Tag: காரைச் செய்திகள்

காரைநகர் திக்கரை முருகமூர்த்தி கோவில் வருடாந்த மகோற்சவத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற மூன்றாம் திருவிழா பகல் காட்சிகள்.

காரைநகர் திக்கரை முருகமூர்த்தி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் இரண்டாம் திருவிழா இரவுக் காட்சிகள்.

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம் (காரைநகர் இந்துக் கல்லூரி)வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவுநர் தினமும் 04.07.2015 சனிக்கிழமை காலை இடம்பெற்றது. காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

PART-1

PART-2

காரைநகர் திக்கரை முருகமூர்த்தி கோவில் வருடாந்த மகோற்சவத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இரண்டாம் திருவிழா பகல் காட்சிகள்.

காரைநகர் திக்கரை முருகமூர்த்தி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் முதலாம் திருவிழா இரவுக் காட்சிகள்.

திக்கரை முருகனுக்கு இன்று கொடி

காரைநகர் திக்கரை முருகமூர்த்தி கோவில் வருடாந்த மகோற்சவம் இன்று திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ந்து பத்துத் தினங்கள் மிகச் சிறப்பாக இடம்பெற உள்ளது.
மகோற்சவத்தின் தேர்த்திருவிழா எதிர்வரும் 14ம் திகதி செவ்வாய்க்கிழமையும் மறுநாள் புதன்கிழமை தீர்த்தத் திருவிழாவும் இடம்பெற உள்ளது.


இன்றைய கொடியேற்றக் காட்சிகளை இங்கே காணலாம்.

காரைநகர் தியாகராசா ம.ம.வித்தியாலய வருடாந்தப் பரிசளிப்பு விழா 04.07.2015 சனிக்கிழமை காலை இடம்பெற்றது.

DSC_7756 (Copy)

காரைநகர் தியாகராசா ம.ம.வித்தியாலய வருடாந்தப் பரிசளிப்பு விழா 04.07.2015 சனிக்கிழமை காலை இடம்பெற்றது.

திருமதி வாசுகி தவபாலன் தலைமையில் இடம்பெற்ற விழாவில் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக் கழக மருத்துவ பீடப் பேராசிரியர் வை.பரமேஸ்வரனும் சிறப்பு விருந்தினராக தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் அவர்களும் கௌரவ விருந்தினராக ஓய்வு நிலை மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆ.ராஜேந்திரன் தம்பதிகளும் கலந்து கொண்டனர்.


நிறுவுநர் உரையினை ஓய்வு நிலை ஆங்கிலத் துறை உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி சிவபாக்கிஜம் நடராசா நிகழ்த்தினார்.


நிகழ்விற்கான அனுசரனையினை வைத்தியக் கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரட்ணம் நம்பிக்கை நிதியம் வழங்கியது.
 

காரைநகர் மடத்துக்கரை முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் புதிய சித்திரத் தேர் அமைப்பதற்கான கால்கோள் விழா கடந்த புதன்கிழமை ஆலயத்தில் இடம்பெற்றது.

காரைநகர் மடத்துக்கரை முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் புதிய சித்திரத் தேர் அமைப்பதற்கான கால்கோள் விழா கடந்த புதன்கிழமை ஆலயத்தில் இடம்பெற்றது.


இந்த ஆண்டே அம்பாளுக்கு மகோற்சவம் ஆரம்பிக்கப்பட்டு தேர்த் திருவிழாவும் இடம்பெற்றது.

அம்பாளுக்கு தேர் இல்லாத குறையை அறிந்த பத்தர்கள் புதிய தேரினை அமைக்கவேண்டும் என்ற முடிவினை தேர்த்திருவிழா அன்றே எடுத்து செயற்படத் தொடங்கி உள்ளனர்.அடுத்த ஆண்டு அம்பாள் புதிய சித்திரத்தேரில் ஆரோகனிக்கும் காட்சி இடம்பெறும்.

DSC_7450 (Copy) DSC_7452 (Copy) DSC_7453 (Copy) DSC_7454 (Copy) DSC_7455 (Copy) DSC_7456 (Copy) DSC_7457 (Copy) DSC_7458 (Copy) DSC_7459 (Copy) DSC_7460 (Copy) DSC_7461 (Copy) DSC_7462 (Copy) DSC_7463 (Copy) DSC_7464 (Copy) DSC_7465 (Copy) DSC_7466 (Copy) DSC_7467 (Copy) DSC_7468 (Copy) DSC_7469 (Copy) DSC_7470 (Copy) DSC_7471 (Copy) DSC_7472 (Copy) DSC_7473 (Copy) DSC_7474 (Copy) DSC_7475 (Copy) DSC_7476 (Copy) DSC_7477 (Copy) DSC_7478 (Copy)

 

காரைநகர் பிரதேச சபைக்கு அரசினால் புதிய பக்கோ இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

DSC_4122 (Copy)

காரைநகருக்கான தனியான பிரதேச சபை முன்னாள் அமைச்சர் அமரர் தியாகராசா மகேஸ்வரனின் முயற்சியால் அமைக்கப்பட்டமையினால் ஏனைய பிரதேசங்களுக்கு ஒதுக்கப்படுவது போல அனைத்து ஒதுக்கீடுகளும் வழங்கப்படுகின்றன.


அந்தவகையில் சுமார் 15 மில்லியன் ரூபா பெறுமதியான பக்கோ இயந்திரம் காரைநகர் பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிக்காக வழங்கப்பட்டுள்ளது.


பிரதேச சபைத் தலைவர் வே.ஆணைமுகன் மற்றும் பிரதேச சபை அலுவலர்கள் கொழும்பு சென்று பெற்றுள்ளனர்.


கொழும்பிலிருந்து மேற்படி பக்கோ இயந்திரம் தியாகராசா பரமேஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் காரைநகரை வந்தடைந்தது.காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்திற்க அருகில் உள்ள குளக்கட்டில் வைத்து இறக்கப்பட்டு சுவாமி தரிசனத்திற்குப் பின்னர் பிரதேச சபை வளாகத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது.


காரைநகரில் உள்ள குளங்கள்,வாய்க்கால்கள் ஆழப்படுத்திப் புனரமைப்பதற்கும் ஏனைய பாரிய துப்புரவுப் பணிகளுக்கும் இந்தப் பக்கோ இயந்திரம் பேருதவியாக அமையும்.

DSC_0091 (Copy) DSC_0093 (Copy) DSC_0095 (Copy) DSC_0096 (Copy) DSC_4101 (Copy) DSC_4102 (Copy) DSC_4103 (Copy) DSC_4105 (Copy) DSC_4107 (Copy) DSC_4110 (Copy) DSC_4114 (Copy) DSC_4116 (Copy) DSC_4120 (Copy) DSC_4122 (Copy)
 

 

காரைநகர் மணிவாசகர் சபை நடாத்திய மணிவாசகர் குருபூசை நிகழ்வு கடந்த திங்கட்கிழமை ஈழத்துச் சிதம்பரத்தில் இடம்பெற்றது.

DSC03497 (Copy)

ஈழத்துச் சிதம்பர தேவஸ்தானத்தில் காலை 7.00 மணி முதல் திருவாசக முற்றோதலும்,நண்பகல் 11.30 மணிக்கு மணிவாசகப் பெருமானுக்கு விஷேட அபிசேக ஆராதனைகளும் மாலை 3.30 மணிக்கு சபையின் தலைவர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை தலைமையில் மணிவாசகர் விழாவும் நடைபெற்றது.


இந்த விழாவில் மணிவாசகர் குருபூசையை ஒட்டி பாடசாலை மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் முதலிடங்களைப் பெற்ற மாணவர்களின் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் சிறப்புச் சொற்பொழிவினை சிம்மயா மிஷன் வதிவிட ஆச்சாரியார் பிரமச்சாரி ஜாக்கிரத சைதன்ய சுவாமிகள் நிகழ்த்தினார்.மாணவர்களுக்கான பரிசில்களை பேராசிரியர் வே.தர்மரட்ணம் வழங்கிக் கௌரவித்தார்.

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம் (காரைநகர் இந்துக் கல்லூரி)வருடாந்த பரிசளிப்பு விழா அழைப்பிதழ்

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம் (காரைநகர் இந்துக் கல்லூரி)வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவுநர் தினமும் நாளை சனிக்கிழமை (04.07.2015) அன்று காலை 9:00 மணிக்கு நடராஜா ஞாபாகார்த்த மண்டபத்தில் கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தலைமையில் நடைபெற உள்ளது. 


விழாவிற்குப் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மருத்துவ பீட வாழ்நாள் பேராசிரியர் திரு.S.V.பரமேஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கின்றார். 


சிறப்பு விருந்தினராக தீவக வலயக் கல்விப்பணிப்பாளர் திரு.T.ஜோன் குயின்ரஸ் அவர்;களும் கௌரவ விருந்தினராக ஓய்வுநிலை வடமாகாண கல்விப் பணிப்பாளர் திரு.A. இராஜேந்திரன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றார்கள்.


நிறுவுநர் சயம்பு நினைவுப் பேருரையை சயம்பு உபாத்தியாயரின் அன்புக்குரிய மாணவரும் கல்லூரியில் நாற்பது ஆண்டுகள் நல்லாசானாகப் பணியாற்றியவருமாகிய R.கந்தையா மாஸ்ரர் அவர்களின் புதல்வியும் கல்லூரியின் பழைய மாணவியும் ஆங்கில ஆசிரியையும் ஒய்வுநிலை உதவிக்கல்விப் பணிப்பாளருமாகிய திருமதி.சிவபாக்கியம் நடராஜா அவர்கள் நிகழ்த்த இருக்கின்றார்.

 
கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவிற்கான நிதி அநுசரணை கனடாவில் பிரபல குழந்தை மருத்துவ நிபுணராக  பணியாற்றிவரும் மருத்துவ கலாநிதி வி.விஜயரத்தினம் அவர்களினால் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் பெருமுயற்சியினால் நிறுவப்பட்ட "மருத்துவ கலாநிதி விசுவலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியத்தில்" இருந்து பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.  


சிறப்பு விருதுகளுக்கும் பணப்பரிசுகளுக்குமான நிதி அநுசரiணையை பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளை வழங்கியிருக்கின்றமையும் இவற்றுள் தமது அன்பிற்குரியவர்கள் நினைவாக நான்கு ஞாபாகார்த்தப் பரிசுகளை பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் நால்வர் தமது அன்பிற்குரியவர்களின் நினைவாக நிதி அநுசரணை செய்து வழங்கியிருக்கின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 


க.பொ.த (சா-த) பரீட்சையில் கணித பாடத்தில் A தர சித்தி பெற்ற மாணவர்களுக்கான பரிசாக கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபர்  'அமரர். சின்னத்தம்பி தம்பிராசா நினைவுப் பரிசிலை' அவரது துணைவியார் திருமதி.மனோன்மணி தம்பிராசா அவர்களும் 


க.பொ.த (சா-த) பரீட்சையில் வாய்ப்பாட்டு இசைப் பாடத்தில் A தர சித்தி பெற்ற மாணவர்களுக்கான 'அமரர். சரஸ்வதி சுப்பிரமணியம் நினைவுப் பரிசிலை' அவரது புதல்வன் குடும்பத்தினரான திரு. திருமதி.சச்சிதானந்தன் குடும்பத்தினரும்


பாடசாலையில் அதிசிறந்த மாணவன் அல்லது மாணவிக்கான  சிறப்பு விருதினை பாடசாலையின் முன்னாள் ஆசிரியர் 'அமரர்.நாகமுத்து கனகசுந்தரம் ஞாபாகார்த்த விருதாக அவரது புதல்வன் திரு.கனக.சிவகுமாரன் அவர்களும்


பாடசாலையில் அதிசிறந்த விளையாட்டு வீரன் மற்றும் அதிசிறந்த விளையாட்டு வீராங்கனை ஆகியோருக்கான விருதினை பாடசாலையின் முன்னாள் அதிசிறந்த விளையாட்டு வீரரும், காரைநகரில் விளையாட்டுத்துறையின் முன்னோடியுமான 'அமரர் அப்பாக்குட்டி சுந்தரம்பிள்ளை ஞாபாகார்த்த விருதாக அவரது பெறாமகன் திரு.மா.கனகசபாபதி அவர்களும் நிதி அநுசரணை செய்து வழங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 
இதேவேளையில், மற்றொரு சிறப்பு விருதாக கல்லூரியில் அதிசிறந்த ஆசிரியருக்கான கௌரவ விருதாக பாடசாலையில் நாற்பது ஆண்டுகள் நற்பணியாற்றிய நல்லாசான் ‘அமரர். R.கந்தையா ஞாபகார்த்த விருதினை’ அவரது புதல்வியும் ஒய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமாகிய திருமதி.சிவபாக்கியம் நடராஜா அவர்கள் நிதி அநுசரணை செய்து வழங்குகின்றார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்


கீழே விழாவிற்கான அழைப்பிதழைக் காணலாம். 

Prize Day Invitation 2Prize Day Invitation 1

 

காரைநகர் நியூ ஸ்ரார் அக்கடமியின் பரிசளிப்பு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு விஞ்ஞான ஆசிரியர் இ.திருப்புகழூர்சிங்கம் தலைமையில் நடைபெற்றது.

பிரதம விருந்தினராக வாழ்நாள் பேராசிரியர் வே.தர்மரட்ணம் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக யாழ் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை விரிவுரையாளர் கலாநிதி திருமதி வீரமங்கை யோகரத்தினம்,யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் வே.முருகமூர்த்தி,ஓய்வு நிலை அதிபர் கா.குமாரவேலு ஆகியோர் கலந்துகொண்டனர்.

காரைநகர் சிவகாமி அம்மன் வருடாந்த உற்சவம் 10ம் உபயம் காலை நிகழ்வு காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.


 

காரைநகர் சிவகாமி அம்மன் வருடாந்த உற்சவம் 9ம் உபயம் காலை நிகழ்வு காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.


 

காரைநகர் சிவகாமி அம்மன் வருடாந்த உற்சவம் 7ம் உபயம் மாலை நிகழ்வு காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.


 

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற நடேசர் அபிஷேகமும் ஆனி உத்தர தரிசனமும்.

காரைநகர் சிவகாமி அம்மன் 7ம் நாள் காலை நிகழ்வு காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

காரைநகர் சிவகாமி அம்மன் வருடாந்த உற்சவம் 6ம் உபயம் காலை நிகழ்வு காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.


 

காரைநகர் சிவகாமி அம்மன் வருடாந்த உற்சவம் 5ம் உபயம் மாலை நிகழ்வு காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.


 


 

காரைநகர் சிவகாமி அம்மன் வருடாந்த உற்சவம் 5ம் உபயம் காலை நிகழ்வு காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.


 

காரைநகர் மணிவாசகர் சபை நடாத்தும் மணிவாசகர் குருபூசை நிகழ்வும் மணிவாசகர் விழாவும்

காரைநகர் மணிவாசகர் சபை நடாத்தும் மணிவாசகர் குருபூசை நிகழ்வு நாளை மறுதினம் திங்கட்கிழமை ஈழத்துச் சிதம்பரத்தில் இடம்பெற உள்ளது.

ஈழத்துச் சிதம்பர தேவஸ்தானத்தில் காலை 7.00 மணி முதல் திருவாசக முற்றோதலும்,நண்பகல் 11.30 மணிக்கு மணிவாசகப் பெருமானுக்கு விஷேட அபிசேக ஆராதனைகளும் மாலை 3.30 மணிக்கு சபையின் தலைவர் தலைமையில் மணிவாசகர் விழாவும் நடைபெற உள்ளது.

இந்த விழாவில் மணிவாசகர் குருபூசையை ஒட்டி பாடசாலை மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் முதலிடங்களைப் பெற்ற மாணவர்களின் நிகழ்வுகள் இடம்பெற உள்ளதுடன் சிறப்புச் சொற்பொழிவினை சிம்மயா மிஷன் வதிவிட ஆச்சாரியார் பிரமச்சாரி ஜாக்கிரத சைதன்ய சுவாமிகள் நிகழ்த்த உள்ளார்.மாணவர்களுக்கான பரிசில்களை பேராசிரியர் வே.தர்மரட்ணம் வழங்குவார்
 

காரைநகர் நியூ ஸ்ரார் அக்கடமியின் பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை இடம்பெற உள்ளது

காரைநகர் நியூ ஸ்ரார் அக்கடமியின் பரிசளிப்பு விழா நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு விஞ்ஞான ஆசிரியர் இ.திருப்புகழூர்சிங்கம் தலைமையில் இடம்பெற உள்ளது.

பிரதம விருந்தினராக வாழ்நாள் பேராசிரியர் வே.தர்மரட்ணம் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக யாழ் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை விரிவுரையாளர் கலாநிதி திருமதி வீரமங்கை யோகரத்தினம்,யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் வே.முருகமூர்த்தி,ஓய்வு நிலை அதிபர் கா.குமாரவேலு ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.
 

 

காரைநகர் சிவகாமி அம்மன் 4ம் நாள் மாலை நிகழ்வு காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

காரைநகர் சிவகாமி அம்மன் 4ம் நாள் காலை நிகழ்வு காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

காரைநகர் சிவகாமி அம்மன் வருடாந்த கொடியேற்றம் மாலை நிகழ்வு காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

காரைநகர் சிவகாமி அம்மன் வருடாந்த கொடியேற்ற காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

காரைநகர் புகலி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் ஆலய சற்குண சற்சந்தான பாக்கிய மகாயாகம் பத்தாம் நாள் காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

அகில இலங்கைத் தமிழ்த்தினப் போட்டியில் மாகாண மட்டத்தில் யாழ்ற்ரன் கல்லூரி 2ம் இடம்

இலங்கைக் கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட அகில இலங்கை தமிழ்த்தினப் போட்டியில் பிரிவு 4 இற்கான தனிநடனப் போட்டியில் யாழ்ற்ரன் கல்லூரி மாணவன் செல்வன் செந்தில்நாதன் பிரசாந்தன் 2ம் இடத்தைப் பெற்றுள்ளார். இம்மாணவனுக்கும், இம்மாணவனைப் பயிற்றுவித்த ஆசிரியை திருமதி. சகிலா சுதாகரன் அவர்களுக்கும் கல்லூரி அதிபர் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கிறார்.

DSC02362

கிழக்கு றோட்டிற்கு புதிய (Land Line) ரெலிபோன் வசதி சீக்கிரத்தில்!

துவரை காலமும் கிழக்கு றோட்டிற்குத் தொலைபேசித்தொடர்பு வசதிகள் (Land Line) இல்லாமலிருந்தது. ஸ்ரீலங்கா ரெலிகொம்முடன் தொடர்பு கொண்டு எடுத்த முயற்சியினால் அவர்கள் அடுத்த மாதமளவில் இவ்வசதி செய்து தரப்படும் என்று உத்தரவாதம் அளித்துள்ளனர். 

அதன் நிமித்தமாக நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திலிருந்து ஸ்ரீலங்கா ரெலிகொம் மனேஜர் களபூமித் தொகுதிக்கு விஜயம் செய்து எங்கெங்கு குறிப்பிட்ட வசதியினை வழங்கலாம் என்று கணிப்பு எடுத்துச் சென்றார்.

அவ்வசதியினால் முக்கியமாக சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம், காரைநகர் டிப்போ, கால்நடை வைத்தியசாலை, காரைநகர் பிரதேச சபை, துறைமுகத்திலுள்ள தனியார் போக்குவரத்து நிலையம் போன்ற நிறுவனங்கள் பலனடையவுள்ளன. அத்துடன் விரும்பிய மக்களும் ரெலிபோன் வசதியினைப் பெற்றுக்கொள்ளலாம். ஸ்ரீலங்கா ரெலிகொம் மனேஜரை வீதி வீதியாக அழைத்துச் சென்று எங்கெங்கு பொருத்தலாம் னெ;று அடையாளம் காட்டிய தம்பி கபிலனுக்கு நன்றி உரித்தாகுக.

தகவல்

சிவா தி மகேசன்

 

 

காரைநகரிலே, அதுவும் களபூமியில் இப்படியும் ஒரு நன்நீர் கிணறா?

ஆம் இன்றைய நல்லாட்சிக் காலத்தில் பல நல்ல காரியங்கள் நடைபெறுகின்றன. வருடா வருடம் வானம் பார்த்து ஏமாறும் நம்மக்களுக்கு மன்மத வருடமாகிய இவ்வாண்டில் வருணன் கருணை கொண்டு நெடுமழை பொழிந்தான். அரசாங்கத்தின் 'நூறு நாள்' திட்டத்தின் கீழ் விளானையில் கிணறு வெட்டுவதற்காக எமது பிரதேச செயலரின் ஊடாக நிதி கிடைத்தது.

அதனைக் கொண்டு இங்கிலாந்து வாழ் நமது உறவாகிய தம்பி கந்தையா பரமேஸ்வரன் (இராசன்) அவர்கள் நன்கொடை செய்த ஒரு பரப்புக் காணியில் கிணறு தோண்டத் தொடங்கினோம். தொடர்ந்து மழை பெய்த காரணத்தினால் 13 அடி வரையில் சென்றதுமே ஆச்சரியப்படுமளவிற்கு ஆறு அடி ஆழத்திற்கு மேல் நீர் பொங்கியது மட்டுமல்ல அந்நீரும் அமிர்தம் போன்று சுத்தமான, அதி சிறந்த நன்நீராக இருந்தது. கிணற்றுக் கட்டிட வேலை இன்னும் ஆரம்பிக்கப் படவில்லை. இருந்தும் விளானை மக்கள் ஆனந்தம் பொங்க, அந்நீரிலேயே பொங்கல் செய்து படைத்து வந்தோர் அனைவருக்கும் சர்க்கரைச் சாதம் வழங்கிக் கொண்டாடினார்கள். நான் இங்கு கடந்த சில வருடங்கள் வாழ்ந்தாலும் போத்தல் தண்ணீரைத் தவிர வேறொரு தண்ணீரும் அருந்தவில்லை. ஆனால் இன்றோ காரை மாதாவின் நிலத்திலிருந்து பெற்ற தண்ணீரை அருந்தும் பொழுது கிடைத்த இன்பத்திற்கு நிகரேதுமில்லையெனலாம். இதற்கு அத்தாட்சியாக வெளியூரிலிருந்து குடிநீர் கொண்டுவரும் ஒரு பௌசர் சாரதியும் இந்நீரை அருந்தியதுடன் இது வெளியூர் குடிநீரிலும் பார்க்க மிகவும் சுவையாகவுள்ளது என்றும் கூறினார் ( நம்பினால் நம்புங்கள் –  தண்ணீருக்கும் சுவையுள்ளது.) இதுபோன்று நல்ல நிலங்களைத் தேடியெடுத்து இன்னும் பல கிணறுகள் தோண்டினால் நமது குடிநீர் பற்றாக்குறையினை ஓரளவு குறைக்கலாம்.

ஆனாலும் இதுபோன்ற நன்நீர் கிணறுகளுக்கு மோட்டார் போட்டு இறைக்காமல் நம்முன்னோர் காட்டிய வழியில் வாளியினால் நீரை அள்ளிப் பாவித்தோமேயானால் வருடத்தில் பல மாதங்களுக்கு நம் நீரே நமது அடிப்படைத் தேவையினைப் பூர்த்தி செய்யும் என்ற நிம்மதியுடன் வாழலாம். புல இலட்சங்கள் செலவழித்து வெளியூரிலிருந்து குடிநீரினைக் கொண்டு வரும் அதே வேளையில் சில ஆயிரங்கள் செலவழித்து பீப்பா வண்டிகளை மக்களுக்கு வழங்கினால் பேருதவியாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்தாகும்.

பொங்கலை உண்டு நன்நீரை அருந்தி ஏப்பம் விடும் இதே வேளையில் காணி நிலம் வழங்கிய தம்பி இராசனுக்கும் (அவரது தாய் தந்தை உட்பட) அரசாங்க நிதியினை அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் பகிர்ந்து வழங்கும் பிரதேச செயலருக்கும் மனம் கனிந்ததும் வயிறு நிறைந்ததுமான நன்றியினை விளானை மக்கள் சார்பாகத் தெரிவிக்கின்றேன்.

எமது ஊரிலிருந்து எமதூரான் 

சிவா தி மகேசன். 

பொங்கல் நிகழ்வின் சிலவற்றினைக் கீழே பார்க்கவும்: 

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18