நிறைவேற்றப்பட்ட 2007 – 2008 செயல் திட்டங்கள்

நிறைவேற்றப்பட்ட 2007 – 2008 செயல் திட்டங்கள்

1. கனடியத் தமிழர் வர்த்தக சம்மேளனத்தினால் ஆண்டு தோறும் நடத்தப்படும் ரொரன்ரோ வைத்தியசாலைகளுக்கு உதவும் நிதியுதவி நடை பவனியில் முதற்தடவையாக எமது மன்றம் பங்குபற்றியதுடன் மன்றத் தொண்டர்களால் ஏறத்தாழ ஐநூறு டொலர்கள் ($500) நிதிசேகரிக்கப்பட்டு அன்பளிப்புச் செய்யப்பட்டது.

2. கிழக்கு மாகாண அகதிகளுக்கு உதவும் நிதிசேகாப்பு நிகழ்வுகளில் (Car Wash) கனடா- தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு இரண்டாயிரத்து எண்ணூற்று முப்பது டொலர்கள் ($2830) அன்பளிப்புச் செய்யப்பட்டது.

3. கனடியத் தமிழர் விளையாட்டுத் துறையினரால் நடத்தப்பட்ட கிளித்தட்டுப் போட்டிகளிலும், கனடியத் தமிழ் வானொலியினால் (CTR) நடத்தப்பட்ட "நட்சத்திரவிழா" கிளித்தட்டு போட்டிகளிலும், எமது மன்றத்தின்; ஆண்கள் அணி; பங்குபற்றி வெற்றி பெற்றது.

4. ஒன்பதாவது ஆண்டாக கோடைகால ஒன்று கூடல் நிகழ்வு பூங்காவில் வழமைபோல நடத்தப்பட்டது.

5 மன்ற இணையத்தளம்; (www.karainagar.com) புதுப் பொலிவுடன் மறுசீரமைக்கப் பட்டு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இத்தளம் அமைக்கப்பட்டது.

6. காரைநகருடன் தொடர்புடைய ஒருவர் உலகின் எப்பாகத்தில் மரணமடைந்திருந்தாலும் மன்ற அங்கத்தவர் ஒருவரினால் உறுதிப்படுத்தப்பட்டு மன்ற நிர்வாகத்திற்கு அறியத்தரப்பட்ட மரண அறிவித்தல்கள்; மன்ற இணையத் தளத்தில் பிரசுரிக்கும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டது.

6. எட்டாவது ஆண்டாக "காரை வசந்தம்" கலைவிழா சிறப்பாக நடத்தப்பட்டதுடன்     "காரை வசந்தம்" சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது.

• தமிழ்ச்சிறார்களிடையே பேச்சுப்போட்டி, பண்ணிசைப் போட்டி என்பன நடத்தப்பட்டு  இவ்விழாவில் பரிசில்கள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.

7.இடைநிறுத்தப்பட்டிருந்த,காரைநகரில். பாடசாலையைவிட்டு விலகிய மாணவர்களுக்கான கணனிக் கற்கைநெறி தொடர்ந்து நடைபெற மாதாந்தம் இலங்கை ரூபா ஏழாயிரம் (ரூபா 7 000) உதவுவதற்கு ஆவன செய்யப்பட்டது.

8. கலாநிதி ஆ. தியாகராஜா ம.ம.வி வருடாந்த பரிசளிப்பு விழா நடைபெற ஐம்பதினாயிரம் இலங்கை ரூபா (ரூபா50,000) உதவப்பட்டது.

9. காரைநகரில் கல்வி, வளர்ச்சிக்காக மூவாயிரம் கனடிய பொலர்கள் ($3000) மூன்று லட்சத்து இருபத்தோராயிரம் இலங்கை (ரூபா 3 21,000) காரை அபிவிருத்திச் சபையினூடாக அன்பளிப்புச் செய்யப்பட்டது. இந்நிதி பின்வரும் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

1.  எமது மன்ற அனுசரணையுடன் காரை அபிவிருத்தி சபையினால் 'கல்வி அழகே அழகு' என்னும் தொனிப் பொருளில் நடத்தப்படும் 'கல்வி தினத்திற்கு' ஒரு லட்சம் இலங்கை ரூபா (ரூபா 1 00 000) ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தினத்தில் பின்வரும் பரிசுகள் வழங்கப்படும்.

• காரைநகரில் கல்வி பயிலும் தரம் ஐந்து முதல் க.பொ.த உ-த வரை அரச பொதுப்பரீட்சைகளில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கும், பல்கலைக் கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்கும் பணப்பரிசு வழங்கி ஊக்குவித்தல்

• காரைநகரில் கல்வி பயின்று ஆங்கிலத்தில் திறமைச்சித்தி பெற்ற மாணவர்களுக்கு பாரட்டுப் பரிசு வழங்குதல்

• கலாநிதி ஆ.தியாகராஜா ம.ம.வித்தியாலயத்தில் கல்விபயின்று பொறியியல் பீடத்திற்குத்தெரிவுசெய்யப்பட்ட செல்வன் பேரம்பலம் புஸ்பராசாவின் கல்விச்செலவுக்கு  ஐம்பதினாயிரம் இலங்கை ரூபா (ரூபா 50, 000) ஊக்குவிப்புப் பணப்பரிசு வழங்குதல்.

காரைநகரைச் சேர்ந்த, யாழ் மாவட்டப் பாடசாலையில் கல்வி கற்று பல்கலைக் கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு பரிசு வழங்குதல்.

• காரைநகரைச் சேர்ந்த மூத்த அதிபர்கள், கல்வியாளர்களைப் பாராட்டிக் கௌரவித்தல்

2. காரைநகரில் சிறப்பாக இயங்கிவரும் ஒரே ஒரு நுண்கலைக் கல்வி நிலையமான கிழவன்காடு கலா மன்ற ஆசிரியர்களுக்கு வேதனம் வழங்குவதற்கு ஐம்பதினாயிரம் இலங்கை ரூபா (ரூபா 50, 000) ஒதுக்கப்பட்டுள்ளது.

3. காரைநகரில் கல்வி பயிலும் க.பொ.த சா.த, மற்றும் க.பொ.த உ.த வகுப்பு மாணவர்களுக்கான மேலதிக ஆங்கிலக் வகுப்புகளை நடத்துவதற்கு ஒரு லட்சத்து இருபதினாயிரம் இலங்கை ரூபா (ரூபா 1 20, 000) ஒதுக்கப்பட்டுள்ளது.

குறிப்பு : அரச பொதுப்பரீட்சைக்கான வினா விடை நூல்களைப் பாடசாலைகளுக்கு வழங்குதல், ஆரம்பப் பாடசாலை ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல் ஆகிய கோரிக்கைகள் பின்வரும் காரணங்களுக்காக காரை அபிவிருத்தி சபையினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அ) கல்வித் திணைக்களத்தினால் பாடசாலைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 'தர உள்ளீடு' (Quality Input) என்னும் நிதியிலுருந்து தேவையான நூல்கள் கொள்வனவு செய்யபடுவதாக காரை அபிவிருத்தி சபை நிர்வாகத்தினால் தெரிவிக்கப்பட்டது.

ஆ) அண்மையில் கல்வித்திணைக்களத்தினால் புதிய ஆசிரிய நியமனங்கள் போதியளவு வழங்கப் பட்டுள்ளதாகவும், அத்துடன் தொண்டர் ஆசிரிய நியமனங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் காரை அபிவிருத்தி சபையினால் தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக மேலதிக நிதி மேற்கூறப்பட்ட இறுதி இரு புதிய திட்டங்களுக்குப் பயன் படுத்தப்படுகிறது.

10. 18 வது ஆண்டாக றிச்மன்ட் ஹில் இந்து ஆலயத்தில் "திருவாதிரைத் திருவிழா"      சிறப்பாக நடத்தப்பட்டது.

2008
1. கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இந்து கலாசார அமைச்சருமான அமரர். தியாகராஜா மகேஸ்வரன் அவர்களுக்கான இரங்கற் கூட்டத்தினை எமது மன்றமும், ஆதி அருள் நெறி மன்றமும் இணைந்து நடத்தியிருந்தது.

2. காரைநகரில் கல்விசார் செயற்பாடுகளுக்கான தொடர்ச்சியான உதவிகளை வழங்குவதற்காக "காரை-கல்வி நம்பிக்கை நிதியம"; என்ற நிதியம் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தின் முதற்பகுதியாக, காரைநகரில் தரம் 6 முதல் க.பொ.த சா-த வரை கல்வி பயிலும் வசதி குறைந்த, திறமையான  40 மாணவர்களுக்கு உதவுவதற்க குழந்தைகள் வைத்திய நிபுணர் டாக்டர்.வி.விஜயரத்தினம் அவர்களின் தாயார் நினைவாக "அமரர்.திருமதி.ஞானசுந்தரம் விசுவலிங்கம் ஞாபகார்த்த புலமைப்பரிசில்" என்ற புலமைப்பரிசில் வழங்குவதற்கு இரண்டு லட்சத்து நாற்பத்தையாயிரம் இலங்கை ரூபா (ரூபா 2 45 000) காரை அபிவிருத்தி சபையினூடாக அன்பளிப்புச் செய்யப்பட்டது.

3. அமரர்.தி.மகேஸ்வரனின் 45 ம் நாள் நினைவு தினத்தையொட்டி மாபெரும் நினைவு வணக்க நிகழ்வினை எமது மன்றமும் கனடியத்தமிழர் பேரவையும் இணைந்து நடத்தியிருந்தது.

4. காரைநகர் அபிவிருத்திச் சபை செயலாளர். சேவையின் சிகரம். அமரர் ஜெயசிங்கம் தில்லையம்பலவாணர் அவர்களுக்கான இரங்கற் கூட்டம் எமது மன்றத்தினால் நடத்தப்பட்டது. இந்நிகழ்வின் போது அன்னாரின் இறுதிக்கிரிகைகளுக்கான செலவுகளுக்காகச் ஆயிரம் டொலர்கள் ($1000)  இலங்கை ரூபா 1 09 500 சேகரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.

5. கனடியத் தமிழர் வர்த்தக சம்மேளனத்தினால் ஆண்டு தோறும் நடத்தப்படும் ரொரன்ரோ வைத்தியசாலைகளுக்கு உதவும் நிதியுதவி நடை பவனியில் வழமை போல எமது மன்றம் பங்குபற்றியதுடன் மன்றத் தொண்டர்களால் சேகரிக்கப்பட்ட ஐநூற்றி இருபத்திஐந்து டொலர்கள் ($525) அன்பளிப்புச் செய்யப்பட்டது.

ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து அன்புள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்