பொங்கல் விழா அறிக்கை

பொங்கல் விழா அறிக்கை

2018 ஆம் ஆண்டுக்கான காரைநகர்க் கோட்டப்பாடசாலைகளின் பொங்கல் விழாவானது 2018.01.18 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் கல்லூரி பிராரத்தனை மண்டபத்தில் காரைநகர் கோட்டக் கல்வி அலுவலர் திரு.ஆ.குமரேசமூர்த்தி அவர்களின் தலைமையில் ஆரம்பமாகியது.

மேற்படி நிகழ்வில் விருந்தினர்களாக பிரம்மஸ்ரீ மேரிகிரிஸ்வரசர்மா இந்து மதகுரு அவர்களும் செல்வி A.P ஜான்சி யாழ்ப்பாணம் கதீஜா பெண்கள் பாடசாலை அதிபர் அவர்களும் கிறிஸ்தவ சமயமதகுரு கயோன் பன்னீர்செல்வம் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேற்படி நிகழ்வில் காரைநகர் கோட்டப்பாடசாலை அதிபர்களும்,ஆசிரிய பிரதிநிதிகளும் மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

காலை 7.30 மணியளவில் கல்லூரி பிரதி அதிபர் தலைமையில் விருந்தினர்கள் அதிபர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள் பெற்றோர்களின் ஒன்றுகூடலுடன் பொங்கல் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. 8.45 மணியளவில் கல்லூரி முன்றலில் உள்ள சரஸ்வதி திருவுருவ முன்றலில் படையல் வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து பிரார்த்தனை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கல்லூரி மாணவிகளின் சர்வமதப் பிரார்த்தனை இடம்பெற்றது. யாழ்ற்ரன் கல்லூரி மாணவிகளின் சைவ சமயப் பிரார்த்தனையும்,கதீஜா பெண்கள் பாடசாலை மாணவிகளின் இஸ்லாமிய பிரார்த்தனையும் ,காரை இந்துக்கல்லூரி மாணவிகளின் கிறிஸ்தவ சமயப் பிரார்த்தனையும் நிகழ்த்தினர்.வரவேற்பு நடனத்தினை யாழ்ற்ரன் கல்லூரி மாணவிகள் நடத்தினர். வரவேற்புரை காரை இந்துக்கல்லூரி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசனால் நடாத்தப்பட்டது. தலைமையுரை காரைநகர் கோட்டக்கல்வி அதிகாரி திரு.ஆ.குமரேசமூர்த்தி அவர்களால் நடாத்தப்பட்டது. தொடர்ந்து அதிபர் உரையினை யாழ்ற்ரன் கல்லூரி பிரதி அதிபர் திருமதி.க.அருள்மாறன் வழங்கினார்.தொடர்ந்து ஆசிரியர் உரைகளில் இந்துசமய உரையினை காரை இந்துக்கல்லூரி ஆசிரியர் திருமதி.S.கலாராணி அவர்களும் கிறிஸ்தவ சமய உரையினை திருமதி.ய.நெல்ஸ்மன் அவர்களும் இஸ்லாமிய உரையினை யா/கதீஜா பெண்கள் பாடசாலை அதிபர் செல்வி.A.P ஜான்சி அவர்கள் நிகழ்த்தினர். மாணவர் உரையினை யாழ்ற்ரன் கல்லூரி மாணவி செல்வி.ச.கஸ்தூரி நிகழ்த்தினார். தொடர்ந்து பொங்கல் விழாவிற்கு வருகைதந்த விருந்தினர்கள் உரை இடம்பெற்றது.

மாணவர்கள் கலைநிகழ்வுகளாக வலந்தலை தெற்கு அ.மி.த பாடசாலை மாணவர்களின் குழுநடனமும் காரை இந்துக்கல்லூரி மாணவிகளின் அரிவி வெட்டு நடனமும் யாழ்ற்ரன் கல்லூரி மாணவிகளின் நாட்டாரிசை,கதம்ப நடனம் என்பவையும் நடைபெற்றன.ஆயிலி சிவஞானோதய வித்தியாலய அதிபர் திரு.ளு.வசீகரின் நன்றியுரையுடன் மதியம் நிறைவுற்றது. தொடர்ந்து விழாவிற்கு வருகை தந்திருந்த விருந்தினர்களும் மாணவர்களும் பொங்கலை மகிழ்வடன் பகிர்ந்து உண்ணல் நிகழ்வுகள் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடங்களில் நடைபெற்றதுடன் மாணவர்கள் அனைவருக்கும் பொங்கல், மோதகம், வடை என்பனவும் வழங்கப்பட்ட அன்றைய நாள் அனைவருக்கும் மகிழ்வான நாளாக அமைந்தது எனக்கூறிச்சென்றார்.