சுவிஸ் வாழ் இளையோருடன் “எழில் பூக்கள்”

சுவிஸ் வாழ் இளையோருடன் “எழில் பூக்கள்”

காரை கவிஞர் த. நந்திவர்மன் எழுதிய “எழில் பூக்கள்” என்ற கவிதை நூல் இதுவரை சிட்னி, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, டொரொண்டொ, வன்கூவர், ஒக்லண்ட், மதுரை, லண்டன் பத்தாவது நகரமாக சுவிஸ் நாட்டில் சூரிச் மாநிலத்தில் ஸ்ரீவிஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தில் (31.03.2018) இல்  ‘எழில் பூக்கள்’ கவிதை நூல் வெளியீட்டு விழா மிக சிறப்பாக நடைபெற்றது.

 

தமிழரின் பாரம்பரியத்தில் சிறப்பு வாய்ந்த கவிதைக் கலைகள் மெல்லச் சிதைந்து வருகின்றது பண்டைய மரபு வழியில் கவிதை எழுதுபவர்கள் அருகிப் போய் விட்டார்கள் மரபுக்கவிதையின் அழகையும் சுவையையும் இன்றைய தமிழர்களுக்கு மீண்டும் அறிமுகப்படுத்தி வைக்கும் முகமாக “எழில் பூக்கள்” என்ற கவிதை நூல் சிட்னியல் வெளிவந்திருந்தது.

 

காரை கவிஞர் த. நந்திவர்மன் அவர்கள் இந் நூலினை உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு அறிமுகம் செய்துவைத்து அதன் மூலமாகக் கவிதை நயத்துடன் அறியப்படுத்த வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது. இதிலே இளைய சந்ததியினரையும் சேர்த்துக் கொண்டு அவர்களுக்கும் அவர்களுக்கும் தமிழ் கவிதைகளில் ஓர் ஈடுபாட்டையும் ஏற்படுத்திவருகிறார் நூலாசிரியர்.

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவர் சிவத்தமிழ் காவலர் திரு. ஆறுமுகம் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற “எழில் பூக்கள்” கவிதை நூல் வெளியீட்டு விழா  மங்களவிக்கேற்றல், பிள்ளையார் வழிபாடு, தேவாரம், வரவேற்பு நடனம், ஆசியுரைகள், வரவேற்புரை, வாழ்த்துரைகள், ஆய்வுரைகள், இசைப்பாடல்கள், மதிப்பளிப்புக்கள் எனப் பல நிகழ்வுகள் மகிச்சிறப்பாக மேடையேற்றப்பட்டு இருந்தன.

 

நிகழ்ச்சிகளுக்கு நடுவே நூலாசிரியர் கவிஞர் த. நந்திவர்மன் அவர்கள் சுவிஸ் காரை அபிவிருத்தி சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழுவின் உறுப்பினரும், சரஸ்வதி வித்தியாலய அதிபர் கலையரசி தாரணி சிவசண்முகநாதக்குருக்கள் அவர்களின் மாணவர்களுக்கான  கவிதை வரிகளுக்கான பாடல்களை மூன்று பிரிவாக இனிமையான குரலிலும், எளிமை மிகுந்த அமைதியாகவும், மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கி  மாணவர்களுக்கு நினைவுச் சான்றிதழ்களும் வழங்கி  சிறப்பித்தார்கள் காரை கவிஞர் த. நந்திவர்மன் அவர்கள். இந் நிகழ்வு விருந்தினர்கள் எல்லோரையும் ஈர்ந்திருந்தது என்பது மிகையல்ல.

மாணவர்கள் திமையான முறையில் கவிதைப் பாடல்களை பாடுவதற்கு பயிற்சியளித்த சுவிஸ் காரை அபிவிருத்தி சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழுவின் உறுப்பினரும,; சரஸ்வதி வித்தியாலய அதிபர் கலையரசி தாரணி சிவசண்முகநாதக்குருக்கள் அவர்களுக்கு எமது சபையின் நன்றிகளும் பாராட்டுதல்களும். மிகச்சிறப்பாக கவிதை பாடிய மாணவர்களின் பெயர் விபரமும் நிகழ்வின் நிழற்படங்களை கீழே காணலாம்.

 

இல        கவிதை                  பெயர்

1. வணக்கஞ் சொல்வோம்  செல்வி பூமிசா துவியநாதன்

2. வாருங்கள் தமிழ் படிப்போம்   செல்வி விதுசியா துவியநாதன் , செல்வி சாருதிகா சிவநேசன்

3. கலைவாணி   செல்வி கர்ணிகா செல்வகுமாரன்

4. நம்பிக்கை வெல்லும்     செல்வன் ஜெய்சன் நவேந்திரகாந்தன்

5. ஊக்கம் உயர்த்தும்    செல்வன் அகிலாஸ் சிவகுமார் ,செல்வன் சுவேதன் ரவீந்திரன்

6. சுத்தத்தமிழ் பேசுவோம்    செல்வி சுஜேனி ரவீந்திரன் ,செல்வி சதுர்னா கிருபாகரன்

7.  நம்பிக்கை வேண்டும்      செல்வன் சஞ்சய் பாஸ்கரலிங்கம்

8. கல்வி கற்றிடு   செல்வன சாத்வீகன் சிவசண்முதநாதக்குருக்கள்

9. வள்ளுவ! நீ வாழ்க! செல்வி துர்க்கா செல்வகுமாரன்

10. அன்னையின் அன்பு  செல்வி விஷ்ணுகா செல்வகுமாரன்

11. எழுவாய் தமிழா!   செல்வி சுஜேனி ரவீந்திரன், செல்வி சதுர்னா கிருபாகரன்

12. கலைவாணி  செல்வி சாரங்கி லிங்கேஸ்வரன் ,செல்வி கஜலக்ஷி உருத்திரர்

13. காலம் பொன்  செல்வன் ஆர்வலன் சரவணப்பெருமாள்

14. வாருங்கள் தமிழ் படிப்போம்   செல்வி சாரங்கி லிங்கேஸ்வரன் , செல்வி கஜலக்ஷி உருத்திரர்

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

இங்ஙனம்

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

செயற்குழு உறுப்பினர்கள்

மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்.

01.04.2018