Category: Google Photos

யாழ்ற்ரன் கல்லூரியின் (கோவிந்தர் பாடசாலை) புதிதாகச் சேருகின்ற தரம் 1 மாணவர்களுக்கான கால்கோள் விழா

யாழ்ற்ரன் கல்லூரியின் புதிதாகச் சேருகின்ற தரம் 1 மாணவர்களுக்கான கால்கோள் விழா கல்லூரியின் ஆரம்பப் பிரிவில்(கோவிந்தர் பாடசாலை) 19-01-2015 அன்று மு.ப. 9 மணிக்கு கல்லூரி அதிபர் வே. முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் ஆரம்பப்பிரிவு மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதம விருந்தினராக கல்லூரியின் ஒய்வுபெற்ற ஆரம்பப்பிரிவு தலைவர் செல்வி. சகுந்தலாதேவி நடராசா அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

மணற்காடு அம்மன் கா்மாரம்பம் 2ம் நாள் 27.01.2015

காரைநகர் பயிரிக்கூடல் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் வருடாந்த மகோற்சவம் 25.01.2015 ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

காரைநகர் பயிரிக்கூடல் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் வருடாந்த மகோற்சவம்  25.01.2015 ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
பத்தத் தினங்கள் இடம்பெறும் இந்த உற்சவத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை தேர்த் திருவிழாவும் செவ்வாய்க்கிழமை தீர்த்தத் திருவிழாவும் இடம்பெற உள்ளது.

 

காரைநகா் மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தான மஹா கும்பாபிஷேகம் நேரலையாக காண்பிக்கப்படும்.

காரைநகா் மணற்காடு அருள்மிகு கும்பநாயகி  ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தான மஹா கும்பாபிஷேக பெருவிழா நிகழ்வுகளை 30.01.2015 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி முதல் 02.02.2015 திங்கட்கிழமை இரவு 11.00 மணி வரை (இலங்கை நேரம்) உலகெங்கும் பரந்து வாழும் அம்பிகை அடியவா்கள் நேரடியாக பார்த்து மகிழலாம்.
 

2222 DSC_0426 DSC_0438 DSC_0458

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய புனராவர்த்தன மகா கும்பாபிஷேக காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

இன்று வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்ற காரைநகர் பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய புனராவர்த்தன மகா கும்பாபிஷேக காட்சிகள்

காரைநகர் பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய புனராவர்த்தன மகா கும்பாபிஷேகம் ஆரம்பக் கிரியைகளில் திங்கட்கிழமை இடம்பெற்ற காட்சிகளைப் படங்களில் காணலாம்.

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் 22.01.2015 நேரடி ஒலிபரப்பு இவ்விணையத்தளத்தி எடுத்து வரப்படும்..!

palavodai amman kovil

காரைநகர் பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக ஆரம்பக் கிரியைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பமானது.

 

காரைநகர் பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக ஆரம்பக் கிரியைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பமானது.

இந்தக் கிரியைகளைத் தொடர்ந்து 22ம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 9.59 மணியளவில் மகா கும்பாபிஷேகம் இடம்பெற உள்ளது.

படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான மஹா கும்பாபிஷேகம்

new

காரைக் கதம்பம் 2015

karaikathambam_2015_-_flyer

காரைநகர் அபிவிருத்திச் சபை மாணவர் நூலகத்தில் தைப்பொங்கல் திருநாளான இன்று வியாழக்கிழமை காலை பொங்கல் விழா மிக எளிமையாக இடம்பெற்றது.

காரைநகர் அபிவிருத்திச் சபை மாணவர் நூலகத்தில் தைப்பொங்கல் திருநாளான இன்று வியாழக்கிழமை காலை பொங்கல் விழா மிக எளிமையாக இடம்பெற்றது.

நூலகப் பணியாளர்கள் சபை உறுப்பினர்களுடன் லண்டனிலிருந்து வருகைதந்திருந்த இ.சிவசுப்பிரமணியம் அவர்களும் பொங்கல் நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்.  

கனடா காரை கலாச்சார மன்றத்தின் இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்

pongal

கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும் பொங்கல் விழா

7

கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தன்று பொங்கல் விழா நடத்தப்பட இருக்கின்றன.

இடம்: ஆதி அருள் நெறி மன்றம், 2191 Warden Ave (Warden & Sheppard)
 
நேரம்: புதன்கிழமை, (14-01-2015) மாலை 6:30 மணி
 
 
தொடர்புகளுக்கு:
 
கனடா-காரை கலாச்சார மன்றம்
மின்னஞ்சல்: karainagar@gmail.com
தொலைபேசி: (416) 642-4912

 

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் ஆருத்திரா தரிசனம் 2015 வரவு செலவு அறிக்கை, அனுசரணை வழங்கியவர்களின் பெயர் விபரங்கள்.

CKCA Web 1 post0001ckca web post0001

காரைநகர் ஈழத்துச்சிதம்பரம் சிவன் கோவில் மணிவாசகர் சபையின் விழாவில் எடுக்கப்பட்ட காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

காரைநகா் மணற்காடு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 02.02.2015 கோலாகலமாக நடைபெறவுள்ளது.

காரைநகா் மணற்காடு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 02.02.2015 கோலாகலமாக நடைபெறவுள்ளது. ஆலயத்தின் திருப்பணி வேலைகள் நிறைவுபெறும் தறுவாயில் உள்ளது. உலகெங்கும் பரந்து வாழும் அம்பிகையின் அடியவா்கள் கும்பாபிஷேக நிகழ்விற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறும் கும்பாபிஷேக நிகழ்வை சிறப்புற நடாத்தவும் திருப்பணி வேலைகளை முடிவுறுத்தவும் அடியவா்கள் வாரிவழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றனா் ஆலய திருப்பணிச்சபையினா்.

தற்போதய ஆலயத்தோற்றத்தினையும் வேலைகள் நடைபெறுவதனையும்  படங்களில் காணலாம்.

DSC_0110

 

05.01.2015 திங்கள்கிழமை நடைபெற்ற ஈழத்து சிதம்பரம் திருவாதிரை ஆருத்திரா தரிசன காட்சிகளைப் படங்களில் காணலாம்.

05.01.2015 திங்கள்கிழமை நடைபெற்ற ஈழத்து சிதம்பரம் திருவாதிரை உற்சவ 10ம் நாள் தீர்த்தோற்சவ காவடிகள் காட்சிகளைப் படங்களில் காணலாம்.

காரைநகர் ஈழத்துச்சிதம்பரம் சிவன் கோவில் ஆருத்திரா தரிசனம் திருவிழாவில் எடுக்கப்பட்ட காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

காரைநகர் ஈழத்துச்சிதம்பரம் சிவன் கோவில் திருவெம்பாவை தேர்த்திருவிழாவில் எடுக்கப்பட்ட காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

வரலாற்றுச் சிறப்புமிக்க காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் மார்கழித் திருவாதிரை உற்சவ பஞ்சரதபவனி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பல்லாயிரக்கணக்காண பத்தர்களின் அரோகராக் கோசத்துடன் இடம்பெற்றது. இடம்பெற்ற பஞ்சரத பவனிக் காட்சிகளைப் படங்களில் காணலாம்.

கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா எதிர்வரும் 04ஆம் திகதி(04.01.2015) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு நடராசப் பெருமானுக்கு ஆதிரை அபிசேகம் தொடங்கி நடைபெறும்.

aruthra-2014

ஈழத்துச் சிதம்பரத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற 8ம் திருவிழா காட்சிகள்.

காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் திருவெம்பாவைத் தேர்த்திருவிழா காலம்: 04.01.2015 ஞாயிற்றுக்கிழமை இலங்கை நேரம் காலை 7:00, ஆருத்ரா தரிசனம் 04.01.2015 ஞாயிற்றுக்கிழமை இலங்கை நேரம் இரவு 11.00 முதல் நேரடியாகக் காணலாம்.

DSC_0099 (Copy)

 

காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் திருவெம்பாவைத் தேர்த்திருவிழா

காலம்: 04.01.2015 ஞாயிற்றுக்கிழமை  இலங்கை நேரம் காலை 7:00

முதல் நேரடியாகக் காணலாம். 

 

காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் ஆருத்ரா தரிசனம் 04.01.2015

ஞாயிற்றுக்கிழமை இலங்கை நேரம் இரவு 11.00

முதல் நேரடியாகக் காணலாம். 

திருவாதிரைத் திருவிழாவில் இன்னிசைக் கச்சேரி

classical music

கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா Richmond Hill  பிள்ளையார் கோயிலில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(04.01.2015) அன்று அதிகாலை 4.30 மணிக்கு நடராசப் பெருமானுக்கு ஆதிரை அபிசேகம் தொடங்கி நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து காலை 6:00 மணிக்கு காரைநகரைச் சேர்ந்த சிறார்களின் இன்னிசைக் கச்சேரி இடம்பெறும் 

பாட்டு: திரு.கார்த்திக் ராமலிங்கம் அவர்களின் மாணவி செல்வி ராகவி மனோராகவன்
 
மிருதங்கம்: மிருதங்க வித்துவான் கௌரிசங்கர் அவர்களின் மாணவன் செல்வன் கபிலன் சச்சிதானந்தன்

ஈழத்துச் சிதம்பரத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 7ம் திருவிழா காட்சிகள்.

ஈழத்துச் சிதம்பரத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற 6ம் திருவிழா காட்சிகள்.

ஈழத்துச் சிதம்பரத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற 5ம் திருவிழா காட்சிகள்.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் 2015 இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

new_year_2015