Category: இலண்டன் காரை

காரை அபிவிருத்தி சபை தலைவர் திரு .T .சிவாமகேசன் அவர்களுடனான கலந்துரையாடல்.

காரை அபிவிருத்தி சபை தலைவர் திரு .T .சிவாமகேசன் அவர்களுடனான கலந்துரையாடல்.
கடந்த 03/03/2013 அன்று பிரான்ஸ் பாரிஸ் மாநகரிலும் , (10/03/2013) அன்று பிருத்தானியா லண்டன் மாநகரிலும், தற்பொழுது ஐரோப்பா வருகை தந்திருந்த எமது காரை அபிவிருத்தி சபை தலைவர் திரு.T .சிவாமகேசன் அவர்களுடன் நிர்வாகசபை உறுப்பினர்கள் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
பாரிஸில் நடைபெற்ற கலந்துரையாடலில் பல நல்ல முன்னேற்றமான விடயங்கள் ஆராயப்பட்டது . இவற்றில் குறிப்பிடத்தக்க விடயங்களாக
1.இணைப்பாளரின் மாதாந்த கொடுப்பனவை ரூபாய் 1000.00 ஆக அதிகரித்தல்.
2. முன்பள்ளி ஆசிரியர் பயிற்சிக்கு போகும் ஆசிரியர்கட்கு பயிற்சிக் கட்டணத்தை (ரூபாய் 5000.00) பொறுப்பேற்றல். ஏற்கனவே காரை அபிவிருத்தி சபை தலைவர் அவர்கள் தனிப்பட்ட முறையில் 3 ஆசிரியர்களுக்கு இக்கட்டணத்தை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
மிகுதி 6 ஆசிரியர்களுக்கு பயிற்சி நிதியான ரூபாய் 30,000.00 தை (முப்பதுனாயிரம் ) எமது மன்றம் பொறுப்பேற்றுள்ளது .
4. காரை அபிவிருத்தி சபையின் வருடாந்த செலவுகளில் 10% தை எம் மன்றம் ஏற்றுள்ளது (ரூபாய் 26,000.00).
ஆகிய முக்கிய அம்சங்களில் பிரான்ஸ் நலன் புரிச் சங்கம் கைச்சாத்திட்டுள்ளது. பாரிஸ் வருகைதந்து கலந்துரையாடலில் கலந்து கொண்டு சிறப்பித்த காரை அபிவிருத்தி சபை தலைவர் திரு.T .சிவமகேசன் அவர்களுக்கு பிரான்ஸ் நலன்புரிச் சங்கம் தமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் பிரான்ஸ் வாழ் காரை மக்கள் சார்பில் தெரிவிதுக்கொன்கின்றது.
[nggallery id=13]
10/03/2013 அன்று பிற்பகல் 03:00 மணியளவில் லண்டனில் நடைபெற்ற பிருத்தானியா காரை நலன்புரிச் சங்க நிர்வாகத்தினுடனான கலந்துரையாடலிலும் மேலும் பல ஆரோக்கியமான, அபிவிருத்தி சம்பந்தமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக எமது வைத்தியசாலை பிரசவ அறை (Maternity ward ), மற்றும் ஆண், பெண் நோயாளிகள் அறைகளை (Patient ward ) புனருத்தாரணம் செய்தல்(ரூபாய் 1,200,000.00 செலவில்). – பின்னர் கிடைத்த செய்திகளின்படி அரசாங்கம் எமது வைத்தியசாலை புனருத்தாரண மற்றும் மேலதிக நிர்மாணப்பணி வேலைகளுக்கென நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அறியப்பட்டுள்ளது . ஆகவே எமது இவ் வேலைப் பணிகள் நிர்வாகத்தின் மீழ் ஆராய்விற்கு உட்படுத்தப்பட உள்ளது.-
எதிர் காலத்தில் எம் மக்கள் எதிர்நோக்க இருக்கும் குடி தண்ணீர் பற்றாக்குறையை எவ்வாறு எதிர்கொள்வது பற்றி ஆராயப்பட்டது. இதன்போது காரை அபிவிருத்தி சபைத் தலைவர் தான் எடுத்து வந்திருந்த உதயன் பத்திரிகையில் 03/01/2012 இல் வெளியாகியிருந்த ” தரைக்கு கீழ் உள்ள அடிமண் குடிநீரை எவ்வாறு பாதுகாத்தல்” என்ற தலையங்கத்தில் வெளியாகி இருந்த கட்டுரையின் பிரதியை நிர்வாகத்தின் பார்வைக்கு முன்வைத்தார்.
ஆலடி, களபூமி, காரைநகரில் பன்முகப்படுத்தப்பட்ட ஆன்மீக மனிதநேய நோக்கங்களுடன் கொழும்பு வெள்ளவத்தையில் இயங்கி வரும் ”ஓம் கிரியா பாபாஜி யோகா ஆரணியத்தின் ” கிளை 16/01/2013 அன்று ஆரப்பிக்கப்பட்டு சிறப்புற இயங்கி வருகின்றது. பன்னிரு திருமுறைகள் ஒழுங்குற ஓதப்பட்டு கிரியா யோக வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. முதல் வகுப்பிலேயே 40 பிள்ளைகள் யோகா பயிற்சியில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்க நிகழ்வாகும், அத்துடன் எமது ஊரில் ஆரம்பிக்கப் பட்டுள்ள இந்த யோகா மையம் இலங்கையில் 5வது கிளை என்பதும் குறிப்பிடத்தக்கது. திருமதி விமலா கிரிஷ்ணபிள்ளை அவர்கள் மேற்படி முகவரியில் உள்ள இல்லத்தை(சுந்தரமூர்த்தி வித்தியாலத்திற்கு முன்பாக) தமது மூதாதையர் நினைவாக யோகா ஆரண்ணியத்திற்கு பெருந்த்தன்மையுடன் மனமுவந்து அளித்துள்ளமை எமதூர் மக்களால் பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்.மேற்படி யோகா ஆரண்ணியம் நிலையத்திற்கு நீர் இறைக்கும் இயந்திரம் (Water Pump), குடிநீர் தாங்கி(Watrer Tank ) மேலும் சில அத்தியாவசிய உடனடித் தேவைகளுக்கு ரூபாய் ஒரு இலட்சம் (100000.00) தேவையென எமது சங்கத்திற்கு கோரிக்கை ஒன்றை கடிதமூலம் அனுப்பி வைத்துள்ளார்கள்.
இவ் கோரிக்கை கூட்டத்தில் ஆராயப்பட்டு எமது பிருத்தானியா நலன் புரிச் சங்கத்தால் ரூபாய் 50,000.00 யை வழங்குவதன முடிவு செய்யப்பட்டது. அத்துடன் நிர்வாகசபை உறுப்பினர் ஒருவர் முன்வந்து தானும் மனமுவந்து மிகுதியான ரூபாய் 50,000.00 ஐ இந்த நல்ல சேவைக்கு வழங்குவதாக தெரிவித்தார். ஆக மொத்தம் யோகா ஆரண்ணியத்தின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
காரை மாணவர் நூல் நிலையத்திற்கு ஒரு பகுதி தளபாடங்கள் கொள்வனவு செய்வதற்கு ரூபாய் 200,000.00 வழங்கப்படுள்ளது. (எழுத்து மூல வேண்டுகோளுக்கு இணங்க). நூல் நிலைய மேலதிக கட்டிட நிர்மாண வேலைகளுக்கு எவ்வாறு நிதி திரட்டுவது என்பது பற்றியும் ஆராயப்பட்டது. எமது சங்கத்தின் ஸ்தாபகரில் ஒருவரும் இன்றுவரை சங்கத்தின் வளர்ச்சியில் மடுமல்லாது காரை மாணவர்களின் கல்வி வளர்ச்சியிலும் பெரிதும் உதவி வரும் Dr .S .சபாரட்ணம் அவர்கள் சகலகலா நூல் (Encyclopaedia ) முழு தொகுப்பினையும்
(32 Volumes) காரை மாணவர் நூல் நிலையதிற்கு அன்பளிப்பு செய்திருந்தார்.
Dr .ஆ.தியாகராஜா ம.ம.விதியாலயத்திற்கு உடனடி திருத்த வேலைகளுக்கு ரூபாய் 100,000.00 வழங்குவதன ஒதுக்கப்பட்டுள்ளது. மற்றும் கல்லூரியின் 125 வது ஆண்டு விழாவை June மாதம் 23ம் திகதி லண்டனில் கொண்டடுவதற்கு முடிவு செய்யப்படுள்ளது.
காரை அபிவிருத்தி சபையின் வருடாந்த செலவுத் தொகையில் 30% பங்களிப்பான ரூபாய் 78,000.00 தை பிருத்தானியா நலன் புரிச் சங்கம் பொறுப்பேற்றது.
மேலும் பல சிறு சிறு விடயங்கள் இந்த கலந்துரையாடலில் பரிசீலனை செய்யப்பட்டது.
இங்கு வருகைதந்து கலந்துரையாடலில் சங்கமித்து பல நல்ல ஆக்கபூர்வமான விடயங்களை மன்றங்களுடன்
பகிர்ந்து கொண்டமைக்காக மீண்டும் ஒருமுறை பிருத்தானிய நலன் புரிச் சங்கம் தமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் காரை அபிவிருத்தி சபை தலைவர் திரு.T .சிவமகேசன் அவர்களுக்கு பிருத்தானிய வாழ் காரை மக்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கின்றது.
[nggallery id=14]
நன்றி
 
நிர்வாகம்.
பிருத்தானியா & பிரான்ஸ் காரை நலன் புரிச் சங்கம்.

மூன்றாம் கட்ட கண்படர் (Cataract) அகற்றல் சிகிச்சை நிறைவுற்றது.

மூன்றாம் கட்ட கண்படர் (Cataract) அகற்றல் சிகிச்சை நிறைவுற்றது.
பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கதின் மருத்துவ உதவித் திட்டத்தின் கீழ் கடந்த 28/02/2013 அன்று, மூன்றாம் கட்டமாக வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 13பேர்களுக்கு கண்படர் அகற்றல் சிகிச்சை மூளாய் வைத்தியசாலையில் Dr .குகதாசன் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது.

இம் மூன்றாம் கட்ட இலவச கண்படர் அகற்றல் சிகிச்சைக்கு சுமார் 23 பேர்கள் வரையில் காரை அபிவிருத்தி சபை அலுவலகத்தில் பதிவு செய்திருந்தனர். பின்னர் இவர்கள்(20பேர்கள் மட்டும் , மற்றைய மூவர் சமூகம் அளிக்கவில்லை) அனைவரும் 21/02/2013 அன்று மூளாய் வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டு பரிசோதிக்கப்பட்டனர். இவர்களில் 13 பேர்கள் மட்டுமே உடனடி சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று மருத்துவ சான்றிதழ் வழங்கப்பட்டது. இதன் பிரகாரம் அடுத்த வாரமே இந்த சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 6பேர்களுக்கு மூக்குக் கண்ணாடியும் வழங்கப்பட்டுள்ளது. மேற்படி சிகிச்சைகளுக்கான உதவித் தொகையாக ரூபாய் 260,000 (இரண்டு இலட்சத்து அறுபதுனாயிரம்) பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கத்தினரால் வழங்கப்படுள்ளது. கடந்த வருடங்களில் முதல் தடவையாக 17பேர்களுக்கும் , இரண்டாம் தடவையாக 15பேர்களுக்கும் இவ் கண்படர் அகற்றல் சிகிச்சை எமது சங்கத்தால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

இம் முறை மூன்றாம் தடவையாக சிகிச்சை வழங்கப்பட்ட 13பேர்களது பெயர் விபரமும், பரிசோதிக்கப்பட்ட 20பேர்களின் விபரமும் இங்கு பதிவாகி உள்ளதுடன் அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் இங்கே இணைத்துள்ளோம். அத்துடன் காரை அபிவிருத்தி சபையால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள வைத்திய செலவிற்கான ரசீதினையும் இணைத்துள்ளோம் .

 

இச் சிகிச்சையை திறம்பட ஒழுங்கமைத்து நடாத்தி முடித்த எமது காரை அபிவிருத்தி சபை நிர்வாக உறுப்பினர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

நன்றி .

பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கம்.

Co-operative hospital society ltb moolai-1
eye-1
eye-3
eye-2

வாழ்த்துக்கள்வழமுடன்

Karai Welfare Society(UK) 
 
 வாழ்த்துக்கள்வழமுடன்
  
திருமதி.மலர் குழந்தைவேலு தலமையிலானகனடா காரைகாலச்சார மன்றத்தின்புதிய நிர்வாக சபைக் குழுவிற்குஎமது மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.தங்கள் புதிய நிர்வாகம் முன்னெடுக்கும்எமது ஊரின் நலன் கருதியஅனைத்து
திட்டங்களிலும் நாமும் தங்களுடன் கைகோர்த்து செயற்படுவோம்என அறியத்தருகின்றோம்.
 
 நன்றி
 வணக்கம்.
 நிர்வாகம்
  பிருத்தானியாகாரை நலன் புரிச் சங்கம்.
 
 

அல்லாதனவற்றை ஆராய்ந்து சொல்லாத குற்றம்!

பிருத்தானிய காரை நலன் புரிச் சங்கம்,
பிருத்தானியா.
12.02.2013.

அல்லாதனவற்றை ஆராய்ந்து சொல்லாத குற்றம்!

காரை நியூஸ் அல்லது எனது ஊர் காரைநகர்  இணையத் தளத்தின் அன்பிற்குரிய தீசனுக்கும், தளத்தை வாசித்து வரும் எம் ஊரவர்களுக்கும் வணக்கம்.
கனடா காரைநகர் இணையத் தளத்திற்கு எம்மால் அனுப்பப்பட்ட செய்தியை, ‘காரைக் கதம்பம் 2013 ஒரு பார்வை’ என்ற மகுடத்தின் கீழ், மீள் பிரசுரித்தமைக்கு முதலில் நன்றிகள்.  காரைக் கதம்பத்தில் பங்கேற்காத காரை அன்பர்களுக்கு உங்கள் தளத்தின் ஊடாகவும் செய்திகளை தெரிவித்தமைக்கு எங்கள் வாழ்த்துக்கள்! காரைநகர் இணைய தளத்தில் எமது செய்தியின் நிறைவில் ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்பதை இணைத்திருந்தோம். அந்த வரியை நீக்கிவிட்டு காரைக் கதம்பத்தை ‘ஒரு’ பார்வை பார்த்திருக்கிறீர்கள். நிற்க!

உங்கள் மீள்பிரசுரத்தின் கீழே வெளியிடப்பட்ட துண்டுச் செய்தி குறித்து உடனடியாகப் பதில் தர வேண்டிய தேவை எமது நிர்வாக சபைக்கு எழுந்திருக்கிறது. அந்தத் துண்டுச் செய்தியை ஒரு விமர்சனமாகவோ கருத்தாகவோ எம்மால் பார்க்க முடியவில்லை.   உங்களுக்கு நெருக்கமான ஒரு தனி மனிதனின் சொறி சிரங்கிற்கு நீங்கள் மருந்து பூசி இருப்பதாவே கருத இடமிருக்கிறது. உங்கள் இணையத் தளத்திற்கு புல்லரிப்புச் செய்திகளை தரக் கூடிய ஒரு லண்டன் வாசிக்கு நீங்கள் இதைக் கூட செய்யாவிட்டால் எப்படி? என்று நினைத்திருப்பீர்கள்.

அன்பின் தீசனுக்கு, நீங்கள் வெளியிட்ட அந்தத் ‘துண்டு’ ச் செய்தி தந்தவரை நாம் அறிவோம். மிக ஆழமாகவே அறிவோம். உங்கள் வார்த்தையில் சொல்வதானால் கடும் ஆராய்வுக்குப் பிறகு குறித்த நபரைக் கண்டறிய வேண்டிய தேவை, பிரித்தானியாவில் சமூக வாழ்வில் இருக்கும் யாருக்கும்  கிடையாது.

எமது பொங்கல் விழாவிற்கு நிர்வாக சபையை சேர்ந்த ஒருவர் மட்டுமே சமூகம் அளிக்கவில்லை.  அவர் நிர்வாகத்திற்கு கூறிய காரணத்தையே காரை நியூஸ் இணையத்தளத்திலும் பதிவு செய்துள்ளார் என்பதை கண்கூடாகக் காண முடிகின்றது. அவரைத் தவிர எந்த ஒரு நிர்வாகசபை உறுப்பினரும் தன்னிச்சையாக இங்கு முடிவெடுப்பதும் இல்லை, எதனையும் நடைமுறைப்படுத்துவதும் இல்லை. எமது சபையைச் சார்ந்த அனைத்து உறுப்பினர்களும் இதனை அறிவார்கள்.
மேற்குறிப்பிட்ட அல்லது உங்களுக்குச் செய்தி தந்த நிர்வாகசபை உறுப்பினர்,

கடந்த 16 ஆண்டு காலத்துக்கும் மேலாக  அபசகுனம் பிடித்த ஒரே பல்லவி சரணத்தை மனப்பாடமாக பாடி வருகின்றார். அது மட்டுமன்றி மன்றத்தின் ஒவ்வொரு பொதுக் கூட்டத்திலும், பொது நிகழ்வுகளிலும் அவதூறு செய்வதையே தன் பிறவிக் கடனாக ஆற்றி வருகிறார். அதற்குமப்பால்  தனது ஓய்வு நேர உற்சாகத்தில், தொலைபேசி அழைப்புகள் மூலம் மன்றத்திற்கு அவதூறு விளைவிக்கும் பலப்பல நடவடிக்கைகளில் காலம் காலமாக ஈடுபட்டுவருகின்றார். அவற்றில் ஒன்றுதான் காரை நியூசிற்கு இப்போது அவர் தந்திருக்கும் செய்தியும்.

பொதுவாக ஒரு பொது அமைப்பில் ஒருவர் பங்கேற்கும் பொழுது, பொது நலம் கருதிய சுய ஒழுக்கம் மிக முக்கியம். இதனை எந்தஒரு நிர்வாகசபை உறுப்பினரோ, அல்லது அங்கத்தவரோ கடைப்பிடிக்கத் தவறும் பட்சத்தில், குறித்த நிர்வாகங்கள் தகுந்த ஒழுக்காற்று நடவடிக்கைகளை அவர்மேல் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றன.

காரை நியூஸ் இணையத்தளம் ஒருபக்கச்  சார்பானதும் புலம்பெயர் காரை அமைப்புக்களுக்கு எதிரானதுமான செய்திகளைக் குறித்த நிர்வாகத்தோடு கலந்துரையாடாது பிரசுரிப்பதைத் தவிர்ப்பது நல்லது. அவ்வாறு செய்யத் தவறிய ஒரே ஒரு காரணத்தால்தான், அடிக்கடி பொது மன்னிப்புக் கேட்க வேண்டிய சூழலில் காரை நியூஸ் இணையத்தளம் இருக்கிறது என்பதை மிகப் பணிவோடு தெரிவிக்க வேண்டி இருக்கிறது.

‘தன்னிச்சை’ என்ற சொல்லுக்கு ஒத்த சொல்லாக ‘கனடா காரை கலாசார மன்றத்தனம்’ என்று போடுகிற, உங்கள் எழுத்துமுறைகளை மாற்றாமல், மற்றவர்களின் விதண்டாவாதம் அல்லது பிடிவாதம் மாறாது என்பதை எப்போது புரிந்து கொள்வீர்கள்?

காரைநகர் மக்களுக்கான உங்கள் சேவை, நல்லவகையில் தொடரவேண்டும் என்றே நாம் மனப்பூர்வமாக விரும்புகிறோம். நீங்களோ கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கலாம் என்று ஆசைப்படுகிறீர்கள்.

நன்றி
பிருத்தானியக் காரை நலன் புரிச்சங்க நிர்வாகத்தினர்.

இனிதே நடைபெற்ற காரைக் கதம்பம் 2013 மேலும் படங்கள் இணைக்கப்பட்டுள்ளது

இனிதே நடைபெற்ற  காரைக் கதம்பம் 2013

பிருத்தானியா நலன் புரிச் சங்கத்தின் 16வது பொங்கல் விழாவான ”காரைக் கதம்பம் 2013” கடந்த சனிக்கிழமை (02/02/2013) மாலை 550க்கும் மேற்பட்ட மக்களுடன் இனிதே நிறைவு பெற்றது.
                        கதம்பம் 2013 ஏற்கனவே குறிப்பிட்டிருந்ததுபோல் மாலை 05:00க்கு திருமதி ஞானமலர் சுந்தரேஸ்வரன் , திருமதி மஞ்சுளா நடராஜா ஆகியோரின் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. தொடர்ந்து 1நிமிட மௌன அஞ்சலியும், காரை பிரதேச கீதமும் ஒலிக்கப்பட்டது. பிரதேச கீதம் ஒலித்துக்கொண்டிருந்த வேளை நிகழ்வுகளில் பங்கேற்றிருந்த அனைத்து  பிள்ளைகளும் தங்கள் கைகளில் ஒளி விளக்குகளுடன் மேடையில் காட்சி கொடுத்த நிகழ்வு பார்வையாளர்களின்
மனதை கொள்ளையிட்டு சென்றது.
                      நிர்வாகசபை உறுப்பினர் திரு.K .விக்னேஸ்வரன் அவர்களின் வரவேற்புரையுடனும்மாதுரி பாஸ்கரன் பைரவி பாஸ்கரன் ஆகிய சி றுமிகளின் தேவாரத்துடனும் நிகழ்வுகள் ஆரம்பம் ஆகின. திரு.K .விக்னேஸ்வரன் தனது வரவேற்புரையில் இவ் விழவிற்கு பிரதம அதிதியாக ஊரில் இருந்து வருகைதர இருந்த
Dr .வீரமங்கை யோகரட்ணம்(யாழ்பல்கலைக்கழக சிரேஷ்ட ஆங்கில விரிவுரையாளர்) அவர்களது பிரயாணம் தவிர்க்க முடியாத காரணத்தால் விழாவில் கலந்து கொள்ள முடியாததையிட்டு நிர்வாகசபை சார்பில் மன வருத்தத்தை தெரிவித்துக்கொண்டு, விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த பிரான்ஸ் காரை நலன் புரிச் சங்க தலைவர் திரு. அருளானந்தம் செல்வச்சந்திரன்(நேரு மாஸ்டர் )அவர்களையும், புங்குடுதீவு நலன் புரிச் சங்க தலைவர் திரு .கருணைலிங்கம் அவர்களயும்,வேலணை மதிய கல்லூரி பழைய மாணவர் சங்க தலைவர் திரு,கே.என். சிவராஜா , திருமதி சிவராஜா அவர்களையும் , எமது சிரேஷ்ட ஊடகவியலாளர் திரு.இளயதம்பி தயானந்தா , அவைக்காற்றுக் கழக இஷ்தாபகரும் இலங்கை வானொலி நாடக புகழ் திரு.கே.பாலேந்திரா , திருமதி.ஆனந்தராணி பாலேந்திரா, மற்றும் திரு.யேசுரட்ணம், திரு. ரகுநாதி (D .E .E .P தொண்டு அமைப்பு ) ஆகியோரையும் மற்றும் சபையோர்களையும் வரவேற்றுக்கொண்டார்.
                  இந்த வருட நிகழ்வுகள் கடந்த வருடங்களை விட எண்ணிக்கையிலும் (49 நிகழ்வுகள்) , தரத்திலும் அதிகமாக இருந்தது.சிறப்பு விருந்தினர் நேரு மாஸ்டர் சிறப்புரை ஆற்றுகையில் , அவரது சுவாரசியமா பாணியில் தனது சிற்றுரையை ஆற்றியிருந்தார். எமது பிரதான நோக்கம் இளம் சமுதாயத்தை ஒன்றிணைப்பது பற்றியும், ஊரில் கல்வி, மருத்துவம் பற்றிய தனது கருத்தினையும் மக்களுக்கு எடுத்துரைத்தார்.
தலைவர் திரு. பரமநாதர் தவராஜா தமது உரையில், காரைநகர் கல்லூரிகளின் கற்றல், கற்பித்தல் தரங்கள் உயர்ந்து வருவதையும் , மருத்துவ வசதிகள் உயர்வதையும் ,அடுத்து எமது சமையம் சார்ந்து நாம் அங்கு தற்போதைய நிலைமையில் எப்படியான வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பது பற்றியும் , காரைநகர் சார்ந்த அனைத்து மன்றங்களும் ஒரே பெயரின் கீழ் , ஒரே முத்திரையின் கீழ், ஒரே யாப்பின் கீழ் , ஒன்றாக ஒரே குடையின் கீழ் இயங்க முன் வர வேண்டும் என்றும், பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கத்தின் இன்றைய, எதிர்கால திட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்தார். அன்றைய காரை இந்துக் கல்லூரியும், தற்போதைய Dr .ஆ.தியாகராஜா ம.ம.வித்தியாலயத்தின் 125 வது வருட நிறைவை ஒட்டி வருகின்ற மே மாத இறுதியில் ஒரு சிறு நிகழ்வை நடாத்த இருப்பதாகவும், அதனை அடுத்து ஜூலை மாதம் 28ம் திகதி ”காரை சங்கமம் 2013” மூன்றாவது நிகழ்வை நடாத்த நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்திருந்தார்.
மேலும் ”முதுசங்களைதேடி 2013” இற்கான மலராக 1967இல் வெளிவந்த காரைநகர் சைவ மகா சபையின் பொன் விழா மலர் மீள் பதிப்பு செய்யப்பட்டு வருகின்றது என்றும் இம் மலருக்கான விளம்பரங்கள் சேகரிக்கப்பட்டுவருது பற்றியும் விளக்கியிருந்தார்.
கனடா காரை கலாச்சார மன்றம், சுவிஸ் காரை அபிவிருத்தி சபை , காரைநகர் காரை அபிவிருத்தி சபை, பிரதம விருந்தினராக வருகை தர இருந்த Dr .வீரமங்கை யோகரடணம் ஆகியோர்களது வாழ்த்துச் செய்திகள் வாசிக்கப்பட்டு அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும் கூறப்பட்டிருந்தது.
காரை மாணவர் நூல் நிலையத்துக்கான பெருவாரியான நூல்களை மக்கள் விழாவில் எடுத்துவந்து நிர்வாகத்தினரிடம் வழங்கியிருந்தார்கள். மேலும் பலர் தங்கள் அன்பளிப்பு நூல்களை அடுத்தடுத்த ஒன்றுகூடல்களில் நிர்வாகத்திடம் வழங்குவதாக கூறியிருந்தார்கள்.
நிகழ்ச்சியின் இறுதியில் பங்கு பற்றிய அனைத்து குழந்தைகளுக்கும் விழாவிற்க்கு வருகைதந்திருந்த சிறப்பு விருந்தினர்களான பிரான்ஸ் காரை நலன் புரிச்சங்க தலைவர் திரு. நேரு மாஸ்டர், புங்குடுதீவு நலன்புரிச் சங்க தலைவர், திரு. கருணைலிங்கம், வேலணை மதிய கல்லூரி பழைய மாணவர் சங்க தலைவர் திரு. கே.என்.சிவராஜா, திருமதி சிவராஜா ,அவைக்காற்றுக் கழக இஷ்தாபகர் திரு.கே. பாலேந்திரா & திருமதி ஆனந்தராணி பாலேந்திரா, ஊடகவியலாளர் திரு இளயதம்பி தயானந்தா ஆகியோர் சான்றிதழ்கள் வழங்கி கெளரவித்திருந்தார்கள்.உப செயலாளர் திரு. செல்வநாயகம்பிள்ளை மனோகரன் அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற, கலந்துகொண்ட மக்கள் இராப் போசனத்தில் கலந்து கொண்டனர்.
இவ் விழாவிற்கு அனுசரணை வழங்கி இருந்த அனைத்து நிறுவனங்களுக்கும் , தனி நபர்களுக்கும் பிருத்தானிய காரை நலன் புரிச் சங்கம் தமது சிரம் தாழ்த்திய நன்றிகளைத்
தெரிவித்துக் கொள்கின்றது.
”ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு”
நன்றி
வணக்கம்
பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கம்


book collection photos

காரைக் கதம்பம் 2013 – காரை அபிவிருத்திச்சபையின் வாழ்த்துக்கள்

இலண்டன் காரை நலன்புரிச் சங்கம் நடாத்தும் காரைக் கதம்பம் – 2013ற்குக் காரை அபிவிருத்திச் சபையின்   சார்பாக அதன் நிர்வாக சபையின் வாழ்த்துக்களும் வேண்டுகோள்களும்

இலண்டன் காரை நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த கதம்ப நிகழ்ச்சி பெப்ரவரி மாதம் 2ம் திகதி நடைபெறுவதையிட்டு காரை அபிவிருத்திச் சபையின் நிர்வாக சபை தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றது. இவ்விழாவிற்குத் திருமதி வீரமங்கையினைப் பிரதம விருந்தினராக அழைத்ததையிட்டும் மகிழ்ச்சி அடைகின்றது. அத்துடன் இதுபோன்ற நிகழ்வுகள் வருடாவருடம் தொடரந்து நடைபெறுவதையிட்டும் பூரிப்படைகின்றது.

06.01.2013 அன்று தெரிவு செய்யப்பட்ட எமது நிர்வாக சபையினை வாழ்த்தி வரவேற்ற. எமது சகோதர சங்கங்களுக்கும் தனி அன்பர்களுக்கும் இத்தால் எமது நன்றியினை அறியத் தருகின்றோம்.

அடுத்ததாகப் புலம் பெயர்ந்துள்ள நம் காரை மக்களுக்குச் சில தாழ்மையான வேண்டுகோள்களை முன்வைக்கின்றோம். இதுவரை தாங்கள் செய்த உதவிகளுக்கும் தான தர்மங்களுக்கும் தலைவணங்குகின்றோம். கடந்த மூன்று சகாப்தங்களாக நமது ஊர்மக்களில் பலர் பிற ஊர்மக்களைப் போன்று பல இன்னல்களை அனுபவித்து வந்துள்ளார்கள். அவர்களில் சிலர் தன்னம்பிக்கையுடனும்  சுயமுயற்சியினாலும் வாழ்க்கையில் முன்னேறியது மட்டுமன்றி தங்களைச் சார்ந்தவர்களுக்கும் தாம் பிறந்த மண்ணிற்கும் தம்மாலியன்றவரை உதவி செய்து வருகின்றார்கள். ஆனால் வேறு சிலரோ  எவ்வளவு முயற்சி செய்தும் முன்னேற வழி தெரியாமல் தவிக்கின்றனர். இவர்களை ஆங்கிலத்தில் கூறுவதாயிருந்தால் ‘Those who can not help themselves’ என்று கூறலாம். இவர்கள் இங்குள்ள வசதி படைத்தவர்கள் மூலமாகவும் புலம் பெயர்ந்த உங்கள் மூலமாகவும் தங்களுக்கு ஒரு விடிவு காலம் வரும் என்று நம்பிக்கை கலந்த எதிர்பார்ப்புகளுடனுள்ளார்கள், அவர்களின் நிலை அவர்களால் உருவாக்கப் பட்டதல்ல. சூழ்நிலை காரணமாக அவர்கள் அந்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். அவர்களின் தேவைகளை அறிந்து உதவி செய்வதுதான் எமது சங்கங்களின்  தலையாய கடமை என்று தாழ்மையுடன் கூற விரும்புகின்றோம்.

இவ்விடத்தில் வீரத்துறவி விவேகானந்தரினதும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கென்னடியினதும் வார்த்தைகளை நினைவு கூறுவது நல்லது என்று கருதுகின்றேன்.. விவேகானந்தர்  ‘நான்கு தகுதியுள்ள இளைஞர்களைத் தாருங்கள் நவீன இந்தியாவை உருவாக்குவேன்’ என்றார். நான்கு இளைஞர்களல்ல நாற்பது இளைஞர்களை மனம் வைத்தால் நமது சங்கங்கள் மூலமாகவும் தனிப்பட்ட முறையிலும் உருவாக்க முடியும். இதற்காகத்தான் கென்னடியின் வாரத்தைகளையும் நாம் உட்கொள்ள வேண்டும். அதாவது ‘Ask not what the country can do for you, ask what you can do for the country’ இவ்வார்த்தையினை எமது ஊருக்குப்பயன்படுத்தி ‘காரைநகர் உங்களுக்கு என்ன செய்யும் என்று கேட்காதீர்கள், நீங்கள் காரைநகருக்கு என்ன செய்ய முடியும் என்று கேளுங்கள். இந்தக் கேள்விக்கு நீங்கள் வழங்கப்போகும் நல்ல பதிலில் தான் காரைநகரை மீண்டும் ஒரு சிறந்த ஊராக உருவாகமுடியும்.

ஆகவே அன்புள்ளங்களே விவேகானந்தர் விரும்பிய இளைஞர்கள் நம்மிடையே நம் சிறுவர் சிறுமிகளில் உள்ளார்கள். நாம் செய்யப்போகும் உதவிகள் மூலமாக அவர்களை வெளிக்கொணர முடியும். ஆகவே கல்விக்கு முக்கியத்துவம் தந்து இளம் சமுதாயத்தினை ஊக்குவிக்குமாறு வேண்டுகின்றேன். எமது சங்கங்கள் மூலமாக உதவி செய்யாவிட்டாலும் ஒருவர் தான் கற்ற பாடசாலைக்கு நேரடியாக உதவி செய்ய விரும்பினால் அதற்கேற்ற ஒழுங்குகளை நாம் இங்கிருந்து செய்து தருவோம் என்பதனையும் அறியத்தருகின்றோம்.

காரை நலன்புரிச் சங்கம் கல்விக்கோட்டத்தினூடாக மாணவ மாணவிகளுக்குத் தேவையான சில பதிப்புக்களை  இலவசமாக வழங்குகின்றனர். அதற்குரிய செலவினை நமது சங்கம் ஏற்றுக்கொண்டிருப்பதனை அறிவீர்கள். இதற்காகத்  தொடர்ந்து பணம் கொடுப்பதிலும் பார்க்கத் தேவையான Duplex Printing Machine ஒன்று கல்விக் கோட்டத்திற்கு வழங்கினால் அவர்கள் மூலமாக நம் மாணவர் சமுதாயம் மேன்மேலும் பயனடையும் என்பது நிச்சயம். இதுவிடயமாகக் கல்விக்கோட்ட அதிகாரிகள் இருவருடன் கலந்தாலோசித்த பொழுது அவர்கள் குறிப்பிட்ட Machine ரூபா ஐந்து இலட்சம் மட்டில் முடியுமென்று கூறினார்கள். இந்த உதவியினைத் தனி நபரோ அல்லது சகோதர சங்கங்களுடன் சேர்ந்து உங்கள் சங்கமோ அவசியமெனக் கருதி அன்பளித்தால் மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி முழங்கினான். காரைநகரைப் பொறுத்த வரையில் உணவுப் பஞ்சம் முன்னணியில் இல்லை. ஆனால் கோடைகாலத்தில் நம்மக்கள் எதிர்கொள்ளும்  தண்ணீர்ப் பிரச்சினையோ தாங்கமுடியாததாகவுள்ளது. இதனை நான் நேரில் அனுபவித்தவன் என்ற வகையில் கூறுகின்றேன். மக்களின் தவிப்பினைக் கண்கூடாகச் சென்ற கோடையில் கண்டிருக்கின்றேன்.  இந்நிலையினை ஓரளவு தணிப்பதற்கு இலண்டன் காரை நலன்புரிச் சங்கம் அளப்பரிய பங்களித்துள்ளது என்பதனை அனைவரும் அறிவர். இதற்காகத் திரு நடராஜா அவர்களின் ஈடுபாட்டினையும் வழிநடத்தலையும் ஆயிரம் நாப்படைத்த ஆதிசேஷனாலும் வர்ணிக்க முடியாது. அவர் தண்ணீர் விநியோகப் பொறுப்பினைத் தன்னந்தனியாகத் தன் தோழ்களில் சுமந்து மிகவும் சிறப்பாகவும் ஒழுங்காகவும் நடாத்தியுள்ளார். அவரது பணிகளுக்குக் காரை அபிவிருத்திச் சபை மனதார நன்றி தெரிவிப்பதுடன் உலகிலுள்ள நமது அனைத்து மன்றங்களும் நன்றிக்கடன் பட்டுள்ளன என்று சொன்னால் மிகையாகாது. தண்ணீர் விநியோகத்தினைப் பொறுத்த வரையில் திரு. நடராஜா அவர்கள் வகுத்த வழியினைப் பின் பற்றி ஓரளவில் வெளியுதவியின்றி எமது நிர்வாக சபை மேற்கொள்ளும் என்று கருதுகின்றேன்.
அடுத்ததாக சுகாதாரம் சம்பந்தமாக ஆஸ்பத்திரிக்குத் தேவையான வசதிகளை தனித்துவமாகவும் சங்கங்களுடாகவும் பல உதவிகளைச் செய்துள்ளீர்கள். அவற்றின் பயன்களை மக்கள் அனுபவித்து வருகின்றார்கள என்பதை மகிழ்ச்சியுடன தெரிவித்துக் கொள்கின்றோம். தற்சமயம் தாங்கள் கேட்டுக் கொண்டதிற்கிணங்க 15 தகுதியுள்ள மக்களுக்கு cataract operation மற்றும் ஆஸ்பத்திரிக்கு tiles பதிக்கும் வேலைகள் சம்பந்தமாக ஒழுங்குகள் நடைபெறுகின்றன.
இங்குள்ள வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள சிலர் அத்தியாவசியமான உதவிகளைக் கேட்டு வருகின்றார்கள். நாம் பொறுப்பேற்ற பொழுது கஜானாவில் நிதியிருக்கவில்லை. அதன் காரணமாக அவர்களுக்குத் தற்சமயம் உதவி செய்ய முடியாமல் இருப்பதை மனவருத்தத்துடன் தெரிவித்துள்ளோம். ஊதாரணமாக ஒரு பெண்மணி தனது கணவர்  dialysis treatment  பெறுவதாகவும் அவரைப் பராமதிப்பதற்கு உதவமுடியுமா என்றும் கேட்டிருந்தார். மேற்கூறிய காரணத்தினைச் சொல்லி அவருக்கு உதவி செய்ய முடியாமல் இருப்பதைத் தெரிவித்துள்ளோம். இப்படியான ஜீவன்களுக்கு அன்புள்ளங்கள் தனிப்பட்ட முறையில் உதவ முன்வந்தால் தெரிவிக்கவும். நாமும் எம்மால் இயன்ற ஒத்துழைப்பினை நல்குவோம்.

அடுத்ததாக நூலகம் அமைந்து வருவதை அறிவீர்கள். அதற்கு நிதி பற்றாக்குறை ஏற்படும் நிலை வருவதை உணருகின்றேன். இப்பணியில் நேரடியாக ஈடுபட்டிருக்கும் தங்கள் பொருளாளர் திரு ரவீந்திரன் நடராஜா போன்றவர்கள் மேல் நாடுகளில் சற்று கூடுதலாக முயற்சி செய்து நிதி திரட்டினால் வரவேற்கப்படும். உள் நாட்டிலுள்ள வர்த்தகத் தனவந்தர்களையும் அணுகுவதாகவுள்ளோம் இத்திட்டத்தினை மிகவரைவில் நிறைவேற்ற எம்மால் இயன்ற அளவு ஒத்துழைப்பினை வழங்கவுள்ளோம்..

சுருங்கச் சொல்லின் எமது சகோதர சங்கங்களின் ஆதரவுடன் முக்கியமான இவ்வருடச் செயல் திட்டம் மூன்ற வகையானது:

1.    கல்வி சம்பந்தமாக எமது சக்திக்கேற்ப உதவிகளை வழங்குதல்
2.    தண்ணீர் பிரச்சினையினைக் கட்டுப் பாட்டுக்குள் வைத்திருப்பது
3.    சுகாதாரம் வைத்தியசாலை சம்பந்தமான பணிகளைத் தொடர்ந்து செய்வது
4.    சங்கங்கள் ஊடாக மட்டுமன்றி, தனிப்பட்ட முறையில் ஊருக்கு உதவ முன்வருபவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுதல்

United we stand என்ற வாக்கியத்திற்கிணங்க நாமெல்லோரும் சேர்ந்து எமது சிறிய ஆனால் சிறப்புமிக்க பிரதேசத்தினைக் கட்டியெழுப்புவோம் என்று கூறி எமது நிர்வாக சபைக்கு இச்சந்தர்ப்பத்தினை வழங்கியதற்கு நன்றிகூறி மீண்டும் தங்கள் விழா வெற்றிகரமாக நிறைவேற திண்ணபுரத்தான் முதல் திக்கரையான் வரை வணங்கி வாழ்த்துகின்றோம்.

காரை அபிவிருத்திச் சபையின் நிர்வாக சபை 2013 சார்பாக சிவா தி. மகேசன்

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

அன்பு பொங்க, ஆசை பொங்க, அறிவு பொங்க, இன்பம் பொங்க, ஈகை பொங்க, இனிமை பொங்க
தித்தித்கும் செங்கரும்பாய் மகிழ்ச்சி பொங்க
பிரித்தானியாவில் காரைநகர்ச் சுற்றத்தார், சொந்தங்கள், நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து கொண்டாடும்
இனிய தைத் திருநாள் விழா காரைக் கதம்பம் 2013,
இயல் இசை நாடகத் திருவிழா காரைக் கதம்பம் 2013
மிகவும் சிறப்பாக நடைபெற கனடா வாழ் காரைநகர் மக்கள் சார்பில்  கனடா-காரை கலாச்சார மன்றமும் வாழ்த்துகின்றது.

London KK

வாழ்த்து செய்தி

hindu-1அன்பிற்கும், மரியாதைக்குமுரிய கல்லூரி அதிபர் திருமதி வாசுகி தவபாலன் அவர்கட்கு முதலில் எம் அன்பு வணக்கங்களையும் வாழ்த்தினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் காரை மக்கள் சார்பிலும், குறிப்பாக இன்றைய ஆ.தியாகராஜா மத்திய மகாவித்தியாலயமான அன்றைய எம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்கள் சார்பிலும் எங்கள் மனப் பூர்வமான  வாழ்த்தையும்  அன்பையும் இம்மடல் மூலம் தெரிவித்து மகிழ்ச்சி கொள்கிறோம்.
எமது  காரை மண்ணின்   நலனிலும் வளர்ச்சியிலும் ஐக்கிய இராச்சிய காரை நலன்புரிச் சங்கம் மிகுந்த ஈடுபாட்டோடு செயற்பட்டு வருகிறது என்பதை நீங்கள்  அறிந்திருப்பீர்கள். புலம்பெயர் காரை அமைப்புக்களின்  மூத்த அமைப்பாகவும், அறக்கட்டளையாகவும் செயற்படும் எமது நலன்புரி சங்கச் செயற்பாட்டின்  முக்கிய இலக்குகளில் ஒன்றாய் இருப்பது கல்வி வளர்ச்சியே ஆகும்.
நீங்கள் உள்ளிட்ட பல கல்விமான்களை உருவாக்கியதும்  காரை மண்ணின் கல்வித் துறையின் தாய்க் கல்வியகமாக அமைவதுமான        ஆ தியாகராஜா மத்திய மகாவித்தியாலயத்தின் நலனிலும் வளர்ச்சியிலும்  மிகுந்த ஈடுபாட்டோடு நாம்  செயற்பட்டு வந்துள்ளோம்.  நாம் மட்டுமன்றி ஏனைய நாடுகளில் உள்ள காரை அமைப்புகளும் கல்வி விடயத்தில் மிகுந்த கவனம் செலுத்தி வந்தார்கள் என்பதை   சுட்டிக்காட்டுவதும் இங்கு முக்கியமானது.
ஸ்தாபகர் சயம்பர் காலம் முதல் இற்றை வரையான எம் கல்லூரியின் வளர்ச்சி வரலாற்றை திரும்பிப்  பார்க்கும் 125 ஆம் ஆண்டில், நீங்கள் பணியேற்றிருப்பது, உங்கள் கல்விச் சேவை வாழ்வில் பெருமை சேர்க்கும் ஒரு விடயம் என நாம் நம்புகிறோம்.  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு காலப் பகுதியில், தன்னிடம் கற்ற மாணவியே தன்னை வழி நடத்துகிறாள் என்பதில்  எம் கல்லூரியும் பெருமை கொள்கிறது.
இன்னல்களும் இடர்பாடுகளும் நிறைந்த ஒரு காலகட்டத்தின் பின்னர்,  எமது காரை இந்துக் கல்லூரியை மீண்டும் தலை நிமிர வைப்பது உங்கள் கடன். அதை செவ்வனே செய்து, கல்லூரியையும் தாண்டி எம் காரை மண்ணின் கல்விச் செழுமையை தலை நிமிர வைப்பீர்கள் என்ற தளராத  நம்பிக்கை  நம் எல்லாரிடமும் நிறைவாக உள்ளது.
கல்லூரியால் பெயரும், பயனும் பெற்றவர்களை விட, கல்லூரிக்குப் பெயரையும் பெருமையையும் சேர்த்தவர்களில் ஒருவராக நீங்கள் இருப்பீர்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையோடு நாம் இருக்கிறோம்.
கல்லூரி உள்ளிட்ட எம் கிராமம் சார்   கல்வி வளர்ச்சிக்கான உங்கள் அனைத்து முயற்சிகளிலும்  துணை நிற்க எம் சங்கம் உறுதியாயுள்ளது.   கல்வித் திணைக்களம் உதவ தவறுகின்ற அல்லது காலதாமம் செய்கின்ற நலத் திட்டங்களை முன்னெடுக்க எம்மாலான எல்லைகளுக்குள் உதவ  முடியும் என இத்தால் தெரிவித்துக் கொள்கிறோம்.
மீண்டும் எமது அன்பையும் புலம்பெயர் மக்களின் வாழ்த்தையும் கூறி விடை பெறுகிறோம்.
நன்றி! வணக்கம் !
பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கம்.

காரைக் கதம்பம் 2013

பிருத்தானிய நலன் புரிச் சங்கம் பெருமையுடன் முன்னெடுக்கும் 16வது பொங்கல் விழாவான ” காரைக் கதம்பம் 2013”
London 2013
வரும் சனிக்கிழமை மாலை (02/02/2013) 05:00 மணிக்கு PRESTON MANOR HIGH SCHOOL, CARLTON AVENUE EAST, WEMBLEY, HA9 8NA எனும் இடத்தில அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெற உள்ளது. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கத்தினர்.
நன்றி
வணக்கம்.
பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கம்.

காரைக் கதம்பம் 2013 UK

பிருத்தானியா காரை நலன்புரிச் சங்க அங்கத்தவர்களுக்கும், நலன் விரும்பிகளுக்கும், அபிமானிகளுக்கும் ஓர் அறிவித்தல்

அன்புடையீர்

30/12/2012 அன்று karainews.com இணையத்தளத்தில் வெளியான ”ஆடு நனைகின்றது என்று ஓநாய்கள் கூக்குரலிடுகின்றன ” எனும் தலையங்கத்தின் கீழ் விமர்சிக்கப்பட்டிருந்த காரை இந்துக்கல்லூரிக்கு நிதியுதவி வழங்கியமை தொடர்பான விமர்சனத்தை நாம் வன்மையாக மறுத்துரைக்கின்றோம்.
27/02/2012 அன்று காரை இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் (கல்லூரி அதிபர்), செயலாளர், பொருளாளர் ஆகியோர் கையொப்பமிட்டு, டிஜிற்றல் நூல் நிலையத்திற்கும், இரசாயன பரிசோதனை கூடத்திற்குமான நிரந்தர மின்சார இணைப்பு வழங்குவதற்கும், கல்லூரி நூல் நிலையதிற்கு தினசரி பதிரிகைகள் (வீரகேசரி, Daily news) விநியோகதிற்குமாக எமது சங்கத்திடமிருந்து நிதியுதவி(இவ் வேலைகளுக்கான மதிப்பீட்டு தொகையுடன்) கோரப்பட்டிருந்தது. நாமும் இவ் வேண்டுகோளை ஏற்று நிர்வாகசபை உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் 09/03/2012 அன்று ரூபாய் 80,000.00(எண்பதாயிரம் ) அனுப்பி வைத்திருந்திருந்தோம்.(ரூபாய் 30,000.00 டிஜிற்றல் நூல்நிலைய மின்சார இணைப்புக்கும், ரூபாய் 30,000.00 இரசாயன பரிசோதனைக் கூட மின்சார இணைப்புக்கும், ரூபாய் 20,000.00 நூல்நிலையதிற்கு ஒரு வருட தினசரி பத்திரிகை விநியோகத்திற்கும்). இப்பணம் காரைநகர் அபிவிருத்தி சபை இருப்புக் கணக்கிற்கு அனுப்பப்பட்டு கல்லூரி பழைய மாணவர் சங்கத்திடம் வழங்கப்பட்டது.
மேலும் 04/04/2012 அன்று அதிபரின் கையொப்பத்துடன், கல்லூரி மைதானதிற்கு மண் கொட்டி நிரவுவதற்கான கூலித்தொகையயை தந்துதவுமாறு வேண்டுகோள் ஒன்று எமது சங்கத்திற்கு
அனுப்பப்பட்டிருந்தது. இதனையும் எமது நிர்வாகம் இக் கல்லூரியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு 16/04/2012 என்று ரூபாய் 126,600.00 தை கல்லூரி பழைய மாணவர் சங்க வைப்புக் கணக்கிற்கு அனுப்பி வைத்திருந்தது. இன்றுவரை இதற்கான ரசீதுகளோ அல்லது எதுவித விபரங்களோ எமக்கு தரப்படவில்லை. இதுபற்றி அதிபருடன் உரையாடுவதற்கு பல தடவைகள் நிர்வாகம் முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை.எமது நிர்வாகம் இன்றுவரை இக் கல்லூரி தொடர்பாக எதுவித நிதியுதவியும் தனி ஒருவருக்கு அனுப்பிவைத்ததில்லை என்பதனை நாம் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். நாம் மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து தகவல்களிற்குமான பத்திரங்கள் எமது செயற்குளுவிடம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இது பற்றிய மேலதிக தகவல்களை பெற விரும்பும் எமது உறுப்பினர்கள் தயவுசெய்து தலைவர் (குமார் – 07951 950 843,thavarajah@btinternet.com), அல்லது செயலாளருடன்(சிவம் – 01908 558976 , or yassivam@talktalk.net) தொடர்புகொள்ளவும்.
நாம் அனுப்பி வைத்த கடிதத்தில் அதிபரின் பதவி நீக்கத்திற்கோ அல்லது அவரின் இடமாற்றதிற்கோ எந்தவித வேண்டுகோளையும் வைக்கவில்லை, மாறாக நாம் கல்லூரியின் கல்வி மேம்பாட்டிலும் , நிர்வாக ஒழுக்கத்திலும் அக்கறை கொண்டுள்ளோம் என்பதனை சுட்டிக்காட்டியிருந்தோம்.அத்துடன் இக் கடிதம் எமது சங்க நிர்வாகத்தால் மட்டும் கையொப்பமிட்டு அனுப்பிவைக்கப்பட்டது என்பதனையும் அறியத்தருகின்றோம். நாம் பணத்தை ஆற்றில் போட்டு குளத்தில் தேடவில்லை, மாறாக ”கணக்கில் போட்டு கணக்கிற்காய் தேடுகிறோம்”.
ஆடு ஒன்று நனைந்தால் ஓநாய் அழத்தான் செய்யும் …அதற்காக ” அவசரக் கொடுக்கன் ஊரைக் கெடுக்கக் கூடாது”
”கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், ஆராய்ந்து அறிவதே மெய் ”
நன்றி
பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கம்.

கனடா காரை கலாச்சார மன்றம் லண்டன் காரை நலன்புரிச்சங்கம் ஆகியவற்றின் அனுசரணையுடன் மாணவர் கௌரவிப்புவிழா

கனடா காரை கலாச்சார மன்றம் லண்டன் காரை நலன்புரிச்சங்கம் ஆகியவற்றின் அனுசரணையுடன் மாணவர் கௌரவிப்புவிழா

இவ்விழா 26.12.2012 காரைநகர் யாழ்ற்றன் கல்லூரியில் நடைபெற்றது அப்படங்களை இங்கே காணலாம்