சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையும் , காரை அபிவிருத்திச் சபையும் இணைந்து மதிப்பளிப்பு.

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையும் , காரை அபிவிருத்திச் சபையும் இணைந்து மதிப்பளிப்பு.

ஊரின் கல்விமான்களையும் கலைஞர்களையும் அறிஞர்களையும் சேவையாளர்களையும் வாழும் போது வாழ்த்தி மகிழ்விப்போம்! மகிழ்வோம்! என்பதும் அதன் மூலம் நம் இளைய சமுதாயத்தின் முன்னேற்றத்தின் நற்திசையை கலங்கரை விளக்கமாய் நின்று காட்டுவோம் என்பதும் எமதுசபையின் நோக்குகளில் ஒன்றாகும். அந்த வகையில் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் தேவஸ்தான ஸ்தாபகருமான சிவஸ்ரீ சரஹணபவானந்த  சிவாச்சாரியார்  கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக சுவிற்சர்லாந்தில்  ஆன்மீக பணியாற்றிவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊருக்கு உழைத்த பெரியோரை “வாழும்போது வாழ்த்துவோம்” என்பது எமது சபையின் நோக்கங்களில் ஒன்று. சுவிற்சர்லாந்தில் சுறுசுறுப்பாகப் சைவத் தொண்டு ஆற்றிவருபவருமாகிய  முன்னாள் அடீஸ்வீல் முருகன் கோவில் ஸ்தாபகரும், அகில உலக கம்பன்கழக தலைவரும். சுவிஸ்சர்லாந்து ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் தேவஸ்தான ஸ்தாபகருமான சிவஸ்ரீ சரஹணபவானந்த சிவாச்சாரியார் ஸ்ரீமதி ஜெகதாம்பாள் தம்பதிகளின் அறுபது அகவையை பூர்த்தி செய்வதாய் நிச்சயக்கப்பட்ட  மணிவிழாவில் விருதளிப்பதில் காரை அபிவிருத்திச் சபையும், சுவிஸ்-காரை அபிவிருத்திச் சபையும்  அதன் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழவினரும் பெருமிதமடைகிறோம்.

ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் தேவஸ்தான   திறந்த வெளியரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்ற மணிவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ் நாட்டைச் சேர்ந்த பிரமுகர்களும், சுவிற்சர்லாந்து ஆலய பிரதமகுருமார்களும் பல பொதுப்பணித் தொண்டு நிறுவன உறுப்பினர்களும், ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன்  ஆலய பக்தர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் ஆரம்ப காலத் தலைவர் திருவாளர் நல்லதம்பி சரவணப்பெருமாள்  அவர்களால் வாழ்த்துரை இசைக்கப்பட்டு  எமது சபையின் செயலாளர் திரு முருகேசு பாலசுந்தரம், திருமதி பாலசுந்தரம் லோகேஸ்வரி ஆகியோரால் பொன்னாடை போர்த்தி, மலர் மாலை அணிவித்து வாழ்த்துப்பாவினை வழங்கி கௌரவித்திருந்தார்கள். விழாவினை சிறப்பித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகளும், வாழ்த்துக்களும்.

 

வாழ்த்துப்பாவும்  நிழற்படங்களும் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

 

இங்ஙனம்

                சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

               செயற்குழு உறுப்பினர்கள்

  மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்

03.07.2019