Category: Karai Hindu O.S.A

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் இன்று 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30மணிக்கு சங்கத் தலைவரும் கல்லூரி அதிபருமான திருமதி வாசுகி தவபாலன் தலைமையில் நடைபெற்றபோது புதிய நிர்வாக சபைத் தெரிவு இடம்பெற்றது.

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் இன்று 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30மணிக்கு சங்கத் தலைவரும் கல்லூரி அதிபருமான திருமதி வாசுகி தவபாலன் தலைமையில் நடைபெற்றபோது புதிய நிர்வாக சபைத் தெரிவு இடம்பெற்றது.

தலைவராக அதிபர் திருமதி வாசுகி தவபாலன் அவர்களும் உப தலைவராக கல்லூரியின் முன்னாள்அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை,செயலாளராக ந.பாரதி,பொருளாளராக க.நிமலதாசன்,உபசெயலாளராக க.நாகராசா,உப பொருளாளராக வி.கம்சன் ஆகியோரும்
நிர்வாக சபை உறுப்பினர்களாக சு.அகிலன்,த.சற்குணராசா,ந.யோகநாதன், செ.அருட்செல்வம்,சி.கந்தசாமி,பொ.சிறிகரன்,க.தில்லையம்பலம்,திருமதி யோகலட்சுமி யோகநாதன், செல்வி சிவரூபி நமசிவாயம் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களாக கதிரவேற்பிள்ளை கிருஸ்ணகுமார்,திருப்புகழூர்சிங்கம் சயந்தன் ஆகியோரும் தெரிவாகினர்.

img_9860-copy img_9862-copy img_9863-copy img_9864-copy img_9865-copy img_9866-copy img_9867-copy img_9868-copy img_9869-copy img_9870-copy img_9871-copy img_9872-copy img_9873-copy img_9874-copy img_9876-copy img_9877-copy img_9878-copy img_9879-copy img_9880-copy img_9881-copy img_9882-copy img_9883-copy img_9884-copy img_9885-copy img_9886-copy img_9887-copy img_9888-copy img_9889-copy img_9890-copy img_9891-copy img_9892-copy img_9893-copy img_9894-copy img_9897-copy img_9897 img_9898-copy img_9899-copy

காரை இந்துக் கல்லூரியின் கல்வி சாரா அலுவலர் அமரர்.வீரசிங்கம் கதிரவேற்பிள்ளையின் சேவை நன்றியோடு நினைவு கூரப்படுகின்றது.

kathiravetpillaist

காரை இந்துக் கல்லூரியின் கல்வி சாரா அலுவலர் அமரர்.வீரசிங்கம் கதிரவேற்பிள்ளையின் சேவை நன்றியோடு நினைவு கூரப்படுகின்றது.

ஓரு பாடசாலையின் வளர்ச்சியில் பாடசாலையில் பணியாற்றிய அதிபர்கள் ஆசிரியர்கள் ஆகியோருடன் கல்விசாரா அலுவலர்களின் பங்கும் பாடசாலைச் சமூகத்தினால் நன்றியுணர்வுடன் நினைவு கூரப்படவேண்டியதாகும். 

அந்த வகையில் காரைநகர் இந்துக் கல்லூரியில் நேர்மையுடனும் விசுவாசத்துடனும் அர்ப்பணிப்பு மிக்க சிறப்பான சேவையை வழங்கிய வகையில் அமரர் வீரசிங்கம் கதிரவேற்பிள்ளை அவர்கள் கல்விசாரா அலுவலர்கள் வரிசையில் முன்னிலை வகித்து மேற்படி கல்லூரிச் சமூகத்தினால் என்றென்றும் நினைவு கூரப்படும் ஒருவராக விளங்குகின்றார். 

வெள்ளிவிழா அதிபர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் பதவிக் காலத்தில் அலுவலக எழுதுவினைஞராகவும் பின்னர் ஆய்வுகூட உதவியாளராகவும்; பதவியில் அமர்த்தப்பட்டிருந்த கல்லூரியின் பழைய மாணவரான அமரர் கதிரவேற்பிள்ளை அவர்கள் அதிபர் தியாகராசா அவர்களினதும் அதன் பின்னர் பதவி வகித்த அதிபர்களினதும் மற்றும்; ஆசிரியர்களினதும் மாணவர்களினதும் மனம் கவரும்படியாக மிகுந்த பொறுப்புடனும் செயற்திறனுடனும் தமது கடமைகளை மேற்கொண்டிருந்தவர் என்பதுடன் கல்லூரியின் நிர்வாக ரீதியான பணிகளிலும் தனது பங்களிப்பினை வழங்கி ஒட்டுமொத்த பாடசாலைச் சமூகத்தின் பாராட்டுக்குரியவராக விளங்கினார். 

கல்லூரியின் விளையாட்டுத்துறை போன்ற கல்விசாரா செயற்பாடுகள் மற்றும் சமய சமூக கலாசார நிகழ்வுகள் அனைத்தும் சிறப்பாக ஒழுங்கமைக்கப்படுவதற்கு சம்பந்தப்பட்ட பொறுப்பாசிரியர்களுக்கு இவரால் வழங்கப்பட்டு வந்த ஒத்துழைப்பு காரணமாக ஒட்டுமொத்த கல்லூரிச் சமூகத்தினதும் நன்மதிப்பைப் பெற்று விளங்கியவர். பாடசாலை நேரத்திற்குப் பின்னரும் விடுமுறை நாட்களிலும் கல்லூரிக்கு சமூகமளித்து அவசியமான பணிகளை நிறைவுசெய்ய கல்லூரி நிர்வாகத்துக்கு உதவிவந்ததன் மூலம் அதன் சுமுகமான செயற்பாட்டில் முக்கிய பங்காற்றியவர். 
'புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?' என்பது போல, அன்னாரின் நன்மக்களான விக்கினேஸ்வரி, மனோரஞ்சிதம், சத்தியராணி, கிருஷ்ணகுமார் ஆகிய நால்வரும் பாடசாலையில் நல்லொழுக்கமும் கல்வியில் சிறந்து விளங்கியும் ஏனைய மாணவர்களுக்கு எடுத்துக்காட்டான நன்மாணக்கர்களாகத் திகழ்ந்து தம் தந்தை பெயர் சொல்ல வைத்தவர்கள் என்றால் மிகையாகாது.

இத்தகைய உன்னதம் மிக்க சேவையாளரான அமரர் கதிரவேற்பிள்ளை அவர்கள் சேவையிலிருக்கும் பொழுதே 1980ஆம் ஆண்டு தமது 40வது வயதில் சிவபதம் அடைந்தமை அன்னாரின் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த பாடசாலை சமூகத்திற்கும் ஏற்பட்ட துர்ப்பாக்கியமான இழப்பாகும். அன்னார் மறைந்த 36வது ஆண்டு நினைவுகூரப்படும் இவ்வேளையில் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையும் ஏனையோருடன் இணைந்து அன்னாரை நன்றியுடன் நினைவுகூருவதுடன் அன்னாரின்  கல்லூரிக்கான சேவை ஏனைய கல்லூரி சார்ந்த பணியாளர்களுக்கும் எடுத்துகாட்டாக அமைந்து விளங்கவேண்டும் என்பதுவும் எமது பெருவிருப்பாகும். 

அன்னாரின் உருவப்படம் பாடசாலையின் விஞ்ஞான ஆய்வுகூடத்தில் அன்னாரின் சேவையை நன்றியுடன் நினைவுகூர்ந்து இன்றும் வைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

பழைய மாணவர்சங்க கனடாக் கிளையின் முன்னாள் பொருளாளர் திரு.ஆ.சோதிநாதன் 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாடசாலைக்குப் பயணம் சென்றிருந்தபோது எடுக்கப்பட்ட நிழற்படத்தைக் கீழே காணலாம்.  

kathiravetpillai kathiravetpillaiimg_1921

 

காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து இரு மாணவர்கள் பல்கலைக் கழக அனுமதி பெற்றுள்ளனர்

காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து இரு மாணவர்கள் பல்கலைக் கழக அனுமதி பெற்றுள்ளனர்

கடந்த ஆகஸ்ட் 2015 இல் நடைபெற்ற க.பொ.த (உ-த) பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைகழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி விபரம் இலங்கை பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவினால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
 
மேற்படி வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து இரு மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர். 

இம்மாணவர்களின் விபரம் வருமாறு: 

1.    செல்வி. துஸ்யந்தினி அரியபுத்திரன் கலைப்பீடம் யாழ் பல்கலைக்கழகம்

2.    செல்வி தர்ஜிகா மூர்த்தி  நுண்கலைப்பீடம் (இசைத்துறை) கிழக்குப் பல்கலைக்கழகம்

கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ள இம்மாணவர்களையும் அவர்களுக்கு போதனை அளித்த ஆசிரியர்களையும் பாடசாலை சமூகத்துடன் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையும் பராட்டி வாழ்த்துகின்றது. 

அன்பார்ந்த காரை இந்து அன்னையின் புதல்வர்களே! நலன் விரும்பிகளே!

அன்பார்ந்த காரை இந்து அன்னையின் புதல்வர்களே! நலன் விரும்பிகளே!

பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையின் நெஞ்சார்ந்த நன்றியும் அன்பான வேண்டுகோளும்.

காரைநகர் இந்துக் கல்லூரியில் அரசாங்கத்தின் உதவியுடன் 250மில்லியன் ரூபா மதிப்பீட்டிலான 'அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை' என்கின்ற பௌதிக வள அபிவிருத்தித் திட்டத்தினை செயற்படுத்துவதற்குத் தேவையான காணியின் ஒரு பகுதியினை கொள்முதல் செய்ய உதவும்வகையில் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிதி சேகரிப்புச் செயற்பாட்டின் முக்கியத்துவத்தினைப் புரிந்துகொண்டு தாராள சிந்தையுடனும் விசுவாச உணர்வுடனும் நூற்றுக்கணக்கான பழைய மாணவர்களும் நலன் விரும்பிகளும் ;இயன்றளவு நிதிப் பங்களிப்பினை வழங்கி வருகின்றமை எமக்கு மகிழ்ச்சியும் ஊக்கமும் அளிப்பதாகவுள்ளது. இவர்கள் அனைவருக்கும் எமது உளமார்ந்த நன்றியினைக் கூறிக்கொள்கின்றோம். எமது செயற்பாட்டின் மற்றோர் அங்கமாக அண்மையில் நடாத்தப்பட்டிருந்த சுப்பர் சிங்கர் புகழ் சாயி விக்னேஷின் கர்நாடக இசைக் கச்சேரி எமது இலக்கினை அடைவது உள்ளிட்டு அனைத்து வகையிலும் வெற்றிகரமாக நடந்தமையையிட்டு எமது மனநிறைவினையும் மகிழ்ச்சியினையும் தங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றோம்.. இந்நிகழ்வின் நோக்கத்தினைப் புரிந்துகொண்டு நுழைவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொண்டும் அனுசரணை வழங்கியும் இன்னும் பல்லாற்றாலும் ஆதரவளித்திருந்த அனைத்து பழைய மாணவர்களுக்கும் நலன் விரும்பிகளுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.. 

எமது நிதி சேகரிப்புச் செயற்பாட்டில் பங்களிப்பினை இன்றுவரை வழங்கியிராதிருக்கும் பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும் ஒவ்வொரு பழைய மாணவர்களும் தவறாது இத்திட்டத்தில் பங்கெடுக்கவேண்டும் என்பதை கருத்திற்கொண்டும் நன்கொடைகளை பெற்றுக்கொள்ளும் கால எல்லையினை  அக்டோபர் 31ஆம் திகதி வரை நீடித்துள்ளோம். வரலாற்று முக்கியத்துவம் மிக்க இத்திட்டத்தில் பங்குகொள்வதை தமது வரலாற்றுக் கடமையாகக் கொண்டு தம்மாலியன்றளவு உதவியை வழங்க அனைத்து பழைய மாணவர்களும் முன்வருவார்கள்; என எதிர்பார்க்கின்றோம். எமது அன்னையின் அன்பான அரவணைப்புக்கு ஈடாக இந்து அன்னையின் அரவணைப்பில் இருந்த காலமே எமது வளமான வாழ்வினை நிர்ணயம் செய்வதற்கு அடித்தளமிட்டது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள். அறிவினை புகட்டியது மட்டுமல்லாது சமய பண்பாட்டு கலாசார விழுமியங்களையும் ஒழுக்கத்தினையும் நாம் பேண வழி காட்டி ஆற்றலும் ஆளுமையும் மிக்கவர்களாக வளர்த்தெடுத்து குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் நாட்டுக்கும் பயன் மிக்கவர்களாக உருவாக்கிய இந்து அன்னையின் வளர்ச்சிக்கு அனைவரும் இணைந்து கைகொடுப்போம் வாருங்கள் என மீண்டும் அன்போடும், உரிமையோடும் அழைக்கின்றோம். 

காரை மண்ணிலிருந்து பல சாதனையாளர்களை உருவாக்கிய வகையில் இலங்கைத் தீவின் ஒரு மூலையில் சின்னஞ்சிறிய தீவாக இருக்கும் காரைநகரை உலக அரங்கிலுள்ள பலரும் திரும்பிப் பார்க்க வைத்ததில்;  காரை இந்துவுக்குள்ள பங்கு காத்திரமானது என்பதை எவரும் மறுக்க முடியாது என்பதுடன் காரைநகரின் முக்கியமான அடையாளங்களுள் ஒன்றாகவும் இக்கல்லூரி பரிணமித்துள்ளமை குறித்து நாம் பெருமைப்படமுடியும்.. இன்று நலிவுற்றிருக்கும் காரை மண்ணை செழிப்பு மிக்கதாக மீண்டும் மாற்றி அமைக்கும் முயற்சியில் கல்விக்கான வசதி வாய்ப்புக்கள் கல்வி நிறுவனங்கள் ஊடாக ஏற்படுத்திக்கொடுக்கும்  செயற்பாடுகள் முன்னிலைப்படுத்தப்படவேண்டியதன் அவசியத்தை காரை அமைப்புக்கள் புரிந்துகொண்டு செயற்படுவது பாராட்டி வரவேற்கத்தக்கதாகும். காரை மண்ணின் கல்விப் பாரம்பரியத்துக்கு வித்திட்ட பழமை மிக்க முதன்மைப் பாடசாலையான காரை இந்துவின் வளர்ச்சிப் பாதையில் உங்களது பேராதரவுடன் வரலாற்றுத் தடங்களை ஏற்படுத்திய வண்ணம் பயணித்து வருகின்ற பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை காணிக் கொள்வனவுக்கான உதவித் திட்டத்தினையும் வெற்றிகரமாக நிறைவேற்றி வைக்கும் என்கின்ற உறுதியான நம்பிக்கையினை நீங்கள் இதுவரை வழங்கிய உதவிகள் ஊடாக ஏற்படுத்தித் தந்துள்ளீர்கள். 

எமது முன்னையோர் விட்டுச் சென்ற பணிகளை அனுபவித்து பயனடைந்த நாம் வழங்கும் உதவிகள் மூலம் எமது உறவுகளின் எதிர்காலச் சந்ததியும் அனுபவித்து பயன்பெறுவதுடன் எமது பெரியோரின் கூற்றுக்கிணங்க கோடி புண்ணியத்தினையும் பெற்றுக்கொள்ள வழிசமைத்துக்கொள்வோம்.

"அன்ன யாவினும் கோடி புண்ணியம்
 ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்"

திட்டம் குறித்த விபரங்களை அறியவும் உதவிகளை வழங்கவும் விரும்புவோர்களுக்கான தொடர்புத் தகவல்கள்:

தொலைபேசி இலக்கங்கள்: 647-5326217  416-8040587  416-6392930

மின்னஞ்சல் முகவரி:   karaihinducanad@gmail.com

தாங்கள் வழங்கத் தீர்மானிக்கும் நன்கொடையினை மேற்குறித்த தொலைபேசி இலக்கங்களுள் ஒன்றுடன் அல்லது மேற்குறித்த மின்னஞ்சல் முகவரியூடாக தொடர்புகொண்டு அறியத்தந்தால் அதனைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள்;; தங்களுடன் பேசி மேற்கொள்ளப்படும்.

கடன் அட்டையை (Credit Card)பயன்படுத்தி PAY PAL வழியாக நன்கொடையினை வழங்க விரும்புவோர் கீழே உள்ள இணைப்பினை அழுத்துவதன் மூலம் வழங்கிக்கொள்ளமுடியும்.

பழைய மாணவர் சங்கம் – கனடா

 

பல்வேறு சிறப்புக்களைக் கொண்டு உன்னதமான நிகழ்வாக அமைந்து விட்ட சாயி விக்னேசின் கர்நாடக இசைக் கச்சேரி

பல்வேறு சிறப்புக்களைக் கொண்டு உன்னதமான நிகழ்வாக அமைந்து விட்ட சாயி விக்னேசின் கர்நாடக இசைக் கச்சேரி

காரை இந்துவின் மேம்பாட்டு நிதிக்காக பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த சாயி விக்னேசின் கர்நாடக இசைக் கச்சேரி சனிக்கிழமை(17.09.2016) மாலை கனடா கந்தசுவாமி கோயில் மண்டபத்தில் வெகு சிறப்பாக நடந்திருந்தது.

மண்டபம் நிறைந்திருந்த இசை ரசிகர்களை மூன்றரை மணி நேரமாக கட்டிவைத்து விட்ட சாயி விக்னேசின் இனிமையான இசைக்கு அணிசேர் கலைஞர்களான காரை மண் தந்த செல்வன் அமுதீசர் சச்சிதானந்தன் மிருதங்கம் வாசித்தும் செல்வன் மிதுரன் மனோகரன் வயலின் வாசித்தும் இருந்ததுடன் செல்வன் பிரணவன் குகமூர்த்தி கடம் வாசித்து ரசிகர்களை இசை வெள்ளத்தில் திணற வைத்திருந்தனர். சாயி விக்னேஸ் கர்நடாக இசைப் பாடல்களுடன் பக்திப் பாடல்களையும் பாடியிருந்தமை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. அணிசேர் கலைஞர்கள் தனி ஆவர்த்தனம் வாசித்தபோதும் இணைந்து வாசித்தபோதும் வெளிப்படுத்தியிருந்த அபாரத் திறமை  ரசிகர்களை வியக்கவைத்தது என்பதுடன் இவர்களைப் போன்ற இளம் கலைஞர்கள் வாய்ப்பளிக்கப்பட்டு ஊக்குவிக்கப்படவேண்டும் என்ற சிந்தனையையும் அவர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது. சாயி விக்னேஸ் தனது கச்சேரியின் நிறைவில் உரையாற்றியிருந்தபோது மூன்றரை மணிநேரமாக ரசிகர்கள் அமைதியாக இருந்து தமது இசையை ரசித்தமைக்காக மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி நன்றி கூறியதுடன் சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் இது போன்ற இசை நிகழ்வுகளின்போது குறிப்பாக தனி ஆவர்த்தனம் வாசிக்க ஆரம்பிக்கும்போது மண்டபத்திலிருந்து ரசிகர்கள் எழுந்து செல்கின்ற வழமைக்கு மாறாக மூன்றரை மணிநேரமாக பொறுமையோடு அமைதியாக இருந்து ரசித்தமைக்காக தனது பாராட்டினையும் தெரிவித்தார். பக்க வாத்தியக் கலைஞர்களின் பங்களிப்பினை வெகுவாகப் பாராட்டி இவ்விசை நிகழ்வினை சிறப்பாக ஒழுங்கமைத்து தமக்கு வாய்ப்பளித்த பழைய மாணவர் சங்க நிர்வாகத்துக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். அணிசேர் கலைஞர்கள் சார்பில் உரையாற்றியிருந்த செல்வன் அமுதீசர் சச்சிதானந்தன் நிகழ்வு முடியும் வரை பொறுமையாகவிருந்து  ரசிகர்கள் ரசித்ததன்மூலம்; வழங்கிய ஆதரவு தமக்கு மிகப்பெரிய ஊக்குவிப்பாக இருந்தது எனக் குறிப்பிட்டார்.

மாலை 6.00மணிக்கு சம்பிரதாய நிகழ்வுகளுடன் நிகழ்வு ஆரம்பமானது. நிகழ்வின் பிரதம விருந்தினர் திரு.மகேஸ்வரன் பாலசுப்பிரமணியம் அவரது துணைவியார் திருமதி மோகனா மகேஸ்வரன்,  காரை இந்துவின் மூத்த பழைய மாணவரும் விவசாயத் திணைக்கள ஓய்வு நிலை லிகிதருமாகிய திரு.ஐயம்பிள்ளை பூபாலசிங்கம் அவரது துணைவியார், கல்லூரியின் முன்னாள் ஆசிரியை திருமதி விஜயா மகேந்திரம், கல்லூரியின் மூத்த பழைய மாணவி திருமதி காமாட்சி நாகராசா ஆகியோர் இணைந்து மங்கள விளக்கேற்றி நிகழ்வை தொடக்கி வைத்தனர். 'இசைக்கலைமணி' திருமதி பவானி ஆலாலசுந்தரத்தின் மாணவிகளான செல்வி கவிதா சிவநாதன் செல்வி காவிரி சிவநாதன் சகோதரிகள் கடவுள் வணக்கம்இ தமிழ்மொழி வாழ்த்துஇ கனேடிய தேசிய கீதம் என்பவற்றை சிறப்புற இசைத்ததைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. பழைய மாணவர் சங்கத்தின உப-தலைவர் திரு.நாகலிங்கம் குஞ்சிதபாதம் அவர்களின் வரவேற்புரையை அடுத்து கல்லூரியின் இசை ஆசிரியைகளான திருமதி பராசக்தி றொபேசன், திருமதி பங்கையற்செல்வி முகுந்தன் ஆகியோரினால் பாடப்பட்டு பதிவுசெய்யப்பட்டிருந்த கல்லூரிப் பண் ஒலிபரப்பப்பட்டபோது சபையினர் எழுந்து நின்று கல்லூரித் தாய்க்கு  மதிப்பளித்திருந்தனர். பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் திரு.தம்பையா அம்பிகைபாகன் உரையாற்றி நிகழ்சியை ஆரம்பித்து வைத்தார்.

கச்சேரியின் இடையே இந்நிகழ்வின் பிரதம விருந்தினரான ஐக்கிய அமெரிக்காவின் Texas மாநிலத்திலுள்ள Wabtec Railway Electronics நிறுவனத்தில் நிறைவேற்றுப் பணிப்பாளராக பணியாற்றுபவரும் கல்லூரியின் மகிமை மிக்க பழைய மாணவருமான திரு.மகேஸ்வரன் பாலசுப்பிரமணியமும், California மாநிலத்தில் Edisun Heliostts Inc. நிறுவனத்தில் பிரதம பொறியியலாளராக பணியாற்றுகின்ற அவரது துணைவியார் திருமதி மோகனா மகேஸ்வரன் அவர்களும்இ பழைய மாணவர் சங்கத்தின் போசகர் சிவநெறிச் செல்வர் தில்லையம்பலம் விசுவலிங்கம் அவர்களினாலும் அவரது பாரியார் வடிவழகாம்பாள் விசுவலிங்கம் அவர்களினாலும் பொன்னாடை அணிவித்தும் மலர்ச்செண்டு வழங்கியும் கௌரவிக்கப்பட்டதைத் தொடர்ந்து திரு.மகேஸ்வரன் உரையாற்றினார். தனது வாழ்வின் முன்னேற்றத்தில பங்குகொண்டுள்ள தனது தாய், தந்தை, மனைவி ஆகியோருடன் தான் கற்ற காரை இந்து அன்னையின் பங்களிப்பினையும் தன்னால் மறக்கமுடியாது எனக் குறிப்பிட்டதுடன் இக்கல்லூரியின் மேம்பாட்டிற்கு பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை ஆற்றி வருகின்ற பணிகளைப் பாராட்டி நன்றி தெரிவித்தார். 

திரு.மகேஸ்வரனின் உரையினைத் தொடர்ந்து கலைஞர்கள் கௌரவம் இடம்பெற்றது. குழந்தை மருத்துவ நிபுணர் மருத்துவகலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் சாயி விக்னேசையும் பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை அவர்கள் மிருதங்கம் வாசித்த செல்வன் அமுதீசர் சச்சிதானந்தன் அவர்களையும் Doubleseal Insulating Glass Ltd அதிபர் திரு.மகாதேவன் பாலசுப்பிரமணியம் அவர்கள் வயலின் வாசித்த செல்வன் மிதுரன் மனோகரன் அவர்களையும் வாட்டலூ பல்கலைக்கழக இணைப் பேராசிரியரும் சமய சமூக ஆர்வலருமாகிய கலாநிதி தம்பிராசா ரவிச்சந்திரன அவர்கள்; கடம் வாசித்த செல்வன் பிரணவன் குகமூர்த்தி அவர்களையும் பொன்னாடை அணிவித்தும் நினைவு விருதுகள் வழங்கியும் கௌரவித்தனர். 

பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் திரு.கனக சிவகுமாரன் நன்றி தெரிவித்து உரையாற்றினார். நிகழ்ச்சிகளை அழகு தமிழில் சிறப்பாக தொகுத்து வழங்கிய பிரபல வானொலி அரங்க அறிவிப்பாளரும் கல்லூரியின் பழைய மாணவருமாகிய திரு.பாலசுப்பிரமணியம் ஞானபண்டிதன் அவர்கள் கல்லூரியின் மூத்த பழைய மாணவரும் ஓய்வுநிலை ஆசிரியருமாகிய திரு.முருகேசம்பிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்களினால் பொன்னாடை போர்த்து கௌரவிக்கப்பட்டார். நல்லதொரு இசை நிகழ்வினை கண்டு களித்ததுடன் கல்விநிறுவனம் ஒன்றின் மேம்பாட்டுக்கு உதவிய மனநிறைவுடன் மண்டபத்திலிருந்து மக்கள் வெளியேறினர் என்பதுடன் இந்நிகழ்வினை சிறப்பாக ஒழுங்கமைத்திருந்த பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை நிர்வாகத்தினை பலரும் பாராட்டிச் சென்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கீழே காணலாம். 

dsc_0569 dsc_0572 dsc_0573 dsc_0582 dsc_0587 dsc_0592 dsc_0598

img_5458-315x600img_5457-399x600img_5453-525x960dsc_0595

img_5459-1080x676-1 dsc_0599 dsc_0600 dsc_0601 dsc_0602 dsc_0603 dsc_0604 dsc_0605 dsc_0606 dsc_0611 dsc_0618 dsc_0632 dsc_0635 dsc_0636 dsc_0637 dsc_0638 dsc_0639 dsc_0640 dsc_0641 dsc_0642 dsc_0643 dsc_0644 dsc_0647 dsc_0648 dsc_0650 dsc_0651 dsc_0652 dsc_0657 dsc_0658 dsc_0663 dsc_0664 dsc_0667 dsc_0668 dsc_0670 dsc_0675 dsc_0676 dsc_0678 dsc_0685 dsc_0686 dsc_0687 dsc_0688 dsc_0690 dsc_0691 dsc_0692 dsc_0695 dsc_0698 dsc_0699 dsc_0701 dsc_0702 dsc_0705 dsc_0706 dsc_0707 dsc_0708 dsc_0710 dsc_0711 dsc_0715 dsc_0716 dsc_0720 dsc_0725 dsc_0727 dsc_0730 dsc_0733 dsc_0738 dsc_0741 dsc_0755 dsc_0756 dsc_0759 dsc_0761 dsc_0762 dsc_0763 dsc_0766 dsc_0777 dsc_0784 dsc_0789 dsc_0797 dsc_0798 dsc_0799 dsc_0801 dsc_0803

ரொறன்ரோ விமான நிலையம் வந்தடைந்த சுப்பர் சிங்கர் புகழ் சாயி விக்னேசை பழைய மாணவர் சங்க நிர்வாகிகள் வரவேற்றனர்

ரொறன்ரோ விமான நிலையம் வந்தடைந்த சுப்பர் சிங்கர் புகழ் சாயி விக்னேசை பழைய மாணவர் சங்க நிர்வாகிகள் வரவேற்றனர்

காரைநகர் இந்துக் கல்லூரியின் மேம்பாட்டு நிதிக்காக எதிர்வரும் சனிக்கிழமை மாலை 5.30மணிக்கு கனடா கந்தசுவாமி கோயில் கலை அரங்கில் கர்நாடக இசைக் கச்சேரியினை வழங்கும்பொருட்டு சுப்பர் சிங்கர் புகழ் சாயி விக்னேஸ் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10.00 மணிக்கு ரொறன்ரோ சர்வதேச விமா நிலையத்தை வந்தடைந்தபோது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான பழைய மாணவர் சங்கத்தின் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் அவரை வரவேற்றனர். இதன்போது விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட படங்களை கீழே காணலாம்.

dsc_0433 dsc_0434 dsc_0441 dsc_0446 dsc_0452 dsc_0455 dsc_0456 dsc_0458 dsc_0460 dsc_0463 dsc_0465 dsc_0466 dsc_0469 dsc_0471 dsc_0472 dsc_0473 dsc_0478 dsc_0482 dsc_0491 dsc_0492

காரை இந்துவின் பெருமை மிக்க பழைய மாணவர் திரு .மகேஸ்வரன் சாயி விக்னேசின் இசை நிகழ்வினை சிறப்பிக்கின்றார்

maheswaranphoto

காரை இந்துவின் பெருமை மிக்க பழைய மாணவர் திரு .மகேஸ்வரன் சாயி விக்னேசின் இசை நிகழ்வினை சிறப்பிக்கின்றார்

எதிர்வரும் 17ஆம் திகதி சனிக்கிழமை கனடா கந்தசுவாமி கோயில் கலை அரங்கில் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஏற்பாட்டில் கல்லூரியின் மேம்பாட்டு நிதிக்காக நடைபெறவுள்ள சுப்பர் சிங்கர் புகழ் சாயி விக்னேசின் கர்நாடக இசை நிகழ்வில் கல்லூரியின் பெருமை மிக்க பழைய மாணவர்களுள் ஒருவராகிய திரு.மகேஸ்வரன் பாலசுப்பிரமணியம்  அவர்களும் அவரது துணைவியார் திருமதி மோகனா மகேஸ்வரன் அவர்களும் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

திரு.மகேஸ்வரன் பாலசுப்பிரமணியம் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மின்பொறியியல் துறை சிறப்புப் பட்டதாரி (B.Sc.(Hons) என்பதுடன் மின்பொறியியலில் முது விஞ்ஞானமாணிப் (M.Sc.) பட்டத்தினையும் பெற்றவர். சிங்கப்பூர், கனடா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் மின்பொறியியல் துறை சார்ந்து உயர் பதவிகள் வகித்த இவர் துற்போது ஐக்கிய அமெரிக்காவிலுள்ள Texas மானிலத்தின் Wabtec Railway Electronics நிறுவனத்தில் நிறைவேற்றுப் பணிப்பாளராக பணியாற்றி வருகின்றார். இவரது துணைவியார் திருமதி மோகனா அவர்கள் கலிபோணியா மாநிலத்திலுள்ள நிறுவனமொன்றில்; பிரதம மின்பொறியியலாளராக பணிபுரிகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

தனது முன்னேற்றத்துக்கு வழிகாட்டிய காரைநகர் இந்துக் கல்லூரி மீது மிகுந்த விசுவாசம் கொண்டு விளங்கும் திரு .மகேஸ்வரன் அவர்களும் அவரது துணைவியாரும் பாடசாலையின் மேம்பாடு நோக்கி நடத்தப்படுகின்ற இசை நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு கல்லூரியை பெருமைப்படுத்துவதுடன் இசை நிகழ்வுக்கும் சிறப்புச் சேர்ப்பிக்கின்றமை குறித்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை தனது மகிழ்ச்சியினை தெரிவிக்கின்றது. 

 

சுப்பர் சிங்கர் புகழ் சாயி விக்னேஸின் கர்நாடக இசைக் கச்சேரி

sai-vignesh-flyer

சாயி விக்னேஸின் கர்நாடக இசை அரங்கில் காரை மண் தந்த இசைக் கலைஞர்களும் பங்கேற்கின்றனர்.

சாயி விக்னேஸின் கர்நாடக இசை அரங்கில் காரை மண் தந்த இசைக் கலைஞர்களும் பங்கேற்கின்றனர்.

காரைநகர் இந்துக் கல்லூரியின் மேம்பாட்டு நிதிக்காக எதிர்வரும் செப்ரெம்பர் 17ஆம் திகதி சனிக்கிழமை கனடா கந்தசுவாமி கோயில் கலை அரங்கில் பழைய மாணவர் சங்க கனடா கிளையின் எற்பாட்டில் சுப்பர் சிங்கர் புகழ் சாயி விக்னேஸின் கர்நாடக இசைக் கச்சேரி நடைபெறவிருப்பது அனைவரும் அறிந்ததே.  

தற்போது 21 வயதாகவிருக்கும் சாயி விக்னேஸ் மிகவும் சிறிய வயதிலேயே கர்நாடக இசைப் பாடல்களையும் மெல்லிசைப் பாடல்களையும் பல்வேறு போட்டிகளிலும்  பாடி ஆற்றல் மிக்க சிறந்த பாடகர் என்ற பாராட்டினைப் பெற்றவர். சிறப்பாக விஜே தொலைக்காட்சியினால் 2013ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட சுப்பர் சிங்கர்4 தெரிவுப் போட்டியில் பங்கு பற்றி முதல் எட்டு போட்டியாளர்களுள் ஒருவராக தெரிவுசெய்யப்பட்டவர் என்பதுடன்  இப்போட்டியின்போது இவரிடத்தில் வெளிப்பட்ட கர்நாடக இசைத்  திறமை நடுவர்களினால் வெகுவாகப் பாரட்டப்பட்டிருந்தது. சுப்பர் சிங்கர் போட்டியில் பங்கு கொண்டதன் மூலமாக  சர்வதேசமெங்கும் பல்லாயிரக் கணக்கான கர்நாடக இசை ரசிகர்களை உருவாக்கிக் கொண்டவர். இள வயதிலேயே தமிழ்நாட்டின் பல இசை அரங்குகளில் மட்டுமல்லாது வட-அமெரிக்கா, ஸ்ரீலங்கா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் கர்நாடக இசைக் கச்சேரி மற்றும் மெல்லிசை நிகழ்ச்சிகளை நடாத்தி அமோக வரவேற்பினைப் பெற்றுக்கொண்டவர். அந்த வகையில் பழைய மாணவர் சங்க கனடா கிளையின் அழைப்பினை ஏற்று கனடாவிற்கு வருகை தந்து மூன்று மணி நேர இசை நிகழ்ச்சியினை வழங்கவுள்ளமை இங்குள்ள இசை ரசிகர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்றே கூறலாம்.  பல இசை ரசிகர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டதற்கிணங்க திரைப் படங்களில் இடம்பெற்ற பிரபல்யம் மிக்க கர்நாடக இசைப் பாடல்களையும் பக்திப் பாடல்களையும் சாயி விக்னேஸ் 17ஆம் திகதி நடைபெறவுள்ள கச்சேரியின்போது  பாடவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

சாயி விக்னேஸின் இசைக்கு  காரை மண் தந்த இரு இளங் கலைஞர்கள் பக்கவாத்தியம் வாசிக்கவுள்ளமை இவ் இசை நிகழ்வின் மற்றொரு சிறப்பம்சமாகும். கனேடிய தமிழ் இசை உலகில் வளர்ந்துவரும பிரபல்யம் மிக்க இளம் முன்னணி வயலின் இசைக் கலைஞரான செல்வன் மிதுரன் மனோகரன் வயலின் இசை வழங்கவுள்ளதுடன்  வாய்ப்பாட்டில் பிரபல்யம் மிக்க இளம் கலைஞராக பிரகாசிக்கும் செல்வன் அமுதீசர் சச்சிதானந்தன் மிருதங்கத்தையும் திறமையாக வாசிக்கமுடியும் என்பதை நிரூபிக்கும் வகையில்; மிருதங்க இசையும் வழங்கி உன்னதம் சேர்க்கவுள்ளனர். 
அற்புதமான ஓர் இசை நிகழ்ச்சியை பார்த்தும் கேட்டும் அனுபவிப்பதுடன் மட்டுமல்லாது ஓர் கல்வி நிறுவனத்தின் மேம்பாட்டுத் திட்டத்துக்கு உதவி செய்வதாகவும் உங்கள் அனைவரது வருகையும் அமைந்து விளங்கும் என இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களான பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை தெரிவிக்கின்றது.

காரைநகர் இந்துக் கல்லூரியில் அரச உதவியுடன் மேற்கொள்ளப்படவள்ள அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை என்கின்ற பாரிய பௌதிக வள அபிவிருத்தித் திட்டத்துக்குத் தேவையான காணியின் ஒரு பகுதியை  கொள்வனவு செய்ய உதவும் நோக்குடன் நடாத்தப்படுகின்ற  இந்நிகழ்விற்கு கல்லூரியின் பழைய மாணவர்களும் நலன் விரும்பிகளும் திரண்டு வந்து ஆதரவு நல்குமாறு மேலும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை நிர்வாகம் அன்புடன் வேண்டிக்கொண்டுள்ளது.

Amutheesar1 Mithuran1 SaiVignesh Vijaytv

சுப்பர் சிங்கர் புகழ் சாயி விக்னேஸின் கர்நாடக இசைக் கச்சேரி

sai-veg 13x19-new

காரைநகர் இந்துக் கல்லூரி உப-அதிபர் திரு.சி.பொன்னம்பலம் அவர்களின் மறைவு குறித்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளை விடுத்துள்ள கண்ணீர்அஞ்சலி

ponnampalam-2 copy

‘மருத்துவ கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்’ இரண்டு மில்லியன் ரூபாவாக அதிகரிப்பு

Dr.Vijay

'மருத்துவ கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்' இரண்டு மில்லியன் ரூபாவாக அதிகரிப்பு

கற்றல் செயற்பாட்டினை ஊக்குவிக்கின்ற செயற்பாடுகளுள் பாடசாலைகளில் ஒழுங்கமைக்கப்பட்டு வருகின்ற 'பரிசில் தினம்' நிகழ்வு கல்வியாளர்களின் ஏகோபித்த அங்கீகாரத்தினைப் பெற்று மாணவர்களின் முன்னேற்றத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தவல்ல முன்னணி நிகழ்வாகக் கருதப்படுகின்றது. 

ஆற்றல் மிக்க மாணவர்கள் பாராட்டி ஊக்குவிக்கப்படுகின்றபோது சாதனையாளர்களாக மிளிரக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்படுகின்றது என்பதை அனுபவரீதியாக உணர்ந்துகொண்டவரும் காரைநகர் இந்துக் கல்லூரியில் கற்று நிபுணத்துவம் மிக்க குழந்தைகள் மருத்துவராக கனடாவில் பிரபல்யம் பெற்று விளங்கி கல்லூரியின் புகழை நிலைநாட்டிவருகின்றவருமாகிய மருத்துவகலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் அவர்களால் ஒன்றரை மில்லியன் ரூபா நிரந்தர வைப்பிலிடப்பட்டு 2014ஆம் ஆண்டு பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஒத்துழைப்புடன் நிறுவப்பட்டதே 'மருத்துவகலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்' ஆகும். 

காரைநகரில் சட்டரீதியாக அமைந்து விளங்கும் ஒரே நம்பிக்கை நிதியம் (Charitable Trust Fund)  என்ற பெருமையைப்பெற்றுள்ள இந்நிதியத்திலிருந்து பெறப்படுகின்ற வருடாந்த வட்டிப் பணம் கல்லூரியின் வருடாந்த பரிசில் தினத்தினை  தங்குதடையின்றி காலாகாலமாக தொடர்ந்து நடாத்துவதற்கான ஏற்பாடுகள் இந்நிதியத்தின் ஊடாக செய்யப்பட்டுள்ளது. இந்நிதியத்தின் நிறுவுநரோ அன்றி கல்லூரியின் விசுவாசிகள் எவருமோ விரும்பும் சமயத்தில் இந்நிதியத்தில்  மேலும் வைப்பீடு செய்யமுடியும் என சட்டஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாட்டுக்கு அமைய மேலதிகமாக அரை மில்லியன் ரூபாவினை நிதியத்தின் நிறுவுநர மருத்தவகலாநிதி; வி.விஜயரத்தினம் அவர்கள் வைப்பிலிட முன்வந்து அத்தொகையினை வங்கிக்கு அனுப்பிவைத்துள்ளார். இதன்மூலம் நிதியத்தின் வைப்புத்தொகை இரண்டு மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது. இந்நிதியத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ளப்படும் வட்டித்தொகையிலிருந்து பரிசில் தினத்திற்கு ஏற்படும் செலவுகளை ஈடுசெய்தபின்னர் உள்ள மிகுதிப்பணத்தினை கல்லூரியின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தமுடியும் என்கின்ற ஏற்பாடும் நிதியத்தின் சட்ட ஆவணத்தில் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

கல்லூரியின் வளர்ச்சியில் அக்கறைகொண்டு உதவிவருகின்ற மருத்துவகலாநிதி வி.விஜயரத்தினம் அவர்களை  கல்லூரிச் சமூகமும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையும் பாராட்டி நன்றிகூறுகின்றது.

அமரர் கலாநிதி ஆ.தியாகராசாவின் அளப்பரிய பணிகள் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டு சிறப்புற்று விளங்கிய நூற்றாண்டு விழா

IMG_0174

அமரர் கலாநிதி ஆ.தியாகராசாவின் அளப்பரிய பணிகள் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டு சிறப்புற்று விளங்கிய நூற்றாண்டு விழா

காரைநகர் இந்துக் கல்லூரியின் வெள்ளி விழா அதிபரும் மக்கள் நலன்பேண அர்ப்பணிப்போடு அல்லும் பகலும் ஓயாது செலாற்றிய காரை மண்ணின் ஒப்பற்ற சேவையாளருமாகிய அமரர் கலாநிதி ஆ.தியாகராசாவின் நூற்றாண்டு விழா சனிக்கிழமை(11.06.2016) மாலை செல்வச் சந்நிதி முருகன் கோவில் திருமண மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றிருந்தது. 

பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளையினால் மிகவும் நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்டு நடத்தப்பட்டிருந்த இவ்விழாவில் அமரர் தியாகராசா அவர்களின் நிர்வாகத்திறமையும் அர்ப்பணிப்பும்மிக்க சேவையினால் உன்னதமான நிலையைப் பெற்று விளங்கிய கல்லூரியினால் உருவாக்கப்பட்டிருந்த கல்வியாளர்களஇ; பல்துறை சார்ந்த அறிஞர்களஇ; சாதனையாளர்கள்இ காரை மண்ணின் அபிமானிகள் எனக் குறிப்பிடத்தக்க அளவிலான மக்கள் கலந்து கொண்டு காரை மண்ணிற்கு ஒளியேற்றியதுடன் நாட்டு மக்களுக்காகவும் உழைத்த ஈடு இணையற்ற சேவையாளரை நினைவு கூர்ந்து மதிப்பளித்தனர்.

பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் தலைவரும் ஓய்வு நிலை ஆசிரியருமாகிய திரு.தம்பையா அம்பிகைபாகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவினை கல்லூரி உதை பந்தாட்ட அணியின் முன்னாள் வீரரும் நில அளவைத் திணைக்கள ஓய்வு நிலை அலுவலருமாகிய திரு.பொன்னையா தியாகராசாவும் பாரியாரும்  S.P.S. நினைவு உதவித் திட்டத்தின் அனுசரணையாளர் திரு.சுப்பிரமணியம் அரிகரனும் பாரியாரும் மங்கள விளக்கேற்றி வைத்ததைத் தொடர்ந்து பிற்பகல்3.00 மணிக்கு விழா ஆரம்பமாகியது. 

சிவநெறிச்செல்வர் தி.விசுவலிங்கம் திருமுறை ஓதி கடவுள் வணக்கம் செய்யப்பட்டதுடன் அக வணக்கமும் இடம்பெற்றது. தொடர்ந்து  கல்லூரியின் இசை ஆசிரியைகளான திருமதி கலாசக்தி றொபேசன் திருமதி பங்கையற்செல்வி முகுந்தன் ஆகியோர் இணைந்து பாடி பதிவுசெய்யப்பட்டிருந்த 'தாய் மலரடி பணிவோம்'; என ஆரம்பிக்கும் கல்லூரிப் பண் ஒலி பரப்பப்பட்டபோது சபையினர் எழுந்து நின்று தாம் கற்று வளம்பெற்ற கல்லூரிக்கு மதிப்பளித்தனர்.

அமரரின் திருவுருவப் படத்திற்கு பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் கணக்காய்வாளரும் துறைமுக அதிகார சபையின் ஓய்வுநிலை அதிகாரியுமாகிய திரு.கந்தப்பு அம்பலவாணர் மலர் மாலை அணிவித்தார்.  

பழைய மாணவர் சங்கத்தின் உப-தலைவர் திரு.நாகலிங்கம் குஞ்சிதபாதம் விருந்தினர்களையும் சபையோரையும் வரவேற்று உரையாற்றியதை அடுத்து தலைவரது உரை இடம்பெற்றது. 

இதனையடுத்து அமரரின் வாழ்க்கை வரலாறுஇ கல்லூரியின் அதிபராக 25ஆண்டுகள் ஆற்றிய பணிகள்இ பொதுப்பணிஇ ஊருக்கான பணி என்பனவற்றை உள்ளடக்கி அவ்வப்போது வெளிவந்திருந்த ஆக்கங்களைத் தாங்கிய ஆவணப்படுத்தும் வகையிலான விழா மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. இம்மலரின் வெளியீட்டுரையினை பழைய மாணவர் சங்கத்தின் செயலாளரும் மலரின் தொகுப்பாளருள் ஒருவருமாகிய திரு.கனக சிவகுமாரன் நிகழ்த்தியதைத் தொடர்ந்து சங்கத்தின் பொருளாளரும் மலரின் மற்றைய தொகுப்பாளருமாகிய திரு.மாணிக்கம் கனகசபாபதி முதற் பிரதியை  Double Seal Insulating அதிபரும் பழைய மாணவர் சங்கத்துடன் இணைந்து பாடசாலை வளர்ச்சிக்கு உதவி வருபவருமாகிய தொழிலதிபர் திரு.மகாதேவன் பாலசுப்பிரமணியம் அவர்களுக்கும் கௌரவ பிரதியை அமரரின் உறவினரும் பழைய மாணவருமாகிய திரு.கந்தசாமி தேவகுமார் அவர்களுக்கும் வழங்கி வெளியிட்டுவைக்கப்பட்டது.. அமரர் பல துறை சார்ந்து பரந்து பட்ட சேவையினை சமூகத்திற்காக வழங்கியிருந்தார் எனவும் இவை குறித்து தனித்தனியாக ஆராயப்பட்டு ஆவணப்படுத்தும்வகையிலான ஓரு முழுமையான நூல் எதிர்காலத்தில் வெளிவருவதற்கான முதற்படியாக இம்மலரின் வெளியீடு; அமையும் என்ற நம்பிக்கையை திரு கனக சிவகுமாரன் தனது வெளியீட்டுரையின்போது வெளிப்படுத்தியிருந்தார்.

தமது மருத்துவ சேவையினாலும் சமூக உணர்வினாலும் காரைநகர் மக்கள் மத்தியில் மட்டுமல்லாது கனடா வாழ் தமிழ் சமூகத்தின் நன்மதிப்பையும் பெற்று கல்லூரியின் புகழை நிலைநாட்டி வருகின்ற கனடாவின் பிரபல குழந்தைகள் மருத்துவ நிபுணர் மருத்துவகலாநிதி விசுவலிங்கம் விஜயரத்தினம் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார். அதே போன்று கல்லூரியின் மற்றுமொரு மகிமை மிக்க பழைய  மாணவரும் சிறந்த கல்வியாளருமாகிய பேராசிரியர் கலாநிதி தில்லைநாதன் சிவகுமாரன் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு விழாவிற்கு பெருமை சேர்த்தார். கல்லூரியின் புகழை நிலைநாட்டி வருகின்ற பழைய மாணவரும் கனடாவின் பிரபல பல் மருத்துவ நிபணரும் சமய உணர்வாளருமாகிய பல்மருத்துவகலாநிதி ஆதிகணபதி சோமசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழாவினை மேலும் மேன்மையுறச் செய்தார்.

பிரதம விருந்தினர் மருத்துவகலாநிதி விஜயரத்தினம் உரையாற்றுகையில் அமரர் தியாகராசா உயர்ந்த கல்வித் தகைமைகளைக் கொண்டு சிறந்த கல்வியாளராக விளங்கி காரைநகருக்கு பெருமை சேர்த்தவர் என்பதுடன் காரைநகர் இந்துக் கல்லூரியில் 25ஆண்டுகள் அதிபராக பதவி வகித்தும் பின்னர் பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதியாக பதவி வகித்தும் ஆற்றிய அளப்பரிய பணிகள் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பெற்று விளங்குகின்றார் எனக் குறிப்பிட்டார.; அதிபராக இருந்த காலத்தில் கல்வித்தர விருத்தியில் எவ்வளவு கவனம் செலுத்திச் செயற்பட்டாரோ அதேயளவு கவனத்தினை மாணவர்களின் ஒழுக்கத்திற்கும் வழங்கி செயலாற்றியிருந்ததுடன் இதனை ஊக்குவிக்கும் வகையில் ஒழுக்கத்தில் சிறந்த மாணவர்களை தெரிவு செய்து பரிசில்கள் வழங்கி வந்துள்ளார். கர்நாடக சங்கீதத்தை முறையாகப் பயின்ற இவர் ;தாம் ;கல்வி பயின்ற காலத்தில் பாடசாலையில்  கச்சேரி செய்து மற்றையவர்களை மகிழ்வித்தவர் எனவும் மருத்துவகலாநிதி விஜயரத்தினம் தமது உரையில் மேலும் குறிப்பிட்டார்.

விழா சிறப்புற பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கம் அனுப்பி வைத்த வாழ்த்துச் செய்தியை பழைய மாணவர் சங்க நிர்வாக உறுப்பினர் திருமதி.கருணாவதி சுரேந்திரகுமார் விழா அரங்கில் வாசித்தார்.

கௌரவ விருந்தினர் பேராசிரியர் கலாநிதி தில்லைநாதன் சிவகுமாரன் உரையாற்றுகையில் அமரர் தியாகராசா அதிபராக சேவையாற்றிய காலத்தில் பாடசாலையின் உயர்வுக்காக இவர் ஆற்றிய சாதனைப் பணிகள் இவரது சேவைக் காலத்தை பொற்காலமாக அடையாளப்படுத்துவதாக உள்ளது எனக் குறிப்பிட்டதுடன் தமது வாழ்நாளின் பிற்பகுதியில் கல்வியைத் தொடர்ந்து கற்று பொருளாதாரத் துறையில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றதன் மூலம் கல்வியானது ஒருவரது வாழ்நாள் முழுவதற்குமானது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் என்பதுடன் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதம் பாராது அனைவரையும் சமமாக மதித்து செயலாற்றியவர் எனவும் குறிப்பிட்ட சிவகுமாரன,; தமது உரையின் இறுதியில் அமரரின் பெருமைகளை கவிதை வடிவில் சபையில் சமர்ப்பித்தமை உணர்வுபூர்வமாக அமைந்திருந்தது.

காரை அபிவிருத்தி சபை வழங்கிய வாழ்த்துச் செய்தியை பழைய மாணவர் சங்க நிர்வாக  உறுப்பினர் திருமதி.பிரபா ரவிச்சந்திரன் விழா மேடையில் வாசித்தார். 

சிறப்பு விருந்தினர் பல்மருத்துவகலாநிதி ஆதிகணபதி சோமசுந்தரம் தமது உரையில் அமரர் தியாகராசா காரை மண்ணுக்கு ஒளியேற்றி வைத்து தீர்க்கதரிசனத்துடன் செயலாற்றிய கர்மவீரர் என்பதுடன் காரை மண்ணில் தோன்றிய சேவையாளர்களுள் முதன்மையானவராக விளங்கி வரலாற்றில் இடம்பெற்றுள்ளார் எனக் குறிப்பிட்டதுடன்  அமரரால் தரமான கல்வியை வழங்கும் பாடசாலையாக மாற்றியமைக்கப்பட்ட இந்துக் கல்லூரியிலிருந்து தாம் பல்மருத்துவத் துறைக்கு தெரிவு செய்யப்பட்டதை பெருமையுடன் குறிப்பிட்டதுடன் அக்காலகட்டத்தில் அதிக அளவு மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டதையும் நினைவு கூர்ந்திருந்தார். அமரர் தியாகராசா பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் காரைநகர் மக்களுக்கு ஆற்றிய அளப்பரிய சேவைகளை அட்டவணைப்படுத்தி உணர்வுபூர்வமாக ஆற்றிய மருத்துவகலாநிதி ஆதிகணபதியின் விரிவான உரையானது தாம் நேசித்த மக்களுக்காக இத்துணைப் பணிகளை வெற்றிகரமாக சாதித்தாரே என சபையோரை ஒரு கணம் வியக்கவைத்து சிந்திக்கவும் வைத்தது எனலாம்.

பழைய மாணவர் சங்கத்தின் போசகரும் கனடா சைவ சித்தாந்த மன்றத்தின் தலைவரும் ஓய்வுநிலை பிரபல ஆசிரியருமாகிய சிவநெறிச்செல்வர் தில்லையம்பலம் விசுவலிங்கம், கனடா-காரை கலாச்சார மன்றத்தின் தலைவரும் கணக்காளரும் கல்லூரியின் பழைய மாணவருமாகிய திரு.தம்பிஐயா பரமானந்தராசாஇ  பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஓய்வுநிலை உதவி நிலஅளவையாளர் நாயகமுமான திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளைஇ கல்லூரியின் மூத்த பழைய மாணவரும் துறைமுக அதிகார சபையின் பிரதம காசாளருமாகிய திரு.முருகேசு சின்னத்துரைஇ வாட்டலூ பல்கலைக்கழக இணைப்பேராசிரியரும் சமூக ஆர்வலருமாகிய கலாநிதி தம்பிராசா ரவிச்சந்திரன் ஆகியோர் அமரர் கலாநிதி ஆ.தியாகராசா மக்களுக்காக விட்டுச்சென்ற வரலாற்றுப் பணிகளை பல்வேறு கோணங்களிலிருந்தும் நோக்கி உரையாற்றியிருந்தனர்.

இங்கு உரையாற்றிய பலரும் அமரர் தியாகராசாவின் நூற்றாண்டு விழாவினை ஏற்பாடு செய்தமைக்காக பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளையினைப் பாராட்டி நன்றி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வுரைகளின் இடையே கல்லூரியில் நடைபெற்ற அமரரின் நூற்றாண்டு விழாவின்போது கல்லூரியின் முதுநிலை மாணவ முதல்வரும் அறிவிப்பாளருக்கான தேசிய நிலை போட்டியாளருமாகிய செல்வன் விநோதன் கனகலிங்கம் ஆற்றிய உரையின் காணொளி ஒளிபரப்பப்பட்டிருந்தது.

சிறந்த பேச்சாளராக மிளிர்ந்து வருகின்ற செல்வன் விநோதன் அமரரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அன்னாரது வரலாற்றுப் பணிகளை தனது பேச்சாற்றல் ஊடாக வெளிப்படுத்தியிருந்த பாணி சபையோரை வெகுவாக கவர்ந்திருந்தது. 


பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினரும் முன்னாள் இலங்கை வங்கி அதிகாரியுமான திரு.கனகரத்தினம் சிவபாதசுந்தரம் அவர்களின் நன்றியுரையைத் தொடர்ந்து சிவநெறிச்செல்வர் தி.விசுவலிங்கம் அவர்களின் திருமுறை ஓதலுடன் சிறப்புற்று விளங்கிய அமரர் கலாநிதி தியாகராசாவின் நூற்றாண்டு விழா நிறைவுற்றது.

படங்கள்: திரு.திருவேங்கடம் சந்திரசோதி

செய்தி பிரதியாக்கம்: திரு.கனக.சிவகுமாரன்

விழாவில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம். 

கனடாவில் நடைபெற்ற கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா

' †

‘ †

கனடாவில் நடைபெற்ற கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா

காரைநகர் இந்துக் கல்லூரியின் வரலாற்று அதிபர்,வெள்ளி விழா அதிபர் அமரர்.கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை(11.05.2016) அன்று கனடா செல்வச் சந்நிதி கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு.த.அம்பிகைபாகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக பிரபல குழந்தைகள் மருத்துவ நிபுணர் மருத்துவ கலாநிதி.வி.விஜயரத்தினம் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார். 

கல்வியாளர்களும் காரைநகர் மக்களும் கலந்து கொண்ட இவ்விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

விழா பற்றிய முழுமையான விபரம் பின்னர் எடுத்து வரப்படும். 

நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களின் தொகுப்பைக் கீழே காணலாம். 

காலத்தால் அழியாத(து)தியாகம்

               காலத்தால் அழியாத(து)தியாகம்

Mrs.Vasuhi.06.2016DR.A.THIYAGARAJAH

காரை இந்துவின் அதிபர் திருமதி வாசுகி தவபாலன் வாழ்த்துகின்றார்

காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையினர் அமரர் கலாநிதி ஆ. தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிட இருக்கும் நூற்றாண்டு விழா மலரிற்கு வாழ்த்துச் செய்தியை வழங்குவதில் பெருமகிழ்வடைகின்றேன்.
    
1916 ஏப்பிரல் 17ஆம் திகதி பிறந்த ஆ.தியாகராசா அவர்கள் 1981ஆம் ஆண்டு தனது 65ஆவது அகவையில் இறைபதம் அடைந்தார். அமரர் தியாகராசா அவர்கள் இப்பூவுலகைவிட்டு மறைந்து 35 வருடங்கள் கடந்த பின்னரும் அவரது 100ஆவது அகவையை நினைவுபடுத்தி வெகுசிறப்பாக நூற்றாண்டு விழாவை நன்றிப ;பெருக்கோடு மூன்றாவது அரங்கிலே கொண்டாடப்படுவது கண்டு மகிழ்வடைகின்றேன். 
ஒருவர் மறைந்த பின்னரும் அவரது நினைவாக விழா எடுப்பதாக இருந்தால்,அவர் வள்ளுவரின்,

                    "வையத்துள் வாழ்வாங்குவாழ்பவர் வானுறையும் 
                                 தெய்வத்துள் வைக்கப்படுவர்"

எனும் குறளுக்கமைய வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த பெரியாராகப் பார்க்கின்றேன்.

    அமரர் தியாகராசா அவர்கள் 29 வருடகாலம் தொடர்ச்சியாகக் கல்விப் பணியாற்றிய காரைநகர் இந்துக் கல்லூரியின் சமூகம் அவரது 100ஆவது அகவை தினத்திலே (17.4.2016) நுற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடியது. அடுத்து காரைநகர் வெற்றிநாதன் அரங்கிலே அமரர் தியாகராசா அவர்களின் அன்பர்கள்,ஆதரவாளர்கள் விழா எடுத்திருந்தார்கள். தொடர்ச்சியாக கனடா வாழ் காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்களும் அமரர் தியாகராசாஅவர்களின் சீடர்களும் இணைந்து இப் பெருவிழர எடுப்பது கண்டு மகிழ்வடைகின்றேன்.

    அமரர் தியாகராசா அவர்களிற்கு ஏன் இவ்வளவு பெரியஅளவில் விழா எடுக்கின்றார்கள் என்று சிந்தித்தால்,அவர் தான் வாழ்ந்த காலத்தில் இப்பூவுலகிற்கு விட்டுச் சென்ற சேவைகள் பற்பல. ஒருதுறை சார்ந்து அவருடைய பணிகள் நின்றுவிடவில்லை. ஆன்மீகப்பணி,கல்விப்பணி,பொருளாதாரப்பணி,சமூகப்பணி,அரசியற்பணி என்ற வகையில் அவருடைய செயற்பாடுகள் ஆழ்ந்து அகன்று இருந்ததைக் காணலாம்.

    அமரர் தியாகராசாஅவர்கள் மலேசியா,சிங்கப்பூர், இந்தியா எனபல நாடுகளிலும் தனது கல்வியைப் பூர்த்திசெய்து B.A., M.A, M.Lit பட்டதாரியாகத் தாயகம் திரும்பி 1941இல் காரைநகர் இந்துக் கல்லூரியில் ஆசிரியராக இணைந்து தனது கல்விப் பணியை ஆரம்பித்தார். தொடர்ந்து நான்கு வருடங்கள் ஆசிரியராகப் பணியாற்றும் காலத்தில் அப்போதிருந்த அதிபர் திரு ஆ.கனகசபை அவர்கள் ஓய்வுபெற 1946ஆம் ஆண்டு கல்லூரியைத் தலைமை தாங்கி நடத்தும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அக்காலத்தில் யோகர் சுவாமிகளிடம் ஆசிபெற்ற பேப்பர் சுவாமிகள் கோவளத்தில் ஆச்சிரமம் அமைத்துத் தங்கியிருந்தார். ஆன்மீகத்தில் ஈடுபாடுகொண்ட தியாகராசா அவர்கள் பேப்பர் சுவாமிகளிடம் ஆசிபெற்று கல்லூரியைப் பொறுப்பெடுத்தார் எனவும்,பேப்பர் சுவாமிகள் 'காரைநகர் இந்துக் கல்லூரியை விருட்சம் போல் வளர்த்தெடு'எனஆசி வழங்கியதாகவும் நூல்கள் குறிப்பிடுகின்றன. அதேபோல் கல்லூரி வளர்ச்சிக்கு அல்லும் பகலும் சுமார் 25வருடங்கள் பாடுபட்டு பௌதிக வள விருத்தி,கல்வி அபிவிருத்தி, இணைப்பாடவிதான அபிவிருத்திப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு மக்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துக் கொண்டார். இவருடைய காலத்திலேயே கல்லூரிக்கு விஞ்ஞான ஆய்வுகூடம், நூலகம்,மனையியல் கூடம்,நடராசா ஞாபகார்த்த மண்டபம்,சயம்பு மண்டபம்,விளையாட்டு மைதானம் போன்ற வளங்கள் பாடசாலைக்குக் கிடைக்கப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் 25வருட கால சிறப்பான அதிபர் சேவை காரணமாக வெள்ளிவிழாஅதிபர் எனபோற்றும் அளவிற்கு கல்லூரியில் கல்விக்காக ஆற்றிய அளப்பரிய பணிகள் காரணமாக வரலாற்றில் நீங்கா இடம பிடித்தக் கொண்டார்.

    தனது 57ஆவது வயதில் கல்லூரியின் அதிபர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்று அரசியல் பணியில் தன்னை இணைத்துக் கொண்டு காரைநகரின் பொருளாதார,சமூக அபிவிருத்திக்காக அரும்பாடுபட்டார். காரைநகர் மக்களிற்கு போக்குவரத்துசேவை,மின்சாரவசதி போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுத்தது மட்டுமன்றி பலரிற்கு வாழ்வாதாரத்திற்கான அரசதொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுத்து மக்களை மகிழ்வித்தார்.

    காரைநகரின் புவியியல் அமைப்பை  தூர நோக்குடன் சிந்தித்த அவர் எதிர்காலத்தில் நிலத்தடிநீர் உவர்நீராக மாறாதிருக்க மழைநீரைத் தேக்கும் திட்டத்திற்காக வேணண் அணையைக் கட்டுவித்தார். இத்தகைய பல சமூக சேவைகளைச் செய்த பெரியார் தியாகராசாஅவர்களின் தனித்துவம் என்னவென்றால்,பொதுவாக சமூகப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வோர் தமது குடும்பநலனில் அதிக அக்கறை கொள்ளமாட்டார்கள். ஆனால் தியாகராசாஅவர்கள் அவ்வாறன்றி தனது குடும்பத்தையும் நல்நிலை அடையச் செய்துள்ளார் என்பது அவரின் பிள்ளைகள் மூலம் அறியக்கிடக்கின்றது.

                                    "தக்கார் தகவிலார் என்பதுஅவரவர்
                                             ஏச்சத்தால் சுட்டப்படும் "

எனும் வள்ளுவர் வாக்கிற்கு இணங்க தனது பிள்ளைகளையும் கற்பித்து நன்னிலைக்குக் கொண்டுவந்துள்ளார். அவர் பிள்ளைகளுடன் எவ்வாறு அன்பாகப் பண்பாக வாழ்ந்தார் என்பதை அவரது பிள்ளைகள் தொடர்ந்தும் அவரது பணியைத் தொடர்வதனூடாகக் காணக்கூடியதாக உள்ளது. அவரது புதல்வி திருமதி மங்கயர்க்கரசி சபாரத்தினம் அவர்கள் அமரர் தியாகராசா அவர்களின் ஞாபகார்த்தமாக அமரர் ஆ. தியாகராசா ஞாபகார்த்த புலமைப ;பரிசில் நிதியத்தை ஆரம்பித்து காரைநகர் வாழ் ஏழைச் சிறார்களின் கல்விக்கு ஆதரவு அளித்து வருகின்றார்கள். 

திருமதி புனிதம் செல்வராஜா  அவர்களும் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் அடிக்கடி தாயகம் வந்து சமூகசேவைச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதைக் காண்கின்றோம்.

    அந்தவகையில் அமரர் தியாகராசா அவர்களை எம்மக்கள் என்றென்றும் மறக்கமாட்டார்கள். ஏம்மத்தியில் இருந்து மறைந்தாலும் அவரது அளப்பரிய தியாகப் பணிகள் காலத்தால் அழியாத தியாகமாக எனறும் எம்மக்கள் மத்தியில் நிலைத்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை. அத்தகைய தியாகச் செம்மலிற்கு அவரது நூறாவது அகவையில் நன்றி கூருமுகமாக அவரது காலத்தால் அழியாத அளப்பரிய சேவைகளைத் தாங்கிய நூற்றாண்டு விழா மலரை வெளியிடுவது கண்டு மகிழ்வடைகின்றேன். இம்மலர் சிறப்பாக மலர வாழ்த்துவதுடன்,விழா சிறப்புற அமையவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.


திருமதி வாசுகி தவபாலன்

அதிபர்

காரைநகர் இந்துக் கல்லூரி

Greeting Dr.A.T 100th Vasuhi Book-page-001

 

 

அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவுவிற்கு காரைநகர் அபிவிருத்திச் சபை விடுத்துள்ள வாழ்த்துச்செய்தி

KWS Logo

அமரர் கலாநிதி ஆ தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் கனடா அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவினை பல்துறை அறிஞர்களின் பங்களிப்புடன் கனடாவில் கொண்டாடுவதையிட்டு காரைநகர் அபிவிருத்திச் சங்கம் மகிழ்வடைகின்றது.

அமரர் அவர்களின் 100வது விழா அவர் 25ஆண்டுகள் அதிபராக பணியாற்றிய காரைநகர் இந்துக் கல்லூரியில் 17-04-2016 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.  அந்த நிகழ்வில் பல கோணங்களில் அவரது பணிகள் பலராலும் நினைவுகூரப்பட்டது. காரைநகரின் அடையாளத்தை பலதுறையில் ஐந்து தசாப்த காலம் நிலைநிறுத்தியவர் அமரர் தியாகராசா அவர்கள்.

காரைநகர் அபிவிருத்தியின் முன்னோடியாகத் திகழ்ந்து அவரின் சிந்தனையின் அடிப்படையில் எமது ஊரை வளப்படுத்துவதே நாம் அவருக்கு செய்யும் கைமாறு ஆகும். மனிதருள் மாணிக்கமாக திகழ்ந்த அமரர் தியாகராசா அவர்கள் எப்பொழுதும் எம்மக்களின் நினைவில் போற்றி வணங்கக்கூடியவர் என்றால் மிகைஒன்றும் 'இல்லை.

அவரைச் சிறப்பித்து விழா எடுக்கும் கனடா காரை இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்திற்கு எமது உளம் கனிந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.


ப.விக்கினேஸ்வரன்              இ.திருப்புகழூர்சிங்கம்                  க.பாலச்சந்திரன்
தலைவர்                                         செயலாளர்                                   பொருளாளர

 

தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/06/Doc1-scan.pdf

 

அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவிற்கு பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கத்தின் வாழ்த்துச் செய்தி

UK LOGO
அன்பார்ந்த காரை.இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்-கனடா தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாக உறுப்பினர்களிற்கு,
 
 அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா
 
 காரைநகர் இந்துக் கல்லூரியின் செழிப்பு, காரை மக்களின் நலன் ஆகியவற்றை தமது பிரதான இலட்சியங்களாகக் கொண்டு அவற்றினை மேம்படுத்த ஓயாது உழைத்தவரும்,  காரை மண்ணின் ஒப்பற்ற சேவையாளருமான அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவினை காரை.இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்-கனடா நடாத்துவதையிட்டு நாம் எல்லோரும் பெருமிதம் அடைகிறோம்.
 
 அன்னாரின் பணியினை அனைத்து காரை மக்களும் தொடர்ந்து பேணுவார்கள் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் இவரின் பணிகள் காரைநகரை எல்லோரும் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு கொண்டு சென்றதென்றால் அது மிகையாகாது. அன்னாரின் அளப்பெரிய பணிகளை இந்த நூற்றாண்டு விழா மூலம் மீண்டும் மீட்டிப் பார்ப்பதற்கு வழிசமைத்த காரை.இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்-கனடா நிர்வாகத்தினரின் இந்த முயற்சி எல்லோராலும் பாராட்டப்பட வேண்டியதே!
 
 இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணத்தில் பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம் தனது வாழ்த்துச் செய்தியினை பகிர்ந்து கொண்டு இந்த விழா சிறப்புற அமைய பிரித்தானிய வாழ் காரை மக்கள் மற்றும் காரை.இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் சார்பில் மனதார வாழ்த்துகிறோம்.
 
 நன்றி.
நிர்வாகம்
பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம்  

KWSUK-KaraiHinduCollege-OSA-Canada-100thAnniversary-of-Dr-Thijagaraja-07062016

 

அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா, எதிர்வரும் 11ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2.30மணிக்கு Brimley&Ellesmere சந்திப்பில் அமைந்துள்ள கனடா செல்வச் சந்நதி ஆலய திருமண மண்டபத்தில் நடைபெறும்.

              அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா

காநைகர் இந்துக் கல்லூரியின் செழிப்பு, காரை மக்களின் நலன் ஆகியவற்றை தமது பிரதான இலட்சியங்களாகக் கொண்டு அவற்றினை மேம்படுத்த இறுதி மூச்சு வரை ஓயாது உழைத்த வெள்ளி விழா அதிபர், காரை மண்ணின் ஒப்பற்ற சேவையாளர் அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவில் தாங்கள் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்பாக வேண்டிக்கொள்கின்றோம்.

இவ்விழா எதிர்வரும் 11ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2.30மணிக்கு Brimley&Ellesmere  சந்திப்பில் அமைந்துள்ள கனடா செல்வச் சந்நதி ஆலய திருமண மண்டபத்தில் நடைபெறும்.

விழாவின் நிகழ்ச்சி நிரல் இத்துடன் இணைப்பாக அனுப்பிவைக்கப்படுகின்றது.

                     நன்றி.
காரை.இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்-கனடா

Anniversary Agenda of Late Dr.A.Thiyagarajah (1)

பழைய மாணவர் சங்க கனடா கிளையின் ஏற்பாட்டில் சுப்பர் சிங்கர் புகழ் சாயி விக்னேஸின் கர்நாடக இசைக் கச்சேரி

பழைய மாணவர் சங்க கனடா கிளையின் ஏற்பாட்டில் சுப்பர் சிங்கர் புகழ் சாயி விக்னேஸின் கர்நாடக இசைக் கச்சேரி

SaiVigneshVijaytv1

விஜே ரிவியின் சுப்பர் சிங்கர்-4 போட்டியில் பங்கு பற்றி முன்னணி போட்டியாளர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டதுடன் கர்நாடக இசை ரசிகர்களின் அமோக வரவேற்பினைப் பெற்றவரான சாயி விக்னேஸ்; காரைநகர் இந்துக் கல்லூரி மேம்பாட்டு நிதிக்காக கர்நாடக இசைக் கச்சேரியினை நிகழ்த்தும் பொருட்டு எதிர்வரும் செப்ரம்பர் மாதம் கனடாவிற்கு வருகை தரவுள்ளார். 

காரைநகர் இந்துக் கல்லூரி மேம்பாட்டு நிதிக்காக பழைய மாணவர் சங்க கனடா கிளையின் ஏற்பாட்டில் ஸ்காபுரோவில் செப்ரெம்பர் மாதம் 17ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள சாயி விக்னேஸின் கர்நாடக இசைக் கச்சேரி கனடாவில் நடைபெறும் இவரது முதல் கர்நாடக இசை நிகழ்வு என்பதால் கர்நாடக இசை ரசிகர்களிற்கு அரிய வாய்ப்பாகவும் பெரு விருந்தாகவும் அமையவுள்ளது. 

சுப்பர் சிங்கர்-4 போட்டியில் கர்நாடக இசைப் பாடல்களைப் பாடி இலட்சக்கணக்கான விஜே தொலைக்காட்சி ரசிகர்களை அசத்தியிருந்ததுடன் இவரது கர்நாடக இசை ஆற்றல் சுப்பர் சிங்கர் நடுவர்களினால் வெகுவாகப் பாராட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

அமரர்.கலாநிதி.ஆ.தியாகராசா நூற்றாண்டு விழா

Dr.A.Thiagarajah-flyer

காரை இந்து அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளைக்கு நன்றியும் வாழ்த்தும்

காரை இந்து அதிபர் திருமதி.வாசுகி தவபாலன்பழைய மாணவர் சங்கக் 

கனடாக் கிளைக்கு நன்றியும் வாழ்த்தும்

H

காரைநகர் இந்துக் கல்லூரியின் வளர்ச்சிக்கு சகல வழிகளிலும் உறுதுணை புரிந்து வரும் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் நிர்வாக உறுப்பினர்களுக்கும் அவர்களுக்கு பல்வேறு வகையிலும் அனுசரணை வழங்கும் கனடா வாழ் பழைய மாணவர்களுக்கும், நலன்விரும்பிகளுக்கும் கல்லூரி சார்பாக தமது நன்றியை அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்கள் தெரிவித்துள்ளார். 

பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபைத் தேர்வும் நடைபெறுவதனை முன்னிட்டு கடந்த வாரம் கனடாக் கிளைக்கு அனுப்பி வைத்த கடிதத்திலேயே அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

மேலும் கடந்த மூன்று வருட காலத்தில் காரைநகர் இந்துக் கல்லூரி அனைத்து வழிகளிலும் மேன்மையடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள திருமதி.தவபாலன், பாடசாலையின் தேசிய மட்ட, மாகாண மட்ட சாதனைகளையும் பட்டியலிட்டு, இவ் அனைத்து வெற்றிகளுக்கும் பின் இருந்து உத்வேகம் வழங்கி உதவிய பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் செயற்பாடுகளைப் பாராட்டியுள்ளார். 

பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளை வழங்கிய உதவித்திட்டங்களைக் குறிப்பிட்டுள்ளதுடன், பாடசாலை தொடர்பான செய்திகளை வெளியிட்டு கல்லூரியின் புகழை உலகெங்கும் பரப்பி வரும் http://www.karaihinducanada.com/​ இணையத்தள சேவைக்கும் தமது நன்றியினைத் தெரிவித்துள்ளார். அதேவேளையில் தெரிவாகியுள்ள புதிய நிர்வாக சபையின் பணி சிறப்புற தமது வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார்.

 

காரை இந்து அதிபரின் முழுமையான வாழ்த்துச் செய்தியைக் கீழே காணலாம். 

 

 

 

 

 

H1

H2

 

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடா கிளையின் ஆண்டுப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும்

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடா கிளையின் ஆண்டுப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும்

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடா கிளையின் நான்காவது ஆண்டுப் பொதுக் கூட்டம் கனடா செல்வச்சந்நிதி முருகன் கோவில் திருமண மண்டபத்தில் (30-04-2016) அன்று சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணிக்கு நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்பிரல் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னதாக ஆண்டுப் பொதுக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்ற சங்க யாப்பு விதிக்கு அமைவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்பொதுக் கூட்டம் முன்னாள் இலங்கை பிரதி நிலஅளவையாளர் நாயகமும் சங்கத்தின் தலைவருமாகிய திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இருபத்தைந்து வரையான சங்கத்தின் உறுப்பினர்கள் இக் கூட்டத்திற்கு சமூகமளித்திருந்தனர். திரு. தம்பையா அம்பிகைபாகன் அவர்களின் கடவுள் வணக்கத்தைத் தொடர்ந்து எமது பாடசாலை சமூகத்தைச் சேர்ந்து அமரத்துவம் அடைந்தோரை நினைவு கூர்ந்தும் சபையில் அக வணக்கம் செலுத்தப்பட்டது.

அடுத்து அமரர் சங்கீதபூசணம் காரை ஆ. புண்ணியமூர்த்தி அவர்களினால் இசைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டிருந்த 'தாய் மலரடி பணிவோம்' எனத் தொடங்கும் கல்லூரிப் பண் ஒலிபரப்பப்பட்டபோது சபையினர் எழுந்து நின்று பாடசாலை அன்னைக்கு வணக்கம் செலுத்தினர்.

தலைவர் திரு.மு.வேலாயுதபிள்ளை அவர்கள் தமது தலைமை உரையில், சென்ற ஆண்டு சங்கம் பாடசாலையின் முக்கியமான தேவைகளை நிறைவு செய்ய உதவியதுடன் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையிலான உதவிகளையும் வழங்கி சிறப்பாக செயற்பட்டிருந்தமை குறித்து தமது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியிருந்ததுடன் இவற்றிற்கு மூலகாரணமாகவிருந்து ஆதரவளித்த சங்க உறுப்பினர்கள் நலன் விரும்பிகள் அனுசரணையாளர்கள் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். தாம் அண்மையில் பாடசாலைக்குச் சென்று அதிபர் திருமதி.வாசுகி தவபாலன், பதில் அதிபர் திருமதி.கலாநிதி சிவநேசன் மற்றும் பழைய மாணவர் சங்க நிர்வாகிகளைச் சந்தித்து கலந்துரையாடியமை குறித்த பல்வேறு விடயங்களையும் சபையில் பகிர்ந்துகொண்டார்.

தலைவர் உரையைத் தொடர்ந்து செயலாளர் திரு. கனக சிவகுமாரன் சென்ற பொதுக் கூட்ட அறிக்கையினையும், செயற்பாட்டு அறிக்கையினையும் சமர்ப்பித்து வாசித்திருந்தார். இவ்விரு அறிக்கைகளும் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வரவு-செலவு அறிக்கையை உதவிப் பொருளாளர் திரு. நடராசா பிரகலாதீஸ்வரன் சமர்ப்பித்திருந்தார். இந்த வரவு செலவு அறிக்கையின் வடிவத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று சபை உறுப்பினர்கள் தெரிவித்த யோசனை சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் எதிர்வரும் காலங்களில் அவ்வடிவம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் சபையில் தெரிவிக்கப்பட்ட பின்னர் இந்த அறிக்கை சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

புதிய நிர்வாக சபைத் தெரிவினை தேர்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டடிருந்த சங்கத்தின் போசகர் சிவநெறிச் செல்வர் திரு.தி.விசுவலிங்கம் அவர்கள் நடத்தி வைத்தார். நிர்வாக சபையில் உள்ள பதினொரு வெற்றிடங்களுக்கும் போட்டியிட விரும்புவோரிடமிருந்து மூன்று வாரங்களுக்கு முன்னர் விண்ணப்பங்கள் கோரப்பட்டபோது, பதவிகள் ஒவ்வொன்றிற்கும் தலா ஒரு உறுப்பினர் வீதம் விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதாகத் தெரிவித்ததுடன் அவற்றின் விபரங்களையும் தேர்தல் அலுவலர் சபைக்குத் தெரியப்படுத்தியிருந்தார்.

இவ்விண்ணப்பங்கள் தொடர்பில் சபையிலிருந்து எவ்வித ஆட்சேபனையும் கிடைக்காதமையினால் குறிப்பிட்ட பதவிகளுக்கு விண்ணப்பித்த அனைவரும் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

தொடர்ந்து போசகராக மீண்டும் சிவநெறிச்செல்வர் திரு.தி விசுவலிங்கம் அவர்களும் கணக்காய்வாளராக திரு.த.பரமானந்தராசா அவர்களும் ஒட்டாவா இணைப்பாளராக திருமதி.சந்திராதேவி முத்துராசா அவர்களும் மொன்றியல் இணைப்பாளாராக திருமதி.செல்வதி ஸ்ரீகணேசர் அவர்களும் ஜக்கிய அமெரிக்கா இணைப்பாளராக திரு.கந்தையா தர்மராசா அவர்களும் சபையினால் நியமிக்கப்பட்டனர். 

நிர்வாக சபைக்குத் தெரிவான உறுப்பினர்களின் விபரம் வருமாறு:

தலைவர்: திரு.தம்பையா அம்பிகைபாகன்

உப-தலைவர்: திரு.நாகலிங்கம் குஞ்சிதபாதம்

செயலாளர்: திரு.கனகசுந்தரம் சிவகுமாரன்

உப-செயலாளர்: திருமதி. செல்வா இந்திராணி சித்திரவடிவேல்

பொருளாளர்: திரு. மாணிக்கம் கனகசபாபதி

உப-பொருளாளர்: திரு. திரு. நடராசா பிரகலாதீஸ்வரன்

 

நிர்வாக சபை உறுப்பினர்கள்: 

திருமதி.கருணாவதி சுரேந்திரகுமார்

திருமதி.பிரபா ரவிச்சந்திரன்

திரு. சிவபாதசுந்தரம் கனகரட்ணம்

திரு. திருவேங்கடம் சந்திரசோதி

திரு. செல்வரத்தினம் சிவானந்தன்

 

போசகர்: சிவநெறிச்செல்வர்.தி.விசுவலிங்கம்

ஒட்டாவா பிரதிநிதி: திருமதி.சந்திராதேவி முத்துராசா

மொன்றியல் பிரதிநிதி: திருமதி.செல்வதி சிறிகணேசர்

ஜக்கிய அமெரிக்க இராச்சியம்: திரு.கந்தையா தர்மராசா

கணக்காய்வாளர்: திரு.தம்பிஐயா பரமானந்தராசா

 

புதிய தலைவர் திரு.தம்பையா அம்பிகைபாகன் அவர்கள் பதவியை ஏற்றுக்கொண்டு உரையாற்றுகையில் தாம் கல்வி கற்ற காலத்தின் நினைவகளை பகிர்ந்துகொண்டதுடன் தன்னை நல்லாசிரியர் என்ற பெருமைக்குரியவராக உருவாக்கிய பாடசாலையின் வளர்ச்சியில் ஈடுபடுவதற்கான வாய்ப்பாகத் தாம் தலைவராக பதவியேற்றமை குறித்து மகிழ்வதாகத் தெரிவித்தார். மேலும் அவர் தமது உரையில், கல்லூரியை உன்னதமான நிலைக்கு கொண்டு வருவதில் அயராது உழைத்த வெள்ளி விழா அதிபர் உத்தமர் அமரர் தியாகராசாவின் அரும் பணிகளைக் குறிப்பிட்டு அன்னாரை நினைவு கூர்ந்தார்.

அடுத்ததாக, பழைய நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தும் புதிய நிர்வாகத்தை வாழ்த்தியும் கல்லூரி அதிபர் திருமதி வாசுகி தவபாலன, பதில் அதிபர் திருமதி கலாநிதி சிவநேசன் ஆகியோரால் அனுப்பிவைக்கப்பட்டிருந்த செய்திகள் செயலாளரினால் வாசிக்கப்பட்டன.

அடுத்து யாப்புத் திருத்தப் பிரேரணை சபையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. சங்க யாப்புக்கு நிர்வாகத்தினால் பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் சில நிபந்தனைகளுடன் பொதுச் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆயுட்கால சந்தா மற்றும் சங்கத்திற்கான இணை உறுப்பினர்கள் (Associate Members) தொடர்பில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் சங்க நலனிற்கு பாதகமில்லாத வகையில் அமைந்துள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து தீர்மானித்த பின்னர் செயற்படுத்துவதற்கான அதிகாரத்தினை பொதுச்சபை நிர்வாகத்திற்கு வழங்கியிருந்தது.

சங்க நிர்வாக சபையின் பதவிக்காலம் ஒர் ஆண்டுக்குப் பதிலாக இரண்டு ஆண்டுகளாக இருக்கவேண்டும் என்ற தனிநபர் பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்ட அதேவேளையில், ஒவ்வொரு ஆண்டும் பொதுச் சபை ஏதோ ஒரு வகையில் கூட்டப்படுதல் வேண்டும் எனவும் வரவு-செலவு அறிக்கை செயற்பாட்டு அறிக்கை என்பன பொதச் சபைக்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும் எனவும் பொதச் சபை தீர்மானித்தது.

செயலாளர் திரு.கனக சிவகுமாரன் இறுதியில் கூட்டத்தை சிறப்பாக நடத்துவதற்கு ஒத்துழைத்தும் உதவிகள் வழங்கியும் ஊக்கிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரையாற்றினார். முன்னைய தலைவர் திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை அவர்கள் பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை ஏனையோர் பாராட்டும் வண்ணம் துரிதமான வளர்ச்சியைப் பெற்றுக்கொள்ள உழைத்திருந்தார் என பாராட்டியதுடன் அவரது சேவை தொடர்ந்தும் சங்கத்திற்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டு உரையாற்றிய கனக சிவகுமாரன் புதிய தலைவர் திரு.அம்பிகைபாகன் அவர்களையும் வரவேற்றுக்கொண்டு நல்லாசிரியர் என்ற பெயர்பெற்றவரும் சமூக அக்கறை கொண்டு விளங்குபவருமாகிய  அவரது தலைமையில் சங்கம் பல முன்னேற்றகரமான திட்டங்களை செயற்படுத்தும் எனவும் மேலும் தனது நம்பிக்கையினை வெளியிட்டார்.

நிறைவாக போசகர் சிவநெறிச்செல்வர் திரு.தி.விசுவலிங்கம் அவர்களின் திருமுறை ஓதலுடன் கூட்டம் இனிதே முடிவுக்கு வந்தது. 

பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையினை ஆரம்பிப்பது முதல் இன்று வரை சங்கத்தினைச் சீரிய முறையில் வழிநடத்துவதில் முதுகெலும்பாக அயராது உழைத்துவரும் செயலாளர் திரு.கனக.சிவகுமாரன் அவர்களை இச்சந்தர்ப்பத்தில் பாராட்டாமல் இருக்க முடியாது.

கூட்ட நடவடிக்கைகளின் போது எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.

IMG_0006 (Copy) IMG_0007 (Copy) IMG_0008 (Copy) IMG_0009 (Copy) IMG_0010 (Copy) IMG_0011 (Copy) IMG_0012 (Copy) IMG_0013 (Copy) IMG_0014 (Copy) IMG_0015 (Copy) IMG_0016 (Copy) IMG_0017 (Copy) IMG_0018 (Copy) IMG_0019 (Copy) IMG_0020 (Copy) IMG_0021 (Copy) IMG_0022 (Copy) IMG_0023 (Copy) IMG_0024 (Copy) IMG_0025 (Copy) IMG_0026 (Copy) IMG_0027 (Copy) IMG_0028 (Copy) IMG_0029 (Copy) IMG_0030 (Copy) IMG_0031 (Copy) IMG_0032 (Copy) IMG_0033 (Copy) IMG_0034 (Copy) IMG_0035 (Copy) IMG_0036 (Copy) IMG_0037 (Copy) IMG_0038 (Copy) IMG_0039 (Copy) IMG_0040 (Copy) IMG_0041 (Copy) IMG_0042 (Copy) IMG_0043 (Copy) IMG_0044 (Copy) IMG_0045 (Copy) IMG_0046 (Copy) IMG_0047 (Copy) IMG_0048 (Copy) IMG_0049 (Copy) IMG_0050 (Copy) IMG_0051 (Copy) IMG_0052 (Copy) IMG_0053 (Copy) IMG_0054 (Copy) IMG_0055 (Copy) IMG_0056 (Copy) IMG_0057 (Copy) IMG_0058 (Copy) IMG_0059 (Copy) IMG_0060 (Copy) IMG_0061 (Copy) IMG_0062 (Copy) IMG_0063 (Copy) IMG_0064 (Copy) IMG_0065 (Copy) IMG_0066 (Copy) IMG_0067 (Copy) IMG_0068 (Copy) IMG_0069 (Copy) IMG_0070 (Copy) IMG_0071 (Copy) IMG_0073 (Copy) IMG_0074 (Copy) IMG_0075 (Copy) IMG_0076 (Copy) l20160430_160225 l20160430_160226 l20160430_160227 l20160430_160250 l20160430_160302 l20160430_160324 l20160430_160402 l20160430_160416 l20160430_160433 l20160430_160600 l20160430_160614 l20160430_160627 l20160430_161533 l20160430_161539