ஆருத்திரா அபிஷேகமும், நிதிப்பங்களிப்பும்

ஆருத்திரா அபிஷேகமும், நிதிப்பங்களிப்பும்

கனடா வாழ் காரை மக்களின் பொது உபயமாக ஆருத்திரா அபிஷேகம் றிச்மன்ட் ஹில் இந்து ஆலயத்தில் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகின்றது. இம்முறை ஜனவரி 1, 2018 புது வருடமும் , விடுமுறை நாளாகவும் அன்றைய தினம் அமைந்திருப்பது மிகவும் சிறப்பானதாகும். வழமையைவிட பெருமளவு அடியார்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் வழமையை விட கூடுதலான நிதி தேவைப்படும் என உத்தேச மதிப்பீடு தெரிவிக்கிறது. மன்ற நிதி சேகரிப்பை பொறுத்து மிகவும் சிறப்பாகவோ அன்றி எளிமையாகவோ திருவிழா இடம்பெறுவது உங்கள் ஒவ்வொருவரிலும் தங்கியுள்ளது. 01.01.2018 திங்கட்கிழமை அதிகாலை 4.45 மணி முதல் நடராசப் பெருமானுக்கு ஆதிரை அபிசேகம் தொடங்கி நடைபெறும். அதனைத் தொடர்ந்து காலை 7.00 மணிக்கு ஆருத்திரா தரிசனம் இடம்பெற்று, நடராசப்பெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய வண்ணம் உள்வீதியுலா வரும் அருள்காட்சியும் இடம்பெறும். அன்றைய சிறப்பான நாளில் எம்பெருமான் ஐந்தொழில்களையும் புரிகின்ற தில்லையம்பல நடராஜ பெருமானை தரிசித்து இஷ்டசித்திகளை பெற்று கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
அபிசேகத் திரவியங்களை கொடுத்துதவ விரும்பும் அடியார்கள் அதிகாலை 4.45 மணிக்கு முன்பதாக கோயிலில் கையளிக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

நிதியுதவி செய்ய விரும்புகின்ற அடியார்கள் நிர்வாகத்திற்கு தொலைபேசி ஊடாகவோ அல்லது மின்னஞ்சல் ஊடாகவோ தங்கள் பங்களிப்பை அறியத்தருமாறு வேண்டி நிற்கின்றோம்.

தொலைபேசி இலக்கம்: (416) 642-4912 மின்னஞ்சல்: karainagar@gmail.com

 

நன்றி

நிர்வாக சபை
கனடா-காரை கலாச்சார மன்றம்