வடகடல் நிறுவனத்தின் தலைவராக மீண்டும் தியாகராசா பரமேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

வடகடல் நிறுவனத்தின் தலைவராக மீண்டும் தியாகராசா பரமேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை (31ம் திகதி) தலைமை அமைச்சர் ரணில்விக்கிரமசிங்கவிடம் இதற்கான நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட அவர் நேற்றைய தினம் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கெண்டார்.

மறைந்த முன்னாள் இந்து கலாசார அமைச்சர் தியாகராசா மகேஸ்வரனின் சகோதரரான இவர் கடந்த மூன்று வருடங்களாக வடகடல் நிறுவனத்தின் தலைவராகச் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

இவரின் முயற்சியால் கடந்த வருடம் காரைநகர் சிவன் கோவில் மூன்றாம் வீதியில் பல மில்லியன் ரூபா செலவில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

சுமார் இரண்டு மில்லியன் ரூபா செலவில் வடக்கு வீதியில் நவீன வசதிகளுடன் கூடிய மலசலகூடத் தொகுதி அமைக்கப்பட்டு வருகின்றமை

அத்துடன் ஆலய வடக்கு வீதியில் உள்ள அம்மா மடமும் துரிதகதியில் புனரமைக்கப்பட்டு வருகின்றது. அம்மா மட வளாகத்தில் காணப்பட்ட ஆறு கிணறுகள் இருபது இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.

10 மில்லியன் ரூபா செலவில் ஆறு அக்ரகாரங்களும் அமைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இவ்வாண்டும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளைக் காரைநகரில் முன்னெடுப்பதற்கு அவர் தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகின்றது.