Tag: காரைச் செய்திகள்

காரைநகர் திருவருள்மிகு வியாவில் ஐயனார் தேவஸ்தானம் மகரஜோதிப் பெருவிழா! (25.12.2022)

காரைநகர் தோப்புக்காடு மறைஞான சம்பந்த வித்தியாசாலை அதிபர் திருமதி மங்களேஸ்வரி தேவராசா அவர்களின் சேவைநலன் பாராட்டு விழா அழைப்பிதழ்! (21.12.2022)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Sevai nalan paarattu

கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரணையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் காரைநகர் கோட்டப் பாடசாலைகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான 2ம் கட்ட வழிகாட்டல் செயலமர்வு 26.11.2022 சனிக்கிழமை இடம்பெற்றது.

 

கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரணையுடன்

காரைநகர் அபிவிருத்திச் சபையினால்

காரைநகர் கோட்டப் பாடசாலைகளில்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான

2ம் கட்ட வழிகாட்டல் செயலமர்வு 26.11.2022 சனிக்கிழமை இடம்பெற்றது.

காரைநகர் சுப்பிரமணிய வித்தியாலயத்தில் காரைநகர் வலந்தலை தெற்கு அமி.த.க. பாடசாலை அதிபர் க.நேத்திரானந்தன் தலைமையில் ஆரம்பமான இந்தச் செயலமர்வில் யாழ் பிரபல பாடசாலை ஆசிரியர்களினால் கற்பித்தல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் வழிகாட்டல் குறிப்புக்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இவ்வாண்டு டிசெம்பர் மாதம் 18ம் திகதி இடம்பெற உள்ள இந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்ற உள்ள காரைநகர் கோட்ட பாடசாலை மாணவர்கள் 145 பேரில் 135 மாணவர்கள் இந்த வழிகாட்டல் செயலமர்வில் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

இந்தச் செயலமர்வில் கலந்துகொண்ட அனைத்துப் பிள்ளைகளுக்கும் இரு தடவைகள் சிற்றுண்டி வழங்கப்பட்டதுடன் காலை 8.30 மணிதொடக்கம் பிற்பகல் 2.30 மணிவரை இந்தச் செயலமர்வு இடம்பெற்றது. முதலாம் கட்ட செயலமர்வு 20.11.2022 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

காரை கலாசார கனடா மன்றத்தின் அனுசரணையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் காரைநகர் கோட்டப் பாடசாலைகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான 1ம் கட்ட வழிகாட்டல் செயலமர்வு 20.11.2022 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

 

 

காரை கலாசார கனடா மன்றத்தின் அனுசரணையுடன்

காரைநகர் அபிவிருத்திச் சபையினால்

காரைநகர் கோட்டப் பாடசாலைகளில்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான

1ம் கட்ட வழிகாட்டல் செயலமர்வு 20.11.2022 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

காரைநகர் சுப்பிரமணிய வித்தியாலயத்தில் காரைநகர் வலந்தலை தெற்கு அமி.த.க. பாடசாலை அதிபர் க.நேத்திரானந்தன் தலைமையில் ஆரம்பமான இந்தச் செயலமர்வில் யாழ் பிரபல பாடசாலை ஆசிரியர்களினால் கற்பித்தல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் வழிகாட்டல் குறிப்புக்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இவ்வாண்டு டிசெம்பர் மாதம் 18ம் திகதி இடம்பெற உள்ள இந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்ற உள்ள காரைநகர் கோட்ட பாடசாலை மாணவர்கள் 145 பேரில் 117 மாணவர்கள் இந்த வழிகாட்டல் செயலமர்வில் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

இந்த செயலமர்வில் ஆயிலி சிவஞாணோதயா வித்தியாலய அதிபர் இ.வசீகரன் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் காரைநகர் அபிவிருத்திச் சபை செயலாளர். பொருளாளர் உள்ளிட்ட சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

2ம் கட்டச் செயலமர்வு எதிர்வரும் சனிக்கிழமை (26.11.2022) காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலையில் இடம்பெற உள்ளது. இந்தச் செயலமர்வில் கலந்துகொண்ட அனைத்துப் பிள்ளைகளுக்கும் இரு தடவைகள் சிற்றுண்டி வழங்கப்பட்டதுடன் காலை 8.30 மணிதொடக்கம் பிற்பகல் 2.30 மணிவரை இந்தச் செயலமர்வு இடம்பெற்றது.

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையின் அனுசரணையில் க.பொ.த சாதாரணப் பரீட்சையின் ஆங்கில பாடத்திட்டத்திற்கான பயிற்சிநெறி வகுப்புக்கள்.

 

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையின் அனுசரணையில் க.பொ.த சாதாரணப் பரீட்சையின் ஆங்கில பாடத்திட்டத்திற்கான பயிற்சிநெறி வகுப்புக்கள்.

சிவமயம்

 

குஞ்சி யழகுங் கொடுத்தானை கோட்டழகும்

மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து

நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்

கல்வி அழகே அழகு

-நாலடியார்

 

எமது சபை மாணாக்கரின் தொழில்சார் நிபுணத்துவம், மொழித்திறன், கலை, கல்வி, விளையாட்டுத்துறை போன்ற விடயங்களை மேம்படுத்தும் முகமாகக் கலை, கல்வி, மற்றும் மொழி மேம்பாட்டுக் குழு ஒன்றினை உருவாக்கி ஊக்கமளித்து வருகின்றது. காரைநகர் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் நலன்விரும்பிகளது வேண்டுகோளுக்கிணங்க வருகின்ற வருடம் பங்குனிமாதம் 2023ஆம் ஆண்டு  நடைபெற இருக்கின்ற பதினொராம் ஆண்டு மாணவருக்கான க.பொ.த சாதாரணப் பரீட்சையின் ஆங்கில பாடத்திட்டத்திற்கான பயிற்சிநெறி வகுப்புக்கள் யாழ் மாவட்ட கல்விவலய ஆங்கிலப்பாடத்திற்கான பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு. கோ. சுப்பிரமணியம் அவர்களால் 12.11.2022 சனிக்கிழமை  யாழ்ற்றன் கல்லூரயில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

காரைநகர் யாழ்ற்றன் கல்லூரி,வியாவில் சைவமகா வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்கள் ஆங்கில பாடத்திட்டத்திற்கான பயிற்சிநெறி வகுப்பில் கலந்து சிறப்பித்திருந்தார்கள். காரை இந்துக்கல்லூரி, சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்களுக்கான ஆங்கில பாடத்திட்டத்திற்கான பயிற்சிநெறி வகுப்புக்கள் பிரிதொரு திகதியில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.

மாணவரின் ஆளுமை விருத்தியே காரைநகரின் வளர்ச்சியின் ஆதாரம் என்பதால் ஆங்கில மொழிப் பயிற்சி தொடர்பாக முன்முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என கலாநிதி திருமதி. வீரமங்கை ஸ்ராலினா யோகரத்தினம் சிரேஷ்ட ஆங்கில விரிவுரையாளர் மொழியியற் துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், மானிப்பாய் இந்து மகளிர் கல்லூரி ஆசிரியர் விஜயரத்தினம் பிரேமதாஸ் குமாரஸ்ரீ அவர்களும் கருத்துரை வழங்கியிருந்தார்கள். இறுதியாக மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கி ஆங்கில பாடத்திட்டத்திற்கான பயிற்சிநெறி இனிதே நிறைவு பெற்றது. இந் நிகழ்வுக்கு உதவிபுரிந்த நிறைந்த உள்ளங்கள் அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

நிழற்படங்களை கீழே காணலாம்.

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

இங்ஙனம்

                சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

               செயற்குழு உறுப்பினர்கள்

  மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்

13.11.2022

 

காரைநகர் கிழவன்காடு கலாமன்றத்தின் பரிசளிப்பும் கலைநிகழ்வும் 16.10.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் நடைபெற்றது!

 

படங்களை பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

 

https://photos.app.goo.gl/TF11ZksiTNBtdkqb8

காரைநகர் மாப்பாணவூரி அருள் மிகு நாச்சி அம்மன் ஆலயத்தில் 07.10.2022 வெள்ளிக்கிழமை நடைபெற்ற மணிமண்டப கலசாபிஷேகமும் 108 சங்காபிஷேகம்!

புகைப்படங்களை பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

 

https://photos.app.goo.gl/oBy9XR3c1nKacoXc7

 

 

காரைநகர் மாப்பாணவூரி அருள் மிகு நாச்சி அம்மன் ஆலயத்தில் 07.10.2022 வெள்ளிக்கிழமை நடைபெற்ற மணிமண்டப கலசாபிஷேகமும் 108 சங்காபிஷேகம் காணொளி!

வெகு சிறப்பாக நடைபெற்ற மாணவர்கள் கௌரவிப்பும், தொழில் வழிகாட்டலும்

வெகு சிறப்பாக  நடைபெற்ற  மாணவர்கள் கௌரவிப்பும்,

தொழில் வழிகாட்டலும்

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் அதன் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவினரின் ஒழுங்கமைப்புடன் மாணவர்களின் ஆளுமைத்திறன்களை வளர்க்கும்  “தியாகத்திறன் வேள்வி”-2022   செயற்திட்டத்தின்கீழ் கடந்த 2021ஆண்டு க.பொ.த உயர்தரப்பரீட்சையில் தோற்றி சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களையும் மற்றும் தொழிற்கல்விக்கான சந்தர்பங்களை வழங்கும் திறந்த பல்கலைக்கழகம்,தொழில்நுட்ப கல்லூரிகள் ஏனைய உயர் கல்வி நிறுவனங்களில் தமது தொழில் கல்வியை மேற்கொள்ள இருக்கும் மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு 11.09.2022 ஞாயிற்றுக்கிழமை காரைநகர் இந்துக்கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

காரைநகர் மடத்துக்கரை அம்மன் கோவில் பிரதமகுரு அவர்களால் சரஸ்வதி பூசை வழிபாடுகளுடனும், தேவாரத்துடனும்  காலை 9.15மணிக்கு ஆரம்பமாகிய விழாவில் முன்னாள்  மாகாணகல்விப் பணிப்பாளர்                திரு.ப.விக்கினேஸ்வரன், ஆணையாளர் நிலஅளவைத் வடமாகாணம்            திரு அ. சோதிநாதன், ஓய்வு பெற்ற அதிபர் யாழ்ற்ரன் கல்லூரி                             திரு. வே. முருகமூர்த்தி, இந்துக்கல்லூரி அதிபர் அ. ஜெகதீஸ்வரன், யாழ்ற்றன் கல்லூரி அதிபர் தி. மதிவதனன், தவிசாளர், பிரதேச சபை,                                          திரு. க. பாலச்சந்திரன், ஆகியோரால் மங்களவிளக்கினை ஏற்றியும் அதனைத்தொடர்ந்து ஒலிநடாவில் சுவிஸ் காரைஅபிவிருத்திச்சபையின் மன்றக்கீதம் இசைத்தும் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

காரைநகரின் இருபெரும் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்களின் ஓத்துழைப்புடனும் யாழ்ற்றன் கல்லூரி அதிபர் தி. மதிவதனன் தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக காரைநகர் இந்துக்கல்லூரி அதிபர் அ. ஜெகதீஸ்வரன், தவிசாளர், பிரதேச சபை,      திரு. க. பாலச்சந்திரன்,    ஓய்வு பெற்ற அதிபர் யாழ்ற்ரன் கல்லூரி திரு. வே. முருகமூர்த்தி, ஆணையாளர் நிலஅளவைத் திணைக்களம்,வடமாகாணம் திரு அ. சோதிநாதன், ஓய்வு பெற்ற பிரதிச்செயலாளர் மாகாணகல்விப்பணிப்பாளர் திரு. ப. விக்கினேஸ்வரன் சமாதான நீதவான் ஆசிரியர் யாழ்ற்ரன் கல்லூரி சி.கிருபாகரன், ஆசிரியர் தொழில்நுட்ப கல்லூரி வி. பிரேம்தாஸ்குமாரஸ்ரீ ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தார்கள். ஆகியோர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வில் வரவேற்புரையினையும், தலைமையுரையினையும் யாழ்ற்றன் கல்லூரி அதிபர் தி. மதிவதனன்  அவர்களும்,அறிமுக உரையினை முன்னாள் மாகாணகல்விப்பணிப்பாளர் திரு. ப. விக்கினேஸ்வரன் அவர்களும், விழாவின் பிரதமவிருந்தினர் நிலஅளவைத் திணைக்களம், வடமாகாணம் திருஅ.சோதிநாதன் அவர்களும் உரையாற்றியிருந்தார்கள். அதனைத்தொடர்ந்து மாணவர்களுக்கான கௌரவிப்பு,  நன்றியுரையுடனும் மதியம் 11.30  நிகழ்வு  இனிதே நிறைவுபெற்றது.

காரைநகர் மாணவர்களின் கௌரவிப்பு நிகழ்விற்கு ஓத்துழைப்பு நல்கிய பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் சுவிஸ் காரை அவிருத்திச்சபையினர் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.

நிகழ்வின் நிழற்படத்தொகுப்பினை கீழே காணலாம்

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

இங்ஙனம்

                சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

               செயற்குழு உறுப்பினர்கள்

  மொழி,கல்வி, கலை மேம்பாட்டுக்குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்

11.09.2022

 

 

 

காரைநகர் சிதம்பராமூர்த்தி கேணியடி திருவருள்மிகு ஞான வைரவப் பெருமான் ஆலயத்தில் 08.09.2022 வியாழக்கிழமை நடைபெற்ற ஆவணி ஓணம் திருவிழா!

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் 08.08.2022 திங்கட்கிழமை நடைபெற்ற இலட்சார்சனை 2ஆம் திருவிழா!

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் 07.08.2022 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலட்சார்சனை 1ஆம் திருவிழா!

காரைநகர் கிழவன்காடு கலாமன்ற அறநெறிப் பாடசாலை நடாத்திய மாணிக்கவாசகர் குருபூசை நிகழ்வு 03.07.2022 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது!

 

படங்களை பார்வையிட கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

 

https://photos.app.goo.gl/B15MTWEpQ1HmcQNT7

 

காரைநகர் கிட்ஸ் பார்க் பாலர் பாடசாலை வருடாந்த விளையாட்டு விழா பாலர் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் ஓய்வு நிலை அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை தலைமையில் 02.07.2022 சனிக்கிழமை நடைபெற்றது!

 

படங்களை பார்வையிட கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

https://photos.app.goo.gl/u8wvcvn3kivyX3eaA

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வேட்டைத் திருவிழா 29.03.2022 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது! (காணொளி)

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 25.03.2022 வெள்ளிக்கிழமை நடைபெற்ற 8ம் நாள் திருவிழா! (காணொளி)

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 22.03.2022 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 5ம் நாள் திருவிழா!

 

 

படங்களை பார்வையிட கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

 

https://photos.app.goo.gl/XRTNayQdT1Vb4nGk7

 

 

 

 

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 18.03.2022 வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடியேற்றத் திருவிழா காட்சிகள்!

படங்களை பார்வையிட கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

 

https://photos.app.goo.gl/i9P6fUBVUEUn3ASu9

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 20.03.2022 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 3ம் நாள் திருவிழா (காணொளி)

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 19.03.2022 சனிக்கிழமை நடைபெற்ற 2ம் நாள் திருவிழா (காணொளி)

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 18.03.2022 வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடியேற்றத் திருவிழா (காணொளி)

 

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 17.03.2022 வியாழக்கிழமை நடைபெற்ற பங்குனி மகோற்சவ தேர்த் திருவிழா (காணொளி)

காரைநகர் மகளீருக்கான வலைப்பந்தாட்ட சுற்றுத்தொடருக்கான இறுதிப்போட்டிகளும் பரிசளிப்பு விழாவும் 08/03/2022 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது.

 

 

படங்களை பார்வையிட கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

https://photos.app.goo.gl/uWCQjbbpiPPnnNpp9

 

 

காரைநகர் கிழவன்காடு கலாமன்றம் நடாத்திய ஸ்தாபக தின நிகழ்வு! (01.03.2022 செவ்வாய்க்கிழமை)

 

படங்களை பார்வையிட கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

 

https://photos.app.goo.gl/3YQ5VtxYbn6Zzivn7

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் 15.02.2022 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சப்பறத் திருவிழா காட்சிகள்!

 

படங்களை பார்வையிட கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

 

https://photos.app.goo.gl/6kb8fKNGiArKHnLr8

காரைநகர் கிழவன்காடு கலாமன்றம் நடாத்திய ஸ்தாபக தின நிகழ்வு 01.03.2022 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது!

காரைநகர் கிழவன்காடு கலாமன்றம் நடாத்தும் ஸ்தாபக தின நிகழ்வு 01.03.2022 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது!

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் 16.02.2022 புதன்கிழமை நடைபெற்ற தேர்த் திருவிழா!

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் 15.02.2022 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சப்பறத் திருவிழா!

காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் 15.02.2022 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 9ம் நாள் திருவிழா!