காரை மண்ணின் அழகை மேம்படுத்தும் பிரதேச அபிவிருத்தியின் ஒரு பகுதியாக காரைநகர் வரவேற்கின்றது என்கின்ற பிரதான நுழைவாசல்

காரை மண்ணின் அழகை மேம்படுத்தும்  பிரதேச அபிவிருத்தியின் ஒரு பகுதியாக காரைநகர் வரவேற்கின்றது  என்கின்ற பிரதான நுழைவாசல் நிர்மாணப் பணிகள்  2008ம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டன. இதன் நிர்மாண  வேலைகள் யாவும்  பூர்த்தியடைந்துள்ள நிலையில் வெகு விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது . நாட்டில் ஏற்பட்டுள்ள  சமாதான சூழ்நிலையால் வேறு பாகங்களிலிருந்து வருகைதரும் உல்லாசபயணிகளின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.  இத்தகைய  நிலையில் காரைநகரின் பெயர்சாற்றும் கலாச்சார விழுமியமும் புராதனமுமிக்க ஈழத்து சிதம்பரம், தொன்மைமிகு வெளிச்சவீடு,  இயற்கை அன்னை தந்த  கசூரினா கடல் மற்றும் கடல் கோட்டை இவற்றோடு இந்த அலங்கார வளைவும் சேர்ந்து இன்னும் உல்லாச பயணிகளை வசீகரிக்கபோகின்றது என்பதில் ஐயமில்லை.

 

அலங்கார வளைவு படம்

இத்திட்டத்திற்கு சிந்தனை மற்றும்  செயல் வடிவம் கொடுத்து அத்திட்ட ஆரம்பத்தில் பணிபுரிந்து ஆரம்பகர்த்தாவாக செயல்பட்டவரும்,  தற்போது கனேடிய பெருந்தெருக்கள் துறையில் கடமை புரிந்து வருபவருமாகிய இலகடியை  சேர்ந்த  திரு.செல்வரத்தினம் செல்வநாயகம் அவர்களாவர். அத்துடன்  காரை வசந்தம் 2017 சஞ்சிகைக்கு   அட்டைப்பட  உதவியும்,  காரைநகர் பிரதேசத்திற்கான மரம் நடுகை திட்டம்,  இயற்கை  கழிவுகளை மீள் சுழற்சி முறையில் இயற்கை  உரமாக்கும் திட்டம் ஆகிய இயற்கையோடு இணைந்த பயனுள்ள ஆக்கங்களின் ஆசிரியருமாவார்.