சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையும், காரைநகர் அபிவிருத்திச்சபையும் சேர்ந்து நடத்திய தியாகத்திறன் போட்டி – 2018 நான்கு பிரிவுகளுக்குமான பேச்சுப் போட்டியின் போட்டியின் பெறுபேறுகள்

 

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையும், காரைநகர் அபிவிருத்திச்சபையும் சேர்ந்து நடத்திய தியாகத்திறன் போட்டி – 2018 நான்கு பிரிவுகளுக்குமான பேச்சுப் போட்டியின் போட்டியின் பெறுபேறுகள்

 சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் நாடாத்திய தியாகத்திறன் வேள்வி மாணாக்கர்களுக்கான பேச்சுப்  போட்டிகளுக்கான முடிவுகள் நடுவர்களால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இம்முறை ஐந்து திறன்கள் சார்ந்த போட்டிகள் இடம்பெற்றன. நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்குபற்றியிருந்நதனர்.

எமது கிராமத்தின் மாணவர்களின் ஆளுமை விருத்தி சார்ந்த செயற்பாடுகளில் மையங்கொண்ட எமது கரிசனையும் நிகழ்ச்சி நிரலும் செயற்பாடுகளும் சரியான வழியில் செல்வதாகத் திசைகாட்டும் வண்ணம் மாணவர்களது ஆதரவும் ஈடுபாடும் பெருகிவருகிறது.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரும் அதன் மொழி கல்வி கலை மேம்பாட்டுக் குழுவினரும் இப்போட்டிகளை வெற்றிகரமாக நடாத்தப் பங்காற்றிய போட்டிச் செயலணிக்கும் சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் காரை அபிவிருத்திச் சபைத் தலைவருக்கும் சிரந்தாழ்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

தியாகத்திறன் வேள்வி – 2018 மாணவர்களுக்கான திருக்குறள், கட்டுரைப் போட்டிகளில் பரிசில்கள் பெறும் மாணவர்களின்; முடிவுகள் வெளிவந்த நிலையில் இன்று பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர் விபரங்கள் வெளிவருகின்றன.   பேச்சுப் போட்டியில் 75க்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சிறப்புப் பரிசில் வழங்கப்படும்.

2018 இல் இடம்பெறும் திண்ணபுரத்து ஆதிரை விழாவின் போது எமது சபை  காரைநகர் அபிவிருத்திச் சபையுடன் இணைந்து குறித்தவொரு தினத்திலும் இடத்திலும் ஒழுங்கு செய்யப்படும் முத்தமிழ் விழா- 2018 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக  பரிசளிப்பு வைபவம்; இடம்பெறும் என்பதனை அறியத்தருகிறோம்.

பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர் விபரங்கள் பிரிவுவாரியாக கீழே தரப்பட்டுள்ளன.

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”.

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

 

இங்ஙனம்

              சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

செயற்குழு உறுப்பினர்கள்

மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்.

22.10.2018