Tag: காரைச் செய்திகள்

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற 4ம்,5ம் திருவிழா பகல்,இரவு காட்சிகள்

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் நேற்று 17.05.2016 இடம்பெற்ற 5ம் திருவிழா இரவு காட்சிகள்

 

 

 

 

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் நேற்று 17.05.2016  இடம்பெற்ற 5ம் திருவிழா பகல்  காட்சிகள்

 

 

 

 

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி முத்துமாரி அம்மன் ஆலயத்தில்  16.05.2016 இடம்பெற்ற 4ம் திருவிழா இரவு காட்சிகள்

 

 

 

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி முத்துமாரி அம்மன் ஆலயத்தில்  16.05.2016  இடம்பெற்ற 4ம் திருவிழா பகல்  காட்சிகள்

காரைநகர் களபூமி சத்திரந்தை அருள்மிகு ஸ்ரீ ஞானவைரவர் மணவாழக்கோல அக்ஷ்டோஸ்திர 108 சங்காபிஷேக விஞ்ஞாபனம் 2016

 

IMG_5382 (Copy)

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இன்று 17.05.2016 இடம்பெற்ற 5ம் திருவிழா காணொளி

காரைநகர் களபூமியில் அமையவுள்ள ஆயுள்வேத சித்த மருத்துவ நிலையத்திற்கு கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று 16.05.2016 திங்கட்கிழமை நடைபெற்றது

IMG_5906 (Copy) IMG_5907 (Copy) IMG_5908 (Copy) IMG_5909 (Copy) IMG_5910 (Copy) IMG_5911 (Copy) IMG_5912 (Copy) IMG_5913 (Copy) IMG_5914 (Copy) IMG_5915 (Copy) IMG_5916 (Copy) IMG_5917 (Copy) IMG_5918 (Copy) IMG_5919 (Copy) IMG_5920 (Copy) IMG_5921 (Copy) IMG_5922 (Copy) IMG_5923 (Copy) IMG_5924 (Copy) IMG_5925 (Copy) IMG_5926 (Copy) IMG_5927 (Copy) IMG_5928 (Copy) IMG_5929 (Copy) IMG_5930 (Copy) IMG_5931 (Copy) IMG_5932 (Copy) IMG_5933 (Copy) IMG_5934 (Copy) IMG_5935 (Copy) IMG_5936 (Copy) IMG_5937 (Copy) IMG_5938 (Copy) IMG_5939 (Copy) IMG_5940 (Copy) IMG_5941 (Copy) IMG_5942 (Copy) IMG_5943 (Copy) IMG_5944 (Copy) IMG_5945 (Copy)

IMG_5946 (Copy) (Copy) IMG_5947 (Copy) (Copy) IMG_5948 (Copy) (Copy) IMG_5949 (Copy) (Copy) IMG_5950 (Copy) (Copy) IMG_5951 (Copy) (Copy) IMG_5952 (Copy) (Copy) IMG_5953 (Copy) (Copy) IMG_5954 (Copy) (Copy) IMG_5955 (Copy) (Copy) IMG_5956 (Copy) (Copy) IMG_5957 (Copy) (Copy) IMG_5958 (Copy) (Copy) IMG_5959 (Copy) (Copy) IMG_5960 (Copy) (Copy) IMG_5961 (Copy) (Copy) IMG_5962 (Copy) (Copy) IMG_5963 (Copy) (Copy) IMG_5964 (Copy) (Copy) IMG_5965 (Copy) (Copy) IMG_5966 (Copy) (Copy) IMG_5967 (Copy) (Copy) IMG_5968 (Copy) (Copy) IMG_5969 (Copy) (Copy) IMG_5970 (Copy) (Copy) IMG_5971 (Copy) (Copy) IMG_5972 (Copy) (Copy) IMG_5973 (Copy) (Copy) IMG_5974 (Copy) (Copy) IMG_5975 (Copy) (Copy) IMG_5976 (Copy) (Copy) IMG_5977 (Copy) (Copy) IMG_5978 (Copy) (Copy) IMG_5979 (Copy) (Copy) IMG_5980 (Copy) (Copy) IMG_5981 (Copy) (Copy) IMG_5982 (Copy) (Copy) IMG_5983 (Copy) (Copy) IMG_5984 (Copy) (Copy) IMG_5985 (Copy) (Copy) IMG_5986 (Copy) (Copy) IMG_5987 (Copy) (Copy) IMG_5988 (Copy) (Copy) IMG_5989 (Copy) (Copy) IMG_5990 (Copy) (Copy) IMG_5991 (Copy) (Copy) IMG_5992 (Copy) (Copy) IMG_5993 (Copy) (Copy) IMG_5994 (Copy) (Copy) IMG_5995 (Copy) (Copy) IMG_5996 (Copy) (Copy) IMG_5997 (Copy) (Copy) IMG_5998 (Copy) (Copy) IMG_5999 (Copy) (Copy) IMG_6000 (Copy) (Copy) IMG_6001 (Copy) (Copy) IMG_6002 (Copy) (Copy) IMG_6003 (Copy) (Copy) IMG_6004 (Copy) (Copy) IMG_6005 (Copy) (Copy) IMG_6006 (Copy) (Copy) IMG_6007 (Copy) (Copy) IMG_6008 (Copy) (Copy) IMG_6009 (Copy) (Copy) IMG_6010 (Copy) (Copy) IMG_6011 (Copy) (Copy) IMG_6012 (Copy) (Copy) IMG_6013 (Copy) (Copy) IMG_6014 (Copy) (Copy) IMG_6016 (Copy) (Copy) IMG_6017 (Copy) (Copy) IMG_6018 (Copy) (Copy) IMG_6019 (Copy) (Copy) IMG_6020 (Copy) (Copy) IMG_6021 (Copy) (Copy) IMG_6022 (Copy) (Copy) IMG_6023 (Copy) (Copy) IMG_6024 (Copy) (Copy) IMG_6025 (Copy) (Copy) IMG_6026 (Copy) (Copy)

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இன்று 16.05.2016 இடம்பெற்ற 4ம் திருவிழா காணொளி

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் நேற்று 15.05.2016 இடம்பெற்ற 3ம் திருவிழா இரவு காட்சிகள்

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் நேற்று 15.05.2016 இடம்பெற்ற 3ம் திருவிழா பகல் காட்சிகள்

காரைநகர் களபூமியில் அமையவுள்ள ஆயுள்வேத சித்த மருத்துவ நிலையத்திற்கு கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

காரைநகர் களபூமியில் அமையவுள்ள ஆயுள்வேத சித்த மருத்துவ
நிலையத்திற்கு கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு
16.05.2016 இன்று திங்கட்கிழமை நடைபெறுகின்றது.

Aurvetha-Foundation-Stone-Laying

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இன்று 15.05.2016 இடம்பெற்ற 3ம் திருவிழா காணொளி

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இன்று 14.05.2016 இடம்பெற்ற 2ம் திருவிழா இரவு காட்சிகள்

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இன்று 14.05.2016 இடம்பெற்ற 2ம் திருவிழா பகல் காட்சிகள்

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இன்று 14.05.2016 இடம்பெற்ற 2ம் திருவிழா காணொளி

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 13.05.2016 இடம்பெற்ற கொடியேற்றத் திருவிழா காணொளி

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இன்று 13.05.2016 இடம்பெற்ற கொடியேற்ற இரவு திருவிழா காட்சிகள்

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இன்று 13.05.2016 இடம்பெற்ற கொடியேற்ற பகல் திருவிழா காட்சிகள்

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி முத்துமாரி அம்மன் பூங்காவனத்திருவிழா சிறப்பு மென்பந்து கிரிகெட் சுற்றுப்போட்டி-2016

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி முத்துமாரி அம்மன் பூங்காவனத்திருவிழா சிறப்பு மென்பந்து கிரிகெட் சுற்றுப்போட்டி-2016

K1

 

KALAPOOMY SPORTS CLUB (KSC)

KALAPOOMY,KARAINAGAR

KARAINAGAR PREMIER LEAGUE (KPL)

 

காலம்:-15.05.2016 (ஞாயிற்றுக்கிழமை)

இடம் :- களபூமி விளையாட்டுக் கழக மைதானம்

(பாலாவோடை முத்துமாரி அம்மன் அன்னதான  மண்டப பின்புறம் )

நேரம்:- காலை 08.00 மணி

கோவளம் வெளிச்சவீட்டின் நூறாவது ஆண்டு பூர்த்தியை ( மே /2016) முன்னிட்டு இக்கட்டுரை மீண்டும் பிரசுரிக்கப்படுகிறது.

கோவளம் வெளிச்சவீடு விபரணம் ( தகவல் – எஸ்.கே.சதாசிவம்.)

கோவளம் வெளிச்சவீட்டின் நூறாவது ஆண்டு பூர்த்தியை ( மே /2016) முன்னிட்டு இக்கட்டுரை மீண்டும் பிரசுரிக்கப்படுகிறது.

ஆதாரம் : NOTES ON JAFFNA 

Notes on JAFFNA_Pages

தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/05/NOTES_ON_JAFFNA.pdf

Notes on JAFFNA_FRONT

 

 

Notes on Jaffna

 

 

 

29

       விமானத்தில் இருந்து கோவளம் வெளிச்சவீடு

1

1.காரைநகரின் அமைவிடம்

2

  2. காரைநகர் கிராமசேவையாளர் பிரிவும் குறிச்சிகளும்

3

3. கோவளம் வீதி

4

4. கோவளம் வீதி

5

5. கூகுள் இணையத்தளத்திலிருந்து

6

6. சிலகாலத்திற்கு முன்பு

77. சிலகாலத்திற்கு முன்பு உட்செல்லும் வழி

88. சிலகாலத்திற்கு முன்பு உட்செல்லும் வழி

99. தற்போது உட்செல்லும் வழி

1010. தற்போது உட்செல்லும் வழி

1111. வடபுறத்தில் இருந்து

1212. வடபுறத்தில் இருந்து

1313. வடபுறத்தில் இருந்து 

1414. பின்புறத்தில் இருந்து

1515. கட்டப்பட்ட ஆண்டு

1616. ஏணிகள்

1717. ஏணிகள்

18

18. கோபுரம்

19

19. கோபுரம்

20

20. விளக்கு

21

21. விளக்கு

22

22. விளக்கு

23

23. காவலர் விடுதி

24

24. கோவளம் தென்னந்தோப்பு

25

25. கோவளம் தென்னந்தோப்பு

26

26. கசூரினா கடற்கரை கடலில் இருந்து

27

27. கசூரினா கடற்கரை கடலில் இருந்து

28

28. விமானத்தில் இருந்து கோவளம் வெளிச்சவீடு

29

29. விமானத்தில் இருந்து

30

30. திரு வெற்றிவேலு நடராஜாவின் முகநூலில் இருந்து.

 

 

கலங்கரைவிளக்கம், கோவளம் வெளிச்சவீடு, கோவளம். ( எஸ்.கே.சதாசிவம் )

S.K.Satha

ப்பல் திசை மாறாது வருவதற்காக துறைமுகத்தில் ஒரு குறிகாட்டியாக இருக்கும் வெளிச்சவீடானது பண்டைய காலத்தில் இருந்தமை பற்றி இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் 'இலங்கு நீர் வரைப்பில் கலங்கரை விளக்கம்' என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும் பண்டைய காலத்தில் எவ்வாறு கலங்கரை விளக்குகள் அமைக்கப்பட்டன என கடியலூர் உருத்திரங் கண்ணனார் சிறப்பாக் கூறியுள்ளார்.


'வானம் ஊன்றிய மதலை போல
ஏணி சாத்தியை வேற்றருந் சென்னி
வின் பொர நிவந்த வேயா மாடத்து
இரவின் மாட்டிய இலக்கு சுடர் நெகிழி
உரவு நீர் அழுவத்து ஒரு கலம் கரையும் துறை.
(பெரும்பாண் 346 – 356)


என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது கலங்கரை நிலையம் உயரமான கட்டடமாக இருந்;;தது. அதுசாந்து பூசப்பட்டு தளவரிசை உள்ளதாய் இருந்;தது மட்டுமல்லாமல் அதில் தீயிட்டு எரித்தனர் அல்லது உச்சியில் ஏறி விளக்கு வைப்பதற்கு ஏணிப்படிகள் இருந்தன என கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்ட விதம் கூறப்படுகின்றது.

வெளிச்சவீடுகள் பழந்தமிழ் இலக்கியங்களில் கலங்கரை விளக்கம் தீபஸ்தம்பம்  கோரி என எனப் பலவாறு அழைக்கப்பட்டது. 

கலங்கரை விளக்கம் கடலை மூடிய இருள்படலத்தை கிழித்து எங்கும் பேரொளி பரப்பி கடலில் செல்லுகின்ற மரக்கலங்களுக்குத் துறைமுகம் இருக்கின்ற இடத்தையும் அவை செல்ல வேண்டிய வழியையும் காட்டுவன என ஈழத்துச் சிதம்பர புராணம் இயற்றிய புலவர்மனி சோ. இளமுருகனார் குறிப்பிட்டுள்ளார். 

  •  கலம் – மரக்கலம்,. கலங்கரை விளக்கம்:- கடலில் பயணம்செய்யும் மரக்கலங்களுக்கும் ஏனைய கப்பல்களுக்கும் கரையினைக் காட்டும் வெளிச்சம்.
  • Light House: – A tower or other building that contains a strong light to warn and guide ships near the coast.

கடல் வழி அல்லது உள்ளுர் நீர் நிலைகளின் போக்குவரத்திற்கு உதவும் வகையில் அமைக்கப்படும் உயர்ந்த ஒடுங்கிய கோபுர (Tower) வடிவிலான அல்லது அது போன்ற அமைப்புடைய கட்டிடங்களின் உச்சியில் அமைக்கப்பட்ட விளக்குகள் (எரிவாயு, மின்சாரம், எண்ணெய் போன்றன ஒன்றினால் ஒழுங்கமைக்கப்பட்ட வகையில் இயக்கப்படுவது) வில்லைகள் மூலம் வெளிப்படும் ஒளி (Light)  நீண்டதூரம் பிரகாசிக்ககூடிய வல்லமை உடையது. இவ்வாறு வெளிப்படும் வெளிச்சம் கடல்வழி அல்லது உள்ளுர் நீர்நிலைகளில் பயணம் செய்யும் கப்பல்களுக்கு பயணம் செய்யும் சரியான திசையைக் காட்டும் திறன் கொண்டவை. இவ்வாறான அம்சங்கள் பொருந்திய கட்டிடங்கள் வெளிச்சவீடுகள் என்று அழைக்கப்படும்.

வெளிச்சவீடுகள் ஆபத்தான கற்பாறைகள், கூட்டமாகச் செல்லும் பெரிய மீன் இனங்கள் என்பனவற்றைக் காட்டி கப்பல்கள் துறைமுகங்களுக்குள் நுழைய வழிகாட்டுவன. ஒருகாலத்தில் அதிகமாக பயன்பாட்டில் இருந்த வெளிச்சவீடுகள் பராமரிப்பதற்கான செலவீனங்கள் காரணமாகவும் மின் அணு முறையிலான கப்பல் செலுத்தும் முறைமை (Electronic navigational systems), புவிசார் இடமறியும் கருவி (Global position system G.P.S) அறிமுகம் செய்யப்பட்டமையினாலும் வெளிச்சவீடுகளின் செயற்பாடுகள் குறைவடைந்தன. தற்போது வடபுல மீனவர்களும் புவிசார் இடமறியும் கருவியை (G.P.S) உபயோகித்து தம் தொழில்சார் நடவடிக்கைகள  மேற்கொள்கின்றனர். வெளிச்சவீடுகள் ஆகாய விமானங்களுக்கும் சரியான திசைகாட்டுவதிலும் உதவியாக இருந்தன. 

பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் பெரும்பாலான வெளிச்சவீடுகள் கட்டப்பட்டன. இந்த வெளிச்சவீடுகள் இம்பீரியல் வெளிச்சவீட்டு சேவையினால் (Imperial Light house service)  இயக்கப்பட்டும் பராமரிக்கப்பட்டும் வந்தன. 

சில வெளிச்ச வீடுகளைப் பார்த்துக்கொள்வதற்கான அலுவலர்கள் (Keepers) பணியாற்றினர். வரலாற்றில் காலனித்துவ ஆட்சியாளரின் குறியீடாக வெளிச்சவீடுகள் உள்ளன.

இலங்கை சுதந்திரம் அடைந்தபின் இலங்கைக் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட வெளிச்சவீடுகள் படிப்படியாக கையளிக்கப்பட்டு1976 இல் முழுமையான கையளிப்பு நிறைவு பெற்றது. இலங்கைத் துறைமுக அதிகார சபையின் (Sri lanka Port Authority – SLPA)  கட்டுப்பாட்டின் கீழ் பெரும்பாலான வெளிச்சவீடுகள் கொண்டுவரப்பட்ட போதிலும், மிகுதியான வெளிச்சவீடுகள் இலங்கைக் கடற்படையின் (Sri lanka Navy) கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. இலங்கையில் 25 வெளிச்சவீடுகள் இருக்கின்ற போதிலும் 16 வெளிச்சவீடுகள் செயற்படும் நிலையில் உள்ளன.இவற்றில் நான்கு சர்வதேச வெளிச்சவீடுகள்.

கோவளம் வெளிச்சவீடு 

காரைநகரில் நீண்டு உயர்ந்து வரிசை வரிசையாக அமைந்த பயன்தரு தென்னை மரத் தோப்புக்கள் நிறைந்த கோவளம் எனப்படும் வளமான குறிச்சியில் கோவளம் வெளிச்சவீடு அமைந்துள்ளது. பார்ப்பவர்கள் பிரமிக்கத்தக்க கம்பீரமான தோற்றம் மிக்கது. கோவளம் வெளிச்சவீடு தொடர்பான ஆவணங்களில் Kovilan Point Light house is a Light house on the island of Karaitivu in northern Srilanka.  எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவளம் வெளிச்சவீட்டிற்கான நிலையம் 1899ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1916 ஆம்ஆண்டு கட்டப்பட்ட கோவளம் வெளிச்சவீடு 30 மீற்றர் (98 அடி) உயரம் உடையது. சதுரவடிவிலான அடித்தளமும் உருளை வடிவிலான கோபுரமும் முருகைக்கற்களால் (Coral Stones) ஆனது. வெளிச்சவீட்டின் 15 அடி 6 அங்குலம் உடைய சதுர வடிவிலான அடித்தளத்தின் மீது 18 அடி உருளை வடிவிலான 69 அடி உயரமுடைய கோபுரத்தின் மேற்பகுதியில் கண்ணாடியில் வடிவமைக்கப்பட்ட விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.. அடித்தளத்தில் இருந்து விளக்கு வரையிலான உயரம் 86 அடி 7 அங்குலம். 

வெளிச்சவீட்டின் கிழக்குவாயில் ஊடாகச் சென்று உட்பகுதியில் இரும்பினால் அமைக்கப்பட்டுள்ள ஏணிகள் மூலம் வெளிச்சவீட்டின் பலகணிக்குச் சென்று அடையலாம். வெளிச்சவீடு பாதுகாப்பாக செயற்படுநிலையில் இருந்தபொழுது மேலே ஏறிச் சென்று பார்வையிடக் கூடியதாக இருந்தது. வெளிச்சவீட்டின் உச்சியில் இருந்து கடற்பரப்பையும்; காரைநகரையும் பார்வையிடக்கூடியதாகப் பலகணி (open gallery)  அமைக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு 30 செக்கனுக்கு 2 வெள்ளை ஒளியைப் பாய்ச்சும் இவ் ஒளி 11 கடல் மைல் தூரத்திற்குச் செல்லும் (Range 11 Nautic miles ) செல்லும். முதலாவது வெளிச்சம் காரைதீவின் வடமேற்கு மூலையில் இருந்து ஒரு கம்பத்தில் இருந்து காட்டப்பட்டது. வெளிச்சவீடு செயற்படு நிலையில் இருந்த போது எரிவாயுவின் மூலம் ஒளியூட்டப்பட்டது. இவ் வெளிச்சவீடு ஒளிரும் பொழுது கசூரினாக் கடற்கரையில் நின்று சிறப்பாக அவதானிக்க முடியும். வெளிச்சவீட்டுக்கு அருகாமையில் பாதுகாவலர்கள் (Keepers) கடமை நிமித்தம் வசித்த விடுதியும் காணப்படுகின்றது.


காரைநகர் வெளிச்சவீடு காரைநகரின் பழம் பெருமையின் சின்னமாக அல்லது வரலாற்று அடையாளமாக (Symbol of old glory or landmark) தொல் பொருள் பெறுமதிமிக்கதான (Archeological value) வரலாற்றுச் சிறப்பு மிக்க (Historical importance) கட்டுமானமாகும்.

    இலங்கையையும் இந்தியாவையும் பிரிக்கின்ற பாக்குடாவில் ஒரு முனையை இந்த வெளிச்சவீடு அடையாளப்படுத்தும். காரைநகரில் வெளிச்சவீடு அமைக்கப்பட்டமையால் பூகோள ரீதியில் நமது கிராமத்தின் கோவளம் முனை பெற்றுள்ள முக்கியத்துவத்தை அறியக்கூடியதாக உள்ளது.

    யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலைகொண்டுள்ள பலமான இலங்கைக் கடற்படையின் பிரசித்தமான கடல்வழிப்பாதையில் பெறுமதியான பெரிய அளவிலான வகிபாகத்தை காரைநகர், காங்கேசன்துறை, பருத்தித்துறை வெளிச்சவீடுகள் கொண்டுள்ளன. 

இவ்வூரின் வடமேற்கு கடற்கரையில் வானுற உயர்ந்த பேரொளி உடையதாய் 'உயிர்களின் அறியாமையாகிய இருளை நீக்கி செல்கதி காட்டும் திருவருள் போல' ஆழ்கடலில் செல்லும் மரக்கலங்களுக்கெல்லாம் அடையும் துறைக்கு வழிகாட்டுவதாய் அமைந்திருக்கின்றது ஒரு கலங்கரை விளக்கம் என ஈழத்துச் சிதம்பரம் எனும் நூலை எழுதிய சிவ ஸ்ரீ கணபதீஸ்வரக் குருக்கள் குறிப்பிட்டுள்ளார்.

ஈழத்துச் சிதம்பர புராணத்தை இயற்றிய புலவர்மணி சோ. இளமுருகனார் காரை நாட்டின் வடமேற்குப் பக்கமாக கடலை அடுத்துள்ள பகுதி கோவளம் எனப்படும். கி.பி. 1284 இல் மாக்கோப்போலோ சீனத்திலிருந்து மேலைத்தேசங்களுக்குப் போகும் வழியில், யாழ்ப்பாணத் துறைமுகம் ஒன்றிலே தாம் தங்கியதாகவும் அதன் பெயர் கோளம் என்றும் அங்கே சீனம் முதலிய தேசங்களிலிருந்து கப்பல்கள் வணிகம் செய்யும் பொருட்டு வந்துபோயின என்றும் கூறியுள்ளார். இவர் கூறிய கோளம் என்ற பெயரே கோவளம் என மாற்றமடைந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். இது உறுதிப்படுத்தப்படுமாயின் காரைநகர் கோவளம் கடற்கரையைக் குறிக்கும்.

கால்நூற்றாண்டுக்கும் மேலாக ஒளிபரப்பாது அமைதியாக ஒளிராது இருக்கும் காரைநகர் வெளிச்சவீட்டினை புனரமைப்பதற்கான பணிகள் வெற்றி பெற்று வெளிச்சவீடு கடல் பயணத்திற்கு ஒளிவீசுவது மாத்திரமன்றி காரைநகர் கால் நூற்றாண்டுக்கு முன் இருந்த நிலமைக்கு மீண்டும் திரும்பிடவும் ஒளிபரப்ப வேண்டும் என்று பிரார்த்திப்போமாக.

2927

 

காங்கேசன்துறை வெளிச்சவீடு

 

காங்கேசன்துறை வெளிச்சவீடு 1893ம் ஆண்டு கட்டப்பட்டது. 22 மீற்றர் உயரமுடைய இவ் வெளிச்சவீடு கவனிப்பாரற்று உடைந்து விழும் நிலையில் காணப்பட்டது. எதிர்கால சந்ததியினர் யாழ்ப்பாணத்தின் பழம் பெருமையை அறிந்து கொள்வதற்கான அடையாளச் சின்னமான இவ் வெளிச்சவீட்டை இலங்கை காலாட்படையின் பொறியியலாளர்களும் (Sri lanka Army Engineers) 5 வது பொறியியல் சேவை படைப்பிரிவினரும் 5th Engineer Services Regiment of sri lanka Army) தொல்பொருள் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் புனருத்தாரணம் செய்தார்கள். வெளிச்சவீட்டின் மேலே திறந்த பலகணி (open gallery) அமைக்கப்பட்டுள்ளது. விளக்கின் (Lantern) உச்சி தொப்பி போன்ற அமைப்பினாலான செம்பு கலந்த (Copper mixed) உலோகத்தால் மூடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் வரலாற்றில் கடல்சார்ந்த செயற்பாட்டில் பிரித்தானியா கலைஞர்களினதும் பொறியியலாளர்களினதும் முயற்சிகளை நினைவு கொள்வனவாக இவ்வெளிச்சவீடு அமைந்துள்ளது.

KKS

 

கோவளம்


காரைநகரின் வரலாற்றில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வரலாற்றுச் சிறப்பு அம்சங்கள் கோவளம் பகுதியில் உண்டு. ஈழத்துச் சிதம்பர புராணத்தை இயற்றிய புலவர்மணி சோ. இளமுருகனால் கோவளம் பற்றி பின்வரும் விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார் 'கரை மருங்கின் றெங்கடந்த நெடுங்காடு' கடற்கரையோரத்தில் தென்னைகள் நெருங்கி வளர்ந்த பெரிய தென்னந்தோட்டங்கள் நிறைந்த இடம் கோவளம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

2425

ஆங்கிலேயர், ஐரோப்பியர் போன்ற வெள்ளை இனத்தவர் பலர் குதிரை வண்டிகளில் வந்து கோவளம் கடற்கரைப் பகுதியில் சில நாட்கள் தங்கிச் சுகம் பெற்றுச் செல்வர் என்று அந்நாட்டவர் கூறுவதாகக் குறிப்பிட்டுள்ளார். 

    அந்தி மாலையில் வானம் செக்கர் படர்ந்த அழகான செவ்வானமாகக் காணப்படும். இக்காட்சியை மேற்குக் கடற்கரைகளில் காணலாம். ஞாயிறு சில காலம் மகரக்கோட்டிலும் (மார்கழி 21) சில காலம் கற்கடகக் கோட்டிலும் (ஆனி 21) நிற்றலாய் ஒரு தன்மையாய் காணமுடியாது. கோவளக் கடற்கரையில் இரண்டு காலங்களில் இக் காட்சியை காணக்கூடியதாக இருக்கும். இக்காட்சியை எக்காலத்திலும் ஒரே தன்மையிற் காணக்கூடியவாறு அழகு அழியாமல் உயிர்ப்புள்ள ஓவியமாக  கோவளத்தின் மேற்கே உள்ள வானத்தில் பிரமதேவன் தீட்டிவைத்தான் எனக்குறிப்பிட்டுள்ளார். 

சமூகத்தில் உயர் அந்தஸ்தைப் பெற்றவர்கள்; தாங்கள் வாழும் காலப்பகுதியில் பிரபல்யம் பெற்ற வசதிகளைக் கொண்ட வீடுகளை அமைப்பது வழக்கம். ஒரு நூற்றாண்டுக்கு அண்மிய காலப்பகுதிக்குரிய பெரிய பல்வேறு அமைப்பிலான வீடுகள் கோவளம் பகுதியில் காணப்படுகின்றன. அவ்வக் காலப்பகுதிக்குரியனவும், அவரவர் அந்தஸ்தை விளக்குவனவாகவும், அவரவர் குடும்பத்தின் வரலாற்றுப் பதிவுகளை கொண்ட பல வீடுகளைக் கண்ணுற்ற பொழுது காத்திரமான அப்பெரிய மனிதர்களின் சமூகப் பெறுமானத்தை உணரக்கூடியதாக இருக்கின்றது. பல எண்ணிக்கையான தென்னை மரங்கள், பனை மரங்கள், வேறு பயன்தரு மரங்களும் இன்றைய மழை காலத்தில் செழிப்பாக மகிழ்வுடன்  தங்கள் சொந்தக்காரர்களின் வருகைக்காக வழிமேல் விழிவைத்து காத்திருக்கின்றன.


பேப்பர் சுவாமிகள்


காரைநகர் பற்றிக் குறிப்பாகக் கோவளம் குறிச்சி பற்றி எழுதும் போது பேப்பர் சுவாமிகளின் வரலாறு எழுதாவிடின் அவ்வெழுத்து முற்றுப்பெறாத ஒன்றாகவே அமையும். பேப்பர் சுவாமிகள் என மக்கள் மத்தியில் பிரபல்யம் மிக்க இவர்; வீரபாகு வேலுப்பிள்ளை முருகேசு    ( V.V. முருகேசு) எனும் இயற் பெயர் கொண்டவர். கடலலைகள் தாலாட்டும் இயற்கை எழில் மிக்க அமைதியான சூழலில் ஆச்சிரமம் அமைத்து தவவாழ்வு வாழ்ந்த ஞானி பேப்பர் சுவாமிகள் தன்னை நாடிவருபவர்களின் எண்ணஓட்டங்களைச் சொல்லும் வல்லமை மிக்க ஞானம் கைவரப் பெற்றவர். தன் இறுதிக் காலத்தில் நண்டுப்பாழி எனும் குறிச்சியில் தவவாழ்வு வாழ்ந்து சமாதியானவர். ஞானியர் சித்தர் வரிசையில் நமது கிராமத்திற்குப் பெருமை சேர்த்தவர் வரிசையில் முதன்மையானர்.

    பாரத தேசத்தின் தேசபிதா மகாத்மா காந்தியின் மரணத்தை எதிர்வு கூறியதன் மூலம் இந்திய ஆட்சியாளர்களின் கவனத்தை தன்பால் ஈர்த்தவர். சுவாமிகள் அனுப்பிய தபால் அட்டை ( Post Card) இந்தியாவிலுள்ள நூதன சாலை ( Museum) ஒன்றில் பேணப்படுவதாகச் செய்திகள் இருந்த போதிலும் உறுதி செய்துகொள்ள முடியவில்லை. இலங்கையில் இந்தியாவின் உயர் ஸ்தானிகராகப் பணியாற்றிய திரு.V.V. கிரி தனது பதவிக்காலத்தில் பல தடவைகள் பேப்பர் சுவாமிகளின் தரிசனத்திற்காக வருகை தருபவர். பின்னர் இந்திராகாந்தியின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் ஜனாதிபதியாகப் பணியாற்றியவர். பேப்பர் சுவாமிகளுக்கு சமஷ்கிருத மொழியில் இருந்த ஆர்வத்தை அறிந்த காஷ்மீர் முதலமைச்சர் சுவாமிகளுக்கு ஒரு தொகுதி சமஷ்கிருத நூல்களை அன்பளிப்புச் செய்தார்.

பாரததேசத்தின் சுதந்திர போராட்ட வீரர் J.C குமரப்பா நோயுற்ற வேளை சுவாமிகளின் ஆச்சிரமத்தில் தங்கியிருந்து ஆசி பெற்று குணமாகியவர். திரு குமரப்பா நோயின் நிமித்தம் தனியான குடிசையில் வசிக்க வேண்டிய தேவை இருந்தமையால் தனியாக குடிசையில் வசித்தார். அவர் வாழ்ந்த குடிசை ஆச்சிரமத்திற்கு அயலில் இருந்தது. அக்குடிசை குமரப்பா குடிசை என அழைக்கப்பட்டது. (Kumarappa Cottage

    யாழ்ப்பாணத்து சட்டத்தரணிகள், கல்வி மான்கள் அரச அதிகாரிகள் எனப் பலதரப்பட்ட மனிதர்கள் சஞ்சலம் மிக்க வேளைகளில் சுவாமிகளின் ஆசி பெறுவதற்காக ஆச்சிரமத்திற்காக வருகை தருவது வழக்கம். 
 இங்கிலாந்து தேசத்து நாளேடுகளில் நிரூபராக, கட்டுரையாளராக பணியாற்றியவர். செழுமையும், புலமையும் மிக்க ஆங்கில எழுத்தாற்றல் பேப்பர் சுவாமிகளுக்கு அரசியல் வாதிகள் மத்தியிலும் உயர் அந்தஸ்தைப் பெற்றுக் கொடுத்தது. 

    அமெரிக்காவின் தாவரவியற் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய  பேராசிரியர் விஞ்ஞான பாட செயலமர்வுக்கு யாழ்ப்பாணக் கல்லூரிக்கு வருகை தந்த போது பேப்பர் சுவாமிகளை சந்திப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். பேப்பர் சுவாமிகளைத் தரிசித்த பின் கருத்தரங்கில் கலந்து கொண்ட ஆசிரியர் ஒருவருடன் பின்வருமாறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதாக தெரிவித்தார் அவ்வாசிரியர்.

சுவாமிகள் தான் அறிந்திராத பல பத்திரிகைகள் பற்றி தன்னிடம் வினவியதாகவும் வேறும் பல முக்கியமான உலக விடயங்களைப் பற்றி தன்னிடம் தெரிவித்தமை தன்னை ஆச்சரியத்திற்குள்ளாக்கிய தாகவும் உங்கள் கிராமத்தில் மிகப்பெறுமதியான சுவாமிகள் வாழ்ந்து கொண்டிருப் பதையிட்டு நீங்கள் பெருமை அடையவேண்டும் எனக் குறிப்பிட்டதாக அவ்வாசிரியர் தெரிவித்தார்.

சுவாமிகளிடம் ஆங்கிலம், கணிதம் பயின்ற இளைஞர்கள் பிற்காலத்தில் அப்பாடங்களைத் திறமையாகக் கற்பித்து பெருமையடைந்தார்கள். ஒரு நாள் ஆச்சிரமத்தில் உணவுப்பொருட்கள் இல்லாமையை சுவாமிகளிடம் தெரிவிக்கத் தயங்கி நின்ற மாணவர்களைப் பார்த்து சுவாமிகள் உணவுப்பொருட்கள் பாதி வழிக்கு வந்துவிட்ட உணவைச் சமைப்பதற்கான பாத்திரங்களை தயார் செய்யுமாறு கூறினார். சிறிது நேரத்தில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபரின் வாகனம் ஆச்சிரமத்திற்குத் தேவையான சமையல் பொருட்களுடன் வந்து சேர்ந்தது. சுவாமிகளின் அருட் பேற்றை ஏற்கனவே உணர்ந்திருந்த மாணவர்கள் இச்சம்பவத்தின் பின் மேலும் பக்தியுடன் நடக்கலாயினர்.

    ஆச்சிரமத்தில் அதிக எண்ணிக்கையான தோசைகள் சுடவேண்டிய தேவை இருந்தமையால் சுடுபவர் தோசை சுடும்பொழுது ஈரப்பசுமை மிக்க துணியை நெஞ்சில் கட்டி அடுப்பின் செம்மையில் இருந்து தனனைப் பாதுகாப்பது வழக்கம்.

     பேப்பர் சுவாமிகள் சமாதி அடைந்த பின்னர் 1990 வரை சுவாமிகளின் சமாதியை தரிசிக்க வருகை தருகின்ற வலிகாமத்தைச் சேர்ந்த தியாகராஜ சுவாமிகள் பேப்பர் சுவாமிகளின் சமாதி காரைநகருக்கு பெரிய அளவிலான பாதிப்புக்கள் ஏற்படாமல் பாதுகாக்கும் சக்தி உடையது எனக் கூறினார்.

    திரு. ஆ. தியாகராஜா அவர்கள் காலையில் அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று சுவாமிகளுக்கு உரிய கடிதங்களைப் பெற்ற வந்து சுவாமிகளிடம் கையளித்த பின்னரே பாடசாலைக்குச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தவர். 
சுவாமிகள் நயினாதீவு நாகபூ10சணி அம்பாளை குலதெய்வமாக வணங்கியவர்.  அடிக்கடி நயினாதீவு சென்று அம்பாளை வழிபடும் வழக்கத்தைக் கொண்டவர்.

    திருஞானசம்பந்த சுவாமிகள் திருவீழிமிழலையில் வீற்றிருந்த இறைவன் புகழ்பாடி பதிகங்கள் பாடியவர். பேப்பர் சுவாமிகள் வாழ்ந்த ஆச்சிரமத்திலும் திருவீழி மரம் இருந்தது. திருவீழி மரத்தின் கீழ் இருந்து சுவாமிகள் ஆன்மீகச் செயற்பாடுகளில் ஈடுபடுவது வழமை. அவரின் கலந்துரையாடல்கள் சிந்தனைகள் யாவும் இம்மரத்தின் கீழே நடைபெற்றது. இம்மரத்தின் கீழ் அமர்ந்து செயற்படுவதன் மூலம் ஆன்மீக இன்பத்தை அனுபவித்தார். ஆன்மீக உள்ளுணர்வுகள் வெளிப்படுவதற்கு இம்மர நிழல் சுவாமிகளுக்கு உந்து சக்தியாக அமைந்தது.

    நான் பத்து வயது சிறுவனாக இருந்த போது தந்தையாருடன் பேப்பர் சுவாமிகளின் ஆச்சிரமத்திற்குச் சென்றிருக்கின்றேன். அமைதியான சூழலில் இருந்த ஆச்சிரமம் நினைவில் இருக்கின்ற பொழுதும் எழுதுவதற்காக எதுவும் ஞாபகத்தில் இல்லை.

    பேப்பர் சுவாமிகளின் காலத்தில் இளைஞர்களாக இருந்து இன்று வரலாற்றுப் பதிவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பெரியவர்களும் சுவாமிகளைப் பக்தி சிரத்தையுடன் நினைவில் வைத்திருக்கின்ற பெரியவர்களும் இன்றும் சுவாமிகளின் சமாதிக்குச் சென்று தரிசனம் பெற்றுக் கொண்டிருக்கின்ற பெரியவர்களும் மேற்கூறிய அனைத்தையும் தெரிவித்தமைக்காக நான் அவர்களுக்கு நன்றி கூறுகின்றேன். இப்பெரியார்களின் கருத்துக்கள் பெறுமதிமிக்க பேப்பர் சுவாமிகள் வரலாற்றை இன்றைய இளம் சமூகம் அறிந்து கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக அமைந்துள்ளது

பேப்பர் சுவாமிகளின் சமாதி அமைந்துள்ள நண்டுப்பாழி

Ko3 Ko4

காரைநகரின் வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாக பாதுகாக்கப்படவேண்டிய இடம் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.


இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள கோவளம்


இந்தியாவின் தென் மாகாணங்களில் ஒன்றான கேரள மாநிலத்தில் (State) திருவனந்தபுரத்திற்கு 17 கிலோமீற்றர் தொலைவில் கோவளம் எனும் கிராமம் அமைந்துள்ளது. அமைதியான மீன்பிடிக் கிராமமாகக் காணப்பட்ட கோவளம் பகுதி 1930 களில் சுற்றுலா மையமாக அறிமுகப்படுத்தப்பட்டு 1970 களில் சுற்றுலாத்துறையில் பிரபல்யமான இடத்தைப் பெற்றுக் கொண்டது. திருவாங்கூர் மேன்மை தங்கிய மகாராணி கோவளம் பகுதியில் உள்ள கற்பாறை ஒன்றில் அரண்மனை ஒன்றினை அமைத்ததன் மூலம் கோவளம் பிரபல்யம் பெற்றது.

இந்தியாவுக்கு வருகை தரும் மேற்கத்தைய நாட்டு சுற்றுலா பயணிகள் மத்தியில் கோவளம் கடற்கரை மிகவும் பிரசித்தி பெற்றது

File source: http://wikitravel.org/shared/File:Kovalam_Banner.jpg

File source: http://wikitravel.org/shared/File:Kovalam_Banner.jpg

 

S.K.Satha

திரு. எஸ்.கே சதாசிவம் ஆசிரியர் கலாநிதி ஆ.தியாகராஜா மத்திய மகாவித்தியாலயம்   காரை விளையாட்டுக் கழகம் ஆகியவற்றின் கோல் காப்பாளர் என்ற நிலையில் அறிமுகமானவர். கலாநிதி ஆ.தியாகராஜா மத்திய மகாவித்தியாலயம், வசாவிளான் மத்திய மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் உதைபந்தாட்ட அணிகளின்  பயிற்றுவிப்பாளர். தொழிற்சங்க அலுவலராக பணியாற்றியவர் கல்விக்கட்டமைப்பில் பல பதவிகளை வகித்தவர். ஜேர்மன் தொழில்நுட்ப ஒத்துழைப்பகத்தின் (German Technical Cooperation GTZ ) வடகிழக்குமாகாண செயற்றிட்டங்களில் கடமையாற்றியவர்.

களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் இன்று 02-05-2016 இடம்பெற்ற திருநாவுக்கரசு நாயனார் குருபூசை நிகழ்வுகள்

IMG_4967 (Copy) IMG_4969 (Copy) IMG_4970 (Copy) IMG_4971 (Copy) IMG_4972 (Copy) IMG_4973 (Copy) IMG_4974 (Copy) IMG_4975 (Copy) IMG_4976 (Copy) IMG_4977 (Copy) IMG_4978 (Copy) IMG_4980 (Copy) IMG_4981 (Copy) IMG_4983 (Copy) IMG_4984 (Copy) IMG_4985 (Copy) IMG_4986 (Copy) IMG_4987 (Copy) IMG_4989 (Copy) IMG_4990 (Copy) IMG_4991 (Copy) IMG_4992 (Copy) IMG_4994 (Copy) IMG_4995 (Copy) IMG_4997 (Copy) IMG_4998 (Copy) IMG_4999 (Copy) IMG_5000 (Copy)

காரைநகர் களபூமி விளானை ஞானவைரவர் ஆலயத்தில் இன்று 02-05-2016 இடம்பெற்ற திருநாவுக்கரசு நாயனார் குருபூசை நிகழ்வுகள்

IMG_4910 (Copy) IMG_4911 (Copy) IMG_4912 (Copy) IMG_4913 (Copy) IMG_4914 (Copy) IMG_4915 (Copy) IMG_4916 (Copy) IMG_4917 (Copy) IMG_4918 (Copy) IMG_4919 (Copy) IMG_4920 (Copy) IMG_4921 (Copy) IMG_4922 (Copy) IMG_4923 (Copy) IMG_4924 (Copy) IMG_4925 (Copy) IMG_4926 (Copy) IMG_4927 (Copy) IMG_4928 (Copy) IMG_4929 (Copy) IMG_4930 (Copy) IMG_4931 (Copy) IMG_4932 (Copy) IMG_4933 (Copy) IMG_4934 (Copy) IMG_4935 (Copy) IMG_4937 (Copy) IMG_4938 (Copy) IMG_4939 (Copy) IMG_4940 (Copy) IMG_4941 (Copy) IMG_4942 (Copy) IMG_4944 (Copy) IMG_4945 (Copy) IMG_4947 (Copy) IMG_4948 (Copy) IMG_4949 (Copy) IMG_4950 (Copy) IMG_4951 (Copy) IMG_4952 (Copy) IMG_4953 (Copy) IMG_4954 (Copy) IMG_4955 (Copy) IMG_4956 (Copy) IMG_4957 (Copy) IMG_4958 (Copy) IMG_4959 (Copy) IMG_4960 (Copy) IMG_4961 (Copy) IMG_4962 (Copy) IMG_4963 (Copy) IMG_4964 (Copy) IMG_4965 (Copy) IMG_4966 (Copy)

யாழில் நடைபெற்ற மூதறிஞர் வைத்தீசுவரக் குருக்கள் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுதினம்

யாழில் நடைபெற்ற மூதறிஞர் வைத்தீசுவரக் குருக்கள் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுதினம்

சைவத்திற்கும் தமிழுக்கும் தொண்டாற்றி காரைநகருக்கு பெரும்புகழ் சேர்த்த அமரர்.சிவத்தமிழ் வித்தகர் பண்டிதமணி கலாநிதி. சிவத்திரு க.வைத்தீசுவரக் குருக்கள் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (24.04.2016) அன்று யாழ்ப்பாணம், நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் காரைநகர் மணிவாசகர் சபை தலைவர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

நிகழ்வில் குருக்கள் ஐயாவை நினைவுகூரும் நினைவுச் சொற்பொழிவுகளும் திருவாசக இன்னிசையும் 'ஆலய வழிபாடு' என்னும் நூல் வெளியீடும் இடம்பெற்றது. 

நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்கள் சிலவற்றைக் கீழே காணலாம். 

DSC00058 DSC00059 DSC00060 DSC00061 DSC00062 DSC00063 DSC00064 DSC00065 DSC00069 DSC00070 DSC00074 DSC00075 DSC00076 DSC00077 DSC00079 DSC00080

யா/சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாலய பாடசாலைக்கு போட்டோ கொப்பி இயந்திரம் கிடைத்துள்ளது

Message to Intenet re Photocopier0001

காரைநகர் களபூமி விளானை வைரவருக்கு விசேட பூசை எதிர்வரும் திங்கட்கிழமை (02-05-2016) காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

VILANAI KOVIL0001

இந்துக் கல்லூரியில் நடைபெற்ற கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா

இந்துக் கல்லூரியில் நடைபெற்ற கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா

காரைநகர் இந்துக் கல்லூரியில் வெள்ளி விழா அதிபராகச் சேவையாற்றி பாடசாலையை உயர்நிலைக்கு உயர்த்திய சிற்பியாகிய அமரர்.கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் 100 ஆவது பிறந்த நாள் கடந்த 17.04.2016 ஆகும்.  

பாடசாலையின் வரலாற்றில், கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் காலமே 'பொற்காலம்' என்று அறிஞர்களினால்  போற்றப்படுகின்றது. 

அந்தவகையில், பாடசாலை சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அன்னாரின் நூற்றாண்டு விழா 17.04.2016 அன்று நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் பதில் அதிபர் திருமதி.கலாநிதி சிவநேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

நிகழ்வில் நினைவுப்பேருரை, சிறப்புரைகள், சிந்தனை அரங்கம், இசை நிகழ்ச்சி, மாணவர் நிகழ்ச்சி என்பன இடம்பெற்றன. 

நிகழ்வில் எடுக்கப்பட்ட சில படங்களைக் கீழே காணலாம்.

IMG_0213 IMG_0214 IMG_0215 IMG_0216 IMG_0217 IMG_0218 IMG_0219 IMG_0220 IMG_0222 (1) IMG_0229 IMG_0232 IMG_0234 IMG_0236 IMG_0237 IMG_0243 IMG_0245 IMG_0246 IMG_0253 IMG_0257 IMG_0262 IMG_0263 IMG_0268 IMG_0269 IMG_0272 IMG_0277 IMG_0279 IMG_0280 IMG_0282 IMG_0284 IMG_0289 IMG_0293 IMG_0294

தீவக கல்வி வலய ஆசிரியர் மகாநாடு 2ம் நாள் நேற்று 24.04.2016 வேலணை மத்தியகல்லூரியில் நடைபெற்றது

அமரர் மூதறிஞர் சிவத்தமிழ் வித்தகர், பண்டிதமணி. கலாநிதி க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுதினம் இன்று 24.04.2016 நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணி மண்டபத்தில் நடைபெற்றது

ஈழத்துச் சிதம்பரத்தின் வளர்ச்சிக்காக அருந் தொண்டாற்றிய கலாநிதி, பண்டிதர் சிவஸ்ரீ க. வைத்தீசுவரக்குருக்கள்

ஈழத்துச் சிதம்பரத்தின் வளர்ச்சிக்காக அருந் தொண்டாற்றிய கலாநிதி, பண்டிதர் சிவஸ்ரீ க. வைத்தீசுவரக்குருக்கள்

Vythees

அண்மைக்காலம் வரை எம்மிடையே வாழ்ந்த மூதறிஞர் தத்துவக்கலாநிதி, சிவத்தமிழ் வித்தகர், பண்டிதர் சிவஸ்ரீ க.வைத்தீசுவரக்குருக்கள் அவர்கள் தில்லைக் கூத்தனின் திருவடி கலந்த ஓராண்டு நினைவு நாள் (24.04.2016) இன்றாகும். 

எல்லையில்லாத ஈசன்பணியும், சொல்லில் அடங்காத் தமிழ்ப்பணியும் ஆற்றி தாம் பிறந்த காரையம்பதிக்கு மட்டுமல்ல ஈழமணித்திருநாட்டிற்கும் பெரும்புகழ் சேர்த்தவர் தத்துவக்கலாநிதி பண்டிதர் சிவஸ்ரீ.க.வைத்தீசுவரக்குருக்கள் ஐயா அவர்கள். 

அன்னாரின் ஓராண்டு நினைவு நாளையொட்டி யாழ்ப்பாணம் வலம்புரி நாளிதழில் இடம்பெற்ற காரைநகர் மணிவாகசகர் சபை முன்னாள் செயலாளரும், பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பொருளாளருமாகிய திரு.மா.கனகசபாபதி அவர்கள் எழுதிய கட்டுரை இங்கே எடுத்துவரப்படுகின்றது. 

ஈழத்துச் சிதம்பரத்தின் வளர்ச்சிக்காக அருந் தொண்டாற்றிய
கலாநிதி, பண்டிதர் சிவஸ்ரீ க. வைத்தீசுவரக்குருக்கள்

Kanagasabapathy

 

 

 

மா. கனகசபாபதி
காரைநகர் மணிவாசகர் சபை
முன்னாள்செயலாளர்

திருஉத்தரகோசமங்கையிலிருந்து காரைநகருக்கு அழைத்து வரப்பட்ட அந்தணர் பரம்பரையில் வந்த கணபதீசுவரக் குருக்கள் சிவயோகசுந்தராம்பாள் தம்பதியினருக்கு மூன்றாவது புதல்வராக 22.09.1916 அன்று திண்ணபுரம் என்னும் ஆன்மீக வளம் மிகுந்த சிவபூமியில் வைத்தீசுவரக் குருக்கள் தோன்றினார்.

இவர் தமது ஆரம்பக் கல்வியைக் காரைநகர் வலந்தலை வடக்கு அ.மி.த.க. பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியைக் காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலையிலும், ஆங்கிலக் கல்வியைக் காரைநகர் இந்துக் கல்லூரியிலும் பயின்றார். பின்னர் அளவெட்டி அருணோதயாக் கல்லூரியிலே கல்வி கற்றுச் சிரேட்ட பாடசாலைத் தராதரப் பரீட்சையில் சித்தியடைந்தார். சுன்னாகம் பிராசீன பாடசாலையில் வடமொழியும் தமிழும் கற்று வடமொழியில் பிரவேச பண்டிதர் பரீட்சையிலும் தமிழில் பாலபண்டிதர் பரீட்சையிலும் சித்தியடைந்தார். சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரின் மாணவனாகிய வித்தகர் ச. கந்தையாபிள்ளையிடம் சைவசித்தாந்தம் கற்றார். மகாவித்துவான் சி. கணேசையரிடம் தமிழ் இலக்கணத்தை முறையாகப் பயின்றார். 1939 ஆம் ஆண்டு பண்டிதர் பரீட்சையிலும் சித்தியடைந்தார்.1939 ஆம் ஆண்டில் பரமேசுவரா ஆசிரியர் கலாசாலையிலே கற்றுப் பயிற்றப்பட்ட ஆசிரியரானார். முன்னாள் ஆட்சிமன்ற உறுப்பினர் (Senator) அ. நடேசபிள்ளை அவர்களிடமும் தர்க்க சாத்திரமும் கற்றார்.

சுன்னாகம் மயிலணியைச் சேர்ந்த பிரம்மசிறீ ச. சிவராமலிங்கஐயர் -ஞானாம்பிகை தம்பதிகளின் மூத்த மகள் சாரதாம்பிகையைத் திருமணம் செய்தார். சச்சிதானந்த சர்மா, இராணி, சாவித்திரி ஆகிய மும்மணிகளுடன் இன்பத்திலே திழைத்து இல்வாழ்க்கையில் நிறைவு பெற்றார்

1940 ஆம் ஆண்டு கொழும்பு விவேகானந்தாக் கல்லூரியில் ஆசிரியப் பணியைத் தொடங்;கினார். பணியாற்றிய காலத்தில் கொழும்பு விவேகானந்த சபையால் நடத்தப்பட்டு வந்த அகில இலங்கைச் சைவசமய பாடப் பரீட்சைக் குழுவில் அங்கம் வகித்துச் சேவை செய்து வந்தார். ஞாயிற்றுக்கிழமைகளில் வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் சென்று கைதிகளுக்கு அறிவுரை வழங்கி வந்தார். நாட்டின் பல்வேறு பாகங்களிலும் ஆசிரியப் பணியாற்றி வட்டுக்கோட்டை துணைவி அ. மி. த. க. பாடசாலையில் அதிபராகக் கடமையாற்றி 1971ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

தவத்திரு யோகர் சுவாமிகளின் ஆசியுடன் 01.01.1940 ஆம் ஆண்டு காரைநகர் மணிவாசகர் சபையை குருக்கள் ஐயா நிறுவினார். மணிவாசகர் சபை மார்கழி மாத திருவெம்பாவைக் காலத்தில் 1955ஆம் ஆண்டு முதல் மணிவாசகர் விழாவினை நடத்தி வருவதற்கும், மணிவாசகர் விழாவில் எமது நாட்டிலிருந்தும் தமிழ்நாட்டிலிருந்தும் சைவத் தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டு சமயச் சொற்பொழிவாற்றி வருவதற்கும் சிவசிறீ வைத்தீசுவரக்குருக்கள் மணிவாசகர் சபையோடு இணைந்து இறுதிவரை பெரும் பணியாற்றி வந்துள்ளார்.

ஈழத்துச் சிதம்பரத்தில் நடைபெறும் மார்கழி திருவாதிரை உற்சவகாலத்திற் ஷகூத்தப்பிரான் புத்தகசாலை| என்ற பெயருடன் புத்தக நிலையம் ஒன்றை அமைத்துப் பயனுள்ள சைவசமய நூல்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற பெருநோக்குடன் ஆதாயம் கருதாது விற்பனை செய்து தொண்டாற்றினார்.

1960ஆம் ஆண்டு காரைநகர் தமிழ் வளர்ச்சிக் கழகத்தினை நிறுவினார். இதன்மூலம் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான தமிழ்மொழி மாதிரி வினாக்கள் அடங்கிய பத்திரங்களை வெளியிட்டு மாணவர்கள் சிறந்த பெறுபேற்றினைப் பெற்றுக் கொள்வதற்கு உதவினார். தமிழ் இலக்கிய விளக்கம், மதிப்பீட்டுப் பயிற்சிகள், கட்டுரைக்கோவை முதலிய நூல்களையும் வெளியிட்டு மாணவர்களின் தமிழ்க் கல்வி வளர்ச்சிக்கு வழிகோலினார். திண்ணபுரத்திற்கு அருகாமையில் சடையாளி என்ற இடத்தில் ‘மணிவாசகர் சனசமூக நிலையம்’ அமைவதற்கு மூலகர்த்தாவாக இருந்துள்ளார். தன்னிடமிருந்த நூல்களை எல்லாம் கொடுத்து காரைநகர் வியாவில் ஐயனார் ஆலயத்தில் நூல் நிலையம் அமைப்பதற்கு உதவினார்

இவர் ஈழத்துச் சிதம்பரத்தை உயிரினும் மேலாகக் கருதி அதன் வளர்ச்சிக்காக அருந் தொண்டாற்றினார். காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் ‘ஈழத்துச் சிதம்பரம்’ எனப் பெயர் பெற்று உலகறிய விளங்குவதற்கு இவர் காரணமாகவிருந்து தொண்டாற்றியமை குறிப்பிடத்தக்கது.

1960 ஆம் ஆண்டு இவரது தந்தையாரும், ஈழத்துச் சிதம்பர பிரதம சிவாச்சாரியாருமாகிய சிவசிறீ கணபதீசுவரக் குருக்களால் எழுதப்பட்ட ‘ஈழத்துச் சிதம்பரம்’ என்னும் நூலை பதிப்பித்து வெளியீடு செய்தார்.

‘ஈழத்துச் சிதம்பர புராணம்’ என்னும் தல புராணத்தை 1971 ஆம் ஆண்டு நவாலியூர் புலவர்மணி சோ. இளமுருகனார் அவர்களைக் கொண்டு இயற்றுவித்து அன்னாரின் துணைவியாரான பண்டிதைமணி பரமேசுவரி அம்மையாரைக் கொண்டு அதற்குச் சிறந்த உரையையும் எழுதுவித்துப் பதிப்பித்த பெருமை குருக்கள் ஐயாவையே சாரும்.

இவரால் பதிப்பிக்கப்பட்ட ஈழத்துச் சிதம்பரபுராணம் சிறந்த கட்டமைப்பு உடைய நூல் என்று 1974ஆம் ஆண்டு சனவரி 29ஆம் திகதி இலங்கைத் தேசிய நூல் அபிவிருத்திச் சபையால் பாராட்டப்பட்டு சான்றிதழ் அளிக்கப்பட்டது.

2007ஆம் ஆண்டு ஈழத்துச் சிதம்பரத்தில் வீற்றிருக்கும் பூரணை, புட்கலை சமேத ஐயனார் வரலாற்றைக் கூறும் ‘ஆண்டிகேணி ஐயனார் புராணம்’ என்னும் நூலை வட்டுக்கோட்டைப் பண்டிதர் க. மயில்வாகனனார் மூலம் இயற்றுவித்ததுடன் சைவப்புலவர் சு. செல்லத்துரை அவர்களைக்கொண்டு அதற்கு உரையும் எழுதுவித்து வெளியீடு செய்தார்.
காரைநர் கார்த்திகேயப் புலவரால் ஆக்கப்பட்ட ஈழத்துச் சிதம்பர ஆலயத்தின் பெருமையை எடுத்தியம்பும் திண்ணபுர அந்தாதி என்னும் நூலுக்கு தென்னிந்திய தருமைபுர ஆதீனப்புலவர் செஞ்சொற் கொண்டல் சொ. சிங்காரவேலன் அவர்களைக் கொண்டு உரை எழுதுவித்து வெளியீடு செய்தார்.

ஈழத்துச் சிதம்பர தேவஸ்தானத்தினாலே வெளியிடப்பட்ட திருவாதிரை மலர்களுக்கு ஆசிரியராக இருந்து பதிப்பித்து வெளியீடு செய்தார்.

திருமுறைப் பெருமை, சேத்திரத் திருவெண்பா, அருள்நெறித் திரட்டு, திக்கரையந்தாதி, திருவெழு கூற்றிருக்கை, தன்னை அந்தாதி, திருப்போசை வெண்பா, நாவலர் பிள்ளைத் தமிழ், கட்டுரைக் கோவை போன்ற நூல்களையும் பதிப்பித்து வெளியிட்டார்.

தொடர் மொழிக்கு ஒரு சொல், எதிர்சொற்கோவை, பாரத இதிகாசத்தில் வரும் பாத்திரங்களின் குணவியல்பு, காரைநகரில் சைவசமய வளர்ச்சி, உரைநடையாக்கம், மதிப்பீட்டுப் பயிற்சிக்கோவை – தமிழ் மொழி (கா.பொ.த. சாதாரண வகுப்பிற்குரியது) ஆகிய நூல்களை வெளியிட்டமை இவரின் ஆக்கத்திறமையை எடுத்தியம்பியது.

காரைநகர் சைவமகாசபை பொன்விழா மலர், காரைநகர் மணிவாசகர் சபை வெள்ளிவிழா மலர், காரைநகர் வியாவில் ஐயனார் கோயில் குமாபிகேஷமலர், சைவக் களஞ்சியம் போன்ற நூல்களின் தொகுப்பாசிரியராகவும் பணியாற்றினார்;.

12.12.2002இல் யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தத்துவ கலாநிதிப் பட்டம் (PhD) வழங்கப்பட்டது. 1995இல் இலங்கை கம்பன் கழகத்தினால் ‘மூதறிஞர்| என்னும் பட்டம் வழங்கப்பட்டது. 18.11.2001இல் வடக்கு அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு, மற்றும் தமிழ் விவகாரங்கள் அமைச்சு நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் நடைபெற்ற மூத்த கலைஞர்கள் கௌரவிப்பின்போது ‘கலைஞானகேசரி’ என்ற பல்துறைக்கான பட்டம் வழங்கப்பட்டது. 04.11.2007இல் சர்வதேச இந்துக் குருமார் ஒன்றியத்தினால் ‘சிவாகம கிரியா பூஷணம்| என்னும் பட்டம் வழங்கப்பட்டது. 2008இல் காரைநகர் உதவி அரசாங்க அதிபர் பிரிவினரால் நடத்தப்பட்ட கலை இலக்கிய விழாவில் ‘கலைஞானச்சுடர்| என்னும் பட்டம் வழங்கப்பட்டது. 04.02.2006இல் திருவாவடுதுறை ஆதீனம் விருது வழங்கிக் கௌரவித்தது. வலி – கிழக்கு கோப்பாய் சைவசமய அருள்நெறி மன்றம் இவரது சமயப்பணியைப் பாராட்டி ‘அருட்சுடர்மணி| என்னும் பட்டம் வழங்கி கௌரவித்தது. திண்ணபுர அந்தாதி வெளியீட்டு விழாவில் ‘செந்தமிழ் ஞாயிறு| என்னும் பட்டமும் வழங்கப்பட்டது. பேராசிரியர் கனகசபாபதி நாகேஸ்வரனின் மணிவிழாக்குழுவினரால் ‘சமூகமாமணி| என்னும் பட்டமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

பெயரையோ புகழையோ அவாவி நில்லாது மிக அமைதியான முறையில் வாழ்ந்த குருக்கள் ஐயா அவர்கள் சுந்தரேசப் பெருமானின் ஆலயம் உயர்வுக்கும், ‘ஈழத்துச் சிதம்பரம|; என்னும் பெயர் உலகெலாம் பரவி நிலைக்கவும், திருநெறி தமிழும் தெய்வச் சைவசமயமும் தழைக்கவும் அரிய பல தொண்டுகள் செய்த சிவசிறீ க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்கள் ஏப்ரல் மாதம் இருபத்திநான்காம் நாள் (24-04-2015) வெள்ளிக்கிழமை பூர்வபட்ச சப்தமி திதியில் அதிகாலை 3 மணிக்கு பிறவிப் பெருங்கடலை நீத்து ஈழத்துச் சிதம்பரத்தில் திருநடனம் செய்யும் சிவகாமசுந்தரி சமேத நடராசப் பெருமானின் பாதாரவிந்தங்களிலே சங்கமித்தார்.

தீவக கல்வி வலய ஆசிரியர் மகாநாடு இன்று 23.04.2016 வேலணை மத்தியகல்லூரியில் நடைபெற்றது

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் துர்முகி வருட பிரம்மோற்சவ விஞ்ஞாபனம்-2016 மற்றும் ஆலய திருவிழாக்கள் நேரடி ஒளிபரப்பு பற்றிய அறிவித்தல்

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் துர்முகி வருட பிரம்மோற்சவ விஞ்ஞாபனம்-2016 மற்றும் ஆலய திருவிழாக்கள் நேரடி ஒளிபரப்பு பற்றிய அறிவித்தல்

களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய திருவிழாக்கள் நேரடி ஒளிபரப்பு  http://www.karainagar.com இல் எடுத்துவரப்படும்

கொடியேற்றம்: 12.05.2016  வியாழக்கிழமை

மஞ்சத்திருவிழா:18.05.2016  புதன்கிழமை 

வேட்டைத்திருவிழா: 19.05.2016 வியாழக்கிழமை

சப்பறத்திருவிழா: 20.05.2016  வெள்ளிக்கிழமை

தேர்த்திருவிழா: 21.05.2016  சனிக்கிழமை

 தீர்த்தத்திருவிழா:22.05.2016  ஞாயிற்றுக்கிழமை

பூங்காவனத்திருவிழா:23.05.2016  திங்கட்கிழமை

 

தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/04/PALAVODAI-AMMAN-NOTICE.pdf

PALAVODAI AMMAN.jpg-1

 

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இன்று 21.04.2016 இடம்பெற்ற பால்முட்டி தயிர்முட்டி அடிக்கும் காட்சிகள்

 

 

காரைநகர் கருங்காலி போசுட்டி அருள்மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இன்று 21.04.2016 இடம்பெற்ற தீர்த்தத் திருவிழா காணொளி