Category: KDB செய்திகள்

காரைநகர் அபிவிருத்திச் சபையின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபைத் தெரிவும் நிகழ்ச்சி நிரல்! (11.08.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி)

காரைநகர் அபிவிருத்திச் சபையின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபைத் தெரிவும்!

அமரர்.அருணாசலம் முத்துலிங்கம் (ஓய்வுநிலை அரச உத்தியோகத்தர்) அவர்களின் மறைவு குறித்து காரைநகர் அபிவிருத்திச் சபையினரும் நூலகக் குழுவினரும் இணைந்து வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

கனடா காரை கலாசார மன்றத்தின் ஏற்பாட்டில் நூலக நிறுவனப் பிரதிநிதியுடனான கலந்துரையாடல் 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை காரைநகர் அபிவிருத்திச் சபை மாணவர் நூலகத்தில் இடம்பெற்றது.

கனடா காரை கலாசார மன்றத்தின் ஏற்பாட்டில் நூலக நிறுவனப் பிரதிநிதியுடனான கலந்துரையாடல் 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை காரைநகர் அபிவிருத்திச் சபை மாணவர் நூலகத்தில் இடம்பெற்றது.

வரலாறுகளை ஆவணப்படுத்தும் முயற்சியில் காரைநகர் அபிவிருத்திச் சபை

கனடா காரை கலாசார மன்றத்தின் ஏற்பாட்டில் ஈழத்துத் தமிழ் பேசும் எழுத்தாளர்களின் ஆக்கங்கள், புலம்பெயர் நடுகளில் எம்மவர்களால் வெளியிடப்படும் ஆக்கங்கள், மற்றும் இலங்கை தொடர்பான நூல்கள் என்பவற்றை ஆவணப்படுத்தும் நூலக நிறுவனப் பிரதிநிதியுடனான கலந்துரையாடல் ஒன்று 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை காரைநகர் அபிவிருத்திச் சபை மாணவர் நூலகத்தில் இடம்பெற்றது.

காரைநகர் அபிவிருத்திச் சபையின் தலைவர் நா.பாலகிருஸ்ணன் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் கனடா காரை கலாசார மன்றத்தின் தலைவர் பாலச்சந்திரன் சபாரத்தினம், மன்ற முன்னாள் செயலாளரும் உறுப்பினருமான ஜெயச்சந்திரன் தம்பிராசா மற்றும் காரைநகர் அபிவிருத்திச் சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

நூலக நிறுவனத்தின் பிரதிநிதி கு.சோமராஜ் இதில் கலந்து கொண்டு நூலக நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளித்தார்.

இதில் அவர் தெரிவித்ததாவது ஈழத்துத் தமிழ் பேசும் எழுத்தாளர்களின் ஆக்கங்கள், புலம்பெயர் நடுகளில் எம்மவர்களால் வெளியிடப்படும் ஆக்கங்கள், மற்றும் இலங்கை தொடர்பான நூல்கள் என்பவற்றை ஆவணப்படுத்தும் முயற்சியில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் இதுவரை அறுபதாயித்திற்கம் மேற்பட்ட இவ்வாறான நூல்களைத் தாம் ஆவணப்படுத்தி உள்ளதாகவும் அவை அனைத்தும் நூலக இணையத்தளத்தில் பார்வையிட முடியும் எனவும்

நூலகங்களுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தே இந்தச் சேவையப் பெறுவதுடன் உலகின் எப்பாகத்தில் இருந்தும் இந்ந நூலகத்தில் உள்ள புத்தகங்களைப் பார்வையிட முடியும்.

கடந்த 2005ம் ஆண்டு தொண்டு அடிப்படையில் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டது இன்று 15 ஆண்டுகளைக் கடந்தும் எமது சேவை சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. நூல்கள் காலத்தால் அழியாதவாறு மூன்று முறைகளில் ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றது. அத்துடன் வாய்மொழி மூல வரலாறுகளையும் ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம்.

80 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்கள். அறிஞர்கள் ஆகியோரின் வரலாறுகள் அதன் ஊடாக மொழி, கலை, கலாசாரம், பண்பாடு, பழமை என்பன ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றது.

அது மட்டுமன்றி நீத்தார் நினைவாக வெளியிடப்படும் கல்வெட்டுக்களும் அவற்றுள் காணப்படும் அரிய கட்டுரைகள், விடயங்கள் என்பன மற்றும் ஒவ்வொருவருடைய பரம்பரை என்பவற்றையும் அனைவரும் அறிந்துகொள்ள கூடியவாறு அவையும் ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன.

காரைநகரிலும் பல்வேறு இடங்களில் உள்ள மிகப் பழைய ஓலைச் சுவடிகள், வரலாற்று நூல்கள், மிகப் பழைய நூல்கள் என்பன வற்றையும் வாய்மொழி மூல வரலாறுகளையும் ஆவணப்படுத்தி உள்ளோம். தொடர்ந்தும் இம்முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம் இதற்கு காரைநகர் மக்களின் ஆதரவும் தேவை அதன் ஊடாக காரைநகர் மக்களின் வாழ்வும் வரலாறும் ஆவணப்படுத்தப்பட்டு அடுத்த சந்ததிக்கு வழங்க முடியும் என்றார்.

நூல்கள், வாய்மொழி வரலாறுகளை ஆவணப்படுத்த விரும்புவோர் கொக்குவில் ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள நூலக நிறுவனத் தலைமைக் காரியாலயத்துடன் தொடர்ப கொள்ள முடியும் அல்லது நூலக நிறவனப் பிரதிநிதி கு.சோமராஜ் அவர்களுடன் அவரது தொலைபேசி இலக்கம் 0773747828 இற்குத் தொடர்பு கொள்ள முடியும்.

இந்த முயற்சிக்கு கனடா காரை கலாசார மன்றமும் தனது ஆதரவை வழங்கி வருவதுடன் ஒரு தொகைப் பணத்தினையும் நூலக நிறுவனத்திற்கு வழங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் காரைநகரில் பழமை வாய்ந்த நூல்கள், கல்வெட்டுக்கள், ஓலைச்சுவடிகள், மற்றும் வாய்மொழி வரலாறுகளை ஆவணப்படுத்தி அடுத்த தலைமுறைக்கு வழங்க விரும்புபவர்கள் ஓய்வுநிலை அதிபர் கலாபூசணம் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் மேற்கொள்ள முடியும்.என அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகர் அரசினர் வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்பட்ட பேருந்து தரிப்பு நிலையத் திறப்பு விழா காணொளி! (10.03.2019)

காரைநகர் மேற்குப் பிரதான வீதியில் அரசினர் வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்பட்ட பேருந்து தரிப்பு நிலையத் திறப்பு விழா 10.03.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது.

காரைநகர் மேற்குப் பிரதான வீதியில் அரசினர் வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்பட்ட பேருந்து தரிப்பு நிலையத் திறப்பு விழா 10.03.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது.

மாவட்ட வைத்திய அதிகாரி வைத்தியக் கலாநிதி க.இரத்தினசிங்கம் அவர்களினால் வைபவ ரீதியாக இந்த பேருந்து தரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது. காரைநகர் அபிவிருத்திச் சபை, மற்றும் காரைநகர் வைத்திய சாலை அபிவிருத்திச் சபை ஆகியவற்றின் தலைவர் நா.பாலகிருஸ்ணன் தலைமையில் இவ் விழா சிறப்பாக இடம்பெற்றது.

அமரத்துவமடைந்த வித்துவான் மு.சபாரத்தினம் அவர்களின் நினைவாக அவரது பிள்ளைகள் காரைநகர் அபிவிருத்திச் சபை ஊடாக காரைநகர் வைத்திய சாலை வளாகத்தில் பல இலட்சம் ரூபா செலவில் இந்த பஸ்தரிப்பு நிலையம் அமைத்திருந்தனர்.

அவரது பிள்ளைகள், உறவினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டதுடன் காரைநகர் கம்பன் கழக அமைப்பாளர் தமிழருவி த.சிவகுமாரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியமை குறிப்பிடத்தக்கது.

 

 

அமரர் வித்துவான் சைவமணி மு.சபாரத்தினம் அவர்களின் நினைவாக பேருந்து தரிப்பு நிலையம் திறப்புவிழா அழைப்பிதழ்

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

கனடா காரை கலாச்சார மன்றம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான வறிய மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு வழங்கியதையிட்டு காரைநகர் அபிவிருத்திச் சபை நன்றி தெரிவிப்பு

Canada Letter

காரைநகர் அபிவிருத்திச் சபையின் ஒழுங்குபடுத்தலில் காரைநகரில் சிறப்புற இடம்பெற்ற இலவச கண் பரிசோதனை முகாம்

காரைநகர் அபிவிருத்திச் சபையின் ஒழுங்குபடுத்தலில் காரைநகரில் சிறப்புற இடம்பெற்ற இலவச கண் பரிசோதனை முகாம்

கொழும்ப றோட்டரிக் கழகத்தினால் காரைநகரில் இலவச கண் பரிசோதனை முகாம் ஒன்று 08.12.2018 சனிக்கிழமை நடாத்தப்பட்டது.

காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலையில் காலை 9.00 மணிமுதல் இடம்பெற இந்தப் பரிசோதனை முகாமில் கண்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 600 பேருக்கு மூக்குக் கண்ணnடிகள் வழங்கப்பட்டதுடன்; அதில் கண் சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டியவர்களுக்கான கண்சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது

கண் பரிசோதனை முகாமிற்கான ஏற்பாடுகளை காரைநகர் அபிவிருத்திச் சபை மேற்கொண்டதுடன் காரைநகர் மக்கள் இதில் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

16.12.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையும் காரைநகர் அபிவிருத்திச்சபையும் இணைந்து நடாத்திய முத்தமிழ் விழா – 2018 காணொளி!

அமரர் திருமதி நடராசா இராசமலர் மறைவு குறித்து சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையும், காரைநகர் அபிவிருத்திச் சபையும் இணைந்து வழங்கிய இரங்கல் செய்தி!

காரைநகர் அபிவிருத்திச் சபையின் ஒழுங்குபடுத்தலில் காரைநகரில் இலவச கண் பரிசோதனை முகாம் ஒன்று 08.12.2018 சனிக்கிழமை நடாத்தப்பட உள்ளது.

 

காரைநகர் அபிவிருத்திச் சபையின் ஒழுங்குபடுத்தலில்

காரைநகரில் இலவச கண் பரிசோதனை முகாம்

கொழும்ப றோட்டரிக் கழகத்தினால் காரைநகரில் இலவச கண் பரிசோதனை முகாம் ஒன்று 08.12.2018 சனிக்கிழமை நடாத்தப்பட உள்ளது.

காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலையில்  காலை 9.00 மணிமுதல் இடம்பெற உள்ள இந்தப் பரிசோதனை முகாமில் கண்பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதுடன் அதில் கண் சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டியவர்களுக்கான கண்சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதுடன் இலவசமாக மூக்குக் கண்ணாடிகளும் வழங்கப்பட உள்ளது.

கண் பரிசோதனை முகாமிற்கான ஏற்பாடுகளை காரைநகர் அபிவிருத்திச் சபை மேற்கொண்டுள்ளதுடன் காரைநகர் மக்களை இப்பரிசோதனை முகாமில் கலந்து பயன்பெறுமாறு காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவர் ப.விக்னேஸ்வரன் கேட்டுள்ளார்.

காரைநகர் அபிவிருத்திச் சபை மாணவர் நூலகத்தின் வாணி விழாவும் மாணவர் கௌரவிப்பு நிகழ்வும் 16.10.2018 செவ்வாய்க்கிழமை அன்று கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரனையுடன் நடைபெற்றது.(காணொளி)

காரைநகர் அபிவிருத்திச் சபை மாணவர் நூலகத்தின் வாணி விழாவும் மாணவர் கௌரவிப்பு நிகழ்வும் இன்று 16.10.2018 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு மாணவர் நூலகத்தில் காரைநகர் அபிவிருத்திச் சபையின் தலைவரும் ஓய்வு நிலை வடமாகாணக் கல்வி அமைச்சின் பிரதிச் செயலருமான ப.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

காரைநகர் அபிவிருத்திச் சபை மாணவர் நூலகத்தின் வாணி விழாவும் மாணவர் கௌரவிப்பு நிகழ்வும் இன்று 16.10.2018 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு மாணவர் நூலகத்தில் காரைநகர் அபிவிருத்திச் சபையின் தலைவரும் ஓய்வு நிலை வடமாகாணக் கல்வி அமைச்சின் பிரதிச் செயலருமான ப.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

காரைநகர் பிரதேச சபைத் தவிசாளர் வி.கேதீஸ்வரதாஸ் பிரதம விருந்தினராகவும் காரைநகர் வைத்தியசாலை வைத்திய அதிகாரி சு.சுவாமிநாதன் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.

இவ்வாண்டு இடம்பெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு (164) மேல் பெற்றுச் சித்தியடைந்த காரைநகர் கோட்ட மாணவர்கள் பதினைந்து பேரும் கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரனையுடன் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டதுடன் பணப் பரிசில்களும் வழங்கப்பட்டன.

பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத் தலைவர் கணேசப்பெருமாள் மயில்வாகனம்,பிரித்தானியக் காரை நலன்புரிச் சங்கப் போஷகர் ப.தவராசா மற்றும் புலம்பெயர் நாடுகளில் இருந்து வருகைதந்த பலரும் கலந்து சிறப்பித்ததுடன் காரை கிட்ஸ் பார்க் மழலைகளின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் நூலகத்தில் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வாசகர்களிடம் சேகரிக்கப்பட்ட விபரங்களுக்கமைய குழுக்கல் மூலம் தெரிவு செய்யப்பட்ட பத்துப் பேருக்குப் பணப் பரிசில்களும் வழங்கப்பட்டன.

காரை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான மாணவர் நூலகத்தின் வாணி விழா 16.10.2018 செவ்வாய்க்கிழமை அன்று நூலக கேட்போர் கூடத்தில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படவுள்ளது.

 

 

காரை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான மாணவர் நூலகத்தின் வாணி விழா 16.10.2018 செவ்வாய்க்கிழமை அன்று நூலக கேட்போர் கூடத்தில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படவுள்ளது.

நூலக குழுவினரும், காரை அபிவிருத்தி சபையினரும் இணைந்து கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையில் நடைபெறும் கெளரவிப்பு விழாவிற்கான அனைவருக்குமான அழைப்பிதழ் தரப்படுகின்றது.

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதி அனுசரணையில் காரை அபிவிருத்தி சபையினரால் 10.10.2018 விக்காவில் குளம் தூர்வாரும் பணிகள் ஆரம்பமாகின.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதி அனுசரணையில் காரை அபிவிருத்தி சபையினரால் 10.10.2018 விக்காவில் குளம் தூர்வாரும் பணிகள் ஆரம்பமாகின. இப்பணிகளை மேற்பார்வை செய்ய ஆர்வத்துடன் முன்வந்த அப்பகுதியைச் சேர்ந்த திரு. சிவா, திரு. கதிரமலை ஆகியோரை காரை அபிவிருத்தி சபையினர் பாராட்டுகின்றனர்.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையில் காரை அபிவிருத்தி சபையால் அல்லின் வீதியில் அமைக்கப்பட்ட தற்காலிக வீடு 05.10.2018 உத்தியோகபூர்வமாக கனடா காரை கலாச்சார மன்றத்தின் தலைவரால் கையளிக்கப்பட்டது.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையில் காரை அபிவிருத்தி சபையால் அல்லின் வீதியில் அமைக்கப்பட்ட தற்காலிக வீடு  05.10.2018 உத்தியோகபூர்வமாக கனடா காரை கலாச்சார மன்றத்தின் தலைவரால் கையளிக்கப்பட்டது.

 

காரைநகர் அபிவிருத்திச் சபையின் விசேட நிர்வாக சபைக் கூட்டத்தில் கனடா காரை கலாசார மன்றத் தலைவர் கலந்துகொண்டு காரைநகர் அபிவிருத்தி தொடர்பாகக் கலந்துரையாடினார்.

 

 

காரைநகர் அபிவிருத்திச் சபையின் விசேட நிர்வாக சபைக் கூட்டத்தில் கனடா காரை கலாசார மன்றத் தலைவர் கலந்துகொண்டு காரைநகர் அபிவிருத்தி தொடர்பாகக் கலந்துரையாடினார்.

காரைநகர் அபிவிருத்திச் சபையின் விசேட நிர்வாக சபைக் கூட்டம் கடந்த ஞாயிற்றக்கிழமை காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைமைச் செயலகத்தில் சபைத் தலைவர் ப.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் கனடா காரை கலாசார மன்றத் தலைவர் சபாரத்தினம் பாலச்சந்திரன் கலந்துகொண்டு காரைநகர் அபிவிருத்தி தொடர்பாகக் கலந்துரையாடியதுடன் காரைநகரில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை காரைநகர் அபிவிருத்திச் சபையுடன் இணைந்து முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த கனடா காரை கலாசார மன்றத் தலைவர் சபாரத்தினம் பாலச்சந்திரன் காரைநகரில் தமது மன்றத்தினால் செயற்படுத்துகின்ற எந்த உதவித் திட்டமாக இருந்தாலும் அவை காரைநகர் அபிவிருத்திச் சபையின் ஊடாகவே மேற்கொள்ளப்படும் எனவும் இங்கு மேற்கொள்ள வேண்டிய பொருத்தமான வேலைத்திட்டங்களை இனங்கண்டு காரைநகர் அபிவிருத்திச் சபையின் சிபார்சுடன் எமது மன்றத்திற்கு அனுப்பிவைத்தால் எமது மன்றக் கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் எனவும்

காரைநகரில் உள்ள எந்தப் பிள்ளையும் வறுமை காரணமாக நிதியின்றி தமது உயர்கல்வி வாய்ப்பபைத் தவறவிடக்கூடாது அவ்வாறானவர்களுக்கு உதவ நாம் எப்போதும் தயாராக உள்ளோம். அவர்கள் தாம் கற்ற கல்வியின் ஊடாக எதிர்காலத்தில் காரை மண்ணுக்குச் சேவையாற்ற முன்வர வேண்டும் என்றார்.

தற்போது பல்கலைக் கழகக் கல்வியைத் தொடர உள்ள மாணவி ஒருவருக்கு மாதாந்த உதவு தொகை வழங்க மன்றம் முன்வந்துள்ளதுடன் வீடின்றித் தவித்த வறிய குடும்பத்திற்கு வீடு ஒன்றும் அமைத்துக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

காரைத்தென்றல் – 2018 முத்தமிழ் விழாவிற்கு தாயகத்தில் இருந்து பிரதமவிருந்தினராக வருகை தந்த காரை அபிவிருத்திச் சபைத் தலைவர் திரு. பரமநாதன் விக்கினேஸ்வரன் அவர்களின் உரை புதியது 29.09.2018

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 5ம்,6ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகள் ஊடாக அறியப்படுகின்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 5ம்,6ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகள் ஊடாக அறியப்படுகின்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக 12 ஆரம்ப பாடசாலைகளிற்கு தலா 10 இலட்சம் வீதம் நிரந்தர வைப்பில் இடப்பட்டு வழங்கப்பட்டது. இந்நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டி பணத்தினை பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டு அதனை உறுதி செய்து கொண்டு இந்நிரந்தர வைப்பு நிதியினை பெற்றுக்கொண்டார்கள்.

அதன் அடிப்படையில் கிடைக்கப்பெறும் வட்டிப் பணத்தின் 50 விகிதமான நிதியானது நேரடியாக கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளான மேலதிக வகுப்புக்களிற்கான ஆசிரியர் வேதனம், மெல்ல கற்கும் மாணவர்களிற்கான விசேட வகுப்புக்கான ஆசிரியர் வேதனம் மற்றும் அதற்குரிய செலவீனங்ளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேலும் வங்கி வட்டியில் இருந்து கிடைக்கப்பெறும் 20 விகிதமான நிதியானது இணைப்பாட விதான செயற்பாடுகளான விளையாட்டு, தமிழ் திறன் போட்டி, பரிசளிப்பு நிகழ்வுகளிற்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேலும் கிடைக்கப்பெறும் வட்டிப்பணத்தின் 20 விகிதம் மேலதிகமாக மாதந்தம் துண்டுவிழும் மின்சார கட்டணம் செலுத்தவும், மிகுதி 10 விகிதமான நிதி மலசலகூட சுத்திகரிப்பு, குடிநீர் தேவைகளிற்கான கொடுப்பனவுகளிற்காகவும் பயன்படுத்த முடியும் எனவும் திட்டமிடப்பட்டது.

அதன் அடிப்படையில் பாடசாலைகள் ஒவ்வொன்றும் வருடத்திற்கு இரண்டு தடவைகள் ( மே05 /நவம்பர் 05 ) கிடைக்கப்பெறும் வட்டி பணத்தில் ஊடாக செலவு செய்யப்படும் விபரங்களை காநைரகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் திட்டத்தில் குறிப்பிடப்பட்டது. அதன் அடிப்படையில் 5வது தடவையாக 05.11.2017 அன்று 5ம் கட்ட வட்டிப்பணமாக 12 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 52,406.25 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன. அத்துடன் 6வது தடவையாக 05.05.2018 அன்று 6ம் கட்ட வட்டிப்பணமாக 12 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 51,062.50 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 5ம்,6ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகள் அவற்றினை செலவு செய்த விபரங்கள் காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன . கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வழங்கப்பட்ட நிரந்தர வைப்பு நிதியத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற வட்டி பணத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகளின் செலவு விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

SCHOOL REPORT-2018-5,6

 

https://karainagar.com/pages/wp-content/uploads/2018/09/SCHOOL-REPORT-2018-56.pdf

 

காரை அபிவிருத்திச்சபையின் “சமூக சேவைக்காக இளைஞர்களை ஊக்குவிப்போம்” எனும் தொனிப்பொருளின் கீழ் இன்று கோவளம் விளையாட்டுக் கழகம் மற்றும் காரை.சலச்சர்ஸ் விளையாட்டுக்கழக இளைஞர்கள் இணைந்து சிரமதான பணியினை முன்னெடுத்தனர்.

காரை அபிவிருத்திச்சபையின் “சமூக சேவைக்காக இளைஞர்களை ஊக்குவிப்போம்” எனும் தொனிப்பொருளின் கீழ் இன்று கோவளம் விளையாட்டுக் கழகம் மற்றும் காரை.சலச்சர்ஸ் விளையாட்டுக்கழக இளைஞர்கள் இணைந்து சிரமதான பணியினை முன்னெடுத்தனர். இந்நிகழ்வில் பிராந்திய வைத்திய அதிகாரி திரு. பரா நந்தகுமார் , ஆதார வைத்தியசாலை வைத்தியர், காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி, காரை.அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

மனிதாபிமான நிதியுதவி கோரல்

 

மனிதாபிமான நிதியுதவி கோரல்

மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும் செய்கின்ற அறம் சார்ந்த  மனிதாபிமான உதவிகள் மகத்தானவையாக கருதப்படுகின்றன. அந்த வகையில், காரைநகர்  காமாட்சி கேணியடியை  சேர்ந்த திருமதி. லதாரணி  என்பவர் ஏழு வயதுக்குழந்தையுடனும் , வயோதிப  தாயாருடனும் ஆதரவற்ற நிலையில் வசித்து வருகின்றார்.  பிழைப்பு ஏதுமற்ற நிலையில் கிடைக்கின்ற சந்தர்ப்பத்தில்  கூலி வேலை செய்து வாழ்க்கையை நடாத்தி வருகின்றார். இவர்கள் வாழ்ந்து   வருகின்ற  தகரக்  கொட்டில்,  மழைக்காலத்தில்  ஒழுக்குகள் நிறைந்ததாகவும் , தண்ணீர் தேங்கி  நிற்பதாகவும் காணப்படுகின்றது.  அதனால்,  மழைக்காலத்தில்  அயலவர்கள்  வீட்டில் தங்கி வருகின்றனர்.

இத்தகைய நெருக்கடியான  சூழ்நிலையில் வீட்டினுள் மழைநீர் தேங்காதவாறும், பொருத்தமான முறையில் கூரை வேலைகளை திருத்தியமைக்கவும் ரூபா மூன்று  இலட்சம்   தேவைப்படுகின்றது.  உதவி செய்யக்கூடிய நிலையில் யாருமேஇல்லாத நிலையில்  நிதியுதவியினை  குடும்பத்தினர் கோரி நிற்கின்றனர்.  காரை  அபிவிருத்தி சபை நல்கிய கடிதமும்  இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

அன்பளிப்பு வழங்க விரும்பும் கருணை உள்ளங்கள்  647 818 7443 என்ற தொலைபேசி இலக்கத்துடனோ அன்றி  மன்ற karainagar@gmail.com என்ற  மின்னஞ்சல்  மூலமாகவோ  தொடர்பு கொள்ளலாம்.

நிர்வாகம்

கனடா-காரை கலாச்சார மன்றம்

 

 

நிதியுதவி செய்தோர் விபரம்

 

No                            Name Amount Receipt No
1 Sabaratnam Balachandran $100.00
2 Pirabakaran Paramalingam $  50.00
3 Thambiaayah Paramantharajah $  50.00
4 Thambirajah Jeyachandran $  50.00
5 Thevakumar Sellathurai $  50.00
6  k.Sivapathasundram $500.00
7
8
9

 

 

காரைநகர் அபிவிருத்திச் சபையயும், சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையும் இணைந்து நடத்திய அமரர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் ஞாபகார்த்த துவிச்சக்கரவண்டி போட்டி பரிசளிப்பு விழா 12.08.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காரை அபிவிருத்திச் சபை அலுவலகத்தில் நடைபெற்றது.

காரைநகர் அபிவிருத்திச் சபையயும், சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையும் இணைந்து நடத்திய அமரர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் ஞாபகார்த்த துவிச்சக்கரவண்டி போட்டி பரிசளிப்பு விழா – 2018

 

 

 

காரைநகர் அபிவிருத்திச் சபையயும், சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையும் இணைந்து நடத்திய அமரர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் ஞாபகார்த்த துவிச்சக்கரவண்டி போட்டி பரிசளிப்பு விழா – 2018

இலங்கை  கிழக்கு பல்கலைக்கழக முன்னாள்  விரிவுரையாளரும், எதியோப்பிய பல்கலைக்கழக ஆங்கில இணைப் பேராசிரியரும், எமது சபையின்  மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு இணைப்பாளரும்,   ஆங்கில ஆசான் அமரர் நல்லதம்பி விஜயரத்தினம்  (நீலிப்பந்தனை காரைநகர்) அவர்களின் மகன் அமரர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம்  Kennedy Vijiaratnam, Associate Professor of English, Madawalaba University, Ethiopia.   அவர்களின் 10.07.2018இல் ஆறாம் மாத நினைவேந்தலை முன்னிட்டு   துவிச்சக்கரவண்டி போட்டி     கடந்த மாதம் 07.07.2018 சனிக்கிழமை அன்று  நடைபெற்றது.

காரைநகரில் எமது தாய் சங்கமான காரை அபிவிருத்திச் சபையுடன் இணைந்து எமது சபையால் நடாத்தப்பட்ட. துவிச்சக்கரவண்டி     போட்டிகளில் வெற்றிபெற்ற முதல் மூன்று பேர்களுக்கு அமரர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்களின் நினைவு வெற்றிக்கிண்ணமும் பெறுமதிமிக்க பரிசில்களும்  வழங்கும் நிகழ்வு  எதிர்வரும் 12.08.2018 ஞாயிற்றுக்கிழமை  பிற்பகல் 2.00மணிக்கு காரைநகர் மணற்காட்டு கும்பநாயகி அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள காரை அபிவிருத்திச் சபை அலுவலகத்தில் நடைபெறும்  என்பதை அறியத்தருகின்றோம்.

பரிசளிப்பு விழாவிற்கு தலைவராக காரை அபிவிருத்திச் சபை தலைவர் திரு.ப.விக்கினேஸ்வரன் அவர்களும், பிரதமவிருந்தினராக சுவிற்சர்லாந்து Siva Travel உரிமையாளர் திரு. கனசுந்தரம் சிவனேயன் அவர்களும்,  சிறப்பு  விருந்தினர்களாக  பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை ஒய்வு நிலை கல்லூரி அதிபர், தலைவர் மணிவாசகர் சபை அவர்களும்,  விஜயரத்தினம் பிரேமதாஸ் குமாரஸ்ரீ     ஆசிரியர்  மானிப்பாய் இந்து மகளிர் கல்லூரி  அவர்களும், கௌரவ விருந்தினராக  யாழ்பல்கலைக்கழ சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி வீரமங்கை யோகரட்ணம் அவர்களும்,  கலந்து   சிறப்பிக்கின்றனர்.

 

எமது சபையின் வேண்டுகோள்ளுக்கு இணங்க மிகக்குறுகிய காலத்தில் துவிச்சக்கரவண்டி போட்டியை   வெகு சிறப்பாக நடாத்துவதற்கு அனுசரணை வழங்கிய  சுவிற்சர்லாந்து    Siva Travel    உரிமையாளர் திரு. கனசுந்தரம் சிவனேயன் அவர்களுக்கும் ஓத்துழைப்பு வழங்கிய காரை அபிவிருத்திச் சபை தலைவர் திரு. ப. விக்கினேஸ்வரன்  அவர்களுக்கும், போட்டியின் இணைப்பாளராக  பணிபுரிந்த  ஸ்ரீலோகநாதன் செந்தூரன் அவர்களுக்கும் போட்டி மேற்பார்வையாளராக பணிபுரிந்த யாழ்ற்றன் கல்லூரி ஆசிரியர் திரு. சிவகுருநாதன் பிரபாகரன், அவர்களுக்கும்,  போட்டி நிகழ்வினை ஆரம்பித்து வைத்த அமரர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம்   அவர்களின்  சகோதரர்களுக்கும், காரை அபிவிருத்திச் சபை நிர்வாக உறுப்பினர்களுக்கும், மற்றும் இப் போட்டிக்கு பல வழிகளிலும் உதவிபுரிந்த மாணவர்களுக்கும் எமது சபையின் மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

 

அனைவரையும் இந் நிகழ்வில் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

நிகழ்ச்சி நிரலினை  கீழே காணலாம்.

 

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

 

இங்ஙனம்

                சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

               செயற்குழு உறுப்பினர்கள்

  மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்

09.08.2018

 

 

காரைநகர் அபிவிருத்திச் சபையும்,சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையும் இணைந்து நடாத்திய பேராசிரியர் கென்னடி விஜயரத்தினம் ஞாபகார்த்த சைக்கிளோட்டப் போட்டி இன்று 07.07.2018 சனிக்கிழமை காரைநகரில் இடம்பெற்றது.

 

 

காரைநகர் அபிவிருத்திச் சபையும்,சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையும் இணைந்து நடாத்திய பேராசிரியர் கென்னடி விஜயரத்தினம் ஞாபகார்த்த சைக்கிளோட்டப் போட்டி இன்று 07.07.2018 சனிக்கிழமை காரைநகரில் இடம்பெற்றது.

பேராசிரியர் கென்னடி விஜயரத்தினத்தின் ஆறாம் மாத நினைவேந்தலை முன்னிட்டு நடாத்தப்பட்ட இப் போட்டிகள் காரைநகர் மணற்காடு முத்துமாரி அம்மன் ஆலய முன்றலில் இன்று காலை 6.00 மணிக்கு ஆரம்பமாகியது. 18 வயதிற்க மேற்பட்ட ஆண்,பெண் இருபாலாருக்குமான போட்டிகளில் இளைஞர்,யுவதிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

சபையின் தலைவர் ப.விக்னேஸ்வரன், பேராசிரியர் கென்னடி விஜயரத்தினத்தின் குடும்பத்தினர் போட்டிகளை ஆரம்பித்து வைத்தனர்.

பெண்களுக்கான சைக்கிளோட்டப் போட்டியில் முறையே ம.ரோஸி,இ.விதுஷா, செ.தேனுசா,மோ.துர்ஷிகா,தி.நிதர்சனா ஆகியோர் முதல் ஜந்து இடங்களையும் பெற்றுக்கொண்டனர்.

முதலில் ஆரம்பமான பெண்களுக்கான சைக்கிளோட்டம் காரைநகர் மணற்காடு முத்துமாரி அம்மன் ஆலய முன்றலில் ஆரம்பமாகி 12 கிலோமீற்றர் காரைநகரைச் சுற்றி மீண்டும் தொடக்க இடத்தை வந்தடைந்தது.அடுத்து ஆரம்பமான ஆண்களுக்கான சைக்கிளோட்டம் காரைநகர் மணற்காடு முத்துமாரி அம்மன் ஆலய முன்றலில் ஆரம்பமாகி 24 கிலோமீற்றர் காரைநகரை இரு தடவைகள் சுற்றி மீண்டும் தொடக்க இடத்தை வந்தடைந்தது.

இப்போட்டிகளை வீதிகளின் இருமருங்கிலும் குழுமிய பலநூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்து ரசிக்க உற்சாகமாகப் போட்டிகள் இடம்பெற்றது.

காரைநகர் அபிவிருத்திச் சபையினால் கண்பார்வைக் குறைபாடுடைய 11 பேருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சபை அலுவலகத்தில் வைத்து மூக்குக் கண்ணாடி வழங்கப்பட்டது.

 

 

காரைநகர் அபிவிருத்திச் சபையினால் கண்பார்வைக் குறைபாடுடைய 11 பேருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சபை அலுவலகத்தில் வைத்து மூக்குக் கண்ணாடி வழங்கப்பட்டது.

காரைநகர் அபிவிருத்திச் சபை புலமைப் பரிசில் வழங்கல் விண்ணப்ப அறிவித்தல்!

காரைநகர் அபிவிருத்திச்சபையின் கண் படர் சத்திர சிகிச்சை பயணம் 06.04.2018

காரைநகர் அபிவிருத்திச்சபையின் கண் படர் சத்திர சிகிச்சை பயணம் 06.04.2018

வருடாந்தம் காரை அபிவிருத்திச் சபையினால் இம்முறையும் பதிவு செய்யப்பட்ட 34 கண்நோயாளர்களுக்கான ஆரம்பகட்ட கண் சிகிச்சை யாழ் போதன வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது. இதில் 11 பேருக்கு பார்வை குறைபாட்டிற்காக மூக்குக் கண்ணாடி வழங்கவும், 21 பேருக்கு கண்சத்திர சிகிச்சையும் மேற்கொள்ளவும், 2 பேருக்கு கண் கிளினிக்கிற்கு செல்லவும் ஆலோசனை வழங்கப்பட்டது. இவர்கள் எம்மால்
பேருந்து மூலம் அழைத்து செல்லப்பட்டு மதியபோசனமும் வழங்கப்பட்டது. மீளவும் சபைக்கு அழைத்து வரப்பட்டது. இவர்களை சபை உறுப்பினர்களான உப தலைவரான திரு ந.பாலகிருஷ்ணன் உப செயலாளர் திரு க.நாகராசா அலுவலக உதவியாளர் ச.தெய்வசக்தி அழைத்து சென்றார்கள்.

இவ் நோயாளர்களுக்கு சிகிச்சையினை வழங்கிய யாழ் போதன வைத்தியசாலை வைத்திய அதிகாரிக்கும் சக ஊழியர்களுக்கும் எமது சபையின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

நன்றி

செயலாளர்

 

தமிழ் பற்றாளனும் சிறந்த சமூக சேவையாளருமான பேராசிரியர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்களின் மறைவு குறித்து காரைநகர் அபிவிருத்திச் சபையின் கண்ணீர் அஞ்சலி

 

கண்ணீர் அஞ்சலி

தமிழ் பற்றாளனும் சிறந்த சமூக சேவையாளருமான பேராசிரியர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்களின் திடீர் மறைவு காரைநகர் மக்களுக்கு மீயாத் துயரினையும் அதிர்சியினையும் ஏற்படுத்தி உள்ளது. அவர் காரைநகர் அபிவிருத்திச் சபையுடன் இணைந்து காரைநகரின் கல்வி வளர்ச்சிக்கு ஆற்றிய சேவை அளப்பெரியது.

சிறந்த கல்விமானான அன்னாரது இழப்பினால் துயருற்றிருக்கும் அவர் தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா தில்லைக் கூத்தன் திருவடி நிழலில் சேர ஈழத்துச் சிதம்பர சௌந்தராம்பிகை சமேத சுந்தரேசப் பெருமைனைப் பிரார்த்திக்கின்றோம்.

காரைநகர் அபிவிருத்திச் சபை,
காரைநகர்.