Tag: காரை அபிவிருத்தி சபை

காரைநகர் அபிவிருத்திச் சபை நடாத்திய “காரைநகர்” நூற்றாண்டு விழா காணொளி! (24.09.2023)

காரைநகர் அபிவிருத்திச் சபை நடாத்தும் “காரைநகர்” நூற்றாண்டு விழா அழைப்பிதழ்! (24.09.2023 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு)


கனடா காரை கலாச்சார மன்றத்தினால் காரை அபிவிருத்திச் சபையினரிடம் ஆகஸ்ட் மாதம் 9ம் திகதி விளக்கம் கோரி எழுதிய கடிதத்திற்கு அவர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற பதில் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது.

 

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் காரை அபிவிருத்திச் சபையினரிடம் ஆகஸ்ட் மாதம் 9ம் திகதி விளக்கம் கோரி எழுதிய கடிதத்திற்கு அவர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற பதில் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது.

கனடா காரை கலாச்சார மன்றம் காரைநகர் அபிவிருத்திச் சபையூடாக மாணவர்களின் தேவையினைக் கருத்திற் கொண்டு மாணவர் நூலகத்திற்கு போட்டோபிரதி இயந்திரம் வாங்குவதற்கு நிதி அனுசரணை வழங்கியுள்ளது.

 

கனடா காரை கலாச்சார மன்றம் காரைநகர் அபிவிருத்திச் சபையூடாக  மாணவர்களின் தேவையினைக் கருத்திற் கொண்டு மாணவர் நூலகத்திற்கு போட்டோபிரதி இயந்திரம் வாங்குவதற்கு நிதி அனுசரணை வழங்கியுள்ளது.

போட்டோபிரதி இயந்திரம் வாங்குவதற்கு நிதி உதவி வழங்கிய கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு காரைநகர் அபிவிருத்திச் சபையினரால் நன்றி தெரிவித்த கடிதத்தை கீழே பார்வையிடலாம்.

பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தின் நிதி அனுசரணையில் வருடா வருடம் நடைபெறும் காரைநகர் கோட்ட முன்பள்ளி சின்னஞ் சிறிய சிட்டுக்களின் கல்வி செயற்பாட்டை மேம்படுத்தும் செயற்த்திட்டம் 16.03.2021 செவ்வாய்க்கிழமை அன்று கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது!

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதி அனுசரணையுடன் காரைநகர் பாடசாலைகளின் க.பொ.த (சா/த) வகுப்பு மாணவர்களுக்கு கணித பாட முன்னோடி பரீட்சை மற்றும் பரீட்சை வினாத்தாள் தொடர்பான செயலமர்வுகளும் 27.12.2020,31.12.2020,01.01.2021 ஆகிய திகதிகளில் நடாத்தப்பட்டது.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதி அனுசரணையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையூடாக காரை வாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் நடாத்தப்பட்ட காரைநகர் பாடசாலைகளின் க.பொ.த (சா/த) வகுப்பு மாணவர்களுக்கு 27.12.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கணித பாட முன்னோடி பரீட்சை ஒன்றும் 31.12.2020, 01.01.2021 ஆகிய திகதிகளில் பரீட்சை வினாத்தாள் தொடர்பான செயலமர்வுகளும் நடாத்தப்பட்டது.

செயற்திட்டத்திற்கு உதவிய காரைநகர் அபிவிருத்திச் சபையினருக்கும் மற்றும் கனடா காரை கலாச்சார மன்றத்திற்கும் காரை வாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் நன்றி தெரிவித்த கடிதத்தை கீழே பார்வையிடலாம்.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் காரை அபிவிருத்திச் சபை ஊடாக காரைநகரில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள்!

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் காரை அபிவிருத்திச் சபை ஊடாக காரைநகரில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள்.

1.வீட்டுத் திட்டம்

காரைநகர் அல்வின் வீதியில் வசிக்கும் சிவானந்தராசா றூபரசி கண்பார்வையற்ற இவர் 4 வயது குழந்தையுடன் வசித்து வருகின்றார். இவர் வீடு சிதைவடைந்த நிலையில் வீட்டில் வாழமுடியாது என காரை அபிவிருத்திச் சபை, கிராமசேவையாளரின் பரிந்துரைக்கேற்ப கனடா காரை கலாச்சார மன்றத்தினால் ரூபா 350,000.00 செலவில் திருத்தியமைத்துக் கொடுக்கப்பட்டது. இத் திட்டத்திற்கு உதவி செய்த அனைவருக்கும் மன்றம் நன்றி தெரிவிப்பதோடு மேலும் இது போன்ற திட்டங்கள் தொடர்ந்து செய்ய எமக்கு பொருளுதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

 

பழைய படத்தொகுப்பு:

 

புதிய படத்தொகுப்பு:

 

 

 

2.காரைநகர் பாடசாலைகளில் இருந்து கபொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான உதவி திட்டம்

நாட்டில் ஏற்பட்ட கொரோனா காரணமாக இவ்வருடம் கபொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பலவித கஷ்டங்களுக்கும் மன உளைச்சல்களுக்கும் உள்ளாகியிருந்தார்கள். தற்போது October 11ம் திகதி பரீட்சை ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்கள். காரை இந்துக் கல்லூரியில் 28 பேரும், யாழ்ற்ரன் கல்லூரியில் 22 பேரும் காரைநகர் பாடசாலைகளில் இருந்து பரீட்சைக்கு தோற்றுகிறார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஊக்குவிப்பு தொகையாக ரூபா 2500.00 பாடசாலை அதிபர்களினாலும் காரை அபிவிருத்திச் சபை உறுப்பினர்களினாலும் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பாடசாலைகளில் வைத்து கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வழங்கப்பட்டது.

காரைநகர் இந்துக் கல்லூரி

 

 

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி

 

கனடா காரை கலாச்சார மன்றம் “ஒருத்தி” திரைப்படம் மூலம் கிடைக்கப் பெற்ற நிதியைக் கொண்டு காரைநகர் பிரதேச வைத்தியசாலையின் சில தேவைகள் நிறைவேற்றப்பட்டது.

 

கனடா காரை கலாச்சார மன்றம் “ஒருத்தி” திரைப்படம் மூலம் கிடைக்கப் பெற்ற நிதியைக் கொண்டு காரைநகர் பிரதேச வைத்தியசாலையின் சில தேவைகள் நிறைவேற்றப்பட்டது.

கனடா காரை கலாச்சார மன்றம் “ஒருத்தி” திரைப்படம் மூலம் காரைநகர் பிரதேச வைத்தியசாலைக்கு உதவி செய்வதன் பொருட்டு ஏறத்தாழ $ 2000 சேகரித்திருந்தது. இதன் மூலம் காரைநகர் பிரதேச வைத்தியசாலைக்குத் தேவையான உபகரணங்களும் மகப்பேற்றுத் தாய்மார்களை கிளினிக்கில் பார்வையிட வசதியாக ஒரு பகுதியினைப் புனரமைத்து மின்சார வசதிகள்,வர்ணப்பூச்சு வேலைகள்,கூரைகள் என்பனவற்றை எமது மன்றம் காரை அபிவிருத்திச் சபையூடாக நிறைவேற்றியிருந்தது. இதற்கு காரைநகர் இளையோர் அமைப்பு சிரமதானம் மூலம் அதனை நிறைவேற்றியிருந்தார்கள். மகப்பேற்று வைத்திய நிபுணர் திரு.N.சரவணபவன் தற்போது வாரந்தோறும்  காரைநகர் பிரதேச வைத்தியசாலைக்கு வருகைதந்து கர்ப்பிணிகளை பார்வையிடுகின்றார். இதற்கான Ultrasound Scan இயந்திரத்தை திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அன்பளிப்பு செய்துள்ளார். இவற்றை ஜூலை மாதம் 2ம் திகதி யாழ் போதனா வைத்தியசாலை  பணிப்பாளர் Dr.சத்தியமூர்த்தி சம்பிரதாயபூர்வமாகத் திறந்துவைத்தார்.

இதனை நிறைவேற்றுதற்கு உதவி செய்த கனடா வாழ் காரைநகர் மக்களுக்கும்  “ஒருத்தி” திரைப்பட இயக்குனர் P.S.சுதாகரன் அவர்களுக்கும் கனடா காரை கலாச்சார மன்றம் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றது.

 

நன்றியுடன் வாழ்த்துகிறோம்

அமரர் தில்லையம்பலவாணர் மகாலட்சுமி அவர்களின் மறைவு குறித்து காரை அபிவிருத்திச் சபை வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

கனடா-காரை கலாசார மன்றத்தின் நிதிப் பங்களிப்புடன் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை (Smart Classroom)31.01.2020 வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

கனடா-காரை கலாசார மன்றத்தின் நிதிப் பங்களிப்புடன்

சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை

(Smart Classroom) 31.01.2020 வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு இறுதியில் கனடா-காரை கலாசார மன்றத்தின் தலைவர் திரு.சி.சிவராமலிங்கம் காரைநகருக்கான பயணத்தினை மேற்கொண்டிருந்தார். இதன்போது சில பாடசாலைகளின் முக்கியமான தேவைகளை இனம்கண்டுகொண்டதன் அடிப்படையில் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்திற்கு திறன் வகுப்பறை(Smart Classroom) ஒன்றினை அமைத்துக் கொடுப்பதென மன்றத்தினால் தீர்மானிக்கப்பட்டு இதற்கான உதவி காரை அபிவிருத்திச் சபையின் ஊடாக வழங்கப்பட்டிருந்தது.

தற்போது இத்திறன் வகுப்பறையின் அனைத்து நிர்மாணப் பணிகளும் காரை அபிவிருத்திச்சபையினால் முன்னெடுக்கப்பட்டு பூர்த்திசெய்யப்பட்டு பாவனைக்காக சென்ற 31.01.2020 வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது. வித்தியாலயத்தின் அதிபர் திரு.சாந்தகுமார் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழா வைபவத்தில் காரை அபிவிருத்திச் சபையின் தலைவர் திரு.இராமநாதன் சிவசுப்பிரமணியம் பிரதம விருந்தினராகவும், தீவக வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) திரு.ஆ.யோகலிங்கம் சிறப்பு விருந்தினராகவும், காரை அபிவிருத்திச் சபையின் நிர்வாக உறுப்பினர்கள் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். திரு.இ.சிவசுப்பிரமணியம் அவர்கள் நாடாவினை வெட்டி சம்பிரதாயபூர்வமாக திறன் வகுப்பறை திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து விழாத் தலைவரும்(அதிபர்) விருந்தினர்களும் உரையாற்றினர். பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோருடன், பழைய மாணவர்கள், அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிரந்தனர். வித்தியாலயத்தின் முக்கியமான தேவைகளில் ஒன்றான திறன் வகுப்பறையின் அவசியத்தை உணர்ந்துகொண்டு அதனை அமைப்பதற்கான நிதியினை உதவிய கனடா-காரை கலாசார மன்றத்திற்கும், அமைப்புப் பணிகளை குறுகிய காலத்தில் நிறைவேற்றித் தந்த காரை அபிவிருத்திச் சபைக்கும் பாடசாலைச் சமூகத்தின் சார்பில் அதிபர் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். வித்தியாலயத்தின் பரிணாம வளர்ச்சியின் மற்றொரு படிக்கல்லாக இத்திறன் வகுப்பறையின் உருவாக்கம் அமைந்திருப்பதுடன் மாணவர்களதும் ஆசிரியர்களதும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை இலகுவாகவும் நேரமுகாமைத்துவத்தற்கு ஏற்பவும் சிறப்பான முறையில் முன்னெடுக்கமுடியும் எனவும் கருதப்படுகிறது. வைபவத்தின் இறுதியில் இத்திறன் வகுப்பறையின் மாதரிச் செயற்பாடும் ஆசிரியர்களினால் செய்து காண்பிக்கப்பட்டது.

 

கனடா – காரை கலாச்சார மன்றத்தின் நிதி அனுசரணையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினரால் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்திற்கு திறந்து வைக்கப்படும் திறன் வகுப்பறை (SMART CLASS ROOM) திறப்பு விழா அழைப்பிதழ்! (31.01.2020 வெள்ளிக்கிழமை)

காரை அபிவிருத்தி சபையினரால் பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தின் அனுசரணையுடன் காரை முன்பள்ளி மாணவர்களுக்கு செயல்நூல் 26.01.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வழங்கப்பட்டது!

காரை அபிவிருத்தி சபையினரால் பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தின் அனுசரணையுடன் காரை முன்பள்ளி மாணவர்களுக்கு செயல்நூல் 26.01.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வழங்கப்பட்டது. இவ் நிகழ்வில் பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தை சேர்ந்த சின்னத்துரை கோபாலகிருஸ்ணன்(சந்திரன்) அவர்கள் கலந்துகொண்டார்.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதி அனுசரணையுடன் காரை அபிவிருத்திச் சபையினரால் காரைநகர் யாழ்ற்றன் கல்லூரியில் தற்காலிகமாக க.பொ.த. உயர்தர பெளதீக பாடத்திற்குரிய ஆசிரியர் 16.01.2020 வியாழக்கிழமை அன்று நியமனம்.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதி அனுசரணையுடன்

காரை அபிவிருத்திச் சபையினரால்

காரைநகர் யாழ்ற்றன் கல்லூரியில்

தற்காலிகமாக க.பொ.த. உயர்தர பெளதீக பாடத்திற்குரிய ஆசிரியர்

16.01.2020 வியாழக்கிழமை அன்று நியமனம்.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் தலைவர் திரு.சிவசுப்பிரமணியம் சிவராமலிங்கம் அவர்கள் கடந்த செப்டம்பர் மாதத்தில் காரைநகர் விஜயத்தின் போது யாழ்ற்ரன் கல்லூரிக்கு சென்றிருந்தார்.

யாழ்ற்ரன் கல்லூரியில் பெளதீக பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரின் திடீர் இடமாற்றத்தை தொடர்ந்து யாழ்ற்ரன் கல்லூரியில் ஏற்பட்டுள்ள பெளதீக பாட ஆசிரியர் பற்றாக்குறையினை நீக்க தற்காலிகமாக பெளதீக பாடத்திற்குரிய ஆசிரியரை நியமிப்பதற்கு பாடசாலையினால் வேண்டுகோள் விடப்பட்டது.

அதனடிப்படையில் 22.09.2019 அன்று நடைபெற்ற நிர்வாக சபை கூட்டத்தின் போது தலைவர் அவர்களினால் பார்த்தும் கேட்டும் அறிந்து கொள்ளப்பட்ட விடயங்கள் நிர்வாக உறுப்பினர்களிடையே பகிர்ந்து கொள்ளப்பட்டதுடன் கனடா காரை கலாச்சார மன்றம் தொடர்ந்து செயற்படுத்தவுள்ள திட்டங்கள் தொடர்பாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதனடிப்படையில் யாழ்ற்ரன் கல்லூரியில் ஏற்பட்டுள்ள பெளதீக பாட ஆசிரியர் பற்றாக்குறையினை நீக்க தற்காலிகமாக அடுத்து வரும் 6 மாதங்களிற்கு பெளதீக பாட ஆசிரியருக்குரிய தேவையான வேதனத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது காரைநகர் யாழ்ற்றன் கல்லூரியில் தற்காலிகமாக க.பொ.த. உயர்தர பெளதீக பாடத்திற்குரிய ஆசிரியர் 16.01.2020 வியாழக்கிழமை அன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

 

காரைநகர் அபிவிருத்திச் சபையின் மாணவர் நூலகத்தில் 15.01.2020 புதன்கிழமை நடைபெற்ற பொங்கல் நிகழ்வு!

காரைநகர் அபிவிருத்திச் சபையும் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையும் இணைந்து நடாத்திய முத்தமிழ் விழா (12.01.2020) (காணொளி)

காரைநகர் அபிவிருத்திச் சபையும் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையும் இணைந்து நடாத்தும் முத்தமிழ் விழா அழைப்பிதழ்!

காரைநகர் அபிவிருத்திச் சபையும் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையும் இணைந்து நடாத்தும் முத்தமிழ் விழா அழைப்பிதழ்

முத்தமிழ் விழாவிற்கு விருந்தினர்களாக அழைப்பது தொடர்பானது!

காரைநகர் அபிவிருத்திச் சபையினர் நடாத்திய வாணிவிழாவும் மாணவர் கௌரவிப்பு நிகழ்வும் 07.10.2019 திங்கட்கிழமை மாணவர் நூலகத்தில் நடைபெற்றது.

அமரர்.அருணாசலம் வள்ளியம்மை அவர்களின் மறைவு குறித்து காரைநகர் அபிவிருத்திச் சபையினர் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

காரைநகர் அபிவிருத்தி சபையின் 27.03.2017 – 05.08.2019 வரையிலான செயற்பணி அறிக்கை!

 

Seyatpani Report PDF

காரைநகர் அபிவிருத்திச் சபையின் தலைவராக நூற்றுக்கணக்கான காரைநகர் மக்களின் மத்தியில் ஏகமனதாகத் தெரிவாகி உள்ளார் இராமநாதன் சிவசுப்பிரமணியம்.

 

காரைநகர் அபிவிருத்திச் சபையின் தலைவராக நூற்றுக்கணக்கான காரைநகர் மக்களின் மத்தியில் ஏகமனதாகத் தெரிவாகி உள்ளார் இராமநாதன் சிவசுப்பிரமணியம்.

காரைநகர் அபிவிருத்திச் சபையின் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் 11ம் திகதி (11.08.2019) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு காரைநகர் சைவமகா சபை மண்டபத்தில் சபையின் தலைவர் நா.பாலகிருஸ்ணன் தலைமையில் இடம்பெறது. இக் கூட்டத்திலேயே சபையின் புதிய தலைவராக இடைப்பிட்டியைச் சேந்தவரும் ஓய்வு நிலை வங்கியாளரும் இலண்டனில் வசித்து தற்போது காரைநகரில் நிரந்தரமாகக் குடியேறி பல்வேறு அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டு வருபவருமான இராமநாதன் சிவசுப்பிரமணியம் தெரிவு செய்யப்பட்டார்.

இதில் செயலாளராக சுப்பிரமணியம் செந்தூரனும் (தங்கோடை),பொருளாளராக முருகேசு பரம்தில்லைராசாவும் (களபூமி), உப தலைவராக கணேசபிள்ளை அருள்ராசாவும் (சின்னாலடி), உப செயலாளராக கை.நாகராசாவும் (இலகடி) தெரிவு செய்யப்பட்டதுடன் நிர்வாக சபை உறுப்பினர்களாக 09 கிராம சேவையாளர் பிரிவகளில் இருந்தும் ஒவ்வொருவர் தெரிவாகி உள்ளனர்.

வரதராசா சிறிரங்கன்,

விக்னேஸ்வரன் ஜெயகாந்தன்,

இராசசிங்கம் திருப்புகழூர்சிங்கம்,

நித்தியானந்தம் சபேசன்,

வேலுப்பிள்ளை மாணிக்கம்,

கந்தசாமி விக்னேஸ்வரன்,

வேலுப்பிள்ளை சபாலிங்கம்,

நாகலிங்கம் பாலகிருஸ்ணன்,

ஆண்டிஜயா அருள்ராசா ஆகியோர் உறுப்பினர்களாக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

காரைநகர் அபிவிருத்திச் சபையின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபைத் தெரிவும் நிகழ்ச்சி நிரல்! (11.08.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி)

காரைநகர் அபிவிருத்திச் சபையின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபைத் தெரிவும்!

அமரர்.அருணாசலம் முத்துலிங்கம் (ஓய்வுநிலை அரச உத்தியோகத்தர்) அவர்களின் மறைவு குறித்து காரைநகர் அபிவிருத்திச் சபையினரும் நூலகக் குழுவினரும் இணைந்து வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

கனடா காரை கலாசார மன்றத்தின் ஏற்பாட்டில் நூலக நிறுவனப் பிரதிநிதியுடனான கலந்துரையாடல் 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை காரைநகர் அபிவிருத்திச் சபை மாணவர் நூலகத்தில் இடம்பெற்றது.

கனடா காரை கலாசார மன்றத்தின் ஏற்பாட்டில் நூலக நிறுவனப் பிரதிநிதியுடனான கலந்துரையாடல் 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை காரைநகர் அபிவிருத்திச் சபை மாணவர் நூலகத்தில் இடம்பெற்றது.

வரலாறுகளை ஆவணப்படுத்தும் முயற்சியில் காரைநகர் அபிவிருத்திச் சபை

கனடா காரை கலாசார மன்றத்தின் ஏற்பாட்டில் ஈழத்துத் தமிழ் பேசும் எழுத்தாளர்களின் ஆக்கங்கள், புலம்பெயர் நடுகளில் எம்மவர்களால் வெளியிடப்படும் ஆக்கங்கள், மற்றும் இலங்கை தொடர்பான நூல்கள் என்பவற்றை ஆவணப்படுத்தும் நூலக நிறுவனப் பிரதிநிதியுடனான கலந்துரையாடல் ஒன்று 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை காரைநகர் அபிவிருத்திச் சபை மாணவர் நூலகத்தில் இடம்பெற்றது.

காரைநகர் அபிவிருத்திச் சபையின் தலைவர் நா.பாலகிருஸ்ணன் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் கனடா காரை கலாசார மன்றத்தின் தலைவர் பாலச்சந்திரன் சபாரத்தினம், மன்ற முன்னாள் செயலாளரும் உறுப்பினருமான ஜெயச்சந்திரன் தம்பிராசா மற்றும் காரைநகர் அபிவிருத்திச் சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

நூலக நிறுவனத்தின் பிரதிநிதி கு.சோமராஜ் இதில் கலந்து கொண்டு நூலக நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளித்தார்.

இதில் அவர் தெரிவித்ததாவது ஈழத்துத் தமிழ் பேசும் எழுத்தாளர்களின் ஆக்கங்கள், புலம்பெயர் நடுகளில் எம்மவர்களால் வெளியிடப்படும் ஆக்கங்கள், மற்றும் இலங்கை தொடர்பான நூல்கள் என்பவற்றை ஆவணப்படுத்தும் முயற்சியில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் இதுவரை அறுபதாயித்திற்கம் மேற்பட்ட இவ்வாறான நூல்களைத் தாம் ஆவணப்படுத்தி உள்ளதாகவும் அவை அனைத்தும் நூலக இணையத்தளத்தில் பார்வையிட முடியும் எனவும்

நூலகங்களுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தே இந்தச் சேவையப் பெறுவதுடன் உலகின் எப்பாகத்தில் இருந்தும் இந்ந நூலகத்தில் உள்ள புத்தகங்களைப் பார்வையிட முடியும்.

கடந்த 2005ம் ஆண்டு தொண்டு அடிப்படையில் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டது இன்று 15 ஆண்டுகளைக் கடந்தும் எமது சேவை சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. நூல்கள் காலத்தால் அழியாதவாறு மூன்று முறைகளில் ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றது. அத்துடன் வாய்மொழி மூல வரலாறுகளையும் ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம்.

80 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்கள். அறிஞர்கள் ஆகியோரின் வரலாறுகள் அதன் ஊடாக மொழி, கலை, கலாசாரம், பண்பாடு, பழமை என்பன ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றது.

அது மட்டுமன்றி நீத்தார் நினைவாக வெளியிடப்படும் கல்வெட்டுக்களும் அவற்றுள் காணப்படும் அரிய கட்டுரைகள், விடயங்கள் என்பன மற்றும் ஒவ்வொருவருடைய பரம்பரை என்பவற்றையும் அனைவரும் அறிந்துகொள்ள கூடியவாறு அவையும் ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன.

காரைநகரிலும் பல்வேறு இடங்களில் உள்ள மிகப் பழைய ஓலைச் சுவடிகள், வரலாற்று நூல்கள், மிகப் பழைய நூல்கள் என்பன வற்றையும் வாய்மொழி மூல வரலாறுகளையும் ஆவணப்படுத்தி உள்ளோம். தொடர்ந்தும் இம்முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம் இதற்கு காரைநகர் மக்களின் ஆதரவும் தேவை அதன் ஊடாக காரைநகர் மக்களின் வாழ்வும் வரலாறும் ஆவணப்படுத்தப்பட்டு அடுத்த சந்ததிக்கு வழங்க முடியும் என்றார்.

நூல்கள், வாய்மொழி வரலாறுகளை ஆவணப்படுத்த விரும்புவோர் கொக்குவில் ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள நூலக நிறுவனத் தலைமைக் காரியாலயத்துடன் தொடர்ப கொள்ள முடியும் அல்லது நூலக நிறவனப் பிரதிநிதி கு.சோமராஜ் அவர்களுடன் அவரது தொலைபேசி இலக்கம் 0773747828 இற்குத் தொடர்பு கொள்ள முடியும்.

இந்த முயற்சிக்கு கனடா காரை கலாசார மன்றமும் தனது ஆதரவை வழங்கி வருவதுடன் ஒரு தொகைப் பணத்தினையும் நூலக நிறுவனத்திற்கு வழங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் காரைநகரில் பழமை வாய்ந்த நூல்கள், கல்வெட்டுக்கள், ஓலைச்சுவடிகள், மற்றும் வாய்மொழி வரலாறுகளை ஆவணப்படுத்தி அடுத்த தலைமுறைக்கு வழங்க விரும்புபவர்கள் ஓய்வுநிலை அதிபர் கலாபூசணம் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் மேற்கொள்ள முடியும்.என அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகர் அரசினர் வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்பட்ட பேருந்து தரிப்பு நிலையத் திறப்பு விழா காணொளி! (10.03.2019)

அமரர் வித்துவான் சைவமணி மு.சபாரத்தினம் அவர்களின் நினைவாக பேருந்து தரிப்பு நிலையம் திறப்புவிழா அழைப்பிதழ்

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்