Category: SKDB செய்திகள்

காரைநகர் அபிவிருத்திச் சபையும் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையும் இணைந்து நடாத்தும் முத்தமிழ் விழா அழைப்பிதழ்

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையும், காரை அபிவிருத்திச்சபையும் இணைந்து நடாத்தும் தியாகத்திறன் வேள்விப்போட்டி – 2019

     உ

                                              சிவமயம்                                          

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையும்,

காரை அபிவிருத்திச்சபையும்  இணைந்து நடாத்தும்

தியாகத்திறன் வேள்விப்போட்டி – 2019

                              அமரர் கலாநிதி ஆறுமுகம் தியாகராசா அவர்களின் ஊர்ப்பணியை நினைவுகூரும் முகமாக “தியாகத் திறன் வேள்வி” என்ற மகுடத்துடனும் எமது சபையின் உயரிய நோக்கான “ஆளுயர்வே ஊருயர்வு” என்ற மகுட வாசகத்துடனும் நாம் இப்போட்டிகளை வருடாந்தரம் நடத்துகின்றோம். அறிவே அனைத்து ஆற்றலும் என்பதற்கிணங்க நாம் காரை மண்ணின் மாணாக்கரின் ஆளுமையை வளர்க்கவென இப்போட்டிகளை மிகுந்த சிரமத்தின் மத்தியில் எமது தாய் சங்கமான காரை அபிவிருத்திச் சபையுடன் இணைந்து நடாத்தி வருகின்றோம்.

எமது சபையின் நிர்வாக உறுப்பினர்களோடு தோளோடு தோள் நின்று 2014ஆம் ஆண்டில் இருந்து 2017வரையான காலப்பகுதிகளில் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவை உருவாக்கி மாணக்கரது ஆளுமை   விருத்திக்கு அயராது உழைத்த அமரர் கலாநிதி விஜயரத்தினம் ஜோன் மனோகரன் கென்னடி அவர்களையே சாரும். அதே போல் காரைநகரின் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் ஆகியோரது ஈடுபாடும் முயற்சியும் கடந்த ஜந்தாண்டுகளில் நீங்கள் காட்டிய ஊக்கமே எம்மை உற்சாகப்படுத்தியிருக்கிறது. தொடர்ந்தும் உங்கள் பலமான ஆதரவை எதிர்பார்க்கிறோம்.

மேற்படி போட்டியினை நடாத்தும் பொருட்டு போட்டிக்கான இணைப்பாளர்களாகிய திரு.ப.விக்னேஸ்வரன், திருமு.சு.வேலாயுதபிள்ளை அவர்களும் காரை அபிவிருத்திச்சபை நிர்வாகத்தினரும் இணைந்து 05.09.2019ஆம் திகதி காரை அபிவிருத்திச் சபையின் தலைவர் திரு.இ.சிவசுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் மாணவர் நூலகத்தில் 13 பாடசாலை அதிபர்களையும் வரவழைத்து கடந்த வருடங்களை விட இவ்வருடம் பாடசாலை மாணவர்கள் அனைவரும் பங்குபற்ற வேண்டுமென்ற கோரிக்கையினை முன்வைத்து இதற்கான ஆதரவை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டதுடன் தியாகத்திறன் வேள்விப்போட்டிக்கான தலைப்புக்களும் வழங்கப்பட்டு அதிபர்களின் ஆலோசனையும் பெறப்பட்டு அன்றைய தினமே சகல பாடசாலைகளுக்கும் போட்டி தொடர்பான அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு 27.09.2019 ற்கு முன்னர் விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு கூறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பாடசாலைகளிலிருந்து கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களின் பிரகாரம் பொதுஅறிவு, திருக்குறள், கட்டுரை ஆகிய எழுத்துப் போட்டிகளை அந்தந்தப் பாடசாலைகளிலும் வாய்மொழிப் போட்டிகளான பேச்சு, பொதுஅறிவு வினாடிவினா, திருக்குறள் மனனம், தனிஇசை, குழுஇசை ஆகியவற்றை காரைநகர் இந்துக்கல்லூரியிலும் நடத்துவதற்கான திகதியும் நேர அட்டவணையும் அனுப்பப்பட்டு அப்போட்டிகளை நடத்துவதற்குரிய மேற்பார்வையாளர்களாக எமது ஊரைச் சேர்ந்த கல்வியாளர்களும் வெளியூரைச் சேர்ந்த கல்வியாளர்களும் மற்றும் பிரதேச செயலகம், பிரதேசசபை ஆகியவற்றில் பணிபுரியும் இத்துறை சார்ந்த மத்தியஸ்தர்களையும் பெற்று 14.10.2019 – பொதுஅறிவு, 16.10.2019 – திருக்குறள், 17.10.2019 – கட்டுரை ஆகிய எழுத்துப் போட்டிகள் 11 பாடசாலைகளில் ஒரே நேரத்தில் பல சிரமங்களுக்கு மத்தியில் திறம்பட நடாத்தப்பட்டது.

நடாத்தப்பட்ட திருக்குறள், பொதுஅறிவு ஆகிய எழுத்துப் போட்டிகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்குரிய வாய்மொழிப் போட்டிகளும் பேச்சு, தனிஇசை, குழுஇசை ஆகிய போட்டிகளும் காரைநகர் இந்துக் கல்லூரியில் பின்வரும் தினங்களில் நடைபெற்றது.

23.10.2019 –    பேச்சு              ஆரம்பப்பிரிவு, கீழ்ப்பிரிவு

24.10.2019 –    திருக்குறள் மனனம் ஆரம்பப்பிரிவு, கீழ்ப்பிரிவு

25.10.2019 –    பொதுஅறிவு வினாடிவினா  ஆரம்பப்பிரிவு, கீழ்ப்பிரிவு

28.10.2019 –    தனிஇசை, குழுஇசை    ஆரம்பப்பிரிவு

கடந்த வருடம் இப் போட்டிகளுக்கு 497 மாணவர்கள் பங்குபற்றினர். இவ்வருடம் இப்போட்டியினை 13 பாடசாலைகள் மட்டத்தில் மேற்கொண்டதன் பயனாக 1643 மாணவர்கள் பங்குபற்றியிருந்தார்கள் என்பது சிறப்பம்சமாகும்.

தியாகத்திறன் வேள்விப்போட்டி – 2019 நடாத்த வேண்டிய போட்டிகளுக்கான நேரசூசி கீழே காணலாம் போட்டிகள் யாவும் காரைநகர் இந்துக்கல்லூரியில் நடைபெறும் என்பதனைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

 

இங்ஙனம்

 போட்டிக்குழு இணைப்பாளர்கள்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

               செயற்குழு உறுப்பினர்கள்

  மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்

10.11.2019

 

 

 

 

 

45ஆம் நாள் நினைவேந்தல் அமரர் அண்ணாமலை ஒப்பிலாமணி

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையும், காரை அபிவிருத்திச்சபையும் இணைந்து நடாத்தும் தியாகத்திறன் வேள்விப்போட்டி – 2019

 

            உ

                                             சிவமயம்                                          

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையும்,

காரை அபிவிருத்திச்சபையும்  இணைந்து நடாத்தும்

தியாகத்திறன் வேள்விப்போட்டி – 2019

அமரர் கலாநிதி ஆறுமுகம் தியாகராசா அவர்களின் ஊர்ப்பணியை நினைவுகூரும் முகமாக “தியாகத் திறன் வேள்வி” என்ற மகுடத்துடனும் எமது சபையின் உயரிய நோக்கான “ஆளுயர்வே ஊருயர்வு” என்ற மகுட வாசகத்துடனும் நாம் இப்போட்டிகளை வருடாந்தரம் நடத்துகின்றோம். அறிவே அனைத்து ஆற்றலும் என்பதற்கிணங்க நாம் காரை மண்ணின் மாணாக்கரின் ஆளுமையை வளர்க்கவென இப்போட்டிகளை மிகுந்த சிரமத்தின் மத்தியில் எமது தாய் சங்கமான காரை அபிவிருத்திச் சபையுடன் இணைந்து நடாத்தி வருகின்றோம்.

எமது சபையின் நிர்வாக உறுப்பினர்களோடு தோளோடு தோள் நின்று 2014ஆம் ஆண்டில் இருந்து 2017வரையான காலப்பகுதிகளில் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவை உருவாக்கி மாணக்கரது ஆளுமை   விருத்திக்கு அயராது உழைத்த அமரர் கலாநிதி விஜயரத்தினம் ஜோன் மனோகரன் கென்னடி அவர்களையே சாரும். அதே போல் காரைநகரின் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் ஆகியோரது ஈடுபாடும் முயற்சியும் கடந்த ஜந்தாண்டுகளில் நீங்கள் காட்டிய ஊக்கமே எம்மை உற்சாகப்படுத்தியிருக்கிறது. தொடர்ந்தும் உங்கள் பலமான ஆதரவை எதிர்பார்க்கிறோம்.

மேற்படி போட்டியினை நடாத்தும் பொருட்டு போட்டிக்கான இணைப்பாளர்களாகிய திரு.ப.விக்னேஸ்வரன், திருமு.சு.வேலாயுதபிள்ளை அவர்களும் காரை அபிவிருத்திச்சபை நிர்வாகத்தினரும் இணைந்து 05.09.2019ஆம் திகதி காரை அபிவிருத்திச் சபையின் தலைவர் திரு.இ.சிவசுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் மாணவர் நூலகத்தில் 13 பாடசாலை அதிபர்களையும் வரவழைத்து கடந்த வருடங்களை விட இவ்வருடம் பாடசாலை மாணவர்கள் அனைவரும் பங்குபற்ற வேண்டுமென்ற கோரிக்கையினை முன்வைத்து இதற்கான ஆதரவை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டதுடன் தியாகத்திறன் வேள்விப்போட்டிக்கான தலைப்புக்களும் வழங்கப்பட்டு அதிபர்களின் ஆலோசனையும் பெறப்பட்டு அன்றைய தினமே சகல பாடசாலைகளுக்கும் போட்டி தொடர்பான அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு 27.09.2019 ற்கு முன்னர் விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு கூறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பாடசாலைகளிலிருந்து கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களின் பிரகாரம் பொதுஅறிவு, திருக்குறள், கட்டுரை ஆகிய எழுத்துப் போட்டிகளை அந்தந்தப் பாடசாலைகளிலும் வாய்மொழிப் போட்டிகளான பேச்சு, பொதுஅறிவு வினாடிவினா, திருக்குறள் மனனம், தனிஇசை, குழுஇசை ஆகியவற்றை காரைநகர் இந்துக்கல்லூரியிலும் நடத்துவதற்கான திகதியும் நேர அட்டவணையும் அனுப்பப்பட்டு அப்போட்டிகளை நடத்துவதற்குரிய மேற்பார்வையாளர்களாக எமது ஊரைச் சேர்ந்த கல்வியாளர்களும் வெளியூரைச் சேர்ந்த கல்வியாளர்களும் மற்றும் பிரதேச செயலகம், பிரதேசசபை ஆகியவற்றில் பணிபுரியும் இத்துறை சார்ந்த மத்தியஸ்தர்களையும் பெற்று 14.10.2019 – பொதுஅறிவு, 16.10.2019 – திருக்குறள், 17.10.2019 – கட்டுரை ஆகிய எழுத்துப் போட்டிகள் 11 பாடசாலைகளில் ஒரே நேரத்தில் பல சிரமங்களுக்கு மத்தியில் திறம்பட நடாத்தப்பட்டது.

நடாத்தப்பட்ட திருக்குறள், பொதுஅறிவு ஆகிய எழுத்துப் போட்டிகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்குரிய வாய்மொழிப் போட்டிகளும் பேச்சு, தனிஇசை, குழுஇசை ஆகிய போட்டிகளும் காரைநகர் இந்துக் கல்லூரியில் பின்வரும் தினங்களில் நடைபெற்றது.

23.10.2019 –    பேச்சு               ஆரம்பப்பிரிவு, கீழ்ப்பிரிவு

24.10.2019 –    திருக்குறள் மனனம் ஆரம்பப்பிரிவு, கீழ்ப்பிரிவு

25.10.2019 –    பொதுஅறிவு வினாடிவினா  ஆரம்பப்பிரிவு, கீழ்ப்பிரிவு

28.10.2019 –    தனிஇசை, குழுஇசை   ஆரம்பப்பிரிவு

கடந்த வருடம் இப் போட்டிகளுக்கு 497 மாணவர்கள் பங்குபற்றினர். இவ்வருடம் இப்போட்டியினை 13 பாடசாலைகள் மட்டத்தில் மேற்கொண்டதன் பயனாக 1643 மாணவர்கள் பங்குபற்றியிருந்தார்கள் என்பது சிறப்பம்சமாகும்.

தியாகத்திறன் வேள்விப்போட்டி – 2019 நடாத்த வேண்டிய போட்டிகளுக்கான நேரசூசி கீழே காணலாம் போட்டிகள் யாவும் காரைநகர் இந்துக்கல்லூரியில் நடைபெறும் என்பதனைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

 

இங்ஙனம்

 போட்டிக்குழு இணைப்பாளர்கள்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

               செயற்குழு உறுப்பினர்கள்

  மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்

10.11.2019

 

 

 

 

 

 

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரின் தியாகத்திறன் வேள்விப்போட்டி – 2019

 

சிவமயம்

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரின்

தியாகத்திறன் வேள்விப்போட்டி – 2019

 

    குஞ்சி யழகுங் கொடுத்தானைக் கோட்டழகும்

    மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து

    நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்

    கல்வி அழகே அழகு

                                                                                                                                            நாலடியார்

 

அமரர் ஆ.தியாகராசா அவர்களின் பணியை நினைவுகூரும் வகையில் காரை அபிவிருத்திச்சபையின் “ஆளுயர்வே ஊருயர்வு” என்னும் மகுட வாசகத்திற்கிணங்க மொழி, கல்வி, கலை, மேம்பாட்டுச் சுவிஸ் குழுவினரின் ஒழுங்கமைப்பும் காரைநகர் அபிவிருத்திச்சபையின் தெரிவுக் குழுவினரும் சேர்ந்து வருடாவருடம் நடத்தி வரும் போட்டியாகும். இப்போட்டி மாணவச் செல்வங்களின் ஆளுமைத்திறன், மொழித்திறன், கலைத்திறன் என்பவற்றை வளர்ப்பதற்கு ஏதுவாகும். போட்டிகளாவன (2019)

 

  1. பேச்சுப்போட்டி
  2. கட்டுரைப்போட்டி
  3. திருக்குறள் மனனப் போட்டி
  4. இசைப்போட்டி – தனி, குழு
  5. பொதுஅறிவு வினாடி வினாப்போட்டி
  6. நாடகப்போட்டி

 

போட்டிப் பிரிவுகளாவன:

  1. ஆரம்பப்பிரிவு     – தரம் 03,04,05 மாணவர்கள்
  2. கீழ்ப்பிரிவு– தரம் 06,07,08 மாணவர்கள்
  3. மத்தியபிரிவு– தரம் 09,10,11 மாணவர்கள்
  4. மேற்பிரிவு– தரம் 12,13 மாணவர்கள்

 

போட்டிகளுக்கான பொது விதிகள்

  1. காரைநகரைப் பூர்வீகமாகக் கொண்ட மாணவர்கள் எப்பாடசாலையிற் கற்றாலும் இப்போட்டிக்கு விண்ணப்பிக்கலாம். தேவை ஏற்படின் ஊராளன் என்பதை ஏற்பாட்டாளருக்கு உறுதிப்படுத்த வேண்டும்.
  2. விண்ணப்பிப்போர் காரைநகர்ப் பாடசாலை மாணவராயின் பாடசாலை அதிபர் மூலம் விண்ணப்பிக்கலாம்.
  3. ஏனைய மாணவர்கள் விண்ணப்பிப்பதாயின் விண்ணப்பப் பத்திரத்தை காரை அபிவிருத்திச்சபை அல்லது மாணவர் நூலகத்திடம் பெற்றுப் பூரணப்படுத்தி தான் கற்கும் கல்லூரி அதிபரிடம் கற்கும் தரம் பற்றி உறுதிப்படுத்தி அனுப்ப வேண்டும்.
  4. விண்ணப்பிப்போர் மென் பிரதியாயின் Swisskarai2004@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கும் காகிதப் பிரதியாயின் தலைவர், காரைநகர் அபிவிருத்திச்சபை, தியாகத்திறன் வேள்வி–2019, மணற்காட்டு அம்மன் வீதி, காரைநகர் என்ற முகவரிக்கு 09.20ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன் அனுப்பி வைக்க வேண்டும்.
  5. மாணவர் ஒருவர் நாடகம் தவிர்ந்த 04 போட்டிகளில் பங்கு கொள்ளலாம். இசைப் போட்டியில் தனியும் குழுவும் ஒன்றாகக் கருதப்படும்.
  6. போட்டிகளுக்கான காலம்ää நேர அட்டவணைகள் கல்லூரி அதிபர் ஊடாகவும் இணையத்தளத்தினூடாகவும் அறிவிக்கப்படும்.
  7. மாணவர்கள் போட்டி நேரத்திற்கு 30 நிமிடங்;களுக்கு முன்னதாகச் சமுகமளிக்க வேண்டும்.
  8. போட்டியாளர்கள் பாடசாலைச் சீருடையில் வருகை தருதல் விரும்பத்தக்கது.
  9. போட்டிகள் காரைநகர் இந்துக்கல்லூரி அல்லது காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியில் நடைபெறும்.
  10. போட்டியில் அதிகூடிய புள்ளிகள் எடுக்கும் ஐவருக்கு முதல் ஐந்து பரிசு வழங்கப்படும்.
  11. போட்டிகளில் 75 புள்ளிகள் எடுக்கும் மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழும் பரிசுத் தொகையும் வழங்கிக் கௌரவிக்கப்படும்.
  12. போட்டிகளில் அதிகூடிய புள்ளி 65இற்குக் குறைவாக எடுக்கும் மாணவர்கள் போட்டியினின்றும் புறந்தள்ளப்படுவார்கள்.
  13. போட்டிகளில் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
  14. போட்டிகள் யாவும் திருவுளச்சீட்டின் மூலம் பெற்ற தலைப்பில் பங்கு கொள்ளல் வேண்டும்.

 

இங்ஙனம்

தியாகத்திறன் வேள்விப் போட்டிக்குழுவினர்

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையும் , காரை அபிவிருத்திச் சபையும் இணைந்து மதிப்பளிப்பு.

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையும் , காரை அபிவிருத்திச் சபையும் இணைந்து மதிப்பளிப்பு.

ஊரின் கல்விமான்களையும் கலைஞர்களையும் அறிஞர்களையும் சேவையாளர்களையும் வாழும் போது வாழ்த்தி மகிழ்விப்போம்! மகிழ்வோம்! என்பதும் அதன் மூலம் நம் இளைய சமுதாயத்தின் முன்னேற்றத்தின் நற்திசையை கலங்கரை விளக்கமாய் நின்று காட்டுவோம் என்பதும் எமதுசபையின் நோக்குகளில் ஒன்றாகும். அந்த வகையில் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் தேவஸ்தான ஸ்தாபகருமான சிவஸ்ரீ சரஹணபவானந்த  சிவாச்சாரியார்  கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக சுவிற்சர்லாந்தில்  ஆன்மீக பணியாற்றிவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊருக்கு உழைத்த பெரியோரை “வாழும்போது வாழ்த்துவோம்” என்பது எமது சபையின் நோக்கங்களில் ஒன்று. சுவிற்சர்லாந்தில் சுறுசுறுப்பாகப் சைவத் தொண்டு ஆற்றிவருபவருமாகிய  முன்னாள் அடீஸ்வீல் முருகன் கோவில் ஸ்தாபகரும், அகில உலக கம்பன்கழக தலைவரும். சுவிஸ்சர்லாந்து ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் தேவஸ்தான ஸ்தாபகருமான சிவஸ்ரீ சரஹணபவானந்த சிவாச்சாரியார் ஸ்ரீமதி ஜெகதாம்பாள் தம்பதிகளின் அறுபது அகவையை பூர்த்தி செய்வதாய் நிச்சயக்கப்பட்ட  மணிவிழாவில் விருதளிப்பதில் காரை அபிவிருத்திச் சபையும், சுவிஸ்-காரை அபிவிருத்திச் சபையும்  அதன் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழவினரும் பெருமிதமடைகிறோம்.

ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் தேவஸ்தான   திறந்த வெளியரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்ற மணிவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ் நாட்டைச் சேர்ந்த பிரமுகர்களும், சுவிற்சர்லாந்து ஆலய பிரதமகுருமார்களும் பல பொதுப்பணித் தொண்டு நிறுவன உறுப்பினர்களும், ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன்  ஆலய பக்தர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் ஆரம்ப காலத் தலைவர் திருவாளர் நல்லதம்பி சரவணப்பெருமாள்  அவர்களால் வாழ்த்துரை இசைக்கப்பட்டு  எமது சபையின் செயலாளர் திரு முருகேசு பாலசுந்தரம், திருமதி பாலசுந்தரம் லோகேஸ்வரி ஆகியோரால் பொன்னாடை போர்த்தி, மலர் மாலை அணிவித்து வாழ்த்துப்பாவினை வழங்கி கௌரவித்திருந்தார்கள். விழாவினை சிறப்பித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகளும், வாழ்த்துக்களும்.

 

வாழ்த்துப்பாவும்  நிழற்படங்களும் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

 

இங்ஙனம்

                சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

               செயற்குழு உறுப்பினர்கள்

  மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்

03.07.2019

 

 

 

அமரர் திரு அருணாசலம் முத்துலிங்கம் அவர்களின் மறைவு குறித்து சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

Publikation21.05.2019

“காரை ஒன்றியம் ஜெர்மனி” நிகழ்வு புதுபொலிவுடனும், புதுசிந்தனைகளுடனும் சிறப்புற அமைய உளம் நிறைந்த வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் மகிழ்வடைகின்றோம். சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

 

ஜெர்மன் வாழ் காரைநகர் உறவுகளுக்கு அன்பான வணக்கங்கள்!

புலம் பெயர்ந்து வாழும் ஜெர்மன் வாழ் காரைநகர் மக்களின் ஊர் மீதான பற்றின் ஒரு வெளிப்பாடே மற்றைய நாடுகளில் உள்ள காரையூர் சங்கங்கள்இ சபைகள் போல் முதன் முதலாக ஒன்று கூடி 31.03.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 12.00 மணிக்கு செயற்பாட்டு ரீதியாக அமைய இருக்கின்ற சமூக மேம்பாட்டு அமைப்பான “காரை ஒன்றியம் ஜெர்மனி” நிகழ்வு புதுபொலிவுடனும், புதுசிந்தனைகளுடனும் சிறப்புற அமைய உளம் நிறைந்த வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் மகிழ்வடைகின்றோம்.

கலை, கல்வி, பண்பாட்டிலும், கலாச்சாரத்திலும், செல்வ வளத்திலம் மனிதவள மேம்பாட்டிலும் சிறப்பு பெற்ற எமது கிராமத்தவர்கள் தாங்கள் பிறந்தமண் பல்துறைகளிலும் செழிப்படைய கடந்த நூற்றாண்டுக்கு முன் திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற கூற்றிக்கிணங்க மலேசியாவில் வேலைவாய்பின் நிமிர்த்தம் குடியேறியவர்களால் முதன் முதலாக புலம் பெயர்நாட்டில் 1919ஆம் ஆண்டில் உருவாக்கம் பெற்ற காரை ஒன்றியம் மலாயா, அதன் பின்னரான கொழும்பு காரை அபிவிருத்திச்சபை, பிரித்தானியா காரை நலன் புரிச்சங்கம், கனடா காரை கலாச்சார மன்றம், அவுஸ்திரேலிய காரை கலாச்சார சங்கம், சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை, பிரான்ஸ் நலன்பரிச்சங்கம், காரை அபிவிருத்திச்சபை ஆகியன கடந்த பல வருடங்களாக எம்மூர் கலை, கல்வி, மருத்துவம், வியாட்டுத்துறை, துறைசார் ஊக்குவிப்புக்கள் என சமூக மேம்பாட்டிற்கான உதவிகளையும், நற்பணிகளையும் ஆற்றிவருகின்றமை யாவரும் அறிந்ததே! அந்தவகையில் அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பதற்கு அமைய “காரை ஒன்றியம் ஜெர்மனி”காரை சமூக மேம்பாட்டிற்காக இணைந்து கொள்வதையிட்டு பெருமிதம் கொள்கின்றோம்.

எமது ஊர் காரைநகர் குறித்த கலை, கல்வி, கலாச்சார மற்றும் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு புலம் பெயர் நாட்டடில் உள்ள அனைத்து காரையூர் சங்கங்களும்இ சபைகளும் காலத்தின் தேவை கருதி ஒரே குடையின் கிழ் சிந்தனைகளை வகுத்து ஒற்றுமையுடன் செயற்படுவதன் மூலமே நாம் அனைவரும் அபிவிருத்தி என்ற நோக்கத்தை அடைய முடியும். இன்றைய நன்நாளில் ஜெர்மன் வாழ் காரைநகர் உறவுகள் இணைந்து உருவாக்கும் “காரை ஒன்றியம் ஜெர்மனி” நிகழ்வு சிறப்பற அமைய எல்லாம் வல்ல ஈழத்துச் சிதம்பர ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ ஆனந்த தாண்டவ நடராஜனின் திருவருளைப் பிராத்தித்து வாழ்த்துகின்றோம்.

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”
“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

இங்ஙனம்
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
செயற்குழு உறுப்பினர்கள்
மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு
சுவிஸ் வாழ் காரை மக்கள்
31.03.2019

 

Publikation1 29.03.2019

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையும், காரைநகர் அபிவிருத்திச் சபையும் இணைந்து தேசிய வீடமைப்புத் திணைக்கள ஒய்வுநிலை லிகிதரும், இலவசக் கல்விநிலைய அதிபரும், கணித ஆசிரியருமான  திரு. கந்தையா நடராசா  அவர்களுக்கு மதிப்பளிப்பு.

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையும், காரைநகர் அபிவிருத்திச் சபையும் இணைந்து தேசிய வீடமைப்புத் திணைக்கள ஒய்வுநிலை லிகிதரும், இலவசக் கல்விநிலைய அதிபரும், கணித ஆசிரியருமான  திரு. கந்தையா நடராசா  அவர்களுக்கு மதிப்பளிப்பு.

திருவாளர்  கந்தையா நடராசா     அவர்கள்  காரைநகர் வெடியரசன் வீதியைப்  பிறப்பிடமாக கொண்டவரும், தேசிய வீடமைப்புத் திணைக்களத்தில் லிகிதராக பணிபுரிந்த இவர் ஓய்வுநிலையிலும்   காரைநகர், சுழிபுரம், யாழ்ப்பாணம் ஆகிய தனியார் கல்வி நிலையங்களில் தன்னலங் கருதாது தனித்தனியாய் மாணவர்கள் விரும்பும் வண்ணம் கணிதத்தை இலகுவாகக் கற்க வைத்து கணிதத்தில் மாணவர்கள் சித்தி பெற சேவை புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊரின் கல்விமான்களையும் கலைஞர்களையும் அறிஞர்களையும் சேவையாளர்களையும் வாழும் போது வாழ்த்தி மகிழ்விப்போம்! மகிழ்வோம்! என்பதும் அதன் மூலம் நம் இளைய சமுதாயத்தின் முன்னேற்றத்தின் நற்திசையை கலங்கரை விளக்கமாய் நின்று காட்டுவோம் என்பதும் எமதுசபையின் நோக்குகளில் ஒன்றாகும். அந்த வகையில் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் காரை அபிவிருத்திச் சபையுடன் இணைந்து கடந்த 16 – 12 – 2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காரை இந்துக் கல்லாரி நடராஜா மண்டபத்தில் முன்னாள் வடமாகணக் கல்விப் பணிப்பாளர். காரை அபிவிருத்திச்சபைத் தலைவர் திருவாளர் பரமநாதன் விக்கினேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடாத்திய “முத்தமிழ் விழா – 2018” இல் திருவாளர்    கந்தையா நடராசா     அவர்களுக்கு “சமூக சேவகர்|| விருதளித்து  மதிப்பளித்தது.

கலாபூஷணம் யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்கள் ஆக்கிய வாழ்த்துப்பாவை காரை அபிவிருத்திச்சபை பொருளாளர் கலாபூஷணம் திரு.மு.சு வேலாயுதபிள்ளை அவர்களால் வாழ்த்துரை இசைக்கப்பட்டு  காரை அபிவிருத்திச்சபைத் தலைவர் திரு. ப. விக்கினேஸ்வரன் அவர்கள் பொன்னாடை போர்த்தியும்,  வாழ்த்துப் பாவையும், விருதையும் வழங்கி மதிப்பளித்தார்.

வாழ்த்துப்பாவும், நிழற்படங்களும் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

இங்ஙனம்

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

செயற்குழு உறுப்பினர்கள்

மொழி, கல்வி. கலை மேம்பாட்டுக்குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்

17.03.2019

 

 

 

 

சுவிஸ்காரை அபிவிருத்திச்சபையின் 2018ஆம் ஆண்டு செயற்திட்ட அறிக்கை பகுதி இரண்டு

 

சுவிஸ்காரை அபிவிருத்திச்சபையின் 2018ஆம் ஆண்டு செயற்திட்ட அறிக்கை பகுதி இரண்டு

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரால் 2018ஆம் ஆண்டு சுவிஸ் நாட்டிலும்இ எமது தாய் சங்கமான காரை அபிவிருத்திச் சபையுடன் இணைந்து காரைநகரிலும் முன்னெடுக்கப்பட்ட செயற் திட்டங்கள் சிறப்புற ஒத்துழைப்பு நல்கியோருக்கு நன்றிகள். பகுதி இரண்டு இன்று வெளியாகின்றது

நன்றி

“ஆளுயர்வே
“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
செயற்குழு உறுப்பினர்கள்
மொழிஇ கல்விஇ கலை மேம்பாட்டுக் குழு
சுவிஸ் வாழ் காரை மக்கள்.
16.02.2019

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர்   “காரைக் கதம்பம் -2019”  நிகழ்வுக்கு வழங்கிய வாழ்த்துச் செய்தி

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர்   “காரைக் கதம்பம் -2019” 

நிகழ்வுக்கு வழங்கிய வாழ்த்துச் செய்தி

 

சிவமயம்

 

தலைவர் / செயலாளர் / நிர்வாகசபை

காரை நலன்புரிச் சங்கம் பிரித்தானியா

 

“வாழ்த்துச் செய்தி”

அன்புடையீர் வணக்கம்!

“பெற்றதாயும் பிறந்தபொன்னாடும் நற்றவ வானிலும் நனிசிறந்தனவே” என்ற கூற்றிற்கிணங்க காரைமாதாவின் வளர்ச்சிக்காகவும், இங்குள்ள இளையோரின் தமிழறிவு, கலையுணர்வுகளை வளர்க்கவும் காரை நலன்புரிச் சங்கம் பிரித்தானியா தனது வருடாந்த நிகழ்வான  “காரைக் கதம்பம் -2019” நிகழ்வினை 26-01-2019 சனிக்கிழமை அன்று கொண்டாப்படுவதையிட்டு பெரு மகிழ்வடைகின்றோம்.

காரை நலன்புரிச் சங்கம் பிரித்தானியா கடந்த கால்நூற்றாண்டுக்கு மேலாக ‘வெளியூர்கள் போனாலும் வெற்றிபல காண்பார் களியூரில் வாழ்ந்தும் கவினூர் துளியும் மறவார்’  என காரை வாழ் மக்களின் கல்வி, மருத்துவம், வாழ்வாதாரம் போன்ற விடயங்களில்  அக்கறை கொண்டு அவற்றின் அபிவிருத்திப் பணிகளுக்காகவும் பெருமளவு நிதியைவாரி வழங்கிவருகின்றார்கள். அவர்களின் பணிகளும், சேவைகளும் மேலும் விரிவாக்கம் அடைய வாழ்த்துகின்றோம்.

ஒரு கிராமத்தின் வளர்ச்சி என்பது சமூகத்தின் அறிவு, மொழி மற்றும் கலை சார்ந்த விடயங்களை அடுத்த சந்ததியினருக்கு எடுத்துச் செல்வதின் மூலம் தான் வலுப்பெறுகின்றது. தாம் பிறந்த மண்ணிற்கும்  இனத்திற்கும்  மொழிக்கும் பெருமை சேர்ப்பதுடன் மட்டும் நின்றுவிடாது, தொடர்ந்து இளையோருக்கு அவற்றை எடுத்துச் செல்வதில் முக்கிய பங்கு புலபெயர் அமைப்புகளுக்கு இருக்கின்றது. அந்தவகையில் “காரைக் கதம்பம் -2019” இல் பிரித்தானியா வாழ் காரை இளம் சான்றோர்களை உருவாக்ககூடிய விழாவாக அமைய வாழ்த்துகின்றோம்.

எமது இலங்கையின் எல்லா பிரதேசங்களைக் காட்டிலும் காரைநகர் முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் காணப்படுகிறது. தனக்கே உரித்தான கட்டுப்பாட்டுடன் கூடிய ஆன்மீக சிந்தனையில் சிறப்புற்றவர்கள் முன்மாதிரியான தர்ம செயல் வள்ளல்கள், வர்த்தக பெருந்தகைகள், சமூக ஆர்வலர்கள், கல்வி ஆர்வலர்கள், தேசப்பற்றாளர்கள், பேச்சாளர்கள், தியாகிகள் என நம்மூர்ருக்கு மிக மிக சிறப்பு வாய்ந்த ஒன்று. நாம் பேசும் மொழி தமிழ். எமது அடையாளம் தமிழ், சைவம் இவை அனைத்தையும் முன்னிலைப்படுத்தி காரை நலன்புரிச் சங்கம் பிரித்தானியா முன்னெடுக்கும் “காரைக் கதம்பம் -2019” சிறப்புற்று விளங்க வாழ்த்துகின்றோம்.

பிரித்தானியா  காரை நலன்புரிச் சங்கம் தனது காரைக் கதம்பம் விழாவின் ஊடாக தனது வரலாற்று கடமையை இடைவிடாது, தளராது சோர்ந்திருக்காமல் வீறுநடை போட வேண்டும் என்ப தோடு தங்களின் கதம்ப விழா புதுப்புது வசந்தங்களோடு, சொந்தங்களையும், உறவுகளையும். நண்பர்களையும் ஒன்றிணைத்து செயல்படவும், “காரைக் கதம்பம் -2019” சிறப்புற்று வெற்றி விழாவாக அமைய ஈழத்து சிதம்பர சௌந்தராம்பிகை சமேத சுந்தரப்பெருமானை வணங்கி வாழ்த்துகின்றோம்.

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

 

இங்ஙனம்

                சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

               செயற்குழு உறுப்பினர்கள்

  மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்

26.01.2019

 

 

london karai 2019

 

 

 

 

 

சுவிஸ்காரை அபிவிருத்திச்சபையின் 2018ஆம் ஆண்டு செயற்திட்ட அறிக்கை பகுதி ஒன்று

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரால் 2018ஆம் ஆண்டு சுவிஸ் நாட்டிலும்இ எமது தாய் சங்கமான காரை அபிவிருத்திச் சபையுடன் இணைந்து காரைநகரிலும் முன்னெடுக்கப்பட்ட செயற் திட்டங்கள் சிறப்புற ஒத்துழைப்பு நல்கியோருக்கு நன்றிகள். பகுதி ஒன்று இன்று வெளியாகின்றது பகுதி இரண்டு வெகு விரைவில் வெளியிடப்படும் என்பதை மிக மகிழ்வுடன் தெரியப்படுத்துகின்றோம்

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

 

இங்ஙனம்

தெரிவுக்குழுவினர்

காரைநகர் அபிவிருத்திச்சபை

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

செயற்குழு உறுப்பினர்கள்

மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்.

19 – 01 – 2019

 

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

கென்னடி ஆசானுக்கு நன்றிக்கடன் செலுத்துவோம்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையும், காரைநகர் அபிவிருத்திச் சபையும் இணைந்து அரச வைத்திய அதிகாரியும் சமூக சேவையாளருமான திருவாளர் சுப்பிரமணியம் சுவாமிநாதன் அவர்களுக்கு மதிப்பளிப்பு.

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையும், காரைநகர் அபிவிருத்திச் சபையும் இணைந்து அரச வைத்திய அதிகாரியும் சமூக சேவையாளருமான திருவாளர் சுப்பிரமணியம் சுவாமிநாதன் அவர்களுக்கு மதிப்பளிப்பு.

திருவாளர் சுப்பிரமணியம் சுவாமிநாதன் அவர்கள் காரைநகர் புதுறோட்டை பிறப்பிடமாக கொண்ட இவர் காரைநகர் ஆதார வைத்தியசரலையில் பத்தாண்டுக்கு மேலாக வைத்திய பணியாற்றி ஓய்வுநிலையிலும் மீள்நியமனம் பெற்று தனது பணியைத் தொடர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகரின் சமூகசேவை வரலாற்றில் இவரது பங்கு கணிப்பிற்குரியது. காரைநகர் மணிவாசகர் சபையிலும் இணைந்து பசுமை விருத்திக்காக மரங்கன்றுகள் நாட்டியும், மதில்கள், முட்கம்பிவேலிகள் அமைத்திடவும் தொண்டு செய்து சேவை புரிந்தவர் என்ற பெருமைக்குரியவர்.

ஊரின் கல்விமான்களையும் கலைஞர்களையும் அறிஞர்களையும் சேவையாளர்களையும் வாழும் போது வாழ்த்தி மகிழ்விப்போம்! மகிழ்வோம்! என்பதும் அதன் மூலம் நம் இளைய சமுதாயத்தின் முன்னேற்றத்தின் நற்திசையை கலங்கரை விளக்கமாய் நின்று காட்டுவோம் என்பதும் எமதுசபையின் நோக்குகளில் ஒன்றாகும். அந்த வகையில் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் காரை அபிவிருத்திச் சபையுடன் இணைந்து கடந்த   16 – 12 – 2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காரை இந்துக் கல்லாரி நடராஜா மண்டபத்தில் முன்னாள் வடமாகணக் கல்விப் பணிப்பாளர். காரை அபிவிருத்திச்சபைத் தலைவர் திருவாளர் பரமநாதன் விக்கினேஸ்வரன்  அவர்களின் தலைமையில் நடாத்திய “முத்தமிழ் விழா – 2018” இல் திருவாளர் சுப்பிரமணியம் சுவாமிநாதன்  அவர்களுக்கு அருட்செல்வர்”  விருதளித்து மதிப்பளித்தது.

கலாபூஷணம் யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்கள் ஆக்கிய வாழ்த்துப்பாவை காரை அபிவிருத்திச்சபை பொருளாளர் கலாபூஷணம் திரு.மு.சு வேலாயுதபிள்ளை அவர்களால் வாழ்த்துரை இசைக்கப்பட்டு  சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையின் திட்டமிடல் ஒருங்கிணைப்பு உறுப்பினர் திரு சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களால் பொன்னாடை போர்த்தியும், காரை அபிவிருத்திச்சபைத் தலைவர் திரு. ப. விக்கினேஸ்வரன் அவர்கள்  வாழ்த்துப் பாவையும், விருதையும் வழங்கி மதிப்பளித்தார்.

வாழ்த்துப்பாவும்,  நிழற்படங்களும் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

இங்ஙனம்

                      சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

செயற்குழு உறுப்பினர்கள்

மொழி, கல்வி. கலை மேம்பாட்டுக்குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்

30.12.2018

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையும் காரைநகர் அபிவிருத்திச் சபையும் இணைந்து நடாத்துகின்ற முத்தமிழ் விழா 2018இல் ஓய்வுநிலை அரச வைத்திய அதிகாரியும் சமூக சேவையாளருமான திரு. சுப்பிரமணியம் சுவாமிநாதன் அவர்களுக்கு அவரது சேவை போற்றி    “அருட்செல்வர் ” விருது வழங்கி வாழ்த்திய வாழத்துப்பா

 

காரைமண் பெற்றெடுத்த சுவாமி நாதா!

கவினுறவே வைத்தியப்பணி நன்றெ செய்தாய்

சீருடனே ஒய்வுநிலை வந்த போதும்

சிறப்புடனே மீள்நியமனம் பெற்று நல்ல

பேர்ஓங்க பத்தாண்டு மேலே சேவை

போதாதென தனியார் வைத்திய சேவை

ஊர்போற்ற வீடுகளிலும் சேவை செய்தீர்!

உத்தமனே பல்லாண்டு வாழ்க! வாழ்க!

 

வைத்தியரே இறைவனென உலகங் கூறும்

வைத்தியமும் இறைபணியும் ஒன்று சேர

வித்தகனே! திண்ணபுரம் ஈழத்துச் சிதம்பரம்

மணிவாசகர் சபையிலும் தொண்டு செய்தீர்

மதில்கள்முட் கம்பிவேலி தென்னை நடுதல்

மாண்புடனே நற்பணிகள் பலவும் செய்தீர்

இதமான திருவாசகம் இசைந்து ஒலிக்கும்

இறையருளால் பல்லாண்டு வாழ்க! வாழ்க!

 

உன்னதமான பணிகள்தான் என்றும் செய்க!

ஊர்போற்ற காரைசுவிஸ் சபை போற்ற

மன்னியசீர் சிதம்பரேசர் அருள் பெற்று

மருவியநல் சுற்றமுடன் என்றும் வாழ்க!

மன்னுபுகழ் சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை

மாண்புபெற வாழ்த்துகின்றது வாழ்க! வாழ்க!

பன்னலங்கள் எல்லாமும் என்றும் பெற்றுபாரினிலே

“அருட்செல்வர்” பெயர் பல்லாண்டு வாழ்க! வாழ்க!

 

ஆக்கம்: கலாபூஷணம் யோகலட்சுமி சோமசுந்தரம்.

 

வாழ்த்தி வழங்கியோர்கள்

முத்தமிழ் விழா                                                                              சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை,

இந்துக் கல்லூரி                                                                        மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு,

       காரைநகர்                                                                           காரைநகர் அபிவிருத்திச்சபை, தெரிவுக்குழு.

                          16.12.2018

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை  காரை அபிவிருத்திச் சபையுடன் இணைந்து  நடாத்திய தியாகத்திறன் வேள்வி, முத்தமிழ் விழா – 2018 சிறப்புற ஒத்துழைப்பு நல்கியோருக்கு நன்றிகள்.

 

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை  காரை அபிவிருத்திச் சபையுடன் இணைந்து  நடாத்திய தியாகத்திறன் வேள்வி, முத்தமிழ் விழா – 2018

சிறப்புற ஒத்துழைப்பு நல்கியோருக்கு நன்றிகள்.

 

           எந்நன்றி கொன்றரர்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

               செய்ந்நன்றி கொன்ற மகற்குகுறள்  

 

ஒரு தசாப்தத்திற்கும் முன்னராக 04.12.2004 அன்று காரைநகருக்கும் சுவிற்சர்லாந்தில் வாழும் காரைநகர் மக்களுக்கும்  இடையே ஒர் உறவுப்பாலத்தை உருவாக்குவதற்காக  எமது சபையினர் காரைநகரில் தாய் சபையாகிய காரை அபிவிருத்திச் சபையை முன்னின்று நிறுவினோம். இந்நாள் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் வரலாற்றிலே  பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாகும். தியாகத்திறன் வேள்வி -2018 மாணவர்களுக்கான போட்டிகள் மற்றும் பரிசளிப்பு ஆகிய அனைத்தும்  சிறப்புற நடைபெற பல வழிகளிலும் உழைத்த  அன்பர்கள் அனைவருக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

“தியாகத் திறன் வேள்வி-2018” க்கான ஆலோசனைக் கூட்டம் கடந்த            02-07-2018 திங்கட்கிழமை அன்று காரை அபிவிருத்திச் சபைத் தலைவர்    திரு. ப. விக்கினேஸ்வரன் தலைமையில் காரைநகர் மாணவர் நூலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில்; காரைநகர் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் என கலந்து சிறப்பித்து மாணக்கர் போட்டிகளுக்கென  தெரிவுக் குழுவை 17பேர்கள் அடங்கிய தெரிவுக் குழுவை உருவாக்கி இருந்தார்கள் அக் குழுவில் தலைவராக திரு. ப. விக்கினேஸ்வரன் அவர்களும், பரீட்சை இணைப்பாளராக திரு.மு.சு வேலாயுதபிள்ளை அவர்களும் தெரிவுசெய்யப்பட்டு இருந்தார்கள்.

இந்த ஆண்டிலிருந்து மாணவர் திறன் வளர்க்கும் போட்டிகளை விரிவாக்கம் செய்து காரைநகரின் கல்விப் புரட;சியின் தந்தை கலாநிதி. ஆ. தியாகராசா அவர்களின் நினைவாக வருடந்தோறும் “தியாகத் திறன் வேள்வி” என்ற நிகழ்வாக “ஆளுயர்வே ஊருயர்வு” என்ற மகுட வாசகத்துடன் இடம்பெறும் என எமது சபையின் மொழி, கலை, கல்வி மேம்பாட்டுக்குழுவினரும், தெரிவுக்குழுவினரும் முடிவு செய்திருந்தார்கள். அதற்கு அமைய போட்டிகள் அனைத்தும் வெகு சிறப்பாக நடாத்தப்பட்டன என்பது யாவரும் அறிந்ததே!

தியாகத்திறன் வேள்வி – 2018|| மாணவர் போட்டிகள் சிறப்பு அமைய உதவியோருக்கு நன்றிகள்.

தியாகத்திறன் வேள்வி -2018 போட்டியின் தலைமை மேற்பார்வையாளார்களாக காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவர், வடமாகாண ஒய்வு நிலை கல்விப் பணிப்பாளர் திரு.ப.விக்கினேஸ்வரன் அவர்களுக்கும், பரீட்சை இணைப்பாளராகவும், திருக்குறள், பொது அறிவுப் போட்டியின் முதன்மை நடுவராகவும் பணிபுரிந்த கலாபூஷணம் பண்டிதர் மு.சு வேலாயுதபிள்ளை அவர்களுக்கும், கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டிகளின் முதன்மை நடுவராக பணிபுரிந்த ஒய்வுநிலை ஆசிரியர் கலாபூஷணம் யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்களுக்கும் பொது அறிவுப் போட்டியின் மாணவருக்கான கேளவிக் கொத்தினை தந்துதவிய வவுனியா சித்தி விநாயகர் வித்தியாலய பிரதி அதிபர் திரு.அருணாசலம் வரதராஜன் அவர்களுக்கும். இசைப் போட்டியின் முதன்மை நடுவராக பணிபுரிந்த யாழ் பல்கலைக்கழ சிரேஷ்ட விரிவுரையாளர் செல்வி. பரமேஸ்வரி கணேசன் அவர்களுக்கும், மாணவர்களின் பரீட்சைகளுக்கு மேற்பார்வையாளராக பணிபுரிந்த யாழ்பல்கலைக்கழ சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி வீரமங்கை யோகரட்ணம் அவர்களுக்கும், மானிப்பாய் இந்து மகளிர் கல்லூரி ஆசிரியர் விஜயரத்தினம் பிரேமதாஸ் குமாரஸ்ரீ அவர்களுக்கும், காரைநகர் பிரதேச சபை பிரதி தவிசாளர் திரு. கணேசபிள்ளை பாலச்சந்திரன் அவர்களுக்கும், யாழ்ப்பாண பாடசாலைகளில் இருந்து வருகைதந்து பணிபுரிந்த ஆசிரியர்களுக்கும், இன்னும் பல வழிகளில் பணிபுரிந்த காரைநகர் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்களுக்கும், காரைநகர் அபிவிருத்திச்சபை நிர்வாக சபை உறுப்பினர்களுக்கும், போட்டிகளுக்கு மாணவர்களை  தயார்படுத்திய ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் ஆகியோருக்கும், பரீட்சை சிறப்பாக நடைபெற இலைமறை காயாக பணிபுரிந்த அனைத்து உள்ளங்களுக்கும் எமது சபையினர் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறார்கள்.

முத்தமிழ் விழாச் சிறப்புற நடந்தேற உதவியோருக்கான நன்றிகள்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையால் 31.12.2005இல் உருவாக்கப்பட்ட எமது தாய் சங்கமான காரை அபிவிருத்திச் சபையுடன் இணைந்து  ஐந்தாவது வருடமாக  முத்தமிழ் விழாவினைக் காண்பதில் பெருமிதம் கொள்கின்றோம்.

தியாகத்திறன் வேள்விப் போட்டிகளுக்கு வித்திட்ட எமது சபையின் முன்னாள் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு இணைப்பாளர் அமரர் கலாநிதி. கென்னடி விஜயரத்தினம் அவர்களின் பிறந்த தினத்தில 16.12.2018 ஞாயிற்றுக்கிழமை எமது தாய் சங்கமான காரைநகர் அபிவிருத்திச் சபையுடன் இணைந்து காரைநகரின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட அமரர் கலாநிதி ஆ.தியாகராஜா அவர்களின் நினைவாக தியாகத்திறன்வேள்வி – 2018 மாணக்கர் போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பையும், சான்றோர்கள் மதிப்பளிப்பையும்,  இணைத்து இயல், இசை, நாடகம் கலந்த முத்தமிழ் விழாவாக காரைநகர் இந்துக்கல்லூரி நடராஜா மண்டபத்தில்; வெகு சிறப்பாக நடாத்தப்பட்டது   என்பது குறிப்பிடத்தக்கது.

 

எமது அழைப்பினை ஏற்று விழாவிற்குத்  தலைமை தாங்குகிய காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவர், வடமாகாண ஒய்வு நிலை கல்விப் பணிப்பாளர் திரு.ப.விக்கினேஸ்வரன் அவர்களுக்கும், எமது சபையின் அழைப்பையேற்று பிரதமவிருந்தினராக வருகை தந்திருக்கும் ஆணையாளர் சிறுவர் நன்நடத்தை திணைக்களம் வடமாகணம் திரு.திருச்சிற்றம்பலம் விஸ்வரூபன் அவர்களுக்கும், மற்றும் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருக்கும் திருவாளர் அறக்கொடை அரசு சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களுக்கும், மற்றும் கௌரவ விருந்தினர்களாக வருகை தந்திருக்கும் காரைநகர் இந்துக் கல்லூரி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களுக்கும், யாழ்ற்றன் கல்லூரி அதிபர் திரு.தி.மதிவதனன் அவர்களுக்கும், சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாலய அதிபர் திரு. வி.சு. சாந்தகுமார் அவர்களுக்கும், வியாவில் சைவ வித்தியாலய அதிபர் திருமதி. ச. அருள்மொழி அவர்களுக்கும், சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் அழைப்பையேற்று சிறப்பு விருந்தினர்களாக வருகைதந்த எமது சகோதர புலம்பெயர் காரையூச்சங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் எமது நன்றிகளும் வாழ்த்துக்களும்.

அமரர் கலாநிதி ஆ.தியாகராஜா அவர்களின் பணிகள் பற்றிய நினைவுப்பேருரை ஆற்றிய ஒய்வுநிலை ஆசிரியர் கலாபூஷணம் யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்களுக்கும், அமரர் கலாநிதி. ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் “சகலதுறை வல்லவன்” என்ற தலைப்பில் நினைவுப்பேருரை ஆற்றிய செயற்திட்டப் பணிப்பாளர் கல்வி அமைச்சு கொழும்பு திரு. கந்தையா பத்மானந்தன் அவர்களுக்கும் எமது சபை சார்பாக நன்றிகளும் பாராட்டுதல்களும்.

முத்தமிழ் விழா – 2018 இல் ஓய்வுநிலை அரச வைத்திய அதிகாரியும் சமூக சேவையாளருமான திரு. சுப்பிரமணியம் சுவாமிநாதன் அவர்களையும், காரைநகர் வெடியரசன் வீதியைப் பிறப்பிடமாக் கொண்டவரும், தேசிய வீடமைப்புத் திணைக்கள ஒய்வுநிலை லிகிதரும், இலவசக் கல்விநிலைய அதிபரும், கணித ஆசிரியருமான     திரு. கந்தையா நடராசா அவர்களையும் கௌரவிப்பதில் பெருமகிழ்வு கொள்கின்றோம்.

காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகக் கொண்ட முத்தமிழ்ப பேரவையின்;  தலைவி திருமதி இராசமலர் நடராசா அவர்களை கலைத்துறைக்கு ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டி முத்தமிழ் விழாவில் கலையரசி விருது வழங்கி  கௌரவமளிக்க இருந்த நிலையில் அவர்களது  மறைவுச் செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தோம்.

சான்றோருக்கான வாழ்த்துப்பாக்களை இயற்றிய ஒய்வுநிலை ஆசிரியர் கலாபூஷணம் யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்களுக்கும், மாணவர்களுக்கான சான்றிதழ்களையும், வாழ்த்துப்பா, விழாவிற்கான பிரசுரத்தையும்,  அச்சிட்டுத் தந்த யாழ்ப்பாணம் Andra printers நிறுவனத்தாருக்கும் இந்நிகழ்வின் ஒலி, ஒளிப்பதிவனை செய்து தரும் சிந்துஜா நிர்வனத்தாருக்கும், தேவாரம், தமிழ்மொழி வாழ்த்து, வரவேற்புநடனம், பேச்சு, திருக்குறள், இசை, நடனம், குழுஇசை,நாடகம் வழங்கிய மாணவ, மாணவிகளுக்கும் எமது சபை சார்பாக நன்றிகளும் பாராட்டுதல்களும்.

ஈழத்து சிதம்பர தில்லைக்கூத்தனின் திருவாருளால் இவ் முத்தமிழ் விழாவை ஒருகிணைத்து நடாத்த உதவிய காரை அபிவிருத்திச் சபை தலைவர் திரு.ப.விக்கினேஸ்வரன், நிர்வாக சபை உறுப்பினர்களுக்கும், முத்தமிழ் விழாவின் நிகழ்ச்சிகளை சிறப்புற தொகுத்து வழங்கிய  செல்வன் காரை T. செந்தூரன் அவர்களுக்கும், வரவேற்புரை வழங்கிய குழு இணைப்பாளர் கலாபூஷணம் பண்டிதர் மு.சு வேலாயுதபிள்ளை அவர்களுக்கும், தலைமையுரை வழங்கிய காரை அபிவிருத்திச் சபை தலைவர் திரு.ப.விக்கினேஸ்வரன் அவர்களுக்கும், நன்றியுரை வழங்கிய காரை அபிவிருத்திச் சபை செயலாளர் திரு. க. நாகராசா அவர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த பாராட்டதல்களும், நன்றிகளும் உரித்தாகுக.

“தியாகத்திறன்வேள்வி-2018” மாணவருக்கான நாடகப் போட்டிகளுக்கான பரிசுத்தொகையினை வழங்கிய கோவளத்தைச் சேர்ந்த முன்னாள் வர்த்தகர் அமரர் திரு.  சுப்பிரமணியம் அவர்களின்  ஞாபகார்த்தமாக வழங்கிய அவரது மகன் S.K.Tநாதன் கடை உரிமையாளர் தெய்வீகத்திருப்பணி¸ அறக்கொடை அரசு திரு. சுப்பிரமணியம் கதிர்காமநாதன் சுவிஸ்) அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

தமது கல்லூரி மண்டபத்தில் முத்தமிழ் விழாவினை நடாத்த இடமளித்த காரை இந்துக் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள் பாடசாலை நிர்வாகத்தினருக்கும், நாடகப் போட்டிகளை நடாத்த பிரதான மண்டபத்திணை தந்துதவிய யாழ்ற்றன் கல்லூரி நிர்வாகத்தினருக்கும், மற்றம் மாணவர்களுக்கான போட்டிகளை நடாத்துவதற்கு மண்டபத்திணை வழங்கிய காரை இந்துக் கல்லாரி நிர்வாகத்தினருக்கும், இவ் விழாவிற்கு ஆதரவு நல்கிய திருவாளர் சுப்பிரமணியம் கதிர்காமநாதனும் அவர்களுக்கும், மற்றும் விழாவில் கலந்து சிறப்பித்த அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள், மாணவர்கள் ஆகியோருக்கு எமது நன்றிகள் பல கோடி.

விழாவுக்கான, பரீட்சைக்கான விளம்பரங்களை தமது இணையத்தளங்களில் விளம்பரப்படுத்திய காரைநகர்.கோ, காரைநகர்.கொம், வெப் காரைஇந்துகனடா.கொம்  மற்றும் லங்காஸ்ரீ இணையதள நிர்வாகிகளுக்கும்; மற்றும் பல்வேறு வழிகளிலும் உதவி புரிந்த நல் உள்ளங்கள் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த பாராட்டதல்களும், நன்றிகளும் உரித்தாகுக.

 

 

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”

“நன்றே செய்வோம். அதை இன்றே செய்வோம்”

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
செயற்குழு உறுப்பினர்கள்,
மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
சுவிஸ் வாழ் காரை மக்கள்.
26. 10. 2018

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரும், காரைநகர் அபிவிருத்திச் சபையினரும் அனைவருக்கும் இனிய நத்தார் புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றனர்.

16.12.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையும் காரைநகர் அபிவிருத்திச்சபையும் இணைந்து நடாத்திய முத்தமிழ் விழா – 2018 காணொளி!

16.12.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையும் காரைநகர் அபிவிருத்திச்சபையும் இணைந்து நடாத்திய முத்தமிழ் விழா – 2018

அமரர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்களின் ஐம்பத்தொராவது அகவை 16.12.2018

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையும், காரைநகர் அபிவிருத்திச் சபையும் சேர்ந்து நடத்திய தியாகத்திறன் போட்டி –2018 பெறுபேறுகளும், பரிசுத் தொகைகளின் விபரங்களும்.

Prize Details

அமரர் திருமதி நடராசா இராசமலர் மறைவு குறித்து சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையும், காரைநகர் அபிவிருத்திச் சபையும் இணைந்து வழங்கிய இரங்கல் செய்தி!

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையும் காரைநகர் அபிவிருத்திச்சபையும் இணைந்து நடத்தும் முத்தமிழ் விழா – 2018

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரும், காரைநகர் அபிவிருத்திச் சபையினரும் சேர்ந்து நடாத்தும் தியாகத் திறன் வேள்வி- 2018 நாடகப் போட்டி

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரும்,

 காரைநகர் அபிவிருத்திச் சபையினரும்

சேர்ந்து நடாத்தும் தியாகத் திறன் வேள்வி- 2018

நாடகப் போட்டி

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் அதன் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவினரின் ஒழுங்கமைப்புடன் காரைநகர் அபிவிருத்திச் சபையின் தெரிவுக்குழுவினரும் சேர்ந்து வருடா வருடம் நடாத்தப்பட்டு வருகின்ற “தியாகத்திறன் வேள்வி – 2018” இன் நாடக விழாவும்  போடடியும் எதிர்வரும் 14.12.2018 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு யாழ்ற்ரன் கல்லூரி காரைநகர்   பிரதான மண்டபத்தில் நடைபெறும்.

கடந்த ஆண்டு ஆறாவதாக இணைக்கப்பட்ட அறக்கொடை அரசு சுவிஸ் கதிர்காமநாதன் அவர்களது தந்தையார் அமரர்  கதிரவேலு சுப்பிரமணியம் அவர்களின் ஞாபகார்த்த சுழற் கேடயத்திற்கான  நாடகத்திறன் வளர்க்கும் போட்டி இம்முறை இருபிரிவுகளாக பாடசாலைமட்டப்போட்டி, சமூகநிறுவனங்கள் ஊடான போட்டி என நடத்தப்படவுள்ளது.    மாணவர்களின்; போட்டிகளுக்கான சகல இணைப்பு சேவைகள் அனைத்தும் காரை அபிவிருத்திச் சபையினர் பணிபுரிவார்கள்.

பாடசாலை, சமூக நிறுவனங்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் நான்கு நாடகங்கள் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளன. மேலும் இப் போட்டியில் பங்குகொள்ள விரும்புபவர்கள் தங்கள் விபரங்களை காரைநகர் அபிவிருத்திச் சபையின் தெரிவுக்குழுவினருக்கு 12.12.2018 புதன்கிழமைக்கு முன்பதாக அறியத்தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

சென்ற ஆண்டு நாடகப் போட்டியில் கலந்து கொண்டு பரிசில்கள்  பெற்றவர்களின்  நிழற்படங்களை  கீழேகாணலாம்.

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

 

இங்ஙனம்

தெரிவுக்குழுவினர்

காரைநகர் அபிவிருத்திச்சபை

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

செயற்குழு உறுப்பினர்கள்

மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்.

07 – 12 – 2018

 

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையும் காரைநகர் அபிவிருத்திச் சபையும் இணைந்து நடத்தும் முத்தமிழ் விழா – 2018

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையும், காரைநகர் அபிவிருத்திச்சபையும் சேர்ந்து நடத்திய தியாகத்திறன் போட்டி – 2018 நான்கு பிரிவுகளுக்குமான தனிஇசை, குழுஇசை, போட்டிகளின் பெறுபேறுகள்.

 

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையும், காரைநகர் அபிவிருத்திச்சபையும் சேர்ந்து நடத்திய தியாகத்திறன் போட்டி – 2018 நான்கு பிரிவுகளுக்குமான தனிஇசை, குழுஇசை, போட்டிகளின் பெறுபேறுகள்.

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையின் ஏற்பாட்டில் மொழி, கல்வி, கலை ஆகியவற்றின் மேம்பாட்டிற்காக கடந்த நான்கு வருடங்களாக போட்டிகள் நடத்தப்பெற்று பரிசில் வழங்கப்பட்டு வந்துள்ளன. இவ்வருடம் (2018) இப்போட்டிகளை மேலும் விரிவடையச் செய்துள்ளோம். தரம் – 3 இல் இருந்து தரம் – 13 வரையுள்ள மாணவர்கள் பங்குகொள்ளும் வகையில் ஆரம்பப்பிரிவு, கீழ்ப்பிரிவு, மத்தியபிரிவு, மேற்பிரிவு என்னும் வகையில் வகைப்படுத்தி பேச்சு, கட்டுரை, திருக்குறள் மனனம், பொதுஅறிவு, தனிஇசை, குழுஇசை, நாடகம் ஆகிய துறைகளில் போட்டிகளை நடத்தியுள்ளோம்.

 

இவ் ஆண்டு போட்டிகள் என்று கருதாமல் மாணவர்களின் அறிவை விருத்தியடையச் செய்யும் வகையில் மாற்றியுள்ளோம். போட்டியாயின் ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து மாணவர்கள் மாத்திரம் வெற்றி கொள்வர். இதனை விடுத்து இந்த ஐந்து மாணவர்களுடன் 75 புள்ளிகளுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கும் பரிசு வழங்க ஏற்பாடு செய்ததால் திறமையான மாணவர்கள் அனைவரும் பரிசுபெறும் வழியை ஏற்படுத்தியுள்ளோம். இதனை பாடசாலைகள், கல்லூரிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் உணர்ந்து செயற்படுவார்களாயின் ஒவ்வொரு பிரிவிலும் இருபத்தைந்து (25) மாணவர்கள் வெற்றிபெறுவார்கள். இவ்வழியானது முதல் முறையாக ஆரம்பித்த காரணத்தால் பல மாணவர்கள் அறிந்திருக்கவில்லை. எனினும் சென்ற வருடங்களைவிட அதிகமான மாணவர்கள் போட்டிகளில் பங்குபற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகமான மாணவர்கள் வெற்றியும் பெற்றுள்ளார்கள்.

 

பொதுஅறிவுப் போட்டிக்கு 500 வினாவிடைகள் அடங்கிய (48பக்கங்கள்) நூலை வெளியீடு செய்து ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் (பிள்ளைகள் தொகைக்கு ஏற்ப) எட்டு, பத்து நூல்களும் கல்லூரிகளுக்கு 25, 30 புத்தகங்களும் இலவசமாக வழங்கி மாணவர்களின் பொதுஅறிவை வளர்க்க முயற்சித்துள்ளோம்.

 

தியாகத்திறன் வேள்வி – 2018 மாணவர்களுக்கான திருக்குறள், மனனம், பேச்சு, கட்டுரை, பொதுஅறிவுப் போட்டிகளில் பரிசில்கள் பெறும் மாணவர்களின்; முடிவுகள் வெளிவந்த நிலையில் இன்று தனிஇசை, குழுஇசை, போட்டிகளில்  வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர் விபரங்கள் வெளிவருகின்றன.   இசைப் போட்டியில் 75க்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சிறப்புப் பரிசில் வழங்கப்படும்.

2018 இல் இடம்பெறும் திண்ணபுரத்து ஆதிரை விழாவின் போது எமது சபை  காரைநகர் அபிவிருத்திச் சபையுடன் இணைந்து குறித்தவொரு தினத்திலும் இடத்திலும் ஒழுங்கு செய்யப்படும் முத்தமிழ் விழா  – 2018 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக  பரிசளிப்பு வைபவம்; இடம்பெறும் என்பதனை அறியத்தருகிறோம்.

தனிஇசை, குழுஇசைப் போட்டியில்; வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர் விபரங்கள் பிரிவுவாரியாக கீழே தரப்பட்டுள்ளன.

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”.

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

இங்ஙனம்

              சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

செயற்குழு உறுப்பினர்கள்

மொழிஇ கல்விஇ கலை மேம்பாட்டுக் குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்.

18.11.2018

 

 

 

 

 

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையும், காரைநகர் அபிவிருத்திச்சபையும் சேர்ந்து நடத்திய தியாகத்திறன் போட்டி – 2018 நான்கு பிரிவுகளுக்குமான பொதுஅறிவுப் போட்டியின் பெறுபேறுகள்

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையும், காரைநகர் அபிவிருத்திச்சபையும் சேர்ந்து நடத்திய தியாகத்திறன் போட்டி – 2018 நான்கு பிரிவுகளுக்குமான பொதுஅறிவுப் போட்டியின் பெறுபேறுகள்.

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையின் ஏற்பாட்டில் மொழி, கல்வி, கலை ஆகியவற்றின் மேம்பாட்டிற்காக கடந்த நான்கு வருடங்களாக போட்டிகள் நடத்தப்பெற்று பரிசில் வழங்கப்பட்டு வந்துள்ளன. இவ்வருடம் (2018) இப்போட்டிகளை மேலும் விரிவடையச் செய்துள்ளோம். தரம் – 3 இல் இருந்து தரம் – 13 வரையுள்ள மாணவர்கள் பங்குகொள்ளும் வகையில் ஆரம்பப்பிரிவு, கீழ்ப்பிரிவு, மத்தியபிரிவு, மேற்பிரிவு என்னும் வகையில் வகைப்படுத்தி பேச்சு, கட்டுரை, திருக்குறள் மனனம், பொதுஅறிவு, தனிஇசை, குழுஇசை, நாடகம் ஆகிய துறைகளில் போட்டிகளை நடத்தியுள்ளோம்.

 

இவ் ஆண்டு போட்டிகள் என்று கருதாமல் மாணவர்களின் அறிவை விருத்தியடையச் செய்யும் வகையில் மாற்றியுள்ளோம். போட்டியாயின் ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து மாணவர்கள் மாத்திரம் வெற்றி கொள்வர். இதனை விடுத்து இந்த ஐந்து மாணவர்களுடன் 75 புள்ளிகளுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கும் பரிசு வழங்க ஏற்பாடு செய்ததால் திறமையான மாணவர்கள் அனைவரும் பரிசுபெறும் வழியை ஏற்படுத்தியுள்ளோம். இதனை பாடசாலைகள், கல்லூரிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் உணர்ந்து செயற்படுவார்களாயின் ஒவ்வொரு பிரிவிலும் இருபத்தைந்து (25) மாணவர்கள் வெற்றிபெறுவார்கள். இவ்வழியானது முதல் முறையாக ஆரம்பித்த காரணத்தால் பல மாணவர்கள் அறிந்திருக்கவில்லை. எனினும் சென்ற வருடங்களைவிட அதிகமான மாணவர்கள் போட்டிகளில் பங்குபற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகமான மாணவர்கள் வெற்றியும் பெற்றுள்ளார்கள்.

 

பொதுஅறிவுப் போட்டிக்கு 500 வினாவிடைகள் அடங்கிய (48பக்கங்கள்) நூலை வெளியீடு செய்து ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் (பிள்ளைகள் தொகைக்கு ஏற்ப) எட்டு, பத்து நூல்களும் கல்லூரிகளுக்கு 25, 30 புத்தகங்களும் இலவசமாக வழங்கி மாணவர்களின் பொதுஅறிவை வளர்க்க முயற்சித்துள்ளோம்.

 

தியாகத்திறன் வேள்வி – 2018 மாணவர்களுக்கான திருக்குறள், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் பரிசில்கள் பெறும் மாணவர்களின்; முடிவுகள் வெளிவந்த நிலையில் இன்று   பொதுஅறிவுப்  போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர் விபரங்கள் வெளிவருகின்றன.   பேச்சுப் போட்டியில் 75க்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சிறப்புப் பரிசில் வழங்கப்படும்.

2018 இல் இடம்பெறும் திண்ணபுரத்து ஆதிரை விழாவின் போது எமது சபை  காரைநகர் அபிவிருத்திச் சபையுடன் இணைந்து குறித்தவொரு தினத்திலும் இடத்திலும் ஒழுங்கு செய்யப்படும் முத்தமிழ் விழா- 2018 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக  பரிசளிப்பு வைபவம்; இடம்பெறும் என்பதனை அறியத்தருகிறோம்.

பொதுஅறிவுப் போட்டியில்; வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர் விபரங்கள் பிரிவுவாரியாக கீழே தரப்பட்டுள்ளன.

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”.

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

 

இங்ஙனம்

              சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

செயற்குழு உறுப்பினர்கள்

மொழிஇ கல்விஇ கலை மேம்பாட்டுக் குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்.

29.10.2018

 

 

 

 

 

 

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையும், காரைநகர் அபிவிருத்திச்சபையும் சேர்ந்து நடத்திய தியாகத்திறன் போட்டி – 2018 நான்கு பிரிவுகளுக்குமான பேச்சுப் போட்டியின் போட்டியின் பெறுபேறுகள்

 

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையும், காரைநகர் அபிவிருத்திச்சபையும் சேர்ந்து நடத்திய தியாகத்திறன் போட்டி – 2018 நான்கு பிரிவுகளுக்குமான பேச்சுப் போட்டியின் போட்டியின் பெறுபேறுகள்

 சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் நாடாத்திய தியாகத்திறன் வேள்வி மாணாக்கர்களுக்கான பேச்சுப்  போட்டிகளுக்கான முடிவுகள் நடுவர்களால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இம்முறை ஐந்து திறன்கள் சார்ந்த போட்டிகள் இடம்பெற்றன. நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்குபற்றியிருந்நதனர்.

எமது கிராமத்தின் மாணவர்களின் ஆளுமை விருத்தி சார்ந்த செயற்பாடுகளில் மையங்கொண்ட எமது கரிசனையும் நிகழ்ச்சி நிரலும் செயற்பாடுகளும் சரியான வழியில் செல்வதாகத் திசைகாட்டும் வண்ணம் மாணவர்களது ஆதரவும் ஈடுபாடும் பெருகிவருகிறது.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரும் அதன் மொழி கல்வி கலை மேம்பாட்டுக் குழுவினரும் இப்போட்டிகளை வெற்றிகரமாக நடாத்தப் பங்காற்றிய போட்டிச் செயலணிக்கும் சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் காரை அபிவிருத்திச் சபைத் தலைவருக்கும் சிரந்தாழ்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

தியாகத்திறன் வேள்வி – 2018 மாணவர்களுக்கான திருக்குறள், கட்டுரைப் போட்டிகளில் பரிசில்கள் பெறும் மாணவர்களின்; முடிவுகள் வெளிவந்த நிலையில் இன்று பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர் விபரங்கள் வெளிவருகின்றன.   பேச்சுப் போட்டியில் 75க்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சிறப்புப் பரிசில் வழங்கப்படும்.

2018 இல் இடம்பெறும் திண்ணபுரத்து ஆதிரை விழாவின் போது எமது சபை  காரைநகர் அபிவிருத்திச் சபையுடன் இணைந்து குறித்தவொரு தினத்திலும் இடத்திலும் ஒழுங்கு செய்யப்படும் முத்தமிழ் விழா- 2018 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக  பரிசளிப்பு வைபவம்; இடம்பெறும் என்பதனை அறியத்தருகிறோம்.

பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர் விபரங்கள் பிரிவுவாரியாக கீழே தரப்பட்டுள்ளன.

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”.

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

 

இங்ஙனம்

              சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

செயற்குழு உறுப்பினர்கள்

மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்.

22.10.2018

 

 

 

 

 

 

 

 

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையும், காரைநகர் அபிவிருத்திச்சபையும் சேர்ந்து நடத்திய தியாகத்திறன் போட்டி – 2018 நான்கு பிரிவுகளுக்குமான கட்டுரைப் போட்டியின் பெறுபேறுகள்

                                                 

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையும், காரைநகர் அபிவிருத்திச்சபையும் சேர்ந்து நடத்திய தியாகத்திறன் போட்டி – 2018 நான்கு பிரிவுகளுக்குமான கட்டுரைப் போட்டியின் பெறுபேறுகள்

எமது சபை ஊரின் தொழில்சார் நிபுணத்துவம், கலை,கல்வி, மருத்துவம், விளையாட்டுத்துறை போன்ற விடயங்களை மேம்படுத்தும் முகமாக கலை, கல்வி, மற்றும் மொழி மேம்பாட்டுக் குழு ஒன்றினை உருவாக்கி எமது தாய் சங்கமான காரை அபிவிருத்திச் சபையுடன் இணைந்து ஊக்கமளித்து வருகின்றது.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின்  கன்னி முயற்சியாக கட்டுரைப் போட்டி – 2014 இலத்திரனியல் மூலமாக நடாத்தப்பட்டது. இதில் காரைநகர் கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய மாணாக்கர் எண்மரும், கொழும்பு இந்துக்கல்லூரி மாணவரொருவரும் பங்குபற்றியிருந்தனர். அவர்கள் மணிவாசகர் விழாவில் விருதுகளும், பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப் பட்டமை யாவரும் அறிந்ததே!

2015;ஆம் ஆண்டில் இருந்து போட்டியாளர்களின் பங்குபற்றலை அதிகரிக்கவும், பரிசில்களை அதிகரித்து  அதிகளவு மாணாக்கரை ஊக்குவிக்கவும் எமது சபை தீர்மானித்தது. அதற்கமைய கட்டுரைப் போட்டி  இயற்திறன் முறையில்  மூன்று பிரிவுகளில் நாடாத்தப்பட்டன.

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையின் ஏற்பாட்டில் மொழி, கல்வி, கலை ஆகியவற்றின் மேம்பாட்டிற்காக கடந்த நான்கு வருடங்களாக போட்டிகள் நடத்தப்பெற்று பரிசில் வழங்கப்பட்டு வந்துள்ளன. இவ்வருடம் (2018) இப்போட்டிகளை மேலும் விரிவடையச் செய்துள்ளோம். தரம்-3 இல் இருந்து தரம்-13 வரையுள்ள மாணவர்கள் பங்குகொள்ளும் வகையில் ஆரம்பப்பிரிவு, கீழ்ப்பிரிவு, மத்தியபிரிவு, மேற்பிரிவு என்னும் வகையில் வகைப்படுத்தி பேச்சு, கட்டுரை, திருக்குறள் மனனம், பொதுஅறிவு, தனிஇசை, குழுஇசை,  ஆகிய துறைகளில் போட்டிகளை நடத்தியுள்ளோம்.

இவ் ஆண்டு போட்டிகள் என்று கருதாமல் மாணவர்களின் அறிவை விருத்தியடையச் செய்யும் வகையில் மாற்றியுள்ளோம். போட்டியாயின் ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து மாணவர்கள் மாத்திரம் வெற்றி கொள்வர். இதனை விடுத்து இந்த ஐந்து மாணவர்களுடன் 75 புள்ளிகளுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கும் பரிசு வழங்க ஏற்பாடு செய்ததால் திறமையான மாணவர்கள் அனைவரும் பரிசுபெறும் வழியை ஏற்படுத்தியுள்ளோம். இதனை பாடசாலைகள், கல்லூரிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் உணர்ந்து செயற்படுவார்களாயின் ஒவ்வொரு பிரிவிலும் இருபத்தைந்து(25) மாணவர்கள் வெற்றிபெறுவார்கள். இவ்வழியானது முதல்முறையாக ஆரம்பித்த காரணத்தால் பல மாணவர்கள் அறிந்திருக்கவில்லை. எனினும் சென்ற வருடங்களைவிட அதிகமான மாணவர்கள் போட்டிகளில் பங்குபற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகமான மாணவர்கள் வெற்றியும் பெற்றுள்ளார்கள்.

நான்கு பிரிவுகளிலும் 75க்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சிறப்புப் பரிசில் வழங்கப்படும்.

2018 இல் இடம்பெறும் திண்ணபுரத்து ஆதிரை விழாவின் போது எமது சபை  காரைநகர் அபிவிருத்திச்சபையுடன் இணைந்து குறித்தவொரு தினத்திலும் இடத்திலும் ஒழுங்கு செய்யப்படும் முத்தமிழ் விழா- 2018 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக  பரிசளிப்பு வைபவம்; இடம்பெறும் என்பதனை அறியத்தருகிறோம்.

இப்போட்டிகளில் வெற்றி பெற்றோர் விபரம் பிரிவுவாரியாக  கீழே இணைக்கப்பட்டுள்ளது.

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”.

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

 

இங்ஙனம்

              சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

செயற்குழு உறுப்பினர்கள்

மொழிஇ கல்விஇ கலை மேம்பாட்டுக் குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்.

17.10.2018

 

 

 

 

 

 

 

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை, காரைநகர் அபிவிருத்திச்சபையுடன் இணைந்து நடத்தும் தியாகத்திறன் வேள்வி – 2018 நான்கு பரிவுகளுக்கமான திருக்குறள் போட்டியின் பெறுபேறுகள்

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை,

காரைநகர் அபிவிருத்திச்சபையுடன்

இணைந்து நடத்தும் தியாகத்திறன் வேள்வி – 2018

நான்கு பரிவுகளுக்கமான திருக்குறள் போட்டியின் பெறுபேறுகள்

 

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையின் ஏற்பாட்டில் மொழி, கல்வி, கலை ஆகியவற்றின் மேம்பாட்டிற்காக கடந்த நான்கு வருடங்களாக போட்டிகள் நடத்தப்பெற்று பரிசில் வழங்கப்பட்டு வந்துள்ளன. இவ்வருடம் (2018) இப்போட்டிகளை மேலும் விரிவடையச் செய்துள்ளோம். தரம்-3 இல் இருந்து தரம்-13 வரையுள்ள மாணவர்கள் பங்குகொள்ளும் வகையில் ஆரம்பப்பிரிவு, கீழ்ப்பிரிவு, மத்தியபிரிவு, மேற்பிரிவு என்னும் வகையில் வகைப்படுத்தி பேச்சு. கட்டுரை, திருக்குறள் மனனம், பொதுஅறிவு, தனிஇசை, குழுஇசை, ஆகிய துறைகளில் போட்டிகளை நடத்தியுள்ளோம்.

இவ் ஆண்டு போட்டிகள் என்று கருதாமல் மாணவர்களின் அறிவை விருத்தியடையச் செய்யும் வகையில் மாற்றியுள்ளோம். போட்டியாயின் ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து மாணவர்கள் மாத்திரம் வெற்றி கொள்வர். இதனை விடுத்து இந்த ஐந்து மாணவர்களுடன் 75 புள்ளிகளுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கும் பரிசு வழங்க ஏற்பாடு செய்ததால் திறமையான மாணவர்கள் அனைவரும் பரிசுபெறும் வழியை ஏற்படுத்தியுள்ளோம். இதனை பாடசாலைகள், கல்லூரிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் உணர்ந்து செயற்படுவார்களாயின் ஒவ்வொரு பிரிவிலும் இருபத்தைந்து(25) மாணவர்கள் வெற்றிபெறுவார்கள். இவ்வழியானது முதல்முறையாக ஆரம்பித்த காரணத்தால் பல மாணவர்கள் அறிந்திருக்கவில்லை. எனினும் சென்ற வருடங்களைவிட அதிகமான மாணவர்கள் போட்டிகளில் பங்குபற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகமான மாணவர்கள் வெற்றியும் பெற்றுள்ளார்கள்.

திருக்குறள் மனனம், பொதுஅறிவு வினாடிவினா, ஆகிய இரண்டு போட்டிகளும் முதலில் எழுத்துப்போட்டி மூலம் தேர்ந்தெடுத்த பின்னரே நேரடி வாய்மூலப் போட்டிக்கு பங்குபற்றியுள்ளனர்.

மூன்று பிரிவுகளிலும் 75க்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சிறப்புப் பரிசில் வழங்கப்படும்.

 

2018 இல் இடம்பெறும் திண்ணபுரத்து ஆதிரை விழாவின் போது எமது சபை  காரைநகர் அபிவிருத்திச்சபையுடன் இணைந்து குறித்தவொரு தினத்திலும் இடத்திலும் ஒழுங்கு செய்யப்படும் முத்தமிழ் விழா- 2018 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக  பரிசளிப்பு வைபவம்; இடம்பெறும் என்பதனை அறியத்தருகிறோம்.

இப்போட்டிகளில் வெற்றி பெற்றோர் விபரம் பிரிவுவாரியாகவும், நிழற்படங்களும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”.

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

 

இங்ஙனம்

              சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

செயற்குழு உறுப்பினர்கள்

மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்.

10.10.2018