அறிவித்தல்:

அறிவித்தல்!

கனடா-காரை கலாசாரமன்றத்தின் ஈராண்டுப் பொதுச்சபை கூட்டம், மன்றத்தின் தலைவர் திரு.சிவசம்பு சிவநாதன் தலைமையில் சென்ற ஞாயிற்றுக் கிழமை (April 28, 2024) ஸ்காபுரோ Civic Centre இல் காலை 10:00 மணிக்கு கூடியது.

மேற்படி கூட்டத்திதிற்கு, கனடா-காரை கலாசார மன்றத்திற்கெதிராக ஒன்றாரியோ உயர் நீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குத் தொடர்பிலான விடயங்களை கொண்டு போவது என்று, இந்த ஆண்டு சித்திரை மாதம் 24 ஆம் திகதி, 8 Milner Avenue, Scarborough ON M1S 3P8 என்ற முகவரியில் இரவு 8:15 மணியளவில் கூடிய மன்றத்தின் தலைவர் திரு.சிவசம்பு சிவநாதன், உப தலைவர் திரு.கனக சிவகுமாரன், செயலாளர் திருமதி. நாகேஸ்வரி சிவகுமார், உப செயலாளர் திரு.தம்பிராசா ஜெயச்சந்திரன், பொருளாளர் திரு.சோமசுந்தரம் கிருஸ்ணரட்ணம், நிர்வாக உறுப்பினர்கள் திரு.தம்பிஐயா பரமானந்தராசா மற்றும் திரு.பிரமேந்திரதீசன் திரவியநாதன் ஆகிய எழுவர் தீர்மானத்திருந்தனர்.

இந்த தீர்மானத்தின் அடிப்படையில், கனடா-காரை கலாசார மன்றம் கடந்த 28 மாதங்களாக எதிர் நோக்கிவரும் வழக்கு விவகாரமானது, சென்ற ஞாயிற்று கிழமை (April 28, 2024) ஸ்காபுரோ Civic Centre இல் காலை 10:00 மணிக்கு கூடிய பொதுச்சபை கூட்டத்திற்கு  எடுத்துச்செல்லப்பட்டபோதிலும், பொதுச்சபையின் பலத்த எதிர்ப்பின் காரணமாக இந்த வழக்கினை எவ்வாறு மன்றம் எதிர்கொள்வது என்று எதுவித தீர்மானமும் நிறைவேற்றமுடியாத காரணத்தினால், அந்த பொதுக்கூட்டத்தில் திரு. முத்து பொன்னம்பலம் தலைமையில் ஐவர் அடங்கிய காப்பாளர் சபை ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளது என்பதனை கனடா வாழ் காரைநகர் மக்களுக்கு அறியத்தருகின்றோம்.

தெரிவு செய்யப்பட்டுள்ள மன்றத்தின் காப்பாளர் சபை விரைவில் கூடி இது தொடர்பாக விரிவாக ஆராய்ந்து மன்றத்தின் நலன்களை பேணுவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் விரைவில் மேற்கொள்ளும்.

காப்பாளர் சபை

கனடா-காரை கலாசார மன்றம்