காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக திரு.விஐயதர்மா கேதீஸ்வரதாசன்

காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக திரு.விஐயதர்மா கேதீஸ்வரதாசன்

காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக திரு.வி.கேதீஸ்வரதாசன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள் சமூக அக்கறையும் சிறந்த கல்விப் பின்புலமும் மிக்க குடும்ப பாரம்பரியத்தைக் கொண்டு விளங்கும் திரு.வி.கேதீஸ்வரதாசன் அவர்களுக்கு ஆளுமையுடன் கூடிய தலைமைத்துவப் பண்புகள் இவர் பொது வாழ்வில் ஈடுபடவும் மக்களுக்கு பயனுள்ள சிறந்த சேவைகளை வழங்கவும் பெரிதும் உதவியாகவிருந்தன என்றால் மிகையாகாது எனலாம்.

திரு.வி.கேதீஸ்வரதாசன் அவர்கள் தனது இளமைப் பாராயத்திலிருந்தே பல்வேறு அமைப்புக்களிலும் பொறுப்பு மிக்க பதவிகளை வகித்து மக்களுக்கான பல பணிகளை நிறைவேற்றி வைத்தவர். சிறப்பாக இவர் பிறந்து வாழ்ந்த குறிச்சியாகவுள்ள நீலிப்பந்தனையையும் அதனைச் சூழவுள்ள குறிச்சிகளையும் சேர்ந்த மக்கள் சமூகம், சமயம், ஆன்மீகம் விளையாட்டு, கல்வி ஆகிய பல துறைகளிலும் மேம்பட்டு விளங்க உழைத்தவர். நீலிப்பந்தனை சன சமூக நிலையத்தின் தலைவராகவும் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளராகவும் பதவி வகித்து ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கனவாகும்.

கிராம சபை(Village Council) என்ற நிர்வாக முறைமை இருந்த காலத்தில் காரைநகர் கிராம சபைக்கு தற்போது உறுப்பினராக தெரிவான இதே வட்டாரத்தின்(அப்போது9ஆம் வட்டாரம்) உறுப்பினராக 1967ஆம் ஆண்டு திரு.கேதீஸ்வரதாசன் தெரிவுசெய்யப்பட்டு தமது சேவையை வழங்கியவர் என்பது இத்தருணத்தில் நினைவுகூரத்தக்கதாகும்.

காரைநகர் மணிவாசகர் சபையின் உப தலைவராக பதவி வகித்த இவர் 1979ஆம் ஆண்டு இச்சபையின் வெள்ளி விழாவை சிறப்பாக அமைப்பதற்கு பெரும் பங்காற்றியவர்.

அந்தவகையில் ஆற்றலும் அனுபவமும் ஆளுமையும் மிக்க திரு.கேதீஸ்வரதாசன் அவர்கள் தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டிருப்பது காரைநகர் மக்கள் சிறந்த சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான பெரு வாய்ப்பாகவே அமைந்துள்ளது.