Tag: காரைச் செய்திகள்

காரைநகர் வியாவில் சைவ வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு 07.02.2019 வியாழக்கிழமை நடைபெற்றது!

காரைநகர் இந்துக் கல்லூரியில் க.பொ.த உயர்தரப் பரீடசையில் சிறப்புச் சித்திபெற்ற மாணவர்கள் மற்றும் சித்திரப் போட்டியில் வலய,மாகணமட்டத்தில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு 05.02.2019 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது!

02/02/2019 சனிக்கிழமை அன்று நடைபெற்ற காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டி-2019

 

02/02/2019 சனிக்கிழமை அன்று நடைபெற்ற காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டி-2019

02/02/2019 சனிக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு பாடசாலை மைதானத்தில் கல்லூரி அதிபர் திரு.வி.சாந்தகுமார் தலைமையில் இடம்பெற்றன. இந் நிகழ்வில் திரு.ப.நந்தகுமார் (சுகாதார வைத்திய அதிகாரி காரைநகர்,ஊர்காவற்துறை) பிரதம விருந்தினராகவும் திரு.க.விஜயகுமார் (முகாமையாளர் மக்கள் வங்கி சாவகச்சேரி)சிறப்பு விருந்தினராகவும், திரு.S.V.M.குணரட்ணம் (S.V.M நிறுவன உரிமையாளர்) திரு. க. நிமலதாசன்(அஞ்சல் அதிபர் யாழ்ப்பாணம்) மற்றும் திரு.திரவியநாதன் தீசன்(பத்திரிகை ஆசிரியர் கனடா) ஆகியோர் கௌரவ விருந்தினராகவும், கலந்துகொண்டனர்.

பாடசாலையின் உயர்தர மாணவிக்கு அமரர் பொன்னம்பலம் பாலசிங்கம் (இடைப்பிட்டி காரைநகர்) அவர்களின் ஞாபகார்த்தமாக துவிச்சக்கரவண்டி அன்பளிப்பிணை செய்திருந்தார் ஆசிரியர் லிங்கேஸ்வரன் கமலாம்பிகை அவர்கள்.அத்துடன் ஆரம்ப பாடசாலையில் தரம் 1இல் கல்விகற்கும் மாணவிக்கு முன்னைநாள் தலைவர் (களபூமி சனசமூக நிலையம்) கணேசப்பெருமாள் மயில்வாகனம் (பிரான்ஸ்)அவர்களினால் இலங்கை வங்கி புத்தகத்தில் 10000.00 ரூபா வரவு வைக்கப்பட்டு  களபூமி சனசமூகநிலையத்தின் பொ ருளாளர் திரு .சி.சிவகாரன் அவர்களினால் மாணவியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.அத்துடன் திரு.க.விஜயகுமார் முகாமையாளர் (மக்கள் வங்கி சாவகச்சேரி)அவர்களினால் புதிய ஓர் திட்டம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.பாடசாலையின் பழையமானவர்களிடம் இருந்து மாதாந்தம் 100.00ரூபா அறவிடுவார்களாயின் அந்த நிதியில் எதிர்காலத்தில் சிறந்த திட்டங்களை மேற்கொள்ளமுடியுமென தனது சிறப்பு உரையில் கூறியிருந்தார் கலாநிதி .ப.நந்தகுமார் தனது தந்தையர் பாடசாலையின் பழைய மாணவன் என்ற ரீதியில் 1000.00ரூபா பாடசாலை அதிபரிடம் கொடுத்து ஆரம்பித்து வைத்தார்.அத்துடன் திரு க.விஜயகுமார் (பழைய மாணவன்)மாதாந்தம் தனது ஊதியத்தில் இருந்து 500.00 ரூபா தொடர்ந்து 5 வருடங்களுக்கு கொடுப்பதாக உறுதியளித்துள்ளார். மற்றும் திரு.தி. தீசன்( கனடா ) ஆகியோர் ஒரு வருடத்திற்க்கான பணத்தினை வழங்கியிருந்தனர்.

காரைநகர் மாப்பாணவூரி அருள் மிகு நாச்சி அம்மன் ஆலயத்தில் 04.02.2019 திங்கள்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக தின காணொளி!

காரைநகர் மாப்பாணவூரி அருள் மிகு நாச்சி அம்மன் ஆலயத்தில் இன்று 04.02.2019 திங்கள்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக தின நிகழ்வுகள்!

15.01.2019 அன்று தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு காரைநகர் கலாநிதி விளையாட்டுக்கழகம் நடாத்திய சுற்றுப்போட்டிகளின் பரிசளிப்பு விழா காணொளி!

காரைநகர் இளம் விவசாயிகள் கழகத்தின் ஏற்பாட்டில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபயணமும் 05.02.2018 செவ்வாய்க்கிழமை காரைநகரில் இடம்பெற உள்ளது.

 

காரைநகர் இளம் விவசாயிகள் கழகத்தின் ஏற்பாட்டில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபயணமும் 05.02.2018 செவ்வாய்க்கிழமை காரைநகரில் இடம்பெற உள்ளது.

காலை 8.00 மணிக்கு காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி முன்றலில் இருந்து விழிப்புணர்வு நடைபயணம் ஆரம்பமாக உள்ளது. இந்த நடைபயணம் காரைநகர் பிரதேச கலாசார மத்திய நிலையத்தை வந்தடைந்ததும் தொடர்ந்து அங்கு 9.00 மணியளவில் விழிப்புணர்வ நிகழ்சி இடம்பெற உள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக காரைநகர், ஊர்காவற்றறை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியக் கலாநிதி ப.நந்தகுமாரும் சிறப்பு விருந்தினராக விவசாயத் திணைக்கள பிரதி மாகாணப் பணிப்பாளர் திருமதி எஸ்.அஞ்சனாதேவியும் மாண்புறு விருந்தினர்களாக காரைநகர் பிரதேச செயலர் திருமதி உஷா சுபலிங்கம், காரைநகர் பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.கேதீஸ்வரதாஸ், தொழிலதிபர் கலைமாடக்கோண் சண்முகம் சிவஞானம் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.

வடகடல் நிறுவனத்தின் தலைவராக மீண்டும் தியாகராசா பரமேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

வடகடல் நிறுவனத்தின் தலைவராக மீண்டும் தியாகராசா பரமேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை (31ம் திகதி) தலைமை அமைச்சர் ரணில்விக்கிரமசிங்கவிடம் இதற்கான நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட அவர் நேற்றைய தினம் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கெண்டார்.

மறைந்த முன்னாள் இந்து கலாசார அமைச்சர் தியாகராசா மகேஸ்வரனின் சகோதரரான இவர் கடந்த மூன்று வருடங்களாக வடகடல் நிறுவனத்தின் தலைவராகச் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

இவரின் முயற்சியால் கடந்த வருடம் காரைநகர் சிவன் கோவில் மூன்றாம் வீதியில் பல மில்லியன் ரூபா செலவில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

சுமார் இரண்டு மில்லியன் ரூபா செலவில் வடக்கு வீதியில் நவீன வசதிகளுடன் கூடிய மலசலகூடத் தொகுதி அமைக்கப்பட்டு வருகின்றமை

அத்துடன் ஆலய வடக்கு வீதியில் உள்ள அம்மா மடமும் துரிதகதியில் புனரமைக்கப்பட்டு வருகின்றது. அம்மா மட வளாகத்தில் காணப்பட்ட ஆறு கிணறுகள் இருபது இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.

10 மில்லியன் ரூபா செலவில் ஆறு அக்ரகாரங்களும் அமைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இவ்வாண்டும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளைக் காரைநகரில் முன்னெடுப்பதற்கு அவர் தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகின்றது.

 

யாழ்/சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டி 02/02/2019 சனிக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு பாடசாலை மைதானத்தில் இடம்பெற உள்ளது.

 

யாழ்/சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டி 02/02/2019 சனிக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு பாடசாலை மைதானத்தில் இடம்பெற உள்ளது.

கல்லூரி அதிபர் திரு.வி.சாந்தகுமார் தலைமையில் இடம்பெறும் இந் நிகழ்வில் திரு.ப.நந்தகுமார் (சுகாதார வைத்திய அதிகாரி காரைநகர்,ஊர்காவற்துறை) பிரதம விருந்தினராகவும், திரு.க.விஜயகுமார் (முகாமையாளர் மக்கள் வங்கி சாவகச்சேரி) சிறப்பு விருந்தினராகவும், திரு.முருகேசு குணரட்ணம் (S.V.M.Pvt Ltd  நிறுவன உரிமையாளர்) கௌரவ விருந்தினராகவும் கலந்துகொள்ள உள்ளனர்.

களபூமி விளையாட்டுக்கழகம் மைதான திறப்பு விழாவும் KPL2019 தொடக்க நிகழ்வும்

 

களபூமி விளையாட்டுக்கழகம் மைதான திறப்பு விழாவும் KPL2019 தொடக்க நிகழ்வும்

02/02/2019 சனிக்கிழமை காலை 7:30 மணிக்கு இடம் களபூமி விளையாட்டுக்கழக மைதானம் (பாலாவோடை,களபூமி,காரைநகர்) தலைவர் திரு.மு.ராகுல்காந்த், (களபூமி விளையாட்டுக்கழகம்)பிரதம விருந்தினர் திரு.முருகேசு குணரட்ணம் (தொழில் அதிபர் -S.V.M.Pvt Ltd) சிறப்பு விருந்தினர் திரு.ச.ஆ.பாலேந்திரம் (களபூமி விளையாட்டுக்கழக ஆலோசகர்), திருமதி.உஷா சுபலிங்கம்(பிரதேச செயலர் காரைநகர்), திரு.ஏரம்பு முருகவேள் (விளானை கிராம அபிவிருத்திசங்க தலைவர் -சமாதான நீதவான்,போஷகர்),திரு.சண்முகம்பிள்ளை தர்மசீலன் (அனுசரணையாளர் -லண்டன்) கௌரவ விருந்தினர்கள் திரு.வி.கேதீஸ்வரதாஸ்(தவிசாளர் காரைநகர் பிரதேசசபை), கடற்படை பொறுப்பதிகாரி(காரைநகர்),திரு.ச.ச.பாலச்சந்திரன் (அறங்காவலர் பாலாவோடை முத்துமாரி அம்மன் ஆலயம்),திரு.இ.திருப்புகலூரசிங்கம் (ஓய்வு நிலை கிராமசேவகர்),திரு,ஆர் இராசதுரை (கிராமசேவகர் J/42), திரு.K.K.K.V.பரமானந்தம் (கழக ஆதரவாளர்),திரு.த.கோகுலன் (விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்),திரு.சி.கபிலன் (விளையாட்டுக்கழக ஒருங்கிணைப்பாளர்,சமுர்த்தி உத்தியோகத்தர்),திரு.ந.ஹரிகிஷ்ண(உரிமையாளர் கே.எஸ்.எம் தொலைத்தொடர்பு நிலையம்),திரு.சிவஞானம் தினேஷ்சங்கர்(கழக ஆதரவாளர்),திரு.கோகிலராஜ் (களபூமி விளையாட்டுக்கழக ஆலோசகர்) ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.

காரைநகர் இந்துக்கல்லூரியின் வருடாந்;த விளையாட்டுப் போட்டி 31.01.2018 வியாழக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு பாடசாலை மைதானத்தில் இடம்பெற உள்ளது.

 

காரைநகர் இந்துக்கல்லூரியின் வருடாந்;த விளையாட்டுப் போட்டி 31.01.2018 வியாழக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு பாடசாலை மைதானத்தில் இடம்பெற உள்ளது.

கல்லூரி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் இடம்பெறும் இந் நிகழ்வில் காரைநகர் பிரதேச செயலர் திருமதி உஷா சுபலிங்கம் பிரதம விருந்தினராகவும்; காரைநகர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ப.நந்தகுமார் கௌரவ விருந்தினராகவும், தீவக வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் பி.சகீலன் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொள்ள உள்ளனர்.

காரைநகர் வலந்தலை தெற்கு அ.மி.த.க. பாடசாலை (அப்புத்துரை) செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா 26.01.2019 சனிக்கிழமை அன்று பாடசாலை முதல்வர் திரு.க.நேத்திரானந்தன் தலைமையில் நடைபெற்றது.

காரைநகர் கிழவன்காடு கலாமன்றம் நடாத்திய சற்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 172வது இசை ஆராதனை விழா 25.01.2019 வெள்ளிக்கிழமை நடைபெற்றது!

காரைநகர் கிழவன்காடு கலாமன்றம் நடத்தும் சற்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 172வது இசை ஆராதனை விழா 25.01.2019 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு நடைபெறவுள்ளது!

காரைநகர் இந்துக் கல்லூரி வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியின் ஆரம்ப நிகழ்வான ஆண்கள், பெண்களுக்கான வீதியோட்டப் போட்டிகள் 22.01.2019 செவ்வாய்க்கிழமைஅன்று இடம்பெற்றது.

 

 

 

காரைநகர் இந்துக் கல்லூரி வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியின் ஆரம்ப நிகழ்வான ஆண்கள், பெண்களுக்கான வீதியோட்டப் போட்டிகள் 22.01.2019 செவ்வாய்க்கிழமைஅன்று இடம்பெற்றது.

காரைநகா் மணற்காடு ஸ்ரீ முத்துமாாி அம்மன் ஆலய கும்பாபிஷேக தினத்தையொட்டி 20.01.2019 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பாற்குட பவனி காணொளி

காரைநகர் பிரதேச சபை ஊடக அறிக்கை

காரைநகர் பயிரிக்கூடல் அருள்மிகு சிவசுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் 20.01.2019 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்த் திருவிழா காட்சிகள்!

காரைநகா் மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாாி அம்மன் ஆலய கும்பாபிஷேக தினத்தையொட்டி 20.01.2019 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பாற்குட பவனி காட்சிகள்!

காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் பிருந்தாவன கோகுல வாசத்தில் 16.01.2018 புதன்கிழமை நடைபெற்ற மாட்டுப்பொங்கல் விழா (காணொளி)

காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் பிருந்தாவன கோகுல வாசத்தில் 16.01.2019 புதன்கிழமை நடைபெற்ற மாட்டுப்பொங்கல் விழா!

15.01.2019 செவ்வாய்க்கிழமை அன்று தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு காரைநகர் கலாநிதி விளையாட்டுக்கழகம் நடாத்திய சுற்றுப்போட்டிகளின் பரிசளிப்பு விழா

காரைநகர் பயிரிக்கூடல் அருள்மிகு சிவசுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் 14.01.2019 திங்கள்கிழமை நடைபெற்ற 3ம் நாள் இரவு திருவிழா மற்றும் கலை நிகழ்வு!

15.01.2019 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற களபூமி சனசமூக நிலையத்தின் தைப்பொங்கல் விழா!

களபூமி சனசமூக நிலையத்தின் தைப்பொங்கல் விழா நிகழ்வு 15.01.2019 செவ்வாய்க்கிழமை காலை 10:00 மணிக்கு நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் களபூமியின் முன்னைநாள் சமூகத்தின் தலைவர்களும், களபூமி இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களும்,களபூமி விளையாட்டுக் கழகத்தின் வீரர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.அத்துடன் நிலையத்தில் மரக்கன்றுகளும் நாட்டப்பட்டன.

களபூமி சனசமூக நிலையம் 1990ம் ஆண்டுக்கு பின்னர் மீண்டும் தற்போது முன்னர் இயங்கிய இடத்தில் இயங்குவது குறிப்பிடத்தக்கதாகும்.

காரைநகர் பிரதேச சபை குடிநீர் தொடர்பாக ஊடக அறிக்கை

காரைநகர் பயிரிக்கூடல் அருள்மிகு சிவசுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் 14.01.2019 திங்கள்கிழமை நடைபெற்ற 3ம் நாள் இரவு திருவிழா மற்றும் கலை நிகழ்வு!

காரைநகர் பயிரிக்கூடல் அருள்மிகு சிவசுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் 12.01.2019 சனிக்கிழமை நடைபெற்ற கொடியேற்றத் திருவிழா காட்சிகள்!

முதலாம் ஆண்டு நினைவுப் பகிரலும் நன்றி நவிலலும்

பேராசிரியர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் நூல் வெளியீடும்

 

பேராசிரியர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் நூல் வெளியீடும்

பேராசிரியர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் நூல் வெளியீடும் 06.01.2019 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு காரைநகர் இந்துக் கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் காரைநகர் பிரதேச சபைத் தவிசாளர் வி.கேதீஸ்வரதாசன் தலைமையில் இடம்பெற்றது.

‘கெனடி ஓர் பன்முக ஆளுமை’ உள்ளிட்ட இரு நூல்கள் வெளியிடப்பட்டதுடன் பேராசிரியர் ஞாபகார்த்த நினைவுரைகளும் இடம்பெற்றன.

இந் நிகழ்வில் விருந்தினராக யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன், ஓய்வு நிலைப் பேராசிரியர்களான ச.தில்லைநாயகம், செ.யோகராசா மற்றும்தகைசார் பேராசிரியரான ச.சத்தியசீலன்,பேராசிரியர் வே.தர்மரட்ணம்,பேராசிரியர் க.தேவராஜா,பேராசிரியர் தி.வேல்நம்பி, சிரேஷ்ட விரிவுரையாளர்களான கலாநிதி அமரசிறி விக்கிரமரட்ண,எதியோப்பிய பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மெக்கனன் சிமே, ஆகியோரும்

நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ந.ஸ்ரீகாந்தா, க.சுரேஸ்பிரேமச்சந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலர் நினைவுரை ஆற்றினர்.

கடந்த இரு தசாப்தங்களில் காரைநகரில் அரங்கம் நிறைந்த முதலாவது நிகழ்வாக இந்நிகழ்வு பதிவாகின்றது. விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், அரச அலுவலர்கள், புலம்பெயர் நாடுகளிலிருந்து வருகைதந்தோர் பேராசிரியரின் நண்பர்கள் என அரங்கம் நிறைந்த அவையிலே நூல் வெளியீடும் நினைவஞ்சலியும் இடம்பெற்றது. இந் நிகழ்வு மறைந்த பேராசிரியரின் கனதியை பறைசாற்றி நின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

பேராசிரியர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் நூல் வெளியீடும் (பகுதி – 1)

 

 

பேராசிரியர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் நூல் வெளியீடும் (பகுதி – 2)

 

 

 

 

 

காரைநகர் பயிரிக்கூடல் அருள்மிகு சிவசுப்பிரமணியசுவாமி கோவில் மஹோற்சவ விஞ்ஞாபனம் – 2019