Category: Google Photos

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தில் ஆசிரியர் தினவிழா 06.10.2014 திங்கட்கிழமை இடம்பெற்றது. பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார் மணிவாசகர் சபையின் தலைவரும் ஓய்வுபெற்ற அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்கள்

1

மரண அறிவித்தல், திருமதி இராசலட்சுமி தனபாலசிங்கம்

PHOTO

தகவல்:

பேரின்பராஜா திருநாவுக்கரசு  905-472-9992

காரைநகர் மடத்துக்கரை முத்துமாரி அம்பாள் ஆலய மானம்பூ உற்சவம் 03.10.2014 வெள்ளிக்கிழமை மருதடி வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்றது

காரைநகர் மடத்துக்கரை முத்துமாரி அம்பாள் ஆலய மானம்பூ உற்சவம் 03.10.2014 வெள்ளிக்கிழமை மருதடி வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்றது

காலை அம்பாளுக்கு விஷேட அபிஷேம் இடம்பெற்று மாலை நான்கு மணியளவில் அம்பாள் தெருவீதியூடாகப் பவனிவந்து மருதடி வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் மகுடாசுர சங்காரத்தை மேற்கொண்டு தனது ஆலயத்தை வந்தடைந்தார்.  வீதிகள்தோறும் நிறைகுடம் வைத்து அம்பாளின் அருளைப் பெற்றுக்கொண்டனர்.

பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்ட அறிவித்தல்!

Members_letter-2809140001

பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் இவ்வருடத்திற்கான செயற்பாட்டு செய்தி அறிக்கை என்பவற்றை பார்வையிட  இங்கேஅழுத்துக

யாழ்ற்ரன் கல்லூரி பரிசளிப்பு விழா 08.10.2014

p

யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் திரு வேலுப்பிள்ளை முருகமூர்த்தி அவர்கட்கு சிறந்த அதிபருக்கான ‘ஆசிரியர் பிரதீபா பிரபா’ விருது

principal0001

காரை வசந்தம் – 2014

karai_vasantham_2014_2

களபூமி கலையகத்தின் வாணிவிழா இன்று பதன்கிழமை மாலை கலையகத்தின் தலைவர் சி.கபிலன் தலைமையில் நடைபெற்றது.இதில் மாணவர்களின் கலைநிகழ்வுகளும் சிவஸ்ரீ கு.சண்முகராஜக்குருக்களின் ஆசியுரையும் ஓய்வு பெற்ற அதிபர் க.தில்லையம்பலம் உள்ளிட்ட பலர் ஆசியுரை வழங்கினர்.

காரைநகர் வலந்தலை தெற்கு அ.மி.த.க.பாடசாலையின் (அப்புத்துரை பள்ளிக்கூடம்) வருடாந்தப் பரிசளிப்பு விழா எதிர்வரும் 5ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

03

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் தீவக கல்வி வலய மட்ட கணித நாடகப் போட்டியில் முதலிடம்

KARAI HINDU LOGO

தீவக கல்வி வலய மட்டத்தில்  நடைபெற்ற கணித நாடகப் போட்டியில் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. 

மேற்படி போட்டியில் முதலிடம் பெற்ற கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் மாகாண மட்ட கணித நாடகப் போட்டிக்குத் தெரிவாகி உள்ளது. 

இப்போட்டிக்கு மாணவர்களைத் தயார் படுத்திய கணித ஆசிரியர் திரு.நா.கேதாரிநாதன், நாடகமும் அரங்கியலும் ஆசிரியை திருமதி.விஜயலக்ஷ்மி றமணன், நூலக உதவியாளர் செல்வி.விம்சியா ஆகியோரும் வெற்றி பெற்ற மாணவர்களும் பாராட்டுக்குரியவர்கள்.  

 

2014 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பெறுபேறுகளில் காரைநகர் கல்விக்கோட்டத்தில் யாழ்ற்ரன் கல்லூரி முன்னணியில் திகழ்கின்றது.

YARLTON COLLEGE-PHOTO

2014 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பெறுபேறுகளில் காரைநகர் கல்விக்கோட்டத்தில் யாழ்ற்ரன் கல்லூரி முன்னணியில் திகழ்கின்றது. இதில் சித்தியடைந்த மாணவர்களின் பெயர்கள், மற்றும் புள்ளிகள் வருமாறு (இணையதளத்தில் வெளியான புள்ளிகளின் படி)
1. புஷ்பராசா கஜதீபன்  – 176 புள்ளிகள் 
2. மனோகரன் சுகிர்தா – 163 புள்ளிகள் 
3. நவரட்ணம் துளசி – 162 புள்ளிகள் 
4. அரிகரன் கார்த்திகா – 160 புள்ளிகள் 

OLYMPUS DIGITAL CAMERA

காரைநகர் மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தின் தெற்குப்புற பிரதான பாதையிலும் ஓா் அலங்கார வளைவினைக் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 28.09.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு பக்திபூர்வமாக நடைபெற்றது.இந்நிகழ்வில் கலந்துகொண்டோரையும் வளைவிற்கான அடிக்கல் நாட்டப்படுவதனையும் படங்களில் காணலாம்

மரண அறிவித்தல், திருமதி அன்னமுத்து செல்லத்துரை வேம்படி, காரைநகர் (மொன்றியல், கனடா)

1

கனடா-காரை கலாச்சார மன்றம் நடாத்தும் தமிழ், சமய வகுப்புக்கள் ஆரம்பம்!

CKCA LOGO (Copy)

எதிர்வரும் புதன்கிழமை நவராத்திரி பூஜாரம்ப நாளான 24.09.2014 அன்று மாலை 6.00 மணிக்கு 2761 Markham Rd (at McNicole Ave), Sun City Plaza கட்டிட தொகுதியில் அறை இல B1 இல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் அங்கத்தவர்களது பிள்ளைகள் அனைவரும் இவ்வகுப்புக்களில் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றனர் கனடா காரை கலாச்சார மன்றத்தினர்.

காரை ஒன்றுகூடல் 2014 காணொளி

CKCA LOGO (Copy)

யாழ்ற்ரன் கல்லூரியின் 2013 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளில் அண்மையில் வெளியான வெட்டுப் புள்ளிகளின் அடிப்படையில் 2 மாணவிகள் பல்கலைக்கழகம் செல்கின்றனர்.

YARLTON COLLEGE-PHOTO

யாழ்ற்ரன் கல்லூரியின் 2013 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளில் அண்மையில் வெளியான வெட்டுப் புள்ளிகளின் அடிப்படையில் 2 மாணவிகள் பல்கலைக்கழகம் செல்கின்றனர்.
1. செல்வி. கிரிஷா இராசநாயகம்  – கலைப்பீடம் 
2. செல்வி தரங்கினி மகாதேவன் – நுண்கலைப் பீடம்

கனடா காரை கலாச்சார மன்றம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடாத்தவுள்ள தமிழ் திறன் போட்டிகளில் பங்கு பற்றும் பிள்ளைகளிற்கான அறிவித்தல்!

CKCA LOGO (Copy)

கனடா காரை கலாச்சார மன்றம் நடாத்தும் தமிழ் திறன் போட்டிகளில் பங்குபற்றும் பிள்ளைகள் செப்டெம்பர் மாதம் கனடாவில் எந்தெந்த வகுப்பில் கல்வி கற்கின்றார்களோ அவர்களின் தரத்திற்கு ஏற்ப பங்கு பற்றும் போட்டிகளிற்கான ஆக்கங்களை இந்த இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து தயார் செய்து கொண்டு வருதல் வேண்டும். கீழ் வரும் 5 பிரிவுகளாக போட்டிகள் நடைபெறவுள்ளன.

இடம் : Scarborough Civic Center

காலம் : SUNDAY, SEPT 21, 2014

நேரம் : காலை 8 மணி முதல் 1 மணி வரை 
 

பிரிவு 1. Junior Kinder garden, Senior Kinder garden  போட்டிகளில் பங்கு பற்றும் பிள்ளைகள் தங்கள் ஆக்கங்களை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்துக..!

வாசிப்பு JK, SK

பேச்சு      JK, SK

பண்ணிசை 1

எழுத்து –  JK, SK

 

பிரிவு 2:  தரம் 1, 2 போட்டிகளில் பங்கு பற்றும் பிள்ளைகள் தங்கள் ஆக்கங்களை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்துக..!

வாசிப்பு 1,2

 பேச்சு –     1,2

பண்ணிசை 2

எழுத்து  1,2

 

பிரிவு 3:  தரம் 3, 4, 5 போட்டிகளில் பங்கு பற்றும் பிள்ளைகள் தங்கள் ஆக்கங்களை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்துக..!

வாசிப்பு   3,4,5

 பேச்சு         3,4,5

பண்ணிசை 3

 எழுத்து –  3,4,5

 

பிரிவு 4:  தரம் 6, 7, 8 போட்டிகளில் பங்கு பற்றும் பிள்ளைகள் தங்கள் ஆக்கங்களை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்துக..!

வாசிப்பு  –  6,7,8

பேச்சு –       6,7,8 a

பேச்சு –       6,7,8 b

பண்ணிசை 4

எழுத்து –   6,7,8

 

பிரிவு 5:   தரம்  9, 10, 11 போட்டிகளில் பங்கு பற்றும் பிள்ளைகள் தங்கள் ஆக்கங்களை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்துக..!

வாசிப்பு  –  9,10,11

பேச்சு –         9,10,11

பண்ணிசை   5

எழுத்து –    9,10,11

 

 

ஆயிலி சிவஞானோதயா வித்தியாசாலையில் இரு மாடிக்கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று திங்கட்கிழமை காலை 6.30 மணிக்கு இடம்பெறுகின்றது.

பாடசாலை அதிபர் இ.வசீகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வே.கந்தையா,காரைநகர் பிரதேசசபை உறுப்பினர் க.பாலச்சந்திரன்,காரைநகர் கோட்டக் கல்விப்பணிப்பாளர் பு.ஸ்ரீவிக்னேஸ்வரன், யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் வே.முருகமூர்த்தி,ஆகியோர் அடிக்கல்லை நாட்டிவைத்தனர்.

சுவிஸ் நாட்டில் வதியும் பாடசாலையின் பழைய மாணவர் சுப்பிரமணியம் கதிர்காமநாதனின் நிதியுதவியுடன் இந்த இருமாடிக் கட்டடம் அமைக்கப்பட உள்ளது.

சுவிஸ் காரை தென்றல் மன்ற கீதம்

SWISS LOGO

CD_Karai_Label_copy_1

 

 

காரைநகர் பயிரிக்கூடல் சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் (இன்று வியாழக்கிழமை 11.09.2014) தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் கோபுர கும்பாபிஷேகக் காட்சிகள்.ஆலய கோபுரம் புனரமைக்கப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டு கும்பாபிஷேகம் இடம்பெறுகின்றது.

காரைநகர் களபூமி கலையகத்தின் ஆண்டு நிறைவு விழாவும் கலைவிழாவும் நேற்றுமுந்தினம் சனிக்கிழமை (06.09.2014) மாலை 4.00 மணிக்கு கலையக மண்டபத்தில் தலைவர் சி.கபிலன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக முன்னாள் இலங்கை வங்கி முகாமையாளர் திரு சிவபாதம் மற்றும் சட்டத்தரனி திருமதி சாந்தகுமாரி சிவபாதம் ஆகியோர் பிரதம விருந்தினராகவும் காரைநகர் மணிவாசகர் சபைத் தலைவரும் காரைநகர் இந்துக்கல்லூரியின் ஓய்வு நிலை அதிபருமான பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை சிறப்பு விருந்தினராகவும் யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் வே.முருகமூர்த்தி, தியாகராசா ம.ம.வித்தியாலய அதிபர் திருமதி வாசுகி தவபாலன்  ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.

விருந்தினர்கள் தெருவடிப் பிள்ளையார் கோவிலிலிருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க மலர் மாலை அணிவித்து அழைத்துவரப்பட்டு கலையக முன்றலில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

 

கனடா-காரை கலாச்சார மன்றம் ஈழத்து சிதம்பரம் நித்திய பூசை வழிபாடுகளை ஒருங்கிணைக்க எடுத்து வரும் முயற்சிகளிற்கு கனடா-சைவ சித்தாந்த மன்றம் ஆதரவினையும் ஆசியினையும் வழங்கி அனுப்பிய கடிதம்.

இங்கே அழுத்துக

இன்று வியாழக்கிழமை 04/09/2014 நடைபெற்ற ஆலங்கன்று சுடலை வைரவர் ஆலய அலங்கார உற்சவ இறுதி நாள் சங்காபிஷேகம் மற்றும் திருவிழா காட்சிகள்

ஆலங்கன்று சுடலை வைரவர் ஆலயத்தில் அலங்கார உற்சவ திருவிழா – 26/08/2014

காரைநகர் தங்கோடை நாகபூசனி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தில் பத்தாம் நாளான 29/O8/2014 வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மங்கையர்களின் பாற்குடப் பவனியும் 1008 சங்காபிஷேகமும்

காரைநகா் மணற்காடு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய மஹா கும்பாபிஷேகம்

காரைநகா் மணற்காடு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 02.02.2015 திங்கட்கிழமை காலை 9.10 மணிமுதல் 10.10 மணிவரை உள்ள சுபவேளையில் நடைபெறும் என திருப்பணிச்சபையினா் உத்தியோக பூா்வமாக அறியத்தருகின்றார்கள்.

கும்பாபிஷேகத்தினைத் தொடா்ந்து 2015ஆம் ஆண்டின் அம்பாளின் வருடாந்த மஹோற்சவமும் நடைபெறும் என திருப்பணிச்சபையினா் மகிழ்வுடன் அறியத்தருகின்றனா்.

கடந்த 10.02.2014 அன்று அம்பாளின் பாலஸ்தாபனம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அம்பாளின் திருப்பணி வேலைகள் கும்பாபிஷேகத்திற்கு முன்னா் நிறைவுபெற அம்பிகையின் அடியவா்கள் தாராள மனதுடன் நிதியை வாரிவழங்குமாறு வேண்டிநிற்கின்றனா்.

தற்போது ஆலயத்தின் உட்பிரகாரக் கொட்டகை வேலைகள் துரிதமாக நடைபெறுவதையும் தற்போதுள்ள திருப்பணி வேலைகளின் முன்னேற்றத்தையும் படங்களில் காணலாம்.

 

காரைநகர் தங்கோடை நாகபூசனி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தில் இரண்டாம் நாளான 21/08/2014 வியாழக்கிழமை இடம்பெற்ற இரவுத் திருவிழாக் காட்சிகள்

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் மேம்பாடு நோக்கி நடத்தப்படும் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்குமாறு பழைய மாணவர் சங்கம் விடுக்கும் அன்பான வேண்டுகோள்.

flyer4 copy

 

31ம் நாள் வீட்டுக்கிருத்திய அழைப்பும் நன்றி நவிலலும் அமரர்.கந்தையா தர்மலிங்கம் (யாழ்ப்பாணம் ஸ்ரோர்ஸ் தங்கோட்டுவ – NAK கந்தையாண்ணை)

KandaiahTtharmalingam

காரைநகர் அரசடிக்காடு கதிர்காம வேலாயுத சுவாமி கோவில் வருடாந்த பெருந்திருவிழாவின் இறுதிநாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற தீமிதிப்பு நிகழ்வினையும் பத்தர்கள் காவடி எடுத்து நேர்கடன்களை நிறைவேற்றுவதனையும் படங்களில் காணலாம்.