Category: Google Photos

காரைநகர் கருங்காலி போசுட்டி முருகமூர்த்தி கோயில் கொடியேற்ற காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

75ஆவது ஆண்டு பவளவிழா உறியடி வைபவம் 2015 காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

DSC01695 (Copy)

காரைநகர் கிழவன்காடு கதிர்வேலாயுத சுவாமி கோவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணியளவில் எம்பெருமானுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று சாத்துப்படி ஊர்வலமாக 4.00 மணியளவில் சிதம்பராமூர்த்தி கேணியடி வைரவர் கோவிலுக்கு எடுத்துவரப்பட்டு வைரவருக்கு விஷேட பூசைகள் இடம்பெற்று வெற்றிநாதன் அரங்கின் முன்பாக உறியடி வைபவம் இடம்பெற்றது. அத்தருணம் ஈழத்தின் தலைசிறந்த நாதஸ்வர தவில் வித்துவான்கள் நாதகான மழை பொழிந்தனர்.

காரைநகர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டுப்போட்டி 18.04.2015 சனிக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு பிரதேச விளையாட்டு மைதானத்தில் பிரதேச செயலர் திருமதி தே.பாபு தலைமையில் நடைபெற்றது.

விருந்தினர்கள் யாழ்ற்ரன் கல்லூரி மாணவர்களின் பாண்வாத்திய அணிவகுப்புடன் அழைத்துவரப்பட்டனர்.

இந்நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக மகளீர் விவகாரப் பிரதி அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரனும் சிறப்பு விருந்தினராக யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகனும்; கலந்துகொண்டனர்.

நிகழ்வில் காரைநகர் கோவளத்தைச் சேர்ந்த அமரர் சுப்பிரமணியம் ஞாபகார்த்தமாக சுவிஸ் நாட்டில் வதியும் சுப்பிரமணியம் கதிர்காமநாதனால் வெற்றிக்கேடயங்கள் வழங்கப்பட்டன.

காரைநகா் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் புதுவருட தினத்தன்று விஷேட அபிஷேகம் தொழிலதிபா் எஸ்.ரி.பரமேஸ்வரன் உபயத்தில் நடைபெற்றது. அன்றைய தினம் பாடசாலை மாணவா்களுக்கு கற்றல் உபகரணங்களும் வறிய நிலையிலுள்ளவா்களுக்கு உடுபுடவைகளும் அவரால் வழங்கப்பட்டது. அன்றைய அபிகே நிகழ்வில் பெருந்திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தீவக வலய மட்டத்திலான 2014 ஆம் ஆண்டுக்கான விஞ்ஞான ஆய்வுகூடப் போட்டியில் யாழ்ற்ரன் கல்லூரி Best Laboratory Award விருதினைப் பெற்றுக் கொண்டது

தீவக வலயத்திலுள்ள இடைநிலைப் பாடசாலைகளிலுள்ள (தரம் 6-13) விஞ்ஞான ஆய்வுகூடங்களை சிறந்த முறையில் பேணும் பாடசாலைகள் 10 இனை தீவக வலயக் கல்விப்பணிமனை தெரிவு செய்துள்ளது.

அப்பாடசாலைகளில் யாழ்ற்ரன் கல்லூரியும் சிறந்த முறையில் விஞ்ஞான ஆய்வு கூடத்தினை பேணுவதற்கும் மாணவர்கள் சிறந்த முறையில் அதனைப் பயன்படுத்துவதற்குமான Best Laboratory Award விருதினை (2014 ஆம் ஆண்டுக்கான) பெற்றுக்கொண்டது.

V. Murugamoorthy

Principal

Yarlton College

Award

 

சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாசாலை பாடசாலை நிர்வாகம் கனடா காரை கலாசார மன்றத்திற்கு புகழாரம்!

mail

காரைநகர் வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயத்தில் சித்திரைப்புத்தாண்டு தினமான 14.04.2015 செவ்வாய்க்கிழமை தேர்த்திருவிழா இடம்பெற்றது. விநாயகப்பெருமான் தேருக்கு எழுந்தருளுவதனையும் தேரில் ஆரோகணித்து அடியார்களுக்கு அருட்காட்சி வழங்குவதனையும் காணொளிப் பதிவினை இங்கே காணலாம்

PART-1

PART-2

PART-3

கனடா காரை கலாச்சார மன்றத்தின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

new_year_ckca_copy

காரைநகர் வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயத்தில் சித்திரைப்புத்தாண்டு தினமான இன்று செவ்வாய்க்கிழமை தேர்த்திருவிழா இடம்பெற்றது.

விநாயகப்பெருமான் தேருக்கு எழுந்தருளுவதனையும் தேரில் ஆரோகணித்து அடியார்களுக்கு அருட்காட்சி வழங்குவதனையும் படங்களில் காணலாம்.

அமரர் திருமதி பரமேஸ்வரி கனகரத்தினம் அவர்களின் நன்றிநவிலல்

Nantrinavel0001

காரைநகர் சிவன் கோவில் கடந்த சனிக்கிழமை (04.04.2015) இடம்பெற்ற திருக்கல்யாண உற்சவம்

காரைநகர் சிவன் கோவில் இன்று வெள்ளிக்கிழமை (03.04.2015) காலை இடம்பெற்ற நடேசர் உற்சவம் மற்றும் பகல் இடம்பெற்ற தீர்த்தத் திருவிழாக் காட்சிகள்.

காரைநகர் சிவன் கோவில் இன்று வியாழக்கிழமை (02.04.2015) இடம்பெற்ற தேர்த்திருவிழாக் காட்சிகள்.

பல நூற்றுக்கணக்கான அடியவர்களின் அரோகராக் கோசத்துன் சோமாஸ்கந்தப் பெருமான் தனது பரிவாரமூர்த்திகளுடன் மாமணிவீதியாம் மூன்றாம் வீதியில் தேரில் உலாவந்து அடியார்களுக்கு அருட்காட்சி வழங்கினார்.

நடராஜப்பெருமானது புதிய சிற்பத்தேர் திருத்தவேலை காரணமாக இம்முறை ஓடாத காரணத்தால் சோமாஸ்கந்தர் அம்பாளின் தேரிலே வலம்வந்தமை குறிப்பிடத்தக்கது.

காரைநகர் சிவன் கோவிலில் இன்று புதன்கிழமை (01.04.2015) இடம்பெற்ற எட்டாம் நாள் சப்பறத்திருவிழாக் காட்சிகள்.

பெருந்திரளான பத்தர்கள் மத்தியில் வாணவேடிக்கைகள் முழங்க மூன்றாம் வீதியில் சுந்தரேஸ்வரப்பெருமான் தனத பரிவாரமூர்த்திகளுடன் சப்பறத்தில்  உலா வந்தது அடியார்களுக்கு அருட்காட்சி வழங்கினார்

.இரவு 7.00 மணிக்கு ஆரம்பமான வசந்தமண்டபப் பூசையையடுத்து இரவு 8.00 மணிக்கு சப்பறத்தில் ஆரோகனித்த சுந்தரேஸ்வரர் இரவு 11.00 மணியனவில் தனது இருப்பிடம் வந்தார்.

காரைநகர் சிவன் கோவில் இன்று செவ்வாய்க்கிழமை (31.03.2015) இடம்பெற்ற வேட்டைத்திருவிழா இரவுக் காட்சிகள்

காரைநகர் சிவன் கோவில் இன்று திங்கட்கிழமை (30.03.2015) இடம்பெற்ற ஆறாம் திருவிழா இரவுக் காட்சிகள்

காரைநகர் சிவன் கோவில் ஜந்தாம் திருவிழா இரவுக் காட்சிகள்

காரைநகர் சிவன் கோவிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (29.03.2015) இடம்பெற்ற ஜந்தாம் நாள் திருவிழா பகல் காட்சிகள்.

ஆலயத்திற்கு வருகைதந்த திருவெண்ணாமலை திருப்பனந்தாள் ஆதீன சுவாமிகள் சுவாமி தரிசனம் செய்ததுடன் மாணிக்கவாசகர் மடாலயத்திற்கு எழுந்தருளி மகேஸ்வர பூசையில் கலந்துகொண்டதுடன் அடியார்களுக்கும் அருளாசி வழங்கி ஈழத்துச் சிதம்பரத்தில் தாம் கண்ட பெருமைகளையும் எடுத்துக்கூறினார்.இங்கு அமைக்கப்பட்டுள்ள நடராஜரின் 108 தாண்டவங்கள் வேறு எங்கும் இல்லாதவாறு அற்புதமாக அமைக்கப்பட்டள்ளதுடன்,நடராஜர் திருவுருவமும் மிகவும் அற்புதமாக உள்ளது என்றார்.

ஈழத்துச் சிதம்பர மகேஸ்வரன் அறப்பணி நிலையம்,மாணிக்கவாசகர் மடாலயம் என்பவற்றில் அன்னதானமும் தினமும் சிறப்பாக வழங்கப்பட்டு வருகின்றது.

காரைநகர் சிவன் கோவிலில் எதிர்வரும் புதன்கிழமை 01.04.2015) இடம்பெற உள்ளது விநாயகப்பெருமானுக்காக புதிதாக அமைக்கப்பட்ட தேர்வெள்ளோட்ட விழா

1

காரைநகர் சிவன் கோவிலில் நேற்று சனிக்கிழமை (28.03.2015) இடம்பெற்ற நான்காம் திருவிழா கைலாசவாகனத் திருவிழா இரவுக் காட்சிகள்.

காரைநகர் வெடியரசன் இலவசக் கல்வி நிலையம் புதிய மண்டபத் திறப்பு விழா 05.03.2015 திறந்து வைக்கப்பட்டுள்ளது.காணொளிப் பதிவினை இங்கே காணலாம்

காரைநகர் சிவன் கோவிலில் இன்று வெள்ளிக்கிழமை (27.03.2015) இடம்பெற்ற மூன்றாம் திருவிழா இரவுக் காட்சிகள்.

காரைநகர் ஈழத்துச் சிதம்பர வருடாந்த பெருந்திருவிழா இன்று 26ம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற இரண்டாம் திருவிழா இரவுக்காட்சிகள்

காரைநகர் மணற்காடு முத்துமாரியம்மன் கோவில் சங்காபிசேகம் காணொளிப் பதிவினை இங்கே காணலாம்

மரண அறிவித்தல், மெய்யப்பா பத்தர் சிவசுப்பிரமணியம் (ஐயாத்தம்பி) உரிமையாளர் – பாரத் ஸ்ரூடியோ

Appa death_notices (1)0001

காரைநகா் மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 48வது நாள் 21.03.2015 சனிக்கிழமை மண்டல பூா்த்தி விழா இரவு நிகழ்வுகள்

காரைநகா் மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 46வது 47வது நாள் மண்டலாபிஷேக பூா்த்தியினை முன்னிட்டு 1008 கலசாபிஷேகத்திற்கான முன்னோடி நிகழ்வுகளை காணலாம்.

மணற்காடு முத்துமாரி அம்மன் 12ஆம் உபயம் மாலை நிகழ்வுகள்

மணற்காடு முத்துமாரி அம்மன் 12ஆம் உபயம் காலை நிகழ்வுகள்

காரைநகர் மணற்காடு கும்பநாயகி முத்துமாரி அம்மன் கோயில் சங்காபிஷேகம் நேரடி ஒளிபரப்பு

DSC_0372

 

இலங்கை நேரம்: சனிக்கிழமை(21.03.2015) காலை 6:00 மணி முதல்
கனடா நேரம்:  வெள்ளிக்கிழமை (20.03.2015) இரவு 8:30 முதல்

மேற்படி நேரலை ஒளிபரப்பு இவ்விணையத்தளத்தில் எடுத்து வரப்படும். 
உலகெங்கும் பரந்து வாழும் அம்பிகை அடியார்கள் சங்காபிஷேக காட்சிகளைப் பார்த்து அம்பிகை அருள் பெற்று இன்புறலாம் என்பதனை அறியத்தருகின்றோம்.