திருமதி தர்மலிங்கம் அமுதம் (ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் மறைவு குறித்து வலந்தலை தெற்கு அ.மி .த.க பாடசாலை பழைய மாணவர்கள் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

கண்ணீர் அஞ்சலி

                       திருமதி தர்மலிங்கம் அமுதம்
                                                    (ஓய்வுபெற்ற ஆசிரியை)

தோற்றம் : 1 செப்ரெம்பர் 1929                                               மறைவு : 22 ஏப்ரல் 2018

அமுதம் ஆசிரியர் என்றவுடன் எல்லோர் நினைவுக்கும் வருவது அப்புத்துரை பள்ளிக்கூடம் என்றழைக்கப்படும் வலந்தலை தெற்கு அ.மி .த.க. பாடசாலை. ஏனென்றால் பாடசாலைக்கு அருகில் அமைந்துள்ள ஜேசு பிரான் தேவாலயமும், சற்றுத் தொலைவில் உள்ள மருதடி வீரகத்திப் பிள்ளையாரும் , கிழவன்காடு கதிர்வேலன் துணையும் கொண்டு பல்லாண்டுகள் ஆரம்பப்பள்ளி ஆசிரியப்பணியாற்றிய வள்ளலாவார்.

கல்வியின் மகத்துவத்தை, ஒழுக்கத்தின் மேன்மையை, சைவ சமய கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை, அறிவாற்றலை, தனி மனித ஆளுமையை சின்னஞ் சிறிய வயதிலே ஊட்டி வளர்த்த உத்தம தெய்வம். நிலையில்லா இவ்வுலக வாழ்க்கையில் நிலையான கல்வி செல்வத்தை மாணவரிடையே நிலை நிறுத்தியவர்.

வெண்ணிற ஆடை அணிந்து, வெள்ளையுள்ளம் கொண்டு கல்விக் கடவுளாம் சரஸ்வதி போல் காட்சி தந்து எழுத்தறிவித்த ஆசிரியத் திலகம். புலமைப் பரிசில் பரீட்சையில் சிறுவர்கள் சிறப்பாக சித்தி பெற மேலதிக மாலை வகுப்புக்கள், மாதிரி வினாத்தாள்கள் மற்றும் தொடர் பரீட்சைகள் செய்து அயராது உழைத்த அன்னையவள்.

அன்னாரின் குடும்பத்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல பரம்பொருளாகிய ஈழத்து சிதம்பராம்பிகை சமேத சுந்தரேஸ்வரப் பெருமானின் திருப்பாதங்களை வணங்கி நிற்கின்றோம்.

 

ஓம் சாந்தி ! சாந்தி !! சாந்தி!!

               பழைய மாணவர்கள்
வலந்தலை தெற்கு அ.மி .த.க பாடசாலை