‘எழில் பூக்கள்’ கவிதை நூல் வெளியீட்டு விழாவில் சுவிஸ் காரை அபிவிருத்தி சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழுவின் நிகழ்ச்சி நிரல்

எழில் பூக்கள்’ கவிதை நூல் வெளியீட்டு விழாவில் சுவிஸ் காரை அபிவிருத்தி சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழுவின் நிகழ்ச்சி நிரல்

சுவிஸ் நாட்டில்  சூரிச் மாநிலத்தில் ஸ்ரீவிஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தில் (31.03.2018) இல் நடைபெறுகின்ற ‘எழில் பூக்கள்’ கவிதை நூல் வெளியீட்டு விழாவில் சுவிஸ் காரை அபிவிருத்தி சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழுவின் உறுப்பினரும் சரஸ்வதி வித்தியாலய அதிபர் கலையரசி தாரணி சிவசண்முதநாதக்குருக்கள் அவர்கள் நூலின் ஆய்வுரையும், எமது சபையின் வாழ்த்துரையையும் வழங்கவுள்ளார்கள். அத்துடன் சரஸ்வதி வித்தியாலய மாணவர்களின்  கவிதை வரிகளுக்கான பாடல்களும் இடம்பெறும்.

கவிஞர் பற்றிய சில குறிப்புக்கள் காரைநகர், இடைப்பிட்டியைப் பூர்வீகமாகக் கொண்ட கவிஞர் தம்பிப்பிள்ளை நந்திவர்மன் கொழும்பில் பிறந்து வளர்ந்து பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் கல்விபயின்றவர். அவுஸ்ரேலியா சிட்னியில் வாழ்ந்துவரும் இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்கியல்துறை முகாமையாளராகப் பணியாற்றி வருகின்றார்.

மரபுக் கவிதைகள் எழுவதில் வல்லவரான நந்திவர்மன் எங்கு பிறந்து வளர்ந்தாலும் வாழ்ந்தாலும் தன் தாய்,  தந்தையரின்  மண்ணாகிய காரை மண்ணை என்றும் மறவாமல் போற்றி எமது சபையால் 08.06.2014 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியிடப்பட்ட காரைநிலா 2014 நூலிற்கு “ஊர் வெண்பா- காரைநகர் நேரிசை வெண்பா”  மரபுக் கவிதையை எழுதியுள்ளார்.

இவரின் தந்தை திரு.சோ.க.தம்பிப்பிள்ளை இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் சிங்கள மொழி பெயர்ப்பாளராகப் பணிபுரிந்தவர். தாயார் திருமதி.சரசுவதி தம்பிப்பிள்ளை கொழும்பில் ஆசிரியையாகப் பணி புரிந்ததுடன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் சிறுவர் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணிபுரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நூலாசிரியரும், விழாக்குழுவினரும் இணைந்து வழங்கும் ‘எழில் பூக்கள்’ கவிதை நூல் வெளியீட்டு விழாவில் சுவிஸ் வாழ் காரை மக்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

‘எழில் பூக்கள்’ கவிதை நூல் வெளியீட்டு விழாவில் சுவிஸ் காரை அபிவிருத்தி சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழுவினரால் ஒழுங்கமைப்பு செய்யப்பட்ட கவிதைபாடும் சரஸ்வதி வித்தியாலய மாணவர்களின்  பெயர்விபரம்.

இல கவிதை பெயர்
1. வணக்கஞ் சொல்வோம் செல்வி பூமிசா துவியநாதன்
2. வாருங்கள் தமிழ் படிப்போம் செல்வி விதுசியா துவியநாதன்
செல்வி சாருதிகா சிவநேசன்
3. கலைவாணி செல்வி கர்ணிகா செல்வகுமாரன்
4. நம்பிக்கை வெல்லும் செல்வன் ஜெய்சன் நவேந்திரகாந்தன்
5. ஊக்கம் உயர்த்தும் செல்வன் அகிலாஸ் சிவகுமார்
செல்வன் சுவேதன் ரவீந்திரன்
6. சுத்தத்தமிழ் பேசுவோம் செல்வி சுஜேனி ரவீந்திரன்
செல்வி சதுர்னா கிருபாகரன்
7. நம்பிக்கை வேண்டும் செல்வன் சஞ்சய் பாஸ்கரலிங்கம்
8. கல்வி கற்றிடு ! செல்வன் சாத்வீகன் சிவசண்முதநாதக்குருக்கள்
9. வள்ளுவ! நீ வாழ்க! செல்வி துர்க்கா செல்வகுமாரன்
10. அன்னையின் அன்பு செல்வி விஷ்ணுகா செல்வகுமாரன்
11. எழுவாய் தமிழா! செல்வி சுஜேனி ரவீந்திரன்
செல்வி சதுர்னா கிருபாகரன்
1.2கலைவாணி செல்வி சாரங்கி லிங்கேஸ்வரன்
செல்வி கஜலக்ஷி உருத்திரர்
13.காலம் பொன் செல்வன் ஆர்வலன் சரவணப்;பெருமாள்
14. வாருங்கள் தமிழ் படிப்போம் செல்வி சாரங்கி லிங்கேஸ்வரன்

 

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

 

இங்ஙனம்

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

செயற்குழு உறுப்பினர்கள்

மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்.

30.03.2018