Category: ஆருத்திரா தரிசனம்

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 02.01.2018 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற ஆருத்ரா தரிசனம் காணொளி!

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 02.01.2018 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற ஆருத்ரா தரிசனம் காட்சிகள்!

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் உபயத்தில் கனடா றிச்மன்ட் பிள்ளையார் கோவிலில் 01.01.2018 திங்கட்கிழமை அன்று நடைபெற்ற திருவாதிரைத் திருவிழா காணொளி!

கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா 01.01.2018 திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு தொடங்கி நடைபெறும்.

கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா 01.01.2018 திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணி முதல் நடராசப் பெருமானுக்கு ஆதிரை அபிசேகம் தொடங்கி நடைபெறும்.

ஆருத்திரா அபிஷேகமும், நிதிப்பங்களிப்பும்

ஆருத்திரா அபிஷேகமும், நிதிப்பங்களிப்பும்

கனடா வாழ் காரை மக்களின் பொது உபயமாக ஆருத்திரா அபிஷேகம் றிச்மன்ட் ஹில் இந்து ஆலயத்தில் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகின்றது. இம்முறை ஜனவரி 1, 2018 புது வருடமும் , விடுமுறை நாளாகவும் அன்றைய தினம் அமைந்திருப்பது மிகவும் சிறப்பானதாகும். வழமையைவிட பெருமளவு அடியார்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் வழமையை விட கூடுதலான நிதி தேவைப்படும் என உத்தேச மதிப்பீடு தெரிவிக்கிறது. மன்ற நிதி சேகரிப்பை பொறுத்து மிகவும் சிறப்பாகவோ அன்றி எளிமையாகவோ திருவிழா இடம்பெறுவது உங்கள் ஒவ்வொருவரிலும் தங்கியுள்ளது. 01.01.2018 திங்கட்கிழமை அதிகாலை முதல் நடராசப் பெருமானுக்கு ஆதிரை அபிசேகம் தொடங்கி நடைபெறும்.

4.00 மணிக்கு  கும்ப பூஜை

4.30 மணிக்கு  ஆருத்திரா அபிஷேகம்

6.00 மணிக்கு  இன்னிசை கச்சேரி

6.45 மணிக்கு  வசந்தமண்டப பூஜை

7.45 மணிக்கு  நடராசப்பெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய வண்ணம் வீதியுலா வரும் அருள்காட்சி

9.30 மணிக்கு  ஆருத்திரா நிகழ்வுகள் நிறைவு

அன்றைய சிறப்பான நாளில் எம்பெருமான் ஐந்தொழில்களையும் புரிகின்ற தில்லையம்பல நடராஜ பெருமானை தரிசித்து இஷ்டசித்திகளை பெற்று கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

அபிசேகத் திரவியங்களை கொடுத்துதவ விரும்பும் அடியார்கள் அதிகாலை 4.15 மணிக்கு முன்பதாக கோயிலில் கையளிக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

நிதியுதவி செய்ய விரும்புகின்ற அடியார்கள் நிர்வாகத்திற்கு தொலைபேசி ஊடாகவோ அல்லது மின்னஞ்சல் ஊடாகவோ தங்கள் பங்களிப்பை அறியத்தருமாறு வேண்டி நிற்கின்றோம்.

    தொடர்புகளுக்கு:

செல்லத்துரை தேவகுமார்                                              பரமலிங்கம் பிரபாகரன்
செயலாளர்                                                                                  பொருளாளர்
தொலைபேசி இலக்கம்: 647 853 7027                         தொலைபேசி இலக்கம்: 416 455 8836

தொலைபேசி இலக்கம்: (416) 642-4912                    மின்னஞ்சல்: karainagar@gmail.com

நன்றி

நிர்வாக சபை
கனடா-காரை கலாச்சார மன்றம்

ஆருத்திரா அபிஷேகமும், நிதிப்பங்களிப்பும்

ஆருத்திரா அபிஷேகமும், நிதிப்பங்களிப்பும்

கனடா வாழ் காரை மக்களின் பொது உபயமாக ஆருத்திரா அபிஷேகம் றிச்மன்ட் ஹில் இந்து ஆலயத்தில் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகின்றது. இம்முறை ஜனவரி 1, 2018 புது வருடமும் , விடுமுறை நாளாகவும் அன்றைய தினம் அமைந்திருப்பது மிகவும் சிறப்பானதாகும். வழமையைவிட பெருமளவு அடியார்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் வழமையை விட கூடுதலான நிதி தேவைப்படும் என உத்தேச மதிப்பீடு தெரிவிக்கிறது. மன்ற நிதி சேகரிப்பை பொறுத்து மிகவும் சிறப்பாகவோ அன்றி எளிமையாகவோ திருவிழா இடம்பெறுவது உங்கள் ஒவ்வொருவரிலும் தங்கியுள்ளது. 01.01.2018 திங்கட்கிழமை அதிகாலை 4.45 மணி முதல் நடராசப் பெருமானுக்கு ஆதிரை அபிசேகம் தொடங்கி நடைபெறும். அதனைத் தொடர்ந்து காலை 7.00 மணிக்கு ஆருத்திரா தரிசனம் இடம்பெற்று, நடராசப்பெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய வண்ணம் உள்வீதியுலா வரும் அருள்காட்சியும் இடம்பெறும். அன்றைய சிறப்பான நாளில் எம்பெருமான் ஐந்தொழில்களையும் புரிகின்ற தில்லையம்பல நடராஜ பெருமானை தரிசித்து இஷ்டசித்திகளை பெற்று கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
அபிசேகத் திரவியங்களை கொடுத்துதவ விரும்பும் அடியார்கள் அதிகாலை 4.45 மணிக்கு முன்பதாக கோயிலில் கையளிக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் ஆருத்திரா தரிசனம் 11.01.2017 புதன்கிழமை நடைபெற்றது. ஆருத்திரா தரிசனம் வரவு செலவு அறிக்கை, அனுசரணை வழங்கியவர்களின் பெயர் விபரங்கள்.

CKCA logo

ஆருத்திரா தரிசனம் வரவு செலவு அறிக்கை, அனுசரணை வழங்கியவர்களின் பெயர் விபரங்கள்.

 பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2017/01/Aruthira-Tharisanam-Income-Statement-2017.pdf

Aruthira Tharisanam Income Statement -2017

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் உபயத்தில் கனடா றிச்மன்ட் பிள்ளையார் கோவிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா இன்று புதன்கிழமை (11.01.2017) அதிகாலை 4:45 இற்குத் தொடங்கி நடைபெற்றது.

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் உபயத்தில் கனடா றிச்மன்ட் பிள்ளையார் கோவிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா இன்று புதன்கிழமை  (11.01.2017) அதிகாலை 4:45 இற்குத் தொடங்கி நடைபெற்றது. 

நடராஜப்பெருமானுக்கு நடைபெற்ற ஆதிரை அபிசேகம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. 

அபிசேகம் முடிவடைந்ததும் நடராஜப் பெருமானுக்கு அலங்கார சாத்துப்படி நடைபெற்றுக்கொண்டிருந்தவேளையிலே சிவனடியார்களுக்குச் செவியின்பம் தரும் அருமையான இன்னிசை கச்சேரியை வாரகி விஜயராஜ் வழங்கினார்.  

தொடர்ந்து  மணிவாசகப் பெருமான் அருளிய திருவெம்பாவைப் பாடல்களை இசைக்க தில்லைப்பெருமானுக்கு ஆலய அந்தணப்பெருமக்கள் பூசை வழிபாடுகளை ஆகம முறைப்படி நடத்தினர். 

தொடர்ந்து தவில் நாதஸ்வர வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் வர்ண மலர்களைத் தூவ தில்லை நடராஜப் பெருமான் ஆனந்தத் தாண்டவமாடியவண்ணம் வீதியுலா வந்த அருள் காட்சியைக் கண்டு சிவனடியார்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தவாறு பேரானந்தம் அடைந்தனர். 

அவனருளாலே அவன்தாள் வணங்கி ஆருத்திரா தரிசனம் கண்டு ஆனந்தமடைந்த அடியார்கள் விபூதி பிரசாதங்களைப் பெற்று மகேசுவர பூசையிலும் கலந்துகொண்டு வீடு சென்றனர்.  

கனடா திருவாதிரைத் திருவிழாவின் காட்சிகளை இங்கே காணலாம்.

1 IMG_1931 IMG_1932 IMG_1933 IMG_1934 IMG_1935 IMG_1936 IMG_1937 IMG_1938 IMG_1939 IMG_1940 IMG_1941 IMG_1942 IMG_1943 IMG_1944 IMG_1945 IMG_1946 IMG_1948 IMG_1949 IMG_1950 IMG_1951 IMG_1952 IMG_1953 IMG_1954 IMG_1955 IMG_1956 IMG_1957 IMG_1958 IMG_1959 IMG_1960 IMG_1961 IMG_1962 IMG_1963 IMG_1964 IMG_1965 IMG_1966 IMG_1967 IMG_1968 IMG_1969 IMG_1970 IMG_1972 IMG_1973 IMG_1974 IMG_1975 IMG_1976 IMG_1977 IMG_1978 IMG_1979 IMG_1980 IMG_1981 IMG_1983 IMG_1984 IMG_1985 IMG_1986 IMG_1987 IMG_1988 IMG_1989 IMG_1990 IMG_1991 IMG_1992 IMG_1993 IMG_1994 IMG_1995 IMG_1996 IMG_1997 IMG_1998 IMG_1999 IMG_2000 IMG_2001 IMG_2002 IMG_2003 IMG_2004 IMG_2005 IMG_2006 IMG_2007 IMG_2008 IMG_2009 IMG_2010 IMG_2011 IMG_2012 IMG_2013 IMG_2014 IMG_2015 IMG_2016 IMG_2017 IMG_2018 IMG_2019 IMG_2020 IMG_2021 IMG_2022 IMG_2023 IMG_2024 IMG_2025 IMG_2026 IMG_2027 IMG_2028 IMG_2029 IMG_2030 IMG_2031 IMG_2032 IMG_2033 IMG_2034 IMG_2035 IMG_2036 IMG_2037 IMG_2038 IMG_2039 IMG_2040 IMG_2041 IMG_2042 IMG_2043 IMG_2044 IMG_2045 IMG_2046 IMG_2047 IMG_2048 IMG_2049 IMG_2050

IMG_2051 IMG_2052 IMG_2053 IMG_2054 IMG_2055 IMG_2056 IMG_2057 IMG_2058 IMG_2059 IMG_2060 IMG_2061 IMG_2062 IMG_2063 IMG_2064 IMG_2065 IMG_2066 IMG_2067 IMG_2068 IMG_2069 IMG_2070 IMG_2071 IMG_2073 IMG_2074 IMG_2075 IMG_2076 IMG_2077 IMG_2078 IMG_2080 IMG_2081 IMG_2082 IMG_2083 IMG_2084 IMG_2086 IMG_2087 IMG_2088 IMG_2089 IMG_2090 IMG_2091 IMG_2092 IMG_2093 IMG_2094 IMG_2095 IMG_2096 IMG_2097 IMG_2098 IMG_2099 IMG_2100 IMG_2101 IMG_2102 IMG_2103 IMG_2104 IMG_2105 IMG_2106 IMG_2107 IMG_2108 IMG_2109 IMG_2110 IMG_2111 IMG_2112 IMG_2113 IMG_2114 IMG_2115 IMG_2116 IMG_2117 IMG_2118 IMG_2120 IMG_2121 IMG_2122 IMG_2123 IMG_2124 IMG_2125 IMG_2126 IMG_2127 IMG_2128 IMG_2129 IMG_2130 IMG_2131 IMG_2132 IMG_2134 IMG_2135 IMG_2136 IMG_2137 IMG_2138 IMG_2139 IMG_2140 IMG_2141 IMG_2142 IMG_2143 IMG_2144 IMG_2145 IMG_2146 IMG_2147 IMG_2148 IMG_2149 IMG_2150 IMG_2151 IMG_2152 IMG_2153 IMG_2154 IMG_2155 IMG_2156 IMG_2157 IMG_2158 IMG_2159 IMG_2160 IMG_2161 IMG_2162 IMG_2163 IMG_2165 IMG_2166 IMG_2167 IMG_2168 IMG_2169 IMG_2170 IMG_2171 IMG_2172 IMG_2173 IMG_2174 IMG_2175

IMG_2176 IMG_2177 IMG_2178 IMG_2179 IMG_2180 IMG_2181 IMG_2182 IMG_2183 IMG_2184 IMG_2185 IMG_2187 IMG_2188 IMG_2189 IMG_2190 IMG_2191 IMG_2192 IMG_2193 IMG_2194 IMG_2195 IMG_2196 IMG_2197 IMG_2198 IMG_2199 IMG_2200 IMG_2201 IMG_2202 IMG_2203 IMG_2204 IMG_2205 IMG_2206 IMG_2207 IMG_2208 IMG_2211 IMG_2212 IMG_2213 IMG_2214 IMG_2215 IMG_2216 IMG_2217 IMG_2218 IMG_2219 IMG_2220 IMG_2221 IMG_2222 IMG_2223 IMG_2224 IMG_2225 IMG_2226 IMG_2227 IMG_2228 IMG_2229 IMG_2231 IMG_2232 IMG_2234 IMG_2235 IMG_2236 IMG_2237 IMG_2238 IMG_2239 IMG_2240 IMG_2241 IMG_2242 IMG_2243 IMG_2244 IMG_2245 IMG_2246 IMG_2247 IMG_2248 IMG_2249 IMG_2250 IMG_2251 IMG_2252 IMG_2253 IMG_2254 IMG_2255 IMG_2256 IMG_2257 IMG_2258 IMG_2259 IMG_2260 IMG_2261 IMG_2262 IMG_2263 IMG_2264 IMG_2265 IMG_2266 IMG_2267 IMG_2268 IMG_2269 IMG_2270 IMG_2271 IMG_2272 IMG_2273 IMG_2274 IMG_2275 IMG_2276 IMG_2277 IMG_2278 IMG_2279 IMG_2280 IMG_2281 IMG_2282 IMG_2283 IMG_2284 IMG_2285 IMG_2286 IMG_2287 IMG_2288 IMG_2289 IMG_2290 IMG_2291 IMG_2292 IMG_2293 IMG_2294 IMG_2295 IMG_2296 IMG_2297 IMG_2298 IMG_2299 IMG_2300 IMG_2301 IMG_2302 IMG_2303 IMG_2304 IMG_2305 IMG_2306 IMG_2307 IMG_2308 IMG_2309 IMG_2310 IMG_2311 IMG_2312 IMG_2313 IMG_2314 IMG_2315 IMG_2316 IMG_2317 IMG_2318 IMG_2319 IMG_2320 IMG_2321

கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழாவிற்கு நிதியுதவி செய்த அடியார்கள் விபரம்.

nadesar1

கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழாவிற்கு  நிதியுதவி செய்த அடியார்கள் விபரம்.

கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா எதிர்வரும் 11ஆம் திகதி(11.01.2017) புதன்கிழமை  அதிகாலை 4.45 மணிக்கு நடராசப் பெருமானுக்கு ஆதிரை அபிசேகம் தொடங்கி நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து காலை 7.00 மணிக்கு  ஆருத்திரா தரிசனம் இடம்பெற்று, நடராசப்பெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய வண்ணம் வீதியுலா வரும் அருள்காட்சியும் இடம்பெறும். அவ்வமயம் மெய்யடியார்கள் வருகைதந்து ஆடவல்லானின் திருவருளால் இகர நலன் பெற்று இன்புற அன்புடன் அழைக்கின்றோம்.
அபிசேகத் திரவியங்களை கொடுத்துதவ விரும்பும் அடியார்கள் அதிகாலை 4.45 மணிக்கு முன்பதாக கோயிலில் கையளிக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
 
நிதியுதவி செய்ய விரும்புகின்ற அடியார்கள் அன்றய தினம் ஆலயத்தில் நேரடியாக பொருளாளரிடம் வழங்கலாம் அல்லது நிர்வாகத்திற்கு தொலைபேசி ஊடாகவோ அல்லது மின்னஞ்சல் ஊடாகவோ அறியத்தர முடியும். 

தொலைபேசி இலக்கம்: (416) 642-4912   மின்னஞ்சல்:karainagar@gmail.com

                                                               நன்றி
 
                 நிர்வாக சபை
கனடா-காரை கலாச்சார மன்றம்

aruthura-tharisanam-sponcers-3

கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா எதிர்வரும் 11ஆம் திகதி(11.01.2017) புதன்கிழமை அதிகாலை 4.45 மணிக்கு நடராசப் பெருமானுக்கு ஆதிரை அபிசேகம் தொடங்கி நடைபெறும்.

Nadesar

கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா எதிர்வரும் 11ஆம் திகதி(11.01.2017) புதன்கிழமை  அதிகாலை 4.45 மணிக்கு நடராசப் பெருமானுக்கு ஆதிரை அபிசேகம் தொடங்கி நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து காலை 7.00 மணிக்கு  ஆருத்திரா தரிசனம் இடம்பெற்று, நடராசப்பெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய வண்ணம் வீதியுலா வரும் அருள்காட்சியும் இடம்பெறும். அவ்வமயம் மெய்யடியார்கள் வருகைதந்து ஆடவல்லானின் திருவருளால் இகர நலன் பெற்று இன்புற அன்புடன் அழைக்கின்றோம்.
அபிசேகத் திரவியங்களை கொடுத்துதவ விரும்பும் அடியார்கள் அதிகாலை 4.45 மணிக்கு முன்பதாக கோயிலில் கையளிக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
 
நிதியுதவி செய்ய விரும்புகின்ற அடியார்கள் அன்றய தினம் ஆலயத்தில் நேரடியாக பொருளாளரிடம் வழங்கலாம் அல்லது நிர்வாகத்திற்கு தொலைபேசி ஊடாகவோ அல்லது மின்னஞ்சல் ஊடாகவோ அறியத்தர முடியும். 

தொலைபேசி இலக்கம்: (416) 642-4912   மின்னஞ்சல்: karainagar@gmail.com

                                                               நன்றி

                 நிர்வாக சபை
கனடா-காரை கலாச்சார மன்றம்

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் ஆருத்திரா தரிசனம்-2015 காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

கனடா றிச்மன்ட் ஹில் பிள்ளையார் கோவிலில் நடைபெற்ற ஆனந்த நடராஜனின் ஆருத்திரா தரிசனம்

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் உபயத்தில் கனடா றிச்மன்ட் பிள்ளையார் கோவிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா இன்று வெள்ளிக்கிழமை (25.12.2015) அதிகாலை 5:30 இற்குத் தொடங்கி நடைபெற்றது. 

நடராஜப்பெருமானுக்கு நடைபெற்ற ஆதிரை அபிசேகம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. 

அபிசேகம் முடிவடைந்ததும் நடராஜப் பெருமானுக்கு அலங்கார சாத்துப்படி நடைபெற்றுக்கொண்டிருந்தவேளையிலே சிவனடியார்களுக்குச் செவியின்பம் தரும் அருமையான இன்னிசை; கச்சேரியை காரைநகர் தந்த இளம்கலைஞர்கள் வழங்கி அசத்தியிருந்தனர். 

செல்வன் வைகுந்தன் தர்மராஜா தேமதுரக் குரலால் வாய்ப்பாட்டு இசைக்க செல்வன் செந்தூரன் தர்மராஜா மிருதங்கம் இசை வழங்க திருமதி.சத்தியசொரூபி தீபன் அவர்கள் வயலின் இசை வழங்கினார். 

இந்த அரங்கேற்றம் கண்ட இளம்கலைஞர்கள் மூவரும் காரைநகர் நீலிப்பந்தனையைச் சேர்ந்த கந்தையா சிவமணி தம்பதிகளின் பேரப்பிள்ளைகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்ந்து இன்னிசை வேந்தர் சங்கீதபூசணம் திரு.பொன்.சுந்தரலிங்கம் அவர்கள் மணிவாசகப் பெருமான் அருளிய திருவெம்பாவைப் பாடல்களை இசைக்க தில்லைப்பெருமானுக்கு ஆலய அந்தணப்பெருமக்கள் பூசை வழிபாடுகளை ஆகம முறைப்படி நடத்தினர். 

தொடர்ந்து தவில் நாதஸ்வர வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் வர்ண மலர்களைத் தூவ தில்லை நடராஜப் பெருமான் ஆனந்தத் தாண்டவமாடியவண்ணம் வீதியுலா வந்த அருள் காட்சியைக் கண்டு சிவனடியார்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தவாறு பேரானந்தம் அடைந்தனர். 

அவனருளாலே அவன்தாள் வணங்கி ஆருத்திரா தரிசனம் கண்டு ஆனந்தமடைந்த அடியார்கள் விபூதி பிரசாதங்களைப் பெற்று மகேசுவர பூசையிலும் கலந்துகொண்டு வீடு சென்றனர்.  

கனடா திருவாதிரைத் திருவிழாவின் காட்சிகளை இங்கே காணலாம்.

IMG_1092 (Copy) IMG_1093 (Copy) IMG_1094 (Copy) IMG_1095 (Copy) IMG_1096 (Copy) IMG_1097 (Copy) IMG_1099 (Copy) IMG_1100 (Copy) P15 IMG_1102 (Copy) IMG_1103 (Copy) IMG_1104 (Copy) IMG_1108 (Copy) IMG_1109 (Copy) IMG_1110 (Copy) IMG_1111 (Copy) IMG_1112 (Copy) IMG_1113 (Copy) IMG_1114 (Copy) IMG_1115 (Copy) IMG_1116 (Copy) IMG_1117 (Copy) IMG_1118 (Copy)IMG_1121 (Copy) IMG_1122 (Copy) IMG_1123 (Copy) IMG_1124 (Copy) IMG_1125 (Copy) IMG_1126 (Copy) IMG_1127 (Copy) IMG_1128 (Copy) IMG_1129 (Copy) IMG_1130 (Copy) IMG_1131 (Copy) IMG_1132 (Copy) IMG_1133 (Copy) IMG_1134 (Copy) IMG_1135 (Copy) IMG_1136 (Copy) IMG_1137 (Copy) IMG_1138 (Copy) IMG_1139 (Copy) IMG_1140 (Copy) IMG_1141 (Copy) IMG_1142 (Copy) IMG_1143 (Copy) IMG_1144 (Copy) IMG_1145 (Copy) IMG_1146 (Copy) IMG_1147 (Copy) IMG_1148 (Copy) IMG_1149 (Copy) IMG_1150 (Copy) IMG_1151 (Copy) IMG_1152 (Copy) IMG_1153 (Copy) IMG_1154 (Copy) IMG_1155 (Copy) IMG_1156 (Copy) IMG_1157 (Copy) IMG_1158 (Copy) IMG_1159 (Copy) IMG_1160 (Copy) IMG_1161 (Copy) IMG_1162 (Copy) IMG_1163 (Copy) IMG_1164 (Copy) IMG_1165 (Copy) IMG_1166 (Copy) IMG_1167 (Copy) IMG_1168 (Copy) IMG_1169 (Copy)

https://picasaweb.google.com/110026916348305710910/1?feat=email#slideshow/6232723116377329122

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் ஆருத்திரா தரிசனம்- 2015

Aruthra 2015 - 2

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் ஆருத்திரா தரிசனம்- 2015

Aruthra 2015 - 2

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் ஆருத்திரா தரிசனம் 2015 வரவு செலவு அறிக்கை, அனுசரணை வழங்கியவர்களின் பெயர் விபரங்கள்.

CKCA Web 1 post0001ckca web post0001

அரோகார குரலொலிக்க, தவில் நாதசுவர இசை முழங்க நடைபெற்ற ஆதிரை அபிசேகமும் ஆருத்திரா தரிசனமும்

DSC_0111_(Copy)

கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா  நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜன.04.2015) அன்று  கனடா செல்வமலைப் பிள்ளையார் கோயிலில்(Richmond Hill Hindu Temple)  பலநூற்றுக்கணக்கான அடியவர்களின் அரோகரா குரல் ஒலிக்க, தவில் நாதசுவர இசை முழங்க மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அதிகாலை 5:00 மணிக்கு நடராசப் பெருமானுக்கு ஆதிரை அபிசேகம் தொடங்கி நடைபெற்றது. 

அதனைத் தொடர்ந்து காலை 6:30 க்கு காரைநகரைச் சேர்ந்த சிறார்களின் இன்னிசைக் கச்சேரி இடம்பெற்றது. திரு.கார்த்திக் ராமலிங்கம் அவர்களின் மாணவி செல்வி ராகவி மனோராகவன் அவர்களின் பாட்டுக்கு மிருதங்க வித்துவான் கௌரிசங்கர் அவர்களின் மாணவன் செல்வன் கபிலன் சச்சிதானந்தன் மிருதங்க இசை வழங்கியிருந்தார். 
 
அதனைத் தொடர்ந்து தவில் நாதஸ்வர கான மழை பொழிய பக்தர்களின் அரோகரா ஒலியுடன் நடராசப்பெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய வண்ணம் வீதியுலா வரும் அருள்காட்சியும் இடம்பெற்றது. பெருந்திரளான சிவனடியார்கள் ஆடவல்லானின் அருள்காட்சியைக் கண்டு இன்புற்றனர். 

திருவிழாவில் எடுக்கப்பட்ட படங்களை இங்கே காணலாம்

DSC_0111_(Copy)

திருவிழாவில் எடுக்கப்பட்ட காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

நன்றி: K.K.Electronics

காரைநகர் ஈழத்துச்சிதம்பரம் சிவன் கோவில் ஆருத்திரா தரிசனம் திருவிழாவில் எடுக்கப்பட்ட காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

மார்கழி! மாதங்களில் நான் மார்கழி என்றான் பகவத்கீதையில் என் கண்ணன். ஏனெனில் இவன் தான் எனக்கு இஸ்ட தெய்வம். அதே மார்கழி தான் ஆருத்ரா தரிசனமும். ஆருத்ரா என்பது திருவாதிரையைக் குறிக்கும். உலக இயக்கத்துக்குக் காரணமான ஈஸ்வரனின் உன்னத நடனத் திருக்கோலத்தைச் சிறப்பிக்கும் திருநாள்தான் திருவாதிரை.

அன்று தான் தில்லையில் நடராஜர் வ்யாக்ரபாதர் பதஞ்சலி முனிவருக்கு நடன தரிசனம் தந்தாராம். தில்லை வந்து நெஞ்சுருகப் பாடி திருவாசகத்தேனைப் பொழிந்த மாணிக்க வாசகர் நடராஜரிடமே ஜ்யோதிப் பொருளாய் மறைந்த தினமும் திருவாதிரை திருநாளே. 

இந்த நாளில்; ஸ்ரீ நடராஜரைத் தரிசித்க வழிபட்டு வர நம் இன்னல்கள் யாவும் அகன்று வாழ்க்கை இனிமையாகும். 

மாணிக்க வாசகர் திருவண்ணாமலைக்கு தரிசனம் செய்யச் சென்றார். திருவெம்பாவை என்ற 20 பாட்டுக்கள் உதிர்ந்தன. இதனை விடியற்காலையில் நேம நியமங்களுடன் ஓதுவது பாடிக்களிப்புறுவது வழக்கம். 

நாமெல்லாம் சீவன். சிவனே பரமாத்மா. சீவனுக்கு ஆதாரம் சிவன். நாம் பசு. நமக்கெல்லாம் பதி சிவன். 

விடியற்காலையில் துயில் நீக்கி நன்னீராட்டி தூயமனத்துடன் மற்றவர்களை தூங்காதே எழுந்திரு என அறை கூவி எழுப்பி ஆண்டவனது புகழ்பாட அழைத்துக் கூடிப் பாடி நெகிழும் நெறி தான் திருவெம்பாவை. 

திருவெம்பாவை திருவண்ணாமலையில் பாடப்பட்டது என்றாலும் சிவனடியார்களுக்குக் கோயில் என்றால் சிதம்பரம். அதே போல் கனடாவிலும் கோயில் என்றவுடன் எமக்கெல்லாம் பெரியகோயில் என்று அழைக்கப்படும் றிச்மண்ட்கில் தான் நினைவுக்கு வருகிறது. சிதம்பரத்தில் மணிவாசகப்பெருந்தகை கண்ட நடனத்தை அந்தத் தாண்டவத்தை பாதத்தை தனது 14வது திருவெம்பாவையில் பாடி மகிழ்கிறார்.   

காதர் குழையாட பைம்பூன் கனலாட
கோதை குழலாட வண்டின் குழாமாட
சீதப்புனலாட சிற்றம்பலம் பாடி
வேதப்பொருள் பாடி அப்பொருளாமாபாடி
சோதி திறம்பாடி சூழ்கொன்றை தார்பாடி 
ஆதிதிறம் பாடி அந்தமாமாபாடி
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத்திறம்பாடி ஆடேலோர் எம் பாவாய்.

கடைசி 20வது திருவெம்பாவையில் திரும்பத் திரும்ப ஆண்டவனது பாதமலர் செந்தளிர் பொற்பாதம் பூங்கழல் இணைஅடி பொன்மலர் புண்டரீகம் என்று பாதங்களில் மார்கழி நீராடிப் போற்றுகிறார். 

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்.
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீராடேலோ ரெம்பாவாய்.

ஓவ்வொரு அடியிலும் ஆண்டவனது அடிகளைப் பணிந்து போற்றி சரணாகதி தத்துவத்தை அறிந்து புரிந்து உணர்ந்து அருளுக அருளுக என விழைகிறார் திருமாணிக்கவாசகர். அவருக்காகவா பாடினார். சிவனார் திருவண்ணாமலையில் அவரிடம் உந்தி உட்கொண்டு நாம் எல்லாம் உய்ய வேண்டும் என்று தானே பாவை பாடினார். 

பதஞ்சலியும் வியாக்ரபாதரும் மட்டுமா ஆனந்தத் தாண்டவம் பார்த்தார்கள். அவர்களுக்கு மட்டுமா ஆடினான். குகை நமசிவாயருக்கும் அல்லவா ஆடினான். 

'அம்பலவா! இன்னொருக்கால் ஆடினால் ஆகாதோ?
உம்பரெல்லாம் கண்டது உனக்கு ஒப்பாமோ? சம்புவே!
வெற்றிப் பதஞ்சலிக்கும் வெம்புலிக்கும் தித்தியென
ஏற்றுப் பதஞ்சலிக்குமே…..'

அந்த ஆடல் வல்ல அம்பலவாணணின் ஆனந்த தாண்டவத்தை நாமும் இன்று பார்த்து மெய்சிலிர்த்து கண்ணீர் மல்கி களிப்புடன்  தரிசித்து 'களி' உண்டு ஆனந்தப் பரவசம் எய்தி!

ஆருத்ரா தரிசனத்தைப் போல்…..!!! அந்த அற்புதத்தை ஆனந்தத்தை அதிசயத்தை அபிஸேகத்தை …. பால் அபிஸேகமோ….. தயிர் அபிஸேகமோ…. நெய் அபிஸேகமோ……. சந்தன அபிஸேகமோ….குங்கும அபிஸேகமோ…. பன்னீர் அபிஸேகமோ…….. தேன் அபிஸேகமோ……..பஞ்சாமிர்த அபிஸேகமோ……..குடம் குடமாக……..தாரை தாரையாக….வாழ்க்கையின் இனிப்பு வேர்வைத் துளிகளின் உப்பில் இருக்கிறது என்பது போல……….தீஸ்தருக்கு இந்த உஸ்ஸிக் குளிரிலும் வியர்;த்து…

ஏனெனில் சிவன் அபிஸேகப்பிரியர். உலகிலேயே நடராஜர் அபிஸேகம் போல் எங்கும் அபிஸேகங்கள் நடப்பதில்லை. 

சுக்ல யஜுர் வேதத்தில்
'ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே
பூர்ணஸ்ய பூரணமாதாய பூர்ணமேவா வசிஷ்யதே'

'அதுவும் பூர்ணம்; இதுவும் பூர்ணம்; அந்த பூர்ணத்தில் இருந்தே இந்த பூர்ணம் தோன்றி உள்ளது. பூர்ணத்தில் இருந்து பூர்ணத்தை எடுத்த நிலையிலும் பூர்ணம் அப்படியே இருக்கிறது' என்று சொல்லியிருப்பதைப்போல! 

ஆனந்த மயமாகவும் ஆனந்த சொரூபியாகவும் உள்ள நடராஜப் பெருமானிடம் இருந்து நாம் ஆனந்தத்தைக் கேட்டுப் பெற்றாலும் கூட அவரிடம் உள்ள ஆனந்தம் கடுகளவும் குறையப் போவதில்லை.

பக்தியில் சிறந்த நிலை சரணாகதி. 'எல்லாம் அவன் செயல்' என்று முழுக்க முழுக்க தன்னை அவனிடத்தில் ஒப்படைப்பதே சரணாகதி தத்துவம். 
இப்படியான பக்குவநிலை வாய்க்க இறைவனுக்கான வழிபாடுகளும் பணிவிடைகளும் உதவி செய்யும். 

அன்னையாய் குழந்தையாய் காதலனாய் தோழனாய் இறைவனைப் பாடி உருகிய ஆழ்வார்களும் அடியார்களும் அதன் மூலம் இறைவனை நம்மில் ஒருவனாகக் கருதி வழிபடும் நுணுக்கத்தை அழகாய்ச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அந்த வகையில் காலை எழுந்தது முதல் இரவு உறங்குவது வரையில் நமக்கு நாம் செய்து கொள்ளும் அன்றாடச் செயல்கள் அனைத்தையும் அவருக்கும் செய்து அழகு பார்த்து ஆனந்திப்பது ஒரு சுகானுபவம்.  

இறைவனின் திருநடனத்தை நாவுக்கரசர் போற்றுவதைப் பாருங்கள். 

சுற்றிப்பறக்கும் சடைமுடி அதில் பதிந்து இருக்கும் சுட்டி
திலகம் தவழும் நெற்றி வில்லைப் போல வளைந்த புருவம்
எடுப்பான மூக்கு ஆனந்தம் தவழும் அமைதியான புன்னகை கூடிய திருமுகம் மடிப்புக்களுடன் கூடிய கழுத்து திரண்ட தோள்கள் எடுப்பான மார்பு வளைந்த இடுப்பு தூக்கிய திருவடி அகந்தையை அடக்கி அழுத்தும் மற்றொரு திருவடி தீமைகளைப் பொசுக்கும் தீ அஞ்சேல் என முழுங்கும் உடுக்கை எனக் காட்சி தரும் நடராஜப் பெருமானை திருவாதிரையன்று தரிசித்தோர் மனம் அமைதி பெறும்.

இந்த நடராஜரின் திருநடனத்தை காண வாருங்கள் என ஸ்ரீ குமரகுருபர ஸ்வாமிகள் அழைக்கிறார்……….

கூற்றிருக்கும் மடலாழிக் குரிசின் முதலோர்
இறைஞ்சக் கொழுந்தேன் பில்கி
ஊற்றிருக்கும் தில்லைவனத் தசும்பிருக்கும்……………

நாம் இருக்கும் இடத்தில் கனடாவில் எம்மை எல்லாம் ஆட்டுவிப்பவன் ஆடினான்……….நாம் அவன் பெயர் சொல்லி புகழ் சொல்லி மலர் தூவி…………
காரை கனடா வாழ் மக்கள் நாம் அவனை அபிஸேகித்தோம் மலர்களால் அழகு படுத்தினோம் பண் இசையால் பரவசப்படுத்தினோhம் நாதஸ்வரம் மேளம் என இறைவா! கச்சி ஏகம்பனே! கச்சி ஏகம்பனே! கச்சி ஏகம்பனே! காரை மக்களுக்கு இது நீ இட்ட கட்டளை! எல்லோர் செவிகளிலும் இது ஏன் கேட்கவில்லை? பிறவிப் பிணியா! அப்படி என்றால் நீ பெரு மருந்தல்லவா! இது தெரியாமலா? இந்த உண்மை புரியாமலா?  இந்த மாயை விலகட்டும்! மூடிய இருள் அகலட்டும்! கச்சி ஏகம்பனே! ஏகம்பனே! 2015ல் உன் சந்நிதியில் ஓர் தாய் பிள்ளையாய்! தொப்புள் கொடியாக! இறைவா! சிதம்பரேசா! சிற்றபேசா! நீ ஆட்டுவிக்கிறாய் நாம் ஆடுகின்றோம். அந்த ஆட்டத்தில் எம் அல்லல்கள் எல்லாம் ஓடட்டும். ஓர்; ஊராய் ஒற்றுமையாய் உன்னைத் தாலாட்ட வரம் தா! வரம் தா! வரம் தா! வேண்டாம் எமக்கு வரட்டுக் கௌரவம்! நாதா ஈஸா தேவா ஸ்ரீ நடராஜப் பெருமானே!

Written By : Ranjson Kanapathippillai (Realtor)

கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா எதிர்வரும் 04ஆம் திகதி(04.01.2015) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு நடராசப் பெருமானுக்கு ஆதிரை அபிசேகம் தொடங்கி நடைபெறும்.

aruthra-2014

திருவாதிரைத் திருவிழாவில் இன்னிசைக் கச்சேரி

classical music

கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா Richmond Hill  பிள்ளையார் கோயிலில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(04.01.2015) அன்று அதிகாலை 4.30 மணிக்கு நடராசப் பெருமானுக்கு ஆதிரை அபிசேகம் தொடங்கி நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து காலை 6:00 மணிக்கு காரைநகரைச் சேர்ந்த சிறார்களின் இன்னிசைக் கச்சேரி இடம்பெறும் 

பாட்டு: திரு.கார்த்திக் ராமலிங்கம் அவர்களின் மாணவி செல்வி ராகவி மனோராகவன்
 
மிருதங்கம்: மிருதங்க வித்துவான் கௌரிசங்கர் அவர்களின் மாணவன் செல்வன் கபிலன் சச்சிதானந்தன்

செல்வமலைப் பிள்ளையார் கோயில் (Richmond Hill Hindu Temple) திருவாதிரைத் திருவிழா

Nadesar

கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா எதிர்வரும் 04ஆம் திகதி(04.01.2015) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு நடராசப் பெருமானுக்கு ஆதிரை அபிசேகம் தொடங்கி நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து காலை 7.00 மணிக்கு ஆருத்ரா தரிசனம் இடம்பெற்று, நடராசப்பெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய வண்ணம் வீதியுலா வரும் அருள்காட்சியும் இடம்பெறும். அவ்வமயம் மெய்யடியார்கள் வருகைதந்து ஆடவல்லானின் திருவருளால் இகர நலன் பெற்று இன்புற அன்புடன் அழைக்கின்றோம்.

அபிசேகத் திரவியங்களை கொடுத்துதவ விரும்பும் அடியார்கள் அதிகாலை 5.00 மணிக்கு முன்பதாக கோயிலில் கையளிக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
 
நிதியுதவி செய்ய விரும்புகின்ற அடியார்கள் அன்றய தினம் ஆலயத்தில் நேரடியாக பொருளாளரிடம் வழங்கலாம் அல்லது 

பின்வரும் மன்ற வங்கிக் கணக்கில் வைப்பில் இட்டபின்னர் நிர்வாகத்திற்கு தொலைபேசி ஊடாகவோ அல்லது மின்னஞ்சல் ஊடாகவோ அறியத்தர முடியும். 

Canada-Karai Cultural Association 
T.D.Bank A/C No. 711 Branch No. 1029

தொலைபேசி இலக்கம்: (416) 642-4912   மின்னஞ்சல்: karainagar@gmail.com

நன்றி
நிர்வாக சபை
கனடா-காரை கலாச்சார மன்றம்

மிகச் சிறப்பாக நடைபெற்ற ஆதிரை அபிசேகமும் ஆருத்திரா தரிசனமும்

கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா இன்று டிச.18.2013 புதன்கிழமை செல்வமலைப் பிள்ளையார் கோவிலில்(Richmond Hill Hindu Temple)  மிகச் சிறப்பாக நடைபெற்றது.
அதிகாலை 5:30 இற்கு நடராசப் பெருமானுக்கு ஆதிரை அபிசேகம் தொடங்கி நடைபெற்றது. காலை 7:30 அளவில் ஸ்ரீமதி.நவராஜகுலம் முத்துக்குமாரசுவாமியின் மாணவி செல்வி.காயத்திரி பரமேஸ்வரனின் இன்னிசைக் கச்சேரி இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து நடராசப்பெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய வண்ணம் வீதியுலா வரும் அருள்காட்சியும் இடம்பெற்றது. பெரும் திரளான சிவனடியார்கள் ஆடவல்லானின் அருள்காட்சியைக் கண்டு இன்புற்றனர்.
இன்றைய திருவிழாக் காட்சிகளை இங்கே காணலாம்

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தின் திருவாதிரை உற்சவ 10ம்நாள் ஆருத்ரா தரிசனம் திருவிழாக் காட்சிகளைப் படங்களில் காணலாம்.(18.12.2013)

காரைநகர் ஈழத்துச்சிதம்பர திருவாதிரை உற்சவ ஆருத்திரா  அபிசேகம் ஈழத்து,இந்திய தவில் நாதஸ்வரக் கலைஞர்கள் கானமழை பொழிய இன்று அதிகாலை 2.00மணி முதல் மிகவும் பத்திபூர்வமாக இடம்பெற்றது. ஆதனைத்தொடர்ந்து அதிகாலை 5.30 மணிக்கு ஆரத்திராதரிசனமும் இடம்பெற்றது.இந்த உற்சவத்திலும் ஆயிரக்கணக்கான பத்தர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து காலைமுதல் தங்கள் நேர்கடன்களை நிறைவேற்றும் பொருட்டு அடியவர்கள் பலர் புலம்பெயர் நாடுகளிலிருந்து வருகைதந்து தங்கள் நேர்கடன்களை நிறைவேற்றினர்.காரைநகரின் பல்வேறு ஆலயங்களிலிருந்தும் பத்திற்குமேற்பட்ட காவடிகள் ஆலயத்தை வந்தடைந்தன.தொடர்ந்து மாலை ஊடலும் தீர்த்த உற்சவமும் இடம்பெற்றன.

செல்வமலைப் பிள்ளையார் கோயில் (Richmond Hill Hindu Temple) திருவாதிரைத் திருவிழா

OLYMPUS DIGITAL CAMERA

கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா எதிர்வரும் 18ஆம் திகதி(18.12.2013) புதன்கிழமை அதிகாலை 5.00 மணிக்கு நடராசப் பெருமானுக்கு ஆதிரை அபிசேகம் தொடங்கி நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து காலை 7.00 மணிக்கு ஆருத்ரா தரிசனம் இடம்பெற்று, நடராசப்பெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய வண்ணம் வீதியுலா வரும் அருள்காட்சியும் இடம்பெறும். அவ்வமயம் மெய்யடியார்கள் வருகைதந்து ஆடவல்லானின் திருவருளால் இகர நலன் பெற்று இன்புற அன்புடன் அழைக்கின்றோம்.
காலை 6.30 மணி – இன்னிசைக் கச்சேரி

பாட்டு: ஸ்ரீமதி நவராஜகுலம் முத்துக்குமாரசுவாமி அவர்களின் மாணவி செல்வி காயத்திரி பரமேஸ்வரன்;
 
மிருதங்கம்: மிருதங்க வித்துவான் கௌரிசங்கர் அவர்களின் மாணவன் செல்வன் அமல்நாத் பரமேஸ்வரன்
 
வயலின்: சங்கீத வித்துவான் திருமதி. தனதேவி மித்திரதேவாவின் மாணவன் செல்வன் மிதுரன் மனோகரன்