப் பெருமக்களுக்கும், ஆசி செய்தி களை அனுப்பி உதவிய பாராளமன்ற உறுப்பினர், கோட்டக் கல்விப்பணிப்பாளர், உதவி அரச அதிபர், காரை அபிவிருத்தி சபை, மணிவாசகர் சபை நிர்வாகத்தினர் ஆகியோருக்கும் ஆக்கங்கள் தந்துதவிய அறிஞர் பெருமக்கள் மற்றும் மன்ற செய்தி தொடர்பாளருக்கும்,

விழா மண்டபத்தை தந்துவிய தமிழிசைக் கலாமன்ற நிர்வாகத்தினருக்கும், இவ்விழாவிற்கான விளம்பரங்களை அறிவித்தும், ஒலி, ஒளிபரப்பியும் உதவிய ஊடகங்களுக்கும், இணையத்தளங்கள், நிகழ்வுகளை காணொளி பதிவு செய்து உதவிய அனலை எக்ஸ்பிரஸ் நிறுவனத்துக்கும்,படப்பிடிப்பில் உதவி புரிந்தோருக்கும், காரை வசந்தம் மலரை அழகுற வடிவமைப்பு செய்த Brightsun நிறுவனத்துக்கும்

இந்த விழாவை சிறப்பாக செய்வதற்கு உறுதுணையாக நின்று உழைத்த காரை இளையோர், எமது மன்ற தொண்டர்கள், உறுப்பினர்கள், நண்பர்களுக்கும், அவர் தம் குடும்பத்தினருக்கும்

கலைவிழா நிகழ்ச்சிகளை தொகுத்தளித்த அறிவிப்பாளர்களுக்கும், மற்றும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எமக்கு ஆலோசனை கூறுவதன் மூலமோ உதவி புரிந்த அனைத்து நல் உள்ளம்களுக்கும்

கனடா காரை கலாச்சார மன்றம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது

காரை வசந்தம் 2018 மலருக்காக எடுத்து வரப்பட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் மூலம் காரைநகர் பிரதேச செயலகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள், மேற்கொள்ளப்பட வேண்டிய உத்தேச திட்டங்கள் தொடர்பான விபரமான அறிக்கை விபரம் எடுத்து வரப்படுகின்றது.

 

காரை வசந்தம் 2018 மலருக்காக எடுத்து வரப்பட்ட ஒருங்கிணைப்புக்குழு  கூட்டத்தின் மூலம் காரைநகர் பிரதேச செயலகத்துக்கு ஒதுக்கப்பட்ட  நிதி  ஒதுக்கீடுகள், மேற்கொள்ளப்பட  வேண்டிய   உத்தேச  திட்டங்கள்  தொடர்பான விபரமான அறிக்கை விபரம் எடுத்து வரப்படுகின்றது. 

 

காரைநகரில் அரசினால் இவ்வாண்ட மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகள் – 2018

காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 2018 ஜனவரி தொடக்கம் இன்று வரை காரைநகர் பிரதேச செயலகம் ஊடாக அரசாங்கத்தினால் சுமார் 45 மல்லியன் ரூபா செலவில் 37 அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த அபிவிருத்திப் பணிகள் ஊடாக சுமார் 7,400 பொதுமக்கள் பயன் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாண்டு இதுவரை மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களின் விபரம் வருமாறு.

 

2018 JAN TO SEPT

 

 

2017ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டத்தின் தொகுப்பு

 

2017-1

 

 

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் – 2017
அனுமதி பெற்று நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் விபரம்

 

2017-2

 

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழவின் அனுமதிக்காகச் சமர்ப்பிக்கப்படும் திட்டங்கள்,

யாழ் மாவட்டம்

காரைநகர் பிரதேச செயலகம்

 

2017-3

 

 

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் – 20.10.2017 நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் விபரம்
 காரைநகர் பிரதேச செயலகம்

 

2017-4

காரை வசந்தம் 2018 மலருக்காக எடுத்து வரப்பட்ட காரைநகரில் இடம்பெற்ற முக்கியமான நிகழ்வுகளின் செய்தி தொகுப்பு விபரம்!

 

காரைநகர் செய்திகளும் நிகழ்வுகளும் -2018

ஓகஸ்ட் 14

காரைநகரில் வீசிய கடும் சுழல் காற்றினால் பல வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் பனை மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளது.

ஓகஸ்ட் 14 மாலை 6.30 மணியளவில் திடீரென கடும் காற்றுடன் மழை பெய்ய ஆரம்பித்தது. இவ்வேளையில் காரைநகர் கல்லந்தாழ்வு, பெரியமதவடி ஆகிய கிராமங்களில் உள்ள ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் காற்றினால் பிடுங்கி வீசப்பட்டு வீடுகள் சேதமடைந்தள்ளன. தெய்வாதீனமாக வீடுகளில் இருந்தவர்கள் காயங்கள் எதுவுமின்றித் தப்பிக்கொண்டனர்.

அத்துடன் பல பகுதிகளில் பனை மரங்களும் முறிந்து வீழ்ந்தள்ளன.

கூரைகள் தூக்கி வீசப்பட்ட வீடுகளில் இருந்த தொலைக்காட்சி,கணனி உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்கள் சேதமடைந்ததுடன் மின்சார வயர்கள் அறுபட்டு ஆபத்தான நிலை காணப்பட்டதாகவும் இது தொடர்பாக மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டு நீண்ட நேரத்திற்குப் பின்னரே சம்பவ இடத்திற்கு வருகைதந்து மின்சார இணைப்புக்களைத் துண்டித்ததாகவும் அதன் பின்னரே குறித்த வீட்டில் உள்ளவர்கள் வீடுகளுக்குள் சென்று தமது உடமைகளை மீட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

……………………………………………………………………………………………………………………………..

ஓகஸ்ட்,09

காரைநகர் கிட்ஸ் பார்க் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா ஓகஸ்ட் 9ம் திகதி காலை 8.30 மணிக்கு பாலர் பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் ஓய்வு நிலை அதிபர் பண்டிதர் மு.சு. வேலாயுதபிள்ளை தலைமையில இடம்பெற்றது.

இந்த விளையாட்டு விழாவில் பிரதம விருந்தினராக காரைநகர் பிரதேச சபைத் தவிசாளர் விஜயதர்மா கேதீஸ்வரதாசன் கலந்து சிறப்பித்தார்.

………………………………………………………………………………………………………………………………

 

சமுர்த்தி வங்கிகளின் ஊடாக வழங்கப்படும் கடன் தொகையினை பத்து இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி வலுவூட்டல் அமைச்சர் கரிசன் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதேச செயலர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களை யூலை22 இல் யாழ்ப்பாணத்தில் சந்தித்து யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயப்பட்ட போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ந.வேதநாயகன் தலைமையில் யாழ் நீராவியடியில் உள்ள இலங்கை வேந்தன் கலைக் கல்லூரி அரங்கில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்

இதுவரை காலமும் ஜந்த இலட்சம் ரூபா வரையிலான கடன் தொகைகளே பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. மேலும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி சுயதொழில் முயற்சிகளை மேம்படுத்துவதற்காக பத்து இலட்சம் ரூபா வரை கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதற் கட்டமாக ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிலும் தலா பத்துப் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு குறைந்த வட்டி வீதத்தில் இந்தக் கடன் தொகை வழங்கப்பட்டு அவர்களின் தொழில் முயற்சிகள் ஊக்கவிக்கப்பட உள்ளது.

காரைநகரில் 1786 குடும்பங்கள் சமுர்த்தி முத்திரைக் கொடுப்பனவினைப் பெற்றக்கொண்டுள்ளதுடன், சுமார் 1350 வரையிலான பயனாளிகள் ஏறத்தாள பத்துக் கோடி ருபா வரை கடனாகப் பெற்று சுயதொழில் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்பட்டது.

…………………………………………………………………………………………………………………………………..

ஜீலை 22

எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்திலிருந்து புதிய பயனாளிகளுக்கு சமுர்த்தி நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக சமுர்த்தி வலுவூட்டல் அமைச்சர் கரிசன் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் நடைமுறைப் படுத்தப்படும் சமுர்த்தி திட்டம் தொடர்பான முன்னேற்றம் தொடர்பாக ஆராய்ந்தார் அங்கு அவர் தெரிவித்ததாவது யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் யாழ் மாவட்டத்தில் மேலதிகமாக எட்டாயிரம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனக் கேட்டுள்ளார். கூடிய வரையில் அவர்களுக்கு இந்த நிவாரணத்தை வழங்க முயற்சிப்போம்.

புதிதாக நிவாரணத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டியவர்களது விபரங்களை அடுத்த மாதம் 15ம் திகதிக்கு முன்னர் சமுர்த்தி திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கமாறும் ஒக்ரோபர் மாதம் தொடக்கம் அவர்களுக்கு சமுர்த்தி நிவாரணக் கொடுப்பனவினை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.

…………………………………………………………………………………………………………………………………….

யூன், 18

காரைநகர் கிழவன் காடு கலாமன்றம் நடாத்திய மாணிக்கவாசகர் குருபூசை நிகழ்வு யூன் 18 திங்கட்கிழமை கலாமன்ற மணோன்மணி மண்டப வைத்தீசுவரக்குருக்கள் அரங்கில் இடம்பெற்றது.

மாலை 5.30 மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் செஞ்சொற் செல்வர் ஆறு.திருமுருகனின் திருவாசகம் தொடர்பான சிறப்புச் சொற்பொழிவும் கலா மன்ற ஆசிரியர்களின் திருவாசக இன்னிசை விருந்தும் தமிழருவி த.சிவகுமாரன் தலைமையிலான பட்டிமண்டபமும் இடம்பெற்றன.

…………………………………………………………………………………………………………………………..

யூலை 02

காரைநகரில் வியாவில் ஜயனார் ஆலய வருடாந்த மகோற்சவம் யூலை 02 வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ந்து பத்துத் தினங்கள் சிறப்பாக இடம்பெற்றது.

இம் மகோற்சவத்தின் தேர்த் திருவிழா யூலை 10ம் திகதி வெள்ளிக்கிழமையும் தீர்த்தத் திருவிழா ஆடி அமவாசை தினமான 11ம் திகதி சனிக்கிழமையும் இடம்பெற்றது.

……………………………………………………………………………………………………………………………….

 

 

ஓக 04

காரைநகரில் ஈழத்துச் சிதம்பர வருடாந்த தேவி மகோற்சவம்; ஓகஸ்ட் 04 சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ந்த பத்துத் தினங்கள் சிறப்பாக இடம்பெற்றது.

இம் மகோற்சவத்தின் தேர்த் திருவிழா ஓகஸ்ட் 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் தீர்த்தத் திருவிழா ஆடிப்பூர தினமான 13ம் திகதி திங்கட்க்கிழமையும் இடம்பெற்றது.

……………………………………………………………………………………………………………………………

ஓக 03

நாங்கள் செயற்பாட்டு வலையமைப்பின் ஏற்பாட்டில் அமரர் பேராசிரியர் கலாநிதி ஜோன் மனோகரன் கெனடி அவர்களின் ஞாபகார்த்தமாக காரைநகர் மாணவர்களுக்கான பாடசாலைப் பொதி வழங்கும் நிகழ்வு ஓக 03 வெள்ளிக்கிழமை காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆ.குமரேசமூர்த்தியும் சிறப்பு விருந்தினராக அமரர் பேராசிரியர் கலாநிதி ஜோன் மனோகரன் கெனடி அவர்களின் சகோதரியும் யாழ் பல்கலைக் கழக ஆங்கிலத்துறை சிரேஸ்ட விரிவுரையாளருமான கலாநிதி வீரமங்கை யோகரத்தினம் ஆகியோர் கலந்துகொண்டு வறுமைக் கோட்டிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலைப் பொதிகளை வழங்கிவைத்தனர்.

இதற்கான நிதியினைப் பேராசிரியரின் நண்பர்கள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

………………………………………………………………………………………………………………………………..

ஓக 03

காரைநகரில் பத்து இலட்சம் ரூபா செலவில் வீதி மின்விளக்குகள் பொருத்தும் பணி இடம்பெபற்று வருகின்றது.

வலந்iலைச் சந்தியில் 09 மின்விளக்ககளும் பிரதேச சபை உறுப்பினர்கள் 11 பேரும் தெரிவு செய்த தலா 11 மன்விளக்ககள் வீதமும் 130 மன்விளக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றது.

இதற்கான நிதியினை வடமாகாண சபை வழங்கியிருந்தது.

……………………………………………………………………………………………………………………

ஓக 01

காரைநகரில் புதிதாக அமைய உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை கட்டடம் அமைப்பதற்கான காணி கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருந்த காரைநகர் பிரதேசத்திற்கு தற்போது தனியான சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அமைக்கப்பட உள்ளது.

இதற்காக காரைநகர் வேம்படிப் பகுதியில்; 6.5 பரப்பக் காணி அறக்கொடைச் செம்மல் சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களினால் கொள்வனவு செய்யப்பட்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காணி கையளிக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்ற போது பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியக் கலாநிதி கனகராஜா நந்தகுமாரிடம் அறக்கொடைச் செம்மல் சுப்பிரமணியம் கதிர்காமநாதன் காணிக்கான உறுதியினைக் கையளித்தார். இந் நிகழ்வில் காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவரும் ஓய்வுநிலை வடமாகாண கல்வி அமைச்சின் பிரதிச் செயலருமான ப.விக்னேஸ்வரன், காரைநகர் பிரதேச சபை உப தவிசாளர் க.பாலச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கான கட்டடம் அமைக்கும் பணி விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

………………………………………………………………………………………………………

யூலை 27

அரசடிக்காடு கதிர்வேலாயுதசுவாமி கோயில் வருடாந்த மகோற்சவத் தேர்த்திருவிழா யூலை 27 வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

மகோற்சவத் தீர்த்தத் திருவிழா யூலை 28 சனிக்கிழமையும் இடம்பெற்றது. அன்று மாலை 5.00 மணியளவில் ஆலய முன்றலில் தீமிதிப்பு இடம்பெற்றது.

………………………………………………………………………………………………………………………….

யூலை 25

தேசிய சேமிப்பு வங்கி காரைநகர் கிளையினால் நடாத்தப்பட்ட கப்பன் புலமைப்பரிசில் கௌரவிப்பு யூலை 25 புதன்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் தேசிய சேமிப்பு வங்கி காரைநகர் கிளையில் இடம்பெற்றது.

முகாமையாளர் தி.மயூரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக தேசிய சேமிப்பு வங்கியின் வடபிராந்திய முகாமையாளர் ந.பகீரதனும் சிறப்பு விருந்தினர்களாக காரைநகர் கோட்டக் கல்விப்பணிப்பாளர் ஆ.குமரேசமூர்த்தி, யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் தி.மதிவதனன், ஊர்காவற்றுறை தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளர் வி.சுதாகர், வர்த்தகர் சு.செல்வக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கடந்த 2016ம், 2017ம் ஆண்டுகளில் தரம் ஜந்துப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த காரைநகர் தேசிய சேமிப்பு வங்கியில் சிறுவர் கணக்கினையுடைய மாணவர்கள் இந்தக் கௌரவிப்பு விழாவில் பதக்கம் அணிவித்துப் பரிசில் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

……………………………………………………………………………………………………………………………

யூலை 28

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் காரைநகர் இலகடியைச் சேர்ந்த கவிஞர் வடிவழகையனின் ‘முகிலெனக்குத் துகிலாகும்’ கவிதை நூல் வெளியீட்டு விழா யூலை 28 சனிக்கிழமை நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் இடம்பெற்றது.

யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிகபீட பீடாதிபதி பேராசிரியர் தி .வேல்நம்பி தலைமையில் பிற்பகல் 3.00 மணிக்கு இடம்பெற இவ் விழாவில் ஆசியுரையை கலாநிதி ஆறு.திருமுருகனும்

வரவேற்புரையை சமூகசேவை உத்தியோகத்தர் வே.தபேந்திரனும் வாழ்;த்துரையை  கவிஞர் சோ.பத்மநாதனும்

வெளியீட்டுரையை யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கச் செயலாளர் இ.சர்வேஸ்வராவும் நூல் நயப்புரையை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் வ.மகேஸ்வரனும் மதிப்பீட்டுரையை யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத் தலைவர் சொல்லருவி ச.லலீசனும் தோழமையுரையினை சமூக சேவை உத்தியோகத்தர் வரணியூர் வே.சிவராசாவும் பதிலுரையினை நூலாசிரியரும் கிராமசேவையாளருமான வ.வடிவழகையனும் நிகழ்த்தினர்.

ஞாலச் சுழலுக்குள் நாங்களகப்பட்டோமா? காலச் சுழிக்குள்ளே காலைவிட்டுக் கொண்டோமா? என்ற தலைப்பில் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராசா தலைமையில் சிறப்புக் கவியரங்கமும் இடம்பெறது..இதில் கவிஞர்கள் இ.பிரகலாதன், ஜீவா சஜீவன், ச.முகுந்தன் ஆகியோர் பங்குபற்றினர்.

……………………………………………………………………………………………………………………………

யூலை 21

யாழ் மாவட்டச் செயலக மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தினால் நடாத்தப்படும் மாபெரும் தொழிற் சந்தை யூலை 21ம் திகதி சனிக்கிழமை யாழ் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் இடம்பெற்றது.

காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 3.00 மணிவரை இடம்பெற்ற இச் சந்தையில் ஆடைத் தொழிற்சாலை,தனியார் உற்பத்தி நிறுவனங்கள்,பாதுகாப்புச் சேவை,சந்தைப்படுத்தல்,கணக்கியல் துறை, காப்புறுதித் துறை, பொலிஸ் சேவை,தாதியர்,குழந்தைப்பராமரிப்பாளர்,சுத்திகரிப்பாளர்,மற்றும் கோட்டல் முகாமைத்தவ வேலைவாய்ப்புக்கள் போன்ற தொழில் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்த்தல்,மற்றும்

கோட்டல் முகாமைத்துவம்,கணனித்துறைப் பயிற்சிகள்,தாதியர் பயிற்சிகள்,கப்பல்த்துறை தொடர்பான பயிற்சிநெறி,ஏனைய தொழில் பயிற்சி நெறிகள்,உள்ளிட்ட தொழிற் பயிற்சி பாநெறிகள் பற்றிய தகவல்கள்,மற்றும் சுயதொழிலுக்கான உபகரணக் காட்சிப் படுத்தல் என்பன இங்கு இடம்பெற்றது.

தொழில் தேடும்; காரைநகர் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் தங்கள் சுயவிபரக் கோவைகளுடன் வருகைதந்து பயன் பெற்றனர்.

………………………………………………………………………………………………………………………..

யூலை 07

காரைநகர் அபிவிருத்திச் சபையும்,சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையும் இணைந்து நடாத்திய பேராசிரியர் கென்னடி விஜயரத்தினம் ஞாபகார்த்த சைக்கிளோட்டப் போட்டி யூலை 07 சனிக்கிழமை காரைநகரில் இடம்பெற்றது.

பேராசிரியர் கென்னடி விஜயரத்தினத்தின் ஆறாம் மாத நினைவேந்தலை முன்னிட்டு நடாத்தப்பட்ட இப் போட்டிகள் காரைநகர் மணற்காடு முத்துமாரி அம்மன் ஆலய முன்றலில் காலை 6.00 மணிக்கு ஆரம்பமாகியது. 18 வயதிற்க மேற்பட்ட ஆண்,பெண் இருபாலாருக்குமான போட்;டிகளில் இளைஞர்,யுவதிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

சபையின் தலைவரும் ஓய்வு நிலை வடமாகாணக் கல்வி அமைச்சின் பிரதிச் செயலருமான ப.விக்னேஸ்வரன்,மற்றும் பேராசிரியர் கென்னடி விஜயரத்தினத்தின் குடும்பத்தினர் போட்டிகளை ஆரம்பித்து வைத்தனர்.

பெண்களுக்கான சைக்கிளோட்டப் போட்டியில் முறையே ம.ரோஸி,இ.விதுஷா, செ.தேனுசா,மோ.துர்ஷிகா,தி.நிதர்சனா ஆகியோர் முதல் ஜந்து இடங்களையும் பெற்றுக்கொண்டனர்.

முதலில் ஆரம்பமான பெண்களுக்கான சைக்கிளோட்டம் காரைநகர் மணற்காடு முத்துமாரி அம்மன் ஆலய முன்றலில் ஆரம்பமாகி 12 கிலோமீற்றர் காரைநகரைச் சுற்றி மீண்டும் தொடக்க இடத்தை வந்தடைந்தது.அடுத்து ஆரம்பமான ஆண்களுக்கான சைக்கிளோட்டம் காரைநகர் மணற்காடு முத்துமாரி அம்மன் ஆலய முன்றலில் ஆரம்பமாகி 24 கிலோமீற்றர் காரைநகரைச் சுற்றி இரு தடவைகள் சுற்றி மீண்டும் தொடக்க இடத்தை வந்தடைந்தது.

இப்போட்டிகளை வீதிகளின் இருமருங்கிலும் குழுமிய பலநூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்து ரசிக்க உற்சாகமாகப் போட்டிகள் இடம்பெற்றது.

………………………………………………………………………………………………………………………

யூன் 30

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையுடன் காரைநகர் பிரதேச செயலகமும் கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்திய கலைஞர்கள்,எழுத்தாளர் ஒன்றுகூடல் யூன் 30  சனிக்கிழமை காரைநகர் பிரதேச கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்;றது.

காரைநகர் பிரதேச செயலரும் கலாசாரப் பேரவையின் தலைவருமான திருமதி உஷா சுபலிங்கம் தலைமையில் இடம்பெற  இந்த ஒன்றுகூடலில் காரைநகர் பிரதேச கலாசார உத்தியோகத்தர் ச.தனுசன் வரவேற்புவை நிகழ்த்தியதுடன் தொடர்ந்து விசேட நிகழ்வுகளாக பிரதேச கலாசார அபிவிருத்தி தொடர்பான கருத்துப் பரிமாற்றமும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.நன்றி உரையினை கலாசாரப் பேரவை உப தலைவர் க.ஜெகதீசன் நிகழ்த்தினார் இந்நிகழ்வில் காரைநகர் பிரதேசத்தைச் சேர்ந்த கலைஞர்கள்,எழுத்தாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

காரைநகர் பிரதேச செயலர் திருமதி உஷா சுபலிங்கம் தலைமையுரையாற்றினார் காரைநகர் அபிவிருத்திச் சபையின் கௌரவ செயலரும் கலைஞருமான கை.நாகராசா, நாடகக் கலைஞர் கே.சி.கந்தசாமி,எழுத்தாளர் தவராசா உள்ளிட்ட கலைஞர்கள் பலர் காரைநகர் பிரதேச கலாசார அபிவிருத்தி தொடர்பாக உரையாற்றினர

கலைஞர் இ.ஜெயராமன் மங்கள விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார் காரைநகர் அபிவிருத்திச் சபையின் கௌரவ செயலரும் கலைஞருமான க.நாகராசா காரைநகர் பிரதேச கலாசார அபிவிருத்தி தொடர்பாக உரையாற்றினார்.

……………………………………………………………………………………………………………………

யூன் 06

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியின் வருடாந்தப் பரிசளிப்பு விழா யூன் 06 புதன்கிழமை கல்லூரி அதிபர் தி.மதிவதனன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.

விழாவில் விருந்தினர்கள் அழைத்து வரப்படுவதனையும் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஓய்வு நிலை வடமாகாணக் கல்வி அமைச்சின் பிரதிச்செயலர் ப.விக்னேஸ்வரன் மங்களவிளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைத்தார். பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் மாணவனுக்குப் பரிசில்கள் வழங்கிக் கௌரவித்தார்.

………………………………………………………………………………………………………………………..

 

யூன் 12

போதைப்பொருள் பாவனைக்கெதிரான விழிப்புணர்வு ஊர்வலமும் பிரசாரக் கூட்டமும் யூன் 12 செவ்வாய்க்கிழமை காரைநகரில் இடம்பெற்றது.

காரைநகர் பிரதேச செயலக சமுர்த்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஊர்வலத்தில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,காரைநகர் தொழிற் பயிற்சி நிலைய மாணவர்கள்,பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

காலை 9.00 மணியளவில் காரைநகர் பிரதேச செயலகத்திலிருந்து ஆரம்பமான இந்த ஊர்வலம் காரைநகர் பிரதான வீதிவழியாகச் சென்று காரைநகர் கதிர்வேலாயுதசுவாமி கோவில் முன்றலைச் சென்றடைந்து அங்கு போதைக்கு எதிரான விழிப்புணர்வுக் கூட்டம் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் காரைநகர் பிரதேச செயலகத் திட்டமிடல்ப் பணிப்பாளர்,பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர்,ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட பலர் தற்போது இடம்பெற்று வரும் போதைப் பொருள் பாவனை அதனைத் தடுக்கும் வழிவகைகள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து உரையாற்றியதுடன்

சட்டவிரோத போதைப் பொருள் பாவனை தொடர்பாக பிரதேச செயலக மற்றும் பொலிஸாரினால் அமைக்கப்பட்டுள்ள போதைப் பொருள் தடுப்புக் குழுவினருக்கு அறிவிக்குமாறும் அறிவிப்பவர்கள் தொடர்பான இரகசியம் பாதுகாக்கப்படுவதுடன் இது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதேச செயலக மற்றும் பொலிஸ் அதிகாரிகளினால் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

……………………………………………………………………………………………………….

யூலை 04

காரைநகர் இந்துக் கல்லூரியின்; நிறுவுநர் தினமும் வருடாந்தப் பரிசளிப்பு விழாவும் யூலை 04 கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது.

கல்லூரி பதில் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் விருந்தினர்களாக ஓய்வு நிலை வடமாகாணக் கல்வி அமைச்சின் பிரதிச் செயலர் ப.விக்னேஸ்வரன், தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.இளங்கோ ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பரிசில்களையும் பதக்கங்களையும் வழங்கினர்.மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

……………………………………………………………………………………………………………………

யூலை 11

காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த் திருவிழா யூலை 11 இடம்பெற்றது.

இந்த உற்சவத்தில் மஞ்சத் திருவிழா யூலை 7ம் திகதி சனிக்கிழமையும் தேர்த்திருவிழா 11ம் திகதி புதன்கிழமையும் தீர்த்தத் திருவிழா 12ம் திகதி வியாழக்கிழமையும் இடம்பெற்றது.புதிய மஞ்ச வெள்ளோட்டம் யூலை 7ம் திகதி சனிக்கிழமை பகல் இடம்பெற்றது.

…………………………………………………………………………………………………………

யூன் 30

ஈழத்துச் சிதம்பர சுற்றாடல் துப்பரவு செய்யப்பட்டுள்ளது. ஆலய இரண்டாம் வீதி,மூன்றாம் வீதி என்பன சமப்படுத்தப்பட்டு சீராக்கம் செய்யப்பட்டுள்ளதுடன்  பற்றைகள் வளர்ந்து பாழடைந்து காணப்பட்ட அம்மா மட சுற்றாடல் என்பனவும் துப்புரவு செய்யப்பட்டுகின்றது.

தியாகராசா பரமேஸ்வரனின் ஏற்பாட்டில் கனரக வாகனங்களின் உதவியுடன் ஆலய வீதிகள் சமச்சீராக்கப்பட்டு சீராக்கப்பட்டுள்ளதுடன் கோயில் குடியிருப்புக்கள் அமைக்கப்பட்டு வருகின்றது.

…………………………………………………………………………………………………………..

யூன் 20

காரைநகர் பண்டத்தரிப்பான் புலம் சிவகாமி அம்பாள் சமேத சிவசிதம்பரேஸ்வரர் ஆலயத் தேர்த் திருவிழா யூன் 20 புதன்கிழமை இடம்பெற்றது.

…………………………………………………………………………………………………………………………………

யூன் 22

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் யூன் 21 வியாழக்கிழமை அதிகாலை ஆனி உத்தர நடேசர் அபிஸேகமும் மாலை 5.30 மணியளவில் நடேசர் உற்சவமும் இடம்பெற்றது.

…………………………………………………………………………………………………………………………..

யூன் 11

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியின் வருடாந்தப் பரிசளிப்;யு விழா யூன் 11ம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 9.00 மணிக்கு இடம்பெற்றது.

கல்லூரி திறந்த வெளியரங்கில் அதிபர் தி.மதிவதனன் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநரின் செயலர் இ.இளங்கோவனும் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் ஓய்வு நிலைப் பிரதிச் செயலர் ப.விக்கினேஸ்வரனும்

கௌரவ விருந்தினர்களாக தி.ஏகாம்பரநாதன், சத்தி கல்வி மேம்பாட்டுக்கழக இயக்குநர் நா.இந்திரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

…………………………………………………………………………………………………………..

யூன் 08

பிரித்தானிய-யாழ் தீவக ஒன்றியத்தினால் ஆளவாழ்தல் அமைப்பின் ஒருங்கிணைப்புடன் ‘தீவகம்’ எனும் சப்ததீவுகளின் வரலாற்று நூல் வெளியீடு விழா யூலை 08 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் இடம்பெற்றது.

நூலகவியலாளர் என்.செல்வராஜா அவர்களின் படைப்பான இந்நூலின் வெளியீட்டு விழா  ஊடகவியலாளர் இளையதம்பி தயானந்தா தலைமையில் இடம்பெற்றது.

இவ் விழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்து சிறப்பித்தார்.

வரவேற்புரையினை யாழ்ப்பாணம் சமுர்த்தி வங்கி சங்க உத்தியோகத்தர் ப.ஜங்கரனும் நூலாசிரியர் அறிமுக உரையினை வடமாகாணக் கல்வி அமைச்சின் பிரத்தியேகச் செயலாளர் என்.ஆனந்தராஜ்யும் நூல் ஆய்வுரையை ஊடகவியலாளர் இளையதம்பி தயானந்தா, பேராசிரியர் கா.குகபாலன், ம.நித்தியானந்தன், ந.விஜயசுந்தரம், நெடுந்தீவு மகேஸ் ஆகியோரும்

கருத்துரைகளை வடமாகாண ஆளுநரின் உதவிச் செயலர் ஜே.எக்ஸ்.செல்வநாயகம், வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், வடமாகாணக் கல்வி அமைச்சின் செயலர் கி.சத்தியசீலன், மருத்துவர் வை.யதுநந்தனன், உடுத்துறை மகா வித்தியாலய அதிபர் வே.புவனேந்திரன், பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை, நடா.சிவராசா, எஸ்.பி.சாமி ஆகியோர் வழங்கினர்.

விசேட பிரதிகளை பிரபல வர்த்தகர்கள் ஈ.எஸ்.பி.நாகரத்தினம்,கலைமாடக்கோண் ச.சிவஞானம், ஆர்.ஜெயராசா உள்ளிட்ட பலர் பெற்றுக்கொண்டனர்.

……………………………………………………………………………………………………………………………..

யூன் 05

காரைநகர் மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா   யூன் 05 செவ்வாய்கிழமை இடம்பெற்றது.

………………………………………………………………..

ஏப்ரல் 04

வியாவில் சைவ வித்தியாலய அதிபர் கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம் அவர்களின் சேவை நயப்பும் அகவை அறுபது பூர்த்தி விழாவும் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

பாடசாலையின் சிரேஷ்ட ஆசிரியர் பா.இராமகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்ற இவ் விழாவில் பிரதம விருந்தினராக தீவக வலய முன்னாள் கல்விப் பணிப்பாளரும் கிளிநொச்சி மாவட்ட வலயக் கல்விப் பணிப்பாளருமான தி.ஜோன்குயின்ரஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்

……………………………………………………………………………………………………………………………

யூன் 10

காரைநகர் இந்துக் கல்லூரியில் தொழில்நுட்ப பீடம் ஒன்றினை விரைவில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.

காரைநகர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடந்த  சனிக்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இணைத் தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினரகள்; ஈ.சரவணபவன், அங்கஜன் ராமநாதன் ஆகியோரின் தலைமையில் இடம்பெறது.இக் கூட்டத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் இவ்வாறு தெரிவித்தார்.

சிறந்த பாடசாலை அண்மித்த பாடசாலைத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலும்  ஒரு பாடசாலை தெரிவு செய்யப்பட்டு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.அந்த வகையில் காரைநகர் இந்துக் கல்லூரியம் தெரிவு செய்யப்பட்ட போதிலும் அதற்குரிய பணிகள் முன்னெடுப்பது தாமதமாகி வருகின்றது.

இதனால் காரைநகர் பிரதேசத்தைச் சேர்ந்த உயர்தரம் கற்கும் பெருமளவு மாணவர்கள் தொழில்நுட்பக் கற்கைக்காக யாழ் நகரப் பாடசாலைகளுக்கே செல்லவேண்டி உள்ளது.எனவே காரைநகர் இந்துக் கல்லூரியில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் விரைவில் தொழில் நுட்ப பீடத்தினை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவரும் ஓய்வு நிலை மாகாணக் கல்விப் பணிப்பாளருமான ப.விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.

இதற்குப் பதில் அளித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் வட்டுக்கோட்டை இந்தக் கல்லூரியில் இந்த மாணவர்களை இணைத்து கற்பிக்க முடியும் எனத் தெரிவித்தார்.

எனினும் இப் பாடசாலைக்கு மாணவர்கள் இரு பஸ்களில் சென்றே கற்கமுடியும் இது மாணவர்களுக்குக் கடினமானதாக அமையும் எனச் சுட்டிக்காட்டியதை அடுத்து காரைநகர் இந்துக் கல்லூரியில் தொழில்நுட்ப பீடத்தினை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.

அத்துடன் காரைநகர் ஊரி அ.மி.த.க. பாடசாலையினைத் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனப் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இப் பாடசாலையில் தரம் 5 வரையான வகுப்புக்களே தற்போது நடைபெற்று வருகின்றது. இங்கு 120 இற்கம் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இவர்களில் வருடாந்தம் 30 மாணவர்கள் தரம் ஆறுக்காக வெளியேறுகின்றனர்.

வெளியேறும் மாணவர்கள் நீண்ட தூரம் சென்றே தரம் ஆறில் கற்க வேண்டி உள்ளது. வேறு பாடசாலைக்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் சீரின்றி இருப்பதுடன் வீதிகளும் மிக மோசமாகச் சேதமடைந்துள்ளது.இதனால் இங்குள்ள வறுமைப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பல இன்னல்களை அனுபவிப்பதுடன் கல்வியில் ஆர்வம் காட்டப் பின்னடிக்கினறனர்.எனவே இப்பாடசாலையில் தரம் 6 தொடக்கம் வகுப்புக்களை ஆரம்பிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.

இது தொடர்பில் மேலிடத்தில் ஆராயப்படும் என அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.

……………………………………………………………………………………………………………..

யூன் 03

காரைநகர் அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் 12 பேருக்கான கற்றாக்குக்கான சத்திர சிகிச்சை யூன்; 03 இல் யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது.

மே மாதம் கண்படர் அறுவைச் சிகிச்சை மேற்கொள்வதற்கான பரிசோதனை காரைநகர் அபிவிருத்திச் சபையின் எற்பாட்டில் யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது.

அதில் 25 பேருக்கான கற்றாக்குக்கான சத்திர சிகிச்சை எதிர்வரும் 1ம் திகதி மேற்கொள்வதற்கு சபை ஏற்பாடு செய்திருந்தது. அதன் அடிப்படையில் 12 பேருக்கான அறுவைச் சிகிச்சை இடம்பெற்றதுடன் ஏனையவர்களுக்கான சிகிச்சை விரைவில்; இடம்பெற உள்ளது.

வைத்தியர்களால் மூக்குக் கண்ணாடி வழங்க சிகபர்சு செய்த 11 பேருக்கும் கடந்த மே 24 இல்  மூக்குக் கண்ணாடி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

……………………………………………………………………………………………………………………………

யூன் 10

கடற்படையினரால் காரைநகர் இந்துக் கல்லூரி வளாகத்தில் அமைத்து வரும் முகாமினை அகற்றி அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என நேற்று நடைபெற்ற காரைநகர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் திர்மானம் நிறைவேற்றப்பட்து.

காரைநகர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று சனிக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இணைத் தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினரகள் ஈ.சரவணபவன், அங்கஜன் ராமநாதன் ஆகியோரின் தலைமையில் இடம்பெறது.

இக் கூட்டத்திலேயே மேற்படி தீர்மானத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கொண்டுவர அதனை ஏகமனதாக அங்கீகரித்ததுடன் உடனடியாக வடமாகாணக் கட்டளைத் தளபதிக்கும் பிரதமருக்கும் எழுத்துமூலம் அனுப்புமாறு பிரதேச செயலருக்குப் பணிப்புரை விடுத்தார்.

பாடசாலை வளாகத்திற்குள் கடற்படையினர் முகாம் அமைக்க அனுமதிக்க முடியாது எனவே அவர்கள் உடனடியாக வெளியேறவேண்டும் இதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றார்.

இது தொடர்பாக காரைநகர் பிரதேச சபை உப தவிசாளர் க.பாலச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கையில் பாடசாலைக்குச் சொந்தமான காணியினைப் பாடசாலைக்கு மீள வழங்க வேண்டும் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் காரைநகரில் பொலிஸ் நிலையம் அமைக்க முடியுமே தவிரக் கடற்படை முகாம் அமைக்க முடியாது எனவே கடற்படையினரை வெளியேற்ற உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எள்றார்.

காரைநகர் மடத்துவெளிப் பகுதியில் வாழ்ந்த 40 குடும்பங்கள் அகதிகளாக உள்ளன அவர்களது காணிகள் கடற்படை வசம் உள்ளது அதனையும் மீட்டுத்தர வேண்டும் என அப்பகுதிப் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டனர்.

மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனும் வடகடல் நிறுவனத் தலைவர் தியாகராசா பரமேஸ்வரனும் எமது பகுதிக்கு வருகைதந்த போது இப்பகுதியை உடனடியாக விடுவித்துத் தருவதாக வாக்குறுதி வழங்கினார்கள்.இச் செய்தி பத்திரிகைகளிலும் வந்தது ஆனால் இதுவரை எமது பகுதி விடுவிக்கப்படாமையால் தொடர்ந்தம் 40 குடும்பங்கள் ஏதிலிகளாக வாழவேண்டிய அவல நிலை காணப்படுகின்றது எனச் சுட்டிக்காட்டினார்கள்.

காரைநகர் பிரதேசத்தில் உள்ள நன்னீர்க் கிணறுகளில் இருந்து கடற்படையினர் தண்ணீர் எடுப்பதைத் தடைசெய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன் போது இணைத் தலைவர்கள் கருத்துத் தெரிவித்த போது இங்குள்ள கிணறுகளில் எவளவு அளவு நீரினைப் பெற்றுக் கொள்ள முடியும் என ஆய்வு செய்து அறிக்கை தருமாறு நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையிடம் கேட்டுக் கொண்டனர்.அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர்.

இதன் போது கருத்துத் தெரிவித்த காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவரும் ஓய்வு நிலை மாகாணக் கல்விப் பணிப்பாளருமான ப.விக்னேஸ்வரன் 90 களிற்கு முன்னர் காரைநகரில் நாற்பதாயிரம் மக்கள் வாழ்ந்தனர் அப்போது குடிநீர்ப் பிரச்சினை வரவில்லை தற்போது நிலத்தடி நீர் வகை தொகையின்றி எடுக்கப்படுவதால் தற்போது வசிக்கும் பத்தாயிரம் மக்களுக்கே குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

காரைநகர் அபிவிருத்திச் சபை பவுஸர்கள் உட்பட இன்று 6 பவுசர்கள் வெளியிடங்களில் இருந்து குடிநீரினை எடுத்து வந்து மக்களுக்கு விநியோகிக்கின்றது. மக்கள் குடிநீரினைப் பெறுவதற்குப் பெருந் தொகைப் பணத்தினைச் செலவு செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது. எனவே இங்குள்ள குடிநீரினை எமது மக்கள் பாவிப்பதற்கு ஏற்ற ஒழுங்குகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

ஊர்காவற்றுறையில் கடற்படையினரால் கடல் நீர் நன்னீராக்கப்பட்டு தமது தேவைக்கு மாத்திரமன்றி மக்களுக்கும் வழங்குகின்றனர் ஆனால் இங்கு மக்களின் தண்ணீரை அபகரிக்கின்றனர் எனச் சுட்டிக்காட்டப்பட்டது.

……………………………………………………………………………………………………………………………….

 

யூன் 05

பிரதேசத்தின் அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டே பிரதேச அபிவிருத்திக் கூட்டங்கள் நடாத்தப்படுகின்றன. இக் கூட்டத்தில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் உடனடியாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.

எனவே சம்பந்தப் பட்ட அதிகாரிகள் இக் கூட்டத்திற்கு வருகைதந்து தமது திணைக்களப் பிரச்சினைகளை முன்வைப்பது கட்டாயமானது. எனவே இக் கூட்டத்திற்கு வருகை தரவேண்டிய தீவக வலயக் கல்வி அதிகாரிகள் வருகை தரவில்லை கடந்த கூட்டத்திற்கும் வருகைதரவில்லை எனவே இதற்கான நடவடிக்கையை உடன் எடுக்குமாறு வலியுறுத்தினார் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்

இது தொடர்பாக கல்வி அமைச்சருக்கும் உரிய அதிகாரிகளுக்கும் எழுத்துமூலம் அறிவிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

காரைநகர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று சனிக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இணைத் தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினரகள்; ஈ.சரவணபவன், அங்கஜன் ராமநாதன் ஆகியோரின் தலைமையில் இடம்பெறது.

இக் கூட்டத்திலேயே மேற்படி பணிப்புரையினை விடுத்தார் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.

பிரதேச அபிவிருத்தியில் கல்விக்கான இடம் மிக முக்கியமானது அது தொடர்பாக ஆராய்வதற்கும் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கும் கல்வி அதிகாரிகள் இங்கு சமூகம் கொடுக்க வேண்டும் என்றார்.

காரைநகர் ஊரி அ.மி.த.க. பாடசாலையினைத் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனப் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இப் பாடசாலையில் தரம் 5 வரையான வகுப்புக்களே தற்போது நடைபெற்று வருகின்றது. இங்கு 120 இற்கம் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இவர்களில் வருடாந்தம் 30 மாணவர்கள் தரம் ஆறுக்காக வெளியேறுகின்றனர்.வெளியேறும் மாணவர்கள் நீண்ட தூரம் சென்றே தரம் ஆறில் கற்க வேண்டி உள்ளது. வேறு பாடசாலைக்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் சீரின்மை மற்றும் வீதிகள் மிக மோசமாகச் சேதமடைந்துள்ளது.இதனால் இங்குள்ள வறுமைப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பல இன்னல்களை அனுபவிப்பதுடன் கல்வியில் ஆர்வம் காட்டப் பின்னடிக்கினறனர்.எனவே இப்பாடசாலையில் தரம் 6 தொடக்கம் வகுப்புக்களை ஆரம்பிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.

எனினும் கூட்டம் முடிவுறும் தறுவாயில் தீவக வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எதுவித ஆயத்தமும் இன்றி கூட்டத்திற்குச் சமூகமளித்திருந்தார் அதனால் அவரால் உரிய பதில்கள் மற்றும் தரவுகளை சமர்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

…………………………………………………………………………………………………………………………..

யூன் 10

காரைநகர் பிரதேசத்திற்கான குழாய் நீர் விநியோகம் 2020 இல் ஆரம்பிக்கப்படும் என நம்பிக்கை வெளியிட்டார் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அதிகாரி.

காரைநகர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

காரைநகர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று சனிக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இணைத் தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினர்கள்; ஈ.சரவணபவன், அங்கஜன் ராமநாதன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்து

இக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் குழாய் நீர் விநியோகத்திற்கான நடவடிக்கைகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றது. அதற்கான வேலைத்திட்டத்தில் 80 வீதமான பணிகள் நிறைவடைந்துள்ளது. பிரதான வீதிகள் ஊடாக குழாய்கள் பொருத்தும் பணிகளும் தண்ணீர் தாங்கி அமைக்கும் பணிகளும் நிறைவுக்கு வருகின்றது.

உள்ளக வீதிகளில் குழாய் பொருத்துவதற்காகக் கேள்வி கோரல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.எனவே விரைவில் அப்பணியும் ஆரம்பிக்கப்படும் தாளையடியில் இருந்து கடல் நீர் சுத்திகரிக்கப்பட்டு விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

………………………………………………………………………………………………………………………………

மே 25

காரைநகர் இந்துக் கல்லூரி வளாகத்தில் கடற்படையினரால் முகாம் அமைப்பதை நிறத்தமாறு பாடசாலை நிர்வாகம் கோரிக்கை விடுத்தும் செவிமடுக்காத கடற்படையினர் முகாம் அமைக்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

கடற்படையினர் பாடசாலைக் காணிக்குள் முகாம் அமைக்கும் நோக்குடன் பாடசாலைக் காணியைப் புல்டோசர் மூலம் துப்புரவு செய்தபோது பாடசாலை நிர்வாகம் காரைநகர் பிரதேச சபைத் தலைவர், உப தலைவர் ஆகியோரை அழைத்துக்கொண்டு சென்று இது பாடசாலைக்குரிய காணி இதில் முகாம் அமைப்பதை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தது.

மறுதினம் சாதகமான பதிலைத் தருவதாகக் கூறிய கடற்படையினர் இரவோடு இரவாக பாடசாலைக் காணியின் குறிப்பிட்டளவு நிலப்பரப்பினைக் கையகப் படுத்தி முட்கம்பி வேலி அமைத்து முகாம் அமைக்கும் பணியினைத் தொடர்கின்றனர்.

…………………………………………………………………………………………………………………….

 

காரைநகர் இந்துக் கல்லூரிக்காக கல்லூரிக்கு அருகிலிருந்த காணி கனடா பழைய மாணவர் சங்க நதி உதவியுடன் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

…………………………………………………………………………………………………

மார்ச் 10

காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் விஜயதர்மா கேதீஸ்வரதாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் பிரதித் தவிசாளராக அதே கட்சியைச் சேர்ந்த  கணேசபிள்ளை பாலச்சந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

காரைநகர் பிரதேச சபையின் முதலாவது அமர்வு இன்று புதன்கிழமை காலை 9.00 மணியளவில் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் பற்றிக்நிறைஞ்சன் தலைமையில் கூடியது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்;பு தவிசாளராக விஜயதர்மா கேதீஸ்வரதாஸை பிரேரித்தது மீன் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக் குழு சார்பாக மயிலன் அப்புத்துரை பிரேரிக்கப்பட்டார்.

தெரிவுக்கான வாக்கெடுப்பு பகிரங்க வாக்கெடுப்பாக அமையவேண்டும் என்று  சுயேட்சைக் குழுவைத்தவிர ஏனையவர்கள் கேட்டுக்கொண்டனர்.தொடர்ந்து பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 03 உறுப்பினர்களும் ஈழமக்கள் ஜனனாயகக் கட்சியின் 02 உறுப்பினர்களும் ஜக்கிய தேசியக் கட்சியின் இரு உறுப்பினர்களும் விஜயதர்மா கேதீஸ்வரதாஸ் அவர்களுக்கு வாக்களி;தனர்.

சுயேட்சைக் குழு மூவரும் மயிலன் அப்புத்துரைக்க வாக்களித்தனர்.நான்கு பெரும்பான்மை வாக்ககளால் விஜயதர்மா கேதீஸ்வரதாஸ் தெரிவு செய்யப்பட்டார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னயின் ஒரு உறுப்பினர் நடுநிலை வகித்தார்.பெரும்பான்மை வாக்குகளால்; பிரதித் தவிசாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்;பைச் சேர்ந்த  கணேசபிள்ளை பாலச்சந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

…………………………………………………………………………………………………………………….

ஏப்ரல் 14

காரைநகர் வாரிவளவு கற்பக விநாகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த் திருவிழா சித்திரைப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14 சனிக்கிழமை மதியம் இடம்பெறது. முற்பகல் 11.00 மணிக்கு இடம்பெற்ற வசந்தமண்டபப் பூசையை அடுத்து விநாயகர் தேரில் எழுந்தருளித் தேர்ப்பவனி இடம்பெற்றது.

மறுநான் ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணியளவில் வியாவில் ஜயனார் ஆலய தீர்த்தக் கரையில் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.

…………………………………………………………………………………………………………….

 

ஏப்ரல் 05

காரைநகர் கல்விக் கோட்ட தமிழ் சிங்கள புத்தாண்டு விழா இன்று வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு காரைநகர் வலந்தலை தெற்கு அ.மி.த.க.பாடசாலை மண்டபத்தில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆ.குமரேசமூர்த்தி தலைமையில் இடம்பெற்றது.

இவ் விழாவிற்குப் பிரதம விருந்தினராக காரைநகர் மணிவாசகர் சபையின் பொதுச் செயலாளர் சிவத்திரு வே.முருகமூர்த்தி அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் மாணவர்களின் தமிழ் சிங்களப் பண்பாட்டுக் கலைநிகழ்வுகள் இடம்பெற்றன.

……………………………………………………………………………………………………………………………..

ஏப்ரல் 08

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க வருடாந்தப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் இன்று 8ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணியனவில்  நடைபெற்றது.

கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரி அதிபரும் பழைய மாணவர் சங்கத் தலைவருமான திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் இடம்பெறும் இக் கூட்டத்தில் பதிய நிர்வாக சபைத் தெரிவு இடம்பெற்றது.

சங்கத்தின் தலைவராக பதவி வழியாக அதிபர் திருமதி சிவந்தினி வாகீசனும் செயலாளராக சுந்தரலிங்கம் அகிலனும் பொருளாளராக கணபதிப்பிள்ளை நிமலதாசனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

உப தலைவராக மீண்டும் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளையும் உப செயலாளராக இ.திருப்புகழூர்சிங்கமும் உப பொருளானராக செ.அருட்செல்வமும் தெரிவாகி உள்ளதுடன்

நிர்வாக சபை உறுப்பினர்களாக ந.பாரதி, ந.யோகநாதன், த.சற்குணராசா, வி.கம்சன், வே.சபாலிங்கம், தெ.லிங்கேஸ்வரன், க.நாகராசா, திருமதி  அ.பத்மலீலா, திருமதி ந.யோகலட்சுமி, எஸ்.கலைச்செல்வி ஆகியோரும் கணக்காய்வாளராக லண்டன் இ.சிவசுப்பிரமணியமும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

……………………………………………………………………………………………………………………

ஏப்ரல் 02

காரைநகர் ஊரிக் கிராமத்தில் அமைக்கப்பட்ட மீனவர் இளைப்பாற்று மண்டபம் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 1.00 மணியளவில் முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்துக்குமான பணியகத்தின் தவிசாளருமான சந்திரிக்கா பாண்டாரநாயக்கா குமாரதுங்காவினால் திறந்துவைக்கப்பட்டது.

காரைநகர் பிரதேச செயலகத்தின் ஊடாக தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்துக்குமான செயலணியின் நிதி உதவியுடன் இரு மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட  இம் மண்டபத் திறப்பு விழா காரைநகர் பிரதேச செயலர் திருமதி உஷா சுபலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்ட திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கா அவர்கள் மண்டபத்தினை நாடாவெட்டித் திறந்துவைத்தார்.

இந் நிகழ்வில் வடமாகாண ஆளுநர் றெஜினேட் கூரே,யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ந.வேதநாயகன், காரைநகர் பிரதேச சபைத் தலைவர் விஜயதர்மா கேதீஸ்வரதாஸ் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள்,அரச உயர் அதிகாரிகள்,பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் உரையாற்றிய திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கா அவர்கள் காரைநகர் உள்ளிட்ட யாழ்ப்பாணப் பிரதேசங்களில் தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவுகின்றது.இதனால்மக்கள்பாரிய கஷ்டங்களை எதிர்நோக்குகின்றனர்.இதனைத் தீர்ப்பதற்கு பல வழிகளிலும் முயற்சிக்கின்றோம் அந்த வகையில் வடமாகாணத்தில் 120 குளங்களை அமைப்பதற்கும் புனரமைப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டள்ளது.அந்தத் திட்டத்தில் இன்று அராலி உள்ளிட்ட இரண்டு இடங்களில் குளங்களை அமைத்து திறந்துவைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

…………………………………………………………………………………………………………………………..

மார்ச் 29

ஈழத்துச் சிதம்பர வருடாந்த மகோற்சவத் தேர்திருவிழா இன்று வியாழக்கிழமை காலை 8.00 மணிக்கு இடம்பெற்றது.

காலை 7.00 மணிக்கு இடம்பெறும் வசந்தமண்டபப் பூசையை அடுத்து சோமாஸ்கந்தர் தனது பரிவார மூர்த்திகளுடன் தேரில் எழுந்தருளிப் பஞ்சரத பவனி இடம்பெற்றது

மறுநாள் காலை 6.35 மணிக்கு நடேசர் உற்சவமும் பகல் 9.30 மணிக்கு தீர்த்தோற்சவமும் இரவு 7.30 மணிக்கு கொடியிறக்க உற்சவமும் இடம்பெற்று மறுநாள் சனிக்கிழமை இரவு 7.00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் இடம்பெற்றது.

…………………………………………………………………………………………………………………..

மார்ச் 01

கிழவன்காடு கலா மன்ற ஸ்தாபக தினம் வியாழக்கிழமை கலா மன்ற மனோன்மனி கலையரங்கில் மன்றத்தின் ஸ்தாபகத் தலைவர் நடராசா சோதிநாதன் தலைமையில் இடம்பெற்றது.

கலா மன்றம் ஆரம்பிக்கப்பட்டு 17 ஆண்டுகள் நிறைவடைந்தமையை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகள் மற்றும் கம்பவாரிதி இ.ஜெயராஜ் தலைமையிலான சிறப்புப் பட்டிமண்டபம் என்பன இடம்பெற்றதுடன்

மன்றத்தில் 17 வருடங்களாக இசை ஆசிரியராகப் பணியாற்றும் செல்வி லீலாவதி இராசரத்தினம் அவர்களுக்கு ‘திருவாசகக் குயில்’ சிறப்புப் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. நிகழ்வில் பெருமளவானோர்  கலந்துகொண்டனர்.

…………………………………………………………………………………………………………………….

பெப்ரவரி 28

காரைநகர் மடத்துக்கரை முத்துமாரி அம்பாள் ஆலயத் தேர்த் திருவிழா பெப்ரவரி 28 புதன்கிழமை இடம்பெற்றது. பல நூற்றுக்கணக்கான பத்தர்களின் அரோகராக் கோஷம் ஒலிக்க அம்பாள் தேருக்கு எழுந்தருளி தேரில் ஆரோகணித்து அடியவர்களுக்கு அருட்காட்சி வழங்கினார்.

…………………………………………………………………………………………………………………………

காரைநகர் வலந்தலை தெற்கு அ.மி.த.க.பாடசாலையின் வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் விழையாட்டு விழா ஜனவரி 26 இல் பாடசாலை மைதானத்தில் அதிபர் க.நேத்திரானந்தன் தலைமையில் இடம்பெற்றது.

இவ் விழாவிற்குப் பிரதம விருந்தினராக முன்னாள் காரைநகர் பிரதேச செயலரும் யாழ் மாநகரசபை ஆணையாளருமான இ.த.ஜெயசீலனும் சிறப்பு விருந்தினர்களாக தீவக வலயப் பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஆ.யோகலிங்கம்,இலங்கை வங்கி காரைநகர் கிளை முகாமையாளர் வே.புவனேந்திரராஜா ஆகியோரும் கௌரவ விருந்தினராக தி.பிரமேந்திரதீசனும் கலந்துகொண்டனர்.

………………………………………………………………………………………………………………………….

மார்ச் 07

கரைநகரில் வதியும் உயர் கல்வியினைக் கற்பதற்கான நிதி வசதி இன்றி சிரமப்படும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மாணவர்களுக்கு நிதி உதவியினை வழங்குவதற்கு காரைநகர் அபிவிருத்திச் சபை ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக அதன் தலைவரும் ஓய்வு நிலை வடமாகாணக் கல்விப் பணிப்பாளருமான ப.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

காரைநகரைத் தற்போது வசிப்பிடமாகக் கொண்டுள்ள வறுமைக் கோட்டிற்குட்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த உயர்தரம் மற்றும் பல்கலைக் கழகக் கல்வியினைத் தொடர நிதி வசதியின்றி இடர்ப்படும் மாணவர்கள் தங்கள் சுய விபரங்களை தமது பாடசாலை அதிபர் மற்றும் கிராமசேவையாளரின் உறுதிப்படுத்தலுடன் காரைநகர் அபிவிருத்திச் சபை அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறும்

தகுதி உடையவர்கள் பரிசீலிக்கப்பட்டு நிதி உதவி வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

………………………………………………………………………………………………………………………

 

ஜனவரி 20

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் நேற்று வெள்ளிக்கிழமை கல்லூரி அதிபர் சதா.நிமலன் தலைமையில் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

பிரதம விருந்தினராக கல்லூரியின் பழைய மாணவரும் பழைய மாணவர் சங்க ஜக்கியராச்சியக் கிளை உறுப்பினருமான லோகசிங்கம் பிரதாபன் கலந்துகொண்டார்.

பிரதம விருந்தினர் மற்றும் யாழ் மாநகரசபை ஆணையாளர் இ.த.ஜெயசீலன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கச் சான்றிதழ்களை வழங்கினர் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டம் மற்றும் தற்காப்பு கலையினை மாணவர்கள் நிகழ்த்தியமை சிறப்பாக இருந்தது.

………………………………………………………………………………………………….

பெப் 12

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை மகா சிவராத்திரி விரதம் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது.

நான்கு சாமங்களும் விஷேட அபிஸேக ஆராதனைகளும் பூசை வழிபாடுகளும் இடம்பெற்றது. அதிகாலை தொடக்கம் மறுநாள் அதிகாலை வரை ‘ஓம் நமசிவாய சிவாய நம ஓம்’ என்னும் திருவைந்தெழுத்து மந்திரம் இருபத்து நான்கு மணிநேரம் ஓதும் அகண்டநாம வழிபாடும் அஷ்டோத்திர நாம அர்ச்சனை ஆகியனவும் அன்றைய நாள் முழுவதும் காரைநகர் மணிவாசகர் சபை எற்பாட்டில் நடாத்தப்பட்டது.

மறுநாள் புதன்கிழமை அதிகாலை இடம்பெறும் வசந்த மண்டபப் பூசையையடுத்து  சுவாமி துர்வாக சாகர சமுத்திரதீர்த்தத்திற்கு எழுந்தருளி தீர்த்தவாரி இடம்பெற்றது.

…………………………………………………………………………………………………………………………..

பெப் 10

இன்று நடைபெற்ற உள்ளு10ர் அதிகார சபைகள் தேர்தலில் காரைநகர் பிரதேச சபைக்கு இலங்கைத் தழிழரசுக் கட்சியிலிருந்;து மூவரும் மீன் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் மூவரும் ஜக்கிய தேசியக் கட்சி,ஈழமக்கள் ஜனனாயகக் கட்சி ஆகியவற்றிலிருந்து தலா இருவரும் காங்கிரசைச் சேர்ந்த ஒருவருமாக 1 உறுப்பினர்கள் தெரிவாகினர்.

இன்று அதிகாலை 7.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை இடம் பெற்ற வாக்குப் பதிவுகளின் அடிப்படையில் பிரதேச சபைக்கான 11 உறுப்பினர்கள் தெரிவாகினர்.

பத்து உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக எட்டுக் கட்சிகளைச் சேர்ந்த 104 பேர் காரைநகர் பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிட்டனர்.

இலங்கைத்தழிழரசுக்கட்சியில்1ம்வட்டாரத்தில்(தங்கோடை,பத்தர்கேணி,மருதபுரம்,செம்பாடு உள்ளிட்ட கிராமங்கள்) 314 வாக்குகளைப் பெற்று கணேசபிள்ளை பாலச்சந்திரன் தெரிவாகி உள்ளார். 2ம் வட்டாரத்தில் (காரை மத்தி,வேதரடைப்பு,மல்லிகை உள்ளிட்ட கிராமங்கள்) 479 வாக்குகளைப் பெற்று ஆண்டிஜயா விஜயராசா தெரிவாகி உள்ளார் .3ம் வட்டாரத்தில் (பெரியமணல்,மருதடி,சடையாளி,புதுறோட்,மாப்பாணவூரி,சயம்புவீதி உள்ளிட்ட கிராமங்கள்) 328 வாக்குகளைப் பெற்று விஜயதர்மா கேதீஸ்வரதாஸ் தெரிவாகி உள்ளார்.

மீன் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக்குழு 4ம் வட்டாரத்தில் (களபூமி,பாலாவோடை,விளானை,பொன்னாவளை,சத்திரந்தை,இடைப்பிட்டி,மொந்திபுலம்,வலந்தலை, காளிகோவிலடி,திக்கரை,ஊரி உள்ளிட்ட கிராமங்கள்) 356வாக்குகளைப் பெற்று நல்லையா ஜெயக்கிருஸ்ணனும் 5ம் வட்டாரத்தில் (கருங்காலி,வியாவில்,பலகாடு,கல்லந்தாழ்வு உள்ளிட்ட கிராமங்கள்) 263 வாக்ககளைப் பெற்று மயிலன் அப்புத்துரையும் 6ம் வட்டாரத்தில் (துறைமுகம் பிள்ளையார் கோவிலடி, பாலாவோட, தோப்புக்காடு உள்ளிட்ட கிராமங்கள்) 275 வாக்குகளைப் பெற்று மாணிக்கம் யோகநாதனும் தெரிவாகி உள்ளதுடன்.

காரைநகர் பிரதேசம் முழுவதும் இலங்கைத் தழிழரசுக் கட்சி 1623 வாக்குகளையும் ஜக்கிய தேசியக் கட்சி  1263 வாக்குகளையும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 1197 வாக்ககளையும் மீன் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக்குழு 1080 வாக்ககளையும் பெற்றது. அகில இலங்கைத் தழிழ் காங்கிரஸ் மொத்தம் 359 வாக்ககளையும் தழிழர் விடுதலைக் கூட்டணி 156 வாக்குகளைம்,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 136 வாக்ககளையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 15 வாக்குகளையும் காரைநகர் மக்களிடம் சுவீகரித்துக் கொண்டது.

………………………………………………………………………………………………………………………………………

பெப் 06

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லநர் போட்டி பெப் 06 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கல்லூரி பிரதி அதிபர் திருமதி கலைவாணி அருள்மாறன் தலைமையில் இடம்பெற்றது.

இப் போட்டிக்குப் பிரதம விருந்தினராக கல்லூரியின் முன்னாள் அதிபர் வே.முருகமூர்த்தியும் சிறப்பு விருந்தினராக இலங்கை வங்கி காரைநகர் கிளை முகாமையாளர் வே.புவனேந்திரராஜாவும் கலந்துகொண்டனர்.

………………………………………………………………………………………………………………………………………

பெப் 07

காரைநகர் வேதரடைப்பு சோலையான் வீதி ஆலங்கன்று ஞானவைரவர் ஆலய மகா கும்பாபிஷேகம் பெப்ரவரி 07ம் திகதி புதன்கிழமை இடம்பெற்றது.

பத்தர்கள் எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை காலை 7.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரை இடம்பெற்று மறுநாள் புதன்கிழமை காலை 7.35 மணி முதல் 8.40 மணி வரை உள்ள சுபவேளையில் மகா கும்பாபிஷேகம் இடம்பெற்றது.

சிவஸ்ரீ சி.மங்களேஸ்வரக் குருக்கள் பிரதம குருவாக இருந்து கும்பாபிஷேகத்தினை நிகழ்த்தி வைத்தார். தொடர்ந்து 48 தினங்கள் மண்டலாபிஷேகம் இடம்பெற்று இறுதி நாள் அன்று 1008 சங்காபிஷேகம் இடம்பெற்றது.

………………………………………………………………………………………………………………………………………

ஜன 18

காரைநகர் மாப்பாணவூரி அருள்மிகு நாச்சி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் ஜனவரி 18; வியாழக்கிழமை இடம்பெற்றது.

காரைநகர் ஈழத்துச் சிதம்பர பிரதம குரு சிவஸ்ரீ தியாக உமாசுதக்குருக்கள் தலைமையில் முற்பகல் 11.30 மணி தொடக்கம் 1.30 மணி வரையுள்ள சுப வேளையில் மகா கும்பாபிஷேகம் இடம்பெறது.

…………………………………………………………………………………………………………………….

பெப் 02

காரைநகர் வலந்தலை ஸ்ரீ மடத்துக்கரை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பஞ்சதள இராஜ கோபுர மகா குப்பாபிஷேகம் தைப்பூச தினமான ஜனவரி 30 புதன்கிழமை இடம்பெற்றது.

நயினை நாகபூசனி அம்மன் ஆலய பிரதம சிவாச்சாரியார் சிவஸ்ரீ ப.முத்துக்குமாரசுவாமிக் குருக்கள் பிரதிஷ்டா பிரதம குருவாக இருந்து  கும்பாபிஷேகத்தினை நிகழ்த்திவைத்தார்.

இராஜ கோபுரத்தினை சுவிஸ் நாட்டில் வதியும் பரோபகாரி சுப்பிரமணியம் கதிர்காமநாதனும் மணிமண்டபத்தினைக் கலைமாடக்கோன் சண்முகம் சிவஞானமும் தங்களது உபயமக அமைத்து வழங்கினர்.

பல நூற்றுக்கணக்;கான பக்தர்களின் அரோகராக் கோசத்துடன் கும்பாபிஷேகம் சிறப்புற இடம்பெற்றது.

………………………………………………………………………………………………………………………..

ஜன 29

காரைநகர் மணற்காடு கும்பநாயகி ஸ்ரீ மத்துமாரி அம்மன் ஆலயத்தில் ஜனவரி 29 செவ்வாய்க்கிழமை பாற்குடப் பவனியும் மகா கும்பாபிஷேக தின சங்காபிஷேகமும் இடம்பெற்றது.

காரைநகர் வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயத்திலிருந்து அம்பாள் ஆலயத்தை நோக்கிப் பாற்குடப் பவனி இடம்பெற்றது. தொடர்ந்த பாற்குட அபிஷேகமும் 1008 சங்காபிஷேகமும் இடம்பெற்று பகல் 12.00 மணிக்கு இடம்பெற்ற வசந்தமண்டபப் பூசையை தொடர்ந்து அம்பாள் திருவீதி உலா வரும் காட்சி இடம்பெற்றது.

………………………………………………………………………………………………………………………………

ஜன 28

காரைநகரில் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையினைக் கட்டாக்காலி கால்நடைகள் அழித்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

காரைநகரில் இம்முறை சுமார் ஆயிரத்து இருநூறு எக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும் போதிய மழை பெய்யாத காரணத்தால் நெற்செய்கையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.சுமார் பத்து வீதமான நெல் விளைந்த போதிலும் அவற்றினைக் கட்டாக்காலிக் கால்நடைகள் அழித்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

கால்நடைகளைக் கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

……………………………………………………………………………………………………………………………

ஜனவரி 31

காரைநகர் பயிரிக்கூடல் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத் தேர்த்திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

………………………………………………………………………………………………………………………………..;

பெப் 03

காரைநகர் இந்துக் கல்லூரி வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி பெப்ரவரி 03 சனிக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

கல்லூரி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் இடம்பெறற நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் பிரதேச செயலர் பொ.சிவானந்தன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக தீவக வலயப் பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஆ.யோகலிங்கம்,தேசிய சேமிப்பு வங்கி காரைநகர் கிளை முகாமையாளர் ரி.மையூரன் ஆகியோரும்.

கௌரவ விருந்தினர்களாக கல்லூரியின் பழைய மாணவர்களான கனடாவில் வதியும் தி.பிரமேந்திரதீசன்,பழைய மாணவர் சங்க கனடாக் கிளைப் பொருளாளர் மா.கனகசபாபதி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

…………………………………………………………………………………………………………………………………

ஜன 25

காரைநகர் பிரதேசத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரசாரப் பணி சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.காரைநகர் பிரதேச சபையின் பத்து ஆசனங்களுக்காக 13 கட்சிகளைச் சேர்ந்த 104 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இவர்கள் தினமும் வீடு வீடாகச் சென்று பிரசாரப் பணிகளை மேற்கொண்டு வருவதுடன் வீதிகள் எங்கும் பல வர்ண பிரசுரங்களை இரவிரவாக ஒட்டி வருகின்றனர்.இவற்றினை காலையில் உரிய தரப்பினர் தினமும் அகற்றி வருகின்றனர்.

………………………………………………………………………………………………………………………………….

ஜனவரி 10

காரைநகரைச் சேந்த பேராசிரியர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் (வயது 50) எதியோப்பிய நாட்டில் கடந்த புதன்கிழமை மரணமடைந்துள்ளார்.

எதியோப்பியா மடவளபு பல்கலைக்கழகத்தின் ஆங்கில இணைப் பேராசிரியராக பணியாற்றிய இவர் காய்ச்சல் காரணமாக எதியோப்பிய மருத்துவ மனையில் கடந்த புதன்கிழமை மரணமடைந்துள்ளார்.

காரைநகர் நீலிப்பந்தனையைச் சொந்த இடமாகக் கொண்ட இவர் கிழக்கிலங்கைப் பல்கலைக்கழக விரிவுரையாளராகப் பணியாற்றி கடந்த ஆறு வருடங்களாக எதியோப்பியப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார்.

சிறந்த கல்விமானும் சமூக சேவையாளருமான இவர் புலம்பெயர் நாடுகளில் வாழும் காரை மக்களை ஒன்றினைத்து அவர்கள் ஊடாக மொழி,கல்வி,கலை,மேம்பாட்டுக் குழுவை தாபித்து காரைநகர் அபிவிருத்திச் சபை ஊடாக காரைநருக்குச் சேவையாற்றியதுடன் கடந்த மாத இறுதியில் அவருடைய தலைமையில் காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியில் இடம்பெற்ற கலை இலக்கியப் பெருவிழாவில் கலந்த கொண்ட பின்னரே எதியோப்பியா சென்றிருந்தார்.

தனது சொந்த நிதியிலிருந்து பாடசாலை,பல்கலைக் கழகக் கல்வியைத் தொடரும் வறிய மாணவர்கள் பலருக்கு நிதியுதவியும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அன்னாரது பூதஉடல் எதியோப்பிய நாட்டிலிருந்து இலங்கைக்கு எடுத்துவரப்பட்டு அவரது சொந்த ஊரான காரைநகரில் நாளை மறுதினம் வியாழக்கிழமை இறுதிக்கிரியைகள் இடம்பெற உள்ளன. தமிழ் உணர்வாளனான அன்னாரது இழப்புக் குறித்து காரைநகரில் உள்ள பொது அமைப்புக்கள்.கல்விச் சமூகம் என்பன இரங்கல்களை வெளியிட்டு வருவதுடன் காரைநகர் சோபை இழந்து சோகத்தில் மூழ்கியுள்ளது.

………………………………………………………………………………………………………………………….

ஜன 25

காரைநகர் வலந்தலை தெற்கு அ.மி.த.க.பாடசாலையின் வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் விழையாட்டு விழா ஜனவரி 26 வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு பாடசாலை மைதானத்தில் அதிபர் க.நேத்திரானந்தன் தலைமையில் இடம் பெற்றது.

இவ் விழாவிற்குப் பிரதம விருந்தினராக முன்னாள் காரைநகர் பிரதேச செயலரும் யாழ் மாநகரசபை ஆணையாளருமான இ.த.ஜெயசீலனும் சிறப்பு விருந்தினர்களாக தீவக வலயப் பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஆ.யோகலிங்கம்,இலங்கை வங்கி காரைநகர் கிளை முகாமையாளர் வே.புவனேந்திரராஜா ஆகியோரும் கௌரவ விருந்தினராக தி.பிரமேந்திரதீசனும் கலந்து சிறப்பித்தனர்.

……………………………………………………………………………………………………………………………..

ஜன 25

காரைநகர் மணிவாசகர் சபையின் தலைவராக ஓய்வு பெற்ற காரைநகர் இந்துக்கல்லூரி அதிபர் கலாபூசணம் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

காரைநகர் மணிவாசகர் சபையின் வருடாந்தப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் அமைந்துள்ள சபை மண்டபத்தில் சபைத் தலைவரும் யாழ்ற்ரன் கல்லூரி ஓய்வு நிலை அதிபருமான வே.முருகமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற போது புதிய நிர்வாக சபைத் தெரிவு இடம்பெற்றது.

சபையின் உப தலைவர்களாக ஓய்வு நிலை அதிபர் க.தில்லையம்பலம்.ந.பாரதி ஆகியோரும் இணைச் செயலாளர்களாக யாழ்ற்ரன் கல்லூரி ஓய்வு நிலை அதிபர் வே.முருகமூர்த்தி,வியாவில் சைவ வித்தியாலய சிரேஸ்ர ஆசிரியர் பா.இராமகிருஸ்ணன் ஆகியோரும் பொருளாளராக ஆசிரியர் பொ.யோகேஸ்வரனும் சபையின் பரீட்சைச் செயலராக தீவக வலயப் பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஆ.யோகலிங்கமும் தெரிவு செய்யப்பட்டதுடன்

நிர்வாக சபை உறுப்பினர்களாக யாழ் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை சிரேஸ்ர விரிவுரையாளர் கலாநிதி திருமதி வீரமங்கை யோகரத்தினம்,வலந்தலை தெற்கு அ.மி.த.க.பாடசாலை அதிபர் க.நேர்த்திரானந்தன்,காரைநகர் இந்துக் கல்லூரி உப அதிபர் தெ.லிங்கேஸ்வரன்,காரைநகர் மெய்கண்டான் வித்தியாலய ஆசிரியர் தே.சத்தியானந்தன்.கூட்டுறவுத் திணைக்களப் பரிசோதகர் சு.அகிலன்.ஓய்வு நிலை வங்கியாளர் து.நாகேந்திரம்,பனை அபிவிருத்திச் சபையின் ஓய்வு பெற்ற உத்தியோகத்தர் நா.பாலகிருஸ்ணன்,மா.கனகசபாபதி.சி.சோதிலிங்கம் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டதுடன் கணக்குப் பரிசோதகர்களாக வே.சபாலிங்கம்,ஆசிரியர் வே.உருத்திரசிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

……………………………………………………………………………………………………………………………….

 

 

 

 

 

 

 

 

 

கனேடிய மண்ணில் காரை மாதாவை குளிர்வித்து கரை புரண்டோடிய காரை வசந்தம் – 2018

கனேடிய மண்ணில் காரை மாதாவை குளிர்வித்து கரை புரண்டோடிய

காரை வசந்தம் – 2018

கனடா காரை கலாச்சார மன்றம் நடாத்திய 19வது ஆண்டு விழாவும்,  காரை வசந்தம் 18வது கலை விழாவும் வெகு சிறப்பாக  தமிழ் இசைக்கலாமன்ற  மண்டபத்தில் நடைபெற்றது.   400 இற்கும் அதிகமான காரை உறவுகள்   கலந்து உறவு கொண்டாடி  மண்ணின் பெருமையை  கனேடிய மண்ணில் நிலைநிறுத்தினர்.  ஈழத்து தமிழ் இலக்கியத்திற்கு  பெரும்புகழ் சேர்த்த, காரைநகரின் அரும்பெரும்புலவராக   கருதப்படும் கார்த்திகேசப் புலவருடைய 120 வது நினைவு நாளில் காரைவசந்தம் இடம்பெற்றது சிறப்பிற்க்குரியதாக  அமைந்திருந்தது.  பிரம்மஸ்ரீ  கார்த்திகேசுப் புலவரின் ஞாபகார்த்த  அரங்காக காரை வசந்தம் 2018 தமிழிசைக்  கலா மன்றத்தை அலங்கரித்தது.

வழமை போன்று  மங்கள விளக்கேற்றலை தொடர்ந்து  தமிழ்த்தாய்   வாழ்த்து , கனேடிய தேசிய கீதம் ,  காரை மன்ற கீதம் போன்றன  மாணவிகளால் இசைக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து மரணித்த மக்கள் எல்லோருக்குமாக இரண்டு  நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டது.  மன்றத்தின் அடுத்த கட்ட நகர்வாக ஏற்கத் துணியும் இளம் தலை முறையின் முன்னோடியாக திகழ்கின்ற திரு. கோகுலன் ,  செல்வி.சகானா  குணரட்ணம் அவர்களும் இணைந்து நிகழ்ச்சிகளை  தொகுத்தளித்து  விழாவை அலங்கரித்தனர்.

வரவேற்புரையை தொடர்ந்து ” கணேஷ துதி” என்கின்ற நாட்டிய சமர்ப்பணம் முதலில் சமர்ப்பணமாகி நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.   அதனைத்தொடர்ந்து “சங்கத் தமிழ்” என்ற வரவேற்பு நடனம் நிகழ்ச்சியை மேலும் மெருகூட்டியது.  .  கர்நாடக  இசைப்பாடல்களை  தொடர்ந்து “முருகன் கூத்துவம்” என்ற  நடன நிகழ்வும் கலை  ரசிகர்களை கலை உலகுக்கு இழுத்துச் சென்றது.

இதனை தொடர்ந்து மன்றத் தலைவரின்  காரைவசந்தம்  சிறப்புரை இடம்பெற்றது.  தலைவர்  தனதுரையில் கடந்த கால காரை  நிகழ்ச்சிகள் யாவும் வெற்றிகரமாக நடைபெற்றதாகவும்,   இதன் மூலம் கிடைக்கப்பெறுகின்ற  பணம் வங்கியில் நிரந்தர வைப்பில் இடப்படுவதாகவும் குறிப்பிட்டார்.  நிரந்தர வைப்பிற்கான  வட்டிப்பணம்   வறுமைக் கோட்டிற்கு  கீழ் உள்ள மக்களுக்கான  வாழ்வாதார உதவிகளுக்கு பயன் படுவதாகவும் குறிப்பிட்டார்.  அத்துடன் உதவிகள் யாவும் காரை அபிவிருத்தி சபையூடாக மட்டுமே  மேற் கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டார்.  மேலும் தனதுரையில் உயர்கல்விக்கான உதவி,  ஐனாதிபதி  நடமாடும்  சேவைக்கான  மரம் நடுகை உதவி,   வீடமைப்பு  உதவி,  அடுத்த  தலைமுறையினரின் ஊருக்கான   தெளிவற்ற நிலைப்பாடு என்பவற்றையும்  விபரித்தார்.  ஆகையால் எல்லோருக்கும் பொதுவான   காரைமன்றத்தோடு   சேர்ந்து ஒற்றுமையாக செயற்படுமாறு கேட்டுக்கொண்டார்.

காரைவசந்தம் 2018  பிரதம விருந்தினராக   கலந்து கொண்ட பாராளமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி அவர்கள் இங்குள்ள மக்கள் பல விதமான சேவைகளை புரிவதாகவும்,  தங்கள் ஊரின்  அடிப்படை தேவைகளை  பூர்த்தி செய்ய உதவுவதையும் ,  அதற்கான  முறையான வழிமுறைகளை  பாராட்டுவதாகவும் குறிப்பிட்டார்.  அத்துடன்  பல்கலாச்சார கனேடிய மண்ணில் உங்கள் திறமைகளை வெளிக்கொணர்ந்து,  கனேடிய  தேசத்தை  கட்டியெழுப்ப பாடுபடுமாறும் இளைய சமூகத்தை வேண்டிக்கொண்டார்.

விழா  நிகழ்ச்சிகளின் இடைஇடையே  மொழித்திறன் போட்டிகளில் பங்குபற்றி முதலிடம் பெற்ற மாணவர்களின் பேச்சாற்றல்  வெளிக்கொண்டு வரப்பட்டது.  விழாவின் இன்னுமொரு சிறப்பம்சமாக காரைநகரில் இருந்து வருகை தந்திருந்த  கொடை வள்ளலும் , சமூக சேவையாளருமான   திரு. சண்முகம் சிவஞானம்  தம்பதிகள் கலந்து  கொண்டு விழாவை மேலும் மெருகூட்டினர்.

விழாவின் சிறப்பம்சமாக மாணவ,  மாணவிகளின் “தமிழர் வாழ்வெல்லாம் இசையே” என்கின்ற நாடகம் மேடையேற்றப்பட்டு உறவுகளை மனதார மகிழ்வித்தது.  இடைவேளையைத்  தொடர்ந்து  பொன்மாலைப் பொழுதை  மகிழ்விக்க ” நட்சத்திரா    இசைக்குழுவின்”   மெல்லிசை கானங்கள்  வசந்தத்தில் வீசியது.  இன்னிசை ராகங்கள் நிகழ்ச்சியின் இடைஇடையே  மொழித்திறன் போட்டிகளில்   வெற்றி பெற்ற  மாணவர்களுக்கான  சான்றிதழ்களும், வெற்றிக் கிண்ணங்களும்  வழங்கி  கௌரவிக்கப்பட்டனர்.   நன்றி நவிலலுடன்   விழா நிகழ்வுகள்  இனிதே நிறைவு பெற்றன.  விழா நிறைவுவரை மக்கள் நிறைந்திருந்தது  நிகழ்ச்சிகளை  பார்த்து , ரசித்து   இன்புற்று  வீடு சென்றனர் .  காரை வசந்தம் 2018 பூமிப்பந்தில் உள்ள  காரை உறவுகள் அனைவரையும் மகிழ்வாக்கிய  வசந்தமாக வீசிச் சென்றுள்ளது  என்பதில் சிறிதேனும் ஐயமில்லை.

 

நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்வையிட

தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

 

https://photos.app.goo.gl/FZAmHEXNDTkExMxP7

 

 

 

காரை வசந்தம் – 2018 காணொளி!

18வது ஆண்டாக வீசவுள்ள காரைவசந்தம் சனிக்கிழமை SEPT 22, 2018 தமிழிசைக் கலா மன்ற மண்டபத்தில்

18வது ஆண்டாக வீசவுள்ள காரைவசந்தம்

சனிக்கிழமை SEPT 22, 2018 தமிழிசைக் கலா மன்ற மண்டபத்தில்

 

கனேடிய பல்கலாச்சார மண்ணில் காரை மாதாவை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் காரைநகர் மக்கள் ஒன்றிணைந்து எடுக்கும் வரலாற்று சிறப்புமிக்க விழாவாக 18 வது காரை வசந்தம் வருகின்ற சனிக்கிழமை Sept 22, 2018 மலரவுள்ளது. கோடை கால இறுதிப்பகுதியில் இளையவர் முதல் பெரியோர் வரை கலந்து ஊர் நினைவுகளை மீட்டி, உறவு கொண்டாடி மகிழும் இனிமையானதொரு வசந்தமாக அன்றைய தினம் அமையவுள்ளது..

இயல் , இசை, நாடகம் என்கின்ற முத்தமிழ் விழாவாக சிறுவர்களின் மேடைப்பேச்சாற்றல்கள், சிறப்பு நடன நிகழ்வுகள், கலகலப்பாக சிரிக்க வைக்கும் தெருக்கூத்து நாடகம் , பொன்மாலைப்பொழுதை தாலாட்டும் மெல்லிசை கானங்கள் என்ற பல்வேறு நிகழ்வுகளுடன் வீசப்போகின்றது காரை வசந்தம் 2018.

விழாவில் கலந்துகொள்வோரின் நலன்கருதி சிற்றுண்டி வகைகளும், தேநீரும் பரிமாறப்படவுள்ளதோடு , விழா நிகழ்ச்சிகளின் இறுதியில் இரவு உணவும் வழங்கப்படும்.

இந்நிகழ்வு சிறப்படையவும், காரை மக்களின் பெருமையை கனேடிய பல்கலாச்சார மண்ணில் எடுத்தியம்பவும், கனடா வாழ் காரை மக்களுடன் பூமிப்பந்தில் பரந்து வாழும் காரை நல்லுள்ளங்களிற்கு அழைப்பு விடுக்கின்றோம். அனைவரும் வருக. காரை மண்ணின் புகழ் பரவச் செய்வோம். ….! நன்றி!

 

நிர்வாகம்

கனடா காரை கலாச்சார மன்றம்

காரை வசந்தம் – 2018

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் 2018ஆம் ஆண்டுக்குரிய நிகழ்வுகள்

காரை வசந்தம் 2017 மலர்

KARAI VASANTHAM 2017-BOOK

 

பார்வையிட கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

 

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2018/04/KARAI-VASANTHAM-2017-BOOK.pdf

காரை வசந்தம் 2017 கலை விழாவிற்கு காரைநகரில் இருந்து ஆவண விபரண படத்தொகுப்பு “காரைநகர் ஊர்வலம்”

04.11.2017 சனிக்கிழமை அன்று 18வது ஆண்டாக கலைவாசனையுடன் காரை மண்ணின் வாசனையும் பரப்பி மலர்ந்த காரை வசந்தம் காணொளி!

04.11.2017 சனிக்கிழமை அன்று 18வது ஆண்டாக கலைவாசனையுடன் காரை மண்ணின் வாசனையும் பரப்பி மலர்ந்த காரை வசந்தம் -2017

‘காரை வசந்தம்’ தரும் சுகந்தம். என்கின்ற இக்கட்டுரை எதிர்வரும் 04ஆம்திகதி சனிக்கிழமை 18வது ஆண்டாக கலைவாசனையுடன் காரை. மண்ணின் வாசனையும் பரப்பி மலரவிருக்கின்ற காரை வசந்தம் -2017 இற்கு முன்னோட்டமாக இவ்விணையத்தளத்தின் ஊடாக எடுத்துவரப்படுகிறது.

காரை வசந்தம் தரும் சுகந்தம்‘ என்கின்ற இக்கட்டுரை 2015ஆம் ஆண்டு வெளிவந்திருந்த ‘காரை வசந்தம்’ சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. கனடா வாழ் காரையின் சொந்தங்கள் கூடிக் களிக்கின்ற மற்றுமோர் பெரு விழாவான காரை வசந்தம் கலை விழாவின் சிறப்புக்களை பொதித்து வைத்துள்ள இக்கட்டுரை எதிர்வரும் 04ஆம்திகதி சனிக்கிழமை 18வது ஆண்டாக கலைவாசனையுடன் காரை. மண்ணின் வாசனையும் பரப்பி மலரவிருக்கின்ற காரை வசந்தம் -2017 இற்கு முன்னோட்டமாக இவ்விணையத்தளத்தின் ஊடாக எடுத்துவரப்படுகிறது.

 

 

‘காரை வசந்தம்’ தரும் சுகந்தம்.

-கனக. சிவகுமாரன்-

அலையெறிந்து ஆர்ப்பரிக்கும் கடல்சூழ் நன்நகரான காரைநகரானது எந்தக் கிராமத்திற்கும் இல்லாத சிறப்புக்களைக் கொண்டு விளங்குகிறது. உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற எமது கிராமத்தின் பாரிய இடப்பெயர்வானது ஊரின் அனைத்து வளங்களையும் பாதித்தது. ஊரின் வனப்பும் பொலிவிழந்து போனது.

எனினும் பிறந்த மண்மீது ஆழமான பற்றினைக் கொண்டுள்ள புலம்பெயர்ந்த காரைநகர் மக்களது உணர்வுமிக்க தொடர் செயற்பாடுகளினால் கிராமம் துரிதகதியில் மீளப் புனரமைக்கப்பட்டு வருகின்றது. அத்தோடு அதன் புகழும் பெருமையும் என்றுமில்லாதவாறு சர்வதேசமெங்கும் பறைசாற்றப்பட்டு இத்துணை சிறப்பு மிக்க கிராமமா காரைநகர்? என பலரும் வியக்கும் வண்ணம் சிறப்புற்றிருக்கின்றது. இவ்வூரில் நாம் பிறந்தோம் என்ற உணர்வும் உரிமையும் எம்மைப் பேருவகை கொள்ளவைக்கின்றது.

புலம்பெயர் காரை அமைப்புக்களினதும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வதியும் ஊர்ப்பற்றும் சமூக உணர்வும் மிக்க தனவந்தர்களினதும் உதவிகள் ஊருக்குக் கிடைக்கின்றன. அங்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்ற முனைப்பான பணிகள் இவ்வுதவிகளால் முன்பிருந்ததைக் காட்டிலும் வளமும் வனப்பும் மிக்க முன்னுதாரணமான கிராமமாக மாறி வருவதைக் கட்டியம் கூறுவதாகவுள்ளன.

மலேசியா நாட்டிற்கு வேலைவாய்ப்பின் நிமித்தம் புலம்பெயர்ந்து சென்ற காரைநகர் மக்கள் 1919ஆம் ஆண்டு Karai Union Of Malaya என்ற அமைப்பினை நிறுவி காரையின் மேம்பாட்டிற்கு உதவினார்கள். தொண்ணூற்றாறு ஆண்டுகளிற்கு முன்பாகவே புலம்பெயர்ந்தோராக வாழ்ந்து தாம் பிறந்த ஊருக்கு உதவி முன்னுதாரணமாகத் திகழ்ந்தோர் காரைநகர் மக்களாகவே இருக்கமுடியும் என்பது பெருமைக்குரிய செய்தியாகும். தற்போது புலம்பெயர்ந்து வாழும் ஒவ்வொருவருக்கும் தம்மண்ணை மறவாது அதற்கு உதவவேண்டும் என்கின்ற வரலாற்றுக் கடமை உண்டு என்பதையும் இச்செய்தி உணர்த்துகின்றது.

அக்காலகட்டத்தில் காரைநகர் இருந்த நிலைமை வேறு தற்போது இருக்கின்ற நிலைமை வேறு. இடர்மிகுந்த காலகட்டத்தில் நிம்மதியிழந்து நம்பிக்கையற்ற அவலவாழ்வு வாழ்ந்து பலவற்றையும் இழந்துவிட்ட உறவுகளிற்கு அவர்களின் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்வதற்கான மனோ பலத்தினை புலம்பெயர்ந்த அமைப்புக்களும் ஊர்ப் பற்றாளர்களும் வழங்கி வருகின்ற உதவிகளும் ஊக்கிவிப்புக்களும் ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் சேவையுள்ளம் கொண்ட பெரியோர்களினால் ஈழத்துச் சிதம்பர திருத்தொண்டர் சங்கம் என்ற பெயரில் 1989ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு 1992ஆம் ஆண்டு கனடா-காரை கலாசார மன்றம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தாயக உறவுகளுக்கு உதவும் சேவையில் முழுமனதோடு ஈடுபட்ட இவ்வமைப்பு, தன் பணியில் 25ஆண்டுகளைக் கடந்து 26வது ஆண்டில் தடம் பதிக்கின்றது.

காரைநகரில் வாழும் உறவுகளிற்கு உதவுவதுடன் மட்டுமல்லாது கனடாவில் வாழும் காரை மக்களுக்கிடையேயான உறவினைப் பேணி அவர்கள் மத்தியில் ஒற்றுமையை வலுப்படுத்தி வருகின்றது. எமது கிராமத்திற்கே உரித்தான தனித்துவம் மிக்க கலை கலாசார சமய பண்பாட்டு அடையாளங்களையும் பாரம்பரியங்களையும் பேணி எமது அடுத்த சந்ததிக்கும் எடுத்துச் செல்லக்கூடியவாறான செயற்பாடுகளைச் செய்து வருகின்றது. கடந்த 25 ஆண்டுகளாக கனடா-காரை கலாசார மன்றம் முன்னெடுத்து வரும் அளப்பரிய பணிகள் அனைவராலும் விதந்து பாராட்டப்படக்கூடியதாகும்.

மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வருடாந்த நிகழ்வு செயற் திட்டங்களுள் ‘காரை வசந்தம்’ என்கின்ற சிறப்பு மிக்க பெரும் கலைவிழா முதன்மை பெற்று விளங்குகின்றது.

காரைநகர் மக்களின் கலை ஈடுபாடும் பங்களிப்பும் அக்கிராமத்திற்கு பெரும் புகழ் சேர்ப்பனவாகவுள்ளன. கலைத்துறையில் காரை மக்கள் ஆற்றிய, ஆற்றிவருகின்ற சாதனைகள் வரலாற்றுப் பதிவாகி வருகின்றன. காரைநகர் மக்கள் தமிழ்க் கலை உலகிலே பதித்த, பதித்து வருகின்ற தடங்கள் அவர்களின கலை ஆற்றலிற்கும் கலை உணர்விற்கும் சான்று பகர்வனவாக அமைந்துள்ளன. அந்த வரிசையில் கனடா-காரை கலாசார மன்றத்தினால் 2000ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்று 16வது ஆண்டில் பாதம் பதிக்கின்ற ‘காரை வசந்தம்’ என்கின்ற பெரும் கலைவிழா ரொறன்ரோவில் ஊர்களின் பெயரால் நடாத்தப்பட்டு வருகின்ற நூற்றுக்கணக்கான கலைவிழாக்களுள் பிரபல்யம் மிக்க தலைசிறந்த ஒன்றாக மிளிர்வடைந்துள்ளது.

வளர்ந்து வருகின்ற காரையின் இளம் கலைஞர்களை ஊக்குவித்து அவர்களது திறமைகளை வளர்ப்பதற்குக் காரை வசந்த அரங்கு களம் அமைத்துக் கொடுப்பதுடன் பல திறமை மிக்க கலைஞர்களை அறிமுகம் செய்து அவர்களிற்கும் அவர்களது படைப்புக்களிற்கும் மதிப்பளிக்கின்ற அரங்காகவும் அமைந்து விளங்குகின்றது. ரொறன்ரோவில் பல நவீன வசதிகளுடன் அமைந்த முதற்தர கலாசார மண்டபத்தில் பெரும் பொருட்செலவில் நடத்தப்பட்டு வருகின்ற இப்பெருவிழாவைக் கண்டு களிப்பதற்கு ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்து வருகின்ற காரைநகர் மக்களால் மண்டபம் நிரம்பி வழிவது விழாவின் உன்னதத்தினை வெளிப்படுத்துவதாக உள்ளது. கலை வாசனையுடன் காரை மண்ணின் வாசனையும் பரப்பி வருகின்ற இவ்விழா காரைநகர் மக்களிற்கும் கலா ரசிகர்களிற்கும் மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். ஊர் உணர்வோடும் கலை உணர்வோடும் காரை மக்கள் சங்கமித்து வருகின்ற இவ்விழா அவர்களை காரை மண் பற்றி சிந்திப்பதற்கு தூண்டுவதாகவும் கனடா-காரை கலாசார மன்றத்தின் நிதி வளத்தினை ஏற்படுத்துகின்ற உறுதியான ஊற்றாகவும் அமைந்து விளங்குகின்றது.

இவ்விழா ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் காரைச் சிறுவர்கள் மத்தியில் தமிழ்மொழித் திறன் போட்டிகளை நடத்தி வெற்றிபெற்றவர்களிற்கும் பங்குபற்றியவர்களிற்கும் இவ்வரங்கில் பரிசளித்து வருகின்றமையும் பேச்சுப் போட்டியில் முதலிடத்தைப் பெறும் சிறுவர்கள் இவ்வரங்கில் பேசுவதற்கு வாய்ப்பளிக்கின்ற முறைமையும் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகின்றமை சிறுவர்கள் மத்தியில் தமிழ்மொழி ஆர்வம் ஏற்பட வழி செய்கின்றன.

நீண்ட காலமாகக் கனடாவில் வாழும் எமது பிள்ளைகள் எமது மொழி, கலாசாரம், பாரம்பரியம் பற்றி எதுவும் அறியாமலே கனடா நாட்டுக் கலாசார நீரோட்டத்தில் கலந்துகொள்வது தவிர்க்க முடியாதது போல் தோன்றினாலும் எமது கலாசாரத்தையும் மொழியையும் தக்கவைக்கும் முயற்சியில் ‘காரை வசந்தம்’ கலைவிழா ஆற்றிவரும் பங்களிப்பு குறிப்பிடக்கூடியதாகும்.

கனடாவின் நான்கு பருவ காலங்களுள் ஒன்றான இலைதளிர் காலமே வசந்த காலம் எனப்படுகின்றது. கடும் குளிர்காலம் முடிவடைந்து மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் நிலவுவதே வசந்தமாகும். இந்தப் பருவ வசந்தமும் எமது ஊரும் இணைந்து அனைவரையும் வசீகரிக்கின்ற அழகிய பெயராக மலர்ந்த ‘காரை வசந்தம்’ கலை விழாவினை வசந்த காலத்தில் கொண்டாடுவதே பொருத்தமானதாக அமையும் என்பதுடன் அதனை ஏன் குளிர்காலத்தில் கொண்டாட வேண்டும்? என்கின்ற கேள்வி முன்வைக்கப்படுவதும் உண்டு. உண்மையில் வசந்தம் என்கின்ற பருவத்தைக் கொண்டாடாது அதன் பண்புக் கூறுகளாக விளங்கும் பொலிவு, உற்சாகம், மகிழ்ச்சி, பூரிப்பு, குதூகலம் ஆகியனவே முதன்மைப்படுத்தப்படுகின்றன. வசந்த காலத்தில் பெறுகின்ற சுக அனுபவத்தினைக் குளிர்காலத்தில் கொண்டாடப்படுகின்ற ‘காரை வசந்தம்’ மூலம் காரை மக்கள் பெற்று இன்புறுகின்றனர் என்றால் அது மிகையாகாது.

 

கனடாவின் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் அனைத்தினாலும் தரம் மிக்க சிறந்த கலை விழா எனப் பதிவுசெய்யப்பட்ட ‘காரை வசந்தம்’ குறித்து கனடாவின் முன்னணி வாராந்தப் பத்திரிகையான ‘கனடா உதயன்’, ‘கடும் குளிரை விரட்டியடித்த காரை வசந்தம்’ எனத் தலைப்பிட்டு ஒரு முறை விமர்சனம் வெளியிட்டிருந்ததை இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூருவது பொருத்தமானதாகும்.

இவ்விழாவின் சிறப்பு அம்சமாகக் ‘காரை வசந்தம்’ என்ற சஞ்சிகை ஒன்றும் வரலாற்று ஆவணமாக விழா ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை வெளியிடப்பட்டு வருகின்றது. தொன்மை மிக்க காரைநகரின் வரலாற்றுப் பெருமைகள் கலை, கலாசாரம், கல்வி, சமயம், பண்பாட்டுப் பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் வகையில் காரைநகர் சார்ந்த விடயங்களை முதன்மைப்படுத்திய ஆக்கங்களையும் காலவோட்டத்திற்கு ஏற்ப சமூகத்திற்கு பயனளிக்கக் கூடியதான பல்துறை சார்ந்த ஆக்கங்களையும் தாங்கிய சிறந்த வரலாற்று ஆவணமாகவும் தமிழ் வாசனையையும், காரை மண்ணின் வாசனையையும் நுகருவதாகவும் இக் ‘காரை வசந்தம்’ சஞ்சிகை அமைந்துள்ளது. படைப்பாளிகளின் படைப்பாற்றலை ஊக்கிவித்து மேம்படுத்துகின்ற களமாகவும் இச்சஞ்சிகை அமையப்பெற்றுள்ளது. அத்துடன் காரைநகர் சார்ந்த சமய சமூக கல்வி கலாசார அமைப்புக்களின் பிரதிநிதிகள்,கலைஞர்கள், ஊர்ச் சான்றோர்கள் வழங்கி வருகின்ற வாழ்த்துச் செய்திகள் எழுச்சியை ஏற்படுத்தி வலுச்சேர்ப்பனவாகவுள்ளன. மன்றப் பணிகளிற்கு உதவிடவேண்டும் என்ற நல்நோக்குடன் விளம்பரங்களை வழங்கி வரும் வர்த்தகத்துறை சார்ந்தோர் இச்சஞ்சிகையின் தொடர்ச்சியான வெளியீட்டில் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.

இங்குள்ள காரைச் சிறார்கள் உள்ளிட்ட அனைத்து காரைநகர் மக்கள் நெஞ்சங்களிலும் நிலைத்து அவர்கள் உச்சரிக்கின்ற ஓரு சொல்லாக ‘காரை வசந்தம்’ என்ற நாமம் உள்ளது. காரைநகர் மக்கள் பெருமளவில் கலந்து கொள்ளும் இவ்விழாவில் வசீகரிக்கின்ற சிறந்த கலை நிகழ்வுகளை கண்டு களிக்கமுடியும் என்ற நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் வெளியிடத்தைச் சேர்ந்த பலரும் கலையுணர்வுடன் கலந்துகொண்டு வருகின்றனர்.

காரைநகர் மக்களின் அடையாளம் ‘காரை வசந்தம்’ என்று கூறுமளவிற்கு இச்சொல் அனைவர் நெஞ்சங்களிலும் வியாபித்து நிற்கின்றது. அவ்வப்போது அமையப்பெற்று வருகின்ற நிர்வாகங்களின் செயற்திறனும் அர்ப்பணிப்பும் மிக்க உழைப்பு, கலைஞர்களின் உற்சாகமான பங்களிப்பு, அனுசரணையாளர்கள் விளம்பரதாரர்கள் ஆகியோரின் பேருதவி, காரைநகர் மக்கள் மற்றும் கலாரசிகர்களின் அமோக ஆதரவு என்பவற்றின் இணைந்த செயற்பாட்டின் விளைவே காரை வசந்தத்தின் வெற்றியின் இரகசியமாகும்.

காரை வசந்தத்தின் சிறப்பிற்கும் பொலிவிற்கும் நிறைவான பல அம்சங்கள் இருந்தாலும் ஒரு சில குறைபாடுகளும் இருக்கவே செய்கின்றன. விளம்பரப்படுத்தப்பட்ட நேரத்திற்குப் பதிலாக சில மணித்துளிகள் தாமதித்த நிகழ்ச்சிகளின் ஆரம்பமும் இதன் காரணமாகப் பின்தள்ளப்பட்டு இடம்பெறும் இறுதி நிகழ்சியின்போது ரசிகர்கள் மண்டபத்திலிருந்தது கலைந்து செல்லுதலும் அவ்வப்போது நிகழும் குறைபாடுகளாகும். ஒரு சில சந்தர்ப்பங்களில் நேரப் பற்றாக்குறை காரணமாக இறுதி நிகழ்வு இடம்பெறாமல் போனதால் படைப்புக்களைத் தயார் செய்து வந்த கலைஞர்கள் ஏமாற்றமடைந்தமை துரதிஷ்டவசமானதாகும். இவற்றினை நீக்கி வைப்பதில் ஏற்பாட்டாளர்களுடன் ரசிகர்களும் ஒத்துழைக்கவேண்டியதன் அவசியத்தை புரிந்துகொண்டு செயற்பட்டால் கரையிலா ‘காரை வசந்தத்தின்’ தரம் மேலும் மேன்மையுற்று கரை புரண்டோடும் என்பதில் சந்தேகமில்லை.

 

 

 

காரை வசந்தம் விழாவில் கலந்து கொள்வோருக்கான போக்குவரத்து வசதிகள் தொடர்பான அறிவித்தல்!

காரை வசந்தம் விழாவில் கலந்து கொள்வோருக்கான போக்குவரத்து வசதிகள் தொடர்பான அறிவித்தல்

கனடா வாழ் காரைநகர் மக்களின் வரலாற்று பெருவிழாவான காரை வசந்தம் வழமைபோல் இம்முறையும் கோலாகலமாக நவம்பர் 4, 2017 மாலை 5 மணி முதல் 10 மணி வரை நடைபெறவுள்ளது. இப்பெருவிழாவில் கலந்து கொள்பவர்களுக்கு போக்குவரத்து வசதிகள் தேவைப்படுமிடத்து ஒழுங்கு செய்து கொடுக்கப்படவுள்ளது. போக்குவரத்து வசதிகள் Brampton /Mississauga, Markham /Stouffville, Ajax /Pickering மற்றும் Scarborugh பகுதிகளுக்கு உட்பட்ட அனைவரும் விழாவை கண்டுகளித்து செல்லும் வண்ணம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக தொடர்புகளுக்கு மன்ற மின்னஞ்சல்: Karainagar@gmail.com அல்லது 416 642 4912 தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

                                                                   நன்றி

                நிர்வாகசபை
கனடா-காரை கலாச்சார மன்றம்

கனடா-காரை கலாச்சார மன்றம் பெருமையுடன் வழங்கும் காரை வசந்தம்-2017

 

கனடா-காரை கலாச்சார மன்றம் பெருமையுடன் வழங்கும் காரை வசந்தம்-2017

காரை வசந்தம் 2017 மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு சிறுவர்கள் மற்றும் பெரியோர்களின் நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றன!

CKCA logoகாரை வசந்தம் 2017 மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு சிறுவர்கள் மற்றும் பெரியோர்களின் நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றன!

காரை வசந்தம் 2017 மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு சிறுவர்கள் மற்றும் பெரியோர்களின் நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

 பரதநாட்டியம், சங்கீதம், நாடகம் உட்பட அனைத்து வகையான முத்தமிழ் நிகழ்வுகளுடன் சுவாரசீகமான நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

கலை நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சிகளை வழங்கும் சிறுவர்கள், ஆசிரியர்கள், பெரியோர்கள் September 30, 2017ற்கு முன்னர் மன்றத்தின் மின்னஞ்சல்:karainagar@gmail.com ஊடாகவோ அன்றி 416 642 4912 என்ற தொலைபேசி ஊடாகவோ  தொடர்பு கொண்டு பதிந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

அத்துடன் காரை வசந்தம் விழா நிகழ்வின் போது தமிழ் தாய் வாழ்த்து, கனடிய தேசிய கீதம், மன்ற கீதம் என்பவற்றினை இசைப்பதற்கு ஆர்வமுள்ள சிறுவர், சிறுமியர் September 30, 2017ற்கு முன்னர் மன்றத்தின் மின்னஞ்சல்:karainagar@gmail.com ஊடாகவோ அன்றி 416 642 4912 என்ற தொலைபேசி ஊடாகவோ  தொடர்பு கொண்டு பதிந்து கொள்ளுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

                                                            நன்றி  

 

               நிர்வாகம்
கனடா-காரை கலாச்சார மன்றம்

  “WORKING TOGETHER IS SUCCESS”

 

காரை வசந்தம் 2017 மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு சிறுவர்கள் மற்றும் பெரியோர்களின் நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றன!

CKCA logoகாரை வசந்தம் 2017 மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு சிறுவர்கள் மற்றும் பெரியோர்களின் நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றன!

காரை வசந்தம் 2017 மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு சிறுவர்கள் மற்றும் பெரியோர்களின் நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

 பரதநாட்டியம், சங்கீதம், நாடகம் உட்பட அனைத்து வகையான முத்தமிழ் நிகழ்வுகளுடன் சுவாரசீகமான நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

கலை நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சிகளை வழங்கும் சிறுவர்கள், ஆசிரியர்கள், பெரியோர்கள் ஆகஸ்ட் 30, 2017ற்கு முன்னர் மன்றத்தின் மின்னஞ்சல்:karainagar@gmail.com ஊடாகவோ அன்றி 416 642 4912 என்ற தொலைபேசி ஊடாகவோ  தொடர்பு கொண்டு பதிந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

அத்துடன் காரை வசந்தம் விழா நிகழ்வின் போது தமிழ் தாய் வாழ்த்து, கனடிய தேசிய கீதம், மன்ற கீதம் என்பவற்றினை இசைப்பதற்கு ஆர்வமுள்ள சிறுவர், சிறுமியர் ஆகஸ்ட் 30, 2017ற்கு முன்னர் மன்றத்தின் மின்னஞ்சல்:karainagar@gmail.com ஊடாகவோ அன்றி 416 642 4912 என்ற தொலைபேசி ஊடாகவோ  தொடர்பு கொண்டு பதிந்து கொள்ளுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

                                                            நன்றி  

 

               நிர்வாகம்
கனடா-காரை கலாச்சார மன்றம்
                                  
                                      "WORKING TOGETHER IS SUCCESS"