“காரை ஒன்றியம் ஜெர்மனி” நிகழ்வு புதுபொலிவுடனும், புதுசிந்தனைகளுடனும் சிறப்புற அமைய உளம் நிறைந்த வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் மகிழ்வடைகின்றோம். சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

 

ஜெர்மன் வாழ் காரைநகர் உறவுகளுக்கு அன்பான வணக்கங்கள்!

புலம் பெயர்ந்து வாழும் ஜெர்மன் வாழ் காரைநகர் மக்களின் ஊர் மீதான பற்றின் ஒரு வெளிப்பாடே மற்றைய நாடுகளில் உள்ள காரையூர் சங்கங்கள்இ சபைகள் போல் முதன் முதலாக ஒன்று கூடி 31.03.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 12.00 மணிக்கு செயற்பாட்டு ரீதியாக அமைய இருக்கின்ற சமூக மேம்பாட்டு அமைப்பான “காரை ஒன்றியம் ஜெர்மனி” நிகழ்வு புதுபொலிவுடனும், புதுசிந்தனைகளுடனும் சிறப்புற அமைய உளம் நிறைந்த வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் மகிழ்வடைகின்றோம்.

கலை, கல்வி, பண்பாட்டிலும், கலாச்சாரத்திலும், செல்வ வளத்திலம் மனிதவள மேம்பாட்டிலும் சிறப்பு பெற்ற எமது கிராமத்தவர்கள் தாங்கள் பிறந்தமண் பல்துறைகளிலும் செழிப்படைய கடந்த நூற்றாண்டுக்கு முன் திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற கூற்றிக்கிணங்க மலேசியாவில் வேலைவாய்பின் நிமிர்த்தம் குடியேறியவர்களால் முதன் முதலாக புலம் பெயர்நாட்டில் 1919ஆம் ஆண்டில் உருவாக்கம் பெற்ற காரை ஒன்றியம் மலாயா, அதன் பின்னரான கொழும்பு காரை அபிவிருத்திச்சபை, பிரித்தானியா காரை நலன் புரிச்சங்கம், கனடா காரை கலாச்சார மன்றம், அவுஸ்திரேலிய காரை கலாச்சார சங்கம், சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை, பிரான்ஸ் நலன்பரிச்சங்கம், காரை அபிவிருத்திச்சபை ஆகியன கடந்த பல வருடங்களாக எம்மூர் கலை, கல்வி, மருத்துவம், வியாட்டுத்துறை, துறைசார் ஊக்குவிப்புக்கள் என சமூக மேம்பாட்டிற்கான உதவிகளையும், நற்பணிகளையும் ஆற்றிவருகின்றமை யாவரும் அறிந்ததே! அந்தவகையில் அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பதற்கு அமைய “காரை ஒன்றியம் ஜெர்மனி”காரை சமூக மேம்பாட்டிற்காக இணைந்து கொள்வதையிட்டு பெருமிதம் கொள்கின்றோம்.

எமது ஊர் காரைநகர் குறித்த கலை, கல்வி, கலாச்சார மற்றும் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு புலம் பெயர் நாட்டடில் உள்ள அனைத்து காரையூர் சங்கங்களும்இ சபைகளும் காலத்தின் தேவை கருதி ஒரே குடையின் கிழ் சிந்தனைகளை வகுத்து ஒற்றுமையுடன் செயற்படுவதன் மூலமே நாம் அனைவரும் அபிவிருத்தி என்ற நோக்கத்தை அடைய முடியும். இன்றைய நன்நாளில் ஜெர்மன் வாழ் காரைநகர் உறவுகள் இணைந்து உருவாக்கும் “காரை ஒன்றியம் ஜெர்மனி” நிகழ்வு சிறப்பற அமைய எல்லாம் வல்ல ஈழத்துச் சிதம்பர ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ ஆனந்த தாண்டவ நடராஜனின் திருவருளைப் பிராத்தித்து வாழ்த்துகின்றோம்.

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”
“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

இங்ஙனம்
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
செயற்குழு உறுப்பினர்கள்
மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு
சுவிஸ் வாழ் காரை மக்கள்
31.03.2019

 

Publikation1 29.03.2019