Tag: காரைச் செய்திகள்

26.06.2020 வெள்ளிக்கிழமை அன்று காரைநகர் கிழவன்காடு கலாமன்ற அறநெறிப் பாடசாலை நடத்திய மாணிக்கவாசகர் குருபூசை விழா!

சங்கடப் படலை

சங்கடப் படலை

எஸ்.கே. சதாசிவம்

 

சுப்பிரமணிய வித்தியாசாலை, சங்கடப்படலை

தமிழ் மக்களின் பண்பாட்டு வரலாற்றுத் தடயங்கள் பேணிப் பாதுகாக்கப்படாமையால் அழிந்து போகும் நிலைமை காணப்படுகின்றது. நமது பண்பாட்டு வரலாற்றுத் தடயங்களையும் அரும்பொருட்களையும் பாதுகாப்பதன் மூலம் நமது இனம் நீண்ட வரலாற்றுப் பெருமை மிக்க இனம் என்பதற்கு உரிமை கோருவதற்குச் சாட்சியங்களாக அமையும்.

யாழ்ப்பாணப் பாரம்பரிய வீடுகளில் காணப்படும் சங்கடப் படலை வாயிற் கட்டட அமைப்பாகும். சங்கடப்படலை என்பது கூரையுடன் கூடிய படலை அமைப்பாகும். படலையின் உட்புறமும் வெளிப்புறமும் திண்ணை அமைப்புடன் காணப்படும். சில சந்தர்ப்பங்களில் படலையின் வெளிப்புறத்தில் மாத்திரம் திண்ணை காணப்படும். வீதி வழியே நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் இளைப்பாறி ஓய்வு எடுத்து தாகம் தீர்த்துச் செல்வதற்காக அமைக்கப்படுவது. முகம் தெரியாதவர்களையும் வரவேற்று உபசரிக்கும் விருந்தோம்பல் பண்பின் அடையாளங்கள் சங்கடப்படலைகள். சில சந்தர்ப்பங்களில் இவற்றோடு இணைந்து கால்நடைகள் நீர் அருந்துவதற்கும் தொட்டிகள் அமைக்கப்படும்.

பழைய காலத்தில் சாதி முறைமை குடி கொண்டிருந்த காலப்பகுதியில் வீட்டிற்கு உள் நுழைபவர்களை வரையறுக்கும் இடமாகவும் இருந்தமை அறியக் கூடியதாக உள்ளது. சில சந்தர்ப்பங்களில் செல்வந்தர்களின் செல்வச் செழிப்பை வெளிக்காட்டுவதாகவும் அமைகின்றது.

மேலே காணப்படும் சங்கடப் படலை சுப்பிரமணிய வித்தியாசாலையின் ஸ்தாபகர் ஸ்ரீமான் சி. சுப்பிரமணியபிள்ளையின் மகன் திரு. சி. சு. கந்தப்பு அவர்களால் 1935 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இடப்பெயர்வு வரை காரைநகரின் பல குறிச்சிகளில் கூரை அமைப்புடன் பெறுமதி மிக்க வேலைப்பாடுகள் நிறைந்த இரும்பினாலான படலைகள் காணப்பட்டன. பேணிப் பாதுகாக்கப்படாமையினால் அழிவடைந்து செல்லும் நிலைமையில் உள்ளது. களபூமியில் இன்றும் இரண்டு வீடுகளில் கூரை அமைப்புடனான படலைகள் காணப்படுகின்றன.

காரைநகர் துறைமுகம் ஊடாக பயணிக்கும் பயணிகள் மாட்டு வண்டி தொடர் அணிகள் இளைப்பாறிச் செல்வதற்கான வசதியை காரைநகர் கிழக்கு வீதியில் விளானைப்பகுதியில் வாழ்ந்த திரு அம்பலவாணர் இராசரத்தினம் ஏற்பாடு செய்திருந்தார். இப்படலை அமைப்பு முழுமையான சங்கடப்படலை அமைப்பாகும்.

 

 

கால்நடைகள் நீர் அருந்துவதற்கான தண்ணீர் தொட்டி

 

 

 

ஆலடிக்கும் வேம்படிக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள திரு. சு. பொன்னம்பலம் அவர்களின் வீட்டின் வாயிற்கதவு 1928 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமைக்கப்பட்டது.

 

 

 

காரைநகருக்கான குழாய் மூலமான குடிநீர் விநியோகம்

 

 

                     

                                     காரைநகருக்கான குழாய் மூலமான குடிநீர் விநியோகம்

                         காரைநகர் வடக்குப் பிரதேசம்

 எஸ்.கே.சதாசிவம்

 

திரு. ஆ. தியாகராசா அவர்கள் கல்லூரி அதிபராக பணியாற்றிய காலத்தில் இருந்து காரைநகருக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்வதற்கான ஆய்வுகளை மேற்கொண்டார். தெரிவு செய்யப்பட்ட கிணறுகளில் இருந்து ஒழுங்கமைக்கப்பட்ட கால இடைவெளிகளில் நீரினைப் பெற்று நீரியல் ஆய்வாளர்களால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வுகளின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் காரைநகருக்கான குழாய் மூலமான குடிநீர் விநியோகத்தை காரைநகர் வடக்குப் பிரதேசத்திற்கு 1976 ஆம் ஆண்டு ஆரம்பித்து வைத்தார். சுப்பிரமணியம் வீதியில் அமைந்துள்ள செட்டியார் வயல் கிணற்றில் இருந்து நீர் எடுக்கப்பட்டு மேற்கு வீதிக்கு அண்மிய சுப்பிரமணியம் வீதியில் அமைந்துள்ள தண்ணீர்த் தாங்கியில் நீர் சேமிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது. காலை 6.00 மணி முதல் 7.00 மணி, மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரையிலான காலப்பகுதியில் நீர் விநியோகம் செய்யப்பட்டது. வலந்தலைச் சந்தியில் இருந்து ஆலடி வரையிலான பகுதியில் மேற்கு வீதியின் வடக்குப் பக்கத்தில் பிரதான சந்திகளில் அமைக்கப்பட்ட பைப்புகளில் (Stand Pipe) இருந்து மக்கள் நீரிணைப் பெற்றனர். பழையகண்டி சிவன் கோவில் வீதியில் அப்பர் கடை சந்தி வரைக்கும் குழாய் மூலம் நீர் பெறும் வசதி இருந்தது. கோடை காலங்களிலும், மழை வீழ்ச்சி குறைந்த காலங்களிலும் கட்டுப்பாடுகளுடன் கூடிய நீர் விநியோகம் நடைபெற்றது. இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் குழாய் மூலம் நீர் பெறக் கூடியதாக இருந்த வேளையிலும் வழமை போல் குடங்களில் நீர் அள்ளி வருவதனையும் தண்ணீர் வண்டில்களில் நீர் ஏற்றி வருவதனையும் கைவிடவில்லை. தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபையின் வழிகாட்டலுடன் காரைநகர் வடக்கு கிராம சபையினால் நீர் விநியோக செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத இடப்பெயர்வு வரை நீர் விநியோகம் நடைபெற்று வந்தது.

சுப்பிரமணியம் வீதியில் அமைந்துள்ள தண்ணீர் தாங்கி

 

 

செட்டியார் வயல் கிணறும் இயந்திர அறையும் – Pump House

 

 

ஆலங்கன்றடி கிணற்றில் இருந்து குழாய் மூலமான குடிநீர் விநியோகம்

திரு. தியாகராசா மகேஸ்வரன் அவர்கள் இந்து கலாச்சார அமைச்சராக பதவி வகித்த காலத்தில் மேற்படி குடிநீர் திட்டத்தைச் செயற்படுத்துவதற்கான நிதியை ஒதுக்கினார்.   தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபையின் வழிகாட்டலுடன் இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆலங்கன்றடி கிணற்றில் இருந்து குடிநீர் பெறப்பட்டு சிவகாமி அம்மன் கோவிலுக்கு அண்மிய பிரதேசத்தில் அமைந்துள்ள தண்ணீர்த் தாங்கியில் நீர் சேமிக்கப்பட்டு மாலை. 4.00 மணி முதல் 4.30 மணி வரை நீர் வழங்கப்படுகின்றது. வேதரடைப்பு, சிவகாமி அம்மன் கோவிலடி, பொன்னம்பலம் வீதி, வெடியரசன் வீதி, தங்கோடை, செம்பாடு ஆகிய இடங்களுக்கு நீர் விநியோகம் செய்யப்பட்டது. தொடர்ந்து வந்த காலங்களில் பயரிக்கூடல், மணற்காட்டு அம்மன் கோவில் பிரதேசத்திற்கும் நீர் வழங்கல் விஸ்தரிக்கப்பட்டது. தற்போதும் இயங்கு நிலையில் உள்ளது.

 

 சிவகாமி அம்மன் கோவில் வீதியில் அமைந்துள்ள ஆலங்கன்றடி கிணற்றில் இருந்து வழங்கப்படும் குழாய் மூலமான குடிநீர் விநியோகத்திற்கான தண்ணீர் தாங்கி

 

 

தோப்புக்காட்டு கிராமத்திற்கான குழாய் மூலம் குடிநீர் விநியோகம்

தோப்புக்காட்டு மக்களுக்கான குடிநீர் விநியோகத்திட்டம் 1972 இல் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் திரு. விமல் அமரசேகரா அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தம்பன் வயல் பகுதியில் குடிநீர் விநியோகத்திற்கான கிணறும் தண்ணீர்த் தாங்கியும் அமைக்கப்பட்டது. Times சங்கரப்பிள்ளை அவர்களால் இச்செயற்றிட்டத்திற்கான காணி அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அரசாங்கமும் சீனோர் நிறுவனத்தில் பணியாற்றியவர்களும் இணைந்து இக்குடிநீர் விநியோகத்தினைச் செயற்படுத்தினர். குடிநீர் விநியோகத்திற்கான சில வேலைத் திட்டங்கள் சிரமதான அடிப்படையில் நடைபெற்றது. துறைமுகப் பகுதியில் 1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில் காணப்பட்ட அமைதியற்ற சூழ்நிலை காரணமாக இச்செயற்றிட்டம் நின்று போய் விட்டது.

 

தோப்புக்காட்டு கிராமத்திற்கான குடிநீர் விநியோகத்திற்கான

தண்ணீர் தாங்கியும் கிணறும்

 

 

தோப்புக்காட்டு கிராமத்திற்கான குடிநீர் விநியோகத்திற்கான இயந்திர அறை (Pump House)

 

 

 

 

வியாவில் ஐயனார் தேவஸ்தான குழாய் மூலமான குடிநீர் விநியோகம்

 

வியாவில் ஐயனார் தேவஸ்தான குழாய் மூலமான குடிநீர் விநியோகத்திற்கான நிதியினை லண்டன் வர்த்தகர் திரு. நட்டுவானி வழங்கினார். இது ஒரு மட்டுப்படுத்தப்பட்ட குடிநீர் விநியோக சேவையாகும். வருடம் முழுவதும் வயலில் அமைந்துள்ள தண்ணீர்த்தாங்கி சூழலிலும், வியாவில் ஐயனார் தேவஸ்தான சூழலிலும் கால்நடைகள் நீர் அருந்துவதற்கான தொட்டிகள் அமைக்கப்பட்டு நீர் வசதி செய்யப்பட்டுள்ளது. வியாவில் சைவ வித்தியாசாலைக்கும் நீர் வழங்கப்படுகின்றது. குடிநீர் தட்டுப்பாடான காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் ஐயனார் தேவஸ்தான சூழலில் குழாய் மூலம் குடிநீர் பெறுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

 

வியாவில் ஐயனார் தேவஸ்தான குடிநீர் விநியோகத்திற்கான தண்ணீர் தாங்கி

 

 

 

 

ADB/AFB/GOSL நிதி உதவியுடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி குடிநீர் விநியோகத் திட்டத்திற்கான காரைநகரில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தாங்கி

 

 

 

 

 

 

 

நன்றியுடன் வாழ்த்துகிறோம்

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரும், கனடா கலாச்சார மன்றமும் இணைந்து கொரோனா நிவாரணப் பணிக்கு வாழ்வாதார உதவித்தொகை வழங்கல்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரும், கனடா கலாச்சார மன்றமும் இணைந்து கொரோனா நிவாரணப் பணிக்கு வாழ்வாதார உதவித்தொகை வழங்கல்.

எமது தாய் சங்கமான காரைநகர் அபிவிருத்திச் சபையினரின் செயற்திட்டத்தின் கீழ் ஊரில் உள்ள பெண் தலைமைத்துவம், மாற்றுத் திறனாளி குடும்பங்களுக்கான கொரோனா உதவித்தொகை கொடுப்பனவு சிட்டை வழங்கும் நிகழ்வு இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

காரைநகரில் உள்ள ஓரு நபரை தலைமைத்துவமாக கொண்ட 605 குடும்ப உறுப்பினர்களுக்கு 650.00 ரூபாய்களும், இரண்டு நபரைத் தலைமைத்துவமாக கொண்ட 280 குடும்ப உறுப்பினர்களுக்கு 1000.00 ரூபாய்களும், மூன்று நபரைத் தலைமைத்துவமாக கொண்ட 370 குடும்ப உறுப்பினர்களுக்கு 1500.00 ரூபாய்களுமாக மொத்தமாக 1255 குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டன.

“ஓன்று பட்டால் உண்டு வாழ்வு” என்ற கூற்றிற்கு இணங்க இச் செயற்திட்டத்திற்கு கனடா கலாச்சார மன்றமும் எமது சபையினரும்  பூரண நிதி வழங்கி சிறப்பித்திருந்தனர். எமது சகோதர அமைப்பான கனடா கலாச்சார மன்றத்தினருக்கும், இச் செயற்திட்டத்தை சிறந்தமுறையில் செயல்படுத்திய காரைநகர் அபிவிருத்திச் சபை நிர்வாக உறுப்பினர்களுக்கும் எமது நன்றிகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

 

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

இங்ஙனம்

                சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

               செயற்குழு உறுப்பினர்கள்

  மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்

16.05.2020

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதி அனுசரணையில் வீடு முடித்துக் கொடுக்கப்பட்டது.

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதி அனுசரணையில்

வீடு முடித்துக் கொடுக்கப்பட்டது.

காரைநகர் மாப்பாணவூரியைச் சேர்ந்த திருமதி கிருபாராணி அவர்கள் 5 வருடங்களுக்கு முன்னர் கணவர் இறந்த நிலையில் தாம் கட்ட ஆரம்பித்த வீட்டிற்கு கதவுகள் யன்னல்கள் இன்றி தமது வயது வந்த இரு பெண் பிள்ளைகள்,ஒரு மகனுடன் வாழ்ந்து வந்தார். இவர் தமது அன்றாட தேவைகளுக்காக தற்போது கமநல சேவைகள் திணைக்களத்தின் அம்மாச்சி உணவகத்தில் உணவு தயாரித்து விற்று தனது குடும்பத்தை பராமரித்து வருகிறார். காலை 8மணிமுதல் மாலை 6மணிவரை இங்கு இருப்பதால் வீட்டிற்கு பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை என காரை அபிவிருத்திச் சபை பரிந்துரைப்பின்பேரில் மன்ற உபதலைவர் திரு பாலச்சந்திரன் அண்மையில் நேரில் பார்வையிட்டு செயற்குழுவிற்கு வழங்கிய அறிக்கையின் படி கனடா காரை கலாச்சார மன்றத்தினால் இவர்கள் வீட்டுக்கு தேவையான யன்னல்கள் கதவுகளும் ரூபா 225,000.00 செலவில் செய்து முடிக்கப்பட்டுள்ளது. திருமதி கிருபாராணி அவர்கள் கனடா காரை கலாச்சார மன்றத்திற்கும் கனடா வாழ் காரைநகர் மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

கீழ் காணும் படங்கள் முன்பிருந்ததையும் வீடுமுடித்தபின் குடும்பம் மகிழ்ச்சியாக காணப்படுவதையும் காணலாம்.

படங்கள்: சிந்துஜா வீடியோ

காரைநகர் பாடசாலை மாணவர்களின் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளும் காரைநகர் கல்வி நிலைமையும்

 

காரைநகர் கல்வி நிலைமை

அண்மையில் வெளிவந்த கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை பாடசாலை பெறுபேறுகளின் படி தீவக வலயத்தில் 53.17% மாணவர்களே பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்கள். மன்னார் மாவட்டத்தில்74.17% மாணவர்கள்  சித்தியடைந்துள்ளார்கள்.

காரைநகரில் உள்ள 4 பாடசாலைகளிலும் மொத்தம் 128 பேர் பரீட்சைக்குத் தோற்றி 64 மாணவர்கள் 50% மட்டுமே சித்தியடைந்துள்ளனர் அதிலும் 59 பேர் மட்டுமே உயர் கல்வியைத் தொடரமுடியும். இது கல்வியில் காரைநகர் எவ்வளவு தூரம் பின்னடைவாக உள்ளதென்பதைக் காணக் கூடியதாக உள்ளது.

நாம் ஒருசில மாணவர் பெற்ற அதிகூடிய பெறுபேறுகளை பார்த்து மட்டும் கல்வியின் தரத்தை நிச்சயிக்கமுடியாது. பாடசாலைகளில் கல்வியைத் தவிர்ந்து மற்றைய விடயங்களுக்காக  நேரத்தையும் பணத்தையும்  வீணடிக்காது கல்லூரி அதிபர்கள்,ஆசிரியர்கள் முழு அக்கறை எடுப்பார்களாயின் இந்த நிலைமையை மாற்றமுடியும். பாடசாலைகளில் உள்ள பணத்தை கொண்டு ஆசிரியர்களுக்கு ஊக்குவிப்புச் சலுகைகள் அல்லது மேலதிக வகுப்புக்கள் என்பவற்றை நடத்துவதால் இந்த நிலைமையை மாற்றமுடியும் என நம்புகிறோம். எதிர்வரும் காலங்களில் விசேட வகுப்புக்களை நடத்த கனடா காரை கலாச்சார மன்றம் முன்வரும்.

 

 

 

[su_document url=”http://www.karainagar.com/pages/wp-content/uploads/2020/05/KDS-OL-Results-9.pdf”]

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 13.03.2020 வெள்ளிக்கிழமை நடைபெற்ற 4ம் நாள் இரவு திருவிழா காணொளி!

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 13.03.2020 வெள்ளிக்கிழமை நடைபெற்ற 4ம் நாள் பகல் திருவிழா காணொளி!

ஈழத்துச் சிதம்பரம் காரைநகர் திண்ணபுரம் சிவன் கோவில் பங்குனி மகோற்சவம் கொடியேற்றத் திருவிழா – 2020

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில்12.03.2020 வியாழக்கிழமை நடைபெற்ற 3ம் நாள் பகல் திருவிழா காணொளி!

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 17.03.2020 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 8ம் நாள் பகல் திருவிழா காட்சிகள்!

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 12.03.2020 வியாழக்கிழமை நடைபெற்ற 3ம் நாள் இரவு திருவிழா காணொளி!

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 10.03.2020 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொடியேற்றத் திருவிழா காணொளி!

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் 07.03.2020 சனிக்கிழமை நடைபெற்ற தேர்த் திருவிழா காணொளி! (புதிது)

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில்13.03.2020 வெள்ளிக்கிழமை நடைபெற்ற 4ம் நாள் இரவு திருவிழா காட்சிகள்!

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 13.03.2020 வெள்ளிக்கிழமை நடைபெற்ற 4ம் நாள் பகல் திருவிழா காட்சிகள்!

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 12.03.2020 வியாழக்கிழமை நடைபெற்ற 3ம் நாள் இரவு திருவிழா காட்சிகள்!

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 12.03.2020 வியாழக்கிழமை நடைபெற்ற 3ம் நாள் பகல் திருவிழா காட்சிகள்!

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் 07.03.2020 சனிக்கிழமை நடைபெற்ற தேர்த் திருவிழா காட்சிகள்! (புதிது)

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் 09.03.2020 திங்கட்கிழமை நடைபெற்ற பூங்காவனத் திருவிழா காணொளி!

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இன்று 10.03.2020 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொடியேற்றத் திருவிழா காட்சிகள்!

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் 09.03.2020 திங்கட்கிழமை நடைபெற்ற பூங்காவனத் திருவிழா காட்சிகள்!

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் 08.03.2020 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தீர்த்தத் திருவிழா காட்சிகள்!

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய பிரம்மோற்சவ விஞ்ஞாபனம் – 2020

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் இன்று 07.03.2020 சனிக்கிழமை நடைபெற்ற தேர்த் திருவிழா காட்சிகள்!

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் இன்று 07.03.2020 சனிக்கிழமை நடைபெற்ற தேர்த் திருவிழா காணொளி!

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் 06.03.2020 வெள்ளிக்கிழமை நடைபெற்ற சப்பறத் திருவிழா காணொளி!

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் 03.03.2020 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 6ம் நாள் திருவிழா காட்சிகள்!

01.03.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காரைநகர் கிழவன்காடு கலாமன்றம் நடத்திய ஸ்தாபக தின விழா!