சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை  காரை அபிவிருத்திச் சபையுடன் இணைந்து  நடாத்திய தியாகத்திறன் வேள்வி, முத்தமிழ் விழா – 2018 சிறப்புற ஒத்துழைப்பு நல்கியோருக்கு நன்றிகள்.

 

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை  காரை அபிவிருத்திச் சபையுடன் இணைந்து  நடாத்திய தியாகத்திறன் வேள்வி, முத்தமிழ் விழா – 2018

சிறப்புற ஒத்துழைப்பு நல்கியோருக்கு நன்றிகள்.

 

           எந்நன்றி கொன்றரர்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

               செய்ந்நன்றி கொன்ற மகற்குகுறள்  

 

ஒரு தசாப்தத்திற்கும் முன்னராக 04.12.2004 அன்று காரைநகருக்கும் சுவிற்சர்லாந்தில் வாழும் காரைநகர் மக்களுக்கும்  இடையே ஒர் உறவுப்பாலத்தை உருவாக்குவதற்காக  எமது சபையினர் காரைநகரில் தாய் சபையாகிய காரை அபிவிருத்திச் சபையை முன்னின்று நிறுவினோம். இந்நாள் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் வரலாற்றிலே  பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாகும். தியாகத்திறன் வேள்வி -2018 மாணவர்களுக்கான போட்டிகள் மற்றும் பரிசளிப்பு ஆகிய அனைத்தும்  சிறப்புற நடைபெற பல வழிகளிலும் உழைத்த  அன்பர்கள் அனைவருக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

“தியாகத் திறன் வேள்வி-2018” க்கான ஆலோசனைக் கூட்டம் கடந்த            02-07-2018 திங்கட்கிழமை அன்று காரை அபிவிருத்திச் சபைத் தலைவர்    திரு. ப. விக்கினேஸ்வரன் தலைமையில் காரைநகர் மாணவர் நூலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில்; காரைநகர் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் என கலந்து சிறப்பித்து மாணக்கர் போட்டிகளுக்கென  தெரிவுக் குழுவை 17பேர்கள் அடங்கிய தெரிவுக் குழுவை உருவாக்கி இருந்தார்கள் அக் குழுவில் தலைவராக திரு. ப. விக்கினேஸ்வரன் அவர்களும், பரீட்சை இணைப்பாளராக திரு.மு.சு வேலாயுதபிள்ளை அவர்களும் தெரிவுசெய்யப்பட்டு இருந்தார்கள்.

இந்த ஆண்டிலிருந்து மாணவர் திறன் வளர்க்கும் போட்டிகளை விரிவாக்கம் செய்து காரைநகரின் கல்விப் புரட;சியின் தந்தை கலாநிதி. ஆ. தியாகராசா அவர்களின் நினைவாக வருடந்தோறும் “தியாகத் திறன் வேள்வி” என்ற நிகழ்வாக “ஆளுயர்வே ஊருயர்வு” என்ற மகுட வாசகத்துடன் இடம்பெறும் என எமது சபையின் மொழி, கலை, கல்வி மேம்பாட்டுக்குழுவினரும், தெரிவுக்குழுவினரும் முடிவு செய்திருந்தார்கள். அதற்கு அமைய போட்டிகள் அனைத்தும் வெகு சிறப்பாக நடாத்தப்பட்டன என்பது யாவரும் அறிந்ததே!

தியாகத்திறன் வேள்வி – 2018|| மாணவர் போட்டிகள் சிறப்பு அமைய உதவியோருக்கு நன்றிகள்.

தியாகத்திறன் வேள்வி -2018 போட்டியின் தலைமை மேற்பார்வையாளார்களாக காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவர், வடமாகாண ஒய்வு நிலை கல்விப் பணிப்பாளர் திரு.ப.விக்கினேஸ்வரன் அவர்களுக்கும், பரீட்சை இணைப்பாளராகவும், திருக்குறள், பொது அறிவுப் போட்டியின் முதன்மை நடுவராகவும் பணிபுரிந்த கலாபூஷணம் பண்டிதர் மு.சு வேலாயுதபிள்ளை அவர்களுக்கும், கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டிகளின் முதன்மை நடுவராக பணிபுரிந்த ஒய்வுநிலை ஆசிரியர் கலாபூஷணம் யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்களுக்கும் பொது அறிவுப் போட்டியின் மாணவருக்கான கேளவிக் கொத்தினை தந்துதவிய வவுனியா சித்தி விநாயகர் வித்தியாலய பிரதி அதிபர் திரு.அருணாசலம் வரதராஜன் அவர்களுக்கும். இசைப் போட்டியின் முதன்மை நடுவராக பணிபுரிந்த யாழ் பல்கலைக்கழ சிரேஷ்ட விரிவுரையாளர் செல்வி. பரமேஸ்வரி கணேசன் அவர்களுக்கும், மாணவர்களின் பரீட்சைகளுக்கு மேற்பார்வையாளராக பணிபுரிந்த யாழ்பல்கலைக்கழ சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி வீரமங்கை யோகரட்ணம் அவர்களுக்கும், மானிப்பாய் இந்து மகளிர் கல்லூரி ஆசிரியர் விஜயரத்தினம் பிரேமதாஸ் குமாரஸ்ரீ அவர்களுக்கும், காரைநகர் பிரதேச சபை பிரதி தவிசாளர் திரு. கணேசபிள்ளை பாலச்சந்திரன் அவர்களுக்கும், யாழ்ப்பாண பாடசாலைகளில் இருந்து வருகைதந்து பணிபுரிந்த ஆசிரியர்களுக்கும், இன்னும் பல வழிகளில் பணிபுரிந்த காரைநகர் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்களுக்கும், காரைநகர் அபிவிருத்திச்சபை நிர்வாக சபை உறுப்பினர்களுக்கும், போட்டிகளுக்கு மாணவர்களை  தயார்படுத்திய ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் ஆகியோருக்கும், பரீட்சை சிறப்பாக நடைபெற இலைமறை காயாக பணிபுரிந்த அனைத்து உள்ளங்களுக்கும் எமது சபையினர் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறார்கள்.

முத்தமிழ் விழாச் சிறப்புற நடந்தேற உதவியோருக்கான நன்றிகள்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையால் 31.12.2005இல் உருவாக்கப்பட்ட எமது தாய் சங்கமான காரை அபிவிருத்திச் சபையுடன் இணைந்து  ஐந்தாவது வருடமாக  முத்தமிழ் விழாவினைக் காண்பதில் பெருமிதம் கொள்கின்றோம்.

தியாகத்திறன் வேள்விப் போட்டிகளுக்கு வித்திட்ட எமது சபையின் முன்னாள் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு இணைப்பாளர் அமரர் கலாநிதி. கென்னடி விஜயரத்தினம் அவர்களின் பிறந்த தினத்தில 16.12.2018 ஞாயிற்றுக்கிழமை எமது தாய் சங்கமான காரைநகர் அபிவிருத்திச் சபையுடன் இணைந்து காரைநகரின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட அமரர் கலாநிதி ஆ.தியாகராஜா அவர்களின் நினைவாக தியாகத்திறன்வேள்வி – 2018 மாணக்கர் போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பையும், சான்றோர்கள் மதிப்பளிப்பையும்,  இணைத்து இயல், இசை, நாடகம் கலந்த முத்தமிழ் விழாவாக காரைநகர் இந்துக்கல்லூரி நடராஜா மண்டபத்தில்; வெகு சிறப்பாக நடாத்தப்பட்டது   என்பது குறிப்பிடத்தக்கது.

 

எமது அழைப்பினை ஏற்று விழாவிற்குத்  தலைமை தாங்குகிய காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவர், வடமாகாண ஒய்வு நிலை கல்விப் பணிப்பாளர் திரு.ப.விக்கினேஸ்வரன் அவர்களுக்கும், எமது சபையின் அழைப்பையேற்று பிரதமவிருந்தினராக வருகை தந்திருக்கும் ஆணையாளர் சிறுவர் நன்நடத்தை திணைக்களம் வடமாகணம் திரு.திருச்சிற்றம்பலம் விஸ்வரூபன் அவர்களுக்கும், மற்றும் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருக்கும் திருவாளர் அறக்கொடை அரசு சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களுக்கும், மற்றும் கௌரவ விருந்தினர்களாக வருகை தந்திருக்கும் காரைநகர் இந்துக் கல்லூரி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களுக்கும், யாழ்ற்றன் கல்லூரி அதிபர் திரு.தி.மதிவதனன் அவர்களுக்கும், சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாலய அதிபர் திரு. வி.சு. சாந்தகுமார் அவர்களுக்கும், வியாவில் சைவ வித்தியாலய அதிபர் திருமதி. ச. அருள்மொழி அவர்களுக்கும், சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் அழைப்பையேற்று சிறப்பு விருந்தினர்களாக வருகைதந்த எமது சகோதர புலம்பெயர் காரையூச்சங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் எமது நன்றிகளும் வாழ்த்துக்களும்.

அமரர் கலாநிதி ஆ.தியாகராஜா அவர்களின் பணிகள் பற்றிய நினைவுப்பேருரை ஆற்றிய ஒய்வுநிலை ஆசிரியர் கலாபூஷணம் யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்களுக்கும், அமரர் கலாநிதி. ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் “சகலதுறை வல்லவன்” என்ற தலைப்பில் நினைவுப்பேருரை ஆற்றிய செயற்திட்டப் பணிப்பாளர் கல்வி அமைச்சு கொழும்பு திரு. கந்தையா பத்மானந்தன் அவர்களுக்கும் எமது சபை சார்பாக நன்றிகளும் பாராட்டுதல்களும்.

முத்தமிழ் விழா – 2018 இல் ஓய்வுநிலை அரச வைத்திய அதிகாரியும் சமூக சேவையாளருமான திரு. சுப்பிரமணியம் சுவாமிநாதன் அவர்களையும், காரைநகர் வெடியரசன் வீதியைப் பிறப்பிடமாக் கொண்டவரும், தேசிய வீடமைப்புத் திணைக்கள ஒய்வுநிலை லிகிதரும், இலவசக் கல்விநிலைய அதிபரும், கணித ஆசிரியருமான     திரு. கந்தையா நடராசா அவர்களையும் கௌரவிப்பதில் பெருமகிழ்வு கொள்கின்றோம்.

காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகக் கொண்ட முத்தமிழ்ப பேரவையின்;  தலைவி திருமதி இராசமலர் நடராசா அவர்களை கலைத்துறைக்கு ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டி முத்தமிழ் விழாவில் கலையரசி விருது வழங்கி  கௌரவமளிக்க இருந்த நிலையில் அவர்களது  மறைவுச் செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தோம்.

சான்றோருக்கான வாழ்த்துப்பாக்களை இயற்றிய ஒய்வுநிலை ஆசிரியர் கலாபூஷணம் யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்களுக்கும், மாணவர்களுக்கான சான்றிதழ்களையும், வாழ்த்துப்பா, விழாவிற்கான பிரசுரத்தையும்,  அச்சிட்டுத் தந்த யாழ்ப்பாணம் Andra printers நிறுவனத்தாருக்கும் இந்நிகழ்வின் ஒலி, ஒளிப்பதிவனை செய்து தரும் சிந்துஜா நிர்வனத்தாருக்கும், தேவாரம், தமிழ்மொழி வாழ்த்து, வரவேற்புநடனம், பேச்சு, திருக்குறள், இசை, நடனம், குழுஇசை,நாடகம் வழங்கிய மாணவ, மாணவிகளுக்கும் எமது சபை சார்பாக நன்றிகளும் பாராட்டுதல்களும்.

ஈழத்து சிதம்பர தில்லைக்கூத்தனின் திருவாருளால் இவ் முத்தமிழ் விழாவை ஒருகிணைத்து நடாத்த உதவிய காரை அபிவிருத்திச் சபை தலைவர் திரு.ப.விக்கினேஸ்வரன், நிர்வாக சபை உறுப்பினர்களுக்கும், முத்தமிழ் விழாவின் நிகழ்ச்சிகளை சிறப்புற தொகுத்து வழங்கிய  செல்வன் காரை T. செந்தூரன் அவர்களுக்கும், வரவேற்புரை வழங்கிய குழு இணைப்பாளர் கலாபூஷணம் பண்டிதர் மு.சு வேலாயுதபிள்ளை அவர்களுக்கும், தலைமையுரை வழங்கிய காரை அபிவிருத்திச் சபை தலைவர் திரு.ப.விக்கினேஸ்வரன் அவர்களுக்கும், நன்றியுரை வழங்கிய காரை அபிவிருத்திச் சபை செயலாளர் திரு. க. நாகராசா அவர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த பாராட்டதல்களும், நன்றிகளும் உரித்தாகுக.

“தியாகத்திறன்வேள்வி-2018” மாணவருக்கான நாடகப் போட்டிகளுக்கான பரிசுத்தொகையினை வழங்கிய கோவளத்தைச் சேர்ந்த முன்னாள் வர்த்தகர் அமரர் திரு.  சுப்பிரமணியம் அவர்களின்  ஞாபகார்த்தமாக வழங்கிய அவரது மகன் S.K.Tநாதன் கடை உரிமையாளர் தெய்வீகத்திருப்பணி¸ அறக்கொடை அரசு திரு. சுப்பிரமணியம் கதிர்காமநாதன் சுவிஸ்) அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

தமது கல்லூரி மண்டபத்தில் முத்தமிழ் விழாவினை நடாத்த இடமளித்த காரை இந்துக் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள் பாடசாலை நிர்வாகத்தினருக்கும், நாடகப் போட்டிகளை நடாத்த பிரதான மண்டபத்திணை தந்துதவிய யாழ்ற்றன் கல்லூரி நிர்வாகத்தினருக்கும், மற்றம் மாணவர்களுக்கான போட்டிகளை நடாத்துவதற்கு மண்டபத்திணை வழங்கிய காரை இந்துக் கல்லாரி நிர்வாகத்தினருக்கும், இவ் விழாவிற்கு ஆதரவு நல்கிய திருவாளர் சுப்பிரமணியம் கதிர்காமநாதனும் அவர்களுக்கும், மற்றும் விழாவில் கலந்து சிறப்பித்த அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள், மாணவர்கள் ஆகியோருக்கு எமது நன்றிகள் பல கோடி.

விழாவுக்கான, பரீட்சைக்கான விளம்பரங்களை தமது இணையத்தளங்களில் விளம்பரப்படுத்திய காரைநகர்.கோ, காரைநகர்.கொம், வெப் காரைஇந்துகனடா.கொம்  மற்றும் லங்காஸ்ரீ இணையதள நிர்வாகிகளுக்கும்; மற்றும் பல்வேறு வழிகளிலும் உதவி புரிந்த நல் உள்ளங்கள் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த பாராட்டதல்களும், நன்றிகளும் உரித்தாகுக.

 

 

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”

“நன்றே செய்வோம். அதை இன்றே செய்வோம்”

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
செயற்குழு உறுப்பினர்கள்,
மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
சுவிஸ் வாழ் காரை மக்கள்.
26. 10. 2018