காரை இந்துவின் பெருமை மிக்க பழைய மாணவர் திரு .மகேஸ்வரன் சாயி விக்னேசின் இசை நிகழ்வினை சிறப்பிக்கின்றார்

maheswaranphoto

காரை இந்துவின் பெருமை மிக்க பழைய மாணவர் திரு .மகேஸ்வரன் சாயி விக்னேசின் இசை நிகழ்வினை சிறப்பிக்கின்றார்

எதிர்வரும் 17ஆம் திகதி சனிக்கிழமை கனடா கந்தசுவாமி கோயில் கலை அரங்கில் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஏற்பாட்டில் கல்லூரியின் மேம்பாட்டு நிதிக்காக நடைபெறவுள்ள சுப்பர் சிங்கர் புகழ் சாயி விக்னேசின் கர்நாடக இசை நிகழ்வில் கல்லூரியின் பெருமை மிக்க பழைய மாணவர்களுள் ஒருவராகிய திரு.மகேஸ்வரன் பாலசுப்பிரமணியம்  அவர்களும் அவரது துணைவியார் திருமதி மோகனா மகேஸ்வரன் அவர்களும் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

திரு.மகேஸ்வரன் பாலசுப்பிரமணியம் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மின்பொறியியல் துறை சிறப்புப் பட்டதாரி (B.Sc.(Hons) என்பதுடன் மின்பொறியியலில் முது விஞ்ஞானமாணிப் (M.Sc.) பட்டத்தினையும் பெற்றவர். சிங்கப்பூர், கனடா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் மின்பொறியியல் துறை சார்ந்து உயர் பதவிகள் வகித்த இவர் துற்போது ஐக்கிய அமெரிக்காவிலுள்ள Texas மானிலத்தின் Wabtec Railway Electronics நிறுவனத்தில் நிறைவேற்றுப் பணிப்பாளராக பணியாற்றி வருகின்றார். இவரது துணைவியார் திருமதி மோகனா அவர்கள் கலிபோணியா மாநிலத்திலுள்ள நிறுவனமொன்றில்; பிரதம மின்பொறியியலாளராக பணிபுரிகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

தனது முன்னேற்றத்துக்கு வழிகாட்டிய காரைநகர் இந்துக் கல்லூரி மீது மிகுந்த விசுவாசம் கொண்டு விளங்கும் திரு .மகேஸ்வரன் அவர்களும் அவரது துணைவியாரும் பாடசாலையின் மேம்பாடு நோக்கி நடத்தப்படுகின்ற இசை நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு கல்லூரியை பெருமைப்படுத்துவதுடன் இசை நிகழ்வுக்கும் சிறப்புச் சேர்ப்பிக்கின்றமை குறித்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை தனது மகிழ்ச்சியினை தெரிவிக்கின்றது.