Category: கண்ணீர் அஞ்சலி

அசாதாரண சூழ்நிலையில் அரும்பணியாற்றிய அதிபர் திருமதி.தேவநாயகி பாலசிங்கம்.

                          

               அசாதாரண சூழ்நிலையில் அரும்பணியாற்றிய அதிபர்

                                     திருமதி.தேவநாயகி பாலசிங்கம்.

காரைநகர் களபூமி அம்பலவாணர் பரமேஸ்வரி தம்பதிகளின் புதல்வி திருமதி. தேவநாயகி பாலசிங்கம் ஆரம்பக் கல்வியை காரைநகர் பாடசாலைகளிலும் தொடர்ந்து உயர்கல்வியைப் பண்டத்தரிப்பு மகளீர் கல்லூரி, யாழ்ப்பாணக் கல்லூரியிலும் கல்வி கற்று பேராதனை பல்கலைக்கழகத்தில் விலங்கியல் பாடத்தில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற விஞ்ஞானப் பட்டதாரி பட்டம் பெற்றார்.

காரைநகர் இந்துக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியேற்று அதிபராகப் பணியாற்றி பரீட்சை திணைக்களத்தில் உதவிப் பரீட்சை ஆணையாளராகப் பதவி உயர்வு பெற்று மாற்றலாகி சென்றார். க.பொ.த உயர்தர வகுப்புகளில் விலங்கியல் பாடத்தை சிறப்புடன் போதித்து மாணவர்கள் சிறப்பு தேர்ச்சி பெறப் பணியாற்றினார்.

1991ம் ஆண்டு இடப்பெயர்வினைத் தொடர்ந்து கல்லூரி பல சவால்களை எதிர் கொண்ட வேளை சாதுரியமாக நிருவாக நடவடிக்கைகளைக் கையாண்டு கல்லுரியின் தனித்துவத்தையும் அந்தஸ்தையும் பேணியவர். 1991ம் ஆண்டு இடப்பெயர்வு நடைபெற்றவேளை தனது பாதுகாப்பினையும் கருத்தில் கொள்ளாது துணிச்சலாக துவிச்சக்கரவண்டியில் பாடசாலைக்கு வருகை தந்து அலுவலகத்தில் பேணப்படும் முக்கிய ஆவணங்களை எடுத்து சென்று வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆகிய இடங்களில் போர் காலசூழலில் கவனமாகப் பேணி மீளக்குடியமர்வின் போது காரைநகரிற்கு எடுத்து வந்தார். கல்லூரி ஆவணங்களை எடுத்து வந்தமை கல்லுரியின் நிருவாக செயற்பாட்டிற்கு மாத்திரம் அன்றி ஏனைய பாடசாலைகளின் செயற்பாட்டிற்கும் உதவியாக அமைந்தது.

இடம்பெயர்ந்த நிலையில் கல்லூரி யாழ்ப்பாணத்தில் இயங்கிய வேளை ஆசிரியர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்களின் உதவியுடன் கல்லுரியை முழுநேரக் கல்லூரியாக இயக்குவதற்கு தேவையான பௌதீக வளங்களைப் பெற்று கல்லூரியைத் திறம்பட இயக்கினார். 1996ம்ஆண்டு ஏப்பிரல் 25ம் திகதிக்குப் பின் காரைநகரில் மீள் குடியேற்ற்றம் ஆரம்பானபொழுது காரைநகரிற்கு விரைவாகத் தன் சக ஆரிரியர்களுடன் வருகைதந்து கல்லூரியைச் சொந்த இடத்தில் இயக்கியவர். அதிபராகப் பணியாற்றிய சந்தர்ப்பத்தில் நிருவாகத்தில் அனைத்து ஆசிரியர்களையும் இணைத்துப் பயணித்தவர்.

அதிபர் பணிகளுக்கு அப்பால் (1991-1994) மூன்று ஆண்டுகள் தொண்டமனாறு வெளிக்கள நிலைய செயலாளராகப் பணியாற்றி க.பொ.உயர்தர மாணவர்களுக்கான பரீட்சைகளை சுமுகமாக நடத்துவதில் சிறப்பாகப் பணியாற்றியவர்.

பரீட்சை திணைக்கள உதவிப் பரீட்சை ஆணையாளராகக் கடமை ஆற்றியவேளை ஆய்வு அபிவிருத்தி கிளையிலும் (research and development branch) இரகசிய கிளையிலும் (confidential branch) பணியாற்றினார். அன்னார் ஓய்வுபெற்ற பின்னரும் பரீட்சைத் திணைக்களம் அன்னாரின் சேவை தேவைப்படும் வேளைகளில் பணிக்கு அமர்த்தியது திறந்த பல்கலைக்கழகத்தில் பகுதி நேர விரிவுரையாளராகவும் கடமையாற்றினார்.

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திபோமாக.

எஸ். கே. சதாசிவம்

 

கண்ணீர் அஞ்சலி. மலேசியாவைப் பிறப்பிடமாகவும் காரைநகரைப் பிறப்பிடமாவும் கொண்ட திருமதி துரைராசா தையல்நாயகி கடந்த 12.02.2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்த குறித்து யா / காரைநகர் இந்துக்கல்லூரி 83ஆம் ஆண்டு O/L பழைய மாணவர்களின் கண்ணீர் அஞ்சலி.

அமரர் திருமதி கனகசபை சிவஞானவதி (சிவம் அக்கா) அவர்களின் மறைவு குறித்து சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

அமரர் முருகேசு நடராசா அவர்களின் மறைவு குறித்து வர்த்தக நண்பர்கள் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

திரு.விஸ்வலிங்கம் கனகரத்தினம் அவர்களின் மறைவு குறித்து கனடா காரை கலாச்சார மன்றம் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

அமரர் விஸ்வலிங்கம் கனகரத்தினம் அவர்களின் மறைவு குறித்து காரைநகர் அபிவிருத்திச் சபையினர் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

Kanagaradnam KDS

திருமதி பத்மாவதி பேரம்பலம் அவர்களின் மறைவு குறித்து பிரான்ஸ் காரை நலன்புரிச்சங்க உறுப்பினர்களும் காரை மக்களும் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

Notice

அமரர்.அருணாசலம் வள்ளியம்மை அவர்களின் மறைவு குறித்து காரைநகர் அபிவிருத்திச் சபையினர் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

அமரர் இராசரத்தினம் மறைவையொட்டிய அனுதாபச் செய்தி (ஐ.தி.சம்பந்தன்)

 

அமரர் இராசரத்தினம் மறைவையொட்டிய அனுதாபச் செய்தி (ஐ.தி.சம்பந்தன்)

 

ஒரு உயரிய பண்பாளனை காரைநகர் இழந்து விட்டது

காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வாழ்விடமாகவும் வாழ்ந்து வந்த பிரபல வர்த்தகர் ஆ.ச.சங்கரப்ப்பிள்ளையின் சிரேட்ட புதல்வன் இராசரத்தினம் அவர்கள் 05-09-2019 அன்று சிவபதம் அடைர்தார் என்ற செய்தி அறிந்து ஆழ்ந்த கவலையடைந்தோம்.

செல்வம் படைத்த குடும்பத்திலே பிறந்த ஒரு உயரிய பண்பாளர். படித்த காலத்தில் இளைஞர்கள் விளையாட்டுத் துறையில் ஈடுபடவேண்டுமென்ற பெருநோக்கோடு “பாலாவோடை விளையாட்டுக்கழகத்தை” உருவாக்கி உற்சாகமளித்த பெருமகனார். கொழும்பு காரை அபிவிருத்திச் சபையின் தலைவராக பணியாற்றியவர்.அவருடைய காலத்தில பல அபிவிருத்தித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. காரை அபிவிருத்திச் சபையின் முன்னாள் செயலாளர் அமரர் நா. பொன்னையாவின் உதவியுடன்”காரை ஒளி” வெளியிடப்பட்டன. அதில் காரைநகர் சீநோர் வளர்ச்சி பற்றிய கட்டுரை வெளியிடப்பட்டது.

சமயபற்றாளன் இராசரத்தினம் பாலாவோடை அம்மன்,திக்கரை முருகன் ஆலய வளர்ச்சியில் அதிக ஈடுபாடு கொண்டவர்.

தந்தையார் ஆ.ச.ச. சங்கரப்பிள்ளை விட்டுச்சென்ற திருவிழாக்களையும்,ஆலய நிருவாகத்தையும் பொறுப்பேற்று திறம்பட நடத்தி வந்த குடும்பத் தலைவன்.

அன்பு அமைதி ,பொறுமை அடக்கம் பண்பு மிகுந்த அமரர் இராசரத்தினம் வாழும்போது எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டுமென்ற நோக்குடன் வாழ்ந்தவர்.

நோயுற்ற நிலையிலும் திக்கரை முருகன், பாலாவோடை அம்மன் திருவிழாக்களில் தவறாது பங்குபறறிய சமய பக்தன்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பாலாவோடை அம்மாளையும்,திக்கரை முருகனையும் பிராத்திப்போமாக.

ஐ.தி.சம்பந்தன்

 

 

அமரர் திரு அருணாசலம் முத்துலிங்கம் அவர்களின் மறைவு குறித்து சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

Publikation21.05.2019

அமரர்.அருணாசலம் முத்துலிங்கம் (ஓய்வுநிலை அரச உத்தியோகத்தர்) அவர்களின் மறைவு குறித்து காரைநகர் அபிவிருத்திச் சபையினரும் நூலகக் குழுவினரும் இணைந்து வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

கண்ணீர் அஞ்சலி, நடராஜா லோகராசா

திரு.கணேசபிள்ளை சக்திவேல் அவர்களின் மறைவு குறித்து கனடா காரை கலாச்சார மன்றம் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

திருமதி. நடராசா இராசமலர் (இயக்குனர்,முத்தமிழ் பேரவை) அவர்களின் மறைவு குறித்து கனடா காரை கலாச்சார மன்றம் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

காரை மண்ணின் அழைப்புமணி ஓய்ந்தது.

காரை மண்ணின் அழைப்புமணி ஓய்ந்தது

அமரர் திருமதி நடராசா இராசமலர் மறைவு குறித்து சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையும், காரைநகர் அபிவிருத்திச் சபையும் இணைந்து வழங்கிய இரங்கல் செய்தி!

கண்ணீர் அஞ்சலி

திருமதி. நடராசா இராசமலர் (நிர்வாக இயக்குனர்,முத்தமிழ் பேரவை, விளானை சனசமூக நிலைய முன்னாள் தலைவர் ) அவர்களின் மறைவு குறித்து பிருத்தானியா வாழ் களபூமி மக்கள் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

திருமதி. நடராசா இராசமலர் (நிர்வாக இயக்குனர்,முத்தமிழ் பேரவை) அவர்களின் மறைவு குறித்து சுவிஸ் வாழ் காரை மக்கள் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

திருமதி. நடராசா இராசமலர் (மலர் அக்கா ) (இயக்குனர்,முத்தமிழ் பேரவை) அவர்களின் மறைவு குறித்து கனடா வாழ் களபூமி மக்கள் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

திருமதி. நடராசா இராசமலர் (நிர்வாக இயக்குனர்,முத்தமிழ் பேரவை) அவர்களின் மறைவு குறித்து களபூமி கலையகம் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

திருமதி. நடராசா இராசமலர் (இயக்குனர்,முத்தமிழ் பேரவை) அவர்களின் மறைவு குறித்து முத்தமிழ் பேரவை மற்றும் விளானை சனசமூக நிலையம் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

 

கண்ணீர் அஞ்சலி, தியாகராசா தில்லைராசன்

கலாநிதி.தில்லைநாதன் சிவகுமாரன் அவர்களின் மறைவு குறித்து கனடா காரை கலாச்சார மன்றம் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

 

                            கண்ணீர் அஞ்சலி


                             கலாநிதி. தில்லைநாதன் சிவகுமாரன்
       (M.Sc,Ph.D,FRSC,FCACB,DABCC,மக்மாஸ்டர் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர்)

தோற்றம்: 21.12.1936                                                                        மறைவு: 18.06.2018

கனடாவில் காரை மக்களை ஒன்றிணைத்த காரை கலாச்சார மன்றத்தின் ஆரம்பகால திட்டமிடல் போஷகர் சபை உறுப்பினராகத் திகழ்ந்தவர். மன்றத்தின் உறுப்பினராகவும், தொடர்ச்சியாக காரை நிகழ்வுகளில் பங்குகொண்டும் சிறப்பித்த பெருமகனார் ஆவார். காரை வசந்தம் மலருக்கு பயனுள்ள ஆக்கங்களும், ஆலோசனைகளும் வழங்கிய உத்தமர். காரை வசந்தம் கலை விழாவில் பிரதம மற்றும் சிறப்பு விருந்தினராக கலந்து காரை மக்களை மகிழ்வித்த வள்ளல்.

கலாநிதி. தில்லைநாதன் சிவகுமாரன் அவர்கள் ஆழமான கல்விப்பின்புலமும், கண்ணியமான பாரம்பரியமும் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவர். 1963 ஆம் ஆண்டு கனேடிய மண்ணில் குடியேறிய முதல் காரைநகரான் என்ற பெருமதிப்புக்குரியவர். கனடா நாட்டில் உயர்கல்விகற்றதுடன், முதலாவது காரைமாதாவின் பல்கலைக்கழக மாணவனாக, விரிவுரையாளராக, இணைப்பேராசிரியராக, பேராசிரியராக சாதனை படைத்தவர். புகழ்பெற்ற மக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தில் பல தசாப்தங்களாக நடாத்திய விரிவுரைகள் மூலம் ஆயிரக்கணக்கான இரசாயனவியல் துறைசார் விற்பன்னர்களை உருவாக்கிய தன்நிகரில்லாப் பேராசான்.

கனடாவில் அரைநூற்றண்டுகளுக்கு மேலாக வாழ்ந்தாலும், பிறந்த காரை மண் மீது தீராத காதல் கொண்டவர். ஊர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அன்போடு பழகிய பண்பாளன். ஈழத்து சிதம்பரத்து ஆண்டிகேணி ஐயனார் மீதும், கருங்காலி முருகப்பெருமான் மீதும் அயராத பக்தி கொண்டு வாழ்ந்தவர்.

ஆன்மீகத்தில் இணையில்லா நாட்டம் கொண்டு, அத்தகைய சிந்தனை கருத்துக்களை சுவைபட கூறும் வல்லமை படைத்தவர். நிலையில்லா இவ்வுலக வாழ்க்கைக்கு தேவையான கல்விப் பெரும் செல்வம், தெய்வ நம்பிக்கை மற்றும் தியான வழிபாடு போன்றவற்றை வலியுறுத்தியவர்.

கலாநிதி. தில்லைநாதன் சிவகுமாரன் அவர்களின் மறைவினால் மீளாத் துயரத்தில் மூழ்கியிருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும், உறவினர்கள், நண்பர்கள், கல்விச்சமூகத்தினர் அனைவருக்கும் எல்லாம் வல்ல பரம்பொருளின் திருவடிகளை வணங்கி நிற்பதோடு, கனடா காரை கலாச்சார மன்றம் கண்ணீர் அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கின்றது.

ஓம் சாந்தி !

கனடா காரை கலாச்சார மன்றம்

 

 

பாலசுப்பிரமணியம் மனோகரன்(மனோ) அவர்களின் மறைவு குறித்து கனடா வாழ் களபூமி நண்பர்கள் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

பாலசுப்பிரமணியம் மனோகரன்(மனோ) அவர்களின் மறைவு குறித்து விளானை சனசமூக நிலையம் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

காரைநகரில் இருந்து முதன்முதலாக கனடாவில் 1960 களின் முற்பகுதிகளில் குடியேறிய பெருமைக்குரியவரான கலாநிதி திரு. தில்லைநாதன் சிவகுமாரன் (M.Sc,Ph.D,FRSC,FCACB,DABCC,மக்மாஸ்டர் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர்) அவர்கள் திங்கட்கிழமை (18.06.2018) அன்று கனடாவில் சிவபதமடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத் தருகின்றோம்.

கலாநிதி திரு. தில்லைநாதன் சிவகுமாரன்

(M.Sc,Ph.D,FRSC,FCACB,DABCC,மக்மாஸ்டர் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர்)

(தங்கோடை, காரைநகர்) (கனடா)

காரைநகரில் இருந்து முதன்முதலாக கனடாவில் 1960 களின் முற்பகுதிகளில் குடியேறிய பெருமைக்குரியவரும், தலை சிறந்த கல்விமானும், சமயப்பற்றாளரும், கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஆரம்பகால போஷகருமான கலாநிதி திரு .தில்லைநாதன் சிவகுமாரன் அவர்கள் திங்கட்கிழமை (18.06.2018) அன்று கனடாவில் சிவபதமடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத் தருகின்றோம். அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு கனடா வாழ் காரைநகர் மக்கள் சார்பில் கனடா காரை கலாச்சார மன்றம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றது.

கனடா காரை கலாச்சார மன்றம்

சட்ட ஆலோசகராக சாதனை படைத்த முருகேசு தர்மராசா மறைவு காரைநகருக்கு பேரிழப்பாகும்

சட்ட ஆலோசகராக சாதனை படைத்த முருகேசு தர்மராசா மறைவு காரைநகருக்கு பேரிழப்பாகும்

 

காரைநகரில் பிரசித்திபெற்ற சட்டத்தரணி ஏ.வி.குலசிங்கம். நீதிபதி கே.சி.நடராசா அப்புக்காத்து சுப்பிரமணியம் போன்றர்கள் பிறந்த காரை களபூமி மண்ணில் பிறந்த முருகேசு தர்மராசா சாதனை படைத்த சட்ட ஆலோசகர் ஆவார். இவர் 31-05-2018 அன்று கொழும்பில் மறைந்தார் என்ற செய்தி அறிந்து ஆழ்ந்த கவலை அடைந்தோம். ஒரு நொத்தாரிசாக தனது சட்டத்துறை பணியை ஆரம்பித்து தமது சுயமுயற்சியால் சட்டத்துறை ஆலோசகராக உயர்வு பெற்றார். சட்டக் கல்லுரி சென்று படியாது விட்டாலும் சட்டத்துறையில் பெயர் பெற்ற திரு.கனகநாயகம், திரு.சிவஞானம், திரு.குமார் பொன்னம்பலம், திரு. கனகேஸ்வரன், நீதிபதி சி.வி.விக்னேஸ்வரன் போன்றவர்களின் நெருங்கிய தொடர்பால் உயர் நிலைபெற்ற சட்ட ஆலோசகராக விளங்கினார்.

சட்டத்துறை சட்டங்களை மனதில் வைத்து உடன் ஆலோசனை சொல்லக்கூடிய வல்லவராக விளங்கினார்.

சாதாரண மக்கள் விரும்பிச் செல்லும் சட்ட ஆலோசகராக சட்டஆலோசனைகளை மேற்கொண்டு பிரசித்தி பெற்ற சட்டத்தரணிகளினால் பாராட்டப்பட்டவர்.

இவர் காரைநகர் இந்துக்கல்லூரி பழைய மாணவர். அங்கு படிக்கும் காலத்தில் விவாத்தில் ஈடுபட்டு பாராட்டும் பெற்றவர். சட்டகல்லூரிக்கு செல்லாது சட்டத்துறையில் திறமைபெற்ற ஆலோசகராக விளங்கியது காரைநகர் இந்துக் கல்லூரிக்கும் பெருமையாகும்.

சாதாரணமக்களால் பெரிதும் விரும்பப்பட்ட சட்ட ஆலோசகர் தர்மராசா அவர்கள் ஓய்வு பெற்ற பின்னரும் துரிதமான சட்ட ஆலோசகராக செயற்பட்டார்.

தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதிலும் தமிழை வளர்ப்பதிலும் ஆர்வம் கொண்டவராக விளங்கினார். தமிழச் சங்கப் பணிகளில் ஈடுபட்டுவந்தார் தான் தேடிவைத்த நூல்களை தமிழ் சங்க நூல்நிலையத்திற்கு வழங்கி அதன் வளர்ச்சிக்கு உதவினார். தமிழச் சங்கத்தில் நடைபெறும் நூல் வெளியீட்டுவிழாக்களில் தவறாது பங்கு கொண்டு எழுத்தாளர்களுக்கு நிறைவாக அன்பளிப்பு வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தி வந்தார். தமிழ்ச் சங்கத்தில் கொண்ட பற்றினால் அடிக்கடி சங்கத்திற்கு சென்று வருவார்.

காரைநகரில் பிரசித்திபெற்ற சட்டத்தரணி ஏ.வி.குலசிங்கம் அவர்களுடன் நெருங்கிப் பழகியவர் அதனால் தமிழ்ப் பற்றாளர் சட்டத்தரணி கோடீஸ்வரன் அவர்களுடனும் நெருங்கிப்பழகும் வாய்பைப் பெற்றவர். ஒருவருடத்திற்கு முன்னர் திரு.தர்மராசாவை வெள்ளவத்தையில் அவரது இல்லத்தில் சந்தித்தபோது பிரசித்திபெற்ற சட்டத்தரணி ஏ..வி.குலசிங்கம் பற்றி ‘நான் ஒரு நூல் தயாரித்து வருகிறேன்’ என்று கூறியபோது தானும் அவர் பற்றிய தகவல்கள் திரட்டிவருவதாக ஆர்வத்துடன் குறிப்பிட்டார். பின்னர் ஒருமுறை சந்தித்த போது தனது நண்பர் இந்நூலை வெளியிடவுள்ளார் என சொன்னார் பெரும் மகிழ்சியடைந்தேன் அந்த நூலை யார் வெளியிட்டார் என்று அறிந்து கொள்வதற்கு முன் காலன் அவரை அழைத்துச் சென்று விட்டார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அந்நூலை அவர் நினைவாக வெளியிடுவோம்.

கௌரவ ஜீ..ஜீ பொன்னம்பலம் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தனது அரசியலை நடத்தவந்தவர். ஆரம்பத்திலிருந்து இறுதிவரையும் இக்கட்சியில் ஈடுபட்டு உழைத்துவந்தவர்.

 

ஐ.தி.சம்பந்தன்
களபூமி, காரைநகர்

திருமதி தர்மலிங்கம் அமுதம் (ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் மறைவு குறித்து வலந்தலை தெற்கு அ.மி .த.க பாடசாலை பழைய மாணவர்கள் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

கண்ணீர் அஞ்சலி

                       திருமதி தர்மலிங்கம் அமுதம்
                                                    (ஓய்வுபெற்ற ஆசிரியை)

தோற்றம் : 1 செப்ரெம்பர் 1929                                               மறைவு : 22 ஏப்ரல் 2018

அமுதம் ஆசிரியர் என்றவுடன் எல்லோர் நினைவுக்கும் வருவது அப்புத்துரை பள்ளிக்கூடம் என்றழைக்கப்படும் வலந்தலை தெற்கு அ.மி .த.க. பாடசாலை. ஏனென்றால் பாடசாலைக்கு அருகில் அமைந்துள்ள ஜேசு பிரான் தேவாலயமும், சற்றுத் தொலைவில் உள்ள மருதடி வீரகத்திப் பிள்ளையாரும் , கிழவன்காடு கதிர்வேலன் துணையும் கொண்டு பல்லாண்டுகள் ஆரம்பப்பள்ளி ஆசிரியப்பணியாற்றிய வள்ளலாவார்.

கல்வியின் மகத்துவத்தை, ஒழுக்கத்தின் மேன்மையை, சைவ சமய கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை, அறிவாற்றலை, தனி மனித ஆளுமையை சின்னஞ் சிறிய வயதிலே ஊட்டி வளர்த்த உத்தம தெய்வம். நிலையில்லா இவ்வுலக வாழ்க்கையில் நிலையான கல்வி செல்வத்தை மாணவரிடையே நிலை நிறுத்தியவர்.

வெண்ணிற ஆடை அணிந்து, வெள்ளையுள்ளம் கொண்டு கல்விக் கடவுளாம் சரஸ்வதி போல் காட்சி தந்து எழுத்தறிவித்த ஆசிரியத் திலகம். புலமைப் பரிசில் பரீட்சையில் சிறுவர்கள் சிறப்பாக சித்தி பெற மேலதிக மாலை வகுப்புக்கள், மாதிரி வினாத்தாள்கள் மற்றும் தொடர் பரீட்சைகள் செய்து அயராது உழைத்த அன்னையவள்.

அன்னாரின் குடும்பத்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல பரம்பொருளாகிய ஈழத்து சிதம்பராம்பிகை சமேத சுந்தரேஸ்வரப் பெருமானின் திருப்பாதங்களை வணங்கி நிற்கின்றோம்.

 

ஓம் சாந்தி ! சாந்தி !! சாந்தி!!

               பழைய மாணவர்கள்
வலந்தலை தெற்கு அ.மி .த.க பாடசாலை

கண்ணியமும் கடமை உணர்வுமிக்க பெருமகனை காரைநகர் இழந்துவிட்டது.

 

கண்ணியமும் கடமை உணர்வுமிக்க பெருமகனை காரைநகர் இழந்துவிட்டது.

காரைநகரில் வைத்திய குடும்பத்தின் புதல்வனாக நில அளவைத் திணைக்களத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற எனது மதிப்புக்குரிய சுப்பிரமணியம் குலசேகரம் அவர்கள் 13–04-2018 அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தி அறிந்து ஆழ்ந்த கவலையடைந்தோம்.

காரைநகர் இந்துக் கல்லூரியில் எமது காலத்தில் கல்வி கற்ற நண்பனை இழந்துவிட்டோம். படிக்கும்போது நற்குணம் ஓழுக்கம் மிகுந்த மாணவனாக பாராட்டப்பட்டவர். கல்லூரி அதிபர் காலநிதி ஆ.தியாகராசா அவர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட மாணவன்.

இவர் திருமணம் செய்து கொண்ட புறக்டர் கந்தையா அவர்களின் குடும்பத்துடன் நெருக்கமான ஈடுபாடு கொண்டிருந்ததனால் திரு.குலசேகரத்துடன் நெருக்கமாக பழகி வந்தகாலத்தை மறக்க முடியாது. இவரது தமையனார் வைத்தியர் இராசசேகரம் தமிழ் அரசியல் கட்சி அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்ருந்ததினால் எங்கள் உறவுகள் வலுவடைந்தன. சில வருடங்களுக்கு முன்னர் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்ற ‘ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வாவின’ நூல் வெளியீட்டு விழாவில் திரு.குலசேகரம் அவர்களைச் சந்தித்து உரையாடியது மறக்க முடியாது.

இவர் கொழும்பில் நில அளவைத் திணைக்களத்தில் பணியாற்றிய காலத்தில் கொழும்பில் செயற்பட்டுவந்த காரை அபிவிருத்திச் சபையின் பொருளாளராகவும் செற்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். காரைநகரின் முன்னேற்றத்திற்கு உழைத்த ஒரு கண்ணியமான பணியாளராக பணிபுரிந்தவர்.

நிறைவான நற்குணம் படைத்தவரையும் எனது ஊரவரையும் இழந்துவிட்டது பெரும் கவலை.

எல்லாம் எப்பவோ முடிந்த முடிவு என்ற யோகர் சுவாமிகளின் தெய்வீக வாக்கை நினைத்து அமைதியடைவோமாக.

அன்னாரை இழந்து துயருற்றிருக்கும் மனைவி, மக்கள், உற்றார், உறவினர், ஊரவர் அனைவருக்கும் ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஆன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஈழத்துச் சிதம்பர நாதனைப் பிரார்த்திப்போமாக.

ஐ.தி.சம்பந்தன்

இலண்டன்