Tag: காரைச் செய்திகள்

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 31.05.2017 இடம்பெற்ற 2ம் திருவிழா காட்சிகள்!

பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

https://goo.gl/photos/7rtnWnbchogdjt2fA

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 03.06.2017 இடம்பெற்ற 5ம் திருவிழா காணொளி!

கல்விச் சேவையிலிருந்து ஓய்வு பெறும் முன்னாள் அதிபர் பொன். சிவானந்தராசா அவர்களுக்கு காரை இந்துக்கல்லூரிச் சமூகம் நடத்திய சேவை நலன் பாராட்டு விழா

கல்விச் சேவையிலிருந்து ஓய்வு பெறும் முன்னாள் அதிபர் பொன். சிவானந்தராசா அவர்களுக்கு காரை இந்துக்கல்லூரிச் சமூகம் நடத்திய சேவை நலன் பாராட்டு விழா

எமது கல்லூரியின் முன்னாள் அதிபரும், வேலணைக் கோட்டக் கல்விப் பணிப்பாளருமாகிய திரு பொன். சிவானந்தராசா அவர்களின் சேவை நலன் பாராட்டு விழா 30.05.2017 அன்று பிற்பகல் 1.00 மணியளவில் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் காரைநகர்க் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு ஆ. குமரேசமூர்த்தி அவர்களும், அயற்பாடசாலை அதிபர் திரு வே. முருகமூர்த்தி அவர்களும், கல்லூரி ஆசிரியர் திரு ச.அரவிந்தன் அவர்களும், பழைய மாணவர் சங்கச் செயலாளர் திரு ந. பாரதி அவர்களும், ஓய்வுநிலை அதிபர் திரு தில்லையம்பலம் அவர்களும் கலந்து சிறப்பித்து வாழ்த்துரை வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. 

நிகழ்வில் எடுக்கப்பட்ட சில படங்களைக் கீழே காணலாம். 

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இன்று 02.06.2017 இடம்பெற்ற 4ம் திருவிழா காணொளி!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 30.05.2017 இடம்பெற்ற கொடியேற்றம் திருவிழா காட்சிகள்!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 30.05.2017 இடம்பெற்ற கொடியேற்றம் பகல் திருவிழா காட்சிகள்!

 

பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

https://goo.gl/photos/gE1UA5myuRmx83is9

 

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 30.05.2017 இடம்பெற்ற கொடியேற்றம் இரவு திருவிழா காட்சிகள்!

 

பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

https://goo.gl/photos/der1VwdxJGUy11Xo8

 

 

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இன்று 01.06.2017 இடம்பெற்ற 3ம் திருவிழா காணொளி

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோவில் தல வரலாறு

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோவில் தல வரலாறு

 

பின்னே திரிந்துன் னடியாரைப் பேணிப் பிறப்பறுக்க

முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவர்க்கும்

அன்னே உலகுக் கபிராமியென்னும் அருமருந்தே

என்னே இனியுன்னையான் மறவாமல் நின்றேத்துவனே.

 

    யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமேல் திசையில் அமைந்துள்ளது காரைநகர். இது நாற்புறமும் கடலாற் சூழப்பட்டும் காரைச் செடிகள் முற்காலத்தில் நிறைந்தும் காணப்பட்டதால் காரைதீவு என அழைக்கப்பட்டது. அகத்தியர், துர்வாசமுனிவர், ஆகியோர் தவம் செய்த பூண்ணியபூமி.

 

காரை வளர் தீவென்பர் நகரென்பர்

  கற்றோர்கள் கலந்து வாழுஞ்

சீரையறி வைப்பென்ப ரளகையெனச்

  செல்வர் மிகுஞ் சேர்வு மென்பர்

ஏரைவளர்த் தமுதளுத்தும் வேளாளர்

  வினைவல்லா ரிருப்பு மென்பர்

ஆரையெது சொன்னாலு மதுவமைய

  வயன் படைத்தா னாசை கூர்ந்தே.

 

பிரமதேவர் உலகங்களை படைக்கும் போது இக்காரைநாடு இவ்வாறு அமைய வேண்டுமென்னும் ஆசையோடு படைத்தாரென்று புராணங்கள் கூறுகின்றன. அறப்பெரிய தவமாற்றி வீடுற்ற தலப்பெருமையுடைய இவ்வூரில் மூர்த்தி , தலம், தீர்த்தம் என்னும் மூவகைச்சிறப்புடைய தலமாக அடியவர் ஒருவரின் அன்பொழுகும் கண்களுக்கு வேப்பமரத்திலுள்ள குறிஞ்சாச்செடியின் மத்தியில் தரிசனம் தந்த பாலாவோடை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் விசேடமானதாகும்.

 

     குளக்கோட்டன், நீலன் என்னும் அரசர்கள் இராசாவின் தோட்டம் என்ற இடத்தில் அரசமாளிகை அமைத்து அரசாட்சி புரிந்து வந்த போது போர்ப்படைகளை அனுப்பி போர் புரிந்த இடமே களபூமி என்றும். ' கார் வழங்கப் பொன் விளையுங் களபூமி' எனவும் வழங்கப்படும். நேற் களஞ்சியமான வயல்கள் இருந்த இப்பகுதியின் தென்கிழக்குப் பகுதியில் பசுமாடுகள் நிறைந்து காணப்பட்டமையால் பாலாவோடை என்ற நாமம் அக்குறிச்சிக்கு ஏற்பட்டது. களபூமிப்பகுதியில் வாழும் பெருமக்களை வீரம்மிகுந்தவர்களாகப் பேசுவதைக் காண்கின்றோம். இது ஒன்றே இப்பகுதி போர்க்களமாக இருந்ததற்குத் தக்க சான்றாக இருக்கின்றது. இங்கு வீற்றிருக்கும் அம்பாள் வீரத்தை வழங்கி வீறு நடை கொண்ட தெய்வமாக அருட்கடாட்சம் புரிவது அம்பாளின் திருவருட் செயலாகும்.

 

     1825 ம் ஆண்டிற்கு முன்பு தோப்புக்காடு அன்பர் ஒருவரின் கண்களுக்கு வேப்பமரத்திலுள்ள குறிஞ்சா செடியின் மத்தியில் அம்பாள் தரிசனம் கொடுத்தார். அவ்விடத்தில் ஊர்மக்கள் குடில் கட்டி வழிபட்டார்கள். நூக பாம்பு ஒன்றும் அம்மனுடனேயே இருந்துவந்துள்ளது. தென்னிந்திய சிற்பாச்சாரியர்களை கொண்டு ஐந்து தலை நாகத்துடன் கூடிய மூலவர் உருவச்சிலையை கொண்டு வந்தபொழுது சுங்க அதிகாரியாக இருந்த ஆங்கிலேயர் ஒருவர் அதை அங்கு வரவிடாமல் தடுத்தார். அடுத்தநான் அவ் அதிகாரி ஆலயம் இருக்குமிடத்தை தேடிவந்து உருவச்சிலையைக் கொடுத்தது மட்டுமன்றி கும்பாபிஷேகத்துக்குரிய உதவிகளையும் செய்தார்.

    

     தம்பி பேரம்பலம் என்ற பேரன்பரினால் மடாலயக் கோவிலாக உருவெடுத்த ஆலயத்தின் அத்திவாரக் கல்லினை காசிநாதர் சின்னக்குட்டி என்பவரே நாட்டினார். இவ்மடாலயக் கோவிலின் நித்திய நைமித்திய பூசைகளை கரணவாயைச் சேர்ந்த சைவக்குருமாரே நடாத்தினார் என்பர்.

இக் கோவிலின் முதற் கும்பாபிஷேகம் 1825 ம் ஆண்டளவிலேயே நடைபெற்றுள்ளது. மேற்கூறப்பட்ட தகவல்கள் செனி வழக்காகும்.

 

    தம்பி பேரம்பலம் என்பவருக்கு பின்பு அவருக்கு சந்ததி பாக்கியம் இல்லாத காரணத்தால் அவரின் உறவினரான சரவனை தம்பிப்பிள்ளை என்பவரே இவ்வாலயத்தை நிர்வகித்து வந்தார். இவர்காலத்தில் விளானையைச் சேர்ந்த திரு. க. சுப்பிரமணியம் என்பவரால் பிள்ளையார் பரிவாரமும் திரு கந்தர் ஆறுமுகம் என்பவரால் சுப்பிரமணியர் பரிவாரமும் வேறு ஒரு அன்பரின் உதவியோடு வைரவர் பரிவாரமும் ஸ்தாபிக்கப்பட்டது.

 

    சரவனை தம்பிப்பிள்ளை அகால மரணமானதைத் தொடர்ந்து பொதுமக்களின் உதவியுடன் கூட்டம் நடாத்தப்பட்டு திரு ஆ.ச. சங்கரப்பிள்ளை அவர்கள் ஆலய அறங்காவலர் பொறுப்பை 1942 ம் ஆண்டு ஏற்றார். சைவக்குருமார் நடாத்தி வந்த பூசைகளை இவர் அறங்காலர் பொறுப்பை ஏற்ற பின்பு அந்தணப் பெருமக்கள் மூலம் நித்திய நைமித்திய பூசைகளை செய்வித்து வந்தார். இவர் காலத்தில் நவக்கிரகங்கள் பரிவாரம், மணிக்கூட்டு கோபுரம், உள்வீதியின் அரைவாசிப்பகுதிக் கொட்டகை, திருக்குளம் ஆகியன அமைக்கப்பட்டு 1952 ம் ஆண்டு இரண்டாவது மகாகும்பாபிஷேகம்  நடைபெற்றது.

 

     திரு.அ.ச. சங்கரப்பிள்ளை அவர்கள் 1959 ம் ஆண்டு காலமானதைத் தொடர்ந்து ஆ.ச சங்கரப்பிள்ளையினதும் ஆ.ச. கந்தையாவினதும் பிள்ளைகளுடன் சேர்ந்து தம்பியராகிய ஆ.ச.ஆறுமுகம் அறங்காவலர் பொறுப்பை ஏற்று நடாத்தினார்.

 

     1971 ல் தேர் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் சில்லுக்குரிய மரங்கள் கிடைக்கவில்லையே என ஏங்கிக் கொண்டிருந்த வேளையில் அம்பாள் தீர்த்தமாடும் தீர்த்தக்குண்டு  என்னும் ஆழம் குறைந்த பரவைக் கடற்கரை மருங்கில் பெரிய தேக்கமரம் தெய்வாதீனமாக வந்தடைந்தமையை அம்பாளின் திருவருட் செயலாகும். இம் மரம் தேர்த்தருப்பணி வேலைகளுக்கு பயன்பட்டது. 1973 ம் ஆண்டு ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாகவும் பின்னர் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற திருப்பணி வேலைகள் காரணமாகவும் பாலாவோடையைச் சேர்ந்த திரு. சி.க. நடராசாவினால் செய்து கொடுக்கப்பெற்ற உற்சவ விநாயகர், சுப்பிரமணியர். பிரதிஸ்டையுடன் 1977 ம் ஆண்டு மூன்றாவது மூறை கும்பாபிஷேகம் நடைபெற்றது. 1984 ம்ஆண்டு புதிய தேரொன்று அப்போதைய அறங்காவலர் திரு. ஆ.ச. ஆறுமுகம் அவர்களின் அயராத பெரு முயற்சியினாலும் பல பெரியார்களின் உறுதுணையுடனும் அமையப்பெற்று வெள்ளோட்ட விழாக்கண்டு அக்காலம் தொடக்கம் அம்பாள் அத்திருத்தேரில் பவனி வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். இக்காலத்தில் கோபுரத்திருப்பணியும் பாலாவோடையைச் சேர்ந்த  வேலுப்பிள்ளை செல்வரத்தினம் குடும்பத்தினரால் ஆரம்பிக்கப்பட்டது. பின்பு நாட்டு நிலமை காரணமாக தடைப்பட்டிருந்தும் அம்பாளின் திருவருளால் மீண்டும் மேற்படி குடும்பத்தினரின் விடா முயற்சியால் இராஜகோபுரம் பூரணமடைந்ததோடு அவர்களின் உபயமாக கோபுர கும்பாபிஷேகமும் நடைபெற்று இப்போது அம்பாள் அடியார்களுக்கு இராஜகோபுர தரிசனம் கிடைக்கப்பெற்றமை மகிழ்ச்சி தரும் விடயமாகும். 1991ம் ஆண்டு யுத்த சூழ்நிலையால் மக்கள் இடம்பெயர்ந்து ஆலய நித்திய பூசை தடைப்பட்டது. 1991ம் ஆண்டில் ஆலய அறங்காவலர் திரு.ஆ.ச ஆறுமுகம் கொழும்பில் காலமானார். பின்னர் 1997 ஆம் ஆண்டு ஒரு சில மக்கள் திரும்பி வந்து செவ்வாய், வெள்ளி தினங்களில் விளக்கேற்றி வழிபட்டு ( அறங்காவலர்களின் குடும்பத்தினர் கொழும்பில் இருந்தபடியினால்) 1997 ம் ஆண்டு வைகாசி மாதத்தில் கூட்டம் ஒன்று கூடப்பட்டு ஒர் திருப்பணிச்சபை உருவாக்கப்பட்டது. 1997ம் ஆண்டு ஆனி மாதம் 25ம் திகதி பாலஸ்தாபனம் செய்யப்பட்டு நித்திய பூசைகள் ஆரம்பிக்கப்பட்டன. 1998ம் ஆண்டு ஆனி மாதம் 31ம் திகதி அறங்காவலர் குடும்பத்தினரிடம் கோவில் நிர்வாகத்தை திருப்பணிச் சபையினர் கையளித்தனர். அறங்காவலர்களின் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து 17.07.2000 ஆம் ஆண்டு அறங்காவலர் சபையை உருவாக்கி பதிவு செய்தனர். அறங்காவலர் சபையினர் அயராத முயற்சி செய்து திருப்பணி வேலைகள் துரித கதியில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்த பொழுது முன்பு ஆன்மிக விதிகளுக்கு மாறான இடத்தில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டமையினால் கார்த்திகை மாதம் 29 ம் திகதி (14.12.2000) மீண்டும் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு கும்பாபிஷேகத்துக்குரிய ஒழுங்குகளை மேற் கொண்டு தைத்திங்கள் 16ம் நாள் (29.01.2000) நான்காவது தடவையான கும்பாபிஷேகத்தை அம்பிகை அடியார்களின் ஒத்துழைப்புடனும் அம்பாளின் அருட்காடட்சத்தினாலும் நடாத்தினார்.

 

     இவ் ஆலயத்தின் வெளி வீதிப் பிராகாரங்களில் வேம்பு, அரசு,ஆல், இலுப்பை முதலிய மரங்களுள்ளன. ஆலயத்தின் வடகிழக்குப்பக்கத்தில் வைரவ சுவாமி வீற்றிருக்கும் ஆலய தல விருட்சமாக விளங்கும் இலுப்பை மரம் ஏறக்குறைய 200 ஆண்டுகள் வரை இருந்து கொண்டிருப்பதாக எண்ண இடமுண்டு. இது ஆலயத்தின் தொன்மையை எடுத்துக்காட்டுகின்றது.  இங்குள்ள அன்னதான மண்டபம் அமரர் வே.இ. தம்பிப்பிள்ளை அவர்களினால் உருவாக்கப்பட்டு திருவிழாக்காலத்தில் பசிப்பிணி தீர்க்கும் அமுதசுரபியாக மிளிருகின்றது. ஆலயத்தின் தென் கீழ் திசையில் அமைந்துள்ள திருக்குளம் விளானையைச் சேர்ந்த அன்பர் தில்லையம்பலம் அவர்களின் பெருமுயற்சியால் அழகாக அமைக்கப்பட்டு புஷகரணியாக மிளிருகின்றது. வைகாசி அலங்கார திருவிழாவின் 7ம் நாளன்று முல்லைத்தீவிலுள்ள வற்றாப்பளை அம்மனின் பிரகாசமான ஒளியை பாலாவோடை அம்மனின் கிழக்குப பக்கமாக உள்ள கடற்பரப்பில் அடியார்கள் கண்டு ஆனந்தம் கொண்டுள்ளார்கள்.

 

மேற்படி ஆலயவரலாறு 2001ம் ஆண்டு நடைபெற்ற மஹா கும்பாபிஷேக மலரில் இருந்து தொகுக்கப்பட்டுள்ளது.

 

குறிப்பு :- மேற்படி ஆலய வரலாறு 2017ம் ஆண்டு நடைபெற்றுக்கொண்டிருக்கும் உற்சவத்தை ஒட்டி வெளியிடப்படுகின்றது

 

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இன்று 31.05.2017 இடம்பெற்ற 2ம் திருவிழா காணொளி!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இன்று 30.05.2017 இடம்பெற்ற கொடியேற்றம் திருவிழா காணொளி!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் ஆலய திருவிழாக்கள் நேரடி ஒளிபரப்பு பற்றிய அறிவித்தல்!


காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில்  ஆலய  திருவிழாக்கள் நேரடி ஒளிபரப்பு பற்றிய  அறிவித்தல்!


காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் ஆலய  திருவிழாக்கள் காலை 6.30மணி  தொடக்கம் (இலங்கை நேரப்படி) நேரடி ஒளிபரப்பு  http://www.karainagar.com இல் எடுத்துவரப்படும்.


கொடியேற்றம் திருவிழா: 30.05.2017 செவ்வாய்க்கிழமை 6.30AM (இலங்கை நேரப்படி )

வேட்டைத் திருவிழா: 05.06.2017 திங்கட்கிழமை 

சப்பறத் திருவிழா: 06.06.2017  செவ்வாய்க்கிழமை   7.00PM (இலங்கை நேரப்படி )

தேர்த் திருவிழா: 07.06.2017 புதன்கிழமை   

தீர்த்தத் திருவிழா:  08.06.2017 வியாழக்கிழமை  

பூங்காவனத் திருவிழா: 09.06.2017 வெள்ளிக்கிழமை 

unnamed

காரை அபிவிருத்திச் சபையினரால் முதற்கட்டமாக காரை அபிவிருத்திச் சபையில் பதிவு செய்த கட்ராக்கினால் அவதிப்பட்ட 21 கண்நோயாளர்கள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கண் அறுவைச் சிகிச்சை உட்படுத்தப்பட்டுள்ளனர்.

20170515_072517_001 20170515_072559 20170515_072603 20170515_072946 20170523_181733_001-1

காரைநகர் அபிவிருத்திச் சபையினரால் 500 L குடிநீர் தாங்கி கோவளம் விளையாட்டுக் கழகத்தினரின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

காரைநகர் அபிவிருத்திச் சபையினரால்  500 L குடிநீர் தாங்கி கோவளம் விளையாட்டுக் கழகத்தினரின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அன்பளிப்பாக வழங்கப்பட்டது. கோவளம் விளையாட்டுக் கழகத்தினர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக நீர்த்தாங்கி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் காரைநகர் அபிவிருத்திச் சபையின் கோரிக்கையினையேற்று மல்லிகை   நன்னீர்க் பொதுக் கிணற்றினை சிரமதானம்  மூலம் துப்பரவாக்கித் தந்தமையும் குறிப்பிடத்தக்கது.

20170523_155539 20170523_155543

காரை அபிவிருத்திச் சபையின் நன்னீர் பொதுக் கிணறுகளை துப்பரவாக்கும் செயற்பாட்டின் ஓர் அங்கமாக மல்லிகை குடிநீர்க் கிணறு கோவளம் விளையாட்டுக் கழகத்தினரால் சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டு பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.

FB_IMG_1495443846838 FB_IMG_1495443881402 FB_IMG_1495443912507 FB_IMG_1495443928562 FB_IMG_1495443936320

காரைநகர் மருதடி வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் இன்று 19.05.2017 இடம்பெற்ற தேர்த்திருவிழா காணொளி!

காரைநகர் மருதடி வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் நேற்று 18.05.2017 இடம்பெற்ற சப்பறத்திருவிழா காட்சிகள்!

DSC_5061 DSC_5062 DSC_5063 DSC_5064 DSC_5066 DSC_5067 DSC_5068 DSC_5069 DSC_5070 DSC_5071 DSC_5072 DSC_5073 DSC_5074 DSC_5075 DSC_5076 DSC_5077 DSC_5078 DSC_5079 DSC_5080 DSC_5081 DSC_5082 DSC_5083 DSC_5084 DSC_5085 DSC_5086 DSC_5087 DSC_5088 DSC_5089 DSC_5090 DSC_5091 DSC_5092 DSC_5093 DSC_5094 DSC_5095 DSC_5096 DSC_5097 DSC_5098 DSC_5099 DSC_5100 DSC_5102 DSC_5103 DSC_5104 DSC_5105 DSC_5106 DSC_5107 DSC_5108 DSC_5109 DSC_5110 DSC_5111 DSC_5112 DSC_5113 DSC_5114 DSC_5115 DSC_5116

இளைப்பாறிய யாழ்ற்ரன் கல்லூரி முதல்வர் அமரர் திரு.நா.வேலுப்பிள்ளை அவர்களின் மறைவு குறித்து யாழ்ற்ரன் கல்லூரிச் சமூகம் கண்ணீர் அஞ்சலி

Mr.N.Veluppilai 15.05.2017

காரைநகர் களபூமி திக்கரை முருகன் கோபுர தரிசனம் கும்பாபிஷேக மலர் 2008

THIKKARAI MURUGAN KOVIL BOOK 2008

காரைநகர் திக்கரை முருகமூர்த்தி கோவில் குடமுழுக்கு விழா மலர் 1974

THIKKARAI MURUGAN KOVIL BOOK 1974

காரைநகர் பயிரிக்கூடல் ஶ்ரீசுப்பிரமணிய சுவாமி பிள்ளைத் தமிழ் மலர் 1987

Payirikoodal.Book

காரைநகர் கருங்காலி போசுட்டி அருள்மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இடம்பெற்ற பூங்காவனத் திருவிழா காணொளி!

காரைநகர் கருங்காலி போசுட்டி அருள்மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இடம்பெற்ற காவடி காட்சிகள்!

 

 

 

DSC_3906 DSC_3920 DSC_3936 DSC_3941 DSC_3942 DSC_3948 DSC_3953 DSC_3954 DSC_3970 DSC_4006 DSC_4007 DSC_4018 DSC_4020

 

_MG_7146 _MG_7148 _MG_7216 _MG_7224 _MG_7225 _MG_7264 _MG_7268 _MG_7269 _MG_7270 _MG_7333 _MG_7335 _MG_7361 _MG_7420 _MG_7423

காரைநகர் கருங்காலி போசுட்டி அருள்மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இடம்பெற்ற தீர்த்தத் திருவிழா காணொளி!

 

 

காரைநகர் சிவன் கோவில் (ஈழத்துச் சிதம்பரம்) மஹா கும்பாபிஷேக மலர் 1998

SIVAN KOVIL BOOK 1998

 

 

SIVAN KOVIL BOOK-KARAI OLI 1998

காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் ஈழத்துச் சிதம்பர தேவஸ்தானம் சிற்பத்தேர் வெள்ளோட்ட மலர் பற்றிய ஒரு கண்ணோட்டம்

SIVAN KOVIL BOOK

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் ஹேவிளம்பி வருட பிரம்மோற்சவ விஞ்ஞாபனம்-2017

unnamed

காரைநகர் மணற்காடு அருள்மிகு கும்பநாயகி முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் 2ம் நாள் உற்சவ விசேட மலர் 2003

MANATKADU AMMAN KOVIL BOOK 2003

காரைநகர் கருங்காலி போசுட்டி அருள்மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இடம்பெற்ற தேர்த் திருவிழா காணொளி!

காரைநகர் கருங்காலி போசுட்டி அருள்மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இடம்பெற்ற சப்பறத்திருவிழா காணொளி!

காரைநகர் கருங்காலி போசுட்டி அருள்மிகு முருகமூர்த்தி ஆலயத்தில் இடம்பெற்ற வேட்டை திருவிழாவும் தேர்வெள்ளோட்டமும் காணொளி!

காரைநகர் வைத்தியசாலை நிர்வாகத்தினருக்கும் காரைநகர் அபிவிருத்திச் சபை பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று 08.05.2017 காரைநகர் வைத்தியசாலையில் இடம்பெற்றது.

காரைநகர் வைத்தியசாலை நிர்வாகத்தினருக்கும் காரைநகர் அபிவிருத்திச் சபை பிரதிநிதிகளுக்கும்  இடையிலான சந்திப்பு  இன்று  08.05.2017 காரைநகர் வைத்தியசாலையில் இடம்பெற்றது. வைத்தியசாலையின் தேவைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

20170508_155919 20170508_155933 20170508_155942