Tag: காரைச் செய்திகள்

காரைநகர் களபூமி இந்து இளைஞர் மன்றத்தின் விருந்துபசார மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டல் நிகழ்வு 16.09.2019 திங்கட்கிழமை நடைபெற்றது.

 

காரைநகர் களபூமி இந்து இளைஞர் மன்றத்தின் விருந்துபசார மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டல் நிகழ்வு 16.09.2019 திங்கட்கிழமை காலை10:00 மணிக்கு மன்றத்தின் தலைவர் திரு.ச.சபேசன் தலைமையில் நடைபெற்றது.

திரு.சண்முகம் சிவஞானம்(கலை மாடக்கோன்)அவர்களின் பூரண அனுசரணையுடன் அமைக்கப்படவுள்ள மண்டபத்துக்கான அடிக்கல்லினை திரு.சண்முகம் சிவஞானம்(கலை மாடக்கோன்)அவர்களினால் சுபமுகூர்த்த வேளையில் அடிக்கல் நாட்டப்பட்டது.

நிகழ்வில் காரை அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் திரு.இராமநாதன் சிவசுப்பிரமணியம் அவர்களும் மற்றும் இளைஞர்கள், யுவதிகள், நலன்விரும்பிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

காரைநகர் சிதம்பராமூர்த்தி கேணியடி ஞான வைரவர் ஆலயத்தில் 11.09.2019 புதன்கிழமை நடைபெற்ற மஹா கும்பாபிஷேகம் காணொளி!

காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தின் சுந்தர நிலா பல்சுவை மலர் வெளியீட்டு நிகழ்வு! (30.07.2019)

காரைநகர் சிதம்பராமூர்த்தி கேணியடி திருவருள்மிகு ஞான வைரவப் பெருமான் ஆலயத்தில் 11.09.2019 புதன்கிழமை நடைபெற்ற மஹா கும்பாபிஷேக காட்சிகள்!

காரைநகர் களபூமி விளானை கிழக்கு பிரதான வீதியில் ஆரம்ப சுகாதார நிலையம் 27/08/2019 செவ்வாய்க்கிழமை அன்று காலை 11:00 மணிக்கு உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தின் சுந்தர நிலா பல்சுவை மலர் வெளியிட்டு நிகழ்வு 30.07.2019 செவ்வாய்க்கிழமை காலை 9:00 மணிக்கு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

 

காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தின் சுந்தர நிலா பல்சுவை மலர் வெளியிட்டு நிகழ்வு 30.07.2019 செவ்வாய்க்கிழமை காலை 9:00 மணிக்கு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

பாடசாலையின் முதல்வர் திரு.அ.சாந்தகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக வைத்திய கலாநிதி.சுப்பிரமணியம் சுவாமிநாதன் (ஓய்வு பெற்ற வைத்திய அதிகாரி) அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு.ஆ.குமரேசமூர்த்தி (கோட்டக் கல்வி அலுவலர்,காரைநகர்) அவர்களும், கௌரவ விருத்தினார்களாக திரு.அ.தில்லையம்பலம்(ஓய்வு நிலை அதிபர்), திரு.ச.தனுஜன்(கலாசார உத்தியோகத்தர் பிரதேச செயலகம்,காரைநகர்), திரு.தி .கோபிநாத் (சூழலியளாளர்) அவர்களும் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.அத்துடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன் இனிதே நிறைவுற்றது.

மலர் வெளியீட்டுக்கான அனுசரணையினை அமரர் திரு.திருமதி கோபாலபிள்ளை தம்பதிகளின் மகன் திரு.கோ.தவக்குமார் அவர்கள் வழங்கியிருந்தார்.

 

 

 

 

காரைநகர் சிதம்பராமூர்த்தி கேணியடி திருவருள்மிகு ஞான வைரவப் பெருமான் ஆலயத்தில் 08.09.2019 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 1ம் நாள் கும்பாபிஷேககிரியைகள்!

காரைநகர் சிதம்பராமூர்த்தி கேணியடி திருவருள்மிகு ஞான வைரவப் பெருமான் ஆலய புனராவர்த்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் – 2019

A2 sithampara moorthy

காரைநகர் அபிவிருத்தி சபையின் 27.03.2017 – 05.08.2019 வரையிலான செயற்பணி அறிக்கை!

 

Seyatpani Report PDF

காரைநகர் கிழவன்காடு கலாமன்ற மாணவர்கள் நடாத்திய நல்லூர் முருகன் உற்சவகால தெய்வீக இசையரங்கு காணொளி! (10.08.2019)

காரைநகர் அபிவிருத்திச் சபையின் தலைவராக நூற்றுக்கணக்கான காரைநகர் மக்களின் மத்தியில் ஏகமனதாகத் தெரிவாகி உள்ளார் இராமநாதன் சிவசுப்பிரமணியம்.

 

காரைநகர் அபிவிருத்திச் சபையின் தலைவராக நூற்றுக்கணக்கான காரைநகர் மக்களின் மத்தியில் ஏகமனதாகத் தெரிவாகி உள்ளார் இராமநாதன் சிவசுப்பிரமணியம்.

காரைநகர் அபிவிருத்திச் சபையின் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் 11ம் திகதி (11.08.2019) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு காரைநகர் சைவமகா சபை மண்டபத்தில் சபையின் தலைவர் நா.பாலகிருஸ்ணன் தலைமையில் இடம்பெறது. இக் கூட்டத்திலேயே சபையின் புதிய தலைவராக இடைப்பிட்டியைச் சேந்தவரும் ஓய்வு நிலை வங்கியாளரும் இலண்டனில் வசித்து தற்போது காரைநகரில் நிரந்தரமாகக் குடியேறி பல்வேறு அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டு வருபவருமான இராமநாதன் சிவசுப்பிரமணியம் தெரிவு செய்யப்பட்டார்.

இதில் செயலாளராக சுப்பிரமணியம் செந்தூரனும் (தங்கோடை),பொருளாளராக முருகேசு பரம்தில்லைராசாவும் (களபூமி), உப தலைவராக கணேசபிள்ளை அருள்ராசாவும் (சின்னாலடி), உப செயலாளராக கை.நாகராசாவும் (இலகடி) தெரிவு செய்யப்பட்டதுடன் நிர்வாக சபை உறுப்பினர்களாக 09 கிராம சேவையாளர் பிரிவகளில் இருந்தும் ஒவ்வொருவர் தெரிவாகி உள்ளனர்.

வரதராசா சிறிரங்கன்,

விக்னேஸ்வரன் ஜெயகாந்தன்,

இராசசிங்கம் திருப்புகழூர்சிங்கம்,

நித்தியானந்தம் சபேசன்,

வேலுப்பிள்ளை மாணிக்கம்,

கந்தசாமி விக்னேஸ்வரன்,

வேலுப்பிள்ளை சபாலிங்கம்,

நாகலிங்கம் பாலகிருஸ்ணன்,

ஆண்டிஜயா அருள்ராசா ஆகியோர் உறுப்பினர்களாக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

காரைநகர் கிழவன்காடு கலாமன்ற மாணவர்கள் நடாத்திய நல்லூர் முருகன் உற்சவகால தெய்வீக இசையரங்கு 10.08.2019 சனிக்கிழமை நடைபெற்றது.

எழுபதாவது ஆண்டு நிறைவு விழாவினைக் காணும் களபூமி சனசமூக நிலையம்

 

எழுபதாவது ஆண்டு நிறைவு விழாவினைக் காணும்

களபூமி சனசமூக நிலையம்

எஸ்.கே.சதாசிவம்

ஒரு சமூகத்தின் அங்கத்தவர்கள் சமூகத்தின் ஒன்றிணைந்த செயற்பாட்டிற்காகவும் சமூகம் சார்ந்த உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காகவும் பொதுவான தகவல்களைப் அறிந்து கொள்வதற்காகவும் ஒன்று சேருமிடம் சனசமூக நிலையம் ஆகும். மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பின்னர் மாணவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தை பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவதற்க்கு சனசமூகநிலையங்கள் வகை செய்கின்றன.

காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவில் இயங்குகின்ற பதினாறு சனசமூக நிலையங்கள் காரைநகர் பிரதேச சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. களபூமி சனசமூக நிலையம் பதினாறு சனசமூக நிலையங்களில் பழமை வாய்ந்தது எனக் கருத இடமுண்டு.

களபூமி சனசமூக நிலையம் 1949ம் ஆண்டளவில் காரைநகர் இந்துக் கல்லுரியில் பௌதீக கணித ஆசிரியராக கடமையாற்றிய திரு.பொ.சங்கரப்பிள்ளை எழுதுவினைஞராக கடமையாற்றிய திரு.பொ.சோமசுந்தரம் ஆகியோருடன் இணைந்து செயலாற்றிய இளைஞர் குழாத்தினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்துக்கு அருகாமையில் பலகையினால் அமைக்கப்பட்ட மேற்தளத்தை உடைய கட்டிட தொகுதியில் சன சமூக நிலையம் இயங்கியது. இக் கட்டிட தொகுதி அமைந்திருந்த சுற்றாடல் அன்றைய கால கட்டத்தில் பிரபல்யம் பெற்றிருந்தது. இக் கட்டிட தொகுதியில் சோமு ஐயர் என்பவருடைய பிரபல்யமான ஆடை விற்பனை நிலையம் உபதபாற் கந்தோர், புத்தகக்கடை, பலசரக்குகடை, துவிச்சக்கரவண்டி திருத்தகம், சன சமூக நிலையம் என்பன இயங்கின.

அன்றைய காலகட்டத்தில் களபூமியின் ஏனைய குறிச்சிகளில் குறிப்பிட்டுக் சொல்லக் கூடிய பலசரக்கு கடைகள் இல்லாமையால் அனைத்து மக்களும் இக் கடைகளுக்கு வருவது வழமையாக இருந்தது. திரு.கார்த்திகேசு உபாத்தியார் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய காலப் பகுதி. க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்கு தமிழ் மொழியில் தோற்றவிரும்புகின்ற காரைநகரைச் சேர்ந்த மாணவர்கள் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தில் கல்வி கற்றனர். திரு.கார்த்திகேசு உபாத்தியார் காலத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம் காத்திரமான கல்விப்பணி ஆற்றியது.

சன சமூக நிலையத்தில் பத்திரிகைகள் வாசிப்பதற்கான ஏற்பாடுகள் இருந்தன. ஆங்கிலப் பத்திரிகைகளும் வாசிப்பதற்க்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நுககொடையில் வர்த்தக ஸ்தாபனம் நடாத்தி வந்த களபூமி கொம்பாவோடையை சேர்ந்த திரு.க.ஆறுமுகம் அவர்கள் கொழும்பில் வெளியாகும் தினசரிப்பத்திரிகைகளை வாசித்தபின் அன்றே தபாலில் சேர்ப்பதாகவும் மறுதினம் சனசமூக நிலையத்திற்க்கு வந்து சேர்வதாகவும் குறிப்பிட்டார்.

அன்றைய காலகட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் தபால் அமைச்சராக பதவி வகித்த திரு.சிற்றம்பலம் சன சமூக நிலையத்திற்க்கு வானொலி ஒன்றை அன்பளிப்பு செய்தமையால் வானொலி கேட்பவர்களும் சனசமூக நிலையத்துக்கு வருகை தந்தனர்.

காரைநகர் இந்துக்கல்லுர்ரி பழைய மாணவர் சங்கத்தால்  சித்திரை விடுமுறை காலத்தில் காரைநகர் இந்துக் கல்லுரி மைதானத்தில் நடாத்தப்படும் அகில காரைநகர் மெய்வல்லுனர் போட்டிகளில் சனசமூக நிலைய இளைஞர்கள் பங்குபற்றினர்.கரப்பந்தாட்ட விளையாட்டுத்திடல் சனசமூக நிலையத்திற்குபின்புறம் அமைந்திருந்தது.வேதர்அடைப்பு இளைஞர்களுடன் கரப்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றன.தெருவடிப் பிள்ளையார் கோவிலுக்கு அண்மிய பகுதியில்மாலை வேளைகளில் உதைபந்தாட்டத்தில் இளைஞர்கள் ஈடுபடுவர்.பொன்னாவளை,சத்திரந்தை என இரு அணிகளாக விளையாடியதாகவும் வலந்தலை அணியுடனான போட்டிகளில் களபூமி அணி என பங்குபற்றியதாக பொன்னாவளையை சேர்ந்த திரு.கந்தர் நடராசா குறிப்பிட்டார்.304எனஅழைக்கப்படும் விளையாட்டு விளையாடவும் சனசமூக நிலையத்தில் வசதி இருந்தது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் வர்த்தகம் செய்யும் களபூமி வர்த்தகர்கள் அரச அலுவலர்கள் காரைநகருக்கு வருகை தரும் பொழுது சனசமூக நிலையம் அவர்களின் ஒன்று சேரும் இடமாகவும் பொழுது போக்கு இடமாகவும் அமைந்திருந்தது.சன சமூக நிலையம் வெளியூர் சென்றவர்களுக்கும் உள்ளுரில் வாழ்ந்தவர்களுக்கும் இடையே உறவுகள் மேம்பட சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்தது.

இக் காலப்பகுதியில் களபூமியில் நாடாளாவிய ரீதியில் வெற்றி பெற்ற வணிகர்களாகவும், தொழிற் பண்பாட்டாளர்களாகவும் பலர் காணப்பட்டனர்.சட்டத்துறை வல்லுனர்கள் புகழ் பெற்ற விவசாயிகள் என பல்வேறு முயற்சிகளிலும் முன்னிலையில் நின்றவர்கள் களபூமியில் வாழ்ந்தனர்.களபூமி எனும் ஊர் பெயர் அப்பகுதியின் உயர் அந்தஸ்தை குறித்து நிற்பதாக அம் மண்ணின் மைந்தர்கள் கருதுகின்றனர்.அன்றைய தலைமுறையின் ஞாபகங்கள் உயர் அந்தஸ்த்துக்கு உரித்துடையவர்கள் என்பதை கூறி நிற்கின்றது.

உலகத்தை பாதுகாக்கும் உணவு தரும் உழவுத் தொழில் செய்வோரும், அரச உத்தியோகங்கள் பெற்று வாழ்வோரும்,வியாபாரத்துடன் ஒப்பந்தத் தொழிலையும் செய்து, நல்ல பழக்கவழக்கங்களை கைவிடாது கடைப்பிடித்து வாழ்பவர் செல்வம் கொழிக்கும் களபூமியில் வாழ்பவர் என ஈழத்து சிதம்பர புராணத்தில் புலவர்மணி சோ.இளமுருகனார் குறிப்பிட்டுள்ளார்.

1960 களில் களபூமி சனசமூக நிலையத்திற்கான புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது. திரு. க.அமிர்தசிங்கம் அவர்கள் தலைமையில் திரு.க.சபாரத்தினம்(V.C) ஆகியோரை உள்ளடக்கிய இளைஞர் குழாம்  சனசமூகநிலைய நிர்வாகத்தை பொறுப்பேற்றுக் கொண்டது. சனசமூகநிலையம் தொடர்ந்தும் அக்கட்டிடத்திலேயே இயங்கியது.உபதபாலகம் விளானையில் இயங்க ஆரம்பித்தது.களபூமியின் ஏனைய குறிச்சிகளில் கடைகள் ஆரம்பிக்கப்பட்டமையால் சனசமூகநிலைய கட்டடத்தில் இயங்கிய கடைத் தொகுதிகள் முக்கியத்துவத்தை இழந்தன.கரப்பந்தாட்டம் தொடர்ந்தும் சனசமூக நிலையத்தின் பின் பகுதியில் விளையாடப்பட்டு வந்தது.

சனசமூக நிலைய நிர்வாகிகள் கல்வி சார்ந்த விடயங்களில் அக்கறை செலுத்தினர்.சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தின் வளர்ச்சியில் பங்குபற்றினர்.மக்களின் அறிவையும்,அறிவுத் தேடலையும் வலுவூட்டுவதற்காக கலைநிகழ்வுகள் பட்டிமன்றங்களை சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தில் நடத்தினர்.திக்கரை,நந்தாவில் பாலர் பாடசாலைகளின் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டு உழைத்தனர்.

1970 களில் காரைநகரும் காரைநகரின் மக்களின் வாழ்வும் முன்னோக்கி நகர்ந்த காலமாகும். 1970 களில் சனசமூகநிலையங்கள் விளையாட்டுக் கழகங்கள் மீள் எழுச்சி பெற்றதுடன் புதிய அமைப்புக்களும் உருவாகின.1970 களின் ஆரம்பகாலப் பகுதியில் சனசமூக நிலையத்திற்கான புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது.சனசமூகநிலையத்தை தெருவடிபிள்ளையார் கோவில் பகுதியில் இயங்க வைப்பது பொருத்தமானது எனக் கருதிய சனசமூகநிலைய நிர்வாகிகள் தெருவடிபிள்ளையார் கோவிலில் அமைந்திருந்த கொட்டாஞ்சேனை வர்த்தகர் திரு.வேலுப்பிள்ளையின் கட்டிடத்தில் இயக்க ஆரம்பித்தனர்.

தெருவடிப்பிள்ளையார் கோவில் பகுதியில் காரைநகர் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் வர்த்தக நடவடிக்கைகளுக்காக கட்டிட தொகுதி ஒன்று அமைக்கபட்டது.சனசமூகநிலைய நிர்வாகிகள் கட்டிட தொகுதியில் ஒரு பகுதியை சனசமூகநிலைய பயன்பாட்டிற்க்கு தந்து உதவுமாறு வட்டுக்கோட்டை தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும்,காரைநகர் பல நோக்கு கூட்டுறவு சங்க தலைவருமான திரு.ஆ.தியாகராசாவிடம் வேண்டுகோள் ஒன்றை சமர்பித்தமையை  ஏற்று கட்டிடத்தின் கிழக்குப் பகுதியை பயன்படுத்த அனுமதி வழங்கினார் இன்று வரை இக் கட்டிடத்தில் சனசமூக நிலையம் இயங்கி வருகின்றது.

இக் காலப்பகுதியில் களபூமியின் அனைத்து குறிச்சிகளிலும் இருந்து சனசமூக நிலையத்துக்கு வருகை தரும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. கரம்,சதுரங்கம் போன்ற உள்ளக விளையாட்டுக்கள் கரபந்து,உதைபந்து, துடுப்பாட்டம்,சைக்கிள் ஓட்டம், மெய்வல்லுனர் நிகழ்வுகள் போன்று அனைத்து விளையாட்டு நிகழ்வுகளிலும் பங்குபற்றும் திறன் வாய்ந்த இளைஞர்கள் சனசமூக நிலையத்தில் இணைந்து இருந்தனர். இளைஞர்களின் எதிர்பார்புக்களை நிறைவு செய்யக்கூடிய பொழுது போக்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டிய தேவை சனசமூகநிலைய நிருவாகிகளுக்கு ஏற்பட்டது.

சனசமூக நிலையத்தினை இயக்குவதற்க்கு தேவையான நிதியை தேடிக் கொள்வதற்காக சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தில் கலைநிகழ்ச்சி ஒன்றை நடாத்தினார்.திக்கரை முருகமூர்த்தி ஆலய உற்சவ காலங்களில் ஆலய வளாகத்தில் தேநீர் சாலையை நடாத்தினர் சனமூக நிலையத்திற்கான நிதியினை கையாள்வதற்க்கு வங்கிக் கணக்கு ஒன்றினை ஆரம்பித்தனர்.

தினசரிப் பத்திரிகைகள் சனசமூகநிலையத்தில் கிடைக்கப்பெற்றது.தினசரிப்பத்திரிகைகள் இடுவதற்க்கும் ஏனைய தேவைகளுக்குமான தளபாடங்கள் கொள்வனவு செய்யப்பட்டன.உள்ளக விளையாட்டிற்கும் ஏனைய விளையாட்டுகளுக்குமான உபகரணங்களும் கொள்வனவு செய்யப்பட்டன.

சனசமூகநிலையத்திற்க்கு சொந்தமாக கட்டிடம் ஒன்றை அமைப்பதற்க்கு களபூமி ஆலடிப் பகுதியில் காணி கொள்வனவு செய்யப்பட்டது.அக் காணியின் அயலவர்கள் அக் காணியை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டியமையால் அக்காணி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இளைஞர்கள் ஓவ்வொரு காலங்களுக்கும் ஏற்ப விளையாட்டு நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தினர்.பாலாவோடை அம்மன் ஆலயத்துக்கு செல்லும் வீதியில் கிழக்கு வீதிக்கு அண்மிய தரவை பகுதியிலும,திக்கரை முருகன் ஆலயத்துக்கு செல்லும் வீதியில் கிழக்கு வீதிக்கு அண்மிய தரவை பகுதியிலும் துடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுப்பிரமணியம் வீதி வயல் பகுதிக்கு அண்மிய சத்திரந்தை பகுதியில் காணப்பட்ட காணியில் உதைபந்தாட்டத்தில் ஈடுபட்டனர்.சுந்தரமூர்த்தி நாயனார்ஆரம்ப பாடசாலையின்(ஆலடி) முன் பகுதியில் கரப்பந்தாட்டத்தில் ஈடுபட்டனர்.பத்திரிகை வாசித்து முடிந்த பின்னர் இளைஞர்கள் தமக்கு பிடித்தமான விளையாட்டு திடலுக்கு செல்வர்.

சனசமூகநிலையத்துடன் தொடர்புடைய இளைஞர் குழாம் ஒன்று எந்தவொரு விளையாட்டிலும் ஈடுபடாது  தெருவடிப் பிள்ளையார் ஆல மர சுற்றாடலில் அமர்ந்து இருப்பர்.அங்கு அனைத்து விடயங்களும் கலந்துரையாடப்படும்.சனசமூகநிலையத்தின் அனைத்து செயற்பாடுகளுக்கும் பக்கபலமாக இருப்பர்.

1982 ஆம் ஆண்டு களபூமி சனசமூகநிலையம் தனது 33வது ஆண்டு விழாவை கலை நிகழ்வுகள,விளையாட்டு நிகழ்வுகளுடன்  சிறப்பாக கொண்டாடியது. காரை விளையாட்டுக் கழகம,கோவளம் விளையாட்டுக் கழகம்,சோலையான் விளையாட்டுக் கழகம்,வியாவில் விளையாட்டுக்கழகம்,நீலிப்பந்தனை அம்பாள் விளையாட்டுக் கழகம் ஆகிய ஐந்து விளையாட்டுக் கழகங்களின் சார்பில் பங்கு பற்றிய பத்து உதைபந்தாட்ட அணிகளுக்கு இடையே இரண்டு வாரங்களாக காரைநகர் இந்துக்கல்லூரி மைதானத்தில்உதைபந்தாட்ட போட்டி நடைபெற்றது.சைக்கிள் ஓட்டப் போட்டி,வீதி ஓட்டப்போட்டி என்பனவும் நடைபெற்றன.

சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தில் நடைபெற்ற 33 வது ஆண்டு விழாவின் பரிசளிப்பு,கலை நிகழ்வுகளிற்கு ஊர்காவற்றுறை மக்கள் வங்கி முகாமையாளர் திரு.கதிர்வேலாயுதபிள்ளை பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

வாரிவளவு நல்லியக சபையின் புதுவருட விளையாட்டு நிகழ்வுகளிலும், ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் பிரிவில் விளையாட்டுக்கழகங்களுக்கு இடையே நடைபெறும் போட்டிகளிலும்  களபூமி சனசமூக நிலையம்  தனி அணியாக பங்குபற்றும் வீரர்களை தன்னகத்தே கொண்டுயிருந்தும் காரை விளையாட்டுக் கழகத்துடன் இணைந்து பங்குபற்றினர்.களபூமி சனசமூக நிலைய இளைஞர்கள் சைக்கிள் ஓட்டம்,உதைபந்தாட்டம,துடுப்பாட்டம் மெய்வல்லுனர் நிகழ்வுகளிலும் பங்குபற்றி காரை விளையாட்டுக் கழகத்திற்கு பல வெற்றிகளை பெற்றுத்தந்தனர்.

இக்காலப் பகுதியில் காரைநகரின் சமூக வலுவில் களபூமி காத்திரமான வகிபாகத்தை கொண்டிருந்தமைக்கு களபூமி சனசமூகநிலையத்தில் இணைந்திருந்த கட்டுப்பாடான,விசுமார்த்தமான இளைஞர் குழாம் அடித்தளமாக அமைந்திருந்தது.காரைநகரின் சமூக நிறுவனங்கள் வினைத்திறன் மிக்கதாக, சமூகம் எதிர்பார்த்த சேவைகளை வழங்க,வலுவுள்ள இயங்கு நிலையில் அமைவதற்கு களபூமி சனசமூக நிலையத்தின் முதல் நிலை உறுப்பினர்களின் செயற்றிறன் பாராட்டுக்குரியது.

1991 ம் ஆண்டு இடப்பெயர்வு வரை களபூமி சனசமூக நிலையத்தின் மூன்றாவது நிருவாகத்தினர் களபூமி சனசமூகநிலையத்தினை சிறப்பாக இயக்கிவந்தனர்.களபூமி சனசமூக நிலையம் சமூகத்துக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு ஆற்றிய பணிகளையும்,சனசமூக நிலையத்தின் அவசியத்தையும் உணர்ந்த இன்றைய இளைஞர்கள் 28 ஆண்டுகளுக்கு பின்னர் களபூமி சனசமூக நிலையத்தை மீள இயக்குவதற்க்கு எடுத்த முயற்சிகள் பாராட்டுக்குரியது.நாடு கடந்து வாழும் களபூமி வாழ் இளைஞர்களும் சமூக நலன்களில் அக்கறை உடையோரும் களபூமி சனசமூக நிலையத்தை மீள இயக்குவதற்க்கும், சன சமூக நிலையம் மேற்கொள்ள இருக்கும் அபிவிருத்தி பணிகளுக்கும் கரம் கொடுக்க முன் வந்தமை பாராட்டுக்கு உரியது.

தலைமுறை ஞாபகங்களை மீட்டுப் பார்த்தல் பழம் பெருமை பேசுவதற்காக அன்றி வரலாறு எமக்கு வழிகாட்டியாக அமையும் என்பதற்கே ஆகும்.

ஒரு இனம் தனது மூதாதையர்களின் வாழ்வியலின் அம்சங்களை அறியாமல் உணராமல் இருக்குமாயின் அந்த இனம் பற்றற்ற நாடோடித்தன்மையுடைய இனமாக மட்டுமே இருக்கும்.அது மட்டுமின்றி அத்தகைய இனங்கள் இனத்துவ அம்சங்களில் இருந்து விலகிச் சென்று விடும் என்பது வரலாற்று உண்மை.

 “ A generation which ignores history has no past and no future”

                                                                                  Lazarus Long

“வரலாற்றைப் பதிவில் வைக்கத் தவறிய சமூகத்துக்கு இறந்த காலமும் இல்லை எதிர் காலமும் இல்லை”

 

 

Collection of 1982 News Paper Cutting

 

 

 

 

 

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 02.08.2019 வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேவி மஹோற்சவ தேர்த் திருவிழா காணொளி!

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 02.08.2019 வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேவி மஹோற்சவ தேர்த் திருவிழா காட்சிகள்!

காரைநகர் வியாவில் ஜயனார் ஆலயத்தில் 30.07.2019 செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தேர்த் திருவிழா காட்சிகள்!

காரைநகர் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் புதிய அலுவலக கட்டிடத் திறப்பு விழா காணொளி! (28.07.2019)

காரைநகர் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் புதிய அலுவலக கட்டிடத் திறப்பு விழா 28.07.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.

காரைநகர் அபிவிருத்திச் சபையின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபைத் தெரிவும்!

காரை சக்தி இலவசக்கல்வி நிலையத்தால் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு 21.07.2019 அன்று சிறப்பாக நடைபெற்றது.

காரைநகர் திண்ணபுரம் சிவன் கோவில் ஈழத்துச் சிதம்பர தேவஸ்தானம் வருடாந்த தேவி மஹோற்சவம் – 2019

காரைநகர் கருங்காலி கேசடை தெய்விரானைப்பதி கதிர்காமசுவாமி ஆலயத்தில் 15.07.2019 திங்கட்கிழமை நடைபெற்ற மஹா கும்பாபிஷேக காணொளி!

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 08.07.2019 திங்கட்கிழமை நடைபெற்ற ஆனி உத்தரத் திருவிழா காட்சிகள்!

காரைநகர் கிழவன்காடு கலாமன்ற அறநெறிப் பாடசாலை நடாத்திய மாணிக்கவாசகர் குருபூசை விழா 06.07.2019 சனிக்கிழமை கிழவன்காடு கலாமன்ற மனோன்மணி கலையரங்கில் நடைபெற்றது.

செல்வி.விமலாதேவி விஸ்வநாதன் (ஓய்வுநிலை அதிபர் வலந்தலை வடக்கு அ.த.க பாடசாலை) அவர்களின் சேவை நலன் பாராட்டு விழா 05.07.2019 வெள்ளிக்கிழமை வலந்தலை வடக்கு அ.த.க பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

தில்லை மயான அபிவிருத்தி

 

தில்லை மயான அபிவிருத்தி
எஸ்.கே.சதாசிவம்

காரைநகர் கிழக்கு பிரதேச மக்கள் தங்கள் இறுதிக் கிரியைகளை நிறைவேற்றுவதற்க்கு காரைநகர் கிழக்கு வீதியில் அமைந்துள்ள தில்லை மயானத்தை பயன்படுத்துகின்றனர்.கடந்த காலங்களில் கடற்கரையை அண்மித்த இச் சதுப்பு நிலப் பிரதேசத்தில் தில்லைச் செடிகள் நிறைந்து காணப்பட்டமையால் தில்லைச் சுடலை என அழைக்கப்படலாயிற்று.மாரிகாலங்களில் தில்லைச்செடியில் ஊதா நிற மலர்கள் மலரும்.மூலிகைப் பெறுமானம் மிக்க தில்லைச் செடிகள் ஐந்து மீற்றர் உயரம் வரை வளரக் கூடியவை.

1928 இல் காரைநகரின் முதலாவது கிராம சபை ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியில் தில்லைச் சுடலை ஆரம்பிக்கப்பட்டதாக இப்பகுதியில் வாழ்கின்ற மூத்த குடிமக்களின் கருத்தாக உள்ளது.ஆரம்ப காலத்தில் தில்லைப் பகுதியில் மூன்று சுடலைகள் உபயோகத்தில் இருந்த போதும் வசதியான இடத்தில் அமைந்துள்ள தற்போதய சுடலை மாத்திரம் பாவனையில் உள்ளது.

ஆரம்ப காலங்களில் பாவனையில் இருந்த மடமும் கிணறும் அழிந்து போய் உள்ளது.யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு தி.மகேஸ்வரனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் தற்போது அமைந்துள்ள எண்கோண வடிவிலான இளைப்பாறு மண்டபம்,கிணறு, வரவேற்பு வளைவு என்பன 26.10.2003ல் கட்டப்பட்டது.இப் பணிகளை திக்கரை கிராம அபிவிருத்தி சங்கம் நிறைவேற்றியது.

காரைநகர் கிழக்கு பிரதேச மக்கள் தில்லை மயானத்தை அபிவிருத்தி செய்து தருமாறு இலண்டன் காரை நலன்புரி சங்கத்திடம் கேட்டுக் கொண்டதற்கு அமைவாக இலண்டன் காரை நலன்புரி சங்கத்தின் அனுசரணையுடன் காரைநகர் பிரதேச சபை அபிவிருத்தி பணிகளை நிறைவேற்றியுள்ளது.இரு உடல்கள் ஒரே நேரத்தில் தகனம் செய்யக்கூடியவாறு தளம் அமைக்கப்பட்டு எரி கொட்டகை போடப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் சமதளம் அற்ற நிலையில் காணப்பட்ட மயானம் மண் நிரப்பபட்டு சமதரையாக செப்பனிடப்பட்டுள்ளது.இறுதிக் கிரியைகளை வசதியாக மேற்கொள்ளவும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் இறுதி கிரியைகள் நடைபெறும் இடத்தில் நின்று கலந்து கொள்ளவும், வாகனங்கள் தரித்து நிற்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அடித்தளம் அமைக்கப்பட்டு100மீற்றர் நீளமுள்ள 3 அடி உயரமான கட்டுமானத்தின் மூலம் மயானம் எல்லைப்படுத்தப்பட்டுள்ளது.கடந்த காலத்தில் கட்டப்பட்ட கிணறு திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு பிரதான வீதியில் இருந்து மயானத்திற்கு கிழக்கே அமைந்துள்ள வேணண் அணைக்கட்டு வரையிலான 340 மீற்றர் வீதிக்கான அபிவிருத்தி பணிகள் பகுதி பகுதியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.பிரதான வீதியில் இருந்து 40 மீற்றர் நீளம் உள்ள பாலாவோடை ஊரி வீதி  வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் செப்பனிடப்பட்டுள்ளது.வரவேற்பு வளைவில் இருந்து பிரதான வீதிப் பக்கமாக 65 மீற்றர் நீளமுள்ள பகுதியை அபிவிருத்தி செய்வதற்கு கௌரவ கல்வி ராஜாங்க அமைச்சர் திருமதி விஐயகலா மகேஸ்வரன் அவர்களால் கம்பெரெலிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 2 மில்லியன் ரூபா ஓதுக்கப்பட்டுள்ளது.65 மீற்றர் வீதிப் பகுதி 22அடி அகலம் உடையதாக 2 அடி உயரத்தப்பட்டு இரு கரைகளுக்கும் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு செப்பனிடும் பணிகள் நடைபெற்று கொண்டு இருக்கின்றது.

மீதமுள்ள வேணண் அணைக்கட்டு வரையிலான 235 மீற்றர் வீதியும் 22 அடி அகலம் உடையதாக 2 அடி உயர்த்தப்பட்டு தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டடு மழைகாலத்தில் மழைநீர் இரு பக்கமும் போய் வரக் கூடியவாறு இரண்டு மதகுகள் அமைத்து செப்பனிடுவதற்கான முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

22 அடி அகலமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ள இவ் வீதியில் எதிர்காலத்தில் இரண்டு வாகனங்கள் எதிர் எதிர் திசையில் இலகுவாக பயணிக்கமுடியும்.கடந்த ஆண்டு மழைக்காலத்தில் இறுதி கிரியைகளுக்கு தில்லைச் சுடலைக்கு செல்வதில் மக்கள் பாரிய இன்னல்களை எதிர் நோக்கி இருந்தனர்.தில்லை மயான அபிவிருத்திக்கு அனைத்து தரப்புக்களிலும் இருந்து உதவிகள் கிட்டியமையால் தில்லை மயானம் வசதி மிக்க மயானமாக மாற்றம் பெற்றுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

காரைநகர் கிழவன்காடு கலாமன்றம் அறநெறிப் பாடசாலை நடத்தும் மாணிக்கவாசகர் குருபூசை விழா 06.07.2019 சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு கிழவன்காடு கலாமன்ற மனோன்மணி கலையரங்கில் நடைபெறவுள்ளது.

காரைநகர் களபூமி தன்னையம்பதி திருவருள்மிகு தன்னை சித்தி விநாயகர் ஆலயம் விகாரை வருஷம் 2019 ஆம் ஆண்டு அலங்கார உற்சவ விஞ்ஞாபனம்

காரைநகர் களபூமி தன்னையம்பதி

திருவருள்மிகு தன்னை சித்தி விநாயகர் ஆலயம்

விகாரை வருஷம் 2019 ஆம் ஆண்டு

அலங்கார உற்சவ விஞ்ஞாபனம்

ஈழவள நாட்டின் வட-மேற்பாகத்தின் காரைநகரின் கிழக்குத் திசையில் வேண்டுவோர் வேண்டுவதைத் தந்தருளும் பொருட்டு களபூமி தன்னையம்பதியில் கோவில் கொண்டு வீற்றிருந்து அருள்பாலித்துக் கொண்டு விளங்கும் தன்னை சித்தி விநாயகப்பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவப்பெருவிழா நிகழும் மங்களகரமான விகாரி வருஷம் ஆனித்திங்கள் 22ஆம் நாள்(07-07-2019) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்து பத்து(10) தினங்கள் உற்சவம் நடைபெறுவதற்கு எம்பெருமான் திருவருள் கைகூடியுள்ளது.அத்தருணம் விநாயகப்பெருமான் அடியார்கள் அனைவரும் ஆலயத்துக்கு வருகைதந்து விநாயகப்பெருமானை தரிசித்து பேரின்பப் பெருவாழ்வை பெற்றுய்யும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

 

காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி ஆலயத்தில் 03.07.2019 புதன்கிழமை இடம்பெற்ற பூங்காவனத் திருவிழா காணொளி!

 

 

 

காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி ஆலயத்தில் 03.07.2019 புதன்கிழமை இரவு இடம்பெற்ற பூங்காவனத் திருவிழா கலை நிகழ்வுகள்!

காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி ஆலயத்தில் 02.07.2019 செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தீர்த்தத் திருவிழா காணொளி!