Tag: காரைச் செய்திகள்

01.03.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காரைநகர் கிழவன்காடு கலாமன்றம் நடத்திய ஸ்தாபக தின விழா காணொளி!

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் 27.02.2020 வியாழக்கிழமை நடைபெற்ற கொடியேற்றத் திருவிழா காணொளி!

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் இன்று 27.02.2020 வியாழக்கிழமை நடைபெற்ற கொடியேற்றத் திருவிழா காட்சிகள்!

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி வருடாந்த தடகளப் போட்டி 25.02.2020 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது.

காரைநகர் கிழவன்காடு கலாமன்றம் நடத்தும் ஸ்தாபக தின நிகழ்வு 01.03.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது!

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி வருடாந்த தடகளப் போட்டி 25.02.2020 செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது!

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை திருவருள்மிகு ஸ்ரீமுத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் பிரம்மோற்சவ விஞ்ஞாபனம் – 2020

காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலை வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி 13.02.2020 வியாழக்கிழமை நடைபெற்றது.

காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி 13.02.2020 வியாழக்கிழமை நடைபெற்றது.

காரைநகர் இந்துக் கல்லூரியின் இல்லங்களுக்கிடையேயான வருடாந்த மெய்வல்லுநர் போட்டி 31.01.2020 வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.00மணிக்கு கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் தேவஸ்தானத்தினால் ஆலயத்திற்கு வரும் அடியார்களுக்கு அமுதூட்டுவதற்காக ஈழத்துச் சிதம்பரம் ஆலயத்தின் வடக்கு வீதியில் அமைந்துள்ள சிவாச்சிரமத்திற்குச் சொந்தமான பெரியபரந்தனில் உள்ள நெல்வயலில் இம்முறை நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு அறுவடை செய்யப்பட்ட நெல் 02.02.2020 ஞாயிற்றுக்கிழமை ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டது.

காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் தேவஸ்தானத்தினால் ஆலயத்திற்கு வரும் அடியார்களுக்கு அமுதூட்டுவதற்காக ஈழத்துச் சிதம்பரம் ஆலயத்தின் வடக்கு வீதியில் அமைந்துள்ள சிவாச்சிரமத்திற்குச் சொந்தமான பெரியபரந்தனில் உள்ள நெல்வயலில் இம்முறை நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு அறுவடை செய்யப்பட்ட நெல் 02.02.2020 ஞாயிற்றுக்கிழமை ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டது.

சிவாச்சிரமத்தின் ஸ்தாபகர் அமரர் திருமதி தங்கம்மா நடராசா அவர்களின் இறுதி விருப்பப்படி பெரியபரந்தனில் உள்ளன நெற்காணிகளில் இம்முறை நான்கு ஏக்கர் காணி பரீட்சாத்தமாக நெல் விதைப்பு மேற்கொள்ளப்பட்டு அதன் அறுவடை நெல்லான சுமார் 110 மூட்டை நெல் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இவை ஈழத்துச் சிதம்பர மாணிக்கவாசகர் மடாலயத்தில் இறக்கப்பட்டு அவித்து குற்றி கைக்குத்தரிசியாக்கி நித்திய அன்னதானம் வழங்க ஆலய ஆதீனகர்த்தாக்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதே வேளை ஆலய நிர்வாகத்தினால் மாணிக்கவாசகர் மடாலயத்தில் முதன் முறையாக கடந்த வெள்ளிக்கிழமை முதல் நித்திய அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

காரைநகர் களபூமி சத்திரந்தை ஸ்ரீ ஞான வைரவர் ஆலயத்தில் 02.02.2020 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வருடாந்த அலங்கார 10ம் நாள் உற்சவம்!

கனடா-காரை கலாசார மன்றத்தின் நிதிப் பங்களிப்புடன் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை (Smart Classroom)31.01.2020 வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

கனடா-காரை கலாசார மன்றத்தின் நிதிப் பங்களிப்புடன்

சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை

(Smart Classroom) 31.01.2020 வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு இறுதியில் கனடா-காரை கலாசார மன்றத்தின் தலைவர் திரு.சி.சிவராமலிங்கம் காரைநகருக்கான பயணத்தினை மேற்கொண்டிருந்தார். இதன்போது சில பாடசாலைகளின் முக்கியமான தேவைகளை இனம்கண்டுகொண்டதன் அடிப்படையில் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்திற்கு திறன் வகுப்பறை(Smart Classroom) ஒன்றினை அமைத்துக் கொடுப்பதென மன்றத்தினால் தீர்மானிக்கப்பட்டு இதற்கான உதவி காரை அபிவிருத்திச் சபையின் ஊடாக வழங்கப்பட்டிருந்தது.

தற்போது இத்திறன் வகுப்பறையின் அனைத்து நிர்மாணப் பணிகளும் காரை அபிவிருத்திச்சபையினால் முன்னெடுக்கப்பட்டு பூர்த்திசெய்யப்பட்டு பாவனைக்காக சென்ற 31.01.2020 வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது. வித்தியாலயத்தின் அதிபர் திரு.சாந்தகுமார் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழா வைபவத்தில் காரை அபிவிருத்திச் சபையின் தலைவர் திரு.இராமநாதன் சிவசுப்பிரமணியம் பிரதம விருந்தினராகவும், தீவக வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) திரு.ஆ.யோகலிங்கம் சிறப்பு விருந்தினராகவும், காரை அபிவிருத்திச் சபையின் நிர்வாக உறுப்பினர்கள் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். திரு.இ.சிவசுப்பிரமணியம் அவர்கள் நாடாவினை வெட்டி சம்பிரதாயபூர்வமாக திறன் வகுப்பறை திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து விழாத் தலைவரும்(அதிபர்) விருந்தினர்களும் உரையாற்றினர். பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோருடன், பழைய மாணவர்கள், அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிரந்தனர். வித்தியாலயத்தின் முக்கியமான தேவைகளில் ஒன்றான திறன் வகுப்பறையின் அவசியத்தை உணர்ந்துகொண்டு அதனை அமைப்பதற்கான நிதியினை உதவிய கனடா-காரை கலாசார மன்றத்திற்கும், அமைப்புப் பணிகளை குறுகிய காலத்தில் நிறைவேற்றித் தந்த காரை அபிவிருத்திச் சபைக்கும் பாடசாலைச் சமூகத்தின் சார்பில் அதிபர் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். வித்தியாலயத்தின் பரிணாம வளர்ச்சியின் மற்றொரு படிக்கல்லாக இத்திறன் வகுப்பறையின் உருவாக்கம் அமைந்திருப்பதுடன் மாணவர்களதும் ஆசிரியர்களதும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை இலகுவாகவும் நேரமுகாமைத்துவத்தற்கு ஏற்பவும் சிறப்பான முறையில் முன்னெடுக்கமுடியும் எனவும் கருதப்படுகிறது. வைபவத்தின் இறுதியில் இத்திறன் வகுப்பறையின் மாதரிச் செயற்பாடும் ஆசிரியர்களினால் செய்து காண்பிக்கப்பட்டது.

 

காரைநகர் பயிரிக்கூடல் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் 31.01.2020 வெள்ளிக்கிழமை நடைபெற்ற 1ம் நாள் இரவு திருவிழா காட்சிகள்!

காரைநகர் பயிரிக்கூடல் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் 31.01.2020 வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடியேற்றத் திருவிழா காட்சிகள்!

காரைநகர் பாலாவோடை இந்து தமிழ்க் கலவன் பாடசாலையின் அதிபர் திரு.சி.ரூபன் அவர்களின் பிரியாவிடை வைபவம் 28.01.2020 செவ்வாய்க்கிழமை அன்று பாடசாலையில் இடம்பெற்றது.

காரைநகர் களபூமி சத்திரந்தை ஸ்ரீ ஞான வைரவர் ஆலயத்தில் 30.01.2020 வியாழக்கிழமை நடைபெற்ற வருடாந்த அலங்கார 7ம் நாள் உற்சவம்!

காரைநகர் களபூமி சத்திரந்தை ஸ்ரீ ஞான வைரவர் ஆலயத்தில் 29.01.2020 புதன்கிழமை நடைபெற்ற வருடாந்த அலங்கார 6ம் நாள் உற்சவம்!

காரைநகர் களபூமி சத்திரந்தை ஸ்ரீ ஞான வைரவர் ஆலயத்தில் 28.01.2020 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வருடாந்த அலங்கார 5ம் நாள் உற்சவம்!

கனடா – காரை கலாச்சார மன்றத்தின் நிதி அனுசரணையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினரால் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்திற்கு திறந்து வைக்கப்படும் திறன் வகுப்பறை (SMART CLASS ROOM) திறப்பு விழா அழைப்பிதழ்! (31.01.2020 வெள்ளிக்கிழமை)

காரைநகர் இந்துக் கல்லூரியின் இல்லங்களுக்கிடையேயான வருடாந்த மெய்வல்லுநர் போட்டி அழைப்பிதழ்! (31.01.2020 வெள்ளிக்கிழமை)

காரைநகர் பயிரிக்கூடல் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் மஹோற்சவ விஞ்ஞாபனம்- 2020

 

காரை அபிவிருத்தி சபையினரால் பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தின் அனுசரணையுடன் காரை முன்பள்ளி மாணவர்களுக்கு செயல்நூல் 26.01.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வழங்கப்பட்டது!

காரை அபிவிருத்தி சபையினரால் பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தின் அனுசரணையுடன் காரை முன்பள்ளி மாணவர்களுக்கு செயல்நூல் 26.01.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வழங்கப்பட்டது. இவ் நிகழ்வில் பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தை சேர்ந்த சின்னத்துரை கோபாலகிருஸ்ணன்(சந்திரன்) அவர்கள் கலந்துகொண்டார்.

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி சென்ற ஆண்டு ஆகஸ்டு மாதம் நடைபெற்ற க.பொ.த.உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள்!

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி

சென்ற ஆண்டு ஆகஸ்டு மாதம் நடைபெற்ற

க.பொ.த.உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள்!

 

 

பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் விபரம் வருமாறு:

Yalton College – Karainagar
A/L Results (New Syllabus)

Student Name Results

1) S.Sivapiriya 2CS

2) L.Kuruparan ACS

3) S.Jeevathas 3C

4) T.Sankavi 3C

5) V.Kajathiri C2S

6) N.Jeyanthini 3S

7) P.Yalini 2AB

8) S.Keerthana 2AS

9) M.Kalaichelvan 2BC

10) N.Sutharsini 2BC

11) R.Thayanithi 2BC

12) S.Pirasanthan A2C

13) K.Suganthini 2BC

14) S.Janaki 2CS

15) S.Pavithira 2CS

16) G.Keerthika B2S

17) T.Keerthika B2S

18) T.Vajuri C2S

19) S.Dinuja C2S

 

 

Yalton College – Karainagar
A/L Results (Old Syllabus)

Student Name Results

1) S.Navaneethan B2C

2) S.Senthuran BCS

3) P.Thuvaraga A2C

4) S.Nirojini BCS

5) N.Pirasanthan 2CS

6) S.Senthuran A2C

காரைநகர் மாப்பாணவூரி நாச்சி அம்மன் ஆலயத்தில் 14.01.2020 நடைபெற்ற பொங்கல் மற்றும் 24.01.2020 நடைபெற்ற கும்பாபிஷேக தின நிகழ்வுகள்! (காணொளி)

காரைநகர் மாப்பாணவூரி அருள் மிகு நாச்சி அம்மன் ஆலயத்தில் 24.01.2020 வெள்ளிக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக தின நிகழ்வுகள்!

காரைநகர் மாப்பாணவூரி அருள் மிகு நாச்சி அம்மன் ஆலயத்தில் 14.01.2020 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொங்கல்!

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதி அனுசரணையுடன் காரை அபிவிருத்திச் சபையினரால் காரைநகர் யாழ்ற்றன் கல்லூரியில் தற்காலிகமாக க.பொ.த. உயர்தர பெளதீக பாடத்திற்குரிய ஆசிரியர் 16.01.2020 வியாழக்கிழமை அன்று நியமனம்.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதி அனுசரணையுடன்

காரை அபிவிருத்திச் சபையினரால்

காரைநகர் யாழ்ற்றன் கல்லூரியில்

தற்காலிகமாக க.பொ.த. உயர்தர பெளதீக பாடத்திற்குரிய ஆசிரியர்

16.01.2020 வியாழக்கிழமை அன்று நியமனம்.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் தலைவர் திரு.சிவசுப்பிரமணியம் சிவராமலிங்கம் அவர்கள் கடந்த செப்டம்பர் மாதத்தில் காரைநகர் விஜயத்தின் போது யாழ்ற்ரன் கல்லூரிக்கு சென்றிருந்தார்.

யாழ்ற்ரன் கல்லூரியில் பெளதீக பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரின் திடீர் இடமாற்றத்தை தொடர்ந்து யாழ்ற்ரன் கல்லூரியில் ஏற்பட்டுள்ள பெளதீக பாட ஆசிரியர் பற்றாக்குறையினை நீக்க தற்காலிகமாக பெளதீக பாடத்திற்குரிய ஆசிரியரை நியமிப்பதற்கு பாடசாலையினால் வேண்டுகோள் விடப்பட்டது.

அதனடிப்படையில் 22.09.2019 அன்று நடைபெற்ற நிர்வாக சபை கூட்டத்தின் போது தலைவர் அவர்களினால் பார்த்தும் கேட்டும் அறிந்து கொள்ளப்பட்ட விடயங்கள் நிர்வாக உறுப்பினர்களிடையே பகிர்ந்து கொள்ளப்பட்டதுடன் கனடா காரை கலாச்சார மன்றம் தொடர்ந்து செயற்படுத்தவுள்ள திட்டங்கள் தொடர்பாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதனடிப்படையில் யாழ்ற்ரன் கல்லூரியில் ஏற்பட்டுள்ள பெளதீக பாட ஆசிரியர் பற்றாக்குறையினை நீக்க தற்காலிகமாக அடுத்து வரும் 6 மாதங்களிற்கு பெளதீக பாட ஆசிரியருக்குரிய தேவையான வேதனத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது காரைநகர் யாழ்ற்றன் கல்லூரியில் தற்காலிகமாக க.பொ.த. உயர்தர பெளதீக பாடத்திற்குரிய ஆசிரியர் 16.01.2020 வியாழக்கிழமை அன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

 

காரைநகர் திண்ணபுரம் யோகர் வளாகத்தில் 16.01.2020 வியாழக்கிழமை நடைபெற்ற மாட்டுப் பொங்கல் நிகழ்வு!

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 16.01.2020 வியாழக்கிழமை நடைபெற்ற மாட்டுப் பொங்கல் நிகழ்வு! (காணொளி)