கண்ணியமும் கடமை உணர்வுமிக்க பெருமகனை காரைநகர் இழந்துவிட்டது.

 

கண்ணியமும் கடமை உணர்வுமிக்க பெருமகனை காரைநகர் இழந்துவிட்டது.

காரைநகரில் வைத்திய குடும்பத்தின் புதல்வனாக நில அளவைத் திணைக்களத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற எனது மதிப்புக்குரிய சுப்பிரமணியம் குலசேகரம் அவர்கள் 13–04-2018 அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தி அறிந்து ஆழ்ந்த கவலையடைந்தோம்.

காரைநகர் இந்துக் கல்லூரியில் எமது காலத்தில் கல்வி கற்ற நண்பனை இழந்துவிட்டோம். படிக்கும்போது நற்குணம் ஓழுக்கம் மிகுந்த மாணவனாக பாராட்டப்பட்டவர். கல்லூரி அதிபர் காலநிதி ஆ.தியாகராசா அவர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட மாணவன்.

இவர் திருமணம் செய்து கொண்ட புறக்டர் கந்தையா அவர்களின் குடும்பத்துடன் நெருக்கமான ஈடுபாடு கொண்டிருந்ததனால் திரு.குலசேகரத்துடன் நெருக்கமாக பழகி வந்தகாலத்தை மறக்க முடியாது. இவரது தமையனார் வைத்தியர் இராசசேகரம் தமிழ் அரசியல் கட்சி அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்ருந்ததினால் எங்கள் உறவுகள் வலுவடைந்தன. சில வருடங்களுக்கு முன்னர் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்ற ‘ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வாவின’ நூல் வெளியீட்டு விழாவில் திரு.குலசேகரம் அவர்களைச் சந்தித்து உரையாடியது மறக்க முடியாது.

இவர் கொழும்பில் நில அளவைத் திணைக்களத்தில் பணியாற்றிய காலத்தில் கொழும்பில் செயற்பட்டுவந்த காரை அபிவிருத்திச் சபையின் பொருளாளராகவும் செற்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். காரைநகரின் முன்னேற்றத்திற்கு உழைத்த ஒரு கண்ணியமான பணியாளராக பணிபுரிந்தவர்.

நிறைவான நற்குணம் படைத்தவரையும் எனது ஊரவரையும் இழந்துவிட்டது பெரும் கவலை.

எல்லாம் எப்பவோ முடிந்த முடிவு என்ற யோகர் சுவாமிகளின் தெய்வீக வாக்கை நினைத்து அமைதியடைவோமாக.

அன்னாரை இழந்து துயருற்றிருக்கும் மனைவி, மக்கள், உற்றார், உறவினர், ஊரவர் அனைவருக்கும் ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஆன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஈழத்துச் சிதம்பர நாதனைப் பிரார்த்திப்போமாக.

ஐ.தி.சம்பந்தன்

இலண்டன்