Tag: காரைச் செய்திகள்

காரைநகர் மணற்காடு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 14.04.2018 சனிக்கிழமை சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு இடம்பெற்ற விஷேட அபிஷேக காணொளி!

காரைநகர் பாலாவோடை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம் மே மாதம் தொடங்குவதையிட்டு பாலாவோடை வீதி களபூமி விளையாட்டு கழகத்தினரால் துப்பரவு செய்யப்பட்டது.

காரைநகர் வாரிவளவு ஶ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் 14.04.2018 சனிக்கிழமை இடம்பெற்ற தேர்த் திருவிழா காணொளி!

காரைநகர் மருதடி வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் 14.04.2018 சனிக்கிழமை இடம்பெற்ற சித்திரை வருடப்பிறப்பு திருவிழா காட்சிகள்!

காரைநகர் அபிவிருத்திச் சபை புலமைப் பரிசில் வழங்கல் விண்ணப்ப அறிவித்தல்!

காரைநகர் வாரிவளவு ஶ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் 14.04.2018 சனிக்கிழமை இடம்பெற்ற தேர்த் திருவிழா காட்சிகள்!

IF

IF

காரைநகர் மணற்காடு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 14.04.2018 சனிக்கிழமை சித்திரை வருடப்பிறப்பு அன்று இடம்பெற்ற விஷேட அபிஷேக காட்சிகள்!

காரைநகர் வாரிவளவு ஶ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் 13.04.2018 வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சப்பறத் திருவிழா காணொளி!

காரைநகர் வாரிவளவு ஶ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் 13.04.2018 வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சப்பறத் திருவிழா காட்சிகள்!

காரைநகர் வாரிவளவு ஶ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் 12.04.2018 வியாழக்கிழமை இடம்பெற்ற வேட்டைத் திருவிழா காணொளி!

காரைநகர் வாரிவளவு ஶ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் 12.04.2018 வியாழக்கிழமை இடம்பெற்ற வேட்டைத் திருவிழா காட்சிகள்!

காரைநகர் வாரிவளவு ஶ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் 10.04.2018 செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 5ம் திருவிழா காட்சிகள்!

காரைநகர் வாரிவளவு ஶ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் 10.04.2018 செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 5ம் திருவிழா காணொளி!

காரைநகர் அபிவிருத்திச்சபையின் கண் படர் சத்திர சிகிச்சை பயணம் 06.04.2018

காரைநகர் அபிவிருத்திச்சபையின் கண் படர் சத்திர சிகிச்சை பயணம் 06.04.2018

வருடாந்தம் காரை அபிவிருத்திச் சபையினால் இம்முறையும் பதிவு செய்யப்பட்ட 34 கண்நோயாளர்களுக்கான ஆரம்பகட்ட கண் சிகிச்சை யாழ் போதன வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது. இதில் 11 பேருக்கு பார்வை குறைபாட்டிற்காக மூக்குக் கண்ணாடி வழங்கவும், 21 பேருக்கு கண்சத்திர சிகிச்சையும் மேற்கொள்ளவும், 2 பேருக்கு கண் கிளினிக்கிற்கு செல்லவும் ஆலோசனை வழங்கப்பட்டது. இவர்கள் எம்மால்
பேருந்து மூலம் அழைத்து செல்லப்பட்டு மதியபோசனமும் வழங்கப்பட்டது. மீளவும் சபைக்கு அழைத்து வரப்பட்டது. இவர்களை சபை உறுப்பினர்களான உப தலைவரான திரு ந.பாலகிருஷ்ணன் உப செயலாளர் திரு க.நாகராசா அலுவலக உதவியாளர் ச.தெய்வசக்தி அழைத்து சென்றார்கள்.

இவ் நோயாளர்களுக்கு சிகிச்சையினை வழங்கிய யாழ் போதன வைத்தியசாலை வைத்திய அதிகாரிக்கும் சக ஊழியர்களுக்கும் எமது சபையின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

நன்றி

செயலாளர்

 

காரைநகர் வாரிவளவு ஶ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் 07.04.2018 சனிக்கிழமை இடம்பெற்ற 2ம் திருவிழா காணொளி!

காரைநகர் வாரிவளவு ஶ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் 07.04.2018 சனிக்கிழமை இடம்பெற்ற 2ம் திருவிழா காட்சிகள்!

காரைநகர் வாரிவளவு ஶ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் 06.04.2018 வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கொடியேற்றத் திருவிழா காணொளி!

காரைநகர் வாரிவளவு ஶ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் இன்று 06.04.2018 வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கொடியேற்றத் திருவிழா காட்சிகள்!

காரை மண்ணின் அழகை மேம்படுத்தும் பிரதேச அபிவிருத்தியின் ஒரு பகுதியாக காரைநகர் வரவேற்கின்றது என்கின்ற பிரதான நுழைவாசல்

காரை மண்ணின் அழகை மேம்படுத்தும்  பிரதேச அபிவிருத்தியின் ஒரு பகுதியாக காரைநகர் வரவேற்கின்றது  என்கின்ற பிரதான நுழைவாசல் நிர்மாணப் பணிகள்  2008ம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டன. இதன் நிர்மாண  வேலைகள் யாவும்  பூர்த்தியடைந்துள்ள நிலையில் வெகு விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது . நாட்டில் ஏற்பட்டுள்ள  சமாதான சூழ்நிலையால் வேறு பாகங்களிலிருந்து வருகைதரும் உல்லாசபயணிகளின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.  இத்தகைய  நிலையில் காரைநகரின் பெயர்சாற்றும் கலாச்சார விழுமியமும் புராதனமுமிக்க ஈழத்து சிதம்பரம், தொன்மைமிகு வெளிச்சவீடு,  இயற்கை அன்னை தந்த  கசூரினா கடல் மற்றும் கடல் கோட்டை இவற்றோடு இந்த அலங்கார வளைவும் சேர்ந்து இன்னும் உல்லாச பயணிகளை வசீகரிக்கபோகின்றது என்பதில் ஐயமில்லை.

 

அலங்கார வளைவு படம்

இத்திட்டத்திற்கு சிந்தனை மற்றும்  செயல் வடிவம் கொடுத்து அத்திட்ட ஆரம்பத்தில் பணிபுரிந்து ஆரம்பகர்த்தாவாக செயல்பட்டவரும்,  தற்போது கனேடிய பெருந்தெருக்கள் துறையில் கடமை புரிந்து வருபவருமாகிய இலகடியை  சேர்ந்த  திரு.செல்வரத்தினம் செல்வநாயகம் அவர்களாவர். அத்துடன்  காரை வசந்தம் 2017 சஞ்சிகைக்கு   அட்டைப்பட  உதவியும்,  காரைநகர் பிரதேசத்திற்கான மரம் நடுகை திட்டம்,  இயற்கை  கழிவுகளை மீள் சுழற்சி முறையில் இயற்கை  உரமாக்கும் திட்டம் ஆகிய இயற்கையோடு இணைந்த பயனுள்ள ஆக்கங்களின் ஆசிரியருமாவார்.

 

காரைநகர் பாடசாலைகளின் (இந்துக் கல்லூரி,யாழ்ற்ரன் கல்லூரி, சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம்) க.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேறுகள் 2017

காரைநகர் இந்துக் கல்லூரி

HINDU COLLEGE

 

 

 

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி

YARLTON COLLEGE

 

 

 

காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம்

SUNDARAMOORTHY VID

 

 

காரைநகர் வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயம் வருடாந்த மகோற்சவம்- 2018

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி கால்கோள் விழா- 2018

யா / யாழ்ற்ரன் கல்லூரி – காரைநகர்

கால்கோள் விழா- 2018

இடம்; :- ஆரம்பப்பாடசாலை மண்டபம்

காலம் :- 2018.01.15 திங்கட்கிழமை மு.ப 8.00

மணிதலைவர் :- திருமதி கலைவாணி அருள்மாறன்

மேற்படி நிகழ்வானது குறித்த நேரத்தில் சிறார்கள் மற்றும் விருந்தினர்களை வரவேற்றலுடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த திரு.T.மயூரன் (முகாமையாளர் தே.சே.வங்கி) அவர்களால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மாணவர்களால்  தேசியக்கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து கல்லூரி முதல்வர் அவர்களால் பாடசாலைக்கொடி ஏற்றப்பட்டு மாணவர்களால் பாடசாலைக்கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விரந்தினர்களால் மங்கள விளக்கேற்றப்பட்டு மாணவர்களால் இறைவணக்கம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தரம் 2 மாணவர்களுடைய வரவேற்பு நடனம் நடைபெற்றது.தொடர்ந்து தரம்2 மாணவன் தர்சிகன் அவர்களால் வரவேற்புரை நடாத்தப்பட்டது.தொடர்ந்து தலைமை உரையில் மாணவர்களுடைய மனப்பாங்கு பற்றி கூறப்பட்டு அவர்களை மகிழ்வுடன் வரவேற்கும் நிகழ்வு அதிபர் அவர்களால் நடாத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து விருந்தினர்களது உரை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து தரம் 1 மாணவர்களுக்கு பரிசில் வழங்கி மகிழ்விக்கும் நிகழ்வு இடம்பெற்றது. பின்னர் தரம்2 மாணவர்களது கலை நிகழ்வுகள் இடம்பெற்றது. தொடர்ந்து தரம் 1 மாணவன்லோ.ரதுர்சன் என்பவரால் ஏற்புரை நடாத்தப்பட்டது. தொடர்ந்து ஆரம்பப்பிரிவு பொறுப்பாசிரியர் செல்வி சுபத்திராதேவி அவர்களால் நன்றியுரை நடாத்தப்பட்டது. பின்னர் தரம் 1 மாணவர்களது கல்விச் செயற்பாடுகளை தரம் 1 ஆசழரழயர் அசர்கள் ஆரம்பித்த வைத்தார் தொடர்ந்து கொடியிறக்க நிகழ்வுடன் நிகழ்வுகள் யாவும் மு.ப 10.00 மணியளவில் இனிதெ நிறைவு பெற்றது.

கால்கோல்விழாவின் போது விருந்தினர்களை அழைத்துவரல்

தரம் 1 மாணவன் விருந்தினர்களை மாலை அணிவித்துக் கௌரவித்தல்

 

பாடசாலைக் கொடியினை கல்லூரியின் பிரதி அதிபர் திருமதி க.அருள்மாறன் அவர்கள் ஏற்றி வைக்கின்றார்.

மங்கள விளக்கினை பிரதம விருந்தினரான T.மயூரன் அவர்கள் ஏற்றி வைக்கின்றார்.

கல்லூரியின் முன்னாள் அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் மங்கள விளக்கேற்றி சிறப்பிக்கின்றார்.

கல்லூரியின் ஓய்வுபெற்ற ஆசிரியர் செல்வராசா றஞ்சிதமலர் அவர்கள் மங்கள விளக்கேற்றி சிறப்பிக்கின்றார்

கல்லூரியின் பிரதி அதிபர் மங்கள விளக்கேற்றுகின்றார்.

தரம் 2 மாணவர்களின் வரவேற்பு நடன நிகழ்வு நடைபெறுகின்றது.

தரம் 1 மாணவர்களுக்கு எமது கல்லூரியின் முன்னாள் ஓய்வு பெற்ற அதிபர் பரிசு வழங்கி கௌரவிக்கின்றார்

தரம் 1 மாணவர்களுக்கு எமது கிராம அலுவலர்பரிசு வழங்கி கௌரவிக்கின்றார்

கொடி இறக்கத்துடன் நிகழ்வு இனிதே நிறைவு பெறுகின்றது.

பொங்கல் விழா அறிக்கை

பொங்கல் விழா அறிக்கை

2018 ஆம் ஆண்டுக்கான காரைநகர்க் கோட்டப்பாடசாலைகளின் பொங்கல் விழாவானது 2018.01.18 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் கல்லூரி பிராரத்தனை மண்டபத்தில் காரைநகர் கோட்டக் கல்வி அலுவலர் திரு.ஆ.குமரேசமூர்த்தி அவர்களின் தலைமையில் ஆரம்பமாகியது.

மேற்படி நிகழ்வில் விருந்தினர்களாக பிரம்மஸ்ரீ மேரிகிரிஸ்வரசர்மா இந்து மதகுரு அவர்களும் செல்வி A.P ஜான்சி யாழ்ப்பாணம் கதீஜா பெண்கள் பாடசாலை அதிபர் அவர்களும் கிறிஸ்தவ சமயமதகுரு கயோன் பன்னீர்செல்வம் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேற்படி நிகழ்வில் காரைநகர் கோட்டப்பாடசாலை அதிபர்களும்,ஆசிரிய பிரதிநிதிகளும் மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

காலை 7.30 மணியளவில் கல்லூரி பிரதி அதிபர் தலைமையில் விருந்தினர்கள் அதிபர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள் பெற்றோர்களின் ஒன்றுகூடலுடன் பொங்கல் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. 8.45 மணியளவில் கல்லூரி முன்றலில் உள்ள சரஸ்வதி திருவுருவ முன்றலில் படையல் வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து பிரார்த்தனை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கல்லூரி மாணவிகளின் சர்வமதப் பிரார்த்தனை இடம்பெற்றது. யாழ்ற்ரன் கல்லூரி மாணவிகளின் சைவ சமயப் பிரார்த்தனையும்,கதீஜா பெண்கள் பாடசாலை மாணவிகளின் இஸ்லாமிய பிரார்த்தனையும் ,காரை இந்துக்கல்லூரி மாணவிகளின் கிறிஸ்தவ சமயப் பிரார்த்தனையும் நிகழ்த்தினர்.வரவேற்பு நடனத்தினை யாழ்ற்ரன் கல்லூரி மாணவிகள் நடத்தினர். வரவேற்புரை காரை இந்துக்கல்லூரி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசனால் நடாத்தப்பட்டது. தலைமையுரை காரைநகர் கோட்டக்கல்வி அதிகாரி திரு.ஆ.குமரேசமூர்த்தி அவர்களால் நடாத்தப்பட்டது. தொடர்ந்து அதிபர் உரையினை யாழ்ற்ரன் கல்லூரி பிரதி அதிபர் திருமதி.க.அருள்மாறன் வழங்கினார்.தொடர்ந்து ஆசிரியர் உரைகளில் இந்துசமய உரையினை காரை இந்துக்கல்லூரி ஆசிரியர் திருமதி.S.கலாராணி அவர்களும் கிறிஸ்தவ சமய உரையினை திருமதி.ய.நெல்ஸ்மன் அவர்களும் இஸ்லாமிய உரையினை யா/கதீஜா பெண்கள் பாடசாலை அதிபர் செல்வி.A.P ஜான்சி அவர்கள் நிகழ்த்தினர். மாணவர் உரையினை யாழ்ற்ரன் கல்லூரி மாணவி செல்வி.ச.கஸ்தூரி நிகழ்த்தினார். தொடர்ந்து பொங்கல் விழாவிற்கு வருகைதந்த விருந்தினர்கள் உரை இடம்பெற்றது.

மாணவர்கள் கலைநிகழ்வுகளாக வலந்தலை தெற்கு அ.மி.த பாடசாலை மாணவர்களின் குழுநடனமும் காரை இந்துக்கல்லூரி மாணவிகளின் அரிவி வெட்டு நடனமும் யாழ்ற்ரன் கல்லூரி மாணவிகளின் நாட்டாரிசை,கதம்ப நடனம் என்பவையும் நடைபெற்றன.ஆயிலி சிவஞானோதய வித்தியாலய அதிபர் திரு.ளு.வசீகரின் நன்றியுரையுடன் மதியம் நிறைவுற்றது. தொடர்ந்து விழாவிற்கு வருகை தந்திருந்த விருந்தினர்களும் மாணவர்களும் பொங்கலை மகிழ்வடன் பகிர்ந்து உண்ணல் நிகழ்வுகள் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடங்களில் நடைபெற்றதுடன் மாணவர்கள் அனைவருக்கும் பொங்கல், மோதகம், வடை என்பனவும் வழங்கப்பட்ட அன்றைய நாள் அனைவருக்கும் மகிழ்வான நாளாக அமைந்தது எனக்கூறிச்சென்றார்.

கசூரினா கடற்கரையில் கமரா கட்டமைப்பு பொருத்த தீர்மானம்

கசூரினா கடற்கரையில் கமரா கட்டமைப்பு பொருத்த தீர்மானம்

கசூரினா கடற்கரையில் பாதுகாப்பு அதிகாரிகள் சேவையில் உள்ள போதிலும்,  சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தரும் நாட்களில்,  கடற்கரையின்  பாதுகாப்பை உறுதி செய்யமுடியவில்லை.  இங்குள்ள கழிப்பறை  மற்றும் உடை மாற்றும் அறைகள் உடைக்கப்பட்டுள்ளதோடு,  போதை பொருள்  பயன்பாடு  உட்பட சமூக விரோத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள்  கிடைத்துள்ளது.  இதன்  காரணமாக கடற்கரைக்கு அருகில் சிசிடீவி கமரா  கட்டமைப்பு  ஒன்றை பொறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்மூலம்  விரும்பத்தகாத செயற்பாடுகள் குறைவடையவாய்ப்புள்ளதோடு ,  ஊரின்  புனிதத்தன்மையும் பேணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது .

காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக திரு.விஐயதர்மா கேதீஸ்வரதாசன்

காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக திரு.விஐயதர்மா கேதீஸ்வரதாசன்

காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக திரு.வி.கேதீஸ்வரதாசன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள் சமூக அக்கறையும் சிறந்த கல்விப் பின்புலமும் மிக்க குடும்ப பாரம்பரியத்தைக் கொண்டு விளங்கும் திரு.வி.கேதீஸ்வரதாசன் அவர்களுக்கு ஆளுமையுடன் கூடிய தலைமைத்துவப் பண்புகள் இவர் பொது வாழ்வில் ஈடுபடவும் மக்களுக்கு பயனுள்ள சிறந்த சேவைகளை வழங்கவும் பெரிதும் உதவியாகவிருந்தன என்றால் மிகையாகாது எனலாம்.

திரு.வி.கேதீஸ்வரதாசன் அவர்கள் தனது இளமைப் பாராயத்திலிருந்தே பல்வேறு அமைப்புக்களிலும் பொறுப்பு மிக்க பதவிகளை வகித்து மக்களுக்கான பல பணிகளை நிறைவேற்றி வைத்தவர். சிறப்பாக இவர் பிறந்து வாழ்ந்த குறிச்சியாகவுள்ள நீலிப்பந்தனையையும் அதனைச் சூழவுள்ள குறிச்சிகளையும் சேர்ந்த மக்கள் சமூகம், சமயம், ஆன்மீகம் விளையாட்டு, கல்வி ஆகிய பல துறைகளிலும் மேம்பட்டு விளங்க உழைத்தவர். நீலிப்பந்தனை சன சமூக நிலையத்தின் தலைவராகவும் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளராகவும் பதவி வகித்து ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கனவாகும்.

கிராம சபை(Village Council) என்ற நிர்வாக முறைமை இருந்த காலத்தில் காரைநகர் கிராம சபைக்கு தற்போது உறுப்பினராக தெரிவான இதே வட்டாரத்தின்(அப்போது9ஆம் வட்டாரம்) உறுப்பினராக 1967ஆம் ஆண்டு திரு.கேதீஸ்வரதாசன் தெரிவுசெய்யப்பட்டு தமது சேவையை வழங்கியவர் என்பது இத்தருணத்தில் நினைவுகூரத்தக்கதாகும்.

காரைநகர் மணிவாசகர் சபையின் உப தலைவராக பதவி வகித்த இவர் 1979ஆம் ஆண்டு இச்சபையின் வெள்ளி விழாவை சிறப்பாக அமைப்பதற்கு பெரும் பங்காற்றியவர்.

அந்தவகையில் ஆற்றலும் அனுபவமும் ஆளுமையும் மிக்க திரு.கேதீஸ்வரதாசன் அவர்கள் தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டிருப்பது காரைநகர் மக்கள் சிறந்த சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான பெரு வாய்ப்பாகவே அமைந்துள்ளது.

 

க.பொ.த சா-த பரீட்சையில் தீவக வலயத்தில் முதன்மைப் பெறு பேறு பெற்று காரை இந்து சாதனை

க.பொ.த சா-த பரீட்சையில் தீவக வலயத்தில் முதன்மைப் பெறு பேறு பெற்று காரை இந்து சாதனை

12 ஆண்டுகளுக்குப் பின்னர் இரு மாணவர்கள் 9A முதன்மைப் பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்

கடந்த டிசம்பர் மாதம் 2017 இல் நடைபெற்ற க.பொ.த சா-த பரீட்சைப் பெறுபேறுகள் அண்மையில் வெளிவந்துள்ளன.

மேற்படி பரீட்சைப் பெறுபேறுகளில் காரைநகர் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த இரு மாணவர்கள் 9A என்ற பெறுபெற்றினைப் பெற்றுக் கொண்டதன் மூலம் தீவக வலயத்தில் முதன்மைப் பெறுபெற்றினைப் பெற்ற பாடசாலையாக காரைநகர் இந்துக் கல்லூரி திகழ்கின்றது.

செல்வி சிவராஜினி பாலேந்திரா, செல்வன் ஏகாம்பரம் கோபிநாத் ஆகிய இரு மாணவர்களுமே எல்லாப் பாடங்களிலும் அதிசிறப்புச் சித்தி (9A ) பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

12 ஆண்டுகளுக்கு முன்னர் 2005 டிசம்பர் க.பொ.த சா-த பரீட்சையில் காரைநகர் இந்துக் கல்லூரிக்குக் கிடைக்கப்பெற் 9A முதன்மைப் பெறுபேற்றுக்குப் பின்னர் 2017 டிசம்பர் க.பொ.த சா-த பரீட்சையில் இரு மாணவர்கள் 9A முதன்மைப் பெறுபேறுகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் செல்வன் அமுதசிங்கம் பிரணவரூபன் என்ற மாணவன் 8A B என்ற பெறுபேற்றினையும், மேலும் 3 மாணவர்கள் 4A இனையும் பெற்றுள்ளனர்.

சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற முதல் 7 மாணவர்களின் பெயர் விபரமும் அவர்கள் பெற்றுக்கொண்ட பெறுபேறுகளும் கீழ்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு – 2017

  மாணவர் பெயர் பெறுபேறு
1. செல்வி சிவராஜினி பாலேந்திரா 9A
2. செல்வன் ஏகாம்பரம் கோபிநாத் 9A
3. செல்வன் அமுதசிங்கம் பிரணவரூபன் 8A B
4. செல்வி தாரணி சடாட்சரம் 4A 3B C S
5. செல்வி அமிர்தா ஆனந்தராசா 4A 3B C
6. செல்வன் அரியபுத்திரன் ஜீவரங்கன் 4A B 2C S
7. செல்வி பிருந்தா கோவிந்தராசா 3A 2B 3C S

கீழே சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களின் படங்களையும் பாடசாலை முன்றலில் அதிபர், ஆசிரியர்களுடன் மாணவர்களின் படங்களையும் காணலாம்.

B.Sivarajini

செல்வி சிவராஜினி பாலேந்திரா – 9A

 

 

A.Gobinath

செல்வன் ஏகாம்பரம் கோபிநாத் – 9A   

 

 

A.Piranavarubanசெல்வன் அமுதசிங்கம் பிரணவரூபன் – 8A, B 

 

 

A.Tharani

செல்வி தாரணி சடாட்சரம்  4A 3B C S 

 

 

A.Amirtha

செல்வி அமிர்தா ஆனந்தராசா    4A 3B C    

 

 

A.Jeevarangan

செல்வன் அரியபுத்திரன் ஜீவரங்கன   4A B 2C S  

 

 

K.Brintha

செல்வி பிருந்தா கோவிந்தராசா   3A 2B  3C S

 

 

OL results1OL results2OL results3

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 29.03.2018 வியாழக்கிழமை நடைபெற்ற பங்குனி மகோற்சவ தேர்த் திருவிழா காணொளி!


Start at

காரைநகர் வேதரடைப்பு சோலையான் வீதி ஆலங்கன்று ஞானவைரவர் ஆலயத்தில் 28.03.2018 புதன்கிழமை நடைபெற்ற மண்டலாபிஷேக பூர்த்தி விழா காணொளி! (பகுதி 3)

காரைநகர் வேதரடைப்பு சோலையான் வீதி ஆலங்கன்று ஞானவைரவர் ஆலயத்தில் 28.03.2018 புதன்கிழமை நடைபெற்ற மண்டலாபிஷேக பூர்த்தி விழா காணொளி! (பகுதி 2)

காரைநகர் வேதரடைப்பு சோலையான் வீதி ஆலங்கன்று ஞானவைரவர் ஆலயத்தில் 28.03.2018 புதன்கிழமை நடைபெற்ற மண்டலாபிஷேக பூர்த்தி விழா காணொளி! (பகுதி 1)