Tag: காரைச் செய்திகள்

காரைநகர் அபிவிருத்திச் சபையும் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையும் இணைந்து நடாத்தும் முத்தமிழ் விழா அழைப்பிதழ்

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 02.01.2020 வியாழக்கிழமை நடைபெற்ற திருவாதிரை 2ம் நாள் திருவிழா (காணொளி)

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 02.01.2020 வியாழக்கிழமை நடைபெற்ற திருவாதிரை 2ம் நாள் திருவிழா காட்சிகள்!

காரைநகர் தங்கோடை புளியங்குளம் அருளானந்தப் பிள்ளையார் ஆலயத்தில் 01.01.2020 அன்று நடைபெற்ற பெருங்கதை (காணொளி)

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 01.01.2019 புதன்கிழமை நடைபெற்ற திருவாதிரை 1ம் நாள் திருவிழா (காணொளி)

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 01.01.2020 புதன்கிழமை நடைபெற்ற திருவாதிரை 1ம் நாள் திருவிழா காட்சிகள்!

முத்தமிழ் விழாவிற்கு விருந்தினர்களாக அழைப்பது தொடர்பானது!

காரைநகர் தங்கோடை திருவருள்மிகு புளியங்குளம் அருளானந்தப் பிள்ளையார் ஆலய பெருங்கதை 01.01.2020 புதன்கிழமை அன்று நேரடி ஒளிபரப்பு நடைபெறும்.

DCIM100MEDIADJI_0054.JPG

கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையுடன் காரைநகர் சிவன் கோயில் வருடாந்த திருவெம்பா திருவிழாக்களை www.karainagar.com மன்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம்.

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா 2019.12.16 திங்கட்கிழமை நடைபெற்றது.

 

காரைநகர் களபூமி சனசமூக நிலையத்தின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கான பரிசளிப்பு விழாவும் நூல் வெளியீடும் 24.11.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு களபூமி இந்து இளைஞர் மன்ற மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

காரைநகர் களபூமி கலையகத்தின் பொதுக்கூட்டம் 14.11.2019 வியாழக்கிழமை அன்று நடைபெற்றது. அதில் புதிய நிர்வாகசபை தெரிவுசெய்யப்பட்டது.

Kalapoomy Kalaiyagam

காரைநகர் வைத்தியசாலைக்கு 03.11.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிரமதான பணிகள் கலாநிதி விளையாட்டுக் கழகத்தால் மேற்கொள்ளப்பட்டது!

காரைநகர் புதுறோட் கிழவன்காடு கந்தசுவாமி கோயிலில் 02.11.2019 சனிக்கிழமை நடைபெற்ற சூரசங்காரம் காட்சிகள்!

20.10.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காரைநகர் கிழவன்காடு கலாமன்றம் நடாத்திய பரிசளிப்பும் கலைநிகழ்வும்! (காணொளி)

கனடா காரை கலாச்சார மன்றத்தின் 20 வது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட காரை வசந்தம் மலரில் வெளியான கட்டுரை- மறைந்து போன துறைமுகப் பண்பாடு- காரைநகர் துறைமுகத்தினை அடிப்படையாகக் கொண்ட ஒரு விளக்கம் – எஸ்.கே. சதாசிவம்

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் 20 வது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட காரை வசந்தம் மலரில் வெளியான கட்டுரை 

மறைந்து போன துறைமுகப் பண்பாடு 

காரைநகர் துறைமுகத்தினை அடிப்படையாகக் கொண்ட ஒரு விளக்கம்

எஸ்.கே. சதாசிவம்

                கிறிஸ்த்துவுக்கு முற்பட்ட காலம், இலங்கையை ஆட்சி செய்த மன்னர்களின் காலம் வட இலங்கையை ஆட்சி செய்த மன்னர்களின் காலம், ஜரோப்பிய அரசுகளின் காலம், பிரித்தானிய அரசுக் காலம் என அனைத்து ஆட்சியாளர்களின் காலப் பகுதிகளிலும் ஊர்காவற்றுறை, காரைநகர் துறைமுகங்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தன. வாணிப நடவடிக்கைகளிலும், போரியல் வரலாற்றிலும் காரைநகர் ஊர்காவற்றுறை துறைமுகங்களின் அமைவிடமே அவை முக்கியத்துவம் பெறக் காரணமாயிற்று. வரலாற்று ரீதியாக காரைநகர் ஊர்காவற்றுறை துறைமுகங்கள் பெற்றிருந்த சிறப்பினை வரலாற்று ஆசிரியர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் தத்தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் காரைநகர் துறைமுகத்திலும் அதன் சுற்றாடலிலும் இடம் பெற்ற செயற்பாடுகளினால் காரைநகர் துறைமுகப்பகுதி உயிரோட்டமாக இருந்து காரைநகரின் பெருமைக்கு வலுச்சேர்த்தமையை மீட்டுப் பார்த்தலே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

நாட்டில் ஏற்பட்ட அமைதி இன்மை காரணமாக பொருளாதார வலுவை இழந்து, மக்களின் இருப்பை இழந்து, பொலிவிழந்து நிற்கும் துறைமுகமே காரைநகர் துறைமுகப் பகுதி.

வாணிப நடவடிக்கைகள்

இலங்கையும் இந்தியாவும் குடியேற்ற நாடுகளாக இருந்த காலத்தில் இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக ரீதியான செயற்பாடுகளுக்கு தடை ஏதும் இருக்கவில்லை. காரைநகர் துறைமுகத்திற்கும் தமிழகம், தென்கிழக்காசியா (மலேசியா, யாவா) அரேபிய தேசங்கள், கொழும்பு, குயராத் ஆகிய இடங்களுக்கிடையில் வாணிப நடவடிக்கைகள் இடம்பெற்றன. ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் அதிகளவான சரக்குக் கப்பல்கள் காரைநகர் ஊர்காவற்துறை துறைமுகங்களுக்கு வருகை தந்தன. இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முற்பட்ட காலப்பகுதியில் வாணிப நடவடிக்கைகளில் ஊர்காவற்துறை துறைமுகம் இலங்கையில் வருமான அடிப்படையில் இரண்டாவது வருமானம் மிக்க துறைமுகமாக திகழ்ந்துள்ளது.

நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் எனும் ஏற்பாட்டில் கொழும்புத் துறைமுகம் முதன்மைப்படுத்தப்பட்டது. இதனால் காரைநகர், ஊர்காவற்றுறை போன்ற துறைமுகங்கள் இதுவரை காலமும் பெற்றிருந்த முதன்மை நிலையை இழந்தன.

காரைநகர் துறைமுகத்துக்கு அண்மிய பகுதியில் சுங்கத்திணைக்களம், சுங்கத்திணைக்கள காவலர்      அலுவலகம், பண்டகசாலை என்பன அமைந்திருந்தன. தென்இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உப-உணவுப் பொருட்கள், ஓடுகள், மட்பாண்டங்கள் என்பன காரைநகர் துறைமுகப் பகுதியில் அமைந்திருந்த பண்டகசாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டது.

காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடைப்பட்ட ஒடுங்கிய பகுதியில் அலுப்பாந்தி துறைமுகப்பகுதிவரை வள்ளங்கள் செல்லக்கூடிய கப்பற்பாதை அமைந்திருந்தமையும் குடாநாட்டிற்கான கடற்வழிப் போக்குவரத்தில் காரைநகர் ஊர்காவற்றுறை துறைமுகங்கள் முக்கியத்துவம் பெறக்காரணம்

ஆயிற்று. காரைநகர் ஊர்காவற்துறை துறைமுகங்களில் இறக்கப்பட்ட பொருட்கள் கடல் வழியாக யாழ்ப்பாண அலுப்பாந்தி துறைமுகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு புகையிரதம் மூலம் தென்னிலங்கைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

தமிழர் பிரதேசங்களில் இருந்து பனை சார்ந்த உற்பத்தி பொருட்களான பனந்தும்பு, பனங்கட்டி என்பனவும் பனை மரங்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன. காரைநகரின் வடபால் அமைந்திருந்த துறைமுகத்திலிருந்து இந்தியாவின் கோடிக்கரைக்கு பனை மரங்கள் ஏற்றிச் செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து  நெல் அரிசிப் பண்டங்களுடன் மீளும் பண்டமாற்று வியாபாரம் நடைபெற்றது. இந்தியாவில் யாழ்ப்பாண சுருட்டுக்கு மதிப்பு இருந்தமையால் சுருட்டும் ஏற்றுமதி செய்யப்பட்டது.

1879ம் ஆண்டு காரைநகருக்கும் பொன்னாலைக்கும் இடைப்பட்ட தரைவழிப் பாதை திறந்து வைக்கப்பட்டமையானது காரைநகர் துறைமுகத்தின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு சாதகமாக அமைந்தது. காரைநகர் துறைமுகத்தில்  இறக்கப்பட்ட பொருட்களை முள்ளியவளை, நெடுங்கேணி, கண்டி, அநுராதபுரம் போன்ற இடங்களுக்கு காரைநகர் வர்த்தகர்கள் கூடார வண்டில் தொடர் அணிகளில் ஏற்றிச் சென்று வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.

காரைநகர் துறைமுகப்பகுதியில் நடைபெற்ற வர்த்தக நடவடிக்கைகள் துறைமுகத்தை அண்மிய பகுதிகளில் வாழ்ந்த மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தி இருக்கலாம். இதனால் பலுகாடு, கருங்காலி, தங்கோடை, கோவளம் ஆகிய குறிச்சிகளில் வாழ்ந்த பலர் வர்த்தகத்தில் ஈடுபட்டனர். அத்துடன் வண்டி தொடர் அணிவர்த்தகமும் அக்காலத்தில் இம்மக்கள்  வர்த்தக துறையில் ஈடுபட ஊக்குவிப்பாக அமைந்திருக்கும்.

தங்கோடை, கோவளம் ஆகிய குறிச்சிகளில் வாழ்ந்த பெரும்பாலானோர் குறிப்பாக மலையகத்திலும் ஏனைய குறிச்சிகளில் வாழ்ந்தோர் நாட்டின் பல பாகங்களிலும் வர்த்தகம் செய்யலாயினர். தமது தந்தையரின் பெயரை முதற்பெயராக கொண்டு வர்த்தகம் செய்ய புறப்பட்ட பலர் கிராமத்திற்கு திரும்பி வருகின்ற போது தாங்கள் வர்த்தகம் செய்த ஊர்களின் பெயர்களை தங்கள் முதற்பெயராக கொண்டு ஊர் திரும்பினர். தாம் வர்த்தகம் செய்த ஊர்களில் வர்;த்தகத்தில் முதன்மை நிலை பெற்றிருந்தது மட்டுமல்லாது காலப்போக்கில் அவ் ஊர்களின் உள்ளுர் ஆட்சி மன்றங்களிலும் பதவி வகித்தனர்.

1780 ல் காரைக்காலில் இருந்து வந்த கனகசபைபிள்ளை காரைநகர் துறைமுகத்திற்கு அண்மிய பகுதியில் வர்;த்தகர்கள், யாத்திரிகள், தங்கி போக்குவரத்து செய்வதற்கு வசதியாகமடம் ஒன்றை அமைத்தார். கப்பல்களில் சரக்கு ஏற்றி வர்த்தகம் செய்து வந்தமையால் பெருஞ்செல்வந்தராய் இருந்தார். வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் இப் பகுதியில் குடியேறி வாழ்ந்தார்கள். பிள்ளைமடம்  அன்றைய நாளில் வர்த்தகத்தின் சிறப்பின் அடையாளமாக அமைந்திருந்தது.

செல்வந்தர்கள் பல கப்பல்களை வர்த்தக சேவையில் ஈடுபடுத்தி  பெருஞ் செல்வந்தர்கள் ஆனார்கள். காரைநகர் துறைமுகப்பகுதியை மையப்படுத்தி வர்த்தக நடவடிக்கைகளில் பலர் ஈடுபட்டனர். சி.க.ஆறுமுகம் வெள்ளையர் ஆறுமுகம் என்று மக்களால் அழைக்கப்படுபவர் இந்தியாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்து துறைமுகத்தடியில் பிரபல்யமான வர்த்தக ஸ்தாபனத்தை நடாத்தி துறைமுகப்பகுதி வர்த்தகத்தில் தனக்கென ஒரு ஸ்தானத்தை வகித்த பெரும் செல்வந்தர் ஆவார். வைரமுத்து சபாபதிப்பிள்ளை, வைரமுத்து ஆறுமுகம் சைவாசாரப் பரம்பரையில் பிறந்த சகோதரர்கள் கப்பல்களை வைத்து ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் செய்தவர்கள். துறைமுகப்பகுதியில் வர்த்தக ஸ்தாபனத்தை நடாத்தி வந்தனர். யாழ்ப்பாண நகரிலும் முன்னணி வர்த்தக ஸ்தாபனத்தின் உரிமையாளர்களாக இருந்தனர்.யாழ்ப்பாண ஜக்கிய பண்டகசாலையை ஆரம்பித்த முக்கியஸ்தர்களில் இவர்களும் அடங்குவர். எஸ்.வி.பொன்னம்பலம் காரைநகர் துறைமுகம் ஊடாக பீடியை இறக்குமதி செய்து வி;ற்பனை செய்யும் வர்த்தகத்தில் பிரபலம் பெற்றிருந்தார்.

 

இந்தியாவில் இருந்து காளை மாடுகள் இறக்குமதி செய்தல்

தமிழரின் பொருளாதார வளத்தில் விவசாயம் முக்கிய பங்கினை பெற்றிருந்தது. விவசாயத்தை வாழ்வாதாரமாக கருதி வாழ்ந்தவர்கள் தென் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நல்லின காளை மாடுகளை தங்கள் வேளாண்மை செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதன் மூலம் உச்சப்பயனைப் பெறலாம் என கருதினர்.

அன்றைய கால கட்டத்தில் சாதாரண மக்கள் மாட்டு வண்டில்களிலும் வசதி மிக்கவர்கள் குதிரை வண்டில்களிலும் தங்கள் பயணங்களை மேற்கொண்டனர். நல்லின காளை மாடுகளை தங்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தும் வண்டில்களில் பூட்டி பயணம் செய்வதால் தங்கள் பயணங்ளை விரைவாக மேற்கொண்டனர். மேலும் நல்லின காளைகளை  பயன்படுத்துவது அன்றைய கால கட்டத்தில் மேலான சமூக அந்தஸ்தாக கருதப்பட்டது.

நல்லின காளை மாடுகளை வளர்ப்பதில் நாட்டம் கொண்ட பலர் காரைநகரில் வாழ்ந்தனர். இந்தியாவில் இருந்து காளை மாடுகளை கொண்டு வருவதில் புதுறோட்டு, இடைப்பிட்டி குறிச்சிகளை சேர்ந்த மினாயர் தில்லைச்சி (தில்லையம்பலம்) தில்லையம்பலம் கந்தையா, தில்லையம்பலம் பொன்னம்பலம் ஆகியோரும் களபூமியில் வாழ்ந்த காசிநாதர் சிதம்பரப்பிள்ளை, சிதம்பரப்பிள்ளை கனகசபை ஆகியோரும் ஈடுபட்டனர்.

காரைநகரில் இருந்து திருவண்ணாமலைக்கு கார்த்திகை விளக்கீட்டினைப் பார்ப்பதற்கு செல்வார்கள். கார்த்திகை தீப திருவிழா காலத்தில் மாடுகள் ஏலத்தில் விற்பதற்காக திருவண்ணாமலை மாட்டுச் சந்தைக்கு கொண்டு வரப்படும். விரும்பிய மாடுகளை கொள்வனவு செய்வார்கள். இந்தியாவில் கொள்ளிடம் ஆற்றங்கரையிலிருந்து மாடுகள் ஏற்றப்படும். தை மாதத்தில் ஊர்காவற்றுறையில் மாடுகள் இறக்கப்படும். பருத்தி அடைப்பில் மாடுகள் பேணகத்தில் இரண்டு வாரங்களிற்கு மாடுகள் பராமரிக்கப்படும். இரண்டு வாரங்களிற்கு பின்னர் மாடுகள் காரைநகர் துறைமுகத்திற்கு கொண்டுவரப்படும். மாடுகளை கொள்வனவு செய்வதற்காக வெளியூர் மக்களும் கூடுவர். சிலர் தங்களிடம் இருக்கும் உள்ளுர் மாடுகளை கொடுத்து நல்லின காளைகளை எடுத்துச் செல்வர். திருநெல்வேலி மாவட்டம் காங்கேயன் மாட்டுச் சந்தையில் கொள்வனவு செய்யப்படும் மாடுகளும் காரைநகர் வழியாக யாழ்ப்பணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

காரைநகர் துறைமுகத்தில் இருந்து மாடுகளை நடத்திச் செல்வர். மாடுகளை நடத்திச் செல்பவர் கம்பீரமானவராக இருப்பார். வெள்ளை வேட்டி கட்டி தலைப்பாகை அணிவார். மாடுகளுக்கு கெச்சை, வெண்டயம், கொம்புக்குழாய், வெள்ளிச்சங்கிலி என்பவற்றுடன் நெத்திப்பவளம் கட்டப்படும். சிவப்பு பச்சை மணிகள் மணிமணியாக கோர்க்கப்பட்டு நடுவில் சங்கு வைத்து நெற்றியில் கட்டப்படும். காரைநகர் துறைமுகப்பகுதியில் இருந்து மாடுகள் வரிசையாக நடத்திச் செல்வது விழா போன்று அமையும்.

போக்குவரத்திற்கான பாதை

1869ம் ஆண்டு வடமாகாண அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டு கால் நூற்றாண்டு காலம் பணியாற்றிய W.C துவைனம் (William Crofton Twynam) பின்னாளில் அவரின் சேவையின் மேன்மை கருதி ‘Sir’ பட்டம் வழங்கப்பட்டது காரைநகர் ஊர்காவற்றுறை துறைமுகங்களின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தினார். காரைநகர் தொப்பிக்கட்டுக்கும் பொன்னாலைப் பகுதிக்கும் இடையே ஒன்பது பாலங்களை உள்ளடக்கிய கற்தெரு 1879ம் ஆண்டு W.C துவைனம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதனால் காரைநகர் யாழ்ப்பாணக் குடா நிலத்துடன் ஒன்பது பாலங்களைக் கொண்ட வீதி நிலங்களால் இணைக்கப்பட்டது. தாம்போதி கட்டுமானம் தொடர்பாக W.C துவைனம் வருகை தந்தமையை குறிக்கும் நினைவுக்கல் காரைநகர் இந்துக்கல்லூரியின் வடக்கு புறத்தில் அமைந்திருந்த சயம்பு மண்டபத்தில் பதிக்கப்பட்டு இருந்தது. தாம்போதி அமைக்கப்பட்டதன் பயனாக யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு தரைவழியாக பயணம் செய்யும் வாய்புக்கிட்டியது. தாம்போதி அமைக்கப்பட்டதன் மூலம் காரைநகர் ஏனைய தீவுகளுடன் ஒப்பிடும் போது சிறப்பு நிலை பெற்றது.

யாழ் குடாநாட்டிற்கு பொன்னாலை தாம்போதி ஊடாக பயணம் செய்யக்கூடிய(கரம்பன், ஊர்காவற்றுறை போன்று) வாய்ப்பான நிலையில் இருந்த ஏனைய தீவக மக்களும் காரைநகர் துறைமுகம் ஊடாக பயணங்களை மேற்கொண்டனர். காரைநகர் மக்கள் தமது பொருளாதார வளத்தை மேம்படுத்த, கல்வி வாய்ப்புக்களை அதிகரித்துக் கொள்ள தாம்போதி அமைத்தமையின் மூலம் சந்தர்ப்பம் கிட்டியது.

எழுவைதீவு, அனலைதீவு, நயினாதீவு, நெடுந்தீவு ஆகிய தீவுகளுக்கான படகுச் சேவை ஊர்காவற்றுறை துறைமுகத்தில் காலையில் ஆரம்பமாகும். யாழ் குடாநாட்டுப் பயணிகள் காரைநகர் துறைமுகத்துக்கு ஊடாக ஊர்காவற்றுறை துறைமுகத்திற்கு சென்று படகுகளில் தம் பயணங்களை தொடர்ந்தனர். மாலையில் மேற்படி தீவுகளில் இருந்து படகுகள் ஊர்காவற்றுறை துறைமுகத்துக்கு திரும்பும்.

நயினாதீவு உற்சவ காலத்தில் பெருமளவிலான பக்தர்கள் வருகை தருவார்கள்.காரைநகர் துறைமுகத்தில் இருந்து மோட்டார் படகுகளிலும்,மோட்டார்வள்ளங்களிலும் ஏறிக் கொள்வதற்காக ஒழுங்கு வரிசையாக அமைக்கப்பட்டவரிசைகளில் மக்கள் காத்திருப்பர். திரு. வீரப்பர் வேலுப்பிள்ளை சண்முகம்

(V.V.Shanmugam)  யாத்திரிகர்களுக்கான தாகசாந்தி ஏற்பாடுகளை செய்வதில்

முதன்மையானவர்.பக்தர்களின் போக்குவரத்துக்கு வசதியாக திருகோணமலை – மூதூருக்கு இடையிலான படகு சேவையை நடாத்திய திரு கே.கே. விசுவலிங்கம் அவர்களின் மோட்டார் படகுகள் சேவையில் ஈடுபடும்.

பௌத்த யாத்திரிகர்களின் புனித பூமியாக கருதும் நயினாதீவில் அமைந்துள்ள விகாரையை தரிசிப்பதற்கு பௌத்தர்கள் முன்னுரிமை வழங்குகின்றனர். கௌதமபுத்தர் நயினாதீவில் காலடி வைத்தமையால் நயினாதீவிற்கு யாத்திரை செய்வது தங்களின் வாழ்நாள் கடமைகளில் ஒன்று எனக் கருதுகின்றனர்.நயினாதீவிற்குசெல்லும் பௌத்த யாத்திரிகள் தரித்து செல்வதற்கான யாத்திரிகர் மடம் (பன்சல) காரைநகர் துறைமுகம் பகுதியில் அமைந்திருந்தது. அழிவடையாமல் சேதமடைந்த நிலையில உள்ள இம்மடம் பின்நாளில்சீநோர்அபிவிருத்தித் திட்டத்தின்  உடமையாக்கப்பட்டது.

காரைநகர் ஊர்காவற்றுறை துறைமுகங்களுக்கிடையே பத்து பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய வள்ளங்கள் (மச்சுவாய்) சேவையில் ஈடுபட்டன. காற்றின் விசைக்கும், திசைக்கும் அமைவாக ஒருவர் அல்லது இருவர் வள்ளத்தினை வலித்து (ஓட்டி) செல்வர் வள்ளம் சரியான திசையில் செல்வதை திசைப்படுத்தும் கருவியை (சுக்கான்) அனுபவம் மிக்க பயணி கையாள்வார். இரு துறைமுகங்களின் கரைகளிலும் வள்ளங்கள் தமது பயண நேரம் வரும் வரை தரித்திருக்கும்.

காரைநகர் ஊர்காவற்றுறை துறைமுகங்களின் இருகரைகளிலும் படகுகள், வள்ளங்கள் அணைப்பதற்கு (கரை சேர்ப்பதற்கு)பாதுகாப்பான வௌ;வேறு இறங்கு துறைகள் அமைக்கப்பட்டு இருந்தது.

காரைநகர் ஊர்காவற்றுறை துறைமுகங்களுக்கு அண்மிய பகுதியில் பயணிகள் தங்குவதற்கான இறங்குதுறை பயணிகள் தங்குமடம் அமைக்கப்பட்டு இருந்தது. காரைநகர் துறைமுகப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இறங்குதுறை பயணிகள் மடம் அழிந்து விட்டது. ஊர்காவற்றுறை பகுதியில் இறங்குதுறை பயணிகள் மடம் சேதம் அடைந்த நிலையில் காணப்படுகிறது. மழை வெய்யில் காலநிலைகளில் பாதுகாப்பாக இருந்து தங்கள் பயணங்கள் ஆரம்பிக்கும் வரை இயற்கையின் எழிலை இரசிப்பதற்கு இறங்கு துறை பயணிகள் மடங்கள்  வாய்ப்பாக அமைந்தது.

ஊர்காவற்துறையில் அழிந்த நிலையில் உள்ள இறங்கு துறை பயணிகள் மண்டபம்

ஆரம்ப காலத்தில் மனிதர்களால் உழக்கிச் செல்லும் பாதை காரைநகர் ஊர்காவற்றுறை துறைமுகங்களுக்கு இடையில் சேவையில் ஈடுபட்டது. பின்னாளில் இயந்திர பாதை சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. ‘மாருதப்புரவி’ எனும் வசதி மிக்க பெரிய இயந்திர பாதை சேவையில் ஈடுபட்டது. மக்கள் பாதுகாப்பாக பயணம் செய்யவும், துவிச்சக்கர வண்டிகள், மோட்டார் வண்டிகள், மாட்டு வண்டிகள் என்பனவற்றை ஏற்றிச் செல்லவும் பாதையின் சேவை வழி செய்தது.

15th Januaray 1908 – The Karaitivu Ferry opened for traffic and the horse boat commenced to ply ( Notes on Jaffna John.H.Martyn)

காரைநகர் ஊர்காவற்துறை துறைமுகங்களுக்கிடையிலாக சேவையில் ஈடுபடும் பாதை, மச்சுவாய்களும் காணப்படுகின்றன

காரைநகர் விவசாயிகள் தீவுப்பகுதியில் மாட்டெரு கொள்வனவு செய்து மாட்டுவண்டில்களில் ஏற்றி பாதையில் காரைநகருக்கு கொண்டு வருவர். காரைநகரில் பயிரிடப்படும் கத்தரிக்காய், அரிசி என்பன் திருக்கல் வண்டில்களில் ஊர்காவற்றுறை சந்தைக்கு எடுத்துச் செல்லப்படும். தீவகப்பகுதிகளில் வெட்டப்படும் பூவரசு  மர இலைகளை கட்டுக்கட்டாக்கி வண்டில்களில் ஏற்றி பாதை ஊடாக மருதனார்மடம் பகுதி தோட்டங்களின் பசளைத் தேவைக்காக எடுத்துச் செல்லப்படும்.

காரைநகர் துறைமுகம் ஊடாக பயணிக்கும் பயணிகள்  மாட்டு வண்டி தொடர் அணிகள் இளைப்பாறிச் செல்வதற்கான வசதியை காரைநகர் கிழக்கு வீதியில் விளானைப்பகுதியில் வாழ்ந்த திரு அம்பலவாணர் இராசரத்தினம் ஏற்பாடு செய்திருந்தார். இராசரத்தினம் அவர்களின் வீட்டிற்கு செல்லும் வாயிற் கதவுகள் கூரை இடப்பட்டு ஓலையினால் வேயப்பட்டு இருந்தது. வீதிப்பக்கமாக கதவுகளின் இரு பக்கமும் படுத்து உறங்கக்கூடிய,ஆறி அமர்ந்து இருக்கக்கூடிய சீமெந்திலான படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தது.

திரு அ. இராசரத்தினம் அவர்களின் வீட்டின் படலையும் ஓய்வெடுப்பதற்கான படிக்கட்டுக்களும்

வீட்டு வளாகத்தில் நன்னீர் கிணறு அமைந்திருந்தது. தண்ணீர் அள்ளிக் கொள்வதற்காக துலாவும் மாட்டுத்தொட்டிகளுக்கு தண்ணீர் இறைப்பதற்கான கட்டுமானங்களும் அமைக்கப்பட்டிருந்தது மாடுகள் நீர் குடிப்பதற்கான நீர் தொட்டி ஆவுரோஞ்சி, சுமை தாங்கி என்பன இவ் இடத்தில் அமைக்கப்பட்டிருந்தது.

 

மாடுகள் நீர் குடிப்பதற்கான தண்ணீர்த்தொட்டி

1950களின் பிற்பகுதி வரை தீவகத்தின் போக்குவரத்தின் மையப்புள்ளிகளாக ஊர்காவற்றுறை காரைநகர் துறைமுகங்கள் திகழ்ந்தன. தீவுக்கு உள்ளும்,தீவுப்பகுதிகளுக்கும் குடாநாட்டிற்கும் இடையிலான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த தீவுப்பகுதி மக்கள் மேற்கொண்ட வினைத்திறன் மிக்க முயற்சிகளால்தங்கள் போக்குவரத்து வசதிகளை அபிவிருத்தி செய்தனர்.

புங்குடுதீவைச் சேர்ந்த ஒன்ற விட்ட சகோதரர்களான சண்முகம் அம்பலவாணரினதும், கந்தப்பு      அம்பலவாணரினதும் இடைவிடாத முயற்சியினால் 1954இல் புங்குடுதீவுக்கும் வேலணைத்தீவுக்கும் இடையிலான தாம்போதி பாவனைக்கு வந்தது. இவர்களின் நினைவாக இன்று வரை வாணர் தாம்போதி என்று இப்பாலம் அழைக்கப்பட்டு வருகின்றது. தீவுப்பகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு அல்பிரட் தம்பிஐயா மூலம்  அரசின் ஆதரவைப் பெற்றனர்.

1950களில் மாருதப்புரவீகவல்லி எனும் இயந்திர பாதை பண்ணைக்கும் வேலணைத்தீவுக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டது. 1961 ஆம் ஆண்டு பண்ணைப்பாலம் மக்கள் பாவணைக்கு திறந்து விடப்பட்டது.

1958 ம்ஆண்டு புங்குடுதீவு குறிகாட்டுவான் இறங்குதுறை சேவைக்கு வந்தது. நெடுந்தீவு, நயினாதீவு மக்கள் தங்கள் பயணங்களை குறிகாட்டுவான் இறங்குதுறையில் இருந்து ஆரம்பித்தனர். நயினாதீவு நாகபூஷனி அம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களும், யாத்திரிகர்களும் தங்கள் பயணங்களை குறிகாட்டுவான் துறையில் இருந்து ஆரம்பித்தனர்.ஊர்காவற்றுறை  துறைமுகத்தில்  இருந்து நயினாதீவிற்கான கடல்ப்பயணம்  75மூ  ஆகவும் நெடுந்தீவிற்கான பயணம் 50மூ ஆகவும்; குறைந்தது.

1972ம் ஆண்டு தீவகம் தீவுப்பகுதி வடக்கு, தீவுப்பகுதி தெற்கு என இரண்டு

காரியாதிகாரிகள் பிரிவாக (D.R.O.Office) பிரிக்கப்பட்டன. தீவுப்பகுதி தெற்கு    காரியாதிகாரி அலுவலகம் வேலணை வங்களாவடிச்சந்தியில் இயங்க ஆரம்பித்தது போக்குவரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்  காரணமாக தீவகமக்கள்இலகுவில் பயணம் செய்யக்கூடிய வேலணை வங்களாவடி சந்தியில் ஏனைய அரச காரியாலயங்களும் நிறுவப்பட்டன. எனினும் நீதிமன்றம் காவல்துறை பணிமனை ஊர்காவற்றுறையில் இயங்கின. தீவகப்பகுதிவடக்குபிரதேச செயலகம் வங்கிகள் ஏனைய அரச காரியாலயங்கள் ஊர்காவற் துறையில்

இயங்கின. மேற்சொல்லப்பட்ட மாற்றங்களினால் ஊர்காவற்றுறை வரலாற்று காலங்களில் துறைமுக நகரம், தீவகத்தின் தலைமையகம் என பெற்றிருந்த  சிறப்பு அந்தஸ்தை இழந்தது.

சீநோர் அபிவிருத்தித் திட்டம் – Cey- Nor Development Project

வர்த்தக செயற்பாடுகளினால் துறைமுக பட்டினம் ஒன்றினை காரைநகர் தன்னகத்தே வைத்திருந்து பெற்றிருந்த சிறப்பு நிலை மெதுவாக மறைந்து செல்ல சீநோர் அபிவிருத்தித் திட்டத்தின் வருகையினால் மீண்டும் காரைநகர் பொருளாதார வலுவுள்ள முயற்சியாண்மை மிக்க துறைமுக பட்டினம் ஒன்றினை தன்னகத்தே வைத்துள்ளது எனும் அந்தஸ்து பேணப்பட்டது.

உணவுத் திணைக்களத்தின் உணவுக்களஞ்சியங்கள், சுங்க திணைக்கள அலுவலகங்கள், பௌத்த யாத்திரிகள் தங்கும் விடுதி ஆகிய இடங்கள் சீநோர் அபிவிருத்தித் திட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

1967 ம் ஆண்டின் ஆரம்பத்தில் சீநோர் மாலுமீன் நிறுவனம்; (MALLU MEEN ENTERPRISES) எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டு; இயங்கியது.1970ம் ஆண்;டு நோர்வே நல்லொழுக்க இளைஞர் இயக்க (NORWAY GOOD TEMPLER ORGANISATION) தலைவரின் வருகையின் பின்னர் சீநோர் அபிவிருத்தி திட்டம்  (CEY NOR DEVELOPMENT PROJECT) எனும் பெயர் மாற்றம் பெற்றது.

மதுஒழிப்பு, சகோதரத்துவம், கிராமங்கள் அபிவிருத்தி, கல்வி அபிவிருத்தி என்பனவற்றை அடைவதற்கான இலக்குகளுடன் நல்லொழுக்க இளைஞர் இயக்கம்  (GOOD TEMPLER ORGANISATION) பணி ஆற்றியது. காரைநகரின் அயல் ஊர்களில் அமைந்திருந்த சிறிய பின் தங்கிய கிராமங்களும் மேற்சொல்லப்பட்ட இலக்குகளை எய்துவதற்கான பணிப்பிரதேசமாக உள்வாங்கப்பட்டது.

1968ம் ஆண்டு கப்பல் கட்டும் தளம் (BOAT YARD) அமைக்கப்பட்டது. கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்படும் இழை நாரிலான படகுகள் (FIBRE GLASS BOAT) மயிலிட்டி, வல்வெட்டித்துறை சிலாபம், நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களில் இருந்து படகுகளை கொள்வனவு செய்ய வருபவர்களுக்கு ஜயாயிரம் ரூபா பெறுமதியான படகுகள் மூவாயிரம் ரூபாவிற்கு மானிய விலையில் விற்கப்பட்டது.

1975ம் ஆண்டளவில் கடல் உணவு பதனிடல் (நண்டு,இறால்) பகுதி ஆரம்பிக்கப்பட்டது. காரைநகரிலும் அயல் ஊர்களிலும் இருந்து வருகை தரும் பெண்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இங்கு பதனிடப்பட்ட நண்டுகள் பொதி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஏற்றுமதி செய்யப்பட்டது. சீநோரின் தேவைக்காக ஜஸ் உற்பத்தி (ICE PLANT) ஆரம்பிக்கப்பட்டது. தனியாருக்கும் ஜஸ் விற்கப்பட்டது. இக்கால கட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட (Paro Cement) படகு கட்டும் திட்டம் வெற்றி அளிக்கவில்லை. இரண்டு முதல் ஜந்து தினங்கள் கடலில் தரித்து நின்று மீன் பிடிக்கும் இழுவைப் படகுகள் (Trawler) ஆழ்கடல் மீன் பிடியில் ஈடுபடுத்தப்பட்டன. இழுவைப்  படகுகளை கரை சேர்ப்பதற்கான இறங்கு துறை காரைநகர் துறைமுகப் பகுதியில் அமைக்கப்பட்டது. ஆழ் கடலில் பிடிக்கப்படும் மீன்கள் கொழும்பிற்கு பார ஊர்திகளில் அனுப்பி வைக்கப்பட்டது. உள்ளுர் நுகர்வோருக்கான மீன் விற்பனை நிலையம் சீநோர் வளாகத்தில் செயற்பட்டது. தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களின்; குடும்பத்தின் நாளாந்த தேவைகளுக்கான மீன் பொதி இடப்பட்டு பணி முடிந்து வீடு செல்லும் போது எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக காவலர் அறையில் (guard room) வைக்கப்படும்.

சிறுவர் பாதுகாப்பு நிதியம் நோர்வே, சுவீடன் (Save the children, Norway,Sweden) ஆகியன இணைந்து RED BANA 1975ல் சுகாதார நிலையம் (Health Centre) ஆரம்பிக்கப்பட்டது. கிரமமாக clinic நடாத்தி கர்ப்பிணி பெண்களை பரிசோதித்து ஊட்டச்சத்து வழங்கப்பட்டது. இரண்டு நோயாளர் காவு

வண்டி (Ambulance) வழங்கப்பட்டது. நல்லொழுக்க இளைஞர் இயக்க (Good Templer Organisation) குளோப் நூலகம் சீநோர் தொழிற்சாலைக்கு அண்மிய பகுதியில் இயங்கியது.

தோப்புக்காடு, ஊரி,காரைநகரின் ஏனைய பகுதி மக்கள்,ஊர்காவற்றுறை,குடா நாட்டின் ஏனைய பிரதேசங்களிலிருந்தும் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பணியாற்றினார். 6.00-2.00,2.00-6.00,6.00-10.00 என்கின்ற மூன்று சுற்றில் தொழிற்சாலை இயங்கியது.

1981 ல் சீநோர் மீன் பிடி கூட்டுத்தாபனத்துடன்  (Fisherien Co-operation) இணைக்கப்பட்டது. கடல் உணவு(நண்டு,இறால்)பதனிடும் பகுதி தனியாருக்கு வழங்கப்பட்டது. வென்னப்புவையிலும்,மாத்தறை பொல்காகமுல்லை எனும் இடங்களிலும் வலைகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டது.கொழும்பு முகத்துவாரப்பகுதிக்கு கப்பல் கட்டும் தளம் மாற்றப்பட்டது.மேற்சொல்லப்பட்ட செயற்பாடுகள் காரணமாக சீநோர் ஸ்தாபனத்திற்கு இறங்கு நிலை ஏற்பட்டது.

சமூக சேவை பகுதியும் ஏனைய செயற்பாடுகளும் தொடர்;ந்து இயங்கியது.1981ல் ஊழியர்களுக்கு கட்டாய வேலை நீக்க உத்தரவு வழங்கப்பட்டது. 600 பேர் சுயமாக வேலையை விட்டு விலகிச் சென்றனர்.

1985ம் ஆண்டு காலப்பகுதியில் கடற்படை முகாம் மீது தாக்குதலை தொடர்ந்து தோப்புக்காடு கிராம மக்கள் இடம்பெயர ஆரம்பித்தனர். துறைமுகப்பகுதியில் மக்கள் நடமாட்டம் குறையத் தொடங்கியது. தொடர்ந்து வந்த சீரற்ற நிலைமைகளால் சீநோர் அபிவிருத்தித் திட்டம் கைவிடப்பட்டது.

தற்போது கட்டப்பட்டு வரும் சினோ கப்பல் கட்டும் தளம்

 

காரைநகர் துறைமுகப் பகுதியில் இயங்கிய நிறுவனங்கள்

  1. 1780ம் ஆண்டு கட்டப்பட்ட கனகசபைபிள்ளை மடத்தில் 1928 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காரைநகரின் முதலாவது கிராம சபை இயங்கியது.சிறிது காலம் செல்ல கிராம சபை மடத்து வளத்தில் தனது சொந்த கட்டிடத்தில் இயங்க ஆரம்பித்தது.
  2. துறைமுகம் உப தபாற் கந்தோர் கனகசபைப்பிள்ளை மடத்தில் இயங்கியது.
  3. காரைநகருக்கும் ஏனைய தீவுகளுக்கும் பங்கீட்டு அடிப்படையில் பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக விநியோகிக்கும் அரிசி மூட்டைகள் சேமித்து வைக்கப்படும் அரசாங்க உணவுத்திணைக்கள பண்டகசாலை இயங்கியது.
  4. காரைநகர் மக்களுக்கு பதினாறு கிளைகளுடன் இலாபத்துடன் இயங்கி சிறந்த பணியாற்றிய காரைநகர் பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைமைப் பணிமனையும் பண்டகசாலையும் இயங்கியது.
  5. சுங்கத்திணைக்கள பண்டகசாலை
  6. சீநோர் அபிவிருத்தித் திட்டம்
  7. பௌத்த யாத்திரிகள் தங்கும் இடம்.
  8. குளோப் நூலகம் (Good Templer Organisation)

9.1966 ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை போக்குவரத்து சபை சாலை

10.இலங்கை போக்குவரத்து சபை, தனியார் போக்குவரத்து பேருந்துகளின் சேவைகள் ஆரம்பிக்கும் நிறைவு செய்யும் இடம் (Bus Terminal)

 

காரைநகர் துறைமுகத்தில் இயங்கிய கடைத்தொகுதிகள்

சுறு சுறுப்பாக இயங்கிய காரைநகர் துறைமுகம், சீநோர் அபிவிருத்தித் திட்டத்தின்; வருகையினால் அதிகரித்த தொழிலாளர்களின் பிரசன்னம், போக்குவரத்து பகுதியாக இருந்தமையால் பயணிகளின் வருகை, நயினாதீவு திருவிழா காலங்களில் பக்தர்களின் வருகை, தென் இலங்கை பௌத்த யாத்திரிகளின் வருகை எனப் பல வித செயற்பாடுகளின் நிமித்தம்  வருகை தரும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய கடைத்தொகுதிகள் காரைநகர் துறைமுகப் பகுதியில் அமைந்திருந்தன.

உணவகங்களும் தேநீர் சாலைகளும்

1.அப்பாத்துரை சைவக் கடை

2.சிறி தேவி கபே

3.மல்லிகா கபே

4.முருகன் கபே

5.உதய கிரி கபே

6.இராமையா தேநீர் சாலை

7.செல்லம்மா கந்தையா உணவகம்

8.பண்டா பேக்கரி

காரைநகர் துறைமுகத்தில் அமைந்திருந்த உணவகங்கள் தரம் வாய்ந்தவையாக இருந்தமையால் இவ் உணவகங்களிற்கு காரைநகரின் ஏனைய பகுதி மக்களும் உணவு பண்டங்களை கொள்வனவு செய்ய வருகை தருவார்கள்.

உணவுப் பொருட்கள் விற்பனை நிலையங்கள்

  1. திரு. வெள்ளையர் ஆறுமுகம் கதிரவேலு
  2. திரு.வீ.வே.சண்முகம்
  3. திரு.தி. சிவலிங்கம்
  4. திரு..சு. இராசலிங்கம் உத்தரவு பெற்ற வியாபாரி
  5. ஊறைச்சார் ஆறுமுகம்
  6. புட்டுக்கட்டி கடை

 

 

1972ம் ஆண்டு மதிப்பீட்டிற்காக தயாரிக்கப்பட்ட நில அளவைத் திணைக்களத்தின் வரைபடத்தின் படி துறைமுக பகுதி கடைத்தொகுதிகள்

 

வாரிவளவு நல்லியக்கச்சபை நீச்சல்போட்டிகள்

25 ஆண்டுகாலம் புதுவருட தினத்தை முன்னிட்டு வாரிவளவு நல்லியக்க சபையினரால் நடாத்தப்படும் போட்டிகளில் ஒன்றான நீச்சல் போட்டி நிகழ்ச்சியில் ஆண்களுக்கான போட்டிகள் காரைநகர் துறைமுகத்திலிருந்து ஊர்காவற்துறை துறைமுகம் வரையும் பெண்களுக்காக போட்டிகள் காரைநகர் துறைமுகத்திலிருந்து 100M வரையும் நடைபெறும் இப்போட்டிகளுக்கான பாதுகாப்பினை காரைநகர் கடற்படையினர் வழங்குவர்.

கடற்படை தளபதி நீச்சற்போட்டையை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகின்றார்

 

ஹமன் ஹீல் கோட்டை

காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையே காணப்படுகின்ற நீரேரிப்பகுதி பாக்குநீரிணையோடு சந்திக்கும் மேற்குப் புற மேட்டு நிலத்தில் ஹமன் ஹீல் கோட்டை அமைந்துள்ளது. பெருங்கடலுக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான  கடல்வழி போக்குவரத்திற்கான இணைப்புப் பகுதியாக இருப்பதால் இப்பகுதி முக்கியத்துவம் பெறுகின்றது. போர்த்துக்கேயர் இப்பகுதியின் முக்கியத்துவத்தை உணர்ந்து இந்த மணற்திட்டில் கோட்டை ஒன்றை கட்டினர்.

போர்த்துக்கேயர்ரும் ஒல்லாந்தரும் தமது மொழிப் பெயர்களை தாம் ஆட்சி செய்த பிரதேசங்களில் அமைந்துள்ள இடங்களுக்கு சூட்டினார். ஊர்காவற்துறையை ‘காயஸ்’ (Cays)  என்று அழைத்தனர். போர்த்துக்கேயர் இக்கோட்டையை ‘காயஸ்’  (Cays) என்றும் அரச கோட்டை (Fortaleza Real)என்றும் Fortalez do Rio  ஆற்றின் கோட்டை என்றும் அழைத்தனர்.

1658இல் டச்சுகாரர் யாழ்ப்பாண கோட்டையை கைப்பற்ற முன்னர் காரைநகர் கோட்டையை கைப்பற்றினர். ஒல்லாந்து போர்வீரர் காரை தீவுக்கரையில் இருந்து குண்டுகளை வீசியமையால் கோட்டைக்குள் இருந்த மரத்திலான தண்ணீர் தாங்கி உடைந்தமையால் ஏற்பட்ட நீர்ப் பற்றாக்குறை காரணமாக இருவார கால முற்றுகையின் பின்னர் போர்த்துக்கேயர் சரணடைந்தனர்.

ஒல்லாந்தர் இலங்கையை பன்றியின் (Ham) வடிவில் இருப்பதாக கருதினார்கள் Ham இன் குதிக்கால் (காற்குழம்பு) பகுதியில் கடற்கோட்டை அமைந்திருப்பதாக எண்ணி Hammenhiel (Heel of the Ham) என அழைத்தனர்.

1795 ல் இக் கோட்டை எதிரி எதிர்ப்பு எதுவுமின்றி பிரித்தானியரின் வசமானது.

இக்கோட்டையை பூதத் தம்பி கட்டிய கோட்டை என்றும் கதையுண்டு

1930 களில் பொதுச்சுகாதாரம் கருதி தொழு நோயாளர்களை தனிமைப்படுத்தி வைத்திருக்கும் நிலையமாக இக்கோட்டை பயன்படுத்தப் பட்டது.1971 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக புரட்சி செய்த ஜே.வி.பி இன் முக்கிய தலைவர்கள் இக்கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர்.தற்போது இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள இக் கோட்டையை பொது மக்கள் கடற்படையின் ஏற்பாட்டில் பார்வையிடுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

1672 இல் பிலிப்ஸ் பால் டேய்ஸ் (Philip Baldaeus) என்பவரால் வரையப்பட்ட

காரைநகர் கடற்கோட்டையின் (Fort Hammenhiel) பறவைப்பார்வையில் வலது புறம் இருக்கும் காரைநகர் துறைமுகத்தில் பெரிய கப்பல் நிற்பதைக்காணலாம்.

 

ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாணத்துக்குள் நீர் ஏரி ஊடாக வரும் கப்பல்கள் கடற்கோட்டையில் (Hammenhiel) முன் அனுமதி (பாஸ்) பெறல் வேண்டும் Jacob அவர்கள் தமது கப்பல் மதியம் இரண்டு மணிக்கு காரைதீவு வந்ததாகவும் அங்கிருந்து பாஸ் பெறுவதற்கு கடற்கோட்டையை மாலை 4 மணிக்கு அடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் Jacob Haafner இன் நூலான Reize te voet door het eiland Ceilon எனும் நூலின் முதற்பக்கத்தில் உள்ள Hammenhiel கோட்டையின் படம்.

 

காரைநகர் துறைமுகமும் தோப்புக்காடு மக்களும்

காரைநகர் துறைமுகத்தின் வர்த்தக நடைவடிக்கைகளில்  தோப்புக்காட்டில் வாழ்ந்த மக்கள் பெரும் பங்கு வகித்தனர். தோணிகளில் ஆழ்கடல் தோறும் பல்வாணிபம் செய்யும் கடலோடிகளான தோப்புக்காட்டு மக்களின் வாழ்வாதாரம் கடலோடு சம்பந்தப்பட்டது. பல வகையான பொருட்களை ஏற்றிச் சென்று விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பெரும் வர்த்தகர்களால் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்ட டிங்கி அல்லது சலங்கை (600 – 1000 தொன் சரக்கினை ஏற்றக்கூடியவை) எனும் கடற்கலங்கள் கடற்கோட்டைக்கு அண்மிய ஆழ்கடல் பகுதியில் நங்கூரமிட்டு தரித்து நிற்கும். டிங்கிகளில் எடுத்துவரப்பட்ட சரக்குகளை இறக்கி வத்தைகளில் ஏற்றி காரைநகர் ஊர்காவற்றுறை துறைமுகப்பகுதியில் அமைந்திருந்த சுங்க திணைக்கள அலுவலங்களுக்கு எடுத்துச் சென்று பி;ன்னர் பண்டகசாலையில் ஒப்படைப்பர். சில சந்தர்ப்பங்களில் டிங்கிகளில் இருந்து

இறக்கப்படும் பொருட்களை யாழ்ப்பாண அலுப்பாந்தி துறைமுகத்திற்கும் ஏனைய தீவுகளுக்கும் எடுத்துச் செல்வர். தோப்புக்காட்டு மக்கள்  40 வத்தைகளை(20-40 தொன் ஏற்றக்கூடியது)சேவையில் ஈடுபடுத்தினர். தோப்புக்காடு வத்தை உரிமையாளர்கள் யாழ்ப்பாண பண்டக சாலையில் தீவகப் பல நோக்கு கூட்டுறவு சங்கங்கள் ஊடாக  மக்களுக்கு பங்கீட்டு அடிப்படையில் வழங்கப்படும் பங்கீட்டு அரிசி மூட்டைகளை தமது வத்தைகளில் ஏற்றி அனைத்து தீவுகளுக்கும் விநியோகிப்பர். காங்கேசன்;துறை துறைமுகத்தில் பொருட்களை இறக்கும் பணிகளுக்கு வத்தைகள் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் காங்கேசன்துறைக்கும் தோப்புக்காடு முருகன் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினர் தமது  வத்தைகளை எடுத்துச் செல்வர்.

யாழ்ப்பாணத்திற்கு வெளியிலும் வத்தைகளின் தேவைகள் இருக்கும் சந்தர்ப்பங்களில் தமது வத்தைகளை எடுத்துச் செல்வர். நீர்கொழும்பு சிலாபம் ஆகிய இடங்களுக்கு சென்று தேங்காய் ஏற்றி வருவார்கள். காரைநகர் துறைமுகத்திற்கும் தோப்புக்காட்டுமுனைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் 40 வத்தைகளும் நங்கூரமிடப்படும். தோப்புக்காடு பிரதேசத்தில் நாற்பது வத்தைகளும் சேவையில் ஈடுபடும் போது பணியாற்றக்கூடிய வலுவுள்ள ஆளணியினர் தோப்புக் காட்டில் வாழ்ந்தனர்.

‘ஏண் உற வாழ்பதி ஏற்றத் தோப்பகம்’ பெருமை பொருந்திய புகழ்மிக்க மக்கள் தோப்புக்காட்டின் கரையோரமாக வாழும் நெய்தல் நில மக்கள் என தோப்புகாட்டு மக்களின் சிறப்பினை ஈழத்துச்சிதம்பர புராணம் கூறுகிறது.

 

துறைமுகப்பகுதியும் வீட்டுத்திட்டங்களும்

மடத்துவளவு  வீட்டுத்திட்டம் :- 1982ம் ஆண்டு தேசிய வீடமைப்பு அதிகார சபையால் 40 வீடுகள் கட்டப்பட்டு மடத்துவளவில் வாழ்ந்ந மக்களுக்கு கையளிக்கப்பட்டது 1985ம் ஆண்டு துறைமுகப்பகுதியின் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக இவ் வீடுகளில் வாழ்ந்ந மக்கள் வெளியேறினர்.

தோப்புக்காடு வீட்டுத்திட்டம் :- சீநோர் அபிவிருத்தித் திட்டத்தினால் 110 பரப்ப காணி கொள்வனவு செய்யப்பட்டு காணி வீடு இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டது சுய உதவி வீட்டுத்திட்ட அடிப்படையில் கட்டிடப் பொருட்களை வீடமைப்பு அதிகார சபை வழங்க பயனாளிகள் வீடுகளைக் கட்டினர் 1978ம் ஆண்டு ஜீலை மாதம் சீநோர் அபிவிருத்தித் திட்ட நிதிக்குழு தலைவரால் வீடுகளுக்கான அத்திவாரம் இடப்பட்டது 1981ம் ஆண்டு பெப்ரவரி மாதம் பிரதம மந்திரியும் வீடமைப்பு அமைச்சருமான கௌரவ ஆர். பிரேமதாசா அவர்களினால் பயனாளிகளுக்குக் வீடுகள் கையளிக்கப்பட்டது.

 

 

தோப்புக்காட்டு பகுதி மக்களுக்கு இந்திய அரசின் வீட்டுத்திட்டத்தின் கீழ் 2012 இல் 22 வீடுகளும், 2014 இல் 36 வீடுகளும் வழங்கப்பட்டது. நெய்தல் கிராம மக்களுக்கு அவுஸ்ரேலிய செஞ்சிலுவை சங்க நிதி உதவியுடன் 38 வீடுகள் வழங்கப்பட்டது

சாந்திபுர வீட்டுத்திட்டம் :- மடத்துவளவில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்காக சாந்தி புரத்தில் போரூட் நிறுவன உதவியுடன் 30 வீடுகள் அமைக்கப்பட்டு வழங்கப்பட்டது இவ்வீடுகள் யாவும் தற்போது அழிவடைந்த நிலையில் உள்ளது. இங்கு வாழ்ந்த மக்கள் தற்போது சயம்பு வீதியில் அமைந்துள்ள சேயோன் குடியிருப்பில் அவுஸ்ரேலிய செஞ்சிலுவைச்சங்க நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட 32 வீடுகளில் வசிக்கின்றனர்.

 

 

தந்திமால்

தோப்புக்காட்டு கிழக்கு முனையில் இக்கட்டிடம் அமைந்துள்ளது இப்பகுதி ஆழங்குறைந்த ஒடுங்கிய பகுதியாக இருப்பதால் தொலைத்தொடர்பு சேவைக்கான Cable கடலூடாக இப்பகுதிக்கு நேராக உள்ள ஊர்காவற்துறை பிரதேசத்திற்கு எடுத்துச் செல்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது

தற்போது நடைமுறையில் உள்ள தொலைத்தொடர்பு சேவைகள் அறிமுகப்படுத்த முற்ப்பட்ட காலத்தில் தொலைத்தொடர்பு அலுவலர்கள் இங்கு பணியாற்றினார்.

 

 

 

 

 

1972ம்ஆண்டு மதிப்பீட்டிற்காக தயாரிக்கப்பட்ட நில அளவைத்திணைக்களத்தின் வரைபடத்தின் படி தோப்பு காட்டுப் பகுதி

 

 

கடற்படைமுகாம்மீதான தாக்குதலும்கடற்படைமுகாம்விஸ்தரிப்பும்

பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் காரைநகரில் கடற்படைத்தளம் காரைநகர் துறைமுகத்தை அண்டிய நீலன்காட்டுப்பகுதியில் அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் சிறிய இடத்தில் அமைந்திருந்த கடற்படை முகாம் கடற்படை முகாம் மீதான தாக்குதலை அடுத்து விஸ்தரிக்கப்பட்டது.ஆரம்ப காலத்தில் இருந்து கடற்படை முகாம் மீதான தாக்குதல் வரை மக்களின் இருப்பிடங்கள் கடற்படை முகாமின் அண்மிய பகுதிவரை இருந்தது.

1985 ஆம் ஆண்டு மாசி, வைகாசி மாதங்களில் இலங்கைத் தீவில் தமிழர்

தாயகம் ஒன்றினை அமைப்பதற்காக போராடிய போராளிக்குழுக்கள் கடற்படை

முகாம் மீது தாக்குதலை மேற்கொண்டனர். முதலாவது தாக்குதலுக்குப் பின்னர் கடற்படை முகாமுக்கு அண்மிய பகுதியில் வாழ்ந்த எட்டுக் குடும்பங்களையும், இரண்டாவது தாக்குதலுக்குப் பின்னர் நீலன் காட்டு வீதியின் கடற்கரையில் இருந்து தெற்குபுறமாகவும் மேற்கு வீதியின் தெற்குபுறமாகவும்  கிழுவனை வாய்க்காலிலிருந்து வரும் மழை நீர் கடலுக்கு செல்லும் வாய்க்காலின் மேற்குப்புறமாக (இராசாவின் தோட்டம் , நீலன்காடு, பலகாட்டின் ஒருபகுதி) வாழ்ந்த 125 குடும்பங்களையும் கடற்படையினர் கடற்படை முகாம் பாதுகாப்புக்கருதி வெளியேறுமாறு கேட்டுக் கொண்டதற்கமைவாக மக்கள் வெளியேறினர்.

கடற்படை முகாமுக்கு வடக்கே மேற்கு பிரதான வீதியின் வடக்குப்பக்கமாகவும்

நீலன்காட்டு வீதியின் வடக்குப்பக்கமாகவும், சிறிய தூரம் வரை வசித்த மக்கள்

மடத்துவளவு 40 வீட்டுத்திட்ட வீடுகளில் வசித்த மக்கள், தோப்புக்காடு பகுதியில் வாழ்ந்த மக்களும் பாதுகாப்பக் கருதி  சுயமாக வெளியேறினர். மடத்துவளவில் இயங்கிய காரைநகர் தெற்கு கிராம சபை,தபாற்கந்தோர்,ஆகியன விளானையில் செயற்பட ஆரம்பித்தன.இலங்கை போக்குவரத்துச் சபை தனியார் பேரூந்துகளின் துறைமுகம் வரையிலான பேரூந்துக்களின் சேவை நின்று போயின நலிவடைந்த நிலையில் இருந்த சிநோர்  அபிவிருத்தித்திட்டம் துறைமுகப் பகுதியில் இயங்கிய வர்த்தக ஸ்தாபனங்கள் உட்பட அனைத்தும் செயல் இழந்தன. 1991ம் ஆண்டு ஏப்பிரல் மாத தாக்குதலின் பின் காரைநகர் துறைமுகப்பகுதி முற்று முழுதாக கைவிடப்பட்ட நிலைக்கு உள்ளானது.

 

 

1972ம் ஆண்டு மதிப்பீட்டிற்காக தயாரிக்கப்பட்ட நில அளவைத்திணைக்களத்தின் வரைபடத்தின்படி பாதுகாப்பு காரணங்களுக்காக தற்போது கடற்படை  பகுதி

 

 

கடற்படை முகாம் விஸ்தரிப்பினால் நின்று போன செயற்பாடுகள்

  1. விஸ்தரிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்ந்த மக்கள் தங்கள் வாழ்விடங்களை மாற்றிக் கொண்டனர்.
  2. அரசர்கள் வாழ்ந்த தொல்லியல் பெறுமானம் மிக்க இராசவின் தோட்டம கடற்படையின் கட்டுப்பாட்டின்      கீழ் வந்தது
  3. தங்கோடை, கருங்காலி பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கு அனலைதீவு,எழுவைதீவு ஆகிய தீவுகளில் பனம் தோட்டங்கள் இருந்தன. அங்கிருந்த பனை ஓலைகள் கட்டுக்கட்டாக ஏற்றி வரப்பட்டு இராசாவின் தோட்டத்திற்கு பின்புறமாக உள்ள கடற்கரை பகுதியில் ஏலத்தில் விற்கப்படும் இவ் ஓலைகளை வீடு வேய்வதற்காகவும், வயல்களில் பசளையாகவும் பயன்படுத்தினார்கள்.
  4. நீலன் காட்டின் மேற்கு கரையோரத்தில் மீன்வாடிகள் அமைந்திருந்தன. இப்பகுதியில் மீன்பிடிப்பதற்கு சாதகமான காலநிலை உள்ள காலத்தில் ஐம்பது வரையிலான மீன் வாடிகள் இருந்தன. ஏனைய காலங்களில் பத்து வரையிலான மீன் வாடிகள் இருந்தன காரைநகரைச் சேர்ந்த திரு.ஆ.மகாலிங்கம் மயிலீட்டியைச் சேர்ந்த திரு.கேவி துரைசாமி ஆகியோர் கடற்தொழிலில் பல படகுகளை ஈடுபடுத்தி பிரபல மீன் வியாபாரிகளாகவும், செல்வந்தர்களாகவும் இருந்தனர். மீன் பிடிக்க சாதகமான காலநிலை உள்ள காலங்களில் இரண்டு பாரவூர்தி மீன்கள் நீலன் காட்டில் இருந்து தினமும் கொழும்புக்கு எடுத்துச் செல்லப்படும். மீனவர்கள் தங்கள் உணவுத் தேவையை தாமாகவே நிறைவு செய்தாலும் இவர்களுக்கு

தேவைப்படும் மேலதிக உணவு, நீர் என்பனவற்றை வழங்குவதில் ஈடுபட்ட மக்களுக்கு நாளாந்த வருமானம் கிடைக்கப்பெற்றது.

  1. நீலன் காட்டின் தென்மேற்கு பகுதியில் கடலுக்குள் கப்பல்கள் திருத்தும் இடம் (Dock Yard) இருந்தது இவ் வேலைத்தளம் பொது வேலைத்தள திணைக்களத்தால் (Public Works Department) பராமரிக்கப்பட்டது.
  2. மயிலிட்டி, வல்வெட்டி ஆகிய இடங்களில் இருந்து வருகைதரும் கடற்தொழிலாளர்களின் வழிபாட்டிற்காக கிறிஸ்தவ தேவாலயம் இருந்தது. இத் தேவாலயத்தில் கிறிஸ்தவ மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தமையால் ஊர்காவற்றுறை, பருத்தி அடைப்பு ஆகிய இடங்களில் இருந்தும் மக்கள் வழிபாடு செய்வதற்கு வருகை தருவார்கள்.
  3. பலுகாடு, கருங்காலி, துறைமுகம் தோப்புக்காடு பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கான மயானம் நீலன் காட்டுக் கடற்கரைக்கு அருகே அமைந்திருந்தது

 

காரைநகர் துறைமுகப்பகுதி அபிவிருத்திக்கான முன்மொழிவுகள்

2009ம் ஆண்டு மே 19ம் திகதி போர்முடிவுக்கு வந்தபின் சுமுகமான நிலை தோன்றியுள்ளது. தற்போது காரைநகர் துறைமுகப் பகுதி மீண்டும் துளிர் விட ஆரம்பித்துள்ளது. தோப்புக்காடு மக்களில் ஒரு பகுதியினர் மீ;ளகுடியேறியுள்ளனர் துறைமுகத்திலிருந்து ஆரம்பிக்கும் வீதிக்கு கிழக்குப்புறமாக உள்ள கடைத் தொகுதிகள் திறக்கப்பட்டுள்ளன. கடலில் தரித்து நின்று மீன்பிடிக்கக் கூடிய கப்பல்களை கட்டும் தளத்திற்கான (Boat Yard)  தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பேரூந்துகள் துறைமுகம் வரையிலான சேவையில்  ஈடுபடுகின்றன. தோப்புகாட்டுப் பகுதியில் அமைந்துள்ள தேசிய வீடமைப்பு வீட்டுத்திட்ட வீடுகளை புனரமைப்பதற்கான நிதி நன்கொடையாக வழங்கப்பட வேண்டும். நெய்தல்,தோப்புக்காடு, சாந்திபுரம், வீட்டுத்திட்ட மக்கள் மீள்குடியேற்றத்திற்கு அரச நிதி ஒதுக்கப்படல் வேண்டும். கடலோடிகளாக வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரத்திற்கான புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்த பட வேண்டும்.

காரைநகர் ஊர்காவற்றுறை துறைமுகங்களுக்கு இடையிலான போக்குவரத்து வசதிகள் அதிகரிக்கப்படல் வேண்டும். காரைநகர் ஊர்காவற்றுறை துறைமுகங்களுக்கு இடையிலான தாம்போதி அமைக்கப்படல் வேண்டும். திட்ட வரைபுகள் தயாரிக்கப்பட்டு உள்ள போதிலும் தேவையான நிதி ஒதுககுவதில் காலதாமதம் இடம் பெறுகின்றது.

தாம்போதி அமைக்கப்படுவதன் மூலம் மக்களின் குறிப்பாக அரச பணியாளர்களின் போக்குவரவு இலகு படுத்தப்படும். அரச பணியாளர்கள் விருப்புடன் தீவுப்பகுதிக்கு பணிக்கு செல்வர். நயினாதீவிற்கு செல்லும் யாத்திரிகர்களும் ஏனைய சுற்றுலாப்பயணிகளும் ஒரே தினத்தில் காரைநகர் கசூரினா கடற்கரைக்கும் வருகை தரலாம். காரைநகர் ஊர்காற்றுறை பகுதி மீண்டும் மக்கள் பாவனைக்கு உள்ளாகும்.

கடற்படையின் பாதுகாப்புக் கருதி சுவீரிக்கப்பட்ட மடத்து வளவுப் பகுதியில்

பிரதான வீதியின் மேற்குப் புறமாக குறிப்பிட்ட தூரத்திற்கு பாதுகாப்பு வேலிகளை

பின்னகர்த்துவதன் மூலம் கடந்த காலத்தைப் போன்று இரு பக்கமும்

கடைத்தொகுதிகள் அமைந்து எடுப்பான தோற்றத்தை துறைமுகப்பகுதிக்கு வழங்கும்

கடந்த காலங்களில் வரலாற்று பெருமைக்குரிய இடங்களின் பெறுமானங்களை உணர்ந்து அபிவிருத்தி     செய்தல் அவசியம்.

தமிழினத்தின் வாழ்வியலை, நம் முன்னோரின் வாழ்வியல் சிறப்பினை நமது எதிர்கால சந்ததியின் அறிதலுக்கு அல்லது ஆவணப்படுத்தலுடன் நின்று விடாது அந்த யுகத்தை மீளுருவாக்கம் செய்வது இன்றைய வளர்ந்த தலைமுறையின் பணியாகும்.

பொருளாதாரத்தை வழங்க வல்ல கடல் வளம் நம் கைகளை நழுவிச் செல்கிறது. மரபு வழி கடற் தொழிலை நம்பி வாழ்பவருக்கு அறிவியல் பெற்றுஎடுத்த வாய்ப்புக்களை வழங்கி அவர் தம் வாழ்வை மேம்படுத்தவேண்டும்

ஒரு தலைமுறையின் காட்சியாக இருந்தவை இன்று கனவாகி கடந்து கானல் நீர் ஆக முன்னர் விரைந்து செயற்படல் காலத்தின் கட்டாயம்.

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையுடன் காரை அபிவிருத்தி சபை நடாத்திய கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் காரைநகர் மாணவர்களுக்கான இலவச கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு தொடர்பாக மாணவர்கள் தெரிவித்த கருத்துக்களும் நன்றி தெரிவிப்பும்!

 

 

 

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையுடன் காரை அபிவிருத்தி சபை நடாத்திய கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் காரைநகர் மாணவர்களுக்கான இலவச கல்வி வழிகாட்டல் ஆங்கில பாடத்துக்குரிய கருத்தரங்கு 22.10.2019 செவ்வாய்க்கிழமை அன்று ஆசிரியர் S.K.ஜனகன் தலைமையில் காரைநகர் இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையுடன் காரை அபிவிருத்தி சபை நடாத்திய கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் காரைநகர் மாணவர்களுக்கான இலவச கல்வி வழிகாட்டல் விஞ்ஞான பாடத்துக்குரிய கருத்தரங்கு 21.10.2019 திங்கட்கிழமை அன்று யாழ் மத்திய கல்லூரி ஆசிரியர் ஜெறோம் தலைமையில் காரைநகர் இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையுடன் காரை அபிவிருத்தி சபை நடாத்திய கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் காரைநகர் மாணவர்களுக்கான இலவச கல்வி வழிகாட்டல் விஞ்ஞான பாடத்துக்குரிய கருத்தரங்கு 21.10.2019 திங்கட்கிழமை அன்று யாழ் மத்திய கல்லூரி ஆசிரியர் ஜெறோம் தலைமையில் காரைநகர் இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையுடன் காரை அபிவிருத்தி சபையினரால் காரைநகர் பாடசாலைகளில் கல்விகற்கும் கல்வி பொதுதராதர சாதாரண தர மாணவர்களுக்கு முன்னெடுக்கப்படும் இலவச கருத்தரங்கிற்கு வருகை தந்த தீவக வலய கல்விப்பணிப்பாளர் காரை அபிவிருத்தி சபையினால் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்திற்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார்.இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்

கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையுடன் காரை அபிவிருத்தி சபை நடாத்திய கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் காரைநகர் மாணவர்களுக்கான இலவச கல்வி வழிகாட்டல் தமிழ்மொழியும் இலக்கியமும் பாடத்துக்குரிய கருத்தரங்கு 20.10.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ் மத்திய கல்லூரி ஆசிரியர் பா.சற்குணராசா தலைமையில் காரைநகர் இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையுடன் காரை அபிவிருத்தி சபை நடாத்திய கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் காரைநகர் மாணவர்களுக்கான இலவச கல்வி வழிகாட்டல் வரலாறு பாடத்துக்குரிய கருத்தரங்கு 19.10.2019 சனிக்கிழமை அன்று S.சுகந்தன் ஆசிரியர் (மேல்மாகாணம்) தலைமையில் காலை 7.30 ஆரம்பமாகி 12.45 மணிவரை காரைநகர் இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.

20.10.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காரைநகர் கிழவன்காடு கலாமன்றம் நடாத்திய பரிசளிப்பும் கலைநிகழ்வும்!

காரைநகர் களபூமி கலையகத்தில் 13.10.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற வாணி விழாவும் ஆசிரியர் தின விழாவும்!

காரைநகர் கிழவன்காடு கலாமன்றம் நடாத்தும் பரிசளிப்பும் கலைநிகழ்வும் அழைப்பிதழ்! (20.10.2019 ஞாயிற்றுக்கிழமை)

காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தின் ஆசிரியர் தின விழா 09.10.2019 புதன்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.

காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தின் ஆசிரியர் தின விழா 09.10.2019 புதன்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஆசிரியர் தினா விழாவுக்கு பிரதம விருந்தினராக திரு.ஆ.குமரேசமூர்த்தி (கோட்டக் கல்விப்பணிப்பாளர், காரைநகர்)அவர்களும்,கௌரவ விருந்தினர்களாக திரு .க,தில்லையம்பலம்(ஓய்வுநிலை அதிபர்),திருமதி.சேதுப்பிள்ளை சுப்பிரமணியம்,திருமதி.விக்கினேஸ்வரி திருநாவுக்கரசு,திருமதி.சத்தியபாமா ரங்கநாதன்,திருமதி.சேவராணி சோமசேகரம் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்திருந்தனர்.

அத்துடன் பழைய மாணவர்கள்,பெற்றோர்கள்,நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

பாடசாலை அதிபர்,ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு மற்றும் பாடசாலை ஓய்வு நிலைய அதிபர்,ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது. அத்துடன் 5 ம் ஆண்டு புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த ரவிச்சந்திரன் யதுஷா (158), தம்பிராசா தரணிகா(156) மாணவர்களுக்கான கௌரவிப்புக்களும் இடம்பெற்றன. மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய போசன விருந்திலும், விருந்தினர்களுடன் கலந்து கொண்டு அகமகிழ்ந்திருந்தனர்.

 

காரைநகர் அபிவிருத்திச் சபையினர் நடாத்திய வாணிவிழாவும் மாணவர் கௌரவிப்பு நிகழ்வும் 07.10.2019 திங்கட்கிழமை மாணவர் நூலகத்தில் நடைபெற்றது.

காரைநகர் சக்தி இலவசக்கல்வி மேம்பாட்டு நிலையத்தில் 06.10.2019 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தின விழா!

காரைநகர் கிட்ஸ் பார்க் பாலர் பாடசாலையில் 06.10.2019 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாணி விழாவும் ஆசிரியர் தின விழாவும்!

IDS PARK

காரைநகர் நியூ ஸ்ரார் அக்கடமியில் 06.10.2019 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தின விழா!

கனடா காரை கலாசார மன்றத்தினால் காரைநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் உதவித் திட்டங்கள் மற்றும் அபிவிருத்திப் பணிகளை கனடா காரை கலாசார மன்றத்தின் தலைவர் திரு.சிவசுப்பிரமணியம் சிவராமலிங்கம் அவர்கள் காரைநகருக்குச் சென்ற போது நேரடியாகப் பார்வையிட்டு அதன் முன்னேற்றம் தொடர்பாக உரிய தரப்பினரிடம் கேட்டறிந்து கொண்டார்.

கனடா காரை கலாசார மன்றத்தினால் காரைநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் உதவித் திட்டங்கள் மற்றும் அபிவிருத்திப் பணிகளை கனடா காரை கலாசார மன்றத்தின் தலைவர் திரு.சிவசுப்பிரமணியம் சிவராமலிங்கம் அவர்கள் காரைநகருக்குச் சென்ற போது நேரடியாகப் பார்வையிட்டு அதன் முன்னேற்றம் தொடர்பாக உரிய தரப்பினரிடம் கேட்டறிந்து கொண்டார்.

அண்மையில் காரைநகருக்குச் சென்ற அவர் காரைநகர் அபிவிருத்திச் சபை ஊடாகச் செயற்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களைப் பார்வையிட்டார்

மன்றத்தினால் நீண்ட காலமாக உதவு தொகை வழங்கப்பட்டு வரும் தாய் தந்தையரை இழந்த சிறுவனான நகுல்ராஜ் நக்கீரனின் இல்லத்திற்குச் சென்ற அவர் அவருடைய கல்வி முன்னேற்றம் தொடர்பாகக் கேட்டறிந்ததுடன் அவருக்கான உதவு தொகையை அதிகரித்து வழங்குவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். இவருடன் காரைநகர் அபிவிருத்திச் சபையின் முன்னாள் செயலாளரும் தற்போதைய உப செயலாளருமான க.நாகராசா அவர்களும் சென்றிருந்தார்.

மன்றத்தினால் கடந்த வருடங்களில் வீடு கட்டி வழங்கப்பட்ட சசிகுமார் தவமணி,இராஜகோபால் லதாராணி பயனாளிகளையும் நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்களின் வாழ்க்கைத் தர மேம்பாடு தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்.

பல்கலைக்கழகக் கல்வியைத் தொடரும் காரைநகரைச் சேர்ந்த வறுமைக் கோட்டிற்குட்பட்ட மாணவர்களுக்கு மன்றத்தினால் மாதாந்தம் உதவு தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அவர்களில் ஆனந்தராசா காயத்திரி(ஊவாப் பல்கலைக்கழகம்) செந்தில்நாதன் கமலேஸ்வரி (ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம்) ஆகியோரை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியதுடன் அவர்களின் கல்வி முன்னேற்றம் தொடர்பாகவும் கேட்டறிந்த கொண்டார்.

மேலும் க.பொ.த சா/ த வகுப்புகள் நடைபெறும் காரைநகர் பாடசாலைகளுக்கு நேரில் சென்ற அவர் பாடசாலை அதிபர்களுடன் கலந்துரையாடியதுடன் மாணவர்களின் கல்வி முன்னேற்றம் பாடசாலைகளின் பௌதீக வழங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடினார். மன்றத்தினால் வழங்கப்படும் நிலையான வைப்பு ஊடான வட்டிப் பணத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் கல்வி முன்னேற்றங்கள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டதுடன் பாடசாலை நிர்வாகங்களினால் பல்வேறு உதவிக் கோரிக்கைகளும் அவரிடம் முன்வைக்கப்பட்டன. அவை தொடர்பாக நிர்வாக சபையுடன் ஆராய்ந்து சாதகமாகப் பரிசீலிப்பதாகத் தெரிவித்தார்.

மேலும் காரைநகர் அபிவிருத்திச் சபை நூலகத்தில் இடம்பெற்ற பாடசாலை அதிபர்களுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்டதுடன் காரைநகர் பாடசாலைகளின் தேவைகள் குறைபாடுகள், கல்வி முன்னேற்றங்கள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டதுடன் மன்றத்தினால் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தால் நடாத்தப்படும் புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்குகளை நடாத்துவதற்குரிய ஒழுங்ககளையும் மேற்கொண்டு தருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

காரைநகர் அபிவிருத்திச் சபை அலுவலகத்திற்கும் சென்று நிர்வாக சபையினருடன் சபை ஊடாக மன்றத்தினால் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.

முன்பள்ளி ஆசிரியர்கள் மாதாந்தம் பெற்றுக் கொள்ளும் கொடுப்பனவுகள் அனைவருக்கும் ஒரே அளவில் கிடைப்பதற்கு வழிசெய்ய வேண்டும் எனவும் குறைந்த கொடுப்பனவைப் பெறும் ஆசிரியர்களுக்கும் உரிய கொடுப்பனவை பெற்றுக் கொடுப்பதற்கு ஆவண செய்யவேண்டும் எனவும் தலைவரினால் இச்சந்தர்ப்பத்தில் தெரிவிக்கப்பட்ட போது இது தொடர்பாக பிரான்ஸ் நலன்புரிச் சங்கத்துடன் இது தொடர்பாகக் கலந்துரையாடுவதாக தெரிவிக்கப்பட்டது.