Category: யா/ கலாநிதி ஆ.தியாகராஜா ம.ம.வி

காரைநகர் தியாகராசா ம.ம.வித்தியாலய வருடாந்தப் பரிசளிப்பு விழா 04.07.2015 சனிக்கிழமை காலை இடம்பெற்றது.

DSC_7756 (Copy)

காரைநகர் தியாகராசா ம.ம.வித்தியாலய வருடாந்தப் பரிசளிப்பு விழா 04.07.2015 சனிக்கிழமை காலை இடம்பெற்றது.

திருமதி வாசுகி தவபாலன் தலைமையில் இடம்பெற்ற விழாவில் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக் கழக மருத்துவ பீடப் பேராசிரியர் வை.பரமேஸ்வரனும் சிறப்பு விருந்தினராக தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் அவர்களும் கௌரவ விருந்தினராக ஓய்வு நிலை மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆ.ராஜேந்திரன் தம்பதிகளும் கலந்து கொண்டனர்.


நிறுவுநர் உரையினை ஓய்வு நிலை ஆங்கிலத் துறை உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி சிவபாக்கிஜம் நடராசா நிகழ்த்தினார்.


நிகழ்விற்கான அனுசரனையினை வைத்தியக் கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரட்ணம் நம்பிக்கை நிதியம் வழங்கியது.
 

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம் (காரைநகர் இந்துக் கல்லூரி)வருடாந்த பரிசளிப்பு விழா அழைப்பிதழ்

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம் (காரைநகர் இந்துக் கல்லூரி)வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவுநர் தினமும் நாளை சனிக்கிழமை (04.07.2015) அன்று காலை 9:00 மணிக்கு நடராஜா ஞாபாகார்த்த மண்டபத்தில் கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தலைமையில் நடைபெற உள்ளது. 


விழாவிற்குப் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மருத்துவ பீட வாழ்நாள் பேராசிரியர் திரு.S.V.பரமேஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கின்றார். 


சிறப்பு விருந்தினராக தீவக வலயக் கல்விப்பணிப்பாளர் திரு.T.ஜோன் குயின்ரஸ் அவர்;களும் கௌரவ விருந்தினராக ஓய்வுநிலை வடமாகாண கல்விப் பணிப்பாளர் திரு.A. இராஜேந்திரன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றார்கள்.


நிறுவுநர் சயம்பு நினைவுப் பேருரையை சயம்பு உபாத்தியாயரின் அன்புக்குரிய மாணவரும் கல்லூரியில் நாற்பது ஆண்டுகள் நல்லாசானாகப் பணியாற்றியவருமாகிய R.கந்தையா மாஸ்ரர் அவர்களின் புதல்வியும் கல்லூரியின் பழைய மாணவியும் ஆங்கில ஆசிரியையும் ஒய்வுநிலை உதவிக்கல்விப் பணிப்பாளருமாகிய திருமதி.சிவபாக்கியம் நடராஜா அவர்கள் நிகழ்த்த இருக்கின்றார்.

 
கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவிற்கான நிதி அநுசரணை கனடாவில் பிரபல குழந்தை மருத்துவ நிபுணராக  பணியாற்றிவரும் மருத்துவ கலாநிதி வி.விஜயரத்தினம் அவர்களினால் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் பெருமுயற்சியினால் நிறுவப்பட்ட "மருத்துவ கலாநிதி விசுவலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியத்தில்" இருந்து பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.  


சிறப்பு விருதுகளுக்கும் பணப்பரிசுகளுக்குமான நிதி அநுசரiணையை பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளை வழங்கியிருக்கின்றமையும் இவற்றுள் தமது அன்பிற்குரியவர்கள் நினைவாக நான்கு ஞாபாகார்த்தப் பரிசுகளை பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் நால்வர் தமது அன்பிற்குரியவர்களின் நினைவாக நிதி அநுசரணை செய்து வழங்கியிருக்கின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 


க.பொ.த (சா-த) பரீட்சையில் கணித பாடத்தில் A தர சித்தி பெற்ற மாணவர்களுக்கான பரிசாக கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபர்  'அமரர். சின்னத்தம்பி தம்பிராசா நினைவுப் பரிசிலை' அவரது துணைவியார் திருமதி.மனோன்மணி தம்பிராசா அவர்களும் 


க.பொ.த (சா-த) பரீட்சையில் வாய்ப்பாட்டு இசைப் பாடத்தில் A தர சித்தி பெற்ற மாணவர்களுக்கான 'அமரர். சரஸ்வதி சுப்பிரமணியம் நினைவுப் பரிசிலை' அவரது புதல்வன் குடும்பத்தினரான திரு. திருமதி.சச்சிதானந்தன் குடும்பத்தினரும்


பாடசாலையில் அதிசிறந்த மாணவன் அல்லது மாணவிக்கான  சிறப்பு விருதினை பாடசாலையின் முன்னாள் ஆசிரியர் 'அமரர்.நாகமுத்து கனகசுந்தரம் ஞாபாகார்த்த விருதாக அவரது புதல்வன் திரு.கனக.சிவகுமாரன் அவர்களும்


பாடசாலையில் அதிசிறந்த விளையாட்டு வீரன் மற்றும் அதிசிறந்த விளையாட்டு வீராங்கனை ஆகியோருக்கான விருதினை பாடசாலையின் முன்னாள் அதிசிறந்த விளையாட்டு வீரரும், காரைநகரில் விளையாட்டுத்துறையின் முன்னோடியுமான 'அமரர் அப்பாக்குட்டி சுந்தரம்பிள்ளை ஞாபாகார்த்த விருதாக அவரது பெறாமகன் திரு.மா.கனகசபாபதி அவர்களும் நிதி அநுசரணை செய்து வழங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 
இதேவேளையில், மற்றொரு சிறப்பு விருதாக கல்லூரியில் அதிசிறந்த ஆசிரியருக்கான கௌரவ விருதாக பாடசாலையில் நாற்பது ஆண்டுகள் நற்பணியாற்றிய நல்லாசான் ‘அமரர். R.கந்தையா ஞாபகார்த்த விருதினை’ அவரது புதல்வியும் ஒய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமாகிய திருமதி.சிவபாக்கியம் நடராஜா அவர்கள் நிதி அநுசரணை செய்து வழங்குகின்றார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்


கீழே விழாவிற்கான அழைப்பிதழைக் காணலாம். 

Prize Day Invitation 2Prize Day Invitation 1

 

மூதறிஞர் சிவத்திரு.க.வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் மறைவு குறித்து கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வி(காரை இந்து) சமூகத்தின் கண்ணீர் அஞ்சலி!

Vythees manivasga

ஆயிரம் பிறைகண்ட பேரறிஞர், தத்துவ கலாநிதி சிவஸ்ரீ க. வைத்தீஸ்வரக்குருக்கள் அவர்கள்
எமது கல்லூரியின் பழைய மாணவர்களில் முதுஅறிஞராகவும், மூத்த மாணவனாகவும் விளங்கிய குருக்கள் ஐயா அவர்கள் இறையடி சேர்ந்த செய்தி கேட்டு எமது கல்லூரிச் சமூகம் கலங்கி நிற்கின்றது.

அண்மையில் பவளவிழா மலர் வெளியீட்டில் தள்ளாத வயதிலும் எமது கல்லூரிக்குத் தரிசனம் தந்து மக்களுக்கு ஆசி வழங்கிய பெருமகனாவார். குருக்கள் ஐயா அவர்கள் கற்றறிந்த பேராளன். ஆசாரம், ஒழுக்கம், பேச்சுத்திறன், எடுத்த காரியத்தை திறமையாக முடிக்கும் திறன், விடா முயற்சி, எளிமையான தோற்றம், இனிமையாக வழங்கும் அறிவுரை என்பன ஒருங்கே அமையப்பெற்ற பெருமகனார். அன்னாரின் பிரிவு எமது கல்லூரிச் சமூகத்திற்கும், காரை வாழ் மக்களுக்கும் சைவத்தமிழ் உலகிற்கும் பேரிழப்பாகும். 

அன்னாரின் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு அவரின் ஆன்மா சாந்தியடய ஈழத்துக் கூத்தனை இறைஞ்சுகின்றோம்.

இவ்வாறு கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய அதிபர். திருமதி.வாசுகி தவபாலன் அவர்கள் பாடசாலை சமூகத்தின் சார்பில் வெளியிட்ட கண்ணீர் அஞ்சலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

முழுமையான கண்ணீர் அஞ்சலிப்பிரசுரத்தைக் கீழே தருகின்றோம். 

vaithees from School

    

கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வி க.பொ.த (சா-த) பரீட்சையில் முதன்மைப் பெறுபேறு 8A, S

 KARAI HINDU LOGO

கடந்த டிசம்பர் மாதம் 2014 இல் நடைபெற்ற க.பொ.த.(சாதாரணம்)பரீட்சைப் பெறுபேறுகள் அண்மையில் வெளிவந்துள்ளன. 

மேற்படி பரீட்சைப் பெறுபேறுகளில் மிகச்சிறந்த 8A, S என்ற பெறுபேற்றினை பெற்ற மாணவன் செல்வன்.தி. பார்த்தீபன் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் முதல்நிலை மாணவன் என்ற பெருமை கொண்டு விளங்குகிறார். 

சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சித்தியெய்திய முதல் ஆறு மாணவர்களின் பெயர் விபரமும் அவர்கள்; பெற்றுக்கொண்ட தர விபரமும் கீழ்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன. 


   சிறப்புப் பெறுபேறு பெற்ற மாணவர் விபரம்

 

         மாணவர் பெயர்

      பெறுபேறு

 1

  தி.பார்த்தீபன் 

   8A,S

 2

  சி.விதுசா     

   6A,2B,S

 3

  க.அபிராமி

  5A,B,C,S

 4

  சி.விசாலினி

  4A,4B,S

 5

  இ. பவானந்தன்

  4A,2B,C,S

 6

  யோ.டர்மிதா

  4A,B,4C

அதிசிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்த மாணவச் செல்வங்களும் அவர்களைக் கற்பித்த ஆசிரியமணிகளும் ஆதாராமாக இருந்து வழிநடத்திவரும் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களும் பாராட்டுக்குரியவர்கள்.

 

கலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் (காரைநகர் இந்துக் கல்லூரி) பழைய மாணவர் சங்கம் – கனடா 3வது ஆண்டுப் பொதுக் கூட்டம்

KARAI HINDU LOGO

இடம்: Scarborough Civic Centre, 150,Borough Dr. Committee Room # 2
காலமும் நேரமும்: 2015 ஏப்பிரல் 25ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணி
தலைமை: சங்கத்தின் தலைவர் திரு. முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை அவர்கள்

நிகழ்ச்சி நிரல்

1. கடவுள் வணக்கம், அக வணக்கம்
2. பாடசாலைப் பண் இசைத்தல்
3. தலைவர் முன்னுரை
4. சென்ற ஆண்டுப் பொதுக் கூட்ட அறிக்கை சமர்ப்பித்தல் – செயலாளர்
5. செயற்பாட்டு அறிக்கை சமர்ப்பித்தல் – செயலாளர்
6. வரவு – செலவு அறிக்கை சமர்ப்பித்தல் (ஜனவரி2014 – டிசம்பர்2014) – பொருளாளர்
7. புதிய நிர்வாகசபை தெரிவு: தலைவர், உப தலைவர், செயலாளர், உதவிச் செயலாளர், பொருளாளர், உதவிப் பொருளாளர் ஆகிய உத்தியோகத்தர்களும் ஜந்து நிர்வாக சபை உறுப்பினர்களும் விண்ணப்பித்தோர்
மத்தியிலிருந்தும் விண்ணப்பம் கிடைக்கப்பெறாத பதவிகளிற்கு சமூகமளித்துள்ள உறுப்பினர்கள் மத்தியிலிருந்தும் தெரிவு செய்யப்படுவர். நிர்வாக சபை தெரிவு முறை தொடர்பான விபரத்தினை karaihinducanada.com  இணையத்தளத்திற்கு சென்று பார்வையிடமுடியும்.

8. புதிய தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டு உரையாற்றுதல்
9. அங்கத்தவர் பிரேரணைகள்: 
அ. யாப்புக்கான திருத்தப் பிரேரணைகள்
ஆ. வேறு பிரேரணைகள்
15-04-2015ஆம் திகதிக்கு முன்பாக செயலாளருக்கு எழுத்து மூலமாக அனுப்பிவைக்கப்படும் பிரேரணைகள் மட்டுமே கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும்
10. சங்கத்தின் நிதிவளத்தை மேம்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்தல்.
11. வேறு விடயங்கள்
12. அங்கத்தவர்கள் கருத்துரைகள்
13. .நன்றியுரையும் கூட்டத்தின் நிறைவும்.

தபால் முகவரி: 3875,Sheppard Avenue Apt # 411 Scarborough ON. M1T 3L6
மின்னஞ்சல் முகவரி: karaihinducanada@gmail.com
தொலைபேசி இல. 647-766-2522

அனைத்து அங்கத்தவர்களும் கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ள வேண்டுகின்றோம்.

மு. வேலாயுதபிள்ளை              கனக. சிவகுமாரன்                        ந. பிரகலாதீஸ்வரன்
        தலைவர்                                     செயலாளர்                                        பொருளாளர்

 

கலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் (காரைநகர் இந்துக் கல்லூரி) பழைய மாணவர் சங்கம் – கனடா நிர்வாக சபைத் தேர்தல் – 2015

KARAI HINDU LOGO

போட்டியிட விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

மேற்குறித்த தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ளும்பொருட்டு தேர்தல் அலவலராக எமது சங்கத்தின் போசகர் சிவநெறிச் செல்வர் திரு.தி.விசுவலிங்கம் அவர்கள் நிர்வாகத்தினால் நியமனம் செய்யப்பட்டுள்ளதுடன் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்வது முதல் தேர்தலை நடாத்தி தெரிவுகளை பிரகடனப்படுத்துவது வரைக்குமான பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

25-04-2015ஆம் திகதி நடைபெறவுள்ள ஆண்டுப் பொதுக் கூட்டத்தின் 7வது நிகழ்வாக நிர்வாக சபை தேர்தல் இடம்பெறும்

தலைவர், உப தலைவர், செயலாளர், உதவி செயலாளர், பொருளாளர், உதவி பொருளாளர், மற்றும்; ஐந்து நிர்வாக உறுப்பினர்கள் ஆகிய பதவிகளிற்கு போட்டியிட விரும்பும் அங்கத்தவர்கள் மாதிரி விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து 15-04-2015ஆம் திகதிக்கு முன்னதாக தபாலில் அல்லது மின்னஞ்சல் மூலம் தேர்தல் அலுவலருக்கு அனுப்பிவைக்கலாம். நேரிலும் கையளிக்கமுடியும்.

ஒருவர் ஏதாவது இரு பதவிகளிற்கு விண்ணப்பிக்க முடியும் ஆயினும் இவ்விண்ணப்பங்கள் தனித்தனியாக அனுப்பப்படல்வேண்டும். விண்ணப்பங்கள் அனைத்தும் இரு அங்கத்தவர்களினால் முறையே பிரேரித்து வழிமொழியப்பட்டிருக்க

வேண்டும்  விண்ணப்பங்கள் கிடைத்தமை குறித்து தேர்தல் அலுவலரால் தொலைபேசி வாயிலாக விண்ணப்பதாரிகளிற்கு உறுதிப்படுத்தப்படும்.

விண்ணப்பதாரியும் பிரேரிப்பவரும் வழிமொழிபவரும் விண்ணப்பிப்பதற்கு முன்னதாக சங்க அங்கத்துவத்தை பெற்றவர்களாக இருக்கவேண்டும்.

விண்ணப்பங்கள் அனைத்தும் தேர்தல் அலுவலரும், நிர்வாக சபை உறுப்பினர்களும் கலந்துகொள்ளும் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்ட பின்னர் karaihinducanada.com  இணையத்தளம் ஊடாக அங்கத்தவர்களின் பார்வைக்கு வெளியிடப்படும்.

ஒரு பதவிக்கு ஒன்றிற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறின் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் nதிரிவு இடம்பெறும். விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறாத பதவிகளிற்கான வெற்றிடம் சமூகமளித்திருக்கும்

அங்கத்தவர்கள் மத்தியிலிருந்து நிரப்பப்படும். தேர்தல் ஆரம்பிப்பதற்கு முன்னதாக விண்ணப்பதாரர் விரும்பின் தமது விண்ணப்பத்தினை மீளப்பெற்றுக்கொள்ளமுடியும்.

தபால் முகவரி: Mr. T. Visuvalingam, 1008-50 Elm Drive, Mississauga, ON. L5A 3X2.

மின்னஞ்சல் முகவரி: tvisuvalingam@yahoo.com  தொலைபேசி இல.: 905-566-4822

விண்ணப்பப் படிவத்தை இங்கே அழுத்தித் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 

Application Form

கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய விளையாட்டு மைதான விரிவாக்கலுக்காக மருத்துவமனை வளாகத்தின் ஒரு பகுதி காணி சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.முன்னாள் போசகர் திரு.எஸ்.கே.சதாசிவம் அவர்களின் நீண்ட நாள் முயற்சி கைகூடியுள்ளது

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதான விரிவாக்கலுக்காக காரைநகர் பொது மருத்துவமனை வளாகத்தின் ஒரு பகுதியான 4.5 பேர்ச் அளவு காணியை அலுவலக முறையில் பெற்றுக் கொள்ளும் நிகழ்வு காரைநகர் பொது மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை (14.03.2015) அன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திரு.ஆர்.ரவீந்திரன,; வடமாகாண சுகாதார அமைச்சின் பிரதிப்பணிப்பாளர் திரு.ஏ.கேதீஸ்வரன், வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் திரு.இ.தேவநேசன், காரைநகர் பொது மருத்துவமனை மருத்துவ அதிகாரி மருத்துவகலாநிதி.கே.இந்திரமோகன், கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன், ஒய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளரும், பழைய மாணவர்கள் சங்கத்தின் முன்னாள் போசகருமான திரு.எஸ்.கே.சதாசிவம், மருத்துவமனைப் பணியாளர்கள்,  நோயாளர் நலன் புரிச்சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள்; ஆகியோரும் கலந்து கொண்டனர்.

வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திரு.ஆர்.ரவீந்திரன் அவர்கள் மருத்துவமனை வளாகத்தின் ஒரு பகுதியான 4.5 பேர்ச் அளவு காணியை பாடசாலையின் மைதான விரிவாக்கத்திற்காக பயன்படுத்த அலுவலக முறையில் அனுமதி அளித்தார்.

அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தனது உரையில் மாகாண சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள இக்காணியானது பாடசாலை வளர்ச்சியின் ஒரு பகுதியான விளையாட்டு மைதான விரிவாக்கலுக்கு பேருதவியாகும் எனத் தெரிவித்தார்.

மகளிர் விவகார பிரதி அமைச்சரும் எமது பாடசாலையின் பழைய மாணவியுமாகிய திருமதி.விஐயகலா மகேஸ்வரன் அவர்கள்  இக் காணியை கல்லூரிக்கு வழங்குமாறு வடமாகாண ஆளுநர் அலுவலகத்திடம் வேண்டுகோள் விடுத்தமைக்கு அமைவாக இன்று இக்காணி எமது பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் அதிபர் மேலும் தெரிவித்தார். 

அதிபர் தனது உரையில் பிரதி அமைச்சர் திருமதி.விஜயகலா மகேஸ்வரன் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தினர், வட மாகாண சுகாதார அமைச்சின் அதிகாரிகள் எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து இக் காணியை பெற்றுக் கொள்வதற்கு தன்னாலான பெருமுயற்சி எடுத்த பழைய மாணவர் சங்க முன்னாள் போசகர் திரு.எஸ்.கே.சதாசிவம்; அவர்களிற்கும் கல்லூரி சமுகம்  சார்பாக தமது நன்றியைத் தெரிவித்தார். 

நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்கள் சிலவற்றைக் கீழே காணலாம். 

முழுமையான படத்தொகுப்பினைக் கீழே காணலாம். 

A ho7P A ho10P OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA

 

 

கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம் தீவக வலயப் பெருவிளையாட்டு போட்டிகளில் ஏழு முதலிடங்களைப் பெற்று முன்னணியில்

KARAI HINDU LOGO

தீவக வலயப் பாடசாலைகளின் அணிகளுக்கிடையே நடத்தப்பட்ட பெருவிளையாட்டுப் பொட்டிகளில் கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் ஏழு முதலிடங்களைப் பெற்று முன்னணியில் திகழ்கின்றது. 

மேற்படி பாடசாலையின் 15 வயது, 17 வயது, 19 வயது ஆண்கள், பெண்களின் அணிகள் சதுரங்கம், கரம், பட்மின்ரன், கரப்பந்து, உதைபந்து ஆகிய போட்டிகளில் வலயப் பாடசாலைகளின் அணிகளுடன் விளையாடியிருந்தது. 

இப்போட்டிகளில் சதுரங்கப் போட்டிகளில் 3 முதலிடங்களையும், பட்மின்ரன் ஆட்டங்களில் 2 முதலிடங்களையும், கரம், கரப்பந்து ஆகியவற்றில் தலா 1 முதலிடத்தையும் கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய அணிகள் பெற்றுள்ளன. 

போட்டி முடிவுகளின் முழுமையான விபரத்தை இங்கே காணலாம். 

Zonal sports resultsஇப்போட்டிகளில் பங்குபற்றிய மற்றும் வெற்றிபெற்ற அணி வீரர்களும், வீராங்கனைகளும் பயிற்றுவித்த விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர் திரு. திரு.அன்ரன் விமலதாஸ் அவர்களும்  அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களும் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்குரியவர்கள்.

 

நகரப்பாடசாலைகளுக்கு இணையான சாதனைகளை நிலைநாட்டி வரும் கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம்

KARAI HINDU LOGO

கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் பாடவிதான செயற்பாடுகளிலும் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் தீவக வலயத்தில் முதன்மைப் பாடசாலை என்கின்ற பெயரை தொடர்ந்து நிலைநாட்டி வருகின்றமை யாவரும் அறிந்ததே.

இந்நிலையில் கடந்த ஆண்டு (2014) மேற்படி பாடசாலையின் இணைப்பாடவிதான சாதனைகளை நோக்கும்போது, இப்பாடசாலையின் மாணவர்கள் மாவட்ட, மாகாண மற்றும் தேசிய மட்டப் போட்டிகளில் பங்கு பற்றி நகரப் பாடசாலைகளுக்கு இணையான வெற்றிகளை ஈட்டி தமது கல்லாரிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். 

School_Table

2013 ஆம் ஆணடில் நடைபெற்ற தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் செல்வி சி.விதுசா பங்குபற்றியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

மேற்படி போட்டிகளில் பங்குபற்றிய மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களும், இம்மாணவர்களை Yarl Geek  போட்டிகளுக்காகப் பயிற்றுவித்த ஆசிரியைகளான திருமதி.சிவாஜினி லக்ஸ்மன், திருமதி. பத்மினி சசிதரன் ஆகியோரும் இசைப்போட்டிகளுக்காகப் பயிற்றுவித்த ஆசிரியர்களான திருமதி கலாசக்தி றொபேசன், திருமதி. பங்கயச்செல்வி முகுந்தன் ஆகியோரும் ஓவியப் போட்டிக்காகப் பயிற்றுவித்த ஆசிரியர் திரு.இ.ஜீவராஜ் அவர்களும் இவற்றுக்கு ஆதாரமாக இருந்து வழிநடத்தி வரும் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களும் பாராட்டுகளுக்குரியவர்கள். 

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு – 2015 கல்லூரியின் அனைத்து மாணவர்களும் மைதானத்தில் தமது தடங்களைப் பதித்துப் பிரமிக்க வைத்த சிறந்த மெய்வல்லுநர் நிகழ்வு

DSC_0163 (Copy)

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு நிகழ்வு கடந்த சனிக்கிழமை (பெப்.14.2015) அன்று பிற்பகல் 1:00 மணிக்கு பாடசாலை மைதானத்தில் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களின் தலைமையில் விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர் திரு.அன்ரன் விமலதாஸ் அவர்களின் வழிநடத்தலில் சிறப்பாக நடைபெற்றது. 

பிரதம விருந்தினராக வடமாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் திரு.M.இராதாக்கிருஷ்ணன் அவர்களும் சிறப்பு விருந்தினராக தீவக வலயக்கல்வி அலுவலக கணக்காளர் திருமதி.க.சிவசிறிசாந்திநாயகம் அவர்களும் நிகழ்விற்கு அநுசரணை வழங்கிய குடும்பத்தைச் சேர்ந்த திருமதி.செல்வநாயம்பிள்ளை அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், முன்னாள் அதிபர்கள், அயற்பாடசாலை அதிபர்கள், முன்னாள் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், உள்ளுர் அரசியல் பிரதிநிதிகள், உள்ளுர் நுண்கலை மன்றங்களின் பிரதிநிதிகள், நலன்விரும்பிகள், விளையாட்டு ரசிகர்கள் என பெருந்திரளானோர் நிகழ்வில் சமூகமளித்திருந்தனர்.

கல்லூரியின் பழைய மாணவரும் காரைநகர் பண்டித்தாழ்வினைச் சேர்ந்தவரும் பின்னர் லண்டனில் வசித்து வந்தவருமாகிய அமரர் கனகசபை செல்வநாயகம்பிள்ளை அவர்களின் நினைவாக புலம்பெயர்ந்து வாழும் அன்னாரது குடும்பத்தினர் இவ்வாண்டு மெய்வல்லுநர் திறனாய்வு நிகழ்விற்கான நிதி அநுசரணையை வழங்கியிருந்தனர். 

சிறிலங்கா கொடி, கல்லூரிக் கொடி, ஒலிம்பிக் கொடி, இல்லங்களிற்கான கொடிகள், சிறப்பு குழுக்களிற்கான கொடிகள் ஏற்றிவைக்கப்பட்டு நிகழ்வுகள் தொடங்கின. 

கல்லூரிக் கொடியினை தாங்கிய அணி, பான்ட் அணி, நான்கு இல்லங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் ஆண்கள் பெண்கள் என்ற இரு அணிகள் வீதம் எட்டு அணிகள் சுற்றாடல் முன்னோடிக்குழு, பெண்கள் சாரணிய அணி(Girls Guides) ஆண்கள் சாரணிய அணி(Boys Scouts), சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் அணி என மொத்தமாக 15 அணிகள் அணிநடையில் பங்குகொண்டிருந்தமை மைதானத்தில் மாணவர்களின் பங்குபற்றலை அதிகரித்திருந்தது. 

இடைவேளையின்போது 'இசையும் அசைவும்' என்கின்ற தொனிப்பொருளில் 72 மாணவர்கள கண்ணைக்கவரும் வண்ணம் வண்ணமயமான உடையணிந்து பங்குபற்றிய உடற்பயிற்சிக் கண்காட்சி(Gymnastics Show) பார்வையாளர்களை கவர்ந்து பிரமிக்க வைத்திருந்தது.

இந்நிகழ்விற்கு தலைமை வகித்த கல்லூரி அதிபர் திருமதி வாசுகி தவபாலன் தமது உரையின்போது மாணவர்களின் ஆளுமையை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் மாகாண தேசிய நிலைகளில்; கல்லூரியின் மாணவர்கள் பல தடங்களை ஏற்படுத்தி அதன் புகழை நிலைநாட்டிவருவதை இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிட விரும்புவதுடன் வருடாந்த மெய்வல்லுநர் நிகழ்வானது மாணவர்களின் ஆளுமை விருத்திக்கான முக்கியமான களத்தை அமைத்துக் கொடுப்பதாக மேலும் தெரிவித்தார். 

இணைப்பாட விதான செயற்பாடுகளில் மட்டுமல்லாது பாடவிதானச் செயற்பாடுகளிலும் ஏற்பட்டு வரும் வளர்ச்சி குறித்து தனது மகிழ்ச்சியினை வெளிப்படுத்திய அதிபர் திருமதி தவபாலன் அண்மையில் கல்லூரியிலிருந்து ஆறு மாணவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களின் கலைப்பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தமையையும் தமது உரையில் குறிப்பிட்டார்.

மேலும் இம்மெய்வல்லுநர் திறனாய்வு நிகழ்வு சிறப்பாக நடைபெற நிதியனுசரணை வழங்கிய அமரர்.செல்வநாயகம் குடும்பத்தினருக்கு தமது நன்றியையும் அதிபர் தெரிவித்தார். 

நான்கு இல்லங்களுக்கிடையே நடைபெற்ற மெய்வல்லுநர் திறனாய்வில் இவ்வாண்டு பாரதி இல்லம்(401 புள்ளிகள்) முதலிடத்தையும், தியாகராசா இல்லம்(388புள்ளிகள்) இரண்டாம் இடத்தையும், சயம்பு இல்லம்(382 புள்ளிகள்) மூன்றாம் இடத்தையும், நடராசா இல்லம்(360 புள்ளிகள்) நான்காம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.

விருந்தினர்களும் நிகழ்விற்கு அநுசரணை வழங்கிய திருமதி.செல்வநாயகம்பிள்ளை அவர்களும் வெற்றி பெற்ற வீரர்கள், வீராங்கனைகளுக்கான பரிசில்களை வழங்கினர். 

கல்லூரியின் விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர் திரு.அன்ரன் விமலதாஸ் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது. 

நன்கு திட்டமிடப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்ட இந்த மெய்வல்லுநர் திறனாய்வு நிகழ்வில் நன்கு பயிற்சியளிக்கப்பட்ட அணிவகுப்பு அணிகளும் மற்றும் உடற்பயிற்சி அணி நிகழ்த்திக் காட்டிய காட்சிகள் பாடசாலையில் கற்கும் சகல மாணவர்களும் மைதானநிகழ்வுகளில பங்குபற்றுவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்திருந்ததாகவும் விளையாட்டு ரசிகர்கள் தெரிவித்திருந்தனர். 

      நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வின் முன்னோடியாக இடம்பெற்ற வீதியோட்டமும்(மரதன்) சைக்கிளோட்டமும்

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் இல்லங்களுக்கிடையேயான வருடாந்த மெய்வல்லுநர் நிகழ்வினை முன்னிட்டு ஆண்களிற்கான வீதியோட்டமும்(மரதன்); பெண்களிற்கான சைக்கிள் ஓட்டமும் சென்ற 24-01-2015 சனிக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றிருந்தது. 

ஆண்களிற்கான வீதியோட்ட நிகழ்வினை பாடசாலையின் வளர்ச்சிப் பணிகளிற்கு உதவி வருகின்ற அதன் பழைய மாணவரும் பிருத்தானியா-காரை நலன் புரிச் சங்கத்தின் போசகர்களுள் ஒருவருமாகிய திரு.வி.நாகேந்திரம் கல்லூரிக் கொடியினை அசைத்து வைத்துத் தொடக்கி வைத்தார். கல்லூரி முன்பாக ஓட்டத்தை ஆரம்பித்த வீதியோட்ட வீரர்கள் காரைநகரின் 11மைல் நீளமான சுற்றுவீதி வழியாக ஓடி ஆரம்பித்த இடத்தை வந்தடைந்தனர்.

அதே போன்று பெண்களிற்கான சைக்கிளோட்ட நிகழ்வினை பிருத்தானியா-காரை நலன்புரிச் சங்கத்தின் செயற்பாட்டு உறுப்பினர்களுள் ஒருவரான திரு.நடராசா தொடக்கி வைத்தார். சைக்கிள் ஓட்ட வீராங்கனைகள் ஒவ்வொருவரையும் போட்டி தொடங்குவதற்கு முன்பாக அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் கைலாகு கொடுத்து உற்சாகப்படுத்தினார். துறைமுகம் சந்தியிலிருந்து ஆரம்பித்த சைக்கிளோட்ட வீராங்கனைகள் கிழக்கு வீதி வழியாக வெற்றிக்கம்பம் அமைந்திருந்த பாடசாலை முன்றலை வந்தடைந்தனர். 

மேற்குறித்த இரு நிகழ்வுகளின் போதும் வீரர்களும் வீராங்கனைகளும் சென்ற வீதியின் இருமருங்கிலும் திரளான மக்களும் விளையாட்டு ரசிகர்களும் திரண்டு நின்று ஆரவாரம்செய்து அவர்களை உற்சாகப்படுத்தியிருந்தனர். 

வெற்றிக்கம்பத்தினை அடைவது எவராகவிருக்கும் என்ற எதிர்பார்ப்பும் பரபரப்பும் நிலவுகின்றவகையில் போட்டியாளர்கள் மிகுந்த விறுவிறுப்புடன் பங்குகொண்டமை அனைவரையும் கவர்ந்திருந்தது.

வீதியோட்ட நிகழ்வின் வெற்றியாளர்கள்

1ம் இடம்: சி.கோகுலன் (தரம் 12, தியாகராசா இல்லம்) 

2ம் இடம்: பே.அலக்சன் (தரம் 11, சயம்பு இல்லம்)   

3ம் இடம்: பா.திலக்சன் (தரம் 11, தியாகராசா இல்லம்) 

4ம் இடம்: சி.பிரகாஸ் (தரம் 11, சயம்பு இல்லம்)     

5ம் இடம்: சு.சசீந்திரன் (தரம் 10 தியாகராசா இல்லம்) 

 

                     நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்  

OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA

 

காரைநகர் கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி

KARAI HINDU LOGO

காரைநகர் கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நாளை மறுதினம் சனிக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் அதிபர் திருமதி த.வாசுகி தலைமையில் நடைபெற உள்ளது.

பிரதம விருந்தினராக மேலதிக மாகாணக் கல்விப்பணிப்பாளர் எம்.ராதாகிருஸ்ணன் அவர்களும் சிறப்பு விருந்தினராக தீவக வலயக் கணக்காளர் திருமதி கவிதா சிவஸ்ரீசாந்திநாயகமும் கௌரவ விருந்தினராக மருத்துவர் வேலாயுதம் ஜங்கரனும் கலந்துகொள்ள உள்ளனர்.

 

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து பல்கலைக்கழகம் நுழையும் ஆறு மாணவர்களும் பிரபல வர்த்தகர் அமரர் S.P.S. நினைவாக ஊக்குவிப்புப் பரிசில் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

கலாநிதிஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த.(உ-த) பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகம் நுழையும் ஆறு மாணவர்களும் பிரபல வர்த்தகர் அமரர் S.P.S  நினைவாக ஊக்குவிப்புப் பரிசில் வழங்கிக் கௌரவிக்கும் நிகழ்வு கடந்த செவ்வாய்கிழமை (10.02.2015) அன்று கல்லூரியின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.ஜோன் குயின்ரஸ் அவர்களும், சிறப்பு விருந்தினராக பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் முன்னாள் தலைவரும் தற்போதய நிர்வாக உறுப்பினருமாகிய திரு.தம்பையா அம்பிகைபாகன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். 

காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன், யாழ்ற்றன் கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி மற்றும் பெற்றோர், ஆசிரியர், பழைய மாணவர்கள் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். 

விருந்தினர்களும், பல்கலைக் கழகம் நுழையும் மாணவர்களும் பாடசாலையின் பான்ட் வாத்திய இசையுடன் அழைத்துவரப்பட்டு மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர். ஸ்ரீலங்காக் கொடி, கல்லூரிக் கொடி ஏற்றி வைக்கப்பட்ட பின்னார் மண்டபத்தினுள் இறைவணக்கத்துடன் நிகழ்வுகள் தொடங்கின. 

ஆசிரியை திருமதி.சத்தியா தியோஜினஸ் வருகை தந்திருந்த அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மடத்துக்கரை அம்மன் கோயில் பிரதம குருக்கள் சிவத்திரு கு.சரவணபவானந்தசர்மா அவர்களின் ஆசியுரை வழங்கினார். 

அதிபர் தமது தலைமையுரையில், சாதனை மாணவர்களையும் அவர்களைக் கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டியதுடன் மாணவர்களின் பல்கலைக்கழகக் கல்வி சிறப்புறவும் இம்மாணவர்கள் மேலும் சாதனைகளைப் படைத்து எமது கல்லூரி அன்னைக்குப் பெருமை சேர்க்கவும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இம்மாணவர்களுக்கான ஊக்குவிப்புப் பரிசாக ரூ 60,000 ரூபாவை தமது தந்தையார் பிரபல வர்த்தகர் அமரர் S.P.S நினைவாக பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினூடாக வழங்கி உதவிய அவரது மகன் திரு.அரிகரன் அவர்களுக்கும் தமது நன்றியினைத் தெரிவித்தார். 

அடுத்து பல்கலைக் கழகம் நுழையும் மாணவர்களின் ஆற்றுகைகளின் வரிசையில் செல்வி.பாலச்சந்திரன் வதனியின் மெல்லிசையும், செல்வி.கி.சிவநிறஞ்சனா, செல்வி.மு.சகிதா, செல்வி.நா.நாகசிந்துஜா ஆகியோரின் சிவநடனமும் இடம்பெற்றன. 

வாழ்த்துரைகளை பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர், கோட்டக் கல்விப்பணிப்பாளர் மற்றும் ஆசிரியர் சார்பில் திரு.இ.ஜீவராஜ் அவர்களும் வழங்கினர். 

அடுத்து கௌரவ மாணவர்கள் ஆறு பேருக்கும் விருந்தினர்களால் அமரர் S.P.S நினைவாக பணப்பரிசாக தலா ரூ10,000 ரூபா வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். 

இம்மாணவர்களைக் கற்பித்த ஆசிரியர்களை மாணவர்கள் மாலை அணிவித்து கௌரவித்து வணங்கி ஆசிர்வாதம் பெற்றனர். 

அடுத்து கௌரவிக்கப்பட்ட மாணவர்கள் தமது ஏற்புரையை வழங்கினர். 

ஆசிரியை திருமதி.கலாநிதி சிவநேசனின் நன்றியுரையுடன் அமைதியாகவும் எளிமையாகவும் நடைபெற்ற இந்நிகழ்வு நிறைவு பெற்றது. 

கதி இழந்தாலும் தமது பதி இழக்காமால் இன்றும் பிறந்த மண்ணில் வாழ்ந்து கல்வி கற்று பல்கலைக்கழகம் நுழையும் இம்மாணவச் செல்வங்களுக்கும் கல்வியோடு கலைகளையும் ஒழுக்கத்தையும் புகட்டிய ஆசிரிய மணிகளுக்கும் இம்மாணவர்களுக்கு மட்டுமல்ல எமது மண்ணுக்கும் ஆதாரமாக வாழ்ந்து வரும் பெற்றோருக்கும் இவ்வாறான மதிப்பளிப்பு நிகழ்வுகள் தன்னம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்துவதுடன் இம்மாணவர்களின் சாதனை வளர்ந்து வரும் இளைய மாணவ சமூகத்திற்கு எடுத்துக்காட்டாகவும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.  

நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம். 

OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA

 

கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு அழைப்பிதழ்

Sports meet Invitiation1 Sports meet Invitiation2

யா/கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம், காரைநகர். பல்கலைக்கழகம் நுழையும் மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு

  KARAI HINDU LOGO

     யா/கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம், காரைநகர்.

 
இடம்    :    நடராசா மண்டபம்

காலம்    :    10.02.2015 மு.ப 9.00 மணி
(செவ்வாய்க் கிழமை)

தலைவர்
திருமதி வாசுகி தவபாலன் (அதிபர்)

பிரதம விருந்தினர்
திரு தி. ஜோன் குயின்ரஸ்
(வலயக் கல்விப் பணிப்பாளர், தீவகம்)

சிறப்பு விருந்தினர்
திரு த. அம்பிகைபாகன்
(முன்னாள் தலைவர், நிர்வாக உறுப்பினர் பழைய மாணவர் சங்கம், கனடாக்கிளை)

நிதி அனுசரணை
திரு சுப்பிரமணியம் அரிகரன் (பழைய மாணவர், கனடா)
(அமரர் சுப்பிரமணியம் ஞாபகார்த்த நிதியம்)

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

 பாடசாலைச் சமூகம்.

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து பல்கலைக்கழகம் நுழையும் ஆறு மாணவர்களுக்கும் பிரபல வர்த்தகர் அமரர் S.P.S. நினைவாக கௌரவப் பரிசில்

SPS

கலாநிதிஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த.(உ-த) பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகம் நுழையும் ஆறு மாணவர்களும் S.P.S  என காரைநகர் மக்களால் அழைக்கப்பட்டு வந்த பிரபல வர்த்தகர் அமரர் S.P.சுப்பிமணியம் அவர்கள் நினைவாக பணப் பரிசில்  வழங்கி கௌரவிக்கப்பட உள்ளனர். 

அமரர் S.P.சுப்பிரமணியம் அவர்களின் மகன் திரு.அரிகரன் அவர்கள் தமது அன்புத் தந்தையாரை நினைவுகூர்ந்து ஊக்குவிப்பு பரிசிலை வழங்குவதற்கு அறுபதினாயிரம் ரூபாவினை(ரூ60,000.00) பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை ஊடாக உதவியுள்ளார்.   

கல்லூரியிலிருந்து கடந்த டிசம்பர் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த(சா-த) பரீட்சைக்கு தோற்றிய 55 மாணவர்களில் இரண்டாம் தவணைப் பரீட்சையில்  பெற்றுக்கொண்ட பெறுபேறுகளின் அடிப்படையில் 25 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு இருபத்தையாயிரம் ரூபாவினை (ரூ25000.00) திரு.அரிகரன் தந்தையாரின் நினைவாக எற்கனவே உதவியிருந்தவர் என்பதும் இங்;கு குறிப்பிடத்தக்கதாகும். 

அமரர் S.P.சுப்பிரமணியம் நினைவுப் பரிசில் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(10.02.2015) அன்று நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் திருமதி வாசுகி தவபாலன் தலைமையில் நடைபெற உள்ளது.

மேற்படி நிகழ்வில் தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.ஜோன் குயின்ரஸ் பிரதம விருந்தினராகவும், கனடாக் கிளையின் முன்னாள் தலைவரும் தற்போதய நிர்வாக சபை உறுப்பினருமாகிய திரு.த.அம்பிகைபாகன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ள உள்ளனர். 

   

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவர்கள் ஆறாக உயர்வு தீவக வலயத்தில் முதலிடம்!

KARAI HINDU LOGO

கடந்த ஆகஸ்ட் 2013 இல் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் இருந்து ஆறு மாணவர்கள் இலங்கையின் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகி உள்ளனர்.  

காத்திருப்போர் தெரிவுப் பட்டியலில்(Waiting List) இருந்து கலாநிதி. ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த செல்வி.சோபிகா சிதம்பரப்பிள்ளை யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் தொல்பொருளியல் கற்கை நெறிக்குத் தெரிவாகியமையை அடுத்தே மேற்படி பாடசாலையில் இருந்து பல்கலைகழக அனுமதி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்வடைந்துள்ளது. 

ஏற்கனவே யாழ்ப்பாண, மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களின் நுண்கலைப் பீடங்களுக்கு ஐந்து மாணவர்கள் தெரிவாகி தீவக வலயத்தில் அதிகூடிய எண்ணிக்கையான மாணவர்கள் மேற்படி பாடசாலையிலிருந்து பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகியமை பற்றிய செய்தி வெளியாகியிருத்தது.

பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவாகிய மாணவர்களின் பெயர் விபரம் வருமாறு

மாணவர் பெயர்                                   பாடம்                  பீடம் பல்கலைக்கழகம்

ஆனந்தா காங்கேயன்                           சித்திரம்           இராமநாதன் நுண்கலைப்பீடம்,

                                                                                                   யாழ் பல்கலைக்கழகம்
 

சிவநிறஞ்சனா கிருஷ்ணமூர்த்தி       நடனம்        இராமநாதன்  நுண்கலைப்பீடம்,

                                                                                                    யாழ் பல்கலைக்கழகம்          

 

சகிதா முடிராசா                                     நடனம்           இராமநாதன் நுண்கலைப்பீடம்,

                                                                                          யாழ் பல்கலைக்கழகம்;

நாகசிந்துஜா  நாகேந்திரம்                    நடனம்     விபுலானந்தா அழகியற் கல்லூரி,

                                                                                          கிழக்குப் பல்கலைக்கழகம்

    

வதனி   பாலச்சந்திரன்                          சங்கீதம்    விபுலானந்தா அழகியற் கல்லூரி,

                                                                                          கிழக்குப் பல்கலைக்கழகம் 

 

சோபிகா  சிதம்பரப்பிள்ளை   தொல்பொருளியல்       கலைப்பீடம்,

                                                                                              யாழ் பல்கலைக்கழகம்  

 

அதிகூடிய எண்ணிக்கையில் பல்கலைக் கழக அனுமதி பெற்று தீவக வலயத்தில் முதலிடம் பெற்ற சாதனை படைத்து மேற்படி பாடசாலைக்குப் பெருமை சேர்த்த மாணவச்  செல்வங்களும் அவர்களைக் கற்பித்த ஆசிரிய மணிகளும் உறுதுணையாக வழிநடத்திய அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களும் பாராட்டுக்குரியவர்கள்

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய க.பொ.த (உ-த) பரீட்சைப் பெறுபேறுகள் ஆகஸ்ட் 2014 வர்த்தகப் பிரிவில் அதிசிறந்த பெறுபேறு 2A B கலைப்பிரிவில் சிறந்த பெறுபேறு 2A C

KARAI HINDU LOGO

கடந்த கஸ்ட் 2014 இல் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பரீட்சை முடிவகள் அண்மையில் வெளிவந்திருந்தன. 

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து வர்த்தகப் பிரிவு மாணவி செல்வி. பானுஜா கனகரத்தினம்  2A B  என்ற பெறுபேற்றினைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 17 ஆம் இடத்தைப் பெற்று விளங்குகின்றார். 

கலைப்பிரிவில் செல்வி.சிவறஞ்சனா கிருஸ்ணமூர்த்தி 2A C  என்ற சிறந்த பெறுபேற்றினைப் பெற்றுள்ளார். 

சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் விபரம் வருமாறு:

வர்த்தகப் பிரிவு
1.    பானுஜா கனகரத்தினம்                       2A  B                              (மாவட்டநிலை 17)

கலைப் பிரிவு 
2.    சிவநிறஞ்சனா கிருஸ்ணமூர்த்தி     2A C
3.    றேனுகா கதிரமலை                            A  2B  
4.    ஜெயந்திமாலா நடராசா                     A  2S  
5.    ஆனந்தா  காங்கேயன்                        3B                             
6.    சகிதா முடிராசா                                   2B C                                                
7.    கம்சிகா அன்பழகன்                            2B C                                                 
8.    மதுசா இரத்தினவேல்                        B 2C                                                 
9.    சுவிதா இராசேந்திரம்                         B  2C                                                  
10.    மிதுனா குமாரசாமி                           B  2C                                                                                            
         
கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர் தரப் பரீட்சைக்கு இவ்வாண்டு மொத்தமாக 47 மாணவர்கள் தோற்றியிருந்த நிலையில், மேலே குறிப்பிட்ட 10 மாணவர்கள் உட்பட மொத்தம் 34 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகமை பெற்றுள்ளனர். 

அதாவது 72.3 % சதவீதமான மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளனர். 

பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்ற மாணவர்களின் சதவீதம் கடந்த ஆண்டை விட 6.5% சதவீதத்தினால் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும். 

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையில் கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் மேம்படுத்தப்பட்ட பல்லூடக மாநாட்டு மண்டபம் திறந்து வைக்கப்பட்டுள்ளது

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியலாயத்தில் மாணவர்களின் கல்வித்தர அபிவிருத்தியின் ஒர் அங்கமாக பாடசாலையின் பல்லூடக அறையை மேம்படுத்தும் திட்டத்தை கனடா-காரை கலாச்சார மன்றம் அண்மையில் முன்னெடுத்திருந்தது. 

மேற்படி திட்டத்தின் கணிசமான பகுதி நிறைவடைந்த நிலையில், மேம்படுத்தப்பட்ட பல்லூடக மாநாட்டு மண்டப திறப்பு விழா கடந்த சனிக்கிழமை 03.01.2015 அன்று பி.ப 2:00 மணிக்கு அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தலைமையில் நடைபெற்றது.  

விழாவிற்கு பிரதம விருந்தினராக கனடா-காரை கலாச்சார மன்றத் தலைவர் திரு.தம்பிஐயா பரமானந்தராஜா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கனடா-காரை கலாச்சார மன்ற செயலாளர் திரு.பிரமேந்திரதீசன் திரவியநாதன், பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பொருளாளர் திரு.மா.கனகசபாபதி, லண்டன் காரை நலன்புரிச் சங்க போசகர்களான திரு.வி.நாகேந்திரம், திரு.ப.தவராஜா ஆகியோரும் 
கௌரவ விருந்தினர்களாக ஒய்வுநிலை வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.ப.விக்கினேஸ்வரன், காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

ஓய்வுநிலை கல்வி அதிகாரிகள், அயல்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், உள்ளுர் சமூகசேவை அமைப்புகளின் உறுப்பினர்கள், புலம்பெயர் காரை அமைப்புகளின் உறுப்பினர்கள், மாணவர்கள் எனப்பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர். 

கனடா-காரை கலாச்சார மன்ற உப-தலைவர் திரு.பொன்னம்பலம் தவக்குமார், நிர்வாக உறுப்பினர் திரு.தம்பையா அம்பிகைபாகன் ஆகியோரும் நிகழ்வில் நேரடியாகப் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேம்படுத்தப்பட்ட பல்லூடக மாநாட்டு மண்டபத்தை கனடா-காரை கலாச்சார மன்றத் தலைவர் திரு.தம்பிஐயா பரமானந்;தராஜா அவர்கள் நாடா வெட்டி சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார். 

விருந்தினர்கள் மங்கல விளக்கேற்ற கல்லூரி மாணவர்களின் இறைவணக்கத்தைத் தொடர்ந்து ஆசிரியை திருமதி றகிதா பாலகாசன் வரவேற்புரையாற்றினார். 

அதிபரின் தலைமையுரையைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்களும், ஆசிரியர்களும் கற்றல் கற்பித்தலில் பல்லூடகப் பயன்பாடு பற்றிய செய்முறை விளக்கத்தினைச் செய்து காட்டினர். 

அடுத்து முற்றிலும் மாறுபட்ட நிகழ்வாக பழைய மாணவர்களுக்கான நேரம் அமைந்திருந்தது. வருகை தந்திருந்த பழைய மாணவர்களை அவுஸ்ரேலியா, கனடா, பிருத்தானியா, காரை என நான்கு அணிகளாகப் பிரித்து அதிபரினால் நடத்தப்பட்ட 'விளையாட்டு அல்ல விளையாடு' என்ற போட்டி நிகழ்ச்சி எல்லோரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருந்தது. 

இவ்வாறான போட்டி நிகழ்ச்சிகள் எம்மை மீண்டும் பள்ளிப்பருவத்திற்கு அழைத்துச் செல்வதுடன் எமக்கிடையே உள்ள வேறுபாடுகளைக் களைந்து அனைவரையும் நேர்மனப்பாங்குடன் சிந்திக்கவும் வைக்கின்றது. 

அடுத்து ஒய்வுநிலை வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.ப.விக்கினேஸ்வரன் உரையாற்றும் போது இ;வ்வாறான பல்லூடக மாநாட்டு மண்டபம் வசதியுள்ள நகரங்களில் அமைந்துள்ள ஒரு சில செல்வந்த பாடசாலைகளிலேயே உள்ளதாகவும் இந்த வசதி எமது மாணவர்களுக்குக் கிடைத்தமை பெரும் வரப்பிரசாதம் எனவும் கூறினார். தினமும் நான்கு மணித்தியாலங்கள் பல்லூடகப் பயன்பாட்டுடனான கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளுக்கு இவ்வசதியினைப் பயன்படுத்தி வரும்போது இக்கல்லூரியின் மாணவர்கள் சிறந்த பயனை எட்ட முடியும் எனவும் குறிப்பிட்டார். 

பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட கனடா-காரை கலாச்சார மன்றத் தலைவர் திரு.தம்பிஐயா பரமானந்தராஜா உரையாற்றும்போது தாம் எதிர்பார்த்ததிலும் சிறப்பாக இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் நவீன கற்பித்தல் முறையில் எமது கிராம மாணவர்கள் சிறந்த பயன்பெறுவதற்கு இப்பல்லூடகப் பயன்பாடு உதவும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார். இத்திட்டத்தை வகுத்து அதனை நிறைவேற்ற அனைத்து வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களைப் பாராட்டி தமது நன்றியினையும் தெரிவித்துக் கொண்டார். 

கனடா-காரை கலாச்சார மன்றம் இத்திட்டத்திற்கான நிதி அனுசரணையாக பதின்மூன்று இலட்சத்து அறுபதினாயிரம் ரூபா (ரூ13,60,000) ஒதுக்கியிருந்தது. இதன் முதற்கட்ட நிதி விடுவிப்பாக ஆறு இலட்சம் ரூபாவினை ஏற்கனவே வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவேறியது. 

விழாவில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.  

 

OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA

 

 

 

OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டமும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க தீர்மானமும்

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டம் 28-12-2014 ஞாயிற்றுக்கிழமை பி.ப.2.30க்கு நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரி அதிபரும் பழைய மாணவர் சங்கத் தலைவருமாகிய திருமதி வாசுகி தவபாலன் தலைமையில்; நடைபெற்றது. 

இப்பொதுக் கூட்டத்திற்கு லண்டன் காரை நலன்புரிச் சங்கத்தின் போசகர் திரு.வி.நாகேந்திரம், கனடா-காரை கலாச்சார மன்ற தலைவர் திரு.த.பரமானந்தராஜா, செயலாளர் திரு.தி.பிரமேந்திரதீசன், பழைய மாணவர் சங்க கனடா கிளையின் உப-பொருளாளர் திரு.மா.கனகசபாபதி, சுவிஸ் காரை நலன்புரிச் சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு.ஆ.செந்தில்நாதன்;; ஆகியோர் உட்பட சுமார் எழுபத்தைந்து வரையான பழைய மாணவர்கள் சமூகமளித்திருந்தனர். 

இறைவணக்கம், அகவணக்கத்தினைத் தொடர்ந்து செயலாளர் திரு.க.நிமலதாசன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

அதிபர் அறிக்கை, செயற்பாட்டு அறிக்கை, பொருளாளர் அறிக்கை என்பன முறையே அதிபர் திருமதி.வாசுகி தவபாலன், செயலாளர் திரு.கணபதிப்பிள்ளை நிமலதாசன், பொருளாளர் திரு.அகிலன் சுந்தரலிங்கம் ஆகியோரினால் சபையில் வாசித்து சமர்ப்பிக்கப்பட்டு திருத்தங்களின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டன. இவ்வறிக்கைகள் அடங்கிய பிரதி நூல் வடிவில் வெளியிடப்பட்டு சமூகமளித்த அனைவருக்கும் வழங்கப்பட்டது. 

அடுத்ததாக 2015 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபைத் தெரிவு இடம்பெற்றது. 

பதவி வழியால் கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தலைவராக இருப்பார். திரு.செ.அருட்செல்வம் உப-தலைவராகவும் திரு.க.நிமலதாசன் செயலாளராகவும், திரு.வி.ஹம்சன் உப-செயலாளராகவும், திரு.சு.அகிலன் பொருளாளராகவும், திரு.த.சற்குணம் உப-பொருளாளராகவும் மேலும் எட்டு நிர்வாக சபை உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர். 

புதிய நிர்வாக சபைத் தெரிவினைத் தொடர்ந்து தலைவர் திருமதி.வாசுகி தவபாலன் தமது உரையில் புதிய நிர்வாகத்தை வரவேற்பதுடன் பழைய நிர்வாகத்திற்கு தமது நன்றியையும் தெரிவித்து சபையோர் தமது கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என்று கூறினார்.

பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையின் உப-தலைவர் திரு.சி.நேசேந்திரம் அவர்கள் கருத்துத் தெரிவிக்கும்போது வரலாற்றில் எக்காலத்திலும் அழியாத கருங்கல்லிலான சிலைகளின் மகத்துவத்தை விளக்கி ஸ்ரீமான்.முத்து சயம்பு அவர்களிற்கும் கொடைவள்ளல் அமரர் திருமதி தங்கம்மா நடராசா அவர்களிற்கும் கருங்கல்லிலான சிலையினை பாடசாலையில் நிறுவ வேண்டும் எனவும் அதற்கான செலவுகளை தாமே பொறுப்பேற்க முடியும் என்ற கருத்தினையும் முன்மொழிந்து பேசினார்.

திரு.சி.நேசேந்திரம் அவர்களின் கருத்தினை வழிமொழிந்து உரையாற்றிய கனடா-காரை கலாச்சார மன்றத் தலைவர் திரு.த.பரமானந்தராஜா இக்கல்லூரியின் வெள்ளிவிழா அதிபராகச் சேவையாற்றி கல்லூரியில் அவரது சேவைக் காலத்தைப் பொற்காலமாகப் பதிவாக்கிய கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களிற்கும் கருங்கல்லிலான சிலை அமைத்தல் வேண்டும் என்ற கருத்தினை முன்வைத்தார். 

அதற்குப் பதிலளித்து உரையாற்றிய அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்கள் எமது காரைநகரைச் சேர்ந்த மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்களின் சிந்தனையில் கருக்கொண்டு அமைக்கப்பட்டதே இப்பாடசாலை ஆகும். காரைநகரிலும் நாடெங்கிலும் பல சைவப் பாடசாலைகளை நிறுவுவதற்கும், சைவாசிரிய கலாசாலைகளை அமைப்பதற்கும் பாடுபட்டு நாவலருக்கு அடுத்து வைத்துப் போற்றப்படும் வரலாற்று நாயகரான காரைநகரின் சைவக் கல்விப்பாரம்பரியத்தின் முன்னோடியான மகான் சிவத்திரு.ச.அருணாசல உபாத்தியாருக்கும் கருங்கல்லிலான சிலை எமது பாடசாலையில் நிறுவப்படும்போதே எமது கல்லூரியின் வரலாறு முழுமை பெறும் என்று அறிவுபூர்வமாகவும், ஆதாரங்களுடனும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தனது கருத்தினை ஆணித்தரமாக முன்வைத்தார்.    

அதிபர் திருமதி.வாசுகி தவபாலனின் முன்மொழிவினை உள்வாங்கிய சபையினர் மத்தியில் கனடா-காரை கலாச்சார மன்றத்தின் தலைவர் திரு.தம்பிஐயா பரமானந்தராஜா அவர்கள் கருத்துரைக்கும்போது மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்களுக்கும் வெள்ளிவிழா அதிபர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களுக்கும் சிலைகள் நிறுவும் செலவினை கனடா-காரை கலாச்சார மன்றம் எற்றுக்கொள்வது குறித்து நிர்வாகத்துடன் ஆலோசிக்கப்படும் என தெரிவித்ததுடன் சாத்தியப்படாதவிடத்து கலாநிதி.ஆ.தியாகராசாவிற்கு சிலை நிறுவும் செலவினை தாமே ஏற்றுக்கொள்ளமுடியும் எனவும் தெரிவித்தார்.

பாடசாலை வரலாற்றில் பதிவாகி என்றென்றும் நினைவு கூரப்படவேண்டிய பெரியார்கள் நால்வருக்கும் கருங்கல்லில் சிலைகள் நிறுவவேண்டும்; என்ற முன்மொழிவுகள் சபையில் ஆட்சேபனையின்றி ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு கல்லூரி வரலாற்றில் முக்கியத்துவம் மிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

தொடர்ந்து பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை உப-பொருளாளர் திரு.மா.கனகசபாபதி அவர்கள் கருத்துத் தெரிவிக்கும்போது கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்கான திட்டங்களிற்கு எமது சங்கம் முன்னுரிமை வழங்கி வருவதாகவும்; இவை தொடர்பான செயற்திட்டங்களுக்கு உதவிகோரப்படும் பட்சத்தில் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கி கல்லூரியின் கல்வித் தரத்தினை உயர்த்துவதற்கு ஆவலோடு இருப்பதாகவும் தெரிவித்தார். 

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் என்ற பாடசாலையின் பெயரினை காரைநகர் இந்துக் கல்லூரி என்ற பெயருக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பிரேரணை திரு த.சற்குணம் அவர்களினால் கொண்டு வரப்பட்டபோது சபையோரின் அபிப்பராயத்தினை தலைவர் கோரியபோது இப்பிரேரணை எதிர்ப்பின்றி; ஏகமனதாக எற்றுக்கொள்ளப்பட்டது.

சபையோர் கருத்துரையின்போது கனடா-காரை கலாச்சார மன்ற செயலாளர் திரு.தி,பிரமேந்திரதீசன், யாழ் பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளர் திருமதி வீரமங்கை ஸ்டாலினா யோகரத்தினம் சுவிஸ்-காரை அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவர் திரு.ஆறுமுகம் செந்தில்நாதன் பழைய மாணவர் சங்க முன்னாள் செயலாளர் திரு.வே.சபாலிங்கம் உள்ளிட்ட பலர் தமது கருத்துகளை முன்வைத்திருந்தனர். 

அதிபர் திருமதி வாசுகி தவபாலன் உறுப்பினர்களின் கருத்துகளிற்கும் வினாக்களுக்கும்;; புள்ளிவிபர வரைபடங்களுடன் விரிவாகப் பதிலளித்துப் பேசினார். எமது பாடசாலையின் ஆளணி வளம், மாணவர்கள் மற்றும் வளங்கள் என்பனவற்றை வைத்துக் கொண்டே நாம் அதிஉயர் கல்வித்தரப் பெறுபேறுகளைப் பெறுவதற்காகப் பிரயத்தனம் எடுப்பதாகவும் பாடசாலையின் கல்வித்தர விருத்திக்கான வளங்களை வழங்குவதற்காகவே கல்வித்திணைக்களம் சேவையாற்றுவதாகவும் குறிப்பிட்டார். மேலும் சிறப்பாக பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் காத்திரமான பங்களிப்புகளே பாடசாலையின் உடனடித் தேவைகளிற்கும் முக்கியமான திட்டங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு பாடசாலையின் சுமூகமான செயற்பாட்டிற்கு வழிவகுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நான்கு மணித்தியாலத்திற்கு மேலாக நடைபெற்ற இப்பொதுக்கூட்டம் செயலாளரின் நன்றியுரையைத் தொடர்ந்து திரு.ஆ.செந்தில்நாதனின் இறைவணக்கத்துடன் இனிதே நிறைவுற்றது.

புதிய நிர்வாக சபையின் விபரம் வருமாறு:

தலைவர்: திருமதி.வாசுகி தவபாலன் (அதிபர்)
உப-தலைவர்: திரு.செல்வரத்தினம் அருட்செல்வம் (ஆசிரியர்) 
செயலாளர்: திரு.கணபதிப்பிள்ளை நிமலதாசன் (தபாலதிபர்)
உப-செயலாளர்: திரு.வி.ஹம்சன் (வங்கி அலுவலர்)
பொருளாளர்: திரு.சுந்தரலிங்கம் அகிலன் (கூட்டுறவுப் பரிசோதகர்)
உப-பொருளாளர்: திரு.த.சற்குணம் (தொழிலதிபர்)

நிர்வாக சபை உறுப்பினர்கள்:

1.    திரு.நல்லதம்பி யோகநாதன் (தொழிலதிபர்)
2.    திருமதி வீரமங்கை ஸ்டாலினா யோகரத்தினம் (பல்கலைக்கழகவிரிவுரையாளர்)
3.    திரு.தெட்சணாமூர்த்தி லிங்கேஸ்வரன் (ஆசிரியர்) 
4.    திரு.பாலசுப்பிரமணியம் கருணாகரன் (தபாலக அலுவலர்)
5.    பிரம்மஸ்ரீ.கு.சரவணபவானந்த சர்மா (ஆசிரியர்) 
6.    திரு.கயிலாயபிள்ளை நாகராசா (நீதிமன்ற அலுவலர்)
7.    திரு.பாலசிங்கம் இராமகிருஷ்ணன் (ஆசிரியர்)
8.    திரு.வேலுப்பிள்ளை சபாலிங்கம் (ஓய்வுநிலை அரச அலுவலர்)

உள்ளகக் கணக்காய்வாளர்: திரு.அரியரத்தினம் ஜெகதீஸ்வரன் 

OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA

கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் கனடா-காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையில் மேம்படுத்தப்பட்ட பல்லூடக மாநாட்டு மண்டபம் திறப்புவிழா

CKCA LOGO (Copy)KARAI HINDU LOGO

அண்மைக் காலங்களில் பல்லூடகப் பயன்பாடு கற்பித்தலில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அந்த வகையில் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் மாணவர்களின் கல்வித்தர விருத்தியின் ஒர் அங்கமான பல்லூடக அறையை விருத்தி செய்யும் திட்டத்தை கனடா-காரை கலாச்சார மன்றம் முன்னெடுத்திருந்தது.

இத்திட்டத்தின் முதற்கட்டம் நிறைவெய்திய நிலையில், மேம்படுத்தப்பட்ட பல்லூடக மாநாட்டு மண்டபத்தினை (Multi Media Conference Hall) சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கும் வைபவம் எதிர்வரும் சனிக்கிழமை (03.01.2015 பிற்பகல் 2:00 மணிக்கு  அன்று அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தலைமையில் நடைபெற உள்ளது.

நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கனடா-காரை கலாச்சார மன்றத் தலைவர் திரு.தம்பிஐயா பரமானந்தராஜா அவர்கள் கலந்து கொள்ள உள்ளார்.

சிறப்பு விருந்தினர்களாக கனடா-காரை கலாச்சார மன்ற செயலாளர் திரு.பிரமேந்திரதீசன் திரவியநாதன், பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பொருளாளர் திரு.மா.கனகசபாபதி, லண்டன் காரை நலன்புரிச் சங்க போசகர்களான திரு.வி.நாகேந்திரம், திரு.ப.தவராஜா ஆகியோரும் 

கௌரவ விருந்தினர்களாக தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.ஜோன் குயின்ரஸ், காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர். 

கனடா-காரை கலாச்சார மன்றம் இத்திட்டத்திற்கான நிதி அனுசரணையாக பதின்மூன்று இலட்சத்து அறுபதினாயிரம் ரூபா (ரூ13,60,000) ஒதுக்கியிருந்தது. இதன் முதற்கட்ட நிதி விடுவிப்பாக ஆறு இலட்சம் ரூபாவினை ஏற்கனவே வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முழுமையான அழைப்பிதழைக் கீழே காணலாம். 

Multi Media Opening Ceremony0001

 

 

நாவலருக்கு அடுத்து வைத்துப் போற்றப்படும் காரைநகர் மகான் ச.அருணாசல உபாத்தியாயர் அவர்களின் சிந்தனையில் தோற்றம் பெற்ற கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் நாவலர் சிலை நிறுவப்பட்டுள்ளது

KARAI HINDU LOGO

பத்தொன்பதாம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மிசனரிமாரின் அரச தொழில் வாய்ப்பு என்னும் மாய வலைக்குள் சைவத்தமிழ் மக்கள் சிக்கினர். இவ்வாறு சைவத்தமிழ் மரபு சிதைவுற்று வந்தமையைத் தடுத்து நிறுத்தி வந்தவர் நல்லூரின் நாவலர் பெருமான். 

நாவலரின் செயற்பாடுகளால் பெரிதும் கவரப் பெற்றவர் காரைநகர் தந்த செயல் வீரன் ச.அருணாசல உபாத்தியாயர் ஆவார்.  சைவப் பெற்றோரின் பிள்ளைகள் சைவப் பாடசாலைகளில் கற்க வேண்டும் என்ற அருணாசல உபாத்தியாயரின் எண்ண மேலீட்டினால் உருவானதே காரைநகரில் சைவப் பாடசாலைகள் அமைக்கும் செயல்.

மகான் அருணாசல உபாத்தியார் சைவப்பாடசாலைகள் அமைக்கும் தமது திட்டத்தை எமது ஊரில் வாழ்ந்த சைவப் பெருமக்களை அணுகிக் கருத்தேற்றம் செய்து அவர்களின் ஆதரவுடன் காரைநகரில் சுப்பிரமணிய வித்தியாசாலை, திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் வித்தியாசாலை(கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம்), வியாவில் சைவபரிபாலன வித்தியாசாலை ஆகியனவற்றைத் தோற்றுவித்தார். 

கொழும்பு நாவலர் நற்பணி மன்றத்தினால் நாடெங்கிலும் உள்ள நூற்றாண்டு பழைமை வாய்ந்த சைவப் பாடசாலைகளில் நாவலர் சிலை அன்பளிப்பு செய்யப்பட்டு நிறுவப்பட்டு வருகின்றது. 

இப்பணியின் முதல் அங்கமாக யாழ் மாவட்டத்தில் சுன்னாகம் ஸ்கந்தவரதோயக் கல்லூரியிலே முதலாவது நாவலர் பெருமானின் சிலை நிறுவப்பட்டு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களினால் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடமகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, கல்லூரியின் முன்னாள் அதிபர் கலாநிதி.சிவத்திரு.ஆறுதிருமுருகன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். 

தொடர்ந்து யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, சாவகச்சேரி இந்துக் கல்லூரி, சுழிபுரம் விக்ரோரியாக் கல்லூரி (சுழிபுரம் இந்து ஆங்கிலப் பாடசாலை) ஆகியவற்றிலும் நாவலர் நற்பணி மன்றத்தினால் நாவலர் பெருமானின் சிலை நிறுவப்பட்டுள்ளது .  

அந்த வகையில் நாவலருக்கு அடுத்து வைத்துப் போற்றப்படும் சரித்திர நாயகன் காரைநகர் ச.அருணாசல உபாத்தியாயரின் எண்ணத்தில் தோன்றி நிறுவப்பட்ட சைவ ஆங்கிலப் பாடசாலையாகிய கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகாவித்தியாலயத்தில் கொழும்பு நாவலர் நற்பணி மன்றத்தினால் அண்மையில் நாவலர் சிலை நிறுவப்பட்டுள்ளது. தீவக வலயத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த சைவ உயர்தரப் பாடசாலை என்ற வகையில் இப்பாடசாலையில் மட்டுமே மேற்படி மன்றத்தினால் நாவலர் சிலை நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சிலை திறப்பு வைபவத்தில் நாவலர் நற்பணி மன்றத் தலைவர் திரு.கருணை ஆனந்தன், யாழ் பல்கலைக் கழக ஓய்வுநிலை விரிவுரையாளர் திருமதி.நாச்சியார் அவர்களும் தீவக வலயத் தமிழ் உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.ச.செல்வராஜா மற்றும் காரைநகர் கோட்டக்கல்விப்பணிப்பாளர் திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டனர் 

நாவலர் நற்பணி மன்றத் தலைவர் திரு.கருணை ஆனந்தன் அவர்கள் நாவலரின் சிலையை சம்பிராதாய பூர்வமாகத் திறந்து வைத்தார். 

தொடர்ந்து நடராசா ஞாபாகார்த்த மண்டபத்தில் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன. அதிபர் தனது தலைமை உரையில், நாவலரின் வழியில் எமது காரைநகர் ஆசான் ஸ்ரீமான் ச.அருணாசால உபாத்தியாயர் அவர்கள் சைவப் பாடசாலைகளை நிறுவுவதற்கும் சைவாசிரியர்களைத் தோற்றுவிக்க ஆசிரிய கலாசாலையை அமைப்பதற்கும் ஆற்றிய பணிகள் பற்றிக் குறிப்பிட்டுப் பேசினார். 

அதனைத் தொடர்ந்து விருந்தினர்கள் நாவலர் பெருமான் சைவத்திற்கும் தமிழுக்கும் ஆற்றிய தொண்டுகள் பற்றி உரையாற்றினார்கள். 

பாடசாலை ஆசிரியை செல்வி.ந.சிவருபி அவர்களின் நன்றி உரையுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றது

         
நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம். 

OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA

 

யா/கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய (காரைநகர் இந்துக் கல்லூரி) பழைய மாணவர் சங்கப் பொதுக்கூட்டம் 28.12.2014 ஞாயிற்றுக்கிழமை பி.ப 2.00 மணிக்கு

KARAI HINDU LOGO

               பழைய மாணவர் சங்கப் பொதுக்கூட்டம்


யா/கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய (காரைநகர் இந்துக் கல்லூரி) பழைய மாணவர் சங்கப் பொதுக்கூட்டம் 28.12.2014 ஞாயிற்றுக்கிழமை பி.ப 2.00 மணிக்கு பாடசாலை நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் பாடசாலை அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தலைமையில் நடைபெறும். இப்பாடசாலையின் பழைய மாணவர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

குறிப்பு:- 

1.    பிரேரனைகள் இருக்கும் பட்சத்தில் 21.12.2014 இற்கு முன்னர் செயலாளர், யா/கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

2.    இப்பாடசாலையின் பழைய மாணவர்கள், பழைய மாணவர் சங்க அங்கத்தவராக இணைவதற்கான விண்ணப்பங்களை பாடசாலை அதிபர் அல்லது பழைய மாணவர் சங்க செயலாளரிடம் பெற்று இணைந்து கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

தலைவர், செயலாளர், பழைய மாணவர் சங்கம் 
யா/கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம், காரைநகர்.

Yarl Geek Challenge -Season 3 போட்டியில் யாழ் முன்னணிப் பாடசாலைகளுக்கு இணையான வெற்றியை கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் பெற்றது

KARAI HINDU LOGO

தகவல் தொழில்நுட்ப உலகில் யாழ் மண்ணை ஒரு அடையாளமாக மாற்றும் பாதையில் Yarl IT Hub  இனால் நடத்தப்பட்டுவரும் Yarl Geek Challenge Competition மூன்றாவது ஆண்டாக கடந்த ஒக்டோபர் 31, நவ 1, 2 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.  

தகவல் தொழில்நுட்பத்துறையில் வளர்ந்து வரும் இளம் தயாரிப்பாளர்களை முதலீட்டாளர்களுடன் இணைப்பதற்கான வாய்ப்பாக இப்போட்டிகள் Yarl IT Hub  இனால் அமைக்கப்பட்டிருந்தன. 

இப்போட்டிகளுக்கான ஆலோசனைப் பங்காளராக Lanka Angel Network  நிறுவனமும் நிதிப்பங்காளராக ஆழிக்குமரன் ஆனந்தனின் மகனானா ரஜன் ஆனந்தனின் Blue Ocean Ventures  நிறுவனமும் ஆதரவு வழங்கியிருந்தன.

இப்போட்டிகள் இளநிலைப்பிரிவு(Junior), முதுநிலைப்பிரிவு(Senior) என இரு பிரிவுகளாக நடைபெற்றிருந்தன. 

கடந்த ஆண்டு யாழ் என்று மட்டுப்படுத்தப்பட்டிருந்த Yarl Geek Challenge  போட்டிகள் இவ்வாண்டு முதுநிலைப் பிரிவில் நாட்டின் பலபாகங்களிலும் உள்ள பல்கலைக்கழக அணிகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

பாடசாலை மாணவர்களை மையப்படுத்திய இளநிலைப் பிரிவினருக்கான
அணியினர் தமது தயாரிப்புகளை Mobile Apps, Web, Open Hardware  எனும் வகைகளில் வடிவமைத்திருந்தனர். 

வெற்றியாளர்களைத் தீர்மானிக்கும் காரணிகளாக போட்டிக்கான தயாரிப்புகளின் புதுமை, குறைந்த வளம், பிரதியாக்கம் இன்மை, பயன்படுதன்மை, தொழில்நுட்ப ரீதியிலும் வணிகரீதியிலும் உறுதித்தன்மை ஆகியன அமைந்திருந்தன.

இந்தவகையில் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் உயர்தர வகுப்பின் தொழில்நுட்ப, கலைத்துறையைச் சேர்ந்த ஒன்பது பேர் கொண்ட மூன்று அணிகள் இப்போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றனர். 

இளநிலைப்பிரிவில்(Junior) சிறந்த Hardware Application  தயாரிப்பாக கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய உயர்தர வகுப்பின்; தொழில்நுட்பத்துறை மாணவர்களின் அணி ‘Letter Detector Device’  என்ற தயாரிப்பிற்காக மிகச்சிறந்த தயாரிப்பிற்கான வெற்றிப் பதக்கத்தினைத் தமதாக்கிக் கொண்டனர். 

இவ்வணியினருக்கான பரிசினை Lanka Angel Network  நிறுவன முதல்வர் திரு. எரிக் அவர்கள் வழங்குவதனையும் சாதனை மாணவர்கள் செல்வி.எஸ்.லித்தியா, செல்வன்.எஸ்.சுதர்சன், செல்வன்.எஸ்.விஜயதர்சன் ஆகியோரையும் படத்தில் காணலாம். 

Geek200a

இளநிலைப் பிரிவில் இறுதி வெற்றியாளராக யாழ் இந்து அணியும், சிறந்த Web Application வடிவமைப்புக்காக வேம்படி மகளிர் கல்லூரி அணியும், சிறந்த Mobile Application வடிவமைப்புக்காக வேம்படி மகளிர் கல்லூரி அணியும் வெற்றிப்பதக்கம் பெற்ற அதேவேளையில் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய அணி Hardware Application  க்கான வெற்றிப் பதக்கத்தைப் பெற்று யாழ் மாவட்ட முன்னணிப் பாடசாலைகளுக்கு இணையான சாதனையைத் தகவல் தொழில்நுட்பத்துறையில் பதிவாக்கியுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது. 

மேலும் சிறந்த Web Application  வடிவமைப்பிற்காக கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் உயர்தர வகுப்பின் தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த கே.டிலானி, ரி.றோமிலா, எஸ்.பிரசாலினி ஆகியோரின் அணியும், கலைத்துறையைச் சேர்ந்த பி.சஜிதா, என்.டினோஜா, ஏ.துஷியந்தினி ஆகியோரின் அணியும் சிறப்புப் பரிசுகளைப் பெற்றுக் கொண்டன. 

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தர வகுப்பில் புதிய தொழில்நுட்ப பாடத்துறை இவ்வாண்டு முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.  

மேற்படி வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களை கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன் அவர்களும் மாணவர்களைப் போட்டிக்குத் தயார்படுத்திய ஆசிரியைகளான திருமதி.சிவாஜினி லக்ஸ்மன் மற்றும் திருமதி. பத்மினி சசிதரன் ஆகியோரும் கல்லூரி நடராசா ஞாபாகார்த்த மண்டபத்தில் கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வைத்து வழங்குவதனையும் படங்களில் காணலாம். 

OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA

மாகாண மட்ட பண்ணிசைப் போட்டியில் கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் மூன்றாம் இடம் பெற்று வெற்றி பெற்றுள்ளது

PuroshothamiWeb

வடமாகாண மட்டத்தில் அண்மையில் நடத்தப்பட்ட பண்ணிசைப் போட்டியில் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி செல்வி. சி. புருஷோத்தமி மூன்றாம் இடம் பெற்று வெற்றி பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளார். 

போட்டியில் வெற்றி பெற்ற மாணவி செல்வி.சி.புருசோத்தமி அவர்களையும் பயிற்றுவித்த ஆசிரியர்களான திருமதி கலாசக்தி றொபேசன், திருமதி. பங்கயச்செல்வி முகுந்தன் ஆகியோரையும் பாடசாலை சமூகமும், பழைய மாணவர் சங்க கனடாக் கிளையும் பாராட்டி வாழ்த்துகின்றது. 

வாய்ப்பாட்டு இசை உலகில் பல புகழ்பெற்ற கலைஞர்களின் உருவாக்கத்திற்கு அடித்தளமிட்டு; வருகின்ற பாரம்பரியத்தினை தொடர்ந்து நிலைநாட்டி வருகின்ற இப்பாடசாலையிலிருந்து சென்ற மாணவி செல்வி புருஷோத்தமி மாகாணத்திலலுள்ள பிரபல்யம் மிக்க பாடசாலைகளுடன் போட்டியிட்டு மூன்றாம் இடத்தினை தட்டிக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Puroshothami

 

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகாவித்தியாலயத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களினால் மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வு கூடம் திறந்து வைக்கப்பட்டது.

KARAI HINDU LOGO

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகாவித்தியலாயத்தில் ஆயிரம் இடைநிலைப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வு கூடம் இன்று செவ்வாய்கிழமை 14.10.2014 அன்று மாலை 4:00 மணியளவில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களினால் சம்பிரதாய பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. 

இன்றைய விழாவில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன, பாரம்பரிய சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் G.A.சந்திரசிறி, யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்ரி அலஸ்ரின் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளார் க.சத்தியசீலன், வடமாகாண கல்விப்பணிப்பாளர் S.ராஜேந்திரன், தீவகவலய கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ், காரைநகர் பிரதேச செயலர் திருமதி.தேவநந்தினி பாபு ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். 

பாடசாலை பான்ட் குழுவினர் அணிவகுப்பு மரியாதை செய்து இன்னிசை வழங்கின. பாடசாலைக்கு வருகை தந்த ஜனாதிபதியை பாடசாலையின் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் மற்றும் மாணவர்கள் வெற்றிலை வழங்கி வரவேற்றனர். 

ஒய்வுநிலை மாவட்ட நீதிபதி ஏகநாதன் அவர்கள் ஜனாதிபதிக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார். 
பாடசாலை அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தலைமையில் அதிபரின் தலைமை உரையுடன் நிகழ்வு ஆரம்பமாகியது. 

கல்வி அமைச்சர், பந்துல குணவர்த்தன தனது உரையில் ஆயிரம் பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வடமாகாணத்தில் 96 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன எனவும்; இப்பாடசாலைகளுக்கு 2016 ஆம் ஆண்டின் இறுதிக் காலத்திற்குள் இலங்கையில் உள்ள முன்னணி பாடசாலைகளில் உள்ள அனைத்து வளங்களும் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். 
இன்று இவ் ஆய்வு கூடத்திற்கு 66 கணனிகள் வழங்கப்பட்டுள்ளன எனவும் 40 மாணவர்கள் ஒரே நேரத்தில் தகவல் தொழில் நுட்ப பாடத்தைக் கற்பதற்கும் நெனச தொலைக்கல்வி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கும் இவ் ஆய்வு கூடம் வசதி செய்கின்றது என்றார். ஆயிரம் பாடசாலைத் திட்டத்தில் முதலாவது செயற்திட்டம் நிறைவு செய்யப்பட்டுள்ளது எனவும் ஏனையவை தொடரும் எனவும் தெரிவித்தார். 

பழைய மாணவர்களின் தாய்ச்சங்கத்தின் போசகர் எஸ்.கே.சதாசிவம் அவர்கள்; கல்லூரியின் விளையாட்டு மைதான அபிவிருத்தி திட்டம், இருமருங்கிலும் உள்ள பாடசாலையை மேம்பாலம் அமைப்பதற்கான திட்டம் ஆகியன உள்ளடங்கிய விண்ணப்பம் ஒன்றினை ஜனாதிபதி அவர்களிடம் கையளித்து தங்கள் கோரிக்கையை நிறைவு செய்யுமாறு பழைய மாணவர் சங்கம் சார்பில் வேண்டிக் கொண்டார். 

கணிதம், மொழி, தகவல் தொழில்நுட்பம் நனச தொலைக்காட்சி மத்திய நிலையம் ஆகிய நான்கு அறைகளைக் கொண்ட இரு தளங்களைக் கொண்ட 'மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வு கூட நினைவுக் கல்லை ஜனாதிபதி அவர்கள் திரைநீக்கம் செய்து சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார். 

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது உரையில் கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்திற்கு இவ் ஆய்வுகூடம் கிடைத்தமையிட்டு தான் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டார். இவ்ஆய்வு கூடம்; கணிதம், மொழி, தகவல் தொழில்நுட்பம் ஆகியனவற்றைக் கற்பதற்கு வழிசெய்யும் எனத்தெரிவித்தார். பிள்ளைகள் படிப்பதற்கு ஊக்கம் அளிப்பதே தமது நோக்கம் என்றார். இவ்வாண்டு பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களில் வடபகுதி மாணவர்களின் எண்ணிக்கையே அதிகம் எனவும். இதற்கு ஊக்கம் அளித்துவரும் அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள் எனத் தெரிவித்தார். 
தழிழில் உரையாற்றும்போது 'கல்வியே செல்வம்' அதனை மாணவர்கள் பெற்றிட வேண்டும் எனத்தெரிவித்து தனது உரையை நிறைவு செய்யதார். 

திறப்பு விழாவிற்கான நிதி அனுசரணையினை தாய்ச் சங்கம் வேண்டிக்கொண்டதற்கிணங்க பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

நிகழ்வில எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.

 

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தில் ஆசிரியர் தினவிழா 06.10.2014 திங்கட்கிழமை இடம்பெற்றது. பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார் மணிவாசகர் சபையின் தலைவரும் ஓய்வுபெற்ற அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்கள்

1

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் தீவக கல்வி வலய மட்ட கணித நாடகப் போட்டியில் முதலிடம்

KARAI HINDU LOGO

தீவக கல்வி வலய மட்டத்தில்  நடைபெற்ற கணித நாடகப் போட்டியில் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. 

மேற்படி போட்டியில் முதலிடம் பெற்ற கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் மாகாண மட்ட கணித நாடகப் போட்டிக்குத் தெரிவாகி உள்ளது. 

இப்போட்டிக்கு மாணவர்களைத் தயார் படுத்திய கணித ஆசிரியர் திரு.நா.கேதாரிநாதன், நாடகமும் அரங்கியலும் ஆசிரியை திருமதி.விஜயலக்ஷ்மி றமணன், நூலக உதவியாளர் செல்வி.விம்சியா ஆகியோரும் வெற்றி பெற்ற மாணவர்களும் பாராட்டுக்குரியவர்கள்.  

 

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களால் ‘மகிந்தோதய’ தொழில்நுட்ப ஆய்வு கூடம்; திறந்து வைக்கப்பட உள்ளது

KARAI HINDU LOGO

 

IMG_1923Mahinthothaya

காரைநகர் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்திற்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வருகை தர உள்ளார். பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 'மகிந்தோதய' ஆய்வு கூடத்தினை சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைப்பதற்காகவே ஜனாதிபதி மேற்படி பாடசாலைக்கு வருகை தருகின்றார். 

ஆயிரம் இடைநிலைப் பாடசாலைகளை புனர்நிர்மாணம் செய்யும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் ஆயிரம் இடைநிலைப் பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டு இப்பாடசாலைகள் ஒவ்வொன்றிலும் மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட ஆயிரம் பாடசாலைகளில்  உள்ளடக்கப்பட்டுள்ள கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலத்தில் இவ் ஆய்வுகூடம் நிர்மாணிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இரண்டு மாடிகளைக்கொண்ட கட்டிடமாக நிர்மாணிக்கப்பட்டு நிறைவுசெய்யப்பட்டுள்ள இவ் ஆய்வுகூடம் கல்லூரி வளாகத்தின் வடக்குப் பகுதியின் மேற்குத்தசையில்(சயம்பு வீதிப்பக்கமாக அமைந்துள்ளது. 

இவ் ஆய்வு கூடத்திற்கு தேவையான கணணிகள் உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் என்பன அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் இவ் ஆய்வுகூடம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் தொடக்கி வைக்கப்பட உள்ளதாக  தெரிய வருகின்றது.

 

தீவக வலயத்தில் முதலிடம் பெற்று கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் சாதனை! பல்கலைக் கழகத்திற்கு ஐந்து மாணவிகள் அனுமதி!

KARAI HINDU LOGO

கடந்த ஆகஸ்ட் 2013 இல் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் இருந்து ஐந்து மாணவிகள் இலங்கையின் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய பல்கலைக் கழகங்களின் நுண்கலைப் பீடங்களுக்குத் தெரிவாகி சாதனை படைத்துள்ளனர். 
தீவக வலயப் பாடசாலைகளில் மேற்படி கல்லூரியில் இருந்தே அதிகூடிய எண்ணிக்கையான மாணவர்கள் தெரிவாகி தீவக வலயத்திலேயே கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.  
பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவாகிய மாணவிகளின் பெயர் விபரம் வருமாறு
மாணவர் பெயர்                                              பாடம்                                பல்கலைக்கழகம்
ஆனந்தா காங்கேயன்                                    சித்திரம்        இராமநாதன் நுண்கலைப்பீடம்,

                                                                                                                   யாழ்ப்பாணம்

சிவநிறஞ்சனா கிருஷ்ணமூர்த்தி       நடனம்                 இராமநாதன் நுண்கலைப்பீடம்,

                                                                                                                      யாழ்ப்பாணம்
சகிதா முடிராசா                                           நடனம்                இராமநாதன் நுண்கலைப்பீடம்,

                                                                                                                       யாழ்ப்பாணம்
நாகசிந்துஜா நாகேந்திரம்                        நடனம்             விபுலானந்தா அழகியற் கல்லூரி,

                                                                                                                    மட்டக்களப்பு
வதனி பாலச்சந்திரன்                              சங்கீதம்             விபுலானந்தா அழகியற் கல்லூரி,

                                                                                                                     மட்டக்களப்பு